السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 2 May 2015

சரிந்து வரும் தொழில் தர்மம்

சரிந்து வரும் தொழில் தர்மம்
உலகின் பல நாடுகளிலும் மே முதல் நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றனர்.
வேலைக்காரர் களிடம் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும் என்ற சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் இது என்பதே தொழிலாளர் தினத்தின் அடிப்டையாகும்.
தொழிளார்களின் உரிமை ,தொழிலாளர்களுக்கு நன்றி செலுத்துதல் ஆகிய அம்சங்களோடு தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
மனிதனது சம்பாத்தியத்திற்கான வழிகளில் அறிவால் சம்பாதிக்கும் சேவை, பணத்தால் சம்பாதிக்கும் வியாபாரம், உடல் உழைப்பால் சம்பாதிக்கும் தொழில்.
இதில் மூன்றாம் இடத்திலிருக்கிற உடல் உழைப்பு பொதுவாக தாழ்ந்த்தாக கருத்தப்பட்டது. உடல் உழைப்புச் செய்வோர் மலிவானர்களாக நடத்தப்பட்டனர்.
உண்மையில் சம்பாத்தியத்திற்கான வழிகளில் உடல் உழைப்பு தான் உன்னதமானது. சேவகன், வியாபாரி தொழிலாளி ஆகிய பிரிவில் தொழிலாளிதான் உன்னதமானவன்.
அவனது உழைப்பு இல்லாவிட்டால் நாம் உண்ணமுடியாது உடுத்த முடியாதும் பாதுகாப்பாக இருக்க முடியாது.
பணமும் அறிவும் இல்லாமலே கூட உழைப்பாளி தனது திறமையால் வாழ்ந்து விட முடியும் மற்ற இருவருக்கும் அது சாத்தியமல்ல,
மட்டுமல்ல அல்லாஹ் இந்த உலகில் வைத்திருக்கிற ரிஜ்கினுடையவும் சவுகரியங்களுடையவும் அடையாளங்களை தொழிலாளியே வெளிப்படுத்துகிறான்.
பெருமானாருக்கு கிராமத்திருலிரு காய்கறி கொண்டு வந்து கொடுப்பார் ஒரு சஹாபி. ஒரு நாள் சந்தையில் அவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். பின்னாலிருந்து அவரை அணுகிய பெருமானார் அவருக்குத் தெரியாமல் அவரது முதுகை தன் நெஞ்சோடு சேர்த்துத் தூக்கி “இவரை வாங்குவோர் உண்டா” என்று கேட்டார்கள். பெருமானாரின் நெஞ்சோடு தன் முதுகை இறுக இழைத்துக் கொண்ட அந்த சஹாபி சிறிது நேரத்திற்குப் பின்
إنما أنا كاسد –நான் சாம்னியன் என்னை யார் வாங்குவார்? என்றார். பெருமானார் (ஸல்) சொன்னார்கள்.
لست بكاسد عند الله
ஒரு முறை உழைத்து தழும்பேறிய ஒரு தொழிலாளியின் கையை தடவிய பெருமானார் (ஸல்) சொன்னார்கள்
الكاسب حبيب الله
நபிமார்கள் பலர் தொழிலாளர்களாக இருந்துள்ளார்கள்
· இத்ரீஸ் அலை தையல்காரர்
· தாவூத் அலை கொல்லர்
· ஜகரிய்யா அலை ஆசாரி
· நபிமார்களின் ஒரு பொது தொழிலாக ஆடு மேய்க்கும் தொழில் இருந்துள்ளது,
· முஹம்மது நபி (ஸல்) அர்கள் தன் சிற்றன்னைகளின் அடுகளை மேய்த்தார்கள்.
· சஹாபாக்களில் அலி ரலி அவர்களைப் போன்ற பலரும் கூலித்தொழிலாளர்களாக இருந்துள்ளனர்.