السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 4 May 2015

சூனியத்தை நம்பாதவன் முர்தத்


இஸ்லாத்திலே எவனொருவன் ஒரு அல்குர்ஆன் வசனத்தை, அதாவது அல்லாஹ்வின் வார்த்தைகளை மறுக்கிறானோ, அவன் முர்தத் (இஸ்லாத்தை விட்டு வெளியேறியவன்) எனப்படுவான். இதுவே இஸ்லாமிய சட்டம்.அந்த அடிப்படையில் அல்குர்ஆனிலே அல்லாஹ் சூனியத்தை பற்றி பல்வேறு வசனங்களில் கூறியுள்ளான். ஒன்றல்ல, இரண்டல்ல, பல வசனங்கள். அப்படி இருந்தும் எவனொருவன் தன் மனோ இச்சைப்படி சூனியம் என்று ஒன்று இல்லை என மறுக்கிறானோ, அவன் அல்லாஹ்வின் வசனங்களை மறுத்த காபிராவான்.அல்குர்ஆனிலும், புகாரி முஸ்லிம் போன்ற ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களிலும், தப்ஸீர் இப்னு அப்பாஸ் போன்ற மிக பெரும் தப்ஸீர்களிலும் சூனியம் என்று ஒன்று உள்ளது என்று கூறப்பட்டுள்ளன. ஆனால், ஒருவன் இவை எல்லாவற்றையும் மறுத்து விட்டு தான் கூறுவதுதான் சரி என்று கூறினால் அவன் யாரென நீங்களே விளங்கி கொள்ளுங்கள்.அதேபோல, 1400 வருடங்களாக எந்த ஒரு முஸ்லிமும் சொல்லாத ஒரு விடயத்தை ஒருவன் இன்று புதிதாக சொல்கிறான் என்றாலே விளங்கி கொள்ள வேண்டியதுதான் அவன் வழிகேடனும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவனுமாவான் என்று.அல்லாஹ் அத்தகைய வழிகேடர்களை விட்டும் நம்மை பாதுகாப்பானாக...நீங்கள் விளங்கி கொள்வதற்காக அல்குர்ஆனிலே சூனியம் பற்றி வந்த ஒரு சில வசனங்களை மட்டும் இங்கு உதாரணமாக தந்துள்ளோம். எல்லாவற்றையும் அல்ல. ஒரு வசனத்தை மறுத்தாலே காபிர். அப்படியானால், இத்தனை வசனங்களை மறுப்பவன் யார்? நீங்களே சொல்லுங்கள்.* அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; (2:102)* அதற்கு (மூஸா), “நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தார்கள். (7:116)* அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து: (7:120)* அதற்கு மூஸா: “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார். (10:77)* அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், “நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்” என்று மூஸா அவர்களிடம் கூறினார். (10:80)* (மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள். (20:70)* (இதைப்பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். (26:46)முஸ்லிம்கள் விளங்கி கொள்ள இதனை கண்டிப்பாக பார்த்துவிட்டு அதிகம் SHARE செய்யுங்கள்விளக்கம் அளிப்பவர் : மெளலவி, அல்ஹாபிழ் ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A. (இந்தியா)