السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 22 April 2015

அன்று யுதர்கள் இன்று வஹ்ஹாபிகள்

வரலாற்றில் ஒருநாள்

கராமிதாக்கள் என்ற பயங்கரவாத கும்பல் மஸ்ஜித் ஹராமில் நுழைந்து பல முஸ்லிம்களை கொன்றுகுவித்து, கஃபாவின் திரைகளை கிழித்து, அதன் சுவர்களை இடித்து தள்ளி கஃபா உள்ளே நுழைந்த அந்த வெறிப்பிடித்த கூட்டம்-

எங்கே அபாபீல் பறவை? எங்கே யானைப்படையை அழித்த கற்கள்?   என்று ஓலமிட்டதுடன் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை பெயர்த்தெடுத்து கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இருபது ஆண்டுகாலம் ஹஜ்ருல் அஸ்வத் இல்லாத கஃபாவை இஸ்லாமிய சமூகம் பார்த்தது.

அதுவே முடிவில்லையே!

அல்லாஹ் வரலாற்றை மாற்றினான்,மீண்டும் முஸ்லிம்கள் ஆதிக்கம் பெற்று அக்கல்லை மீட்டனர்.

நபி ஸல் அவர்களின் பிறந்த அந்த பூமியை அவன் வாக்களித்தது போலவே பாதுகாத்தான்.இன்ஷா அல்லாஹ் கியாமத் வரை பாதுகாப்பான்.

இறுதிநாளில் தஜ்ஜால் மக்கா உள்ளே நுழையாமல் மலக்குகளை அல்லாஹ் பாதுகாப்பிற்கு நிறுத்துவான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இறுதிநாளில் தஜ்ஜால் மக்கா உள்ளே நுழையாமல் மலக்குகளை அல்லாஹ் பாதுகாப்பிற்கு நிறுத்துவான் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

பூமானின் புனித உடலை சுமந்து நிற்கும் மதீனாவையும் அல்லாஹ் பாதுகாத்தான்.

மக்காவைப்போலவே மதீனாவும் பல்வேறு தாக்குதல்களுக்கு முகம் கொடுத்தது.

உச்சகட்டமாக- மஸ்ஜித் நபவியில் மூன்று தினங்கள் பாங்கு சொல்லப்படவில்லை.

தீய எண்ணத்துடன் மதீனாவில் நுழைந்தவர்களை  மதீனாவே வெளியேற்றி விடும் என பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உடலையும் அல்லாஹ் பாதுகாத்தான்.

வரலாற்றில் ஒரு நாள்

 أراد بعض الحاقدين أن ينالوا من عرضه وشخصه، وقام عدد من المفترين والمستشرقين بمحاولة تشويه سنته، بل هم بعض الصليبيين أن يعتدوا على جسده عدة مرات، ومن أشهر هذه الحوادث، ما تواتر عند المؤرخين والمحدثين في أحداث عام 557هـ، فبعد ضعف الدولة العباسية، وغزو النصارى، وتعدد الدول الإسلامية وتفككها، كحال الأمة اليوم، قام النصارى بإرسال رجلين خبيثين إلى المدينة المنورة، في زي أهل المغرب، ونزلا في دار قرب الحجرة الشريفة، وأظهرا التقوى والصلاح، والإنفاق على الفقراء والمساكين، وزيارة البقيع والقبر النبوي، حتى أمنهما الناس، بدءا يحفران سردابًا من الأسفل إلى الحجرة النبوية، وينقلان التراب، قليلاً قليلاً، في محافظ من جلد، ثم يلقيانه في مقابر البقيع، واستمرا على هذه الحالة فترة طويلة حتى اقتربا من القبر الشريف وأصبحا يفكران في نقل الجسد الشريف الطاهر, وهناك في الشام، يرى السلطان العادل والملك الصالح نور الدين محمود زنكي، يرى النبي -صلى الله عليه وسلم- في المنام، وهو يشير إلى رجلين أشقرين ويقول: أنجدني يا محمود، أنقذني من هذين، فاستيقظ فزعًا منزعجًا، ثم توضأ وصلى ونام، فرأى نفس الرؤيا،فلما استيقظ في الثالثة دعا وزيره الصالح جمال الدين الموصلي، وحدثه بما رأى، فقال: هذا أمر حدث بالمدينة المنورة، وما قعودك؟، اخرج فورًا إلى المدينة النبوية، واكتم ما رأيت، خرج السلطان في عشرين نفر من رجاله، ووصل المدينة ومعه مال كثير، فدخل المسجد النبوي الشريف، وصلى بالروضة الشريفة وسلم على النبي -صلى الله عليه وسلم-،وصاحبيه -رضي الله عنهما-، ثم جلس لا يدري ماذا يصنع؟ فقال له الوزير: أتعرف الشخصين إذا رأيتهما؟ قال: نعم, قال الوزير للناس: إن السلطان قد أحضر معه أموالاً كثيرة فليحضر الجميع ليأخذ نصيبه، وكان السلطان يتأمل الناس، فلم ير الرجلين، فقال: هل بقي أحد؟ قالوا: لا، فقال: تفكروا وتأملوا: فقالوا: لم يبق أحد إلا رجلان مغربيان من الصالحين، لا يأخذان من أحد شيئًا، ففرح في نفسه وقال: عليّ بهما فورًا، فلما أحضرا له فإذا هما الرجلان اللذان أشار النبي -صلى الله عليه وسلم- إليهما في نومه، فقال: من أين أنتما؟ فقالا: من بلاد المغرب جئنا حاجين فاخترنا المجاورة في هذا العام عند رسول الله -صلى الله عليه وسلم-، وشدد عليها فأصرا على قولهما، فقال: أين منزلهما؟ فأخبر بأنهما في رباط قرب الحجرة الشريفة، دخل المنزل فرأى فيه مالاً كثيرًا، ومصحفين، وكتابًا فوق الأرفف، ثم بدأ يطوف ويتجول في البيت، حتى ألهمه الله سبحانه فرفع حصيرًا في البيت، فإذا بلوح من الخشب فرفعه فرأى سردابًا محفورًا باتجاه الحجرة الشريفة، مخترقًا جدار المسجد، فارتاع الناس لذلك، فجيء بالرجلين فاعترفا أنهما نصرانيان بعثهما النصارى في زي حجاج مغاربة، وأعطوهما أموالاً كثيرة وعظيمة لسرقة الجسد الشريف، ونقله إلى بلادهم، عند ذلك بكى السلطان نور الدين بكاءًا شديدًا، ثم أمر بعد ذلك بضرب عنقهما فقتلا تحت الشباك بجوار الحجرة النبوية الشريفة، ثم أمر السلطان بإحضار رصاص عظيم، وأمر بحفر خندق عظيم حول الحجرة الشريفة كلها ثم أذاب الرصاص وملأ به هذا الخندق حماية للقبر الشريف.. رحمك الله يا محمود.

نزهة الناظرين في تاريخ مسجد سيد الأولين والآخرين
الحجرات الطاهرات بيت النبوة
عبد الرحيم محمود الخولي

ஹிஜ்ரி 557 ம் ஆண்டு.அப்பாஸிய கிலாபத் பலஹீனமடைந்திருந்த காலக்கட்டம்.உலகில் கிருஸ்துவ பலம் ஓங்கிருந்தது.இன்றைய காலம் போலவே அன்றும் இஸ்லாமிய நாடுகள் பிரிந்துகிடந்தது.

அப்போது கிருஸ்துவர்கள்மதீனாவுக்கு மேற்கத்தியர்களின் தோற்றத்தில் இரண்டு மனிதர்களை அனுப்பி வைத்தனர்.

இவர்களின் நோக்கம் பூமானின் உடலை தோண்டியெடுத்து அதை கிருஸ்துவர்களிடம் ஒப்படைப்பது.

அவ்விருவரும் பெருமானின் முபாரக்கான அறைக்கு அருகே தங்கினர்.  இவர்கள்  இறையச்சமுடையவராகவும்,சீர்திருத்தவாதிகளாகவும்,ஏழைகளுக்கு உதவி செய்பவர்களாகவும் தங்களை காட்டிக்கொள்வதுடன்,தவறாமல் ஜன்னதுல் பகீஃயான முஸ்லிம்களின் பொது கப்ருஸ்தானுக்கும்   பெருமானார் ஸல் அவர்களின் ரவ்லா ஷரீபுக்கும் ஸியாரத் செய்து வந்தனர்.

அதன் மூலம் தங்களின் திட்டத்தை நிறைவேற்ற நோட்டமிட்டனர்.

இவர்களின் வெளித்தோற்றத்தைப்பார்த்து மக்களும் இவர்களை நம்பினர்.இவர்கள் தங்களின் திட்டத்தை செயல்படுத்தும் வேலையில் இறங்கினர்,இவர்கள் தங்கிருந்த வீட்டில் பெரும் குழிதோண்டி அதன்வழியாக  நாயகத்தின் ரவ்லாவை அடைய முயற்சித்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக நீண்டகாலம் யாருக்கும் சந்தேகம் வராமல் தோண்டி-இறுதியில் நபி ஸல் அவர்களின் கப்ரை அடைந்து விட்டனர்இது ஒரு புறமிருக்க-

மறு பக்கத்தில்: சிரியாவில் இஸ்லாமிய அரசரான நூருத்தீன் சன்கி ரஹ் அவர்கள் தங்களின் கனவில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கண்டார்கள்.

அதில் நபி ஸல் அவர்கள் அந்த இரு திருடர்களின் பக்கம் சுட்டிக்காட்டி இவர்களிட
மிருந்து தன் உடலை பாதுகாக்கச்சொல்லி உத்தரவிட்டார்கள்.

திடுக்கிட்டு விழித்த சுல்தான் அவர்கள்-
  
ஒழுச்செய்து,தொழுதுவிட்டு மீண்டும் தூங்கினார்கள்.அப்போதும் அதே கனவை கண்டார்கள்.இப்படி மூன்று தடவை கண்டு இக்கனவில் ஏதோ உண்மை இருப்பதாக அறிந்து தன் அமைச்சர் ஜமாலுத்தீன் அவர்களிடம் தான் கனவை பற்றி கூறினார்கள்.

அதைக்கேட்ட அமைச்சர் ஜமாலுத்தீன் அவர்கள்-கலீபா அவர்களே!  மதீனாவில் ஏதோ ஆபத்து சூழ்ந்திருப்பதாக தெரிகிறது,எனவே தாங்கள் இரகசியபயணமாக யாரிடமும் கூறாமல் உடனடியாக மதீனா புறப்படுங்கள்.என்றார்.

இருபது நபர்களுடன் நிறையபொருள்களுடன் சுல்தான் மதீனா வந்து சேர்ந்தார். மஸ்ஜித் நபவியில் நுழைந்து,ரவ்லாஷரீபில் தொழுது விட்டு,நபி ஸல் அவர்களுக்கும் அன்னாரின் அருமை தோழர்களான அபூபக்கர்,உமர் ரலி ஆகியோருக்கும் சலாம் உரைத்துவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்கள்.

இப்போது என்ன செய்வது?
எப்படி அவ்விருவரை கண்டுபிடிப்பது?

எதுவும் தெரியவில்லை-அப்போது அமைச்சர் சுல்தானிடம்,கனவில் நீங்கள் கண்ட அவ்விருவரை நேரில் கண்டால் அடையாளம் கண்டு கொள்வீர்களா?என கேட்க-ஆம் என்று சுல்தான் பதில் கூறினார்.

உடனேஅரசர் தன்னுடன் நிறையபொருள்களை கொண்டுவந்துள்ளார் ஆகவே தாங்கள் வந்து அதை பெற்றுச்செல்லுங்கள் என மக்களுக்கு அமைச்சர் அறிவிப்புச்செய்தார்.

மக்கள் எல்லோரும் வந்தனர்,ஆனால் சுல்தான் எதிர்பார்த்த அவ்விருவர் வரவில்லை.

வேறுயாரும் மீதமிருக்கிறார்களா?என கேட்க,  மக்கள் இல்லை என்று கூறினர்.

நன்றாக யோசித்துச்சொல்லுங்கள் என சுல்தான் சொன்னபோது-மேற்குலகைச்சேர்ந்த இரு ஸாலிஹீன்கள் வரவில்லை.அவர்கள் யாரிடமும் எதுவும் தேவையாக மாட்டார்கள்
.என்றபோது,அரசர் சந்தோஷப்பட்டார்.

உடனே அவ்விருவரை தன்னிடம் அழைத்துவரும்படி உத்தரவிட்டார்.
அவ்விருவரும் வந்தபோது நபி ஸல் அவர்கள் கனவில் சுட்டிக்காட்டிய அதே இருவர்கள் தான்.

நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள்?அரசர் கேட்டார்.

நாங்கள் மேற்குலக நாடுகளிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்தோம்,பின்னர் மதீனாவந்த நாங்கள் இவ்வாண்டு முழுவதும் நாயகத்தின் அருகில் தங்கிவிடலாம் என்று முடிவு செய்து தங்குகிறோம்.என்றனர்.

இவர்கள் இருவரின் வீடு எங்கே இருக்கிறது?என சுல்தான் அவர்கள் கேட்க மக்கள் அதைக்காட்டினர்,வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது-உள்ளே நிறைய பொருட்கள்,இரண்டு குர்ஆன்,நிறையநூட்கள் இருந்தன.

அங்கே ஒரு இடத்தில் பாய் விரிக்கப்பட்டிருந்தது,அதற்கு கீழே ஒரு பலகை போடப்பட்டிருந்தது.அந்த இடத்தில் சுல்தான் அவர்களுக்கு சந்தேகம் வரவே அதை எடுத்துப்பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.
   
காரணம், பலகைக்கு கீழே நபி ஸல் அவர்களின் அறையின் பக்கமாக
ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.
அதைக்கண்ட மக்களும் கடும் அதிர்ச்சியுற்றனர்.பின்னர் அவ்விருவரையும் கொண்டு வந்து கடுமையாக விசாரிக்கப்பட்டபோது-

தாங்கள் கிருஸ்துவர்கள் என்றும், மேற்கத்திய ஹாஜிகளுடன் தங்களை கிருஸ்துவர்கள் அதிகமான பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர் எனவும், முஹம்மதின் உடலை திருடி அங்கு கொண்டு செல்லவேண்டும் என தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் கூறினர்.

அதை செவியுற்ற சுல்தான் நூருத்தீன் அவர்கள் கடுமையாக அழுதார்கள்.

பின்னர் அவ்விருவரின் தலையை நாயகத்தின் அறைக்கு அருகே துண்டிக்கச்சொல்லி உத்தரவிட்டார்கள்.

அவ்வாரே நிறைவேற்றப்பட்டது.

      பின்பு சுல்தானின் உத்தரவுக்கிணங்க-நபி ஸல் அவர்களின் புனித ரவ்லாவை சுற்றி பள்ளமாக தோண்டி சுற்றிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றி ஒரு பாதுகாப்புச்சுவர் அமைத்தனர்.

அல்லாஹுத்தஆலா சுல்தான் நூருத்தீன் ரஹ் அவர்களின் மண்ணரை
யை வெளிச்சமாக்கிவைப்பானாக,

அதே போல் இன்றும் யுதர்களின் கை பொம்மைகள் நபியின் உடலை இடம் மாற்றுவதற்கும் இடிப்பதற்கும் துடிக்கிறார்கள் நிச்சயம் அல்லாஹ் அவர்களை நாஷப்படுத்தி விடுவான்.

எங்கே அபாபீல் பறவை? எங்கே யுதர்கள்? எங்கே வஹ்ஹாபிகள்

எங்கே அபாபீல் பறவை? எங்கே யுதர்கள்? எங்கே வஹ்ஹாபிகள்

எங்கே அபாபீல் பறவை? எங்கே யுதர்கள்? எங்கே வஹ்ஹாபிகள்