السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 21 April 2015

தப்லீக் உலமாக்களே! 10




إنما الأعمال بالنيات 
எனும் ஹதீஸ் உங்ககுக்குத் தெரியும் தானே! மௌலவி இல்யாஸ் தப்லீக் இயக்கம் உருவாக்கியதன் நோக்கத்தினை சத்தியமிட்டு கூறுயுள்ளாரே! இது தப்லீக் ஜமாத்தும் குற்ற சட்டுக்களுக்களான தக்க பதில்களும் எனும் தமிழ் மொழி நூலிலும் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் செய்து வருகின்ற அநேக விடயங்களை நீங்கள் செய்வதில்லையே! அது ஏன்? அதர்கெல்லாம் ஆதாரம் இல்லை என்று நீங்கள் கூறினால் நீங்கள் செய்கின்ற அனைத்துக்கும் ஆதாரம் இருக்கிறதா?. பள்ளிவாசல்கள் மடமல்ல. நீங்கள் உங்கள் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் செய்கிறீர்கள்? அதாவது வக்பு சொத்துக்களை வீண் விரயம் செய்கிறீர்களே! இதற்கு ஆதாரம்தான் இருக்கிறதா?
السؤال الخامس عشر
هل ترون أحدا أفضل من النبي صلى الله عليه و سلم من الكائنات ؟
வினா 15
நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை விட சிறந்ததொன்று அகிலங்களில் இருக்கிறது என்று கருதுகின்றீர்களா?
الجواب
பதில்:
எங்களதும் எமது ஷைகுமார்களின் நம்பிக்கை என்னவென்றால் நிச்சயமாக எங்கள் தலைவரும் ஹபீபும் எங்களுக்கு ஷபாஅத்து செய்பவருமான அல்லாஹ்வின் ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சகல படைப்புக்களையும் விட மென்மையானவர்கள். அவர்களுக்கு எவரும் நிகரல்ல. அல்லாஹ்விடம் அவர்களுக்குள்ள நெருக்கத்தினை யாரும் பெற்றிட முடியாது. நபிமார்கள் ரசூல்மார்களின் தலைவர். இறுதி நபியும் ஆவார்கள். இதுவே எமது நம்பிக்கை. 

اعتقادنا و اعتقاد مشايخنا أن سيدنا و مولانا و حبيبنا و شفيعنا محمدا رسول الله صلى الله عليه و سلم أفضل الخلائق كافة و خيرهم عند الله تعالى لا يساويه أحد بل و لا يدانيه صلى الله عليه و سلم في القرب من الله تعالى و المنزلة الرفيعة عنده و هو سيد الأنبياء و المرسلين و خاتم الأصفياء و النبيين كما ثبت بالنصوص 
و هو الذي نعتقده و ندين الله تعالى به و قد صرح به مشايخنا في غير ما تصنيف