பூஜைக்கு வைக்கப்பட்டவையை சாப்பிடுவது ஹறாம்.
┈┈┈┅◉☆◆☆◉┅┈┈┈
கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி, பாஸில், ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்க்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷபந்தி.
┈┈┈┅◉☆◆☆◉┅┈┈┈
கேள்வி:-
பூஜை செய்யப்பட்ட பண்டங்களை சாப்பிடலாமா?
பதில்:-
விக்ரகங்களை வணங்குவதும், அதன் நெருக்கத்தை நாடி பூஜை செய்வதும், அதற்காக படையல் வைப்பதும், மிருகங்களை அறுப்பதும் ஷிர்காகும், இவை அல்லாஹுத்த ஆலா மன்னிக்காத கொடிய குற்றம்,
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டவை ஹலால், அல்லாஹ் அல்லாதவர் பெயர் கூறி அறுக்கப்பட்டவை ஹறாம்,
ஹலாலானவை "தைய்யிப்" சுத்தமானவை, ஹறாமானவை "ஹபாயித்" خبائث அசிங்கமானவை- அருவருப்பானவை - அல்லாஹ்வின் அனுமதியின்றி செய்யப்படும் ஒவ்வொரு செயலும் விலக்கப்பட்டவை,
பாவங்களில் அல்லாஹு சுப்ஹாஹுவத ஆலா மன்னிக்காத குற்றம் ஷிர்க் ஆகும், ஆகவே ஷிர்கோடு தொடர்பான அனைத்தும் ஷிர்க் ஆகும், ஷிர்க்கான செயலுக்காக படைக்கப்படும் அனைத்து உணவுகளும் அருவருப்பானவையில் அடங்கும், ஆகவே, அவற்றை உண்பது இஜ்மாஃவின் படி ஹறாமாகும்.
இமாம் நவவி றஹ்மத்துள்ளாஹி அலைஹி தங்களின் அல்மஜ்மூஃ என்ற நூலில் எழுதுகின்றார்கள்.
لو قُدِّم طعامٌ أو فاكهةٌ لصنمٍ لم يجز أكلُه بلا خلافٍ عندنا
சிலைக்கு முன்னால் உணவு, அல்லது பழம் படைக்கப்படுவதும் அதை உண்பதும் கருத்து வேறுபாடின்றி ஹறாமாகும்.
ஆதாரம்: அல்மஜ்மூஃ
பாகம்- 9 பக்கம்- 75
இமாம் றமலி றஹ்மத்துள்ளாஹி அலைஹி எழுதுகின்றார்கள்.
ويحرم أكل ما قُدِّم للأصنام من طعامٍ ولو لم يُذبح
“சிலைகளுக்கு முன்னால் படைக்கப்பட்ட எந்த உணவையும் சாப்பிடுவது ஹராம்;
அது அறுக்கப்படாததாக இருந்தாலும் சரி.”
(அதாவது இனிப்பு, பொங்கல், பழம், பாயாசம், உள்ளிட்டவை)
ஆதாரம்: நிஹாயத்துல் முஹ்தாஜ்
பாகம்: 9 பக்கம்: 130
இமாம் இப்னு ஹஜர் மக்கி
றஹ்மத்துள்ளாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
> ولا فرق بين اللحم وغيره كفاكهةٍ فيما قُدِّم تقرُّبًا
சிலைகளின் நெருக்கத்தை நாடி அவற்றிற்கு முன்னால் வைக்கப்படுபவையில் மாமிசம், மாமிசம் அல்லாத பழம் போன்றவை என்ற வேறுபாடில்லை. (யாவும் ஹறாம்)
ஆதாரம்: துஹ்பத்துல் முஹ்தாஜ்
பாகம்: 9- பக்கம்: 349
இதுபோன்று இன்னும் ஏராளமான நூற்களில் இதே விளக்கம் கூறப்பட்டுள்ளன.
ஆகவே, சிலைகளுக்கு முன்னால் வைக்கப்படும் யாவும் ஹறாம்,
இவ்வாறுதான் காஃபிர்களின் பெருநாட்களில் வழங்கப்படுபவையும் ஹலாலாகாது, காஃபிர்களின் சமய நாட்களை அல்லது அவர்களின் பெருநாட்களை கண்ணியம் படுத்துவதும், அந்த நாட்களில் புத்தாடை உடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் குப்றாகும்.
ஆதாரம்: ஷறஹு பிக்ஹுல் அக்பர்.







