السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 22 May 2015

12ஆவது பட்டமளிப்பு விழாவும் 13ஆவது தலைப்பாகை சூட்டும் வீழாவும்

மஆனீமுல் முஸ்தபா அல்ஜாமிஅத்துல் அரபிய்யாவின் 12ஆவது பட்டமளிப்பு விழாவும் 13ஆவது தலைப்பாகை சூட்டும் வைபவமும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 24.05.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரியின் மண்டபத்தில் சங்கைக்குரிய மௌலானா மௌலவி அல்ஹாஜ் பீ.ஏ.முஹம்மது ஸைபுத்தீன் ஆலிம் கலீபத்துல் காதிரி ஸகாபி காமிலி அல்ஹஸனி அந்தரிய்யி (இந்தியா) அவர்களின் தலைமை தாங்குதலுடன் ஆரம்பமாகவுள்ளது. 

மேலும் இவ்விழாவை சிறப்பிக்க பிரதம அதிதியாக சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் எஸ்.எம்.எச்.முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் கலீபத்துல் காதிரி சூபி அல்ஆலிமுல் பாழில் பாகவி ரஹ்மானி (இந்தியா) அவர்கள் கலந்து கொள்ளுகின்றார்கள். இவர்களோடு கல்லூரியின் அதிபர் மௌலானா மௌலவி அல்ஹாபிழ் ஏ.நாகூர் மீரான் கலீபத்துல் காதிரி பாஸில் பாகவி (இந்தியா) அவர்களும், விரிவுரையாளர்களான மௌலவி சாலிஹ்.எம்.றியாழ் (முஸ்தபி),கே.எம். அஷ்ரப் (முஸ்தபி), எம்.எம்.எம்.கியாஸ்தீன் (முஸ்தபி) ஆகியோரின் பங்குபற்றுதலுடனும், நிர்வாக சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. 

விழா நடைபெறும் அன்றைய தினம் நான்கு மாணவர்கள் (முஸ்தபி) எனும் மௌலவி பட்டம் பெறுவதோடு, மூன்று மாணவர்கள் தலைப்பாகை சூட்டியும் கௌரவிக்கப்படவுள்ளனர்.

ஆகவே!  இந்நிகழ்வுக்கு  அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு  மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்  மௌலவீ கியாஸ்தீன்   முஸ்தபீ