السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 21 April 2015

அன்பின் தப்லீக் உலமாக்களே! 07

தேவபந்த் உலமாக்களின் கொள்கை விளக்க நூல்
அல் முஹன்னத் அலல் முபன்னத் – ஆசிரியர் -மௌலானா கலீல் அஹ்மத் சஹாரான்பூரி. மறைவு ஹிஜ்ரி 1346.
தேவபந்த் உலமாக்கள் வஹ்ஹாபிச அகீதாவில் உள்ளவர்கள் என்று சொல்லப்படுகிறது. எனவேதான் உங்கள் அகீதாவை தெளிவு படுத்துங்கள் என்று புண்ணிய நகரங்களான மக்கா முகர்ரமா மதீனா முனவ்வரா அறிஞர்கள் கேட்டுக் கொண்டதற்காக ஹிஜ்ரி 1325 இந்நூல் எழுதப்பட்டு அரப் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் கூறப்பட்டுள்ள விடயங்கள் யாவும் உண்மையானது என அன்றிருந்த 26 இந்திய உலமாக்கள் ஒப்பம்மிட்டிருந்தனர். அத்துடன் ஹிஜாஸ் ஷாம் மிஸ்ர் போன்ற அரபுலக ஷாபி ஹனபி மாலிகி மத்ஹபுகளின் அறிஜர்களும் இதனை உண்மைப்படுத்தி ஒப்பமிட்திரிந்தனர். அல் அஸ்ஹர் பல்கலைக் கழக முப்திகளும் இதனை உண்மைப்படுத்தியுள்ளனர் என்பது இங்கு குறிப்பாக கூற வேண்டியதாகும். இது ஹுசாமுள் ஹரமைன் என்றதொரு நூல் வெளியிடப்பட்டதை அடுத்து எழுதப்பட்டுள்ளது. இந்நூல் முதல் தடவையாக 1984 ம் வருடம் உர்து மொழியில்
இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களுக்கு மாற்றமான கருத்துக்களை தேவபந்த் உலமாக்கள் கூறியிருந்தால் அது உண்மையான தேவபந்த் அறிஜர்களின் கருத்துக்கள் இல்லை. எங்களின் பெயரில் போலிகளும் இருக்கிறார்கள் என தேவபந்த் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கை எனப் பெயரிட்டு ஹிஜ்ரி 1388 ல் அப்துஸ் ஷக்கூர் திர்மிதி என்பவர் குறிப்பிடிருந்தார். எனவே வஹ்ஹாபிஸ கொள்கையில் உள்ள தப்லீக் இயக்கத்திற்கும் தேவபந்த் உலமாக்களுக்கும் என்ன தொடர்பு? என்பதை நண்பர்கள் என்னோடு தகுந்த ஆதாரத்துடன் பகிர்த்து கொள்ளுமாறும் அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர்களே! 26 கேள்விகள் உள்ளடங்கிய இந்நூலில் இருந்து இதுவரையில் பத்துக் கேள்விகள் பகிரப்பட்டுள்ளது. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூறும்போது அவர்களின் ஷைகுமர்களை நினைவு கூர்வதிலிருந்து சூபிச வழியில் அவர்களுக்குள்ள தொடர்பு தெளிவாகவே புரியும்படி இருக்கிறது. விசேடமாக குத்புல் ஹிந்த் கரிபே நவாஸ் க்வாஜா நாயகத்தின் சிஷ்திய்யா தரீக்கா கலீபாக்களாக இவர்களெல்லாம் இருந்துள்ளார்கள். மௌலானா கலீல் அஹ்மத் அவர்கள் தேவபந்த் உலமாக்களிடம் குத்புல் வாசிலீன் பக்ருள் ஆரிபீன் எனப் போற்றிப் புழப்படும் ஒரு குருவாகவும் இருக்கிறார்.
السؤال الحادي عشر
و هل يجوز عندكم الاشتغال بأشغال الصوفية و بيعتهم ؟
و هل تقولون بصحة وصول الفيوض الباطنية عن صدور الأكابر و قبورهم ؟
و هل يستفيد أهل السلوك من روحانية المشايخ الأجلة أم لا ؟

வினா 11. சூபித்துவ நடைமுறையில் ஈடுபடுவதும் பைஆத் செய்து கொள்வதும் உங்களிம் கூடுமா?. சூபிச பெருமக்களின் உள்ளத்தில் இருந்தும் அவர்களின் கப்ருகளில் இருந்தும் அந்தரங்க பிரயோசங்கள் பெறுதல் தொடர்பில் என்ன கூறப் போகிறீர்கள்?. அதி சங்கைக்குரிய ஷைகுமார்களின் ஆத்மாக்களில் இருந்து அவ்வழி செல்பவர்கள் பிரயோஜனம் பெற முடியுமா? அல்லது முடியாதா?
الجواب
يستحب عندنا إذا فرغ الإنسان من تصحيح العقائد و تحصيل المسائل الضرورية من الشرع : أن يبايع شيخاً راسخَ القدم في الشريعة زاهداً في الدنيا راغباً في الآخرة قد قطع عقبات النفس و تمرن في المنجيات و تبتل عن المهلكات كاملاً مكملاً و يضع يده في يده و يحبس نظره في نظره و يشتغل بأشغال الصوفية من الذكر و الفكر و الفناء الكلي فيه و يكتسب النسبة التي هي النعمة العظمى و الغنيمة الكبرى و هي المعبَّر عنها بلسان الشرع بِ‘الإحسان’ ، 
و أما من لم يتيسر له ذلك و لم يقدر له ما هنالك فيكفيه الانسلاك بسلكهم و الانخراط في حزبهم ، فقد قال رسول الله صلى الله عليه و سلم : " المرء مع من أحب أولئك قوم لا يشقى جليسُهم "
و بحمد الله تعالى و حسن إنعامه ، نحن و مشايخنا قد دخلوا في بيعتهم و اشتغلوا بأشغالهم و تصدوا للإرشاد و التلقين ، و الحمد لله على ذلك
و أما الاستفادة من روحانية المشايخ الأجلة و وصول الفيوض الباطنية من صدورهم أو قبورهم فيصحّ على الطريقة المعروفة في أهلها و خواصِها لا بما هو شائع في العوام

பதில்: அகீதா சரியான ஒருவர் மார்க்க சட்டதிட்டங்களில் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய மிக முக்கிய விடயங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் ஷரீஅத்தில் ஆழமான அறிவைப் பெற்றுக் கொண்ட ஒரு ஷைகிடம் பைஅத் செய்து கொள்வது எம்மிடம் நல்லதொரு விடயமாகும். உலகப் பற்று அறுந்தவராகவும் மறுவுலக விடயங்களில் ஆர்வம் உள்ளவராகவும் மனோ இச்சைகளுக்கு முற்றிலும் மாற்றம் சைபவராகவும் பிறர்களை அவ்வாறான விடயங்களில் இருந்து பாதுகாப்பு வழிகளை காண்பிப்பவராகவும் ஷைகானவர் இருக்க வேண்டும். இவ்வாறனதொரு ஷைகின் கரம் பற்றி அவரில் பனாவுள் குல்லியாகி அதாவது அவரில் தன்னை முழுமையாக அழித்து அவரின் வாயிலாக அல் இஹ்சான் எனும் மாபெரும் அருட் கொடையைப் பெற்றிட முடியும். இவ்வாறானதொரு ஷைகினை பெற்றுக்கொள்ள முடியாதவர் நல்லடியார்களை நேசித்துக் கொள்ளட்டும். எவர்களுடன் அமர்வதில் பாக்கியம் அற்றுப் போகாதோ அவர்களை நேசிப்பவர் அவர்களுடன் இருப்பார் என்பது நபி வாக்காகும்.
அல்லாஹ்வின் கிருபையினால் நாமும் எமது ஷைகுமார்களும் இவ்வழி செல்கின்றவர்களாக இருக்கிறோம். அவ்வாறே ஷைகுமார்களின் உள்ளங்களில் இருந்தும் அவர்களின் கப்ருகளில் இருந்தும் அதன் வழி செல்பவர்களுக்கு பலாபன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். . பாமரர்கள் நினைத்துக்கொண்டு இருப்பது போலல்ல.

eravur>wahabisam>thableeq jamath>sirilanka markaz<kalmunai