السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 15 October 2024

கல்முனை முஹைதீன் மஸ்ஜிதில் கந்தூரி

#கல்முனையில்_மீண்டும்

#உயிர்_பெறும்_முஹ்யித்தீன் #கந்தூரி 


கல்முனை வரலாற்றில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கும் அங்கு இடம்பெறுகின்ற நிகழ்வுகளுக்கும் மிகவும் சிறப்பான பங்கு உண்டு கல்முனையை பொறுத்தவரையில் அந்த ஊர் அதன் கொடைத்தன்மை பரோபகாரம் என்பவற்றினால் தான் ஏனைய ஊர்களிலும் ஏனைய மக்களிடமும் ஒரு நற்பெயரை நீண்டகால மாக பெற்ற ஊராக காணப்படுகிறது 


அந்த வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்மா பள்ளிவாசலில்  முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி அவர்களின் பெயரில் மிக நீண்ட காலமாக நூற்றுக்கணக்கான மாடுகளையும் அவணக்கணக்கான அரிசியையும் கொண்டு சோறு கறி சமைத்து இக்கிராமத்தில் உள்ள மக்களுக்கு ஏனைய மக்களுக்கும் கந்தூரி அன்னதானம் கொடுக்கும் வழக்கம்  எம் முன்னோரால் இப் பள்ளிவாசலில் தொடர்ந்து செய்யப்பட்டு  வந்தது வரலாறாகும் .இதில் ஊரைச் சேர்ந்த பொதுமக்களும் அருகில்  உள்ள ஊர்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்ல ஏனைய இன மக்களும் இதில் கலந்து கொள்வார்கள் 


இது 1952 வரை இது வானவேடிக்கை களுடன் இணைந்ததாக மிகவும் சிறப்பாக காணப்பட்ட ஒரு நிகழ்வாகும் அதன்பின்னர் வானவேடிக்கை  நிறுத்தப்பட்டு ஒரு சிறு சிறு நிகழ்வுகளாக வெறும்  சோற்றுடனும், சிறிய அளவிலும் இந்த கந்தூரி காணப்பட்டு வந்தது 


இன்று 2024 இல்  புதிய நிர்வாகிகள் பள்ளியை பொறுப்பேற்றதுடன் முஹ்யித்தீன் கந்தூரியும் மீண்டும் உயிர் பெற்று ஒரு சிறந்த கந்தூரியாகவும் கிட்டத்தட்ட 5000  பேருக்கு மேற்பட்ட மக்கள் இந்த கந்தூரியை பெற்று  தமது ஹாஜத்துக்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய  நிகழ்வாக இடம்பெற்றுள்ளது மட்டுமல்ல இந்த கந்தூரி கொடை வள்ளல்  களின் பூரண உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்தோடு அதிகளவான ஏனைய ,சிங்கள  இந்து கிறிஸ்தவ சகோதரர்களும் ,அரச ஊழியர்கள்  , பாதுகாப்பு படையினர். கலந்து கொண்டதும் மிகவும் சிறப்பாக இருந்தது இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த கல்முனை முஹ்யித்தீன்  ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றிகள். 


"எமது பண்பாடும் கலாச்சாரமும் மீண்டும் உயிர்பெற்று எம் ஊர் உயர்வு பெற ஒன்றிணைந்து செயற்படுவோம்."


முபிஸால் அபூபக்கர்.

15:10:2024

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் குத்புல் அக்தாப் கௌஸுல் அஃழம் செய்யிதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்களின் நினைவான