السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 24 December 2025

காபிர்களின் சமய விழாக்களில் கலந்து கொள்ளலாமா? வாழ்த்துக்கூறலாமா?

 காபிர்களின் சமய விழாக்களில் கலந்து கொள்ளலாமா? வாழ்த்துக்கூறலாமா?

✶✶⊶⊷⊷❍--❍⊶⊶⊷✶✶

காபிர்களின் சமய விழாக்களில் கலந்து கொள்ளலாமா? வாழ்த்துக்கூறலாமா?


கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,      

 மௌலவி, பாஸில், ஷெய்கு      

   ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்க்கி, 

  பரேலவி, ஸூபி, நக்ஷபந்தி.

✶✶⊶⊷⊷❍⊶✶✶⊷❍⊶⊶⊷✶✶


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை முஸ்லிம் அல்லாதவர்களின் சமய

விழாக்களில் கலந்துகொள்ளுமாறும், உதவிசெய்யுமாறும் தூண்டிக்கொண்டிருக்கின்றது. 


உலமாசபையின்? இந்த நடவடிக்ககைக்கு தப்லீக் ஜமாஅத்தும் ஏனைய இயக்கங்களும் ஒத்தாசை புரிகின்றன.  


சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறும் உலமாக்களும் இது விடயத்தில் அசமந்தமாக இருப்பது கவலையளிக்கின்றது. 


மக்களை குப்றியத்தின் பக்கம் இழுத்துச்செல்லும் பணியில் உலமாசபை வாலை முறுக்கிக்கொண்டு செயல்படுகின்றது. இதை இவ்வாறே விட்டால் எதிர்காலத்தில் பள்ளிவாசலில் காபிர்களுக்கும் ஒருதனியான இடம் ஒதுக்கி பூஜை செய்ய அனுமதி கொடுத்துவிடுவார்கள்...


அ.இ.உ.சபை காபிர்களின் சமய நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு கூறியதுபற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன?


عبادة الصنم كفر ۔ولا اعتبار بما فى قلبه وكذا لو صور عيسى عليه الصلوة والسلام ليسجدله وكذا اتخاذ الصنم لذالك وكذا لو تزنر بزنار اليهود والنصارى دخل كنيستهم اولم يدخل 


ا الاشباه والنظاێر صفحة       

295/1


சிலைவணக்கம் குப்றியத்தாகும். அவர்மனதில் இருப்பதைக்கவனத்தில் கொள்ளப்படாது. சுஜூது செய்வதற்காக ஈஸா அலைஹிஸ்ஸலாமவர்களின் சிலையைச் செய்வதும், அவ்வாறே சுஜூது செய்வதற்காக ஒரு விக்ரஹத்தைச் செதுக்குவதும் குப்றாகும். அவ்வாறே யஹூதி, நஸாறாக்களின் பூனூலை அணிந்து ஆலயங்களக்குச் சென்றாலும் சரி செல்லாவிட்டாலும் சரி காபிராகிவடுவான். 


ஆதாரம். 

அல் அஷ்பாஹ் வன்நழாயிர். 

பாகம்:- 1 பக்கம்:- 295


 الاعطاء باسم النيروس والمهرجان (بان يقال هدية هذااليوم ش) لايجوز اي الهدية باسم هذين اليومين حرام وان قصد تعظيمه كما يعظمه المشركون يكفر 

در مختار شر ح تنوير الابصار 

350/1


மஜூசிகளின் திருவிழா அன்று அந்நாளுக்காக அன்பளிப்பு வழங்குவது கூடாது. அதாவது அந்நாளில் அன்பளிப்பு வழங்குவது ஹறாம்.! முஷ்ரிகுகள் அந்நாளைக் கண்ணியப்படுத்துவது போன்று கண்ணியப்படுத்துவது குப்றாகும். 


ஆதாரம்:- துர்ருல் முக்தார்.

பாகம்:- 1 பக்கம்:- 350


يكفر بخروجه الى نيروز المجوس والموافقة معهم فيما يفعلون في ذالك اليوم وبشراءه يوم النيروز شيأ لم يكن يشتريه قبل ذلك تعظيما للنيروز لا للاكل والشراب وباهداءه ذالك اليوم للمشركين ولو بيضة تعظيما لذلك اليوم  


مجمع الانهر شره ملتقى الابهر 

298/1 


மஜுஸிகளின் திருவிழா நாட்களில் அவர்களைப்போன்றே வெளியேறுவதும் அவர்கள் செய்வதுபோன்றே செய்வதும் குப்றாகும்.


அவ்வாறே மஜுஸிகளின் பெருநாட்களை கண்ணியப்படுத்திக்கொண்டு அவர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதற்காக ஏதும்பொருள் வாங்கினால் அப்பொருள் உணவு, குடிப்புப்பொருளாக இல்லாமல் முஷ்ரிக்குகளுக்கு அன்றையதினம் அவர்களை கண்ணியப்படுத்த

வாங்கினால் அது முட்டையாயினும் சரி குப்றாகும். 


ஆதாரம்:- மஜமஉல் அன்ஹர்

பாகம்:- 1 பக்கம்:- 298


قال ابوبكر بن طرخان من خرج الى السدة (قال القارى اي مجمع اهل الكفر) كفر اذ فيه اعلان الكفر وكانه اعان عليه وعلى قياس السدة الخروج الى النيروز والموافقة معهم فيما يفعلونه فى ذالك اليوم كفر 

جامع الفصولين 313/2

 

அஷ்ஷைய்கு அபூபக்கர் இப்னு தர்கான் றஹ்மதுள்ளாஹி அலைஹி கூறுகின்றார்கள்.


காபிர்களின் விழாக்கள் அல்லது கூட்டங்களுக்குச் சென்றால் காபிராகிவிடுவான். காரணம் குப்றை அங்கீகரித்து வெளிப்படுத்துவதும். அதற்கு உதவி செய்வதும் அதிலுள்ளது.


இதைக்கியாஸ் பிடித்து மஜுஸிகளின் விழாவுக்குச்செல்வதும் அன்நாளில் அவர்களின் செயலில் அவர்களுடன் உடன் படுவதும் குப்றாகும். 


ஆதாரம்:- ஜாமிஉல் புஸூலைன்.

பாகம்:- 2 பக்கம்:- 313

 

 لو سلم على الذمي تبجيلا يكفر لان تبجيل الكافر كفر ولو قال لمجوسي يا استاذ تبجيلا كفر 


الاشباه والنظاێر ،ج ،1صف 258


யாராவது ஒருவர் கண்ணியப்படுத்தும் நோக்கில் ஒருதிம்மிக் காபிருக்குச் ஸலாம்

கூறினால் காபிராகிவிடுவான். காரணம் காபிரைக் கண்ணியப்படுத்துவது

குப்றாகும். ஒரு மஜுஸியைப்பார்த்து கண்ணியப்படுத்தும் நோக்கில்

ஒஸ்தாதே! என்று விளித்தாலும் காபிராகிவிடுவான்.. 


ஆதாரம்:- 

அல்அஷ்பாஹ் வன்நழாயிர். 

பாகம்:- 1 பக்கம்:- 288


حاصل ما ذكره العلماء في التزيى الكفار انه اما ان يتزيا بزيهم ميلا الى دينهم وقاصدا التشبه بهم في شعاێر الكفر أو يمشى معهم الى معبداتهم فيكفر بذالك فيهما واما ان لا يقصد كذلك التشبه بهم فى شعاێر العيد أو التوصل الى معاملة جاێزة معهم فيأثم 


بعية المشترشدين  

صف 247


காபிர்களின் உடையை அணிவது பற்றிய அறிஞர்களின் கூற்றின் சாரம் வருமாறு.


காபிர்களின் ஆடையை அவர்களின் மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்டும் அவர்களின் குப்றின் அடையாளங்களில் அவர்களுக்கு ஒப்பாகும் நோக்கமும் இருக்குமாயின் அல்லது,


 அவர்களோடு அவர்களின் வணக்கஸ்தலங்களுக்கு சென்றால் இவை இரண்டிலும் காபிராகிவிடுவான். அல்லது,

மார்க்கத்தில் ஆகுமான செயல்பாடுகளில் சேர்ந்து நடந்தால் பாவியாவான். 


பிங்ஃயா:- பக்கம்:- 247


ஆக காபிர்களின் விழாக்களில் கலந்துகொள்வதும் அதற்கு உதவி செய்வதும் அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் குப்று என்று ஷரீஅத்தின் அகீதா நூற்கள் தெளிவாகக்கூறுகின்றன.


ஹறாமான, மற்றும் குப்றியத்தான விடயங்களில் மக்களை உலமாசபை தூண்டுவது ஏன்?


இவர்கள் யாருடைய நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றனர்.? உலமாசபையின் அண்மைய நடவடிக்கைகள் முஸ்லிம்களை காபிராக்கும் விடயத்தில் தீவிரமடைந்து போவதை பார்த்து வேடிக்கை பார்க்க முடியாது. இஸ்லாத்தில் பற்றுள்ளவர்கள் உடன் செயலில் இறங்க வேண்டும்.