*திருக்குர்ஆன் விளக்கம்.*
••••••••••••••••••••••••••••••
மௌலவி, பாஸில், *ஏ. எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.
•••••••••••••••••••••••••••••••••
தொடர்: 13
-------------
أَلَا إِنَّهُمْ هُمُ ٱلْمُفْسِدُونَ وَلَـٰكِن لَّا يَشْعُرُونَ
2:12-
அவர்கள்தான் குழப்பவாதிகள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தொடர்பு:
இதற்கு முன் முனாபிக்குகளின் முட்டாள்தனமான பேச்சைப்பற்றிக் கூறப்பட்டது , இப்போது அதற்கு மறுப்புக்கூறப்படுகின்றது, எந்தளவு நீட்டி முழங்கி தங்களுடைய புகழைக் கூறினார்களோ அதைவிட அதிகமாக அவர்களின் குறையை எடுத்துக்கூறப்பட்டுள்ளது,
விளக்கம்: தப்ஸீர்
இவர்கள்தான் முதல்தர குழப்பவாதிகள், இதோடு சேர்த்து சீர்திருத்தத்தையும், குழப்பத்தையும், வேறுபடுத்திப்பார்க்கத்தெரியாதளவுக்கு உணர்ச்சியற்றவர்களிலும் முதல் தரமானவர்கள், மனம் குருடாகுவதால் வெளி உறுப்புக்களும் பயனற்றுவிடுகின்றன.
இத்திருவசனத்தில் الا அறிக !, என்று ஆரம்பம் செய்கின்றான், இச்சொல் பாராமுகமாக இருப்பவர்களை விளிப்பூட்டுவதற்காகவும், சில வேளை உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை தேசியப் படுத்துவதற்காகவும் வரும், அடுத்து ان என்ற சொல் பாதிக்கப்பட்டுள்ளது , இச்சொல் பேச்சை மறுக்கும் போது, அல்லது மறுப்பதற்கான சாத்தியம் காணப்படும் போது இச்சொல் கையாளப்படும்.
முனாபிக்கு கள் குழப்பவாதிகள் என்பதை மறுத்தனர், பலவீனமான முஸ்லிம்கள் முனாபிக்குகளின் வெளிப்படையான செயலைப் பார்த்து இவர்கள் சமாதான விரும்பிகள், முஸ்லிம்கள் யுத்தத்தை விரும்புபவர்கள் என்று கருதினார்கள், ஆகவேதான் இந்த இடத்தில் ان என்ற சொல் கையாளப்பட்டு இவர்கள் ஒருபோதும் சமாதான விரும்பிகள் கிடையாது, குழப்பவாதிகளே ஆவார்கள் என்று கோடிட்டுக் கூறப்பட்டது, குழப்பவாதிகள் - المفيدون - என்ற சொல் முனாபிக்கு கள் நாவாலும், சிந்தனையாலும் , உறுப்புக்களாலும் குப்றில் தோய்ந்த வர்கள், மனிதர்களை ஈமான் கொள்ள விடாமல் தடுக்கின்றார்கள், காபிர்களை அவர்களின் குப்றில் உறுதியாக இருக்கத் தூண்டுகின்றார்கள், பூமியில் அல்லாஹ்வின் நினைவைத் தடுக்கின்றார்கள் , இப்படியாக அவர்களின் குழப்பம் தோடர்கினறது, ஆகவே, இவர்கள் சகல தரப்பிலும் குழப்பவாதிகள் ஆகும்.
எனினும் அவர்கள் உணரமாட்டார்கள் என்பதில் لا يشعرون என்ற வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது , شعور என்ற வார்த்தை புலனால் அறிவதைக் குறிக்கும், இச்சொல் முனாபிக்குகளின் குழப்பத்தைக் கண்ணால் பார்த்து அறியக்கூடியதாக இருக்கும் என்பதை குறிக்கின்றது, இவர்களின் குழப்பம் வெளிப்படையாக இருந்தும் அதை ப்பார்த்து விளங்காத மட்டிகளாக இருக்கின்றனர்,
தற்காலத்தில் முளைத்துள்ள இயக்கவாதிகளின் வெளிக்கோலமும், பிரச்சாரமும் நல்லது போன்றே கவர்ச்சி காட்டுகின்றன,, ஒரு கூட்டம் தொழுகைக்கு அழைப்பதாக வெளியில் கூறிக் கொண்டு முட்டாள்களைத் தலைவர்களாக்கி உலமாக்களை அவர்களின் சொல்கேட்டு அவர்களுக்குக் கீழ்படிந்து நடக்க வைதுள்ளது, குறிப்பிட்ட சில சிறப்பு நூற்களை வாசிக்க வைத்து ஷரீஅத் சட்டங்களையும், மற்றும் திருக்குர்ஆன், ஹதீது, தஸவ்வுப் நூல்களையும் வாசிக்க விடாமல் தடுக்கின்றது,
பள்ளிவாசலில் தங்குவதாகக் கூறி பள்ளிவாசல்களின் சங்கைகளை நாசமாக்குகின்றது, சிறுவர்களையும், பாமரர்களையும் இயக்கத்தில் இணைத்து அவர்களின் கோலத்தை மாற்றி பேசக் கற்றுக்கொடுத்து நீங்கள் எட்டு வருடங்கள் ஓதிய ஆலிம் களை விட சிறந்தவர்கள் என்று கூறி அவர்களின் மனதில் உலமாக்களையும், ஷரீஅத் ஞானத்தையும் பற்றிய மரியாதையை மனதிலிருந்து அகற்றி விடுகின்றது.
மற்றுமொரு கூட்டம் படிக்கும் மாணவர்களையும், படித்தவர்களையும் வளைத்துப் போட்டு இஸ்லாமிய அரசியல், இஸ்லாமிய பொருளாதாரம் என்றெல்லாம் கூறி அவர்களின் மூளையைச் சலவை செய்கின்றது.
இன்னுமொரு கூட்டம் குர்ஆன் ஹதீது மட்டும்தான் உண்மை, ஏனைய மத்ஹபுகள்சார்ந்த அறிவுத் துறைகள் யாவும் குப்பைகள் என்று கூறி இஸ்லாத்தின் அடித்தளத்தை யே சுக்கு நூறாக்குகின்றது, இவர்கள் தங்களை நியாயப்படுத்த பொருளாதார சில உதவிகளைச் செய்கின்றனர்.
மக்கள் இவர்களின் வெளிப்பேச்சையும், கோலத்தையும் பார்த்து ஏமாறுகின்றனர், இவர்களால் இஸ்லாமிய விழுமியங்கள் அழிந்து போவதையும், ஆத்மீக பக்தி உணர்வுகள் தேய்ந்து போவதையும் கண்ணால் பார்த்தும் பலவீனமான மக்கள் அவர்களைக் குறைகாணத்தயங்குகின்றனர்.
தற்கால வஹாபிஸ சிந்தனை கொண்ட அத்தனை இயக்கங்களும் குழப்பம் விளைவிக்கும் சுத்தமான முனாபிக்குகள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகும், இவர்களுடைய உள்ளத்தில் ஆழமாகப் பீடித்திருக்கும் தீராத நோயால்தான் நபிமார்களையும் ஸஹாபாக்களையும், இமாம் களையும், வலிமார்களையும் குறைகாண்கின்றார்கள்,
மார்க்கத்தை விட உலக ஆதாயத்திற்கு முன்னுரிமை வழங்குகின்றார் கள், காபிர்களோடு அன்னியொன்னியமாக இருக்கவேண்டும், குர்பான் இறைச்சியை அவர்களுக்கும் வழங்கவேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர்.
மொத்தத்தில் இவர்களின் பிரச்சாரமும், சிந்தனைகளும் இஸ்லாத்தை வளர்ப்பதல்ல,, இஸ்லாத்தின் கௌரவத்தை உயர்த்துவதல்ல மாறாக முஸ்லிம்களின் மத உணர்வை மழுங்கடிப்பதாகும். அன்று முனாபிக்குகள் செய்த அதே வேலையை இப்போது இந்த இயக்கங்கள் செய்கின்றனர்.
கிருபையுள்ள றஹ்மான் இத்தீய நயவஞ்சகக் கூட்டத்தின் வாடையும் நம்மில் படாமல் பாதுகாப்பானாக! ஆமீன்.
ஸூபிஸ விளக்கம்:
•••••••••••••••••••••••••••••••••
மனிதனுக்கான தொடர்பு உலகத்தோடும் உண்டு, மார்க்கத்தோடும் உண்டு, ஆயினும், உலகமும் , தீனும் ஒன்றுக்கொன்று எதிரானவை, உலகத்தைச் சமாளித்தால் மார்க்கம் முரண்டுபிடிக்கும், மார்க்கத்தின் சீராக்கம் உலகத்தைப் பழுதாக்கிவிடும்,
எதார்த்தத்தில் கவனம் செலுத்துபவன் மார்க்கத்தை அதிகம் சிந்தையில் வைத்துக்கொள்வான், கணிசமான கட்டங்களில் மார்க்கத்திற்காக உலகத்தை உதறிவிடுவிடுவான் , வெளிப்படையாகவே மக்கள் மார்க்கத்தைவிட உலகத்தை முதன்மையானதாக புரிந்து வைத்திருக்கின்றனர், அதனால் உலகத்திற்காக மார்க்கத்தை அழித்துக்கொள்கின்றனர்,
முனாபிக்குகள் இப்படியான மக்களைச்சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர், இவர்களின் பார்வையில் உலகத்தைச் சம்பாதிப்பதுதான் அதி உச்ச வெற்றி யாகப் பார்க்கின்றனர், ஆகவேதான் தங்களுடைய காரியத்தை சீர்திருத்தம் என்கின்றனர், அல்லாஹுத்த ஆலாலா இதை குழப்பம் என்று தீர்மானித்துள்ளான்,
ஏனெனில் , இவர்கள் தங்களின் உலகியலை சீராக்கி மார்க்கத்தைப் பழாக்கின்றனர், நிரந்தரமானதைப் பாழாக்கி தற்காலிகமானதை தூக்கிப்பிடிப்பது சந்தேகமில்லாமல் குழப்பம்தான்,
பயன்கள்:
இத்திருவசனத்தில் சில பயன்களைப் பெற்றுக்கொள்கின்றோம்.
1- ஆல்லாஹ்வின் நல்லடியார்களோடு மோதுவது அல்லாஹ்வோடு மோதுவதாக அமையும் என்பதை இத்திருவசனத்திலிருந்து அறிந்து கொள்ள முடியும்.அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட அடியார்களை ஆட்சேபிப்பது திரைமறைவில் அல்லாஹ்வை ஆட்சேபிப்பதாகும், ஏனெனில் , முனாபிக்கள் முஸ்லிம்களை ஆட்சேபித்தார்கள் தவிர, றப்பை அல்ல, ஆனால் றப்பு பதில்கொடுக்கின்றான்,இந்த ஆட்சேபனையை ஹக்குத்த ஆலா தன்னோடு தொடர்பாக்கியுள்ளான் என்பதை இதன்மூலம் புரிகின்றோம், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பேரில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அல்லாஹுத்த ஆலாவே பதில் கூறுவதை பல தடவைகள் பார்த்துள்ளோம்.
2- எவர் அல்லாஹ்வுக்காக தன்னை அற்பணிக்கின்றாரோ, அல்லாஹுத்த ஆலா அவருக்குரியவனாக ஆகிவிடுகின்றான், எவர் உலகத்தில் அல்லாஹ்வின் வகீலாக ஆகி அவனுடைய மார்க்க சட்டங்களை முயன்று பரப்பினால், அல்லாஹுத்த ஆலாவும் அவருடைய வகீலாக ஆகிவிடுவான், அவர்மீது விழும் சோதனைகளைத் தட்டிவிடுவான், ஆகவேதான் فاتخذوه وكيلا ، அல்லாஹ்வை உங்களுடைய வகீலாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்,
எவர் அல்லாஹ்வுக்கு வழிப்படும் சிந்தனையில் இருக்கின்றாரோ, அவருடைய உலகியல் சிந்தனையிலிருந்து அல்லாஹுத்த ஆலா அவரைப்பாதுகாக்கின்றான் என்பது எதார்த்தமாகும் ,
3- ஸஹாபாக்களை "குழப்பவாதிகள்" என்று கூறுவது முனாபிக்குகளின் வேலையாகும், முனாபிக்குகள் தங்களை "சீர்திருத்த வாதிகள்" என்றும் , ஸஹாபாக்களை குழப்பவாதிகள் என்றும் கூறினார்கள், ஆனால் , றப்புத்த ஆலா முனாபிக்குகள்தான் "குழப்பவாதிக ள்" என்று முத்திரை குத்தினான்.
ஸஹாபாக்களுக்கு மத்தியில் நிகழ்ந்த சம்பவங்கள் குழப்பமல்ல, சுயநலமிக்கதுமல்ல, முனாபிக்குகள் சுயநலத்துக்காகத் தொழுததால் அவர்களின் தொழுகை பாழாகிவிட்டது, ஹளறத் யூஸூப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர்களை காபிர் என்றோ, குழப்பவாதிகள் என்றோ றப்புத்த ஆலா கூறாமல் " நான் பதினொரு தாரகைகளைக்கனவில் கண்டேன் " என்ற யூஸூப் நபியின் கனவை க்கூறி ஹிதாயத்தின் தாரகைகள் என்று கூறியுள்ளான். .







