السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 26 May 2015

அஹ்லுல் பைதுக்களை அன்பு கொள்வோம் எனும் நூல் வெளியீடு

 அஹ்லுல் பைதுக்களை அன்பு கொள்வோம்  எனும்  நூல்  வெளியீடு

நூலின் பெயர்: அஹ்லுல் பைதுக்களை அன்பு கொள்வோம்.
நூலாசிரியர்: அல் ஆலிமுல் பாழில் அஷ்ஷைக் சைய்யத் அப்துல் அஸீஸ் மௌலானா குஷ்ஹாலீ, அர்ரிபாஈ.
வெளிஈடு : ஜமிய்யத் இஷாஅத்தி அஹ்லலிஸ் சுன்னாஹ்.
தொடர்புகளுக்கு: 0094-773557710 - 0094-718414705 - 0091-7299159299 – 0097-1557657019
நபிமார்கள் எவரும் சன்மார்க்கப் பிரசாரத்துக்ககாக எவர்களிடத்திலும் எவ்விதக் கூலியையும் கேற்பதில்லை. அந்த வகையில் நபிகள் பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் கூலி கேற்கவில்லை. ஆனாலும்கூட அதற்குப் பிரதிபலனாக தனது உறவினர்களை பிரியங் கொள்ளுமாறு நபியே நீங்கள் கூறுங்கள் என்று அல்லாஹ் நபி அவர்களுக்கு சொல்லச் சொன்னான். அல்குரான் 42-23.
இஸ்லாம், ஈமான் என்பன அல்லாஹ்வின் அளப்பரிய அருட்கொடையாகும். அவ்வாறானதொரு வெகுமதியற்ற அல்லாஹ்வின் அருட்கொடையை நாம் பெற்றிருக்கிறோம். அல்லாஹ்வின் இறைத்தூதர் நபிகள் நாதர் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நபியாகவும் ரசூலாகவும் விசுவாசம் கொண்டதுதான் இதற்கான காரணமாகும். அத்துடன் ஆரோக்கியமான வாழ்வும் அல்லாஹ்வின் கொடையாக இருக்கிறது. அவனின் சகல கொடைகளும் அடியார்களுக்கு அண்ணலார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ஊடாக வந்தடைகிறது. இதற்கெல்லாம் பிரதிபலனாக நாம் நபியவர்களுக்கு என்ன கைமாறு சைய்யலாம்? என்ற வினாவுக்கு, அண்ணலாரின் சிறப்பான குடும்பத்தினை நேசிப்பதைத் தவிர வேறில்லையென்று அல்குரான் அறிக்கையிட்டுக்கொண்டிருக்கிறது. அதன் நிமித்தம் எண்ணற்ற அறிஜர் பெருமக்கள் அண்ணலாரின் அன்புக் குடும்பத்தினை நேசிப்பதுடன் நின்றுவிடாது அது தொடர்பான கருத்துக்களை நூலுருவில் பதிவேற்றமும் செய்து அல்லாஹ்வின் இக்கட்டளையினை நிறைவேற்றி வைத்துள்ளார்கள். அப்பெருமக்கள் வழி சென்று இந்நூலாசிரியரும் தமது கடமையை நிறைவேற்றி வைத்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
அருமை நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பரிசுத்த உறவினர்களை நேசிப்பது ஈமானிய விடயமாகும். அதனால் அதன் அத்தியாவசியத்தினை இந்நூல் எடுத்துக் கூறுவதுடன், அவர்களை நோவிப்பதால் ஏற்படப்போகும் அபாயத்தினையும் அள்ளித் தெளித்துள்ளது. அத்துடன் அருமை நாயகம் முஸ்தபா ஸல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் குடும்பத்தினரை நேசிக்கிறோம் என்ற பிரச்சாரத்தில் அண்ணலாரின் அருமை மனைவிமார்கள், மதிப்புக்குரிய தோழர்கள் ஓரங்கட்டப்படும் ஒழுக்கமற்ற கருத்துக்களுக்கும், உண்மையில் அஹ்லுல் பைத்துக்களை நேசிப்பது யார்? நிந்திப்பது யார்? என்ற வினாக்களுக்கும் பதில் இதிலே பதிவாகியுள்ளது. எங்களை இவர்கள்தான் நோவினை சைதவர்கள். நிந்தித்தவர்கள். எம்மைக் கொலை செய்தவர்கள் என்ற அஹ்லுல் பைதுக்களின் வாக்கு மூலத்தினையும் இந்நூலில் காணலாம். அத்துடன், அண்ணலார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் விஷேட சிறப்புக்கள், வழிகேடர்களின் கொள்கை விஞ்ஜாபனம், தன்ஸீஹ் தஷ்பீஹ் தொடர்பிலான பல்சுவை அம்சங்களை இந்நூல் தாங்கி நிற்கிறது.
அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் கொள்கைக் கோட்பாட்டில் வாழ்பவர்களை சீஆக்கள் என பழி சுமத்திவிட்டு நாங்கள்தான் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று கூறிட குள்ளத்தனமாக குழி தோண்டும் முகல்லித் வஹ்ஹாபிகள், உருவ வழிபாட்டுக்காரர்களின் முகத்திரையைக் கிழித்தெறிந்து ஊடறுத்து சென்று உழைக்க ஒன்றுபடுவோம்.
இந்நூலாசிரியர், இலங்கை புத்தளம் மதுரங்குளி விருதோடை அல் ஜாமியா அஸீஸிய்யா அரபிக் கல்லூரி, அல் பாஸ் சர்வதேச ஆங்கில பாடசாலை, ஜம்யிய்யது இஷாஅத்தி அஹ்லிஸ் சுன்னாஹ், முனள்ளமது மதாரிசி அஹ்லிஸ் சுன்னாஹ் என்பனவற்றின் நிறுவுனர். இது இவரின் முப்பதாவது நூலாகும். அன்னவரின் 49 வது ஜனன தினத்தில் ஜம்யிய்யது இஷாஅத்தி அஹ்லிஸ் சுன்னாஹ் உலமா சபை இதனை வெளியிட்டுள்ளது. எனினும் 07-06-2015 ஞாயிற்றுக்கிழமை அல் ஜாமியா அஸீஸிய்யா அரபிக் கல்லூரி வளாகத்தில் இந்நூலாசிரியரின் தலைமையில் இடம்பெறவுள்ள 16 வது வருட உரூஸ் முபாரக். நான்காவது அல் அஸீஸி சான்றிதழ்கள் வழங்கும் வைபவத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட இருக்கிறது. இன் ஷா அல்லாஹ்.
உம்முல் முமினீன் அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்களின் அடக்கஸ்தளம் இந்நூலின் அட்டைப் படமாக அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. யா அல்லாஹ் அளப்பரிய இப்பணியினை நீ உன் நபியின் பொருட்டினால் ஏற்றிடுவாயாக! ஈருலகிலும் சகல பாக்கியங்களும் பெற்று வாழ தவ்பீக் செய்தருள் புரிவாயாக!