السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 6 May 2015

பிற மத சகோதரர்களின் கேள்விக்கு பதில் – 1



பாய், உண்மையான முஸ்லிம்கள் யார்? உண்மையான முஸ்லிம்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது? நான் ஏன் இப்படி கேட்கிறேன் என்றால் எனக்கு தெரிந்த காலம் முதல் எமது ஊரில் முஸ்லிம்களுக்குள் எந்த பிரிவும் இருக்கவில்லை. எனது பக்கத்து வீட்டார்கள் பலரும் முஸ்லிம்களாக தான் இருந்தார்கள். ரம்ஜான் பண்டிகையை எல்லோரும் ஒன்றாக கொண்டாடுவார்கள். எமக்கு உணவு எல்லாம் அனுப்பி வைப்பார்கள் நல்ல ஒற்றுமை இருந்தது.
.
இப்போது பார்கிறேன் தவ்கீத் ஜமாத், ஜாக் ஜமாத் என்று பல பெயர்களில் பல குழுக்கள் ரம்ஜான் பண்டிகையை வெவ்வேறு நாட்களில் கொண்டாடுகிறார்கள்.
.
முன்பு நாம் ஒன்றாக வாழ்ந்த முஸ்லிம்களை எப்படி என்ன பெயர் கொண்டு அடையாளம் கண்டுக்கொள்வது? அதனால் தான் கேட்குறேன்.
.
பதில்:
பாரம்பரிய முஸ்லிம்களுக்கு அதாவது உண்மை முஸ்லிம்களுக்கு ஸுன்னத் ஜமாஅத் என்று சொல்லப்படும். இவர்கள்தான் உண்மையான இஸ்லாமியர்கள்.
.
இவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை பின்பற்றி அன்னாரின் தோழர்கள் மற்றும் இறை நேசர்களின் உபதேசங்களை செவிமடுத்து நடப்பவர்கள். பிரமதத்தினர்களுடன் ஒற்றுமையாக வாழக்கூடியவர்கள்.
.
நீங்கள் மேலே கூறிய இயக்கவாதிகளை வஹாபிகள் என்று கூறப்படும். இந்த இயக்கங்கள் வெளிநாட்டு பணங்களுக்காக வேண்டி இஸ்லாமிய சமுதாயத்திற்குள் மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பிளவுகளையும், பிரிவினைகளை உருவாக்கி கொண்டு திரிபவர்கள்.
.
இவர்கள் உண்மை முஸ்லிம்கள் அல்ல. இவர்களை எமது இஸ்லாமிய மார்கத்தில் முனாபிக்குகள் என்று கூறப்படும் அதாவது நயவஞ்சகர்கள் என்று கூறப்படும்.