السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 4 December 2024

முதலாவது பிரசங்கம்

 



முதலாவது பிரசங்கம்


ஹிஜ்ரீ 545 ஆம் வருடம் ஷவ்வால் மாதம் பிறை 2-ல் ரூபாத் என்னுமிடத்தில் கௌதுல் அஃலம் அவர்கள் செய்த உபந்நியாசம்.


(இறைவன் ஏற்படுத்திய 'விதி'யை பொருந்திக் கொள் வது சாலச்சிறந்தது. அல்லாஹ் விதித்த விதியின் மீது கேள் விக்கணை தொடுப்பது மார்க்கக் கொலையாகும்; தௌஹீதை மரணிக்கச் செய்வதாகும்; இக்லாஸை அழித்தொழிப்ப தாகும். மூமினின் உள்ளமோ ஏன், எதற்கு, என்ற கேள்வியைக் கேட்பதில்லை. அதன் கொள்கையோ "கட்ட ளைக்கு மனப்பூர்வமாகப் பணிவதும், அந்தராத்மாவு (நப்ஸு) க்கு மாறு செய்வதுமேயாகும்''.) ஏனெனில் நப்ஸு எனப்படுவது அது உச்சி முதல் உள்ளங்கால் வரை தீமை நிறைந்தது; அதைச் சீர்திருத்த விரும்புபவர் அதனுடன் போராடி அதன் தீமையை விட்டும் தற்காத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் போராடி வெற்றி காணும்போது கீழ்க்காணும்படி நீ புரிந்து கொள்வாய். அது உச்சி தொடுத்து உள்ளங்கால்வரை நலமானது; உன் வழிபாட்டில் உன்னோடு அது ஒத்துழைக்கும். பாவத்தை விட்டு விடுவதிலே உன் நண்பனாகும்.அப்போது "முக்திபெற்ற ஆத்மாவே! மனத் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் நீ உனது இறைவனிடம் மீளுவாயாக என்று ஓர் அசரீரி வாக்கு வரும். இப்பொழுது அதனின் அபிலாசைகள் யாவும் நிறைவேற்றிக் கொடுக்கப் படும், அதன் தீமைகள் நீங்கிவிடும். படைப்புப் பொருள் களில் ஏதாவதொன்றோடு மட்டும் அது தொடர்பு கொண் வரையறைக்குட்படாமல் எல்லாப் பொருள்களும் அதனோ தொடர்புக் கொண்டு நப்ஸோடு இணைந்தவைகளாகி விடு கின்றன. அதனால் தான் அதை இப்ராஹீம் நபியவர்களின் பக்கம் இணைப்பதும் பொருத்தமாகும். அவர்கள் நப்ஸின் ஆட்சி அதிகாரத்தை விட்டும் நீங்கியவர்கள். மனோயிச்சை யின் அடிமைத்தளைகளை விட்டும் உரிமை பெற்றவர்கள். அதனால் தான் அவர்கள் உள்ளம் அமைதி பெற்றது. எல்லோரும் அவர்களுக்கு பணியத் துணிந்ததோடு உத விக்கும் முன்வந்தார்கள். அவர்களது உதவியை ஏற்றுக் கொள்ளாது நீங்கள் உங்களுக்காக உங்களது இறைவ னிடம் உதவி தேடிக் கொள்ளுங்கள்; என் இறைவன் என் நிலையை அறிந்தே இருக்கிறான். நான் யாரிடமும் உதவி கோரவேண்டிய தேவை என்ன இருக்கிறது?" என்று கூறி விட்டார்கள். அவர்களது நம்பிக்கை (தவக்கல்) சரியான உறுதி வாய்ந்தது என்று ஆனபோது பின்வருமாறு கூறப் பட்டது. "நெருப்பே இப்ராஹீம் மீது குளிர்ந்து அவரது ஆரோக்கியத்திற்கு காரணமாய் அமைந்துவிடு." பொறுமையாளர்களுக்கு இவ்வுலகிலும் அல்லாஹ்வின் உதவி அளவற்றதாயிருக்கிறது; அவ்வுலகிலும் அவனது அருள் எல்லையற்றதாயிருக்கிறது. இறைவன் கூறுகிறான்:- நான்


பொறுமையாளர்களுக்கு அளவற்ற நற்கூலி வழங்குவேன்.


அதற்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்பவர்கள் எத் தகைய சிரமங்களைச் சகித்துக் கொண்டிருந்திருப்பார்கள் என்பது அல்லாஹ்வுக்கு தெரியாத விஷயமல்ல. ஒரு வினாடியேனும் நீங்கள் அச்சிரமங்களின் மீது பொறுமை செய்தால் பல்லாண்டு காலம் அவனின் அன்புக்கும் அருளுக்கும் அருகதையுடையவர்களாவீர்கள். ஒரு மணி நேரம் பொறுமை கொள்வதும் வீரத்தன்மையாகும். அல்லாஹ் பொறுமையாளர்களுடனே யிருக்கிறான். அதாவது அவன் உதவியும் ஈடேற்றம் அளிப்பதும் அவர்கள் பக்கமே இருக் கின்றன.


நீங்கள் அவனோடு பொறுமைகொள்ளுங்கள். அதற்கு காக விழிப்புணர்ச்சியடையுங்கள்; அதில் அசட்டை செய்யா தீர்கள். மரணத்தின்பின் விழிப்புணர்ச்சி பெற நினையாதீர் கள். அந்நேரம் விழிப்புணர்ச்சி அடைவது யாதொரு பய னும் தராது. மௌத்து வருவதற்கு முன்னாலேயே உஷா ராகிவிடுங்கள்; உங்களின் இஷ்டமில்லாமலே உணர்வு கொடுத்து எழுப்பு முன்பே விழிப்புணர்ச்சி பெற்றுவிடுங்கள். அந்நேரம் கைசேதப்படுவீர்கள். அங்கே உங்கள் கைசேதம் யாதொரு பிரயோஜனத்தையும் தராது. உள்ளங்களைச் சீர்திருத்துங்கள். அவைகள் சீர்திருந்தி விட்டால் எல்லாமே சீர்திருந்திவிடும். அதனால்தான் நபிகள் (ஸல்) திருவுள மானார்கள் : ஆதமுடைய மகனின் சரீரத்துள்ளே ஒரு சதைக் கட்டி உண்டு. அது சரிப்பட்டால் உடல் முழுவதும் சரிப்பட்டு விடும். அது கெட்டால் உடல் முழுவதும் கெட்டுவிடும். அது தான் ஹிருதயம். ஹிருதயம் பயபக்தியால் சீர்திருந்துகிறது, அல்லாஹ்வின் பேரில் நம்பிக்கையாலும் தௌஹீதில் நிலையாக தரிப்பட்டிருப்பதாலும் சீர்திருத்தம் பெறுகிறது. மேலும் நல்ல அமல்களாலும் இக்லாஸாலும் சீரடைகிறது. மனம் கெட்டு விடுவது எவ்வாறு? இத்தன்மை களை இழந்துவிடுவதால்தான்.


மனம் என்பது ஒரு பறவை; சிப்பிக்குள் மறைத்து வைத்திருப்பது போன்றும், செல்வத்தைக் கஜானா விற்குள் பூட்டி வைத்திருப்பது போன்றும் மனப்பறவையை உடல் என்ற பஞ்சாரத்தில் கைதியாக்கப்பட்டது என்றால், கவனம் பறவையின் மீது இருக்கவேண்டுமே தவிர பஞ்சா ரத்தில் இருக்கக் கூடாது. கவனம் முத்தின் மீது இருக்க வேண்டுமே தவிர சிப்பியில் இருக்கக் கூடாது. கவனம் செல்வத்தின் மீது இருக்கவேண்டுமே தவிர கஜானாவின் பலகைக் கதவுகளில் அல்ல. (நம் கவனத்தை மனப்பறவை யில் செலுத்த அல்லாஹ் நல்லருள் புரிவானாக.ஓ இறைவா!) எங்கள் உடல் உறுப்புக்களை உன் வழிபாட்டில் திருப்பு


வாயாக, எங்கள் ஜீவிய காலமெல்லாம் எங்கள் உள்ளங் களில் மெய்ஞ்ஞானத்தை நிரப்பி அருள்புரிவாயாக, நல்லோர் வழிநடத்தி, நாங்களும் அவர்கள் அடைந்த நற்பாக்கியங் களை அடைய அன்றுபோல் என்றும் துணையிருப்பாய். அல்லாஹ்வே!


சமுதாயத்தவர்களே! முற்கால ஸாலிஹான மனிதர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்காக ஆகிவிட்டதைப் போன்று நீங்களும் அல்லாஹ்வுக்காக ஆகிவிடுங்கள். அவன் அவர் களுக்கு ஆகியிருந்ததைப்போல் முற்றிலும் அவன் உங்களுக் காக ஆகிவிடுவான். இறைவன் உங்களுக்காக ஆகிவிட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அவனுக்கு இபாதத் செய்வதிலே ஈடுபடுங்கள். அவன் கொடுத்த சிரமங்களைச் சகித்துக்கொண்டு, அவன் செயல்களை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அச்செயல்கள் உங்களுக்கோ அல்லது மாற்றா ருக்கோ வேதனையும் சோதனையுமாக இருந்தாலும் சரியே.


இந்த ஸாலிஹான சமூகத்தினர் யார் என்றால் அவர்கள் உலகப்பற்றற்றவர்கள். தங்கள் தலைவிதியை தக்வா (பய பக்தி) பரிசுத்த தன்மையால் கைவசமாக்கியவர்கள்; பின்னர் மறுஉலக வாழ்வை நாடினார்கள். அதாவது அதை ஒழுங்கு படுத்த நற்செயல்கள் புரிந்தார்கள். மனோயிச்சைக்கு மாறு செய்து தங்கள் இரக்ஷகனுக்கு வழிபட்டார்கள். தங்களைத் திருத்தியபின் பிறரைச் சீர்திருத்தத் தயாரானார்கள்.


அருமை மகனே! முதலில் உன்னைத் திருத்திக்கொள். பின்பு பிறரைத் திருத்த தயாராகிக்கொள். உன் குணங்கள் மற்றவர் குணங்களைக் கெடுத்துவிடாதவாறு எச்சரிக்கையா யிருந்துகொள் உன்னைச் சீர்படுத்திக்கொள்ளாதவரை அவைகள் உன்னிடமே இருக்கட்டும். நீ குருடனாகயிருந்து கொண்டு, மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியும் என்று எண்ணுகிறாயே, அது மிகவும் கைசேதமான விஷயம். குரு டன் மற்றவர்களுக்கு எப்படி நேர்வழிகாட்ட இயலும்? பாதை காட்டுபவன் கண்பார்வையுடையவனாக இருப்பது அவசியம்.

கடலில் மூழ்குபவர்களைக் காப்பாற்றும் பணி கரைசேர்க்க பயிற்சி பெற்ற நிபுணனையே சாரும். உலகப்பற்றைத் துறக்கச் செய்து மக்கள் மனதை அல்லாஹ்வின் பக்கம் திருப்புவது யார் வேலை? ஆரிப் வலிய்யுல்லாக்களின் வேலை ஞானமற்ற பாமரன் எப்படி வழிகாட்டியாக முடியும் அல்லாஹ்வின் பக்கம் உன்னைத் திருப்புவதற்கு அதிகமாகச் சொல்லவேண்டிய தேவையுமில்லை. நீ எப்பொழுது அவனை முஹப்பத் வைக்கிறாயோ அவனல்லாதவனைத் தவிர்த்து அவனுக்காக அமல் செய்வதவசியம். அவனையே பயப்பட வேண்டும். அவனல்லாதவனுக்கு அஞ்சக்கூடாது. இவ்விஷ யம் மனதால் ஏற்படக் கூடிய நாவன்மை, சொல்லாற்றலால் அல்ல. இவ்விஷயம் ஒன்றாகும் தனிமையால் உண்டாகும். பொது மேடையில் அல்ல. தௌஹீது உள்ளத்தின் கதவரு கில் நின்றுவிட்டு ஷிர்க்கு உள்ளத்தின் உள்ளே நுழைந்து விடும்போது இதுவே முற்றிலும் நிபாக் என்பதை ஞாபகத் தில் வைத்துக்கொள். உன் வாயில் துதிப்பாடலும் உள்ளத் தில் கபடமும், நாவு நன்றி நன்றி என்றுரைக்க இதயத்தில் நன்றி மறந்த திருடனுக்கு இடமளிப்பதும் (உன்மீது) வருந் தத் தக்க விஷயமாகும். ஹதீதே குதுஸியில் இறைவன் கூறு கிறான்: ஆதத்தின் மகனே! உன்பக்கம் என் நன்மைகள் இறங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் உன்னுடைய தீமை -கள் மேல் நோக்கி என் பக்கம் வருகிறது.


நீ அல்லாஹ்வுக்கு அடிபணிகிறவன் என்று சொல்லிக் கொண்டு மற்றவைகளை வணங்குவதற்கு தலைசாய்க் -கிறாயே அது வருந்தத்தக்க விஷயம். நீ உண்மையில் அவனு டைய அடியானாகவிருந்தால் உன்னுடைய விருப்பு வெறுப் பான எல்லாச் செயல்களின் அஸ்திவாரமும் அவனுடைய வழிபாட்டில் அமைந்திருக்கவேண்டும். நேர்மையான மூமினான மனிதன் தனது சாவாத்மாவான கெட்ட ஷைத்தா னுக்கு ஒருபோதும் வழிபடமாட்டான். அவன் அந்த ஷைத் தானையே தன் வழிக்குக்கொண்டு வந்து விடுகிறான். அவன் உலகத்தின் கண் இழிவடைந்தவனாக ஆகமாட்டான்.

அவன் உலகை தன் முன் மண்டியிடச் செய்துவிடுகிறான். அவன் துன்யாவின் மூலம் ஆகிரத்தை தேடக்கூடியவன கிறான். ஆகிரம் கிடைத்துவிடும்போது துன்யாவைவிட்ட விடுகிறான். அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியான தன் இறைவனைச் சந்திக்கும் ஆசையுடையவனாயிருக்கிறான். அவன் எந்த நேரமும் கலப்பற்ற உள்ளத்தோடு அவனுடைய இபாதத்தில் மூழ்கிக் கிடக்கிறான்: அவன் தனது எஜமான னின் "வமாஉமிரூ இல்லா லி யஃபுதுல்லாஹ முக்லிஸீன லஹுத் தீன ஹுனபாஅ 98-5 என்ற சொல்லில் கவனம் செலுத்துகிறான். தர்ஜுமா (பொருள்) அவர்களுக்குக் கட்டளை இடப்பட்டது இதுதான்; கலப்பற்ற உள்ளத்தோடு அவனுடைய இபாதத்தில் ஓர்மையுடன் முழுக்கவனம் செலுத்தவேண்டும். அல்லாஹ்வுடன் படை பொருள்களை இணைவைப்பதை விட்டுவிடவேண்டும். அனைத்து வகை யும் படைத்தாளும் சர்வ வல்லமையுள்ள நாயனுக்கு மட்டுமே தலைவணங்க வேண்டும். அவன் கைவசமே சர்வ வஸ்த்துக் களும் இருக்கின்றன. அவ்வாறிருக்க மற்றவர்களிடத்தில் பொருள் வேண்டுபவனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய். அந்த உண்மை எஜமானனின் கஜானாவில் இல்லாத பொருள் எந்தப்பொருள்? அவனே கூறுகிறான்: "வ இ(ன்)ம்மின் ஷையின் இல்லா இந்தனா கஜாயினுஹு" 15-21 நம்முடைய கருவூலத்தில் கிடைக்காத பொருளே கிடையாது.


குழந்தைகளே! நீர் விழுந்தும் பின் நிழலை வாசஸ்தல மாக்கிக் கொள்ளுங்கள். பொறுமையை தலையணையாக்கிக் கொள்ளுங்கள்.தலைவிதிப்படி நடப்பதை கழுத்துமாலை யாக்கிக் கொள்ளுங்கள். ரஹ்மத்தைக் கவர்ந்திழுக்கும் கருத்தோடு இபாதத் செய்துகொண்டே செல்லுங்கள். இந் நிலை நீடிக்கும்போது விதிவசம் என்ற வானிலிருந்து உன் நம்பிக்கை என்ற நஞ்சையில் அருள் மாரி பொழிந்தருள ஆரம்பிக்கும்.


சமுதாயத்தவர்களே! தலைவிதியை நம்புங்கள்: அந்த நம்பிக்கையில் அப்துல் காதிர் (ஜீலானி) உடன் ஒத்துழைப்பு நல்குங்கள். அந்த ஒத்துழைப்பே அப்துல் காதிரை இறை வனுடன் சந்திக்கவைக்கும். மனிதர்களே! இறைவன். கட்டளைக்கு அடிபணியுங்கள். உங்களின் புற அக இரகசியங் களை அவன் நாட்டத்தின் முன் தலை குனியச் செய்யுங்கள். தக்தீர் (தலைவிதி) என்றால் என்ன? அந்த அரசனின் தூது வனாகும். அந்த தூதுவனுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பது நமது கடமையாகும். இவ்வாறு நாம் செய்யும் போது தூதுவனே நாம் நாடும் இடத்திற்குச் சேர்த்து வைப் பான். விதியே இறைவன் சந்நிதானத்தில் நமக்கு மேன்மை கிடைக்கவைக்கும்.


"பஹுனாலிகள் வலாயத்து லில்லாஹில் ஹக்கி " 18-44 மேலும் அங்கு இறைவனின் ஆட்சி மட்டுமே உண்டு. அவனின் ஞானக்கடல் நீரைப்பருக உனக்கு கோப்பை தயார் செய்யப்படும். அவனின் அருள் பொங்கும் ஸுப்ரா (விரிப்பு) வில் உன் முன்னே, புசிக்க நிஃமத்துக்களை வைக்கப்படும். அவனின் அன்பு உன்னை போர்த்திக் கொள்ளும். இந்த பெரும் சீதேவித்தன்மை எல்லோருக்கும் கிடைக்கப் போவ தில்லை. லட்சத்திலே கோடியிலே யாரோ ஒருவருக்குத் தான் கிடைக்கும்.


அடியானே! பரிசுத்தத்தையும் பயபக்தியையும் நீ, தனது சேவையாக ஆக்கி கொள்வது அவசியம், அந்த தக்வா இறைவன் வகுத்த சட்ட வரம்பை மீறாதிருத்தல் அவசியம். மனம் போனபோக்கும் மனோயிச்சைக்கு அடிமையாவதும் கூடாது. ஷைத்தானைப் பின்பற்றுவதை விட்டும் முகம் திருப்பிக் கொள்ள வேண்டும். தீய சகவாசங்களை விட்டொழிக்க வேண்டும். மூமின் யார் என்றால், இவை


அனைத்துடனும் அவன் போராடுவான். குதிரையை விட்டுக்


கீழே இறங்காமலும் வாளை உறையில் போடாமலும் அவன்


போராடிக் கொண்டேயிருப்பான். அவனது தூக்கம் சிறு


தூக்கம் தூங்குபவர்களின் தூக்கத்தைப் போன்றது. 

அவன் உணவு பசித்திருத்தலாகும். அவனது பேச்சு மௌனமாகும். அதிகமௌனத்தினால் மூமினானவர்கள் ஊமை எனப்பிரசித்த மடைந்திருக்கின்றனர். உண்மையில் அவர்கள் ஊமைகள் அல்ல அவர்கள் பேசுகிறார்கள். எப்போது? எப்பொழுது கிறானோ அப்போது அவர்களைப் பேசவைக்கப் படுகிறது. அவர்களது பேச்சுக்கு உதாரணம் கியாமத் நாளையில் மனிதர்களின் கை கால், கண்கள் பேசுவதைப் போன்ற தாகும். அதாவது அவர்களைப் பேசவைக்கப்படும் போது பேசுகிறார்கள். மரம், கல், மலைகள் (வாய்மொழி பேசாது ) மௌன மொழியால் பேசுவது போன்று அவர்கள்


பேச்சிருக்கும்.


இறைவன் அவர்களிடத்தில் ஒரு வேலை வாங்க நாடு கிறான். அந்த வேலை தான்:- அடியார்களின் செயல்களின் நன்மை தின்மை பலா பலன்களை அவர்களுக்கு அறிவிக்கச் செய்வது. முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகச் செய்தியை மட்டும் அவர்களுக்குத் தெரிவிப்பது போதாது. அவர்களின் முன் ஆதாரங்களை எடுத்துரைக்க வேண்டும். இந்த விஷயங்கள் தான் நபிமார்களும் ரஸூல்மார்களும் அஸ்திவார மிட்டவைகளாகும். பின் அவர்கள் காட்டிச் சென்ற வழியில் உலமாவான அறிஞர்களும் சீர்திருத்தக் கூட்டத்தினர்களும் எழுந்தருளி தாங்களும் நற்கருமங்கள் செய்து கொண்டு மக்களின் சீர்திருத்தமென்னும் படகையும் ஓட்டிச் சென்றார்கள். அச்சீர்திருத்தவாதிகள் தான் பிரதி நிதிகள் என அழைக்கப்பட்டார்கள். நபிபெருமானவர்கள் மலர்ந்தருளிய "அல்உலமாஉ வரதத்துல் அன்பியாயி உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள், என்பதற்கு இதுதான் கருத்து. மனிதர்களே! அல்லாஹ்வின் (நிஃமத்) அருள் கொடைகளின் மீது நன்றி செலுத்துங்கள். பாக்கியங் களெல்லாம் அவனிடமிருந்து வருகின்றன என்று உறுதி கொள்ளுங்கள். அல்லாஹ் கூறுகிறான். "வமா பிக்கும் மின் நிஃமத்தின் பமினல்லாஹி" உங்களை வந்தடையும் ஒவ்வொரு நிஃமத்துக்களும் இறைவன் புறத்திலிருந்து வருவதே.


நிம்மதியற்ற மனிதர்களே! நீங்கள் அவன் அருள் கொடைகளைப் பெற்றுக் கொண்டு அறியாதவர்களைப் போலும், நன்றி மறந்தவர்களாயும் இருக்கிறீர்கள். மேலும் அந்த அருள் கொடைகளை மாற்றார் கையிலிருந்து பெற்றுக் கொண்டதாகக் கூறிக்கொள்கிறீர்கள். சில ருந்து பெற்றுக்ற் நிஃமத்துக்களைக் கொஞ்சம் என்று எண்ணமிட்டும் உங்களின் தகுதிக்கு மேல் அதிகமாகத் தேடக் கூடியவர்களாயும் இருக்கிறீர்கள். சிலசமயம் அந்த நிஃமத்துக்களால் பாவ மான காரியங்களைச் செய்ய உதவி தேடிக்கொள்கிறீர்கள்.


என் மதிப்பிற்குரியவர்களே! உலகத்தில் நிகழும் புரட்சிகளை விட்டு ஒதுங்கி அவரவர் செய்த செயல்களைக் கணக்கிட்டுப் பாருங்கள். அதனால் நீங்கள் பாவங்களை விட்டு நீங்க ஆசை பிறக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும். சிந்தனைக் கண்ணோட்டத்தோடு தங்களது நிலைமைகளை ஆராயுங்கள்.அதனால் உங்களைப் படைத்தவனது கருணைக் கண்பார்வை உங்கள் மீது வெளியாகும். மேலும் அவனது சக்தி எல்லாச் சமயங்களிலும் உங்களுக்குக் கட்டாயத் தேவை என்ற அளவுக்கு நீங்கள் அவனது தேவையுடையவர்களாக யிருக்கிறீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியவரும். நீங்கள் ஜமாஅத்தை விட்டும் பிரிந்திருந்தாலும் சரி அல்லது தனித் திருந்தாலும் சரி, அந்த நப்ஸே அம்மாராவுடைய இச்சை களுடனே பயங்கரப் போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுமக்கள் சறுக்கி விழுவதால் நாசமடைகிறார்கள் என்றால் துறவிகள் சிறிதளவு பின் பற்றுதலாலும் நாசமடைகிறார்கள். அப்தால்கள் கவலை யாலும் தனிமையில் மன ஊசலாட்டங்களாலும் அழிவை அடைகிறார்கள். ஸித்தீக்கீன்களின் கேடு மனப்பக்குவத்தில் கவனம் செலுத்தும்போது சில வினாடிகளில் நிகழ்ந்து விடு கிறது. ஏனென்றால் இவர்களின் சுகஸ்தலம் பாதுஷாஹ்வின் தலைவாயிலாகும். மக்காமே தஃவத் என்பது அவர்கள் இருப்பிடமாகும். இவர்கள் இறை ஞானத்தின் பால் மக்களை அழைக்கிறார்கள். அவர்கள் உள்ளங்களை நோக் கிப்பேசுகிறார்கள்:- ஹிருதயங்களே! ஆத்மாக்களே!


நாடக் கூடியவர்களே!பாதுஷாஹ்வின் தர்பாருக்கு வாருங்கள். விரைந்து வாருங்கள்; மனநிம்மதியோடு வாருங்கள். தக்வா (பயபக்தி) என்ற பாதத்தோடு வாருங்கள். ஏகத்துவக் கொள்கை, இறை ஞானத்தோடு வாருங்கள் பக்தி என்ற பெரும் காணிக்கையுடன் வாருங்கள். ஆசையற்ற காணிக்கையுடன் வாருங்கள். ஆகிரத்தின் எண்ணத்தைக் கூட விட்டு விடுங்கள். அவன் அல்லாத எல்லா வஸ்த்துக்களையும் விட்டு விடுங்கள். இவைகள் அந்த ஆண் அழகர்களின் குணங்கள் ஆகும். இவைகளின் பக்கம் இந்த புண்ணியாத்மாக்கள் மக்களை அழைக்கிறார்கள். அவர்களின் நோக்கம் மக்களைச் சீர்திருத்துவது, எல்லாக் கூட்டத்தினர்களையும் சீர்திருத்துவது, வானத்திலிருந்து பூமி வரை மட்டுமல்லாது அர்ஷிலிருந்து அதள பாதாளம் வரை, எல்லாமே சீர்திருந்த வேண்டும் என்ற கண்ணோட்டம் அவர்களுக்கு உண்டு. அடியார்களே மனதையும் மனயிச்சை யையும் தொடர்வதை விட்டுவிட்டு அந்த உயர்ந்த மேன் மக்களின் பாதங்களுக்கடியில் பூமியாக ஆகிவிடுங்கள். அவர் களின் கரங்களில் மண்ணைப் போல் ஆகிவிடுங்கள்.


அல்லாஹு தஆலா உயிரற்றதிலிருந்து ஜீவனுள்ள வஸ்த்துக்களை உண்டாக்குகிறான். ஜீவனுள்ள பொருள்களி லிருந்து உயிரற்றவைகளை உற்பத்தி செய்கிறான். ஜீவனற்ற உள்ளம் உடையவர்களான அதாவது ஈமான் உடைய வாழ்க்கை இழந்தவர்களான பெற்றோர்கள் வயிற்றில் இப்ராஹீம் (அலை) அவர்களைப் படைத்தான். உண்மையில் மூஃமின்களின் வாழ்க்கை தான் வாழ்க்கை. காபிர்களின் வாழ்க்கை மரணம் தான். ஹதீதே குதுஸியில் அல்லாஹு தஆலா திருவுளம் பற்றினான்:- என்னுடைய படைப்பு களில் எல்லாவற்றையும் விட முதலில் இறந்தவன் இப்லீஸ். அதாவது எல்லோரையும் விட முதல் காபிரான இவன் பாவத்தால் ஈமானுடைய வாழ்க்கையை இழந்தான். மனிதர்களே! இது கடைசி காலம். இதில் நயவஞ்சகத்தின் தலைவாயில்கள் திறந்துவிட்டன. பொய்க்கும், நம்பிக்கை


துரோகத்திற்கும் சிறகுகள் முளைத்துக் கொண்டன. கபடர்கள், பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்களுடன் சேர்வதைவிட்டு தூரமாக வேண்டும் என்று ஞாபகத்தில் வையுங்கள். அதைப் போன்றே நீங்கள் தங்கள் நப்ஸ் என்ற வஞ்சகர்களை, பொய்யர்களை, கெட்டவர்களை விட்டும் தூர ஓடுங்கள். இதன் கருத்து என்ன வென்றால் - அவை களின் விருப்பத்துக்கு மாறு செய்யுங்கள் என்பதாம். அவை கள் சொல்வதைக் கேளாதீர்கள். அவைகளைச் சிறைப்படுத் துங்கள். அவைகளை மூக்கணாங்கயிறு இல்லாத ஒட்டகம் போல் விட்டுவிடாதீர்கள். உஷாராகயிருந்து அவைகளின் கால்களைக் கட்டி வையுங்கள். அத்துடன் எந்த அளவு உரிமையுடையவைகளாக இருக்கின்றனவோ அந்த அள வுக்கு அவைகளின் அத்தியாவசியத் தேவைகளை அவை களுக்குக் கொடுத்துவிடுங்கள். அவைகளின் நீண்டவேண்டுதல் (மனுக்)களை முஜாஹதாத் என்ற அமல்களின் மூலம் ரத்து செய்துவிடுங்கள். நீங்கள் அவைகளின் மீது சவாரி செய்யுங் கள். சந்தர்ப்பம் பார்த்து அவைகள் உங்கள் மீது சவாரி


செய்துவிடக்கூடாது.


தபீ அத் (மனம்) என்றால் என்ன? அது ஒரு சிறு குழந்தை. அதன் சிநேகமும் நல்லதல்ல. குழந்தைகள் அறிவில்லாதவர் களாயிருப்பது போன்றே அதற்கும் அறிவு இல்லை. நீங்கள் அதனிடத்தில் எதையும் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? அப்படி என்றால் குழந்தைகளுக்குமுன்மண்டியிட்டு மரியாதை செய்ய விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்.


ஷைத்தான் என்றால் யார்? அவன் உங்களின் பகிரங்க விரோதி, அவனோ உங்கள் மூலப்பிதா ஆதம் (அலை) அவர் களுக்கும் விரோதியாக இருந்தான். அவன் உங்களுக்கு நிம்மதியளிக்க முடியுமா? நீங்கள் அவனுடைய தர்பாருக்கு உகந்தவர்களாகி உங்கள் எண்ணங்களை ஈடேற்றிக்கொள்ள முடியுமா? உங்களுக்கும் அவனுக்கும் மத்தியிலுள்ள விரோதம் ஆழமானதும் பழமையானதுமாகும். நீங்கள் அவனின் நிழலிலும் வரக்கூடாது. அவன் உங்களுக்கு நிம்மதியைக் கொடுக்கமுடியாது. 

அவன் உங்களுடைய பாவா ஆதம் (அலை) அவர்களையும் ஏமாற்றிவிட்டிருக்கிறான் உங்களுடைய அன்னை ஹவ்வா (அலை) அவர்களையும் ஏமாற்றியிருக்கிறான். அவனுடைய நேசத்தை நம்பாதீர்கள். எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்குமோ அப்பொழுதெல்லாம் உங்களுடைய இரத்தத்தை உறிஞ்சியே விடுவான் உங்களுடைய மரியாதைக்குரிய பெரியோர்களது ஆை களை இரத்தக் காடாக்கியதைப் போன்றே உங்களையும் செய்வான். பயபக்தி என்ற ஆயுதத்தால் நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய தென்னும் ஏகத்துவக் கொள்கையை உங்களுடைய தவ்ஹீ குறிக் கோளாகக் கொள்ளுங்கள். அதற்காக வேண்டி நிஷ்டை- ஓர்மை, தனிமையில் வணக்கம், குணங்களில் தூய்மைகளை உங்களின் நெறியாக ஆக்கிக் கொள்ளுங்கள். மானாலும் உங்களின் இறையோனிடத்தில் எதுவேண்டு கேளுங்கள். அந்த நல்ல குணங்களை உங்களின் பட்டாளங்களாகவும் பயபக்தியை வாளாகவும் ஆக்குங்கள். இந்தப் படைகளே ஷைத்தானை எதிர்த்து வெற்றி கொள்ள போதுமானது. அவனுடைய படைகளைத் தோல்வியடையச் செய்யும். ஏனென்றால், அல்லாஹ்வின் உதவியும், வெற்றியைத் தருவதும் உங்களின் பக்கமே இருக்கிறது. உங்களுக்கே உதவி புரிவான். அவன்


அல்லாஹ்வின் அடியானே! இம்மை மறுமை இரண் டையும் ஒரே தட்டில்வை. அவைகளை ஒரே உறைகல்லில் வை. பின்பு நீ உன் மனதை அந்த எஜமானின் பக்கம் வை. அந்த மனம் இம்மை மறுமையின் ஆசாபாசங்களை விட்டுக் காலியானதாக இருக்க வேண்டும். தன் எஜமானைத் தவிர எந்த வஸ்துவின் பாசத்திற்கும் தன் உள்ளத்தில் இடம் கொடுக்காதே. ஆண்டவனை விட்டு தூரமாகி அடியார்களின் கைப்பாவை ஆகாதே. காரணங்களை விட்டு உன் கவனத்தை திருப்பிவிடு. அர்பாபம் மின் தூனில்லாஹி 3-64 அல்லாஹ் அல்லாத ரக்ஷகர்களை நாடாதீர்கள். முடிந்தால் இம்மையின் ஆசைகளைத் தன் ஆத்மாவரை வவத்துக்கொள். 


மறுமையின் ஆசைகளை உன் உள்ளத்தில் வைத்துக்கொள். உன் எஜமானின் பேரில் உள்ள பற்றை உன் உள்ளத்தின் ஆழ்த்திவை.


அல்லாஹ்வின் அடியார்களே!


அந்த அல்லாஹ்வை தவிர்த்து வேறு எந்தப் பொருளில் மீதும் நீங்கள் பற்றுவைக்கத் தேவை இல்லை. அவன் கிடைத்து விட்டால் எக்காலமும் நீங்காத பொக்கிஷம் கிடைத்து விட்டது. அந்த உன் எஜமானனிடமிருந்து நீ அடையும் நேர்வழி அதற்குப்பின் வழிகேடு இல்லாத நேர்வழியாகும். பாவத்திற்குப் பரிகாரம் தேடி கவனத்தை அவன் பக்கம் வைக்கவேண்டும். ஆனால் தௌபா எப்படி இருக்கவேண்டும்? உள்ளும்புற மும் தௌபாவால் (பாவத்தின் பரிகாரம் தேடப்பட்டதாக) ஆகவேண்டும். அந்த தௌபா உள்ளே (பாத்தினில்) இறங்கும் மருந்து. அது பாவமென்னும் பறந்தாடும் ஆடைகளை அகற்றிவிடும். உலகத்தாருடனில்லாது இறைவனிடத்தில் வெட்கமடை வதைக் கற்பிக்கும். இது உண்மையான வெட்கம். மனி தர்களைக் கண்டு ஏற்படும் வெட்கம் உண்மையானதல்ல. (அது மஜாஸி போலி வெட்கம்) இவைகள் கல்பு (உள்ளத்து) டைய அமல்கள். மேலும் இவைகள் உடலுறுப்புகளின் வெளிப்படையான சுத்தத்துடனும், மார்க்க சுத்தத்துடனும் ஆண்டவனின் தர்பாரில் ஒப்புக்கொள்ளப்பட்டவைகளா கின்றன. எப்பொழுது மனம் உலகப்பாசம் காரணம் என்னும் முள்காட்டு வனாந்தரங்களை விட்டு வெளியேறி விடுகிறதோ அப்போது அது நம்பிக்கை.ஞானக் கடலிலே நீந்தக் கூடியதாகிவிட்டது. ஞானம், நம்பிக்கை என்னும் மைதான (வீர) மனிதனாக ஆகிவிட்டது. எப்பொழுது அது அக்கடலின் நடுவினிலோ அல்லது அந்த மைதானத்தில் அது கரையை விட்டும் தூரமாகிவிடுகிறதோ அப்பொழுது அது இவ்வாறு சொல்லுகிறது: "அல்லதீ கலக்கனீ பஹுவ யஹ்தீனி" 26-78 "யார் என்னைப் படைத்தானோ அவனே எனக்கு நேர்வழி காட்டுவான்" அதனால் அது

க்ரையில் இருந்து மறுகரை வரை (இக்கரையிலிருந்து அக்கரைவரை) அல்லது ஓரிடத்திலிருந்து வேறிடம் வரை சில காலம் தவிர்த்துத் திரிந்த போதிலும் கடைசியாக வெகு சீக்கிரத்தில் நேர்வழியில் வந்தே விடுகிறது. கண்ணுக்கும் புலனாகாத ரக்ஷிக்கும் சக்தி அதற்குக் கைகொடுத்து உத வத் தயாராக முன் வந்தே விடுகிறது. இறை நாட்டத்தார் உள்ளம் எண்ணிலடங்காத மைல் தொலை தூரங்களைக் கடக் கிறது. எல்லா வஸ்துக்களையும் தேடுவதின் மூலம் அது அவைகளை அடையப் பெறுவதற்கு நிம்மதியற்று தவிக்கிறது. அதன் உண்மையான தேட்டமும் வீரத்தனமான அதன் துடிப் பின் பலனாக பயத்துடைய நேரத்திலே அழிவதை விட்டும் காப்பாற்றப்படுகிறது. அதனுடைய ஈமான் என்னும் படகு அக்கடலில் மூழ்குவதை விட்டும் அது காப்பாற்றி விடு கிறது. வெறுப்பு பயம் என்னும் கரியமேகங்கள் அதன் கண் களை விட்டும் தூராக்கப்பட்டு அதனிடத்தில் அன்பும் அருளா ளனுக்கு அருகில் நெருங்கும். ஆனந்த ஸுப்ஹு (காலை) வேளையும் உண்டாக ஆரம்பிக்கிறது.


அடியானே! அந்த வழிகேடு அல்லது முஸீபத் (அபாயம்) என்னும் வியாதி உன்னை வந்து சூழ்ந்துகொள்ளும் போது பொறுமையா (ஸப்ரா) ல் அதை தகர்த்து விடுவதுடன், மேலும் அதற்கு பொறுமை என்ற மருந்தின் மூலமே வைத்தி செய்துகொள். நன்றிக் கரங்களால் அந்த மருந்துக் கோப்பை யைப் பருகிவிடு. அதன் பலனாக நீ ஆரோக்கியம் என்னும் பாக்கியத்தால் ஈடேற்றம் அடைந்தவனாகிவிடுவாய், வெற்றி என்னும் உயர்ந்த சிகரத்தை எட்டிப் பிடித்தவனாக ஆகிவிடுவாய்.


கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைக் காண்பது மூமினான மனிதனின் உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சத்தை உண் டாக்கும். அதே அச்சமாகிறது, அந்த ஆண்டவனின் அன்பு, அருள் என்னும் தலைவாயில்களை அவனுக்காகத் திறந்துவிடுகிறது. அவன் அத்தலைவாயில்களில் நுழையும்போது அவன் உள்ளத்திலே ஆனந்தமும் (பெருமிதமும் தாண் டவமாடுகின்றன. அதன்பின் அந்த அல்லாஹ்வின் ஜலால், கிப்ரியாயி (கோபக்கனல் கொண்ட குணக்) காட்சியைக் காணும் போது அவர்கள் மனங்களிலும் ஆத்மாக்களிலும் முன்பிருந்ததைவிட அதிக அச்சமும் பய உணர்ச்சியும் உண் டாகி விடுகின்றன. அதன்பின் அவர்களுக்காக ஜமால் (அழகு சௌந்தர்யகுணத்) தன்மையின் தலைவாயில் திறக்கு கிறது. இப்பொழுது பரிபூரண நிம்மதியும் சாந்தியும் ஏற் படுகிறது. இதுதான் கடந்து செல்ல வேண்டிய லாஹூத் தின் உயர்ந்த முன்னேற்றப்படி தரஜாவாகும்.


அடிமையே! உணவு, உடை, உறைவிடம், திருமணம் ஆகியவைகள் மட்டும் உனது வாழ்க்கைக் குறிக்கோளாக ஆகிவிடக்கூடாது. உன் மனதுக்கும் உன் ஆத்மாவுக்கும் கூட நோக்கமும் குறிக்கோளும் இருக்கின்றன. இவைகள் எல்லாவற்றையும் விட சிறந்த குறிக்கோள் நீ அறிவாயா. அது ஆத்மீகத்திற்கு எதிர்முறையில் அமுங்கிக்கிடக்கிறது. மிகச்சிறப்பான நோக்கம் இறைவனின் திருப்பொருத்தம் ஆகும். இது உன் வாழ்க்கைக் குறிக்கோளில் அதிக முக்கிய மானது. இதுவே உன் வாழ்க்கையின் உண்மை நோக்கமாக இருக்க வேண்டும். துன்யாவுக்குப் பிரதிபலன் ஆகிரத் படைப்புகளுக்குப் பிரதிபலன் படைத்தவன். நிலையற்ற உல கின் பொருள் ஏதாவது உன்னை விட்டும் தவறிவிட்டால் அதை ஈடுசெய்வதற்கு அதைவிட அதிக உயர்வான பொரு ளான ஆத்மீகத்தால் நீ லாபமடைய முடியும். வாழ்க்கை யில் எஞ்சியுள்ள நாட்கள் எவ்வளவோ அவைகளை மறு உலக நிர்மாண காரியங்களில் கழித்து விடு. மலக்கல் மௌத்து வலைவிரித்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக் கிறார். அவ்லியா (இறைநேசர்) களிடத்தில் உலகத்தின் அந்தஸ்து என்ன? மறு உலகத்திற்காக கட்டிச்சாதம் தயார் செய்து கொடுக்கும் சமையல்காரனைப் போன்றதுதான் அது. ஆகிரத்தில் அவர்களுக்காக வாழ்க்கையின் உண்மை நோக்கம் நிர்மாணிக்கப்பெறுகிறது

கம் என்பது என்ன? அதுதான் அவர்களது நாயன் அவர் களைச் சந்திப்பது. அதனால் தான் உண்மையில் அவர்கள் துன்யாவைத் தேடக்கூடியவர்களும் அல்ல; ஆகிரத்தின் பேரில் பேராசைப் பார்வை பார்ப்பவர்களும் அல்ல. செல் வச் செருக்கில் அல்லாஹ்வை நீங்கள் முஹப்பத் வைப்ப தும் வேதனையும், சோதனையும் வரும்போது உங்கள் மனம் அதைவிட்டு ஓடநினைப்பதும் 'அவன் பேரில் அன்புகொண் நேசர்கள் நாங்கள்" என்ற உங்கள் வாதத்தை மெய்ப்படு தும் திரையைக்கிழித்து விடுகிறது. வேதனையிலும் சோதனை யிலும் துணிவுடனும் ஊக்கத்துடனும் நிலைத்து நிற்பீர்களா னால் இதுவே முஹப்பத்தே இலாஹி (இறையன்பு) ஆகும். இப்பொழுது நீங்கள் அவனுடைய மஹ்பூப் (நேசர்) கள்) ஆக ஆகிவிடுகிறீர்கள். அந்தப் பரீட்சையும் உங்க ளுக்கு அவசியமாகவும் இருந்திருந்தது. ஒருமனிதர் நபிகள் (ஸல்) அவர்களிடம் வந்து "யாரஸூலல்லாஹ்! நான் உங்களை நேசிக்கிறேன்'' என்று சொன்னார். அப்படியென் றால் வறுமைக்கும் ஏழ்மைக்கும் போர்வை தயார்செய்து கொள் என்று பெருமானார் கூறினார்கள். மற்றொரு மனி தர் அவர்களிடம் வந்து "அல்லாஹ்வை நேசிக்கிறேன்'' என்றுசொன்னார். அப்படியென்றால் முஸீபத்து (சோதனை) களுக்காக போர்வை தயார் செய்துகொள் என்று நபிகள் (ஸல்) கூறினார்கள். அல்லாஹ் ரஸூல் உடைய முஹப் பத் வறுமை, ஏழ்மை, சோதனைகளுடன் இணைக்கப்பட்டி ருக்கிறது. ஒரு நல்ல மனிதர் எவ்வளவு அருமையாகக் கூறியிருக்கிறார், "குல்லுல் பலாயி பில் வலாயி" முஸீ பத்துக்கள் அடங்கலுக்கும் முஹப்பத்துடனே ஆழமான தொடர்பு உண்டு. நீ அல்லாஹ்வின் நேசனாக வேண்டும் என்றால் முஸீபத்துக்களைச் சகித்துச்செல், பொய்யர்களுக்கு அல்லாஹ்வின் நேசத்தைப்பற்றி மூச்சு விடுவதற்கும் துணிவு பிறக்க மாட்டாது. அவர்கள் பொறுமையில் பாதம் தரிபட்ட வர்களாக ஆகியிருக்கவில்லை என்றால், அதனால் தான் பரதம் தரிபட்டு நிலைத்திருப்பதை முஹப்பத்தே இலாஹியி (இறையன்பி)ன் உரைக்கல்லாக ஆக்கப்பட்டது.