Friday, 27 December 2024
புகாரி இமாம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள
ஸஹீஹ{ல் புஹாரி தமாம் மஜ் லிஸ்
வரலாற்றுப் புகழ்மிகு பேருவளை கெச்சிமலை தர்காவில் வருடாந்த புனித ஸஹீஹ{ல் புஹாரி தமாம் மஜ் லிஸ்
பீ. எம். முக்தார் 201
![]() படம்: பேருவளை விசேட நிருபர் |
வரலாற்றுப் புகழ்மிகு பேருவளை கெச்சிமலை தர்காவில் நடைபெறும் புனித ஷஹீஹுல் புகாரி முஸ்லிம் தமாம் மஜ்லிஸ் நிபுணர் 2013-4-21 ஞாயிற்றுக்கிழமை காலை சங்கைக்குரிய அஷ்ஷேஹ் முஹம்மத் காலிப் அலவி ஆலிம் பின் அப்துல்லாஹ் ஆலிம் அலவியதுல் காதிரி தலைமையில் நடைபெறுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
இலங்கையில் வியாபார தொடர்பு கொண்டிருந்த அறாபிய நாட்டு முஸ்லிம்களின் ஆரம்பக் குடியேற்றம் சரித்திர பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை கடற்கரை பகுதியில் தான் இடம்பெற்றது என்பது பல சரித்திர ஆய்வாளர்களின் கருத்தாகும்.
கி. பி. 11ம் நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் இலங்கையில் குடியேறி வாழ்ந்தார்கள். இன்றும் பேருவளை கடற்பாங்காகவுள்ள "கெச்சிமலை பள்ளிவாசல்" இலங்கையில் முஸ்லிம்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்குச் சான்றாகவுள்ளது என்றும், பட்டுப்பாதையூடாகப் பிரயாணம் செய்த 'அம்கோவேல்ட்' நிறுவனத்தின் பிரபல பத்திரிகை நிருபர்களான டேவிட், ஆம்டிட் குழுவினரின் ஆய்வறிக்கை ஒன்று குறிப்பிடுகின்றது.
சூபியாக்கள் பலரும் இலங்கை வருகை தந்து பாவா ஆதம் மலை என அழைக்கப்படும் (தினீaசீ's ஜிலீak) புனிதத்தல தரிசித்துச் சென்ற வரலாறு உள்ளது. இப்னு பதூதா போன்ற வரலாற்று வல்லுனர்கள் சிலர் கவழி வந்து தரிசித்து தங்களது வரலாற்று நூலில் குறித்துள்ளது வியக்கத்தக்கது. கெச்சிமலையில் வாழும் ஷெய்கு அஷ்ரப் வலியுல்லாஹ் அவர்கள் இதே நோக்கத்தோடு தான் கப்பல் மூலமாக இலங்கை வந்தார்கள். கடலின் ஆகோரமும் காற்றின் வேகமும் கப்பலை திசை திருப்பு மெச்சு புகழ் கெச்சிமலை அணித்தே பேருவளையில் இறங்கச் செய்தது. அல்லாஹ்வின் நாட்டம் இதுவாக இருக்கலாம் என உணர்ந்த அல்லாஹ்வின் அன்பர் அஷ்ரப் வலியுல்லாஹ் கெச்சிமலையில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்கள். அங்கிருந்து இறை பணியைத் தொடர்ந்தார்கள். ஆத்மீக மலர்ச்சி கண்டார்கள்.
1882 ஜோர் அரசரின் கவர்னராக இலங்கையில் கடமையாற்றிய சேர் ஆர்தர் ஹென்றி கோர்டன் அவர்கள் காலி செல்வதற்காக, தன்னுடைய உத்தியோக பூர்வ கடமைக்காக செல்லும் வழியில் அவர் பிரயாணம் செய்த குதிரை வழி மாறி பேருவளை கஷ்டம்ஸ் பாதை வழியில் சென்று ஓர் இடத்தில் தரிவிர்த்து நின்றுவிட்டது. அங்கு இருந்து ஒரு பழைய புதை குழியின் அருகில் நின்று பணிந்து வணங்கியது. இந்த ஆச்சரியமான சம்பவம் கவர்ணரை சிந்திக்கச் செய்தது. குதிரை, அந்த இடத்தை விட்டும் அகல மறுத்தது. அங்குள்ள மக்களிடம் அவர் விசாரித்ததில் இந்த இடம் கெச்சிமலை என்றும், அடங்கப்பட்டிருக்கும் அற்புதமான வழியுல்லா பற்றியும் கூறப்பட்டது. உடனே கவர்னர் அவர்கள் தன்னுடைய காரியதரிசியிடம் ஜோர்ஜ் மன்னர் சார்பில் இந்த இடத்தை அன்பளிப்பாக அளிக்கும் படியும் உத்தரவிட்டார்கள். பின்னர் மக்கள் ஒன்று சேர்ந்து கெச்சிமலையின் வளர்ச்சிக்கு பாடுபட்டு இதை உருவாக்கினார்கள். காலஞ்சென்ற சேகு நாயகம் அல்ஹாஜ் முஹம்மத் ஹம்சா ஆலிம் பின் முஹம்மத் அப்துல்லாஹ் ஆலிம் அலவியதுல் காதிரி அவர்கள் வசம் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பத்திரம் இருந்தது.
15ம் நூற்றாண்டில் கி. பி. 1474 அலெக்சாண்டிரியாவில் அமைக்கப்பட்ட சுல்தானுல் அஷரப் அல் கீதாயின் பள்ளிவாசலை கெச்சிமலை தர்காவின் கலை அமைப்பு பெரிதும் ஒத்தியிருக்கின்றது. எனினும், அதன் உருவ அலங்காரங்களும், அழகிய மாடங்களும், கோபுரங்களும் இங்கு இல்லை. மூன்று திசைகளினாலும் கடலினால் சூழப்பட்ட இயற்கைக் காட்சிகள் இதன் சிறப்பம்சமாகும். இதன் தலைவாயில், பக்கவாயில் கதவுகள் பெரிதும் தென்னிந்திய முறையில் அமைந்துள்ளன. இக் கட்டிடம் ஹிஜ்ரி 1327ம்ஆண்டு நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
புஹாரி - முஸ்லிம் மஜ்லிஸ்
அல் ஆலிம் அஷ்ஷெய்ஹு இஸ்மாயில் (றஹ்) ஹிஜ்ரி 1315ல் இறையடி சேர்ந்தார்கள். அவர்களது புதல்வர் அஷ்ஷெய்ஹு முஹம்மத் அப்துல்லாஹ் ஆலிம் மூலம் (1878- 1952) புனித புஹாரி முஸ்லிம் பராயன மஜ்லிஸ் இங்கு ஆரம்பிக்கப்பட்டது. ஹைதராபாத் நிஸாம் மன்னரின் அவையில் ஷெய்ஹாஹ் இருந்தவரே அஷ்ஷெய்யிது அஹம்மட் இப்னு அப்துல்லாஹ் பாபஹ்ஹி மெளலானா புஹாரி கரிந்தத்தை ஹிஜ்ரி 1321 ஆம் ஆண்டு கெச்சிமலை தர்காவில் அப்துல்லாஹ் ஆலிம் அவர்களுக்கு இதனை ஓத உத்தரவளித்தார்கள். இதனுடன் முஸ்லிம், மஷ்ரவூர்ரவி ஹதீஸ் கிரந்தமும் ஓதப்படுகிறது.
வெள்ளிக்கிழமை தவிர இந்தப் புனித மஜ்லிஸ் தினமும் அதிகாலை தஹஜ்ஜத் தொழுகையுடன் ஆரம்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த பல தசாப்தங்களாக இந்த மஜ்லிஸை அலவியா தரீக்காவின் ஆன்மீக தலைவர் மர்ஹும் சங்கைக்குரிய அஷ்ஷேஹ் முஹம்மத் ஹம்சா ஆலிம் பின் அப்துல்லாஹ் ஆலிம் அலவியதுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கி நடாத்தி வந்தார்கள். அதன் பின்னர் இன்று அவரது சகோதரர்கள் பக்கபலமாக நின்று இம் மஜ்லிசை சிறப்பாக முன்னெடுத்து சென்றுவருகின்றனர். அல்லாஹ்வின் கிருபையால் இம் மஜ்லிஸ் வருடம் தோறும் மிகச் சிறப்பாகவே நடைபெறுகிறது. பல்லாண்டு காலமாக நடைபெற்று வரும் இம் மஜ்லிஸ் சம்பிரதாய வழக்கு முறையின்றி சமூக விழிப்புணர்வையும் தூண்டுகிறது. மேலும் சமுதாய மறுமலர்ச்சியையும் தோற்றுவித்துள்ளது என்பது வரலாற்று உண்மையாகும். இந்த தர்காவின் சுற்று வட்டாரம் தற்போது மிக அழகான முறையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
சுனாமி கற்கோள் அனர்த்தம் பேரு வளை கடற்கரைப் பகுதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்திய போதும் கூட மூன்று பக்கங்களாலும் கடலினால் சூழப்பட்டுள்ள இந்த தர்காவுக்கு எந்த வித சேதமும், பாதிப்பும் ஏற்பட வில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க தாகும். அல்லாஹ்வின் மகத்துவம் இறங்கும் இந்த புனித தர்காவில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளமை மறைக்க முடியாத மறுக்க முடியாத உண்மையாகும். இந்த தர்காவை தர்சிப்பதற்காக தினமும் பெரும் எண்ணிக்கையான உள்நாட்டு வெளிநாட்டு முஸ்லிம்கள் வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
1951ம் ஆண்டு முதல் இன்று வரை தமாம் மஜ்லிஸ் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நேரடியாக அஞ்சல் செய்து வருகின்றது. 1951ம் ஆண்டு தற்போது ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளராகப் பணி புரியும் தர்காநகர் இஷாஅதுல் இஸ்லாம் அனாதை இல்ல தலைவர், சிa லங்கா சிஹாமணி எம். இசட் எம். பதியுத்தீன் ஜே. பி. வானொலியில் நேரடி அஞ்சலுக்கான ஏற்பாடுகளை செய்வதில் காட்டிய ஆர்வத்தை இங்கு நன்றி உணர்வோடு நினைவு கூற வேண்டும்.
ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் அவர்களது ஒரு நாள் உபதேசம் தலைசிறந்த அரபிக் கல்லூரி ஒன்றை இந்நாட்டில் உருவாக்கியது. கொடை வள்ளலான என். டீ. எச். அப்துல் கபூர் ஹாஜியார் அவர்கள் இம் மஜ்லிசில் கேட்ட உபதேசத்தால் மஹரகமையில் கபூரியா அரபுக் கல்லூரியை நிர்மாணித்தார்கள்.
கச்சிமலை புஹாரி மஜ்லிஸின் விளைவால் பிற்காலத்தில் இரண்டு புஹாரி மஜ்லிஸ்கள் தோற்றம் பெற்றன. மூதூர், கிண்ணியா, புஹாரி மஜ்லிஸ் மற்றது தென்னிந்தியா காயல் பட்டணம் புஹாரி மஜ்லிஸ் ஆகியனவே அவையாகும்.
இஷாஅதுல் இஸ்லாம்
அநாதை இல்லம்
1974ஆம் ஆண்டு ஷெய்ஹுநாயகம் மர்ஹ¥ம் ஹம்ஸா ஆலிம் அவர்கள் களுத்துறை மாவட்ட கல்விமான்கள், கொடை வள்ளல்கள், அறிஞர்கள், உலமாக்கள் சிந்தனையாளர்கள் அனு சரணையுடன் தர்காவில் இஷாஅதுல் இஸ்லாம் என்ற பெயரில் ஓர் அநாதை இல்லத்தை உருவாக்கினார். இன்று இந்த நிலையம் மிக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. கைத்தொழில், தொழில்நுட்ப, ஆன்மீக, உலக கல்வியும் அனாதைச் சிறார்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் 1989ம் ஆண்டு கெச்சிமலை தர்காவில் அல் குல்லியதுல் அஷ்ர பிய்யா அரபிக் கலாபீடம் ஆரம்பிக் கப்பட்டதுடன் களுத்துறை மினஹதுல் ஹசனியா அரபிக் கல்லூரியும் ஆரம் பிக்கப்பட்டது. இந்தஇரு கல்லூரியி லிருந்தும் பல உலமாக்கள் உருவாகி வெளியாகியுள்ளனர். பலர் வெளி நாடுகளில் உயர்கல்வி பெறுவதற்கு புலமைப்பரிசில் பெற்று சென்றுள்ளனர். அஷ்ரபியா அரபிக் கல்லூரி, கெச்சிமலை தர்கா வளவில் இஸ்லாமிய கலை வனப்புடன் கம்பீரமாக காட்சியளிக் கிறது. கெச்சிமலை புஹாரி முஸ்லிம் மஜ்லிஸின் விளைவாக வியாபித்த சேவைகள் அனந்தம், கடந்த மார்ச் 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இம் மஜ்லிஸ் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் தமாம் செய்யப்படுகிறது. 20ம் திகதி இரவு ராத்தீப், தர்காவில் அடங்கப்பட்டுள்ள சங்கைக்குரிய அஷ்ஷெய்ஹு அஷ்ரப் வலியுல்லாஹ்வின் ஸியாரத் நிகழ்ச்சியும், அதிகாலை அல்குர்ஆன் தமாம் நிகழ்சியும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும்.
தமாம் நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை வழமைபோல் நேரடியாக அஞ்சல் செய்யவுள்ளது.
Thursday, 26 December 2024
உமரை மனக்க மாட்டேன்
<><><><><><><><><><><><><><><><><>
அபூபக்ர் சித்தீக்(ரழி) அவர்களின் மகள் உம்மு குல்சூம்(ரழி)வை திருமணம் செய்திட விரும்பினார்கள் உமர்(ரழி) அவர்கள். அது உமர்(ரழி)யவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரம்.
உம்மு குல்சூம்(ரழி)வின் சகோதரியான அன்னை ஆயிஷா(ரழி)விடம் செய்தி அனுப்பினார்கள் உமர்(ரழி). அச்செய்தியை அகமகிழ்ந்து வரவேற்றார் அன்னை ஆயிஷா(ரழி).
இந்த அருள் மணக்கும் தகவலோடு தன் சகோதரிக்கு வாழ்த்துக்கூறிட அன்னை ஆயிஷா(ரழி) விரைந்தார்கள்.
தகவலைக் கேட்ட உம்மு குல்சூம்(ரழி) சொன்ன பதிலைக் கேட்டு ஆயிஷா(ரழி) அதிர்ந்தார்கள்.
“உமர்(ரழி)வைக் கணவராகப் பெற்று நான் என்ன செய்வது?! அவர் கடின வாழ்க்கை வாழ்பவர், கடும் ரோஷக்காரர். குடிமக்களின் நலன் குறித்த சிந்தனையே அவர் தலை முழுக்க நிறைந்திருக்கும். நானோ ஓர் இளம்பெண். இறைவனை வழிபட்டுக் கொண்டே.. என்மீது அன்பைப் பொழியும் ஒருவரே எனக்கு வேண்டும்.” என்றார் உம்மு குல்சூம்(ரழி).
அன்னை ஆயிஷா(ரழி) அவர்களால் தன் சகோதரியின் கருத்தை ஏற்க இயலவில்லை. சொன்னார்கள்: “என்னரும் தங்கையே… என்ன சொல்கிறாய்! கலீஃபா உமர்(ரழி)யல்லவா உன்னை திருமணம் செய்திட விரும்புகிறார்!?” என்று.
இதைக்கேட்டு சினத்தோடு சொன்னார் உம்மு குல்சூம்(ரழி): “இத்தோடு நீங்கள் என்னை விடவிடுங்கள். இல்லையானால் (திரும்பத் திரும்ப வலியுறுத்தினால்) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தின் முன்னே சென்று நின்று ‘உமர்(ரழி)வைத் திருமணம் செய்திட நான் விரும்பவில்லை’ என்று ஓங்கிச் சொல்வேன்”என்று.
தன் தங்கையின் மன உறுதி கண்டு அன்னை ஆயிஷா(ரழி) குழப்பமடைந்தார்.
அம்ரு பின் ஆஸ்(ரழி)விடம் சென்று விஷயத்தை எடுத்துரைத்து, தனது குழப்பத்தைக் கூறி, முடிவெடுக்க உதவும் படி கேட்டுக்கொண்டார்.
சூழ்நிலையைப் புரிந்து கொண்ட அம்ரு பின் ஆஸ்(ரழி) அவர்கள் உமர்(ரழி)விடம் சென்று “நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா?” என்று கேட்டார்கள்.
மனமகிழ்வோடு “ஆம்” என்றார்கள் உமர்(ரழி). “யார் மணப்பெண்?” என்று அம்ரு பின் ஆஸ்(ரழி) கேட்க, “அபூபக்ர்(ரழி)வின் மகள் உம்மு குல்சூம் தான்” என்று உமர்(ரழி) பதிலளித்தார்கள்.
அதற்கு, “சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சின்னப்பெண்ணின் தந்தை அபூபக்ர்(ரழி) மரணமடைந்தார்கள். தன் தந்தையின் இழப்பை எண்ணி இரவு பகலாக அழுது கொண்டிருக்கும் அப்பெண்ணை திருமணம் செய்வதால் உங்களுக்கென்ன பலன்!?” என்று கேட்டார்கள் அம்ரு பின் ஆஸ்(ரழி).
இதைக்கேட்ட உமர்(ரழி) பொருள் பொதிந்த பார்வை ஒன்றை அம்ரு பின் ஆஸ்(ரழி) மீது பதித்த படியே கேட்டார்கள்: “ஆயிஷா(ரழி) உன்னிடம் சொன்னார்களா?” என்று. “ஆம்” என்றார்கள் அம்ரு பின் ஆஸ்(ரழி).
உமர்(ரழி)யவர்கள் ‘என்ன நடந்திருக்கும்’ என்று புரிந்து கொண்டார்கள். பிறகு “அப்படியானால் வேண்டாம்” என்று தலையசைத்து காட்டினார்கள்.
நூல்:- இமாம் இப்னு கதீர் எழுதிய “அல்பிதாயா வன்நிஹாயா” #உமர் #திருமணம் #நபியின்_அடக்கத்தலம்
தமிழில்: இல்யாஸ் ரியாஜி.
لما اراد امير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه الزواج من أم كلثوم بنت أبي بكر الصديق رضي الله عنها وكان حينئذ أمير المؤمنين
... فبعث إلى أختها أم المؤمنين
عائشة رضي الله عنها ... فرحبت بذلك السيدة عائشة رضي الله عنها وسعدت بهذا الخبر
... فأسرعت إلى أختها تبشرها بالنبأ السعيد
ففوجئت بأم كلثوم رضي الله عنها تقول لها : وما أفعل بعمر بن الخطاب رضي الله عنه ؟!!! ذلك رجل خشن العيش شديد الغيرة لا يملأ رأسه إلا الرعية ... وأنا شابة أريد من يصب علي الحب صباً ويكون عابداً الله فاستنكرت عليها ذلك السيدة عائشة رضي الله عنها ...... قائلة : يا أختاه إنه عمر بن الخطاب رضي الله عنه أمير المؤمنين
فغضبت أم كلثوم وقالت
: والله إن لم تتركيني لأصرخن أمام قبر رسول
الله أني لا أريد عمر بن الخطاب . فحارت السيدة عائشة رضي الله عنها في أمرها .. فذهبت تستنجد بعمرو بن العاص رضي الله عنه تخبره
أنها حائرة في أمرها ... فذهب عمرو بن العاص إلى عمر بن الخطاب رضي الله عنه وقال له : ألا تتزوج ؟
فقال عمر بسعادة : بلى فسأله عمرو بن العاص
رضي الله عنه : ممن ؟
فرد عليه : أم كلثوم بنت أبي بكر الصديق
رضي الله عنهما ... !!
فرد عليه عمرو بن العاص : ومالك وتلك الجارية مات أبوها منذ شهور. فتبكي لك بالليل والنهار تنعي أباها
فنظر إليه عمر بن الخطاب رضي الله عنه نظرة ذات مغزى سائلاً إياه : أو حدثتك عائشة رضي الله عنها ؟
فرد عمرو بن العاص رضي الله عنه : نعم ففهم عمر بن الخطاب رضي الله عنه ثم أوماً برأسه : إذن لا داعي لها.
📕: البداية والنهاية لإبن كثير
Tuesday, 24 December 2024
தைக்காக்கள் அல்லது தக்கியாக்கள்
(தைக்காக்கள்/தக்கியாக்களின் வரலாறு)
History of Thaikka or Thekkiyas
இலங்கையில் பெரும்பாலான முஸ்லிம் கிராமங்களில் தக்கியாக்கள் அமைந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். பள்ளிவாசல்களைப் போன்று சிறு அளவில் இவை அமைக்கப்பட்டிருக்கும்.
புகாரித் தக்கியா, முஹியத்தீன் தக்கியா, சின்னத் தக்கிய்யா போன்ற பெயர்களில் எமது ஊர்களில் இவை காணப்படுகின்றன.
இவ்வாறான நிலையங்கள் அல்லது ஆன்மீகத்தளங்கள் துருக்கி மற்றும் பால்கன் நாடுகளில் "தெக்கே" tekke என்று அழைக்கப்பட்டன. தெக்ககே நிறுவனங்கள் ஆன்மீக, கலாசார, போராட்ட பயிற்றுவிப்பு நிலையங்களாகக் காணப்பட்டதாக ஹாவட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆன்மேரி சீமெல் தனது Mystical dimensions of Islam என்ற புத்தகத்தில் கூறுகிறார்கள்.
தெக்ககே" tekkeஎன்ற சொல்லுக்கு ஒன்றுகூடும் இடம் இடம் அல்லது ஆன்மீக மாணவர்கள் தங்குமிடம் என்பது அர்த்தமாகும்.
காலப்போக்கில் இவற்றை நிறுவனப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் அவை ஒரு செய்ஹ் அல்லது தனிபர்களின் சொந்த இடமாக அல்லது வீடாக இன்றி அனைவரும் பயன்படுத்தக்கூடிய மத்திய நிலையங்களாக மாறியிருந்தன.
இவ்வாறான நிலையங்கள் கிழக்கில் "கான்காஹ்" என்று அழைக்கப்பட்டன. மத்திய கால எகிப்திலும் கான்காஹ் நிலையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன.
தெக்ககே" tekke என்ற சொல்லின் பரிணாமமே "தைக்காக்கள்" அல்லது "தக்கியாக்கள்" என்பதாகும். தமிழ் நாட்டில் "தைக்காக்கள்" என்றும் இலங்கையில் "தக்கியாக்கள்" என்றும் இது அழைக்கப்டுகின்றது.
" தெக்ககே" / "tekke" அல்லது தைக்காக்களில் திக்ர் நிகழ்ச்சிகள் நாளாந்தம் இடம்பெற்றன. காலானித்துவாதிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு போராடங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றிய திட்டங்கள் இங்கு வரையப்பட்டன.
பிரதன பள்ளிவாசல்களுக்கு அருகில் தெக்ககே" tekke அல்லது தக்கியாக்கள் நிறுவப்பட்டன. அங்கு பயிற்றப்பட்ட மாணவர்கள் அல்லது முரீத்தகள் சகல துறைகளிலும் திறமையுடையவர்களாக இருந்தார்கள். இதனால் தான் துருக்கி பால்கன் உட்பட ஐரோப்பிவிலும் இலங்கை தமிழ்நாடு போன்ற இடங்களில் உள்ள
"தெக்ககே" tekke அல்லது "தைக்கா" அல்லது "தக்கியாக்களில்" சிறந்த கட்டநிர்மாணக்கலையின் சிறப்பியல்புகளை அவதானிக்க முடியும். தைக்காக்களில் பயிற்றப்பட்டோரிடம் கூடுதல் கலை இயல்புகள் காணப்பட்டன.
அடிக்கடி அல்குர்ஆனை ஒதுதல், கஸீதாக்களைப் பாடுதல், ஹழராக்களை நடத்துதல் போன்ற செயற்பாடுகளினால் அழகிய குரல் வளமும், தனித்துவ மொழிநடையும், கவித்துவமும் அவர்களுக்கு மத்தியில் சாதாரணமாகக் காணப்பட்டன.
தெக்கே" tekke அல்லது தைக்காக்களில் சமயலறைகள் (kitchens) காணப்படுகின்றன. இவை "குசினி" என்று அழைக்கப்படுவது வழமை. தெக்கேக்களில் ஆன்மீக மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்குப் பின் அதில் பங்கறே்றவர்களுக்கு உணவு வழங்கவும், அங்கு தங்கியிருப்பவர்களுக்கும், தெக்கேக்களுக்கு வரும் அதிதிகளுக்கு உணவு சமைப்பதற்காகவும் தைக்காக்களில் சமலறைகள் அமைக்கப்படுகின்றன.
இவ்வாறான தெக்கே அல்லது தைக்காக்கள் எகிப்தில் "கான்காஹ்" என்று அழைக்கப்பட்டன.
சுல்தான் சலாஹுத்தீன் ஐயூபி (றஹ்) அவர்கள் "கான்காஹ் ஸஈத் அஷ் ஷுஹதா" என்ற கான்காஹ்வை (தைக்காவை) கி.பி 1173ல் நிறுவினார்.
சுல்தான் சலாஹுத்தீன் (றஹ்) அங்கிருந்தவர்களுக்கு மானிய அடிப்படையில் ரொட்டி, இறைச்சி என்பனவற்றை வழங்கி வந்தார். ஈதுல் பித்ர் ஈதுல் அழ்ஹா போன்ற பெருநாட்களில் அங்கிருந்த 300 பேருக்கு புத்தாடைகளை வழங்கிவந்தார். தேவையான போது நிதி ரீதியான உதவிகளையும் வழங்கினார்.
சுல்தான் சலாஹுத்தீன் ஐயூபி (றஹ்) அவர்கள் "கான்காஹ் ஸஈத் அஷ் ஷுஹதாவுக்கு அடிக்கடி சென்று வந்தார்.
தெக்கே" tekke அல்லது தைக்காக்கள் கூடுதலாக காதிரிய்யா ஆன்மீக உள்ளீர்க்கப்பட்டுள்ளது. ஸாவியாக்கள் மற்றும ரிபாத்கள் ஷாதுலிய்யா அமைப்பினரால் ஏற்படுத்தப்பட்ட மத்திய நிலையங்களாகும்.
படம் : துருக்கியில் பொஸ்னியா ஆகியே இடங்களில் உள்ள தெக்கேக்கள்; திக்ர் மஜ்லிசும், கொழும்பு புகாரித் தைக்காவும்.
தொகுப்பு
பஸ்ஹான் நவாஸ் Fazhan Nawas
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.
Monday, 23 December 2024
முஹியித்தீன் பள்ளிவாசல்கள்...!!!*
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 14 முஹியித்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல்களும், இரண்டு முஹியத்தீன் தக்கியாக்களும் காணப்படுகின்றன.
குருணாகல் மாவட்டத்தில் 16 முஹியித்தீன் மஸ்ஜிதுகளும் இரண்டு முஹியித்தீ்ன் தக்கியாக்களும் காணப்படுகின்றன. (முஸ்லிம் சமயகலாசார திணைக்களத்தின் பதிவுகளின் அடிப்படையில்) இவற்றில் சில பள்ளிவாசல்கள் ஆயிரம்வருடங்கள் பழமை வாய்ந்தவை.
(இலங்கையின் பள்ளிவாசல்கள் பற்றி தனியான ஆய்வொன்றை மேற்கொண்டு வருகிறோம். அதற்கமைய திரட்டிய தகவல்களின் அடிப்படையில் கிடைத்த தரவுகளை பகிர்ந்துகொள்கிறோம்)
சில பள்ளிவாசல்கள் 600 வருடங்களைத் தாண்டியவை. போர்த்துக்கேயரினால் நிர்முலமாக்கப்பட்ட பள்ளிவாசல்களை மீண்டும் கட்டியெழுப்ப இமாம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (றஹ்) அவர்கள் மகத்தான சேவைகளை நிறைவேற்றினார்கள். அவர்கள் இலங்கையில் பள்ளிவாசல்கள், தைக்காக்கள், மத்ரஸாக்கள் அடங்கலாக 350 சமய நிறுவனங்களை நிறுவினார்கள்.
முஹியித்தீன் பள்ளிவாசல் என்ற Concept ஐ உருவாக்கியவர் இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள். இலங்கையில் மிக உயரமான இடத்திலும், இலங்கயில் மிகவும் தாழ்வான பகுதியிலும் உள்ள முஹியத்தின் பள்ளிவால்களையும் அவர்களே நிர்மாணித்தார்கள்.
முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹூ ஸிர்ரஹூ அவர்களின் பணிகளை நினைவுகூறும் வகையிலயே "முஹியித்தின்" பள்ளிவால்கள் உருவாக்கப்பட்டன.
இலங்கையில் 1990 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை " முஹியத்தீன்" பள்ளிவாசல்களே ஒரு ஊரின்
"தாய் பள்ளியாக" அல்லது " பெரிய பள்ளியாக" கருதப்பட்டன. பல ஊர்களின் முஹியத்தின் பள்ளியிலேயே வெள்ளிக்கிழமை ஜூம்ஆவும் நடத்தப்பட்டது. ஊருடன் தொடர்புபட்ட பிரதான தீர்மானங்களை எடுக்கும் தளமாகவும், வருடாந்த கந்தூரிகள் போன்ற, ஒன்று கூடும் தீர்மானம் மிக்க இடமாகவும் முஹியித்தின் பள்ளிவால்கள் அதன் பணியை நிறைவேற்றி வந்துள்ளது.
பொதுவாக இலங்கையில் உள்ள பெரும்பாலான பெரிய பள்ளிவாசல்கள் Grand Mosques முஹியித்தீன் பள்ளிவாசல்களாகும். சில இடங்களில் சில வெறியர்கள் முஹியத்தீன் என்ற பெயர் சிர்க என்று கூறி அதனை சில முதலாளிகளின் குடும்பத்தவர்களின் பெயர்களால் பிரதியீடு செய்திருக்கிறார்கள். (ஊரான் கோழிய அறுத்து வாப்பாட பெயர்ல கத்தம் ஒதியதைப் போல) முஹியித்தீன் பள்ளிவாசல்கள் இலங்கை முஸ்லிம்களின் தலைமுறை வரலாற்றுக்கான சான்றுகளாகும். அவற்றைப் பாதுகாக்க முயற்சிப்போம்.
படத்தில் கடைசியாக உள்ள காலி தலாப்பிட்டிய முஹியத்தீன் பள்ளிவாசல் ஆயிரம் வருடங்களை தாண்டியதாகும். இது உமையாக்களிடமிருந்து அப்பாஸியர்களுக்கு ஆட்சிமாறும் Transitional period பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
ஆயிரம் வருடங்கள் தாண்டிய பெரும்பாலான பள்ளிவாசல்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டன. இவ்வாறான பள்ளிவாசல்களுக்குப் பதிலாக களினி கங்கை, அத்தனகல்ல ஒய என்பவற்றக்கு அருகில் பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டு அவ்வாறான இடங்களில் முஸ்லிம் குடியேற்றங்கள் இடம்பெற்றன. கொழும்பு, கம்பஹா, கேகாலை மாவட்டங்களில் இதற்கான தெளிவான சான்றுகள் காணப்படுகின்றன.
இமாமுல் அக்பர் குத்புல் அக்தாப் செய்யிதினா முஹியத்தீன் அப்துல் காதிருல் ஜீலானி கத்தஸல்லாஹூ ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களில் காதிரியா ஆன்மீக வழியமைப்பும் இமாம் ஷாபிஈ றஹிமஹூல்லாஹ் அவர்களின் மத்ஹபும் எமது இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக வழிகளாக இருந்தன என்பதறாகு இந்தப் பள்ளிவாசல்களே மிகச் சிறந்த சான்றுகளாகும்
மத்ஹபுகள் தரீக்காக்கள் மிம்பர்கள், மினாராக்கள், ஹவ்ழ்கள், கப்றுஸ்தானங்கள், அஸா என்பனவும் எமது அடையாளங்களே
படத்தில் உள்ள பள்ளிவாசல்கள் ஆயிரம் ஆண்டுகள் முதல் 200 வருடங்கள் பழமையான இலங்கையின் முஹியத்தீன் பள்ளிவாசல்களாகும்
பஸ்ஹான் நவாஸ்
Fazhan Nawas
அலி அஹ்மது ரஷாதிக்கு புத்தி இல்லை
Saturday, 21 December 2024
பிரமிட் வியாபார கட்டமைப்பு முறைமை
பிரமிட் வியாபார கட்டமைப்பு முறைமை - #Pyramid Sceme
அறிமுகம்
இன்று இலகுவான வழிகளில் அதிகதிகம் சம்பாதித்துக் கொள்வதற்கான புதிய வர்த்தக, வியாபார, பொருளீட்டல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வீட்டிலிருந்து கொண்டே உழைத்துச் சொத்து சேர்க்க முடியும் என்று கவர்ச்சிப் பிரசாரம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றிலுள்ள முறைகேடுகள், இஸ்லாமிய வரையறைக்கு அப்பாற்பட்ட விடயங்கள் பற்றி அலட்டிக் கொள்ளாமல் முஸ்லிம்களும் இதில் ஈடுபடுகின்றனர்.
எனினும், முஸ்லிமை பொறுத்தவரை அது பற்றி விசாரித்து, இஸ்லாமிய வரையறைகளை அவதானித்து, ஆலிம்களின், அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்றே நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அவசரப்பட்டு காரியத்தில் இறங்கி கைசேதப்படுவதை விடுத்து நிதானமாக செயற்படுவதுதான் ஒரு முஃமினின் பண்பாக இருக்க முடியும்.
இவ்வடிப்படையில், சந்தையில் பல வருடங்களாக உலா வந்து கொண்டிருக்கும் பிரமிட் வியாபாரக் கட்டமைப்பு முறைமை பற்றிய ஷரீஆவின் சட்டத்தை நாம் அறிந்துகொள்வது அவசியமாகும்.
#பிரமிட் வியாபார கட்டமைப்பு முறைமை
பிரமிட் கட்டமைப்பு வியாபார முறைமை குறித்து இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 'பிரமிட் திட்டங்களினால் ஏற்படுத்தப்பட்ட அபாயமும், வலையமைப்பு சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களும் - 2006' இல.4 எனும் சிற்றேட்டுத் தொடரில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது :
இத்திட்டத்தில் புதிதாக பங்குபற்றுபவர்கள் இணைந்து கொள்வதற்கு முற்பணமாக ஓர் கட்டணத்தை செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர். மேலதிகமாக பங்குபற்றுபவர்களின் மூலமாகவும் அதேநேரம் தற்போதுள்ள பங்குபற்றுபவர்களினால் கொண்டுவரப்படும் புதிய பங்குபற்றுபவர்கள் மூலமாகவும் தான் இலாபங்கள் (பணம் அல்லது ஏனைய சலுகைகள்) கிடைக்கும் என பங்குபற்றுபவர்களுக்கு உறுதியளிக்கப்படுகின்றது. எனினும், இத்திட்டங்களானது பெருமளவில் பொருட்கள் அல்லது சேவைகளினை விற்பனை செய்யும் திட்டங்களாக போலியான முறையில் காணப்படுகின்றன.
#பிரமிட் வியாபார கட்டமைப்பு முறையின் #இயல்புகள்
✅ 01. இத்திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு திட்டத்தின் ஊக்குவிப்பாளர்கள் புதிதாக பங்குபற்றுபவர்களை பொருட்கள் அல்லது வேலைகளை கொள்வனவு செய்வதன் மூலம் பணத்தினை முதலீடு செய்யுமாறு வேண்டுகிறார்கள் என்பதுடன் பின்னர் அப்பொருட்களை அல்லது சேவைகளை விற்பனை செய்வதன் மூலம் இத்திட்டத்திற்கு மேலதிக பங்குபற்றுபவர்களை கொண்டுவருமாறும் வேண்டப்படுகின்றனர்.
✅ 02. சந்தையில் இப்பொருட்கள் அல்லது சேவைகளுக்கு பலமான கேள்வி இல்லாதிருப்பதுடன் ஊக்குவிப்பாளரூடாக மட்டுமே இவை கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன.
✅ 03. இத்திட்டத்தில் சேர்வதற்கான நுழைவுக்கட்டணம் பெரும்பாலும் உயர்வாகவே காணப்படும். இது ஊக்குவிப்பாளர்களினால் வழங்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விலையினூடாக கட்டணமாக விதிக்கப்படலாம்.
✅ 04. இப்பொருட்களுக்கு இரண்டாந் தரச்சந்தை இல்லாதிருப்பதுடன் விற்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விற்பனைக்குப் பிந்திய சேவைகளுக்கான உத்தரவாதம் ஊக்குவிப்பாளர்களினால் ஒருபோதும் வழங்கப்படுவதில்லை.
✅ 05.பங்குபற்றுபவர்களினால் விற்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான தரகு அவர்களுக்கு வழமையாக வழங்கப்படுவதில்லை ஆனால் அதிகூடிய வருமானங்ளைப் பெற்றுக்கொள்வதானால் புதிதாக பங்குபற்றுபவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்படுகின்றது. ஒரு பங்குபற்றுபவரின் நிதி வருமானங்கள் அவரினால் கொண்டு வரப்படும் புதிய ஆட்சேரப்புக்களின் எண்ணிக்கையிலே தங்கியிருக்கின்றது.
✅ 06. இறுதி நுகர்வோருக்கு பொருட்கள் அல்லது சேவைகளை சில்லறையாக விற்பனை செய்யும் நோக்கம் இத்திட்டத்தில் சிறிதளவாகவே காணப்படுகின்றது.
✅ 07.0பொதுவாக ஊக்குவிப்புப் பிரசுரங்கள் அல்லது ஊக்குவிப்பாளர்கள் திட்டத்தின் கம்பனி பற்றிய வதிவிடம், வீதி, விலாசம், அல்லது தொலைபேசி இலக்கம் என்பவற்றை வெளிப்படுத்துவதில்லை.
✅ 08.ஊக்குவிப்புப் பிரசுரங்கள் அல்லது ஊக்குவிப்பாளர் நம்பமுடியாத வருமானங்கள் (உ-ம் : சட்டரீதியாக மாதாந்தம் ரூ 100,000 இனைப் பெறுதல்) அல்லது 'வளமானதும் சந்தோச மானதுமான வாழ்க்கை' , 'இலகுவாக ஆட்களை சேர்துக்கொள்ள முடியும்' போன்ற நன்மைகளைப்பெற முடியும் என உறுதிகளை அளிக்கின்றனர்.
✅ 09. திட்டத்தின் அடிமட்டத்தில் இருக்கும் புதிதாக பங்கு பற்றியவர்கள் புதிய ஆட்சேர்ப்புக்களைச் செய்ய முடியாத நிலை எழும் போது அவர்கள் தமது முதலீட்டை இழக்க வேண்டி நேரிடும் என்பதுடன் அத்திட்டம் முறிவடையும் நிலையையும் அடையும்.
✅ 10. செயற்பாட்டுப் பிரதேசங்கள் பிரிவு அல்லது செயற்களம் தொடர்பான நியாயமான ஓர் திட்டத்தை கொண்டில்லாதிருப்பதுடன் ஊக்குவிப்பாளர்கள் பொதுவாக எந்தவொரு நியாயமான அல்லது பகுத்தறிவான வறையறைகள் இல்லாமல் அதிகரித்த ஆட்சேர்ப்புக்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள்.
#பார்க்க: இலங்கை மத்திய வங்கியின்
பிரமிட் திட்டங்களினால் ஏற்படுத்தப்பட்ட அபாயமும், வலையமைப்பு சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களும் - 2006, இல.4
• தினகரன் வாரமஞ்சரி, 2011.08.07 – பக்கம் :12
#பிரமிட் வியாபாரக் கட்டமைப்பு முறைமையின் #வகைகள்:
பிரமிட் வியாபார கட்டமைப்பில் இரண்டு முறைகள் உள்ளன.
🛑 01. வெற்று பிரமிட் கட்டமைப்பு(Naked Pyramid Scheme) என்பது முதலாவது முறைமையாகும். இதன் பின்னணியில் பொருட்கள் இருக்காது. இது வெறும் பணத்தை அடிப்படையாகக் கொண்டது. பணம் செலுத்தி உறுப்பினராகிய பின் பலரை உறுப்பினர்களாக்குவதன் மூலம் பணம் சம்பாதிப்பதாகும்.
🛑 02. பொருட்களை அடிப்படையாகக் கொண்ட பிரமிட் கட்டமைப்பாகும். இதற்குMulti-Level அல்லதுNetwork Marketing Scheme என்று செல்லப்படும். இதில் உறுப்பினராகுவதற்கு குறிப்பிட்ட பொருளை வாங்குதல் வேண்டும்.
பார்க்க: (இலங்கை மத்திய வங்கியின் 'பிரமிட் திட்டங்களினால் ஏற்படுத்தப்பட்ட அபாயமும், வலையமைப்பு சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களும் - 2006, இல.4)
#பிரமிட் வியாபார கட்டமைப்பு இலங்கையில் #தடை செய்யப்பட்ட ஒன்றாகும்
மத்திய வங்கியின் அறிக்கைப்படி, இவ்வியாபார முறைமை இந்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும் என்பதுடன் இத்திட்டத்தில் பங்குபற்றி குற்றவாளியாகக் கண்டுபிடிக்கப்பட்டால் மூன்று வருடங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனை அல்லது ஒரு மில்லியன் ரூபாவுக்குக் குறையாத அபராதம் அல்லது சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
#பிரமிட் மற்றும் வலையமைப்பு வியாபார முறை (Network Marketing) தொடர்பான #ஷரீஆவின் கண்ணோட்டம்
பிரமிட் மற்றும் வலையமைப்பு 'Naked Pyramid Scheme' மற்றும் 'Network Marketing / Multi Level' வியாபார முறைமை குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவிய போதிலும் சமகால இஸ்லாமிய அறிஞர்களில் பெரும்பாலானோர் இதனை ஹராம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். இஸ்லாமிய பொருளியல் துறை அறிஞர்களும் இவ்வியாபார முறைமை ஆகுமானதல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்.
#ஹராம் எனக் கூறும் அறிஞர்கள் பின்வரும் நியாயங்களை முன்வைக்கின்றனர்
📛 01. வட்டியின் இயல்புகளைக் கொண்டிருக்கின்றமை.ஏனெனில், அதிகளவு பணம் சம்பாதிக்கும் நோக்கில் குறைந்தளவு பணம் செலுத்தப்படுகின்றது. விற்கப்படும் பொருட்கள் பணம் கைமாற்றப்படுவதை மறைப்பதற்கான ஒரு யுக்தியாகும். உண்மையில் இப்பொருட்களை வாங்கும் நோக்கம் இருப்பதில்லை. மாறாக, அதில் உறுப்பினராகி அதிக பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு பொருளை கொள்வனவு செய்யும் பொழுது அதன் நோக்கத்தையும் அவதானித்தல் வேண்டும் என்று இமாம் இப்னு ஹஜர் அல்ஹைதமி ரஹிமஹுல்லாஹ் துஹ்ஃபாவில் குறிப்பிடுகின்றார்கள்.
وزعم أن الصحيح مراعاة اللفظ في المبيع لا المعنى غير صحيح بل تارة يراعون هذا وتارة يراعون هذا بحسب المدرك (تحفة المتاج. كتاب البيع )
📛 02. ஒருவகை ஏமாற்றமும் குளறுபடியும் காணப்படுகின்றது.ஏனெனில், இதில் இணைபவர்கள் அதிக இலாபமீட்டலாம் அல்லது ஈட்ட முடியாமலுமாகலாம் என்ற நிச்சயமற்ற தன்மை உள்ளது. என்றாலும், அதிகமானோர் இதில் வெற்றியடைவதில்லை.
عن أبي هريرة رضي الله عنه قال : نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الحصاة وعن بيع الغرر -كتاب البيوع. باب بطلان بيع الحصاة والبيع الذي فيه غرر- صحيح مسلم
நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஏமாற்று வியாபாரத்தைவிட்டும் தடை செய்துள்ளார்கள். நூல் : ஸஹீஹு முஸ்லிம்
قال الرملي في نهاية المحتاج (كتاب البيع) : الغرر هو ما احتمل أمرين أغلبهما أخوفهما
ஏமாற்றம் என்பது இரண்டு விடயங்களைக் சாத்தியமானதாக் இருக்கும் அவற்றில் பொரும்பாலும் அச்சுறுத்தலே மேலோங்கியிருக்கும். (நிஹாயதுல் முஹ்தாஜ்)
📛 03. பொது மக்களின் சொத்து, செல்வங்களை அநியாயமாக சுரண்டும் வகையில் இவ்வியாபார முறைமை அமைந்திருக்கின்றமை.இவ்வியாபார ஒழுங்கில் ஆரம்பத்தில் இணைந்து கொள்கின்றவர்கள் அவர்களுக்குக் கீழால் இத்திட்டத்தில் இணைந்து கொள்பவர்களின் உழைப்பின் மூலம் கூலியையும் பெற்றுக் கொண்டு அதிகளவில் இலாபமும் அடைவர். கம்பனி கொள்ளை இலாபம் பெறும். இத்திட்டத்தில் கடைசியாக இணைந்து கொள்கின்றவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர்.
قال الله تعالى : ولا تأكلوا أموالكم بينكم بالباطل (سورة البقرة,188)
அல்லாஹ் தஆலா அல்-குர்ஆனில் 'உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்.' (அல்-பகரா:188) என்று கூறுகின்றான்.
📛 04. இதில் ஈடுபடுவர்கள் மற்றவர்களைக் கவர்வதற்காக பல பொய் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுகின்றனர்.
📛 05. சிலர் இதனை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஷதரகு| வியாபார முறையுடன் ஒப்பிடுகின்றனர். ஆனால் தரகு வியாபார முறையுடன் இது முரண்படுகிறது. ஏனெனில், தரகு வியாபார முறையில் தரகர் பொருளை கட்டாயமாக கொள்வனவு செய்ய வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுவதில்லை. ஆனால், வலையமைப்பு மற்றும் பிரமிட் முறைகளில் தரகர் கட்டாயமாக பொருளைக் கொள்வனவு செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்.
எனவே, இவ்வியாபார முறைமையில் சந்தேகத்துக்கிடமான, மயக்கமான பல விடயங்கள் இருக்கின்ற அதேவேளை, இது ஒரு வகையான வட்டி, சூதாட்டம், மோசடி, ஏமாற்றம் போலத் தோன்றுவதனாலும், வியாபார ஒழுங்குகள் பேணப்படாதிருப்பதனாலும் இவ்விடயத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வை அஞ்சி தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இலலையெனில் ஹராத்தில் வீழ்ந்து எம்மையே நாம் அழித்துக் கொள்ளும் நிலை உருவாகும்.
#வலையமைப்பு ( #networkmarketing Marketing) மற்றும் பிரமிட் வியாபார முறைமைகள் ஹராமென தீர்ப்பு வழங்கிய ஃபத்வா நிலையங்கள் சில பின்வருமாறு:
❤️ 01. ஸஊதி அரேபியாவின் கல்வி, ஆய்வு, ஃபத்வாவுக்குமான ஒன்றியம்(ஃபத்வா இல:22935)
❤️ 02. சூடானிலுள்ள இஸ்லாமிய ஃபிக்ஹ் மையம்
❤️ 03. ஜோர்தான் இஸ்லாமிய ஃபத்வா நிலையம், (ஃபத்வா இல:1995)
❤️ 4. இஸ்லாமிய சட்ட மையம், இந்தியா (ஃபத்வா 16ஃ4)70
❤️ 05. கட்டார் இஸ்லாமிய ஃபத்வா நிலையம்(islamweb.net, ஃபத்வா 35492)
எகிப்தின் ஃபத்வா நிலையம் (ஆரம்பத்தில் பல நிபந்தனைகளுடன் இவ்வியாபாரத்தை அனுமதித்த இந்நிலையம் தற்பொழுது கூடாது என்று பத்வா வழங்கியுள்ளது) (ஃபத்வா இல:3861)
❤️ 06. ஃபத்வா நிலையம், தாருல் உலூம் கராச்சி - பாகிஸ்தான்
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் கபூரி
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
செயலாளர், ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். ஐ. எம். ரிழ்வி முஃப்தி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
31 August 2024
#PyramidScheme #pyramidscam #sgoscam #sgo #ziyadaia
Network marketing அதாவது
Network marketing அதாவது
التسويق الشبكي
( அத்தஸ்வீக்குஷ் ஷபகீ)
அதே போல் பிரமிட் ( Pyramid) الهرمي ( அல் ஹரமீ )
அதே போல்
التسويق التطبيق المعاصرة
( அத் தஸ்வீக்குத் தத்பீகுல் முஆஸரா)
சமகால பயன்பாட்டு சந்தைப்படுத்தல்
போன்ற வியாபார முறைமைகள், அதன் பயன்பாடுகள், இதில் உள்ள சாதக பாதக அமைப்புகள், ( அர் ரிப்ஹு) الربح (இலாபம் )அதே போல் ( அர் ரிபா) الربا (வட்டி )இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன..? வியாபாரத்தோடு தொடர்புடைய இன்னும் பல...
என்பவைகள் பற்றி தெளிவாக உலமாக்கள் படித்திருந்தால் நாங்கள் ஆய்வு பன்னித்தான் ஹராமா ஹலாலா என்பது பற்றி வெளியிடுவோம் என்று சப்பைக்கட்டு காரணம் சொல்லத் தேவையில்லை...
காரணம் #கிதாபுல்_புயூஃ
كتاب البيوع
என்ற வியாபாரத்தைப் பற்றி பேசும் பிக்ஹ் பாடத்தில் அதாவது #முஆமலாத்
معاملات
கொடுக்கல் வாங்கல் பற்றிய பிரிவிற்குள் தெளிவாகவே விரிவாகவே இமாம்கள் எழுதி இருக்கிறார்கள்..
மட்டுமல்ல ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னனென்ன வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி ஒவ்வொரு வியாபாரதின் பெயரையும் சொல்லி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாகவே சொல்லி இருக்கிறார்கள்...
வரக்கூடிய அந்த ஹதீஸ்களின் விரிவுரையில் மேலான இமாம்கள் குறிப்பிட்ட தடை வியாபாரத்தை எடுத்து அப்படி என்றால் என்ன..?அதற்குள் எத்தனை #மஸ்அலாக்கள் அடங்குகிறது என்பவைகளை மிக துள்ளியமாக எழுதி இருக்கிறார்கள்...
அதே போல் எந்த வியாபாரம் ஆகுமானது என்பது பற்றியும் ஹதீஸ்களில் தெளிவாகவே காணமுடியும்..
ஹிஜ்ரி 631 ல் பிறந்து ஹிஜ்ரி 676 ல் வபாத் ஆன ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்ற ஷாபி மத்ஹபின் மிக முக்கியமான இமாம் அல் ஹாபிழ் நவவீ ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய ஷரஹ் முஸ்லிம் அதாவது ஸஹீஹ் முஸ்லிமுடைய விரிவுரையை பார்த்தால் தடை செய்யப்பட்ட வியாபாரம் என்ன.?என்ற ஹதீஸ்களின் விளக்கவுரையில் தெளிவாகவே எழுதி இருக்கிறார்கள்....
அதே போல் அவர்களின் அல் மஜ்மூஃ ஷரஹுல் முஹத்தப்
( المجموع شرح المهذب )
என்ற பிக்ஹ் கிதாபிலும் தெளிவாகவே எழுதி இருக்கிறார்கள்....
இவைகளை சரிவர படித்திருந்தால் இந்த SGO mine போன்ற புதிய முறை பணம் திரட்டல்கள்,சந்தைப்படுத்தல்கள் எல்லாம் எதில் அடங்கும் என்பது தெளிவாகும்..
நீங்கள் படிக்கவில்லை..வெறுமனே செடுபிகட்டோடு மௌலவி என்று உலாவருகிரீர்கள்.
படித்திருந்தால் ஏன் ஆய்வு பன்ன வேண்டும் பின்பு தான் பத்வாவும் விழிப்புணர்வும் செய்யலாம் என்ற சப்பைக்கட்டுகள்....?
முதலில் மார்க்கத்தை நன்றாக படிங்க உலமாக்களே!! கிதாபுகளை வாசியுங்கள்...அறிவை தேடிக்கொண்டே இருங்கள்.அது மௌலவி செட்டுபிகட்டோடடு முடுவுற்றது அல்ல..
மக்களை நல்வழிப்படுத்துங்கள்
ஹராத்தை விட்டும் பாதுகாருங்கள்.
பயான்களில் தெளிவுபடுத்துங்கள்...
@highlight
மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி
#நாவைப் பேனுவோம்
நாம் இவ்வுலகில் நல்வாழ்வு வாழ விரும்பின் ஒழுக்கம் பற்றிய வரையிலும், பணம்பற்றிய வரையிலும் எச்சரிக்கை யாயிருந்தால் மட்டும் போதாது, நம்முடைய வாயிலிருந்து வெளிவரும் மொழிகள் பற்றிய வரையிலும் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
எனவே தான் ஓர் அறிஞனும் 'உன்னுடைய பணப் பையையும் வாயையும் எச்சரிக்கையுடன் திற. உன்னுடைய பணமும் புகழும் வளர்ந்தோங்கும்' என்று கூறினான். இதனை அறிவாளிகள் எப்பொழுதும் சிரமேற்கொண்டு செயலாற்று வர். வாழ்வதிலும் சீரான வாழ்வே வாழ்வர். பேசுவதிலும் 'யாரிடம் யாரைப்பற்றி எதனை எப்பொழுது; எங்கே வைத்துக் கூறுகின்றோம்' என்பதை நன்கு சிந்தித்தே பேசுவர்.
முட்டாள்களின் இதயமானது அவர்களின் வாயில் இருக்கும் பொழுது அறிவாளிகளின் வாயானது அவர்களின் இதயத்தில் இருக்கும்.
தாம் நினைப்பதையெல்லாம் முட்டாள்கள் வெளியே கொட்டி விடும் பொழுது, அறிவாளிகள் தாம் சொல்வதை எல்லாம் முதலில் சிந்தித்துப் பார்க்கிறார்கள்.
முட்டாள்களின் ஆன்மாவானது அவர்களின் நாவின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களின் இதயம் அவர்களின் உதடுகளில் நாட்டியமாடும் பொழுது, அறிவாளிகளின் ஆன்மா அவர்களின் நாவின் அடியிலே அமைதியாக அடங்கிக் கிடக்கிறது. அவர்களின் நா அவர்களின் மூளையின் கீழே பதுங்கிக் கிடக்கிறது.
அறிவாளிகள் பலர் பல்லாண்டுகளாகத் தங்களுடைய மூளை யை ஒன்று சேர்த்து ஆராய்ந்த போதினும் மறுமொழி கூற இயலாத கேள்விகளை ஒரு முட்டாள் சில நிமிடங்களில் கேட்டு விடுவான். அவர்களுக்கு இறைவன் நாவைப் படைத்தது உணவை ருசிபார்த்து உண்பதற்கேயன்றி உரையாடுவதற்கன்று என்பதை அந்த முட்டாள்கள் உணர்வ தில்லை. தாமாகவே எதையாவது உளறிக் கொண்டிருப்பார் கள். அவர்களின் உளறல்களைக் கேட்பவர்கள் அவர்கள் ஒருவரேயன்றி வேறெவரும் இல்லை என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.
மிருதவான நாவைப் பெற்றிராதவர்கள் கனமான முதுகைப் பெற்றிருக்க வேண்டும் என்ற உண்மையும் அவர்களுக்கு விளங்காது.
கால் தவறிவிட்டால் மீண்டும் ஒழுங்காக அடியெடுத்து வைத்து நடக்கலாம். நாத்தவறிவிட்டால் மீளமுடியாது என்பதும், முள்ளில்லாத நாவானது முட்களையும் உடைத்துவிடும் என்பதும், அது மூன்று அங்குல நீளமுள்ள தாகவே இருந்த போதினும் ஆறுஅடி உயரமுள்ள மனிதனைக் கொன்றுவிடும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.
ஒருவர் லுக்மான் ஹக்கீம் அவர்களிடம் சென்று மேலான பொருளைக் கொண்டு தம்முடைய பசியை ஆற்று மாறு வேண்டிக் கொண்டார். அவர்களும் ஓர் ஆட்டை அறுத்து அதன் நாவை எடுத்துக் கறி சமைத்து அவர்களுக்கு விருந்தளித்னர்.
அடுத்த நாள் அவர் லுக்மான் ஹக்கீமைப் பார்த்து மிகவும் கெட்ட பொருளைக் 'கொண்டு தன் பசியை ஆற்றுமாறு வேண்டிக் கொண்டார். லுக்மான் ஹக்கீம் அவர்களும் மற்றொரு ஆட்டை அறுத்து அதன் நாவைக் கறி சமைத்து அவரின் முன் வைத்தனர்.
இதைக் கண்டதும் அவருக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவில்லை. அப்பொழுது லுக்மான் ஹக்கீம் அவர்கள், 'மனிதனிலே உள்ள மிகவும் நல்ல உறுப்பும் நாதான்; மிகவும் கெட்ட உறுப்பும் நாதான். அவற்றைப் பயன்படுத்தும் முறையைக் கொண்டு அது மனிதனை உயர்த்தவும் தாழ்த்தவும் செய்கின்றது' என்று கூறினர்.
உலகில் ஏற்படும் பெரும்பாலான துன்பங்களுக்கு காரணம் இந்த நா தான். அதற்கு ஒருவன் அதிக உரிய யளித்துவிடின் அது அவனைச் சிறை செய்துவிடுகின்றது. யார் தன்னுடைய நாவைச் சிறை செய்து வைக்கவில்லையோ அவனை அவனுடைய நாவே சிறை செய்து விடுகிறது. அறிவாளியாகப் பிறரால் கருதப்பட விரும்புபவன் தன்னு டைய நாவை அடக்கி ஆள்வதில் அறிவாளியாக இருக்க வேண்டும்.
வாய் மூடி அமைதியாக இருப்பது அறிவாளிகளின் ஆபரணம் மட்டுமன்று; அஃது அறிவற்றவர்களுக்கு ஆபரணமாகவும் தற்காப்பாகவும் அமைந்துள்ளது. போதிய அறிவும் திறனும் பெறாதவர்களின் நீங்காத நல்லொழுக்க மாக வாய்மூடி மௌனமாயிருக்கும் தன்மை அமைந்திருக்க வேண்டும்.
ஏனெனில், அது தங்களின் தவறுகளையும் இரகசியங் களையும் மற்றவர்களுக்கு மறைப்பதோடு மற்றவர்களின் தவறுகளை நன்கு கவனிக்க அவர்களுக்கு வாய்ப்பு நல்குகிறது. மேலும் வீண் விவாதத்திலும் பாவத்திலும் ஈடுபடாமல் ஒருவனைக் காப்பாற்று கிறது.இதனை ஒருவன் உணர்ந்தால் அவன் ஒருபோதும் முட்டாளாக இருக்க மாட்டான்.
ஆனால் முட்டாள்களோ இதனை ஒருபோதும் உணர மாட்டார்கள். பேசுவதால் தான் தங்களின் ஆற்றல் வெளியாகின்றது என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, ஆற்றல் மிக்கவர்களெல்லாம் வாய் மூடி அமைதியாக இருக்கின்றனர்.
அவர்கள் வாய்மூடி இருக்கும் தன்மையானது அவர் களின் ஆற்றலையும் சக்தியையும் நன்கு வெளி காட்டுகின்றது. அவர்களின் மௌனமானது சண்டமாருத சொற்பொழிவைவிட வன்மையானதாக இருக்கிறது.
ஆனால் அதிகமாகப் பேசுவதென்பது ஒருவிதப் பலவீனமே யன்றி வேறில்லை. அதிகமாகப் பேசுபவர்கள் அதிகமாகப் பேசிப் பற்பல தவறுகளை இழைக்கும் பொழுது. தேவைப்படும் பொழுது அளவோடு பேக்கின்றவர்கள் தவறுகள் செய்வதைவிட்டும் தங்களைக் காத்துக் கொள்கின்றனர்.
முட்டாள்கள் ஒரு சிறிய கருத்தை விளக்க அதிகமான மொழி களைப் பயன்படுத்தும் பொழுது அறிவாளிகள் ஒரு பெரும் தத்துவத்தைச் சில மொழிகளில் விளக்கி விடுகின்றார்கள்.
ஆனால் முட்டாள்களோ எதையாவது பேசினால் தான் தங்களை மக்கள் அறிவாளிகள் என்று கருதுவார்கள் என எண்ணிக் கொண்டு எதையாவது உளறிக் கொட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வாயை மூடிக்கொண்டி ருப்பின் மக்கள் அவர்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொள்வர்.
ஏனெனில், அறிவாளிகள் போன்று பேசுவதைவிட அறிவாளிகள் போன்று தோற்றம் வழங்குவது எளிது. ஆனால் இந்த முட்டாள்கள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்தவும் எவராலும் இயலாது.
அமைதியாக அடங்கிக் கிடக்கும் நாவே அறிவுள்ள தலையை உண்டு பண்ணுகின்றது என்று உணர்ந்து அறிவாளிகள் அமைதியாய் இருக்கும் பொழுது, முட்டாள்கள் எதையாவது உளறிக் கொண்டிருப்பதே தங்களின் அறிவுக் கூர்மையை வெளிப்படுத்தச் சிறந்த வழி என்று எண்ணிக் கொண்டுள்ளார்கள்.
தங்களைவிட அறிவாளிகளுடன் பொழுதும், முன்பின் தெரியாத அன்னியர்களுடன் உரையாடும் பொழுதும் மிகவும் எச்சரிக்கையுடன் உரையாட வேண்டும். ஏனெனில் நம் உரையாடலில் காணப்படும். குறைகள் மூலம் அறிவாளிகள் நம்முடைய தரத்தை நிதானித்து அறிந்துவிடுவர். உரையாடு
நாவைப் பார்த்து மருத்துவர்கள் நோயை அறிந்து கொள்வது போன்று அறிவாளிகள் ஒருவனின் நாவைப் பார்த்து அவனுடைய மூளையிலும் இதயத்திலும் உள்ள நோயை அறிந்து கொள்வர்; அன்னியர்கள் நம்மைப் பேச்சில் மிகைத்துவிடப் பார்ப்பார்கள் என்ற உண்மைகளும் இந்த முட்டாள்களுக்கு விளங்குவதில்லை. அவர்கள் தங்களையே தாங்கள் அறிவாளிகளாக எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது மற்றவர்களை அவர்கள் எவ்வாறு அறிவாளிகளாக எண்ணிக் கொள்வர்?
முட்டாளை மலை உச்சியிலுள்ள மனிதனுக்கு நிகராகக் கூறலாம். அவனுக்கு எல்லோரும் சிறியவராகத் தான்
காணப்படுவர். ஆனால் எல்லோருக்கும் அவன் சிறயவனாகக் காணப்படுவான். எனவே மற்றவர்கள் அவனுக்கே அவனுடைய குறைகளை எடுத்துக் காட்டிய போதினும் அதனை விளங்கிக் கொண்டு அவன் திருந்திக் கொள்ள மாட்டான்.
நாம் எதைச் செய்ய வேண்டாமென்று தடுக்கின் றோமோ, அதனையே முட்டாள்கள் வேண்டுமென்று செய்வார்கள். அவர்க ளுக்குத் தன்புத்தியும் கிடையாது; சொற்புத்தியும் கிடையாது. அவர்களின் செயல் அவர்க ளுக்கு எப்பொழுதும் சரியாகவே தென்படும்.
அவர்களைப் புகழ்வதற்கு அவர்களைவிடப் பெரிய முட்டாள்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் தங்களைத் திறமைசாலிகள் என்றும், தவறே செய்யாத நிறைமனிதர்களென்றும் எண்ணிக் கொள்வார்கள். திறமை சாலிகள் என்றும் நிறை மனிதர்கள் என்றும் தங்களை எண்ணிக் கொள்ளும் இவர்களே வடிகட்டின முட்டாள் களாவார்கள்.
இதனையே புத்த மகானும், "தன்னுடைய முட்டாள் தனத்தை உணரும் முட்டாள் அந்த அளவு வரையில் அறிவாளியேயாவான். ஆனால் தன்னை அறிவாளி என்று எண்ணிக் கொண்டிருக்கும் முட்டாளோ உண்மையில்
கூற முற்படுவார்கள். அவர்கள் தங்களை அறிவாளிகள் என்று கருதிக் கொள்வதிலிருந்தே அவர்களை முட்டாள்கள் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.
ஏனெனில் முட்டாள்கள் தங்களை அறிவாளிகள் போன்று தானே காட்டிக் கொள்வர். முட்டாள்களின் நூலின் முதல் அத்தியாயம் தன்னைத் தான் அறிவாளியாகக் கருதிக் கொள்வது என்பது தானே.
இந்த முட்டாள்கள் பிறருடைய குற்றம் குறைகளைத் தான் இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருப்பார்க ளேயன்றித் தங்களின் குற்றம் குறைகள் அவர்களின் கண்களுக்கே அணுவேனும் தென்படாது. அவர்கள் தாங்கள் செய்யும் வேடிக்கைகளைப் பார்த்தே சிரித்து மகிழ்வார்கள் டு அவர்களின் அடக்கமற்ற வெடிச்சிரிப்பிலிருந்தே அவர்கள் தங்களை முட்டாள்கள் என்று உலகிற்குப் பறை முழக்கி விடுவார்கள். ஆனால் அதனை அவர்கள் விளங்கிக் கொள்வ தில்லை. அளவற்ற சிரிப்பானது அடுத்தகணமே துன்பத்தை வருவித்துவிடும் என்பதும் அவர்களுக்கு விளங்காது.
இவ்விதம் நான் கூறுவதிலிருந்து மனிதன் சிரிக்கவே கூடாது என்று கூறுவதாக நீங்கள் எண்ணிக் கொள்ள வேண்டாம். சிரிக்கவே தெரியாதவன், சிரிக்கவே செய்யாத வன், கொலைகாரன், வஞ்சனை யாளன் என்றே நான் கூறுவேன். அவ்விதம் உள்ளவன் எந்தக் கொடும் செயலைச் செய்யவும் தயங்கமாட்டான் என்றும் எடுத்துரைப்பேன்.
ஆனால் நான் கூறுவதெல்லாம், சிரிப்பு அளவோடு தான் இருக்க வேண்டும். வெடிச் சிரிப்புக் கூடாது என்பது தான். ஏனெனில், ஒருவனின் வெடிச் சிரிப்பானது அவனு டைய மூளை காலியாக இருக்கிறது என்பதை உணர்த்து வதோடு அவனுடைய நாகரிகமற்ற தன்மையையும் ஒழுக்கக் குறைவையும் எடுத்துரைக்கிறது.
அதே பொழுதில் அடிக்கடிப் பல்லை இளித்துக் கொண்டிருப்பவன் முட்டாளாக இருக்க வேண்டும். இதனையே போப் என்ற ஆங்கிலக் கவிஞரும் "ஆழமில்லாத ஓடையானது சலசல என்று ஒலிசெய்து ஓடுவது போன்று எப்பொழுதும் இளித்துக் கொண்டிருப்பவன் தன் மூளை காலியாக இருக்கிறது என்பதைப் பறைமுழக்குகின்றான்" என்று கூறுகின்றார்.
அப்படி அவன் முட்டாளாக இல்லாதிருப்பின் சிரித்துச் சிரித்துக் கழுத்தை அறுக்கும் நயவஞ்சகனாக இருக்க வேண்டும். தன்னுடைய கள்ள நெஞ்சைச் சிரிப்பென்னும் போர்வையால் மூடியிருக்கும் அவனைப் பற்றியும் நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்பதே என் கருத்து.
இதனை ஸ்விப்ட் என்ற ஆங்கில அறிஞரும் "எப்பொழு தும் சிரித்துக் கொண்டிருப்பவனின் முகத்திலிருந்து என்னைப் பதினாயிரம் மைல்களுக்கு அப்பால் அனுப்பி விடு" என்று ஓரிடத்தில் கூறுகின்றார். எனவே தான் செல்சீ அறிஞர் கார்லைலும் 'சிரிப்பிலே எவ்வளவு அடங்கிக் கிடக்கிறது! சிரிப்பு என்னும் கருவியால் நாம் மனிதனையே நிதானித்து அறிந்து விடுகின்றோம்', என்று எடுத்துரைக் கின்றார்.
இதை முட்டாள்கள் உணர்வதில்லை. சிரிப்பார்கள்; சிரிப்பார்கள் வயிறு குலுங்கச் சிரிப்பார்கள். வீடு கிடுகிடுக்கச் சிரிப்பார்கள். அயோக்கியன் ஒருவன் தன்னுடைய அயோக்கியச் செயலைப் பற்றி வேடிக்கையாக எடுத்து ரைக்கும் பொழுதும் சிரிப்பார்கள். அப்பொழுது சிரிக்காது தன்னுடைய வெறுப்பைக் காட்டும் முறையில் முகத்தைச் சுளிக்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு விளங்காது.
அன்புள்ள தம்பிக்கு
அப்துர் ரஹீம் அவர்களின் நூலிலிருந்து
Wednesday, 18 December 2024
உதவி தேடலாமா?
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானியும் தவ்ஹீத்வாதிதான்! அவர் பெயரால் அவர் சொல்லாத செய்திகள் இட்டுக்கட்டப்படுகின்றன - நவீன சலபிக் கும்பல்
❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓
சேற்றில் கால் வைத்துப் பழகிய நீங்கள் நெருப்போடு விளையாடலாமா?
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
சுல்தானுல் அவுலியா இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பின்வருமாறு பிரார்த்திக்கும் படி அறிவுறை சொல்கிறார்கள்.
"இறைவா!அருளான நபிகள் பெருமானாரைக் கொண்டு உன்னை முன்னோக்குகிறேன்.
நாயகமே யா றஸூலல்லாஹ்!உங்களைக் கொண்டு அல்லாஹ்வ்வின் பக்கம் முன்னோக்குகிறேன். அவனது மன்னிப்பை வேண்டுகிறேன்.
யா அல்லாஹ்!நாயகத்தின் ஹக்கைக் கொண்டு என்னை மன்னித்து எனக்கு அருள்புரிவாயாக"
இத்தகவல் யாரோ ஒருவரால் இமாம் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்கள் பெயரில் சொல்லப்பட்டதோ இட்டுக்கட்டப்பட்டதோ அல்ல. மாறாக
குதுபுல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகம் அன்னவர்களின் "அல் ஙுன்யா" எனும் கிரந்ததில் அவர்களே இதனைப் பதிவு செய்கிறார்கள்.
"இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ்" என வாயினிக்கப் பேசும் நவீன சலபிக் கும்பலுக்கு அவர்களின் இக்கருத்து இனிக்குமா கசக்குமா.. அவர்கள்தான் சொல்ல வேண்டும்!
Manas fb Manas Fb
Tuesday, 17 December 2024
#பாத்திமா நாயகி
ஒரு பிடி பேரீச்சம் பழத்திற்காக...
**************************************
#உலகில் வேறெந்த உத்தமப் பெண்ணும் அனுபவித்திராத வறுமையின் வேதனையை பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அனுபவித்தார்கள்.
#இக்கால முஸ்லிம் பெண்கள் தங்களை பாத்திமா ( ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வழி முறையில் வந்தவர்கள் என்று சொல்லவே அருகதை அற்றவர்கள் என்று கூறலாம், தவறில்லை. அது மட்டுமல்ல, அவர்களை முன்மாதிரியாக ஏற்றுக் கொள்ளவும் இவர்கள் தயாராக இல்லை என்பதும் தெளிவு.
இவர்கள் தாங்களும் முஸ்லிம்களே என்று வீராப்புடன் கூறிக் கொள்வதை நினைக்கும் பொழுது சிரிப்பும், வேதனையும்தான் மிஞ்சுகின்றன.
பீபீ பாத்திமா, (ரலியல்லாஹு அன்ஹா), அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா),
அன்னை கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா ) ஆகிய இம்மாதரசிகளைக்
காட்டினும் இஸ்லாமியப் பெண்ணிலக்கணத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்பவர் இவ்வுலகில் வேறு யார்? இவர்களைப் பின்பற்ற நம் பெண்கள் தயாரா?
இவர்கள் எந்த அளவிற்குக் கைசேதப்படப் போகிறார்கள் என்பது கியாம நாளில்தான் தெளிவாகும்.
நம் பெண்களிற் சிலர் தான்தோன்றித்தனமாக மாறுவதற்கு அவர்களின் கணவன்மார்களும் உடந்தை என்று எண்ணும்பொழுது எத்தனை வேதனை ஏற்படுகிறது.
பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கடுமையான உழைப்பாளியாக இருந்தார்கள். வீட்டில் மாமியார் இருந்த போதிலும், அவரைத் தொந்தரவு செய்யாமல் அவர்களே குடும்ப வேலைகள் அனைத்தையும் செய்தனர்.
பஞ்சைக் கொண்டு Tற்பது; சோளம், கோதுமை போன்ற தானியங்களைத் கெயில் இட்டு கை சிவந்து போகும் அளவிற்கு அரைப்பது; சிறு குழந்தைகளான பஞ்சைக் கொண்டு நூல் நூற்பது; சோளம், கோதுமை போன்ற தானியங்களைத் திரிகையில் இட்டு கை சிவந்து போகும் அளவிற்கு அரைப்பது; சிறு குழந்தைகளான ஹஸன், ஹுஸைன் ஆகிய இருவரையும் செவ்வனே கவனித்துக் கொள்வது; தண்ணீர் சுமந்து கொண்டு வருவது; துணிகளைத் துவைப்பது; பாத்திரங்களைக் கழுவுவது ஆகிய எல்லா வேலைகளையும் முகம் சுளிக்காமல் செய்து வந்தார்கள்.
கணவர் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வீட்டினுள் நுழையும் பொழுது, அவர்களை அருமை மனைவி பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா ) அவர்கள் முகமலர்ச்சியுடன் வரவேற்ற பண்பாடு! ஆகா! அது அவர்களுக்கே உரிய கலையோ என்று எண்ணவும் தோன்றும்.
இத்தனைக்கும் கணவர் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வறுமையில் வாடியவராகவும், வெறுங்கையுடன் வீட்டினுள் நுழையக் கூடியவராகவுமே இருந்தனர்.
ஆனால் இன்று. கணவன் லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் திறனாளியாகவும், கேட்பதையெல்லாம் வாங்கித்தரும் கையாளாகவும் இருந்தும் கூட, அவன் வீட்டினுள் நுழையும் பொழுது மனைவியின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! அந்த அளவிற்குக் கோணல் மாணலாக இருக்கும். மறுமையைப் பற்றிய சிந்தனை இல்லாததே இதற்குக் காரணம்!
ஒரு முறை ஹஜ்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஏதேனு மோரிடத்திலாவது கூலி வேலை கிடைக்காதா என ஏங்கியவர்களாக வெளியிற் புறப்பட்டார்கள்.
மதீனாவில் கூலி வேலை கிடைப்பதே அரிதாக இருந்தது; அவ்வாறு கிடைத்தாலும், கிடைக்கும் கூலியோ மிக சொற்பமானதாக இருந்தது.
அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு தோட்டத்தினருகில் சென்றார்கள். அது ஒரு கிழவிக்குச் சொந்தமானது எனத் தெரிய வந்தது. அவளிடம் சென்று அவர்கள் வேலை கேட்டார்கள்.
அவளும் தோட்டத்தில் நீர் இறைத்துப் பாய்ச்சும் வேலையைத் தந்தாள். அவள் சொன்ன அளவிற்கு அவர்கள் கடினமாக உழைத்து வேலையை முடித்தார்கள். கைகளில் கொப்புளங்கள் கூட வந்து விட்டன. அந்த அளவிற்கு உழைத்தார்கள்.
இறுதியில் அக்கிழவி கொடுத்த கூலி என்ன தெரியுமா? ஒரேயொரு பிடி பேரீச்சம் பழம் மட்டுமே. அதனைக் கொண்டு வந்து பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கொடுத்தார்கள். பின்பொரு முறை இதே போன்று கூலி வேலை செய்த பொழுது அவர்களுக்கு கோதுமை கிடைத்தது.
இவ்வாறு அவர்களது குடும்ப வாழ்க்கை நடை போட்டுக் கொண்டிருந்தது. ஹஜ்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வேலை செய்ய சளைத்தவர் அல்லர். இறைவனின் நாட்டம் வறுமை அவர்களை வாட்டியது அவ்வளவுதான். அது மட்டுமன்றி முதலாளிகளும், செல்வந்தர்களும் அந்நாளில் தொழிலாளர்களிடம் கடினமான வேலை வாங்கிக் கொண்டு மிக மிக சொற்பமான கூலியைக் கொடுத்ததும் அவர்களின் ஏழ்மைக்கு மற்றொரு காரணம் எனலாம்.
#ஸலவாத்
#islam
#Fathima
#ஸுப்ஹானல்லாஹ் #திக்ர் #வழிகெட்ட #லாயிலாஹ #மரணித்தவருக்காக #வீட்டிலிருந்து #நூரிஷாவை #துன்யாவை #கடன்
@highlight
Muhammed Yoosuf Musthafi
Monday, 16 December 2024
மாமேதை இப்றாஹீம் றப்பானி
உத்திர பிரதேசம் மாநிலம், 'பாந்தா'வில் உள்ள ஜாமிஆ ரப்பானியா அரபிக்கல்லூரியில் ஓதி ரப்பானி என்ற ஆலிம் பட்டமும், திருக்குர்ஆனை மனனம் செய்து ஹாபிழ் பட்டமும் வென்றவர்கள். இறைவனை அறிந்து கொள்ளும் தேடல் மிக அதிகமாக இருந்ததினால் தான் கல்வி பயின்ற மத்ரஸாவை நிறுவியவரும், நபிகளாரின் திருக்குடும்பத்தில் உதித்தவருமான ஷையாஹே ஏஷியா, கதீபுல் ஹிந்த், பீரே தரீகத், ரஹ்பரே ஷரீஅத், அஷ்ஷைகு ஷாஹ் சையத் மஜ்ஹர் ரப்பானி சாஹிப் மத்தழில்லஹுல் ஆலி அவர்களை ஷைகாக (குருவாக) ஏற்று ஆன்மீக பயணத்தில் பல படித்தரங்களை கண்டுணர்ந்தவர்கள். தனது நடை, உடை, பாவனை அனைத்திலும் தனது ஷைகை படம்பிடித்துக் காட்டியதினால், ஷைகு அவர்களின் முரீதீன்களில் முதன்மையாக திகழ்ந்தவர்கள். பஸ்மே ரப்பானியா என்ற முரீதீன்களின் கமிட்டியின் செயலாளராக தன்னுடைய மறைவு வரை பணியாற்றியவர்கள். தன்னை ரஸுலின் நேசர் மற்றும் ரஸுலின் அடிமை என அழைப்பதில் கர்வம் கொண்டவர்கள்.
தமிழ் அல்லாது அரபி, உருது, பார்சி, ஆங்கிலம் என்ற பல மொழிகளில் தேர்ந்தவர்கள். அன்னாரின் இஸ்லாமிய ஆய்வுப்பணிக்கு அவர்களின் மொழியறிவு மிக முக்கிய ஆதார பலமாக அமைந்திருந்தது. அதனாலேயே இஸ்லாமிய கருத்துக்கள் அதிகம் நிறைந்த அரபி, உருது, பார்சி மொழிகளில் உள்ள கிரந்தங்களை ஆய்ந்து அதிலுள்ள கருத்து முத்துக்களை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு யாத்தளித்தார்கள். அவர்களின் வீட்டு அயல்வாசிகளிடம் இவர்கள் குறித்து நான் விசாரிக்கையில்... இவர்கள் தங்களின் இளமை காலத்தில் இரவு பகல் எனப்பாராது அதிதீவிர இஸ்லாமிய ஆராய்ச்சி செய்பவராகவும் இரவு இரண்டுமணி, மூன்றுமணி எனவெல்லாம் விழித்து படித்து, குறிப்பெடுத்து கொண்டு பிறகு தேனீர் குடிப்பதற்காக அந்த பகுதி தேனீர்கடைகளுக்கு வரும் வழக்கமுடையவர்கள் என்றும் அவ்வாறு வரும்போது பல விசயங்களை சொல்ல்லிக்கொண்டிருப்பார்கள் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்தான்புல்லிருந்து தென்னிந்தியாவிற்கு ஏகத்துவத்தின் ஜோதியை ஏந்தி வந்து திருச்சியில் பூத உடல் மறைத்த பெருமானாரின் திருப்பேரர் ஞானமகான் ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்ஹாவிற்கு போகும் தெருவிலுள்ள ஒரு சிறுவீட்டின் பக்கவாட்டு மாடிப்படிகளில் ஏறினால் வரும் மேல் தளத்தில் ஒரு சிறு கூடமும், அறையும் அதற்குள்ளேயே ஒரு சமயலறையும் அத்தோடு தெரு நோக்கி இருக்கும் சிறுமொட்டை மாடியும் கொண்ட குடிலில் தான் ரப்பானி ஹஜ்ரத் அவர்கள் பலகாலம் வாழ்ந்து வந்தார்கள். அந்த மிகச்சிறிய குடிலில் தான் ஹஜ்ரத் அவர்கள் தங்களுடைய துணைவியார் மற்றும் ஏழு ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளையுடன் இல்லறம் நடத்தினார்கள்.
நானும் என்னுடைய நண்பர்களும் இவர்களின் தொடர்பு கிடைத்த பின்னாட்களில் இவர்களை சந்திக்க நேர்கையில் இங்கு தான் சென்று சந்திப்போம் தங்கி இருக்கும் வீடு மிகச்சிறிதாக இருந்தாலும் மிக தாராள மனதுடன் செல்பவர்களை வரவேற்று அன்புடனும் அழகுடனும் பரிவுடனும் பேசி ‘’இந்த ஏழையின் வீட்டில் அல்லாஹுடைய ரசூலின் பிரியத்தை யாசிக்கிறவனுடைய வீட்டில் ஏது இருக்கிறதோ அதை என்னுடன் நீங்களும் பகிர்ந்து சாப்பிட்டு விட்டு தான் செல்லவேண்டும் என்று வற்புறுத்தி உணவருந்தி செல்ல சொல்லும் ஒப்பற்ற விருந்தோம்பலுக்கு சொந்தக்காரர்.
தஞ்சை மாவட்டம் எங்கள் வழுத்தூரில் அன்று எல்லா தெருக்களிலும் மீலாது மாதத்தை முன்னிட்டோ, முஹையத்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாதத்தை முன்னிட்டோ, கர்பலா வீர தியாகத்தை குறித்து அந்த உயரிய தியாகத்தை நினைவுபடுத்தும் வகையிலோ அல்லது தொருவின் விழாக்களாகவோ என பல வகைகளில் தெருபயான் நிகழ்வுகளும், தொடர்பயான் நிகழ்வுகளும் பெரும் பெரும் மார்க்க மேதைகள், அறிவுஜீவிகளை வரவழைத்து நடக்கும். எங்கள் ஊருக்கு வராத தமிழகம் சார்ந்த பெரும் மார்க்க மேதைகளோ, தாய்ச்சபை பேச்சாளர்களோ, அறிவுஜீவிகளோ இல்லை என்பார்கள் என் மூத்த பெருந்தகைகள். நான் அறிய கீழத்தெரு, மேலத்தெரு, சின்னத்தெரு, உமர்த்தெரு என பல இடங்களுக்கு சென்று கேட்ட அனுபவங்கள் உண்டு.
அவ்வாறான நிகழ்வாக என் பள்ளிப்பருவத்தில் கீழத்தெருவில் நடந்த ஒரு பயான் நிகழ்வு… எங்கள் வீட்டிலிருந்து ஐந்தாறு வீடுகள் தள்ளி இருக்கும் சலீம் அண்ணன்/காத்தடி வீட்டு வாசலில் நீண்ட கட்டில்களை பல வீடுகளிலிருந்து எடுத்து வந்து மேடையாக்கியும், மேலும் மேடைக்கு இருமருங்கும் கட்டில்கள் இட்டு ஆண்களை அமர செய்தும், அதுவும் நிரம்ப பக்கத்து திண்ணைகளிலும் சிறுவர்களும் பெரியவர்களும் அமர்திருந்த சூழலில், பெண்களோ அவரவர் வீட்டு முகப்பில் துணியால் திரையிட்டு பயபக்தியுடன் கேட்ட அந்த ஹஜ்ரத் அவர்களின் பயான் நிகழ்வு தான் அவர்கள் எங்கள் உள்ளத்தில் மிக ஆழமாக ஊடுருவ ஏதுவான நிகழ்வாக அமைந்தது. (என் கணிப்பு சரியாக இருந்தால் அது 1991 அல்லது 1992 ஆக இருக்கும்)
ஆம், அது தியாகத்தின் விளைநிலம் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்குடும்பத்தாரின் தியாகத்தையும் சொல்லும் கர்பலா போரின் வீர வரலாற்று விளக்கமேடை. அதில் உள்ளூர் பாணியில் உள்ள மெளலவிகளையே கண்ட எங்கள் கண்களுக்கு நல்ல உயரத்தில் ஆஜானுபவான தோற்றத்தில் வடநாட்டில் அதிக காலத்தை கழித்தவர்கள் என்பதால் வடநாட்டு ஜிப்பாவும், ஜாக்கெட்டும் போட்டு மேலும் தலைப்பாகையுடன் ஹஜ்ரத் அவர்கள் கம்பீரமாக வந்தபோது வியந்து தான் பார்த்தோம். அப்படி வந்தவர்கள் மேடையில் அமர்ந்தது தான் எங்களுக்கு தெரியும்.. அவர்கள் கர்பலாவை பற்றி ஆரம்பிக்க.. பிறகு எங்களுக்கு கண் முன்னே விரிந்த ஆகாயத்திரையில்… கண்டதெல்லாம் வறுத்தெடுக்கும் பாலை, வாடிய நபிகளாரின் திருக்குடும்பம், எஜீதின் சூழ்ச்சி, குழம்புகளால் அழுத்தி ஊன்றி..மணல் புழுதி பறக்க.. சீற்றமெடுத்து விசும்பிக்கத்தி முன்னங்கால்களை தூக்கி ஓடிய குதிரைகள், மின்னிய இரத்தக் கரைபடிந்த வாட்கள் இன்னும் சொல்லொனா சோகம்..சோகம் என கொடிய நிகழ்வின் கொடுமைக்களத்தில் எங்கள் ஒவ்வொருவரையுமே கொண்டுபோய் சேர்த்திருந்தார்கள், பிறகு தான் அறிந்தோம் எங்கள் கன்னங்களின் கண்ணீர் தாரைகளை கூட. அவர்கள் உரையை முடித்தாலும் வரலாற்று சம்பவங்களும், அவர்கள் தந்த விளக்கங்களும் எங்களை ஆட்கொண்ட விதமாகவே அமைந்தது. கர்பலாவை குறித்து அன்று மூன்று நாட்களாக ஹஜ்ரத் அவர்கள் நிகழ்த்திய உரையே இன்றும் நான் மட்டுமல்லாது என் சக தோழர்களும் அஹ்லெ பைத்தினரை உயிருக்கு மேல் வைக்கவும், சங்கை செய்யவும் முதல் காரணமாக அமைந்தது என்பது மிகையில்லை.
தமிழகத்து உலமாக்களில் இவர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். யாரைக்கண்டும், எதைக்கண்டும் அஞ்சாமல் உண்மையை உரைக்க தயங்காதவர்கள். யாருக்காகவும், எதற்காகவும் தனது கொள்கையையும், தனித்தன்மையையும் மாற்றிக் கொள்ளாதவர்கள். யாரைக் கண்டும், எதைக் கண்டும் பயப்படாமல் உண்மையை உண்மையாக உரைப்பதில் நெஞ்சுறுதி கொண்டவர்கள். அதற்கு எடுத்துக்காட்டாக நான் பார்த்த ஓர் சம்பவம். ஒரு முறை மேடையில் பேசும் போது லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரிக்கு ஒரு பத்வா கேட்டு வந்த சம்பவத்தை குறிப்பிட்டார்கள். ‘’இங்கே இருக்கும் மன்பயீக்கள் யாரும் என்னை தவறாக எண்ண வேண்டாம் அப்படி எண்ணினாலும் பரவாயில்லை’’ என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்கள். (அங்கு பல மன்பயீக்கள் இருந்தனர்) பத்வா கேட்டவரின் கேள்வி ‘’ மவ்லிது ஓதலாமா.. கூடாதா? என்பதாகும்.. இது எளிமையானதும், நேரடியானதுமான கேள்வி. இதற்கு மத்ரஸாவிலிருந்து அன்றைக்கு பொறுப்பில் இருந்த ஆலிம் கொடுத்த பதில் ‘’குன்ஆன் ஓதுவது சிறந்தது’’ என்பதாகும். மவ்லிது ஓதலாமா கூடாதா? என்ற கோள்விக்கு பதில் ஒன்று கூடும் எனச் சொல்லலாம் அல்லது கூடாது எனச்சொல்லலாம் ஆனால் இவ்விரண்டையும் விட்டுவிட்டு குறுக்கு புத்தித்தனமாக யாருமே இரண்டு கருத்துக்கள் கொண்டிருக்காத செயலான குர்ஆன் ஓதுவதை அது நல்லது என்று கூறியும், கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லாது வேறுவகையில் திசை திருப்பியும் தப்பிப்பதன் மூலம் எதிர்மறையான தனது பதிலை நிலைநாட்ட முயற்சிப்பது நல்லதல்ல, மன்பவுல் அன்வார் இப்போது மன்பவுல் நாராக செயல்படுகிறதோ என அச்சம் கொள்கிறேன். இவ்வாறான ஆலிம்களின் கோணல் புத்தியால் தான் சமூகம் சீரழிக்கப்படுகிறது என்று கவலை தெரிவித்தார்கள்.
ஒரு பயானுக்கு இவ்வளவு பணம் தரவேண்டும் என்றும், வருவதற்கு கார் அனுப்ப வேண்டும் என இருக்கும் நம்மூர் ஆலிம்கள் பேச்சாளர்கள் மத்தியில் அல்லாஹ் ரசூலை குறித்து பேச அழைத்தால் அதுவும் ஒரு அஞ்சல் அட்டை அல்லது ஒரு போன் அழைப்பு இவற்றின் மூலம் தெரிவித்தால் போதும் அவர்களே சொற்பொழிவாற்ற வந்துவிடுவார்கள். மேடையில் பேச ஏறிவிட்டால் மேடையே அதிர்ந்து முழங்கும், மற்ற பேச்சாளருக்கும் இவருக்கும் உள்ள பெரிய வேறுபாடு ஒன்று உண்டு, அது தான் மேடையில் பேசும் போது கூட்டத்திற்கு வந்திருப்பவர்களிடம் அடிக்கடி கேள்விகள் கேட்டு பதில் பெற்று பிறகு விளக்கம் கொடுப்பது. இதன் மூலம் கூட்டத்தில் இருப்பவர்களின் கவனம் சிதையாது ஆர்வத்துடன் கேட்பர். பொதுவாக பலர் இவர்களின் பயானில் முன்வரிசையில் அமர பயப்படுவர்கள். ஆனால் அறிவுத்தேடல் கொண்டு வருபவர்களுக்கு இவர்களின் பேச்சு அரும்பெரும் அறிவுக்கு விருந்தாக இருக்கும். ஹஜ்ரத் அவர்களின் அனல் பறக்கும் உர்து பயானும் பிரசித்தி பெற்றவை தமிழகமல்லாது ஆந்திரா போன்ற பக்கத்து மாநிலங்களுக்கும் சென்று உர்தூ பயான் செய்யும் வழக்கம் உடையவரக்ள் என்பது குறிப்பிடதக்கது.
ஹஜ்ரத் அவர்கள் ஆதாரம் இல்லாமல் என்றுமே பேசமாட்டார்கள். ஒரு கூற்றுக்கு அவர்கள் விளக்கம் கொடுக்க முற்படும் போது குர்ஆனின் வசனங்கள் மற்றும் பல ஹதீது கிரந்தங்களிலிருந்தும் அதன் அறிவிப்பாளர், ஹதீது எண், பக்கம் என எல்லாமும் சொல்லிவிடுவார்கள். குறிப்பாக, அதிகமான ஆதாரங்களை குர்ஆனிலிருந்தே எடுக்கும் அளவிற்கு குர்ஆனை கற்று அறிந்தவர்கள். ஒன்று தானா என இருக்கும் போது இரண்டு மூன்று நான்கு என சொல்லிக்கொண்டே, இது போதுமா இல்லை இந்த சம்பவத்திற்கு மேலும் அதாரம் வேண்டுமா என்பார்கள். அப்படி ஹதீதுகலையிலும் மிக தேர்ச்சி பெற்றவர்கள். அன்றொரு நாள் பேச்சில் ஒரு நபரின் மைய்யித்தின் அடக்கம் நிகழ்ந்த உடன் வரும் வானவர்கள் மன் ரப்புக்க (உன் இறைவன் யார்) என்ற கேள்விக்கு பிறகு, மான குன்த தகூலு பிஹக்கி ஹாஜர் ரஜுல் என்று கேட்பார்கள். அப்போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் உருவத்தை காண்பித்து இதோ இவர்கள் யார் என்றும் நீ வாழக்கூடிய காலத்தில் இவர்கள் குறித்த உன் எண்ணம் எப்படி இருந்தது என்றும் கேட்பார்கள் என சொல்ல, அதற்கு அங்கிருந்த சிலர் (அந்த காலம் தான் ஒரு சிலர் வஹ்ஹாபிகளாய் தங்களை புரிந்தும் புரியாமலும் தனியாக காட்டிக்கொள்ள வேண்டும் என விதண்டாவாதம் பேச ஆரம்பித்த காலம்) அங்கு எழுந்து, இது ஏற்கமுடியாத ஒரு கூற்று என வாதிட அங்கிருந்தபடியே இது இன்னென்ன பக்கங்களில் சிஹாவுஸ் ஸித்தாக்களான கிரந்தங்களில் இந்தெந்த ராவி (அறிவிப்பாளர்)களால் அறிவிக்கபட்டிருக்கிறது இப்போதே அதை காட்ட வேண்டுமானால் குறிப்பாக உங்கள் ஊரின் புராதான பள்ளியாய் விளங்கும் தர்ஹா பள்ளியில் வைத்திருக்கும் பழைய மிஸ்காத்தை எடுத்து வாருங்கள் அதில் பாபுல் ஈமான் என்ற தலைப்பில் இருக்கும் இந்த ஹதீஸை காட்டுகிறேன் நீங்கள் மறுத்தால் இந்த இடத்திலேயே ரூபாய் பத்தாயிரம் தருகிறேன் என்றார்கள். கூட்டத்தில் சலசலப்பு அடங்கியது. வேண்டுமென்றே கலகம் வளர்க்க வந்தவர்கள் வாயடைத்து ஓடிவிட்டனர்.
இவர் ஓர் தலைசிறந்த திருக்குர்ஆனின் முஃபஸ்ஸிரீனும் கூட. தன்னுடைய நேசர்களால் சுல்தானுல் முபஸ்ஸிரீன் என்றும் அடைமொழி கொண்டு அழைக்கப்பட்டவர்கள். இன்றைய வஹ்ஹாபிகளுக்கான சாட்டையடிப்பிரச்சாரத்தை அன்றிலிருந்தே ஆரம்பித்தவர்கள். தப்லீக் ஜமாத்தினரின் முகத்திரையை அச்சமின்றி தோலுறித்து காட்டியவர்கள். ஆதலால் இவர்களுக்கு பலவாறாக கடிதம் மற்றும் தொலைபேசிகளில் மிரட்டல்களும் வந்த வண்ணம் இருக்கும். ஏனெனில் இவர்களது பேச்சை எந்த வஹ்ஹாபிய சிந்தனை உள்ளவர் கேட்டாலும் அவருக்கு அவரது கொள்கையில் மேல் தப்பெண்ணமும், தான் பின்பற்றுவது தவறு என்ற எண்ணமும் தொற்றிக்கொள்ளும். உதராணமாக வஹ்ஹாபிகள் தங்களின் கூற்று பிரகாரம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தரைக்கு மேல் உள்ள கபுருகளை எல்லாம் தரைமட்டம் ஆக்குங்கள் என ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கொண்டு ஏவியதாக சொல்லப்படும் ஒரு ஹதீஸை எடுத்துக்கொண்டு அதில் பிரயோகப்படுத்தப்படும் சொற்களை விளக்கி குறிப்பாக ‘’சவ்வைத்துஹு’’ என்ற அதன் பொருளை செவ்வையாக்குதல் எனச் சொல்லி இதே வாசகம் தான் திருக்குர்ஆனில் இன்ன இடத்தில் இறைவன் ஏழு வானங்களையும் செவ்வையாக்கினான் என்ற பொருளில் வருகிறது இதற்கு தரைமட்டமாக்குதல் என பொருள் கொண்டால் இறைவன் ஏழு வானங்களையும் படைத்து செவ்வையாக்கினான், சரியாக்கினான் என்பது தரைமட்டமாக்கினான் எனப்பொருள் படும்படி வந்துவிடும் இங்கு செவ்வை ஆக்குதல் தான் சரியான பொருளை தருகிறது என்றால் நபிகளாரும் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து பாலைவனத்தின் சூழல் மணற்பாங்கான கடும் வெப்பத்தினதாகவும், பெரும் காற்றோடு கூடியதாகவும் இருப்பதால் கப்றுகள் இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாக போய்விடும் அவ்வாறான நிலையில் யாரின் கப்று எது, எங்கு உள்ளது என தெரியாது போகும், ஜியாரத்திற்கும் சிரமம் ஏற்படும் ஆதலால் அலியே! நீங்கள் கப்றுகளை ஜியாரத்துக்கு உகந்ததாக செவ்வையாக்குங்கள் எனத்தான் பணித்தார்கள் என விளக்கினார்கள்.
திருக்குர்ஆனில் ஆதம் நபி அலைஹிஸ்ஸலாமவர்கள் தம்மை மன்னிக்க தவ்பா செய்த போது இறைவன், ஆதம் ஒரு கலிமாவை கற்றுக்கொண்டார் அதன் பொருட்டு அவர் குற்றம் மன்னிக்கப்பட்டது என சொல்லும் இறைவசனத்தில் கலிமா என்ற வாசகத்திற்கு பொருள் எழுதும் போது தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தர்ஜுமாவிலேயே ஒரு வாசகத்தை ஆதம் கற்றுக்கொண்டார் அதன் மூலம் இறைவன் மன்னித்தான் என பொருள் கொடுத்திருக்கிறார்கள். எந்த கலிமாவை ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் கற்றுக் கொண்டதாக ஆதார கிரந்தங்கள் சொல்லுகிறதோ எந்த சொற்றோடரை கலிமா என்று நாம் சொல்லுவோமோ அந்த ''லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்'' என அதை தெளிவாக போடாமல் வெறுமனே ஒரு வாசகத்தை கற்றுக்கொண்டார் என மட்டும் மொட்டையாக போட்டிருக்கிறார்கள் இது எப்படி ஏற்புடையது இவ்வாறிருந்தால் எப்படி மக்கள் கலிமாவின் அருமையை. ஆதம் நபி அலைஹிஸ்ஸலாமவர்களை மன்னிக்க காரணமாக இருந்த முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் மகிமையை உணர்ந்து கொள்வார்கள்? என உண்மையை சுட்டிக்காட்டி தர்ஜுமாக்களும் தெளிவாக சரியாக வரவேண்டும் என்ற தன் நிலையை தெளிவாக வெளிப்படுத்தினார்கள்.
இப்படியான அருங்குணஙக்ளும், சீரிய ஆற்றலும் பெற்ற பெருந்தகை ஹஜ்ரத் அவர்கள் பயானுக்கு வந்தால் பயான் முடிந்தும் பலமணி நேரம் அல்லாஹ், ரசூலை பற்றி பற்பல விசயங்களை கூறிக்கூறியே கண்ணீர் வடிப்பார்கள். ஹஜ்ரத் அவர்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைப் பற்றிப் பேச ஆரம்பத்தாலே அவர்களுடைய கண்கள் கண்ணீரைத் தாரைத் தாரையாக வார்க்கும். தஙக்ளின் வாழ்நாள் முழுவதும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் நேசத்தைப் பற்றி மட்டுமே அதிகமாக பேசியவர்கள் ஹஜ்ரத் அவர்கள் என்றால் அது தான் உண்மை. ஒரு சமயம் அவர்களிடம் தாங்கள் ஏன் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வினவப்பட்ட போது, அல்லாஹ்வுடைய ரஸுலைக் கொண்டே இந்த சமூகம் ஒன்றுபடும், அல்லாஹ்வுடைய ரஸுலின் நேசத்தைத் தவிர வேறெதுவும் இந்த சமூகத்தை ஒன்றுபடுத்தாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், நாளைக்கு மஹ்ஷர் மைதானத்தில் அல்லாஹ்வினுடைய சன்னிதியில் வந்து இந்த இப்ராஹிம் ரப்பானி ஒவ்வொரு நொடிப்பொழுதும் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார் என்று மட்டுமே என் சார்ந்த எல்லாமும் சாட்சியாகி கூறுவதை நான் வேண்டுகிறேன் என்றார். ஹஜ்ரத் அவர்களின் அஹ்லுல் பைத்தினரான நபிகளாரின் திருக்குடும்பத்தினர் மீது கொண்ட அளப்பறிய நேசமோ அளவிட முடியாதது. பல தருணங்களில் எங்கள் ஊரிலிருந்து ஹஜ்ரத் அவர்களை பிரிய மனமில்லாமல் அவர்களின் பேச்சை கேட்கவேண்டும் என்பதற்காகவே தஞ்சை புது பஸ்நிலையம் வரை பின்னிரவுகளில் கொண்டு விட்டுவிட்டு வருவோம். அன்றைய நாட்களில் திருச்சியில் ஹஜ்ரத்தை சந்திக்கும் அவரது அலுவலகமும், வீடும், ரமலான் பிறை 15-ல் சந்திக்கும் ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உரூஸ் தினமும் மறக்க முடியாதவை.
ஹஜ்ரத் அவர்கள் சூரா பாத்திகாவுக்கான தஃப்ஸீரை ஒரு நூலாக எழுதி யாத்துள்ளார்கள். சூரா பகராவிற்கான தப்ஸீரை அஹ்லெ சுன்னத் என்ற தனது மாதாந்திர பத்திரிக்கையில் தொடராக எழுதிவந்தார்கள். மற்றவை அச்சு ஏற்றப்பட்டதா என தெரியவில்லை. இவர்கள் ஒரு தலைசிறந்த பத்திரிக்கை ஆசிரியர். சாதாரணமாக ஒரு கேளிக்கை பத்திரிக்கை நடத்துவதையே நெருப்பாற்றில் நீந்துவது என்பார்கள் இதில் இஸ்லாமிய பத்திரிக்கை நடத்துவதென்றால் சொல்லவே தேவையில்லை அப்படி இருந்தும் எந்த ஒரு பலாபலனும் எதிர்பார்க்காமல் சத்திய கொள்கையை வளர்ப்பது அதை விளக்குவது என்ற ஒரே குறிக்கோளையே மையமாக வைத்து அஹ்லெ ஸுன்னத் என்ற மாதாந்திர பத்திரிக்கையை நடத்தி வந்தார்கள். தமிழகத்தில் வந்த எத்தனை எத்தனையோ பல இஸ்லாமிய பத்திரிக்கைகளில் அஹ்லுஸ் ஸுன்னத் மிக சிறப்பான பத்திரிக்கையாக வலம் வந்தது. அந்த பத்திரிக்கையை ஒருவர் தொடர்ந்து படித்து வந்தாலே இஸ்லாமிய வரலாற்றிலும், பிக்ஹிலும், தஸவ்வுஃப் எனப்படும் ஞானத்திலும் தலைசிறந்தவராக நல்ல இஸ்லாமியராக பரிணமிக்க செய்திடும் அத்தனை அம்சங்களும் அதில் மிகுந்திருந்தது என்றால் அது மிகையில்லை. பெரும் பொருளாதார பிரச்சனைகளிலும் அதை நடத்தி வந்த ஹஜ்ரத் அவர்கள் 2003க்கு பிறகு அதை நடத்தும் வகை இல்லாத காரணத்தால் மனமின்றி அதை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.
ஹஜ்ரத் அவர்கள் பல நூற்களையும் எழுதி தமிழ் இஸ்லாமிய மாந்தருக்கு கொடையாக தந்துள்ளார். அதிற்சிலது தான் கீழ்காணும் நூற்களான…
வஹ்ஹாபிய தோற்றம் பாகம் - 1 (பிரிட்டிஸ் உளவாளி ஹம்ப்ரேயின் ரகசிய ரிப்போர்ட்),
வஹ்ஹாபிய தோற்றம் பாகம் – 2 (பிரிட்டீஸ் உளவாளி ஹம்ப்ரேயின் ரகசிய ரிப்போர்ட்),
இன்னுமா உறக்கம்,
வஸீலாவும் உதவி தேடுதலும்,
கப்ருகளும் ஜியாரத்தும்,
இஸ்லாமிய கொள்கைகள்,
ஜோதியின் அகமியம்,
ஸலவாத்தின் சிறப்புக்கள்,
அறப்போரின் அற்புத தியாகிகள்,
தலாயிலுல் கைராத்,
நல்லோரை முத்தமிடுதல்,
ஹிதாயத்துல் ஆபிதீன்,
சுப்ஹான மெளலிது,
உம்மத்தின் வீழ்ச்சிக்குரிய காரணங்கள்,
வஸீலா என்றால் என்ன?
அன்னையும் பிதாவும்
போன்றவைகள் ஆகும். இவைகள் எல்லாம் ஹஜ்ரத் அவர்கள் எழுதியதில் குறிப்பாக தெரிந்தது மட்டுமே ஆகும். இது அல்லாமல் வேறும் இருக்கலாம்.
2008 ஆம் ஆண்டு எடுத்தப்படம் (இலங்கை)
கடைசியாக ஹஜ்ரத் அவர்களை நான் இலங்கையில் நடந்த மீலாது விழாவிற்கு சென்ற போது தான் சந்திக்கும் அரும்வாய்ப்பு கிடைத்தது, அப்போது ஹஜ்ரத் அவர்கள் என்னையும், மதிப்பு மிக்க தோழமைகள் அண்ணன் அப்துல் ரஹீம் (சாப்ஜி) மற்றும் பேச்சாளர் எஃப். அப்துல் கரீம் இவர்களையும் தமது மகன் அனுப்பியதாக அவர்கள் வைத்திருந்த மோட்டோரோலா மொபைலில் வாஞ்சையுடன் படம் பிடித்து கொண்டார்கள். எங்களுக்கும், அவர்களுக்குமான தொடர்பு ஒரு ஆசானுக்கும் மாணவனுக்குமான தொடர்பாகவே இருக்கும். இப்படியாக நாங்கள் மார்க்கத்தின் நுணுக்கங்களையும், சிறப்புக்களையும், ஞானத்தையும், அஹ்லெ பைத்தினரின் சிறப்புக்களையும் அறிய காரணமாக இருந்த பேரறிவின் தீபம் மலேசியா, சிங்கப்பூர், புருனை, இலங்கை என கடல் கடந்தும் தமிழகம், வட இந்தியா என வலம் வந்து எல்லா இடங்களிலும் மேடைகளில் கர்ஜித்த சத்தியத்தின் சிங்கம் இறுதியாக சென்ற 25ம் தேதி மே மாதம் 2010-ல் தனது அறுபத்து இரண்டு வயதை நிறைவு செய்து, அறுபத்து மூன்றாம் வயதில் தன்னுடைய ரஸுலின் வழியில் (1948-2010) தன் மூச்சை நிறுத்திக்கொண்டு ஹக்களவில் தன்னை நிறைத்துக்கொண்டது. அந்த உயரிய ஆன்மாவின் சிறப்பை இவ்வாண்டு நினைவு கூறும் முகமாக அவர்களின் மாணவன் என்ற அடிப்படையில் அந்த உயர்ந்த ஆன்மாவிற்காக இந்த கட்டுரையை சமர்ப்பணம் செய்கிறேன்.
வல்ல அல்லாஹ் இந்த மகானின் சீரிய பணிகளை எல்லாம் அங்கீகரீத்து அவர்கள் ஒவ்வொரு மூச்சிலும் நேசித்து அழுது காதலித்து கொண்டிருந்த நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் கஸ்தூரி மணம் கமழும் நேசத்தில் ஹஜ்ரத் அவர்களை என்றென்றும் நிரந்தரப்படுத்தி வைப்பானாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.
வேண்டுகோள்
ஹஜ்ரத் அவர்களின் மகனார்களுக்கு எனது கனிவான அன்பு வேண்டுகோள் ஹஜ்ரத் அவர்களின் வெளிவந்த ஆக்கங்கள், வெளிவராத அக்கங்கள், தொடர் கட்டுரைகள் என பலவற்றை நீங்கள் மீள்பதிப்பு செய்தால் அல்லது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் இன்ஷா அல்லாஹ் தமிழ்கூறும் இஸ்லாமிய உலகம் பற்பல பயன்பாடுகளை அடையும் அதன் மூலம் ஹஜ்ரத் அவர்களின் தூய ஆன்மா இன்னும் நிறைய நிறைய நெஞ்சங்களால் புதிய தலைமுறையினரால் நன்றியுடன் நினைத்து பார்க்கப்படும் என்பதே!
குறிப்பு
ஹஜ்ரத் அவர்களின் உயரிய வாழ்வு, மேதைமை, ஆக்கங்கள், குர்ஆன், ஹதீஸ்-ன் புலமை, ஞானம், மேடைப்பேச்சு, வசீகரம், கனிவு கொள்கை உறுதி என இவ்வாறு பற்பலவாக ஆராய்ந்தால் ஒவ்வொரு தலைப்பிலும் தனித்தனி நூற்கள் இயற்றலாம். இந்த கட்டுரையையே என்னால் எழுதி முடிக்க இயலவில்லை மனதில் பல சம்பவங்களும் ஹஜ்ரத் சார்ந்த நினைவுகளும் பொங்கி பீரிட்ட வண்ணமாகவே உள்ளது இருந்தாலும் நீண்ட கட்டுரை வேண்டாம் என்றும் பிரிதொரு வாய்ப்புகளில் நிறைய பகிரலாம் என்ற எண்ணத்தில் தான் இக்கட்டுரையை முடித்திருக்கிறேன்.
உளமார்ந்த நன்றிகள்
1. எங்கள் வழுத்தூருக்கு அந்நாட்களில் நாங்கள் ஹஜ்ரத் அவர்களை அறியும் வகையில் அழைத்து வந்து அறிமுகப்படுத்திய தர்ஹா பள்ளியின் இமாம் ஹஜ்ரத் ஜாபர் சாதிக் நூரி அவர்களுக்கும்,
2.ஹஜ்ரத்தின் மறைவு நேரத்தில் ஜியாரத்திற்கு சென்று வந்து இரங்கல் சுவரொட்டியையும் பகிர்ந்தளித்த எனது மாமனார் ஜனாப். முஹம்மது ஜாபர் சாதிக் அவர்களுக்கும்,
3. ஹஜ்ரத்தின் நூற்கள் குறித்தும் மற்ற எனது வினாக்களுக்கும் தெளிவு தந்த அவரின் புதல்வர் சகோதரர் நாசர் ரப்பானி அவர்களுக்கும்,
4. நான் மேடைகளின் கர்ஜனை அல்லது சத்திய உலமா (உலமா என்பது பன்மை என்பதும் யோசித்த ஒன்று) என்ற தலைப்ப்புக்களை சொல்லி எப்படி வைக்கலாம் நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன் எனக்கேட்டதற்கு அதை சத்தியத்தின் கர்ஜனை என மாற்றினால் சிறப்பாக இருக்கும் என ஆலோசனை கொடுத்த ஆத்ம நண்பர் அண்ணன் அப்துல் ரஹீம் (சாப்ஜி) அவர்களுக்கும்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
எதுவுமில்லாதவர்கள்
#எல்லாம்_இழந்து
#திவாலானவர்கள்_மூவர்
🐕🦺#வேட்டை_நாய்,
நாக்கை தொங்க விட்டுக் கொண்டு மூச்சிரைக்க ஓடிச்சென்றும் மற்றவர்களுக்காக வேட்டையாடுகிறது...
🙅#கஞ்சன்,
பொருள் சம்பாதித்து சேகரிக்கின்றான். (செலவு செய்யாததினால்) அவன் பணம் மற்றவர்களை சென்றடைகிறது...
🤷#புறம்_பேசுபவன்,
மற்றவர் குறித்து புறம் பேசுகின்றான். அதனால் அவன் செய்த நல்லறங்கள் (மறுமையில்) மற்றவர்களுக்குப் போய் வி
டுகிறது...
சில முற்றுகைகளும் படையெடுப்புகளும்
சில முற்றுகைகளும் படையெடுப்புகளும்
=================================
அகழ்ப்போரின் பக்க விளைவுகளில் ஒன்றுதான் கைபர் வெற்றி. மதினாவிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் இருந்தது அது. பெருமானாரைக் கொல்ல யூதர்கள் மதினாவில் முயற்சி செய்ததன் விளைவாக அவர்கள் கைபருக்கு விரட்டப்பட்டிருந்தனர்.
கைபரில் யூதர்கள் ஒரே குடும்பம்போல வசித்து வந்தனர். மதினாவிலிருந்து வெளியேற்றப்பட்ட யூதத்தலைவர்களும், அகழ்ப்போரில் முஸ்லிம்களின் எதிரிகளான மக்கத்துக் குறைஷியருக்குப் பொருளாதார உதவிகள் செய்தவர்களும் அதில் அடக்கம்.
முஸ்லிம் படை கைபருக்குள் நுழைந்தபோது எதிர்ப்பு ஒன்றும் இல்லாமலே இருந்தது. ஏனெனில் மக்களெல்லாம் பாதுகாப்பாக கோட்டைகளுக்குள் இருந்தனர். கைபர் பகுதியே கோட்டைகளுக்கும் பேரீச்ச மரப்பண்ணைகளுக்கும் பெயர்பெற்றது.
கைபர் முழுவதும் ஆங்காங்கே கோட்டைகள் இருந்ததால் சில கோட்டைகளை முற்றுகையிட வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. ஒரு கோட்டையைக் கைப்பற்றியவுடன் அடுத்த கோட்டைக்குப் போகவேண்டும்.
முதல் முதற்சியாக சில கோட்டைகளைக் கைப்பற்ற அபூபக்கர் தலைமையில் பெருமானார் சிலரை அனுப்பினார்கள். ஆனால் நாள் முழுவதும் முயற்சி செய்தும் வெற்றிபெறாமல் அபூபக்கரின் படை திரும்பி வந்தது.
மறுநாள் உமரின் தலைமையில் அனுப்பப்பட்ட வீரர்களாலும் வெற்றி கிடைக்கவில்லை.
”நாளை நான் கொடியை ஒருவரிடம் கொடுப்பேன். அவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பவர்” என்று பெருமானார் கூறினார்கள். அது வேறு யாருமல்ல, ஹஸ்ரத் அலீதான். அவர் வெற்றியுடன் திரும்பினார்.
அந்த முற்றுகையின் ஒரு கட்டத்தில் அங்கிருந்த பேரீச்ச மரங்களையெல்லாம் வெட்டிவிடலாம், அப்படிச் செய்தால் தம் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதால் யூதர்கள் மனமுடைந்த வீரத்துடன் செயல்பட முடியாமல் போகும் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். அக்கருத்து சரியென்றே பெருமானாருக்கும் பட்டது.
சிலர் உடனே காரியத்தில் இறங்கவும் தொடங்கினர்.
ஆனால் அபூபக்கருக்கு அக்கருத்து சரியென்று படவில்லை. உடனே பெருமானாரிடம் சென்று அப்படிச் செய்யவேண்டாம், அது முஸ்லிம்களுக்கும் எதிர்காலத்தில் தீமை விளைவிக்கும் என்று விளக்கினார்.
அவர் சொன்ன கருத்தைப் பெருமானார் உடனே ஏற்றுக்கொண்டார்கள். மரங்கள் வெட்டுவதை உடனே நிறுத்திவிடும்படி உத்தரவிட்டார்கள். தோழர்களும் உடனே அக்காரியத்தை நிறுத்தினார்கள்.
பெண்ணுக்கு பதிலாக முஸ்லிம் கைதிகள்
பனூ ஃபுஸாரா என்ற யூத கோத்திரத்தைத் தாக்கி வெற்றி கொள்ளும் உத்தரவுடன் அபூபக்கர் தலைமையில் ஒரு படை சென்றது.
அபூபக்கரின் உத்தரவின்படி ஒரு நீர்நிலை அருகே முஸ்லிம்கள் முகாமிட்டார்கள். ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் தாக்குதல் நடத்த அபூபக்கர் உத்தரவிட்டார். அதன்படியே செய்யப்பட்டது.
அபூபக்கரின் குழுவிலிருந்த சலாமா என்பவர் ஒரு யூதக்குடும்பத்தைக் கைது செய்து அபூபக்கரிடம் ஒப்படைத்தார். அதிலிருந்த ஒரு அழகான பெண்ணை சலாமா விரும்பினார். ஆனால் பெருமானார் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்தப்பெண்ணை அவர் பெருமானாரிடம் ஒப்படைத்தார்.
பெருமானார் அவளை மக்கத்துக் குறைஷிகளிடம் கொடுத்து அவளுக்கு பதிலாக சில முஸ்லிம் கைதிகளின் விடுதலையைப் பெற்றுக்கொண்டார்கள்.
பெருமானாரோடு உம்ரா
---------------------------------
ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப்பின் அடுத்த ஆண்டு முஸ்லிம்கள் பெருமானாரோடு உம்ரா செய்தனர். அப்போது மூன்று நாட்களுக்கு மக்கத்துக் குறைஷியர் மக்காவை விட்டு வெளியேறியிருந்தார்கள். பெருமானாரோடு அந்த ஆண்டு உம்ரா செய்தவர்களில் அபூபக்கரும் ஒருவர்.
உமருக்கு அபூபக்கர் கொடுத்த விளக்கம்
மதினாவிலிருந்து பத்து நாள் பயண தூரத்தில் இருந்த இடம் தாத்துஸ்ஸலாசில். நபித்தோழர் அம்ரிப்னுல் ஆஸ் அவர்களை படைத்தலைவராக பெருமானார் நியமித்திருந்தார்கள்.
அபூபக்கரும் உமரும் அப்படையெடுப்பில் கலந்துகொண்டார்கள். ஆஸைவிடத் தாங்கள் முக்கியமானவர்களாயிற்றே, தங்களில் ஒருவரைத் தலைவராக நியமிக்கவில்லையே என்று அவர்கள் வருந்தவோ, அப்படி நினைக்கவோ இல்லை.
அங்கே போய்ச்சேர்ந்தபோது இரவாகிவிட்டிருந்தது. ஆனால் யாரும் தீயைப் பற்றவைக்கக் கூடாது என்று அம்ர் ஒரு ஆணையைப் பிறப்பித்தார். அந்த உத்தரவைக் கேட்டதும் ஹஸ்ரத் உமர் கோபமுற்றார்.
அம்ரின் உத்தரவை மீறுவது மட்டுமல்லாமல் படைத்தலைவரான அம்ரை நன்றாகத்திட்ட வேண்டும் என்றும் நினைத்தார். ஏனெனில் குளிர் நடுக்கிய அந்த இரவில் தீ ஒன்றுதான் இதம் தரும் நண்பனாக இருந்திருக்கும். ஆனால் அம்ரின் ஆணை அதைத்தடுத்துவிட்டது.
உமர் அப்படிச் செய்துவிடாமல் அபூபக்கர் தடுத்தார். தீயை வைத்து எதிரிகள் நம் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ளக்கூடாதென்பதுதான் அம்ரின் யோசனை.
அதற்காகவே அவர் அப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார், அதோடு போர்த்தந்திரங்களை நன்கு அறிந்தவர் என்பதாலும்தான் பெருமானார் அம்ரை தலைவராக நியமித்திருந்தார்கள் என்று எடுத்துச் சொல்லி உமரை அபூபக்கர் அமைதிப்படுத்தினார்.
=====
நன்றி இனிய திசைகள் டிசம்பர், 2024
பெருமானார் ﷺ அவர்களிடம் உதவி தேடுவது 🌹
இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஸஹாபா பெருமக்களை கண்ட தாபஈ ஒருவர் கூறுவதாக எழுதுகின்றார்கள் ,
" எங்களிடையே மதீனாவில் ஒரு நபர் இருந்தார்.அவர் எப்பொழுதெல்லாம் ஒரு தீமை நேரிட்டு அதனை தமது கரங்களை கொண்டாகிலும் தடுக்க இயலாத நிலை உண்டாகிறது ,அப்பொழுதெல்லாம் அல்லாஹ்வின் ஹபீப் முஸ்தபா ﷺ அவர்களது புனிதமிகு ரவ்ழா ஷரீபிற்கு சென்று " அஹ்லே கப்ருடையவர்களே ! உதவி புரிபவர்களே ! எங்களின் நிலையை தயை கூர்ந்து காணுங்கள் ! " என்று கூறுவார்.
📚 இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ, ஷுஅபுல் ஈமான் ,ஹதீஸ் # 3879
வலிமார்களிடத்தில் வஸீலா 🌹