சித்தீகத்தும் தாழ்மையும் நிறைந்த ஸல்மான் ஃபார்ஸி( ر ضی الله عنه) பற்றிய அருமையான வரலாறு
*****************************
தொகுப்பு : மெளலவி HMM
யூசுப் முஸ்தபி ,காதிரி
அமீருல் முஃமினீன் ஸையிதுனா உமர் இப்னுல் கத்தாப் (رضی الله عنه) ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு வரலாறு.
சாம் நாட்டில் இருந்த ஒரு வணிகர், இஸ்லாமிய படைகளின் வெற்றிக்குப் பிறகு அல்-மதாயின் நகரத்திற்கு வணிகத்துக்காக வந்தார். சந்தைக்கு சென்று தமக்குத் தேவையான பொருட்களையும், குதிரைக்கான தீவனங்களையும் வாங்கி முடித்தபின், அவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஒரு "சுமைதூக்கும் மனிதரை (ஹம்மால்)" தேடத் தொடங்கினார்.
சிறிது நேரத்தில், மிகவும் உயரமான, பலமான, ஆனால் மிகவும் எளிமையான, பழைய ஆடைகளை அணிந்த ஒருவரை காண்டார்.
அவரைப் பார்த்து வணிகர் குரல் கொடுத்தார்:
«ஏய்! இதைக் கட்டி கொண்டு என்னைப் பின்தொடருங்கள்»
அந்த மனிதர் அமைதியாக வந்து பொருட்களை தூக்கிக் கொண்டு, வணிகரின் குதிரையின் பக்கத்தில் நடந்து, குதிரையின் கட்டுப்பாட்டைப் பிடித்து நடந்தார்.
வழியில் சென்றபோது, அங்கு வாழ் மக்கள் அந்த ஹம்மாலைப் பார்த்து:
அஸ்ஸலாமு அலைக்கும் என்று மரியாதை கொடுத்தார்கள்.
அவர் பதிலளிக்க, மக்கள் சொல்லுவார்கள்:
«வ அலைக்குமு ஸ்ஸலாம் யா அமீர்!» (அமைச்சரே!)
வணிகருக்கு அதிர்ச்சி
“இவர்கள் என்னை ‘அமீர்’ என்று நினைக்கிறார்களா?” என நினைத்தார்.
சிறிது தூரம் சென்றபின், வீட்டின் முன் அமர்ந்திருந்த சிலர் எழுந்து நிற்கவும், «தயவு செய்து அமீரே, உள்ளே வாருங்கள்» என்று மரியாதை செய்ததும், வணிகரின் குழப்பம் அதிகமானது.
இவ்வளவு மரியாதை ஏன்? யாருக்காக?
ஆனால் விரைவில் உண்மை தெரிந்தது…
அவர்கள் ஒரு குழு முஸ்லிம் படையினரைக் கண்டார்கள். ஜவான்கள் ஓடிவந்து அந்த மனிதரின் கைகளிலிருந்த பாரத்தைப் பிடிக்க முற்பட்டனர்:
«யா அமீர், அதை விடுங்கள்! எங்களுக்கு கொடுங்கள்!»
வணிகர் அதிர்ச்சியடைந்தார்:
«அமீர் யார்?!»
அதற்கு ஜவான்கள் பதில்:
«இவர்தான் ‘அமீர் அல்-மதாயின்’ – ஸல்மான் அல்-ஃபார்ஸி (رضی الله عنه), நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரியத் தோழர்!»
வணிகர் குதிரையிலிருந்து இறங்கி அதிர்ச்சி–வியப்புடன்:
மன்னித்து விடுங்கள் அமீரே! நான் அறியாமல் உங்களுக்கு வேலை சொல்லி விட்டேன்… இந்தப் பொருட்களை எனக்கு கொடுத்து விடுங்கள்»
ஆனால் ஸல்மான் ஃபார்ஸி (رضی الله عنه) அவர்களின் பதில்:
இல்லை. அல்லாஹ்வின் பெயரால் சொல்கிறேன், உன்னை உன் வீட்டிற்கு சேர்த்துவிடும் வரை நான் இதைத் தூக்குவேன்.
அவர்கள் உண்மையிலேயே அனைத்து பொருட்களையும் தூக்கி, வணிகரை அவரது வீட்டில் பாதுகாப்பாக சேர்த்து வைத்தார்கள்.
📚ஆதாரங்கள்
1. *தாரீக் திமஷ்க்* – இப்னு அஸாகிர்
2. *ஷுஅப் அல்-ஈமான்* – அல்-பைஹகீ
3. *அத்தபகாத் அல்-குப்ரா* (தொகுதி 4) – இப்னு ஸஅத்
4. *ஹில்யத்துல் அவ்லியா* (தொகுதி 1) – அபூ நுஐம் அல்-இஸ்பஹானி
5. *ரிஜாலு ஹவ்லர் ரசூல்* – காலித் முகம்மத் காலித்
🌹 கற்றுக் கொண்ட பாடம் என்ன?
அதிகாரமோ, நிலைமையோ, செல்வமோ மனிதனை உயர்த்தாது.
உண்மையான உயர்வு தாழ்மை, சேவை, மற்றும் அல்லாஹ்வின் பயம்.
முழுமையாக வாசித்த உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்
எனக்காகவும் துஆஃ செய்து கொள்ளுங்கள்.
நன்றி
வஸ்ஸலாம்
02/12/2025








