13/10/2024
புனித ஷாதுலிய்யாவின் மணம் கமழும் பேருவளை,சீனன் கோட்டையில்
புனித காதிரிய்யாவின் புகழை அந்த மக்கள் இவ்வளவு தூரம் பக்தியுடனும்,இஷ்குடனும் நிகழ்த்தியதை கண்டு உண்மையிலேயே கண்ணும் களங்கியது,கல்பும் குளிர்ந்தது…
விருந்துபசாரத்தில் அவர்களுக்கே உரிய அந்த நேர்த்தியில்
சுமார் கிட்டத்தட்ட மூவாயிரம் கிலோ அரிசியுடன்
15 மாடுகள்,ஆடு,கோழி என்று தடபுடளாக இந்தளவு தூரம் கவ்துல் அஃலத்தின் மேல் கொண்ட அந்த நேசத்தினை பறைசாற்றி நின்ற அந்த மக்களை கண்ட நொடியில் வார்த்தைகள் வழுவிளந்து கண்கள் கழங்கி நின்றன ஒரு வினாடியில்…
அதிலும் குறிப்பாக சீனன் கோட்டை,குட்டிமலை மக்களின் ஒத்துளைப்பும்,அவர்களின் அனுசரனையும் மிகவும் பாராட்டப்பட வேண்டியது…
ரப்புல் ஆலமீன் அந்த உண்ணதமான சபைக்கு
பொருளாலும்,உடலாலும்,செயற்பாடுகளினாலும்,
சிந்தனைகளினாலும் உதவிய அத்தனை மக்களையும் கபூல் செய்வானாக,,,
அவர்கள் அத்தனை பேர்களையும்
கஷ்டங்களை விட்டும்,
பலாய் முசீபாத்துகளை விட்டும்,
பயங்கர நோய்,பிணிகளை விட்டும்,
வானம்,பூமியின் அனைத்து ஆபாத்துகளை விட்டும்,
திடீர் மரணங்களை விட்டும்,
மருத்துவமனை செலவீனங்களை விட்டும்
கண்மணியான கவ்துல் அஃலத்தினதும்,ஷாதுலி நாயகங்களினதும் பரகத்தை கொண்டு பாதுகாப்பானாக…
குறிப்பாக அதில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்த அந்த இளைஞர் சமூகதிற்க்கு பரகத்தும்,ரஹ்மத்
தும் செய்வானாக
அந்த மஜ்லிஸில் பங்குபற்றி அதில் சிறப்புரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது யாம் செய்த பாக்கியமே
(அல்ஹம்துலில்லாஹி வலகஷ்ஷுக்ர் அலா குல்லி ஹாலின் வபீ குல்லி மகானின் வரஸூலிஹி வ அவ்லியாயிஹி)
அல் ஹாபிழ்,ஆலிம் முஸ்தகீம் நஜாஹி
கலீபதுல் ஐதுரூஸிய்யதுல் காதிரிய்யா
BSC.(SPECIAL) IN
PSYCHOLOGY &
COUNSELING
TRAINER,COACH &
MOTIVATIONAL SPEAKER &
HYPNOTHERAPY
MDCC,NLP,DCP,CHP