السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 19 May 2015

முஸ்லிம் பெற்றோர்களின் கவனத்திற்கு!


Mail of Islam's photo.முஸ்லிம் பெற்றோர்களின் கவனத்திற்கு!

உங்கள் பெண் பிள்ளைகளை தீனிக்காக (அழகு, சொத்து, சீதனம்) பெண் கேட்டு வந்தால் கொடுக்காதீர்கள்.
.
உங்கள் பெண் பிள்ளைகளை தீனுக்காக (இஸ்லாம், ஈமான், இஹ்ஸான்) பெண் கேட்டு வந்தால் கொடுங்கள்.
.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நான்கு நோக்கஙகளுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.
1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பாயத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்கத்திற்காக. ஆகவே/ மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!. புகாரி - 5090
.
இன்று நாம் சமுதாயத்தில் பார்க்கிறோம் அதிகமான திருமணங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் சாபத்தை பெற்ற திருமணங்களாக மாறி வருவதை காணலாம்.
.
இன்றைய திருமணங்கள் திருமணம் முடித்து ஒரு மாதம் கூட ஆகவில்லை தலாக் வாங்குவதற்காக காஸி நீதிமன்றத்தில் நிற்பதை காணலாம்.
.
இவர்களின் திருமணம் எப்படி நடந்தது என்று நாம் விசாரித்து பார்த்தால் தெரியும். பெரும்பாலான பெண் வீட்டார்கள் கூறுவார்கள். எனது மகளை இந்த திருமண வீட்டில் வைத்து அல்லது, அவள் பாடசாலை போகும் போது அவளின் அழகை பார்த்து பெண் கேட்டு வந்தார்கள். எமக்கு ஒன்றும் வேண்டாம் பெண் மட்டும் போதும் என்று சொன்னார்கள். சீதன பிரச்சினை இல்லையே என்று தான் திருமணம் முடித்து கொடுத்தோம்.
.
திருமணம் முடித்த பிறகு அவளின் கணவனின் தாய் மற்றும் வீட்டார்கள் எனது மகளை இழிவாக பேசியும் கிண்டல் அடித்தும் வருகிறார்கள். அவளை அடிமை போல் நடத்துகிறார்கள்.
.
இன்னும் சில பெற்றோர்கள் சொல்லுவார்கள், எமக்கு ஒன்றும் வேண்டாம் என்று பெண் கேட்டதால் சீதன பிரச்சினை இல்லையே என்று நினைத்து நாம் மணமகனை சரியாக விசாரிக்காததால் மணமகன் ஏற்கனவே திருமணம் முடித்தவன், அல்லது வேறு பெண்ணுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ளவன். இப்போதுதான் எமக்கு தெரிய வந்ததது.
.
இது போன்ற காரணங்களை நாம் தினமும் ஊடகங்கள் மூலமும் அறிந்தவர்கள் மூலம் அறிகிறோம்.
.
புத்திசாலிகள் சிந்திக்க வேண்டும் முன் பின் தெரியாத யாரோ ஒருவர் தெருவில் கண்டு வெறும் அழகிற்காக பெண்ணை கேட்கிறான் என்றால் அவர்களின் நோக்கம் என்ன என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அழகிற்காக இன்று கேட்பவன் நாளை அழகு போன பிறகு தூக்கி எறிந்து விடுவான்.
.
இன்னும் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள் தமது குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது உறவினர்கள் உங்கள் பெண்ணுக்கு இன்னும் திருமணம் முடித்து கொடுக்கவில்லையா? வயது போகிறதே? உறவினர்களின் குடும்பங்களில் மற்ற பெண் பிள்ளைகள் திருமணம் முடித்து விட்டார்களே! என்று கேள்வி கேட்டு நச்சரிப்பதால் அவர்களை திருத்தி படுத்துவதற்காக வேண்டியும் தமது கடமை முடிந்தால் போதும் என்று நினைத்து ஏதாவது ஒரு குழியில் தள்ளிவிட்டு அதற்கு பிறகு தலையில் கையை வைத்து அழுதுகொண்டு இருப்பார்கள்.
.
உலகத்திற்காக வாழாதீர்கள். இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் நப்ஸ், உலகம், மனிதர்கள், ஷெய்தான் இவை நான்கும் இறைவனை அடையும் மனிதர்களின் தடை பொருட்கள்.
.
ஆதலால் தீனிக்காக வாழாதீர்கள்! தீனுக்காக வாழுங்கள்!
.
தீனிக்காக வாழ்ந்தால் அழிவு நிச்சயம்!
தீனுக்காக வாழ்ந்தால் வெற்றி நிச்சயம்!
.
Mail of Islam