السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 19 December 2025


ஆசானையும் , வகுப்புத் தோழனையும், தேர்வுசெய்வது,


 *தஃலீமுல் முத அல்லிம்.* 

••••••••••••••••••••••••••


*ஆசானையும் , வகுப்புத் தோழனையும், தேர்வுசெய்வது, பற்றிய விளக்கம்* . 

•••••••••••••••••••••••••••••


தமிழில்:


மௌலவி, பாஸில், 

*ஏ. எல். பதுறுத்தீன்‌* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி .

**********************

            தொடர்: 4


அனைத்து அறிவுத் துறைகளிலும் மிகச்சிறந்த துறையையும், இன்னும் ,அதிலும் மார்க்க கருமத்தில் அவனுக்கு

உடனடி அவசியமானதைத் தேர்வு செய்யவேண்டியதும் மாணவனுக்கு அவசியமாகும்,அடுத்தாக அவசியம் படக்கூடிய அறிவுகளைத்தேட வேண்டும், தௌஹீதுடைய அறிவுக்கும் , அல்லாஹ்வை அறிவது பற்றிய ஞானத்திற்கும் முன்னுரிமை வழங்கவேண்டும்,ஆதாரத்தின் மூலமாக அல்லாஹ்வைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும், 


ஆதாரமில்லாமல் அடுத்தவரைப்பின் பற்றுபவரின் ஈமான் நம்மிடத்தில் சரியாக இருந்தாலும்கூட, ஆதாரங்களைத் தேடுவதை கைவிட்டதற்காக பாவியாவான், (திருக்குர்ஆன், ஹதீது, ஸஹாபாக்கள் வழிவந்தவையான) பழைய அறிவு களை எடுத்துக்கொள்ளுங்கள் , புதிய அறிவுத் துறைகளை தவிருங்கள்


பெரும் கொண்ட உலமாக்களுக்களின் மறைவிற்குப் பின் தோன்றிய தர்க்கங்களில் நீ கவனம் செலுத்துவதை விட்டும் உன்னை எச்சரிக்கின்றேன், . இவ்வாறான தர்க்கம் பிக்ஹுக்கலையில் கவனம் செலுத்துவதிலிருந்து மாணவனைத்தூரமாக்கும், வாழ்க்கையைப் பழுதாக்கும், தனிமைக்கும், பகைமைக்கும் வழிவகுக்கும், இவ்வாறான தர்க்கம் கியாமத் நாளின் அடையாளமாகும், அறிவும், சட்டங்களையும் உயர்த்தப்படுவதற்கான அடையாளமுமாகும், ஹதீது ஷரீபில் இவ்வாறு வந்துள்ளது.


 ஆசிரியரைக் தேர்வு செய்வதில் இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்கள் ஆழ்ந்த சிந்தனைக்கும் , ஆய்வுக்குப் பின் ஹளறத் ஹம்மாத் இப்னு சுலைமான் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களைத்தேர்வு செய்தார்கள்.


, அதிக ஞானமுள்ள வரையும் , பேணுதலுள்ளவரையும், வயது முதிர்ந்த வரையும் தேர்வு செய்வது அவசியமாகும், 


ஹளறத் இமாம் அபூ ஹனீபா றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய ஆசியரைப்பற்றி இவ்வாறு கூறினார்கள்.


وَجَدْتُهُ شَيْخًا وَقُورًا حَلِيمًا صَبُورًا وَقَالَ ثَبَتَ عِنْدَ حَمَّادِ بْنِ أَبِي سُلَيْمَانَ وَنَبَتَ


“அவரை நான்

மரியாதைக்குரிய,

தன்னடக்கமுள்ள,

அறிவுடனும் பொறுமையுடனும் இருக்கும்

ஒரு மூத்த ஞானியாகக் கண்டேன்.”

 ஹம்மாத் இப்னு அபீ சுலைமான் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களிடத்தில் உறுதியாக இருந்து , வளர்ந்தேன்.


மேலும் கூறினார்கள்


. அறிவைத் தேடும் ஒருமாணவன் அறிவைத் தேடுவதைப்பற்றி என்னிடம் ஆலோசனை கேட்டார், ஆனாலும் அவர் அறிவைத்தேடிப்படிப்பதற்காக புகாறாவுக்குச் செல்வதற்கும் கூடத் தயாராகவே இருந்தார் என்று ஸமறகன்ந்தில் உள்ள ஓர் அறிஞர் கூறுவதை நான் செவிமடுத்தேன், 


இவ்வாறுதான் அனைத்து விடயங்களிலும் ஆலோசனை செய்யவேண்டியது அவசியமாகும். அனைத்து விடயங்களிலும் ஆலோசனை செய்யுமாறு அல்லாஹுத்த ஆலா றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்குக் கட்டளையிட்டுள்ளான், அன்னாரை விட அதி விவேகி எவரும் கிடையாது ,அப்படியிருந்தும் ஆலோசனை செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான்.


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வீட்டுத் தேவைகள் உட்பட அனைத்து விடயங்களிலும் ஸஹாபாக்களிடம் ஆலோசனை செய்வார்கள்,


எந்த ஒரு மனிதனும் ஆலோசனை செய்த காரணத்தால் நாசமானதாக இல்லை என்று ஹளறத் அலி றழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.


மனிதர்கள் மூன்று வகையில் இருப்பதாகக்கூறப்படுகின்றது,


1- பூரணமான மனிதன்,

 

2- அரை மனிதன்.


3- பயனற்ற மனிதன்.


1- பூரணமான மனிதன்: 


   வலுவான கருத்தைக் கொண்டிருப்பதோடு ஆலோசனையும் செய்வார்.


2- முழுமையில்லாத பாதி மனிதன்: 

 

இவரிடம் வலுவான கருத்து இருக்கும், ஆனாலும் எவரிடமும் ஆலோசனை செய்ய மாட்டார், அல்லது, ஆலோசனை செய்வார், வலுவான கருத்துள்ள வராக இருக்கமாட்டார்.


3- பயனற்ற மனிதன்: 


இவரிடம் எந்தவிதமான வலுவான கருத்தும் இருக்காது , ஆலோசனையும் செய்யமாட்டார்‌.


ஹளறத் ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு ஹளறத் சுப்யானுத்தௌரி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களிடம் கூறினார்கள்.


شَاوِرْ فِي أَمْرِكَ الَّذِينَ يَخْشَوْنَ اللهَ تَعَالَى، وَطَلَبُ الْعِلْمِ مِنْ أَعْلَى الْأُمُورِ وَأَصْعَبِهَا، فَكَانَتِ الْمُشَاوَرَةُ فِيهِ أَهَمَّ وَأَوْجَبَ.


“உன் விஷயங்களில் — குறிப்பாக முக்கியமான காரியங்களில் —

அல்லாஹ்வை அஞ்சிக்கொண்டேயிருப்போரிடம் ஆலோசனை செய்!.

அறிவைப் பெறும் செயல் என்பது, அனைத்து காரியங்களிலும் மேலானதும், உயர்ந்ததும், மிகக் கடினமானது பாகும், ஆகவே, அது விடயத்தில் ஆலோசனையைத் தேடுவது முக்கியமானதும், அவசியமானது பாகும். 


ஹகீம் ஸமறகன்தி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி கூறுகின்றார்கள்.


 நீர் புகாறாவுக்குச் சென்றால் , உலமாக்களிடம் போக்குவரத்து செய்வதில் அவசரம் காட்டாதே! இரண்டு மாதங்கள் அங்கே தங்கியிருந்து நன்கு ஆழமாக சிந்தித்து ஆராய்ந்த பின்,ஒரு உஸ்தாதைத் தேர்வு செய்து கொள்! ஏனெனில், நீர் ஏதாவது ஓர் அறிஞரின் சென்று அவரிடம் பாடத்தைத் தொடங்கி படிப்பாய், சில வேளை அவருடைய கற்பித்தல் உமக்கு பிடிக்காவிட்டால் அவரை விட்டுவிட்டு மற்றுமொரு உஸ்தாதிடம் செல்வாய்! இதனால் உமது அறிவில் பறக்கத் - அபிவிருத்தி- இல்லாமல் போய்விடும்.


ஆகவே, இரண்டு மாதங்கள் தங்கியிருந்து நல்லதொரு உஸ்தாதைத் தேர்வுசெய்து கொள், இதனால் கைவிடுவதும், புறக்கணிப்பும் இல்லாமல் போய்விடும். உமது அறிவில் பறக்கத் கிடைத்து உமது அறிவால் அநேகர் பலன் பெறுவதற்காக நீர் தேர்வு செய்த அறிஞரிடம் காலூன்றி இருந்து கொள்!  


 واعلَمْ أَنَّ الصَّبْرَ أَصْلٌ كَبِيرٌ فِي جَمِيعِ الْأُمُورِ، وَلَكِنَّهُ عَزِيزٌ، كَمَا قِيلَ:


لِكُلِّ إِلَى شَأْوِ الْعُلَا حَرَكَاتٌ، وَلَكِنْ عَزِيزٌ فِي الرِّجَالِ ثَبَاتٌ


“அனைத்து காரியங்களிலும் பொறுமை என்பது மிகப்பெரிய அடிப்படை ஆகும்;

ஆனால் அது அரிய (அழியாத) ஒரு குணமாகும்.

:

‘உயர்ந்த நிலைகளை நோக்கிச் செல்ல அனைவருக்கும் ஆர்வம் உண்டு;

ஆனால் மனிதர்களில் உறுதியுடன் நிலைத்திருத்தல் என்பது மிகவும் அரிது.’”

என்று கூறப்பட்டது போல்! 


 "வீரம் என்பது ஒருமணிநேரத்து பொறுமை " என்று கூறப்படுகின்றது.


எனவே, ஓர் உஸ்தாதிடத்தில் பொறுமையாகவும், நிலையாகவும் இருந்து ஒரு நூலை அரைகுறையில் விடாமல் முழுமையாகக் கற்க வேண்டியது கல்வியைத் தேடும் மாணவனுக்கு அவசியமாகும், 


ஒருவகையில் தேர்ச்சி மடைந்த பின்புதான் மறுகலையை நாடவேண்டும், அவசியமில்லாமல் ஓர்ஊரைத்தவிர்த்து மறு ஊருக்குச் செல்லக்கூடாது, இவைகளால் காரியங்களை சிதற வைக்கும், மனதை வேறு பராக்கில்திருப்பும், காலத்தை வீணடிக்கும், ஆசிரியருக்கு வேதனையை ஏற்படுத்தும். ஆகவே, மாணவன் மனம்போன போக்கில் செல்வதையும் , அதன் பேராசையையும் விட்டும் தூரமாக வேண்டும். 


ஒரு புலவர் பாடினார்


إِنَّ الْهَوَى لَهُوَ الهَوَانُ بِعَيْنِهِ

وَصَرِيعُ كُلِّ هَوًى صَرِيحُ هَوَانِ


 ஆசை என்பது நிச்சயமான அவமானம்;

ஆசைக்குள் விழுபவன், வெளிப்படையாகத் தாழ்வைச் சந்திப்பவன்.


சோதனைகள் , கஷ்டங்களில் பொறுமை செய்ய வேண்டும்


خَزَائِنُ الْمُنَى عَلَى قَنَاطِيرِ الْمِحَنِ :

 

“ஆசைகளின் பொக்கிஷங்கள் — துன்பங்களும் சோதனைகளும் நிறைந்த பாரத் தூண்களின் மேல் அமைந்துள்ளன.”


ஹளறத் அலி றழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.


أَلَا لَا تُنَالُ العِلْمُ إِلَّا بِسِتَّةٍ

سَأُنْبِيكَ عَنْ مَجْمُوعِهَا بِبَيَانِ

ذَكَاءٌ وَحِرْصٌ وَاصْطِبَارٌ وَبُلْغَةٌ

وَإِرْشَادُ أُسْتَاذٍ وَطُول زَمَان


“அறிவு ஆறு காரணங்களால் மட்டுமே கைகூடும்;

அவற்றை தெளிவாகவும் முறையாகவும் உனக்கு எடுத்துரைக்கிறேன்:



1. நுண்ணறிவு,


2. ஆர்வமும் அக்கறையும்,

3. கடினமானபொறுமை,


4. வாழ்வாதரத்திற்கான போதுமான வசதி,


5. நல்ல ஆசானின் வழிகாட்டுதல்,


6. நீண்ட கால முயற்சி.


வகுப்புத் தோழன்


  வகுப்புத் தோழனைத் தேர்வு செய்யும்போது , முயற்சியும் ,பேணுதலும், நல்ல சுபாவமும், , குறிப்பறியும் விவேகமுள்ளவரைக்கவனத்தில் கொள்ள வேண்டும் , பொறுப்பற்ற வன், சோம்பேறி, குறும்புக்காறன், கலகம் விளைவிப்பவன், நெறிபிறழ்ந்தவன் உள்ளிட்டோரை விட்டும் தூரமாயிருக்கும்.

புலவர் பாடுகின்றார்.


عَنْ الْمَرْءِ لَا تُسْأَلْ وَابْصُرْ قَرِينَهُ

وَكُلُّ قَرِينٍ بِالْمُقَارَنِ يَقْتَدِي

فَإِنْ كَانَ ذَا شَرٍّ وَجَانِبُهُ سُرْعَةٌ

وَإِنْ كَانَ ذَا خَيْرٍ فَقَارِنْهُ تَهَدَّدِي


 எவரைப் பற்றியும் கேட்காமல் அவரின் நண்பரை உற்றுநோக்கு! நண்பன் மற்ற நண்பனையே பின் தொடர்வான், அவன் தீயவனாயின், அவன் தோழனும் விரைவில் தீயவனாவான், நல்லவனாயின், அதனைத்தொடர்ந்து நல்லவனாவான்.

எனக்கு இக்கவிதையை சொல்லிக் காட்டப்பட்டது.


لَا تُصحَبِ الْكَسْلَانُ فِي حَالَاتِهِ

كَمْ صَالِحٍ بِفَسَادِ آخَرَ يُفْسَدُ

عَدْوَى الْبَلِيدِي إِلَى الْجَلِيدِ سَرِيعَةٌ

كَالْجُمْرِي يُوضَعُ فِي الرَّمَادِ فَيَخْمُدُ


படிக்கும் காலத்தில் சோம்பேறிகளோடு சேர்ந்திருக்கக் கூடாது, நல்லவர்களில் எத்தனையோ பேர் கெட்டவர்களோடு சேர்ந்து கெட்டு விட்டார்கள்,

 மந்த புத்தியுள்ளவனின் தீங்கு நீறு பூத்த நெருப்பு போன்று விவேகியையும் தாவிப் பிடிக்கும்,    

 றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى فِطْرَةِ الإِسْلَامِ إِلَّا أَنَّ أَبَوَيْه يَهُودَانِه وَنَصْرَانِه وَيُمْجِسَانِهُ


ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது இஸ்லாத்திலேயே பிறக்கி

ன்றது, அதன் பெற்றோர்தான்

 அதை யஹூதியாகவும் நஸாறாவாகவும் , மஜூஸியாகவ

ம் மாற்றுகின்றனர்.

ஒரு பாரசீகக் தத்துவத்தில் கூறப்படுகின்றது.


 கெட்ட உறவு கரு நாகத்தின் விஷத்தை விட க் கொடியது, தேவையற்ற வனான அல்லாஹுத்த ஆலா வின் மீது ஆணையாக! கெட்ட உறவு உன்னை நரகத்திற்கு இழுத்துச்செல்லும், நல்ல நண்பர்களோடு சேர்ந்து நீங்கள் சொர்க்கத்தைப் பார்ப்பீர்கள்.


إِن كُنتَ تَبْغِي الْعِلْمَ مِنْ أَهْلِهِ

أَوْ شَاهِدًا يُخْبِرُ عَنْ غَالِبٍ

فَاعْتَبِرِ الْأَرْضَ بِأَسْمَائِهَا

وَاعْتَبِرِ الصَّاحِبَ بِالصَّاحِب


“உனக்கு அறிவும் அறிவுடையவர்களும் தேவைப்பட்டால்,

அல்லது மறைந்துள்ள விஷயங்களை உண்மையாகச் சொல்லக்கூடிய ஒருவரைத் தேடினால்,

அப்போது நிலங்களை அவர்களது செய்கைகள் மூலம் அறிந்துகொள்;

இன்னும் ஒருவரின் குணநலனை அவனது நண்பர்களை வைத்து அறிந்துகொள்.”


( நிலத்தின் பெறுமதியை பூங்கா, நந்தவனம் , மாளிகை, நகரம் உள்ளிட்டவை மூலம்

அங்கிருப்பவையை அறியலாம்).