السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 7 December 2025

கண்மணி நாயகம் ﷺ அவர்கள் கற்றுத் தந்த தவஸ்ஸுல் 🌹

 


கண்மணி நாயகம் ﷺ அவர்கள் கற்றுத் தந்த தவஸ்ஸுல் 🌹
🌹 கண்மணி நாயகம் ﷺ அவர்கள் கற்றுத் தந்த தவஸ்ஸுல் 🌹


حدثنا ‏ ‏أحمد بن منصور بن سيار ‏ ‏حدثنا ‏ ‏عثمان بن عمر ‏ ‏حدثنا ‏ ‏شعبة ‏ ‏عن ‏ ‏أبي جعفر المدني ‏ ‏عن ‏ ‏عمارة بن خزيمة بن ثابت ‏ ‏عن ‏ ‏عثمان بن حنيف

أن رجلا ضرير البصر أتى النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏فقال ادع الله لي أن يعافيني فقال إن شئت أخرت لك وهو خير وإن شئت دعوت فقال ‏ ‏ادعه ‏ ‏فأمره أن يتوضأ فيحسن وضوءه ويصلي ركعتين ويدعو بهذا الدعاء اللهم إني أسألك وأتوجه إليك ‏ ‏بمحمد ‏ ‏نبي الرحمة يا ‏ ‏محمد ‏ ‏إني قد توجهت بك إلى ربي في حاجتي هذه ‏ ‏لتقضى اللهم شفعه في


நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா உஸ்மான் பின் ஹுனைஃப் رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்:


 ஓர் கண் பாரவையற்ற மனிதர் அண்ணல் நபி ﷺ அவர்களிடம் வந்து, “அல்லாஹ்விடம் என்னை குணப்படுத்தும்படி துஆ செய்யுங்கள்,நாயகமே ! ” என்றார்.


அண்ணல் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “நீர் விரும்பினால் (இம்மையில் குணமாகாமல்) ஆகிரத்திற்காக உன் நற்கூலியைச் சேமித்து வைப்பது உனக்கு மிகவும் சிறந்தது. அல்லது நீ விரும்பினால் உனக்காக நான் துஆ செய்கிறேன்.”


அம்மனிதர், “துஆ செய்யுங்கள்,நாயகமே ! ” என்றார்.


அப்போது அண்ணல் நபி ﷺ அவர்கள் அம்மனிதரிடம் நன்றாக ஒளூ செய்யும்படியும், இரண்டு ரக்அத்கள் தொழும்படியும் கட்டளையிட்டு, பின்வரும் துஆவை ஓதும்படி கூறினார்கள்:


«அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக வ அதவஜ்ஜஹு இலைக பி முஹம்மதின் நபிய்யிர் ரஹ்மா. யா முஹம்மது இன்னீ கத் தவஜ்ஜஹ்து பிக இலா ரப்பீ ஃபீ ஹாஜதீ ஹாதிஹி லிதுக்ளா. அல்லாஹும்ம ஃபஷஃப்பிஃஹு ஃபிய்ய>>


பொருள் (தமிழில்):


“இறைவா! நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன், கருணை நபி முஹம்மத் ﷺ அவர்கள் மூலமாக உன் பக்கம் திரும்புகிறேன்.  

யா முஹம்மது ﷺ ! இந்த என் தேவையை நிறைவேற்றுவதற்காக தங்களை வைத்து என் இறைவன் பக்கம் திருக்கிறேன்.  

இறைவா! எனக்காக அவரது பரிந்துரையை (ஷஃபாஅத்) ஏற்றருள்வாயாக.”


இப்னு மாஜாவில் இந்த ஹதீதை குறிப்பிட்டு அதனைத் தொடர்ந்து பின்வருமாறு எழுதப்பட்டுள்ளத ,


قال ‏ ‏أبو إسحق ‏ ‏هذا ‏ ‏حديث صحيح


இமாம் அபூ இஷ்ஹாக் رضي الله عنه அவர்கள் " இந்த ஹதீஸ் ஸஹீஹானது " என்று அறிவித்தார்கள்.

ஆதார நூல் 📕 ஸுனன் இப்னு மாஜா,பக்கம் 197,ஹதீஸ் எண்: 1385


#தவஸ்ஸுல் #இஸ்திஙாஸா #ஷஃபாஅத் #வஸீலா #அஹ்லுஸ்ஸுன்னா #sufiacademy #ahlusunnahwaljamaah #islamicpost #islamicreminder #tamilislam #tamilmuslim #islam #tasawwuf