السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 15 April 2015

தப்லீக் உலமாக்களே இதில் உங்கள் நிலை என்ன?

தப்லீக் உலமாக்களே இதில் உங்கள் நிலை என்ன?

தேவபந்த் உலமாக்கள் சாதாரண அறிஜர்களல்ல. பிறர்களுக்கு பைஆத் கொடுக்கும் ஷைகுமார்கள். அவ்வாறிருந்தும் அவர்களின் முன்னோர்களின் கப்ருகளில் இருந்து பிரயோஜநங் கள் பெற்றிருக்கிறார்கள். ஷைகுமார்களின் கப்ருகளை தரிசிக்க பயணம் செய்திருக்கிறார்கள். ஷைகுமர்களின் கப்ரடியில் முராகபா முஷாஹதாவில் அமர்ந்திருக்கிறார்கள். நபிமார்கள் ஸாலிஹீன்கள் கப்ருகளில் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்பது இவர்களின் அசையாத அகீதாவாக இருக்கிறது.
உலகத்தில் ஒருவர் தனிமையில் சில்லா இருப்பது போன்று அருமை நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கப்ரில் உயிருடன்தான் இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் மனைவியர்கள் பிறர்களுக்கு ஹராம் ஆக்கப்பட்டார்கள்.
இன்னும் அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்கள் அணந்தர சொத்தாகப் பங்கீடு சைய்யப்பதுவதில்லை. காரணம் ஒருவர் மரணத்தின் பின்னர்தான் அவரது சொத்துக்கள் உரியவர்களுக்குப் பங்கீடு சைய்யப்படும் என்று தேவபந்த் உலமாக்களின் ஆபே ஹயாத் – நக்சே ஹயாத் – ஜாமலே காசிமி – அத்தஹூர் – அல் ஹுபூர் – ஹிதாயதுஷ் ஷீஆ- அல் கவாகிபுத் துர்ரி – லதாயிப் காசிமியா – பத்ஹுல் முல்ஹம் – ஹாயதே நபவி – ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது.
தப்லீக் உலமாக்களே!
இலங்கையில் ஏராளமான வலிமார்களின் சியாரங்கள் உங்கள் ஜமாஅத் ஊடுருவலின் பின்னர்தான் மூடப்பட்டிருக்கிறது. இன்றும் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பல இறை இல்லங்களில் வலிமார்களின் சியாரங்கள் கவனிப்பார் அற்றுக் காணப்படுகிறது. வஹ்ஹாபிச கருத்துக்களை நீங்கள்தான் முதன் முதலில் நம் நாட்டில் அறிமுகம் செய்து வைத்தவர்கள். உங்கள் அகீதா தேவபந்த் உலமாக்களின் அகீதாவுக்கு முற்றிலும் முரண்பட்டிருக்கிறதே! அது ஏன்?.
السؤال الثاني عشر
قد كان محمد بن عبد الوهاب النجدي يستحلّ دماء المسلمين و أموالَهم و أعراضهم ، و كان ينسب الناس كلَّهم إلى الشرك و يسبُّ السلف ، فكيف ترون ذلك ؟
و هل يجوز تكفير السلف و المسلمين و أهل القبلة أم كيف مشربكم ؟
வினா 12.
முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவர் முஸ்லீம்களின் இரத்தம் சொத்து மானம் ஆகியவற்றை ஹலாலாக்கி இருக்கிறார். முஸ்லீம்கள் ஷிர்க்கில் இருப்பதாகவும் கூறுகிறார். சலபுகளை ஏசுகிறார். இதனை நீங்கள் எவ்வாறு பார்கிறீர்கள்?. ஸலபுகளை முஸ்லீம்களை அஹ்லுல் கிப்லாவையும் காபிர்கள் என்று கூறுவதில் உங்கள் நிலைப்பாடு என்ன?
الجواب
الحكم عندنا فيهم ما قال صاحبُ الدر المختار (4-262 ايج ايم سعيد): " و خوارج و هم قوم لهم منعة خرجوا عليه بتأويل يرون أنه على باطل كفر أو معصية توجب قتاله بتأويلهم ، يستحلون دمائنا و أموالنا و يسبون نسائنا " إلى أن قال: " و حكمهم حكم البغاة" ثم قال : " و إنما لم نكفرهم لكونه عن تأويل و إن كان باطلاً "
و قال الشامي في حاشيته : " كما وقع في زماننا في أتباع عبد الوهاب الذين خرجوا من نجد و تغلبوا على الحرمين و كانوا ينتحلون مذهب الحنابلة لكنهم اعتقدوا أنهم هم المسلمون و أن من خالف اعتقادهم مشركون و استباحوا بذلك قتلَ أهل السنة و قتلَ علمائهم حتى كسر الله شوكتهم "
ثم أقول : ليس هو و لا أحد من أتباعه و شيعته من مشايخنا في سلسلة من سلاسل العلم من الفقه و الحديث و التفسير و التصوف
பதில்: இது தொடர்பில் துர்ருல் முக்தார் நூலாசிரியர் சொன்ன முடிவுதான் எமது முடிவுமாகும். கவாரிஜீன்கள் வலிந்துரையின் அடிப்படையில் இமாமுக்கு எதிராக புறப்பட்டு விட்டார்கள். அதனால் இமாமை காபிராகவும் கொலை சைய்யப்பட வேண்டிய குர்றமுடையவர் என்றும் கருதுகிறார்கள். அதன் அடிப்படையில்தான் எங்கள் இரத்தங்களையும் சொத்துக்களையும் ஹலாலாக்கிக் கொண்டு பெண்களையும் கைது செய்கிறார்கள். இவர்கள் குழப்பக்கரர்கள் என்பது எமது முடிவாகும்
.
ஷாமி சொன்னதாவது- நஜ்தில் இருந்து வெளிப்பட்டுள்ள அப்துல் வஹ்ஹாபின் ஆதரவாளர்கள் ஹன்பலி மத்ஹபைப் பின்பற்றுபவர்கள் எனக் கூறிக் கொண்டு அவர்கள் மட்டுமே முஸ்லீம்கள். அவர்கள் அகீதாவுக்கு எதிரானவர்கள் முஷ்ரிகீன்கள் எனவும் எண்ணிக்கொண்டு புனிதச்தலங்க்களை கைப்பற்றுகிறார்கள். அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் மக்களையும் உலமாக்களையும் கொலை செய்கிறார்கள். அல்லாஹ் அவர்களை சீரழித்துவிட்டான். அப்துல் வஹ்ஹாபினை ஆதரிப்பவர்கள் எம்மில் யாரும் இல்லை.
و أما استحلال دماء المسلمين و أموالهم و أعراضِهم : فإما أن يكون بغير حق أو بحق
فإن كان بغير حق : فإما أن يكون من غير تأويل : فكفر و خروج عن الإسلام
و إن كان بتأويل لا يسوغ في الشرع : ففسق
و أما إن كان بحق : فجائز بل واجب
و أما تكفير السلف من المسلمين فحاشا أن نكفر أحداً منهم ، بل هو عندنا رفض و ابتداع في الدين
و تكفير أهل القبلة من المبتدعين : فلا نكفرهم ما لم ينكروا حكماً ضرورياً من ضروريات الدين ، فإذا ثبت إنكار أمر ضروري من الدين نكفرهم و نحتاط فيه ، و هذا دأبنا و دأب مشايخنا رحمهم الله تعالى
இஸ்லாமியர்களின் ரத்தம் சொத்துக்கள் மானம் ஆகியன ஹலாலாக ஆ க்குவதற்குரிய தகுந்த காரணம் இருப்பின் அவ்வாறு செய்வது வாஜிபாகும். காரணம் இல்லாதுபோனால் அவ்வாறு ஹலாலாக்கி வைப்பது சில நேரம் குப்ராகவும் இன்னும் சில நேரம் குற்றமாகவும் ஆகும்.
ஸலபுகளை காபிர்கள் என்று நாம் யாரையும் சொல்லப் போவதில்லை. அதுவொரு பிழையான காரியமாகும். மார்க்க விடயங்களில் மிக முக்கிய அம்சம் ஒன்றை நிராகரிப்பது நிரூபிக்கபப்ட்டால் காபிர் என்று தீர்ப்பளிப்போம். இது விடயத்தில் நாம் மிகவும் நிதானமாகவும் இருப்போம். இதுவே எமதும் எமது ஷைகுமார்களின் நடைமுறையாகும்.