السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 22 May 2015

ஜமியதுல் உலமா சபையின் வேண்டுகோள்.

இப்போது விளங்குகின்றதா உண்மை முஸ்லிம்கள் யார் என்று?
வஹாபிகளின் வாயாலேயே அல்லாஹ் உண்மையை வெளியாக்கினான்.

செய்தி: அகில இலங்கை ஜமியதுல் உலமா சபையின் வேண்டுகோள்.
ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கைக்கு முரண்பட்டிருக்கும் அனைத்துப் பிரிவினரிடமும், தனி நபர்களிடமும் வழிகெட்ட அனைத்துக் கொள்கைகளிலிருந்தும் சுயவிருப்பத்துடன் தவ்பா செய்து அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்துடன் இணைந்து விமோசனம் அடைந்து கொள்ளுமாறும் இந்த மாநாடு வேண்டிக் கொள்கின்றது.
.
இலங்கை வாழ் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகள் விடயத்தில் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------
.
வழிகெட்ட கொள்கைகள் என்பது ஷியா, காதியானி மட்டுமல்ல வஹாபிஸமும் தான். இன்று அகில இலங்கை உலமா சபையை நிர்வகிப்பவர்கள் வஹாபிகள். அவர்களின் வாயாலேயே அல்லாஹ் உண்மையை முழு உலகிற்கு வெளியாக்கி விட்டான்.
.
உண்மையில் பார்க்க போனால் திருடன் திருடனை துரத்தி ஓடின கதை போல் உள்ளது.
.
நாம் ஸுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்களிடம் வேண்டிக்கொள்வது என்னவென்றால், ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது போல் தெரிகிறது அதாவது ஆட்டு மந்தைக்குள் அடைக்கலம் தேடும் ஓநாயின் கதை போல் தெரிகிறது இவர்களின் நடவடிக்கை.
.
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் வஹாபிகள் தங்களை ஸுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக்கொண்டு ஸுன்னத் வல் ஜமாஅத் போர்வையை தலையில் போர்த்திக்கொண்டு தங்களின் வஹாபி கொள்கைகளை பரப்ப நினைக்கிறார்கள். முஸ்லிம்கள் இனிமேலும் இதற்கு இடம் அளிக்க வேண்டாம்.
.
தீன் என்பது இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் ஆகும். இவை மூன்றும் சேர்ந்ததே தீன். அதாவது ஷரீஅத், அகீதா, தரீக்கத் இதை மூன்றையும் எவர் பின்பற்றுகிறாரோ அவரே உண்மையான தீன்தாரி ஆகும்.
.
தப்லீக் ஜமாத்திடம் ஷரீஅத் மட்டுமே உண்டு அகீதா, தரீக்கா இல்லை.
தவ்ஹீத் ஜமாத்திடம் ஒன்றுமே இல்லை. ஆதலால் இந்த ஒநாய்களிடம் விழிப்பாக இருந்துகொள்ளுங்கள்.
.
இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் (ஷரீஅத், அகீதா, தரீக்கத்) இந்த மூன்றையும் பின்பற்றி (ஸுன்னத் வல் ஜமாத்தாக) உண்மை முஃமினாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

 ஜமியதுல் உலமா சபையின் வேண்டுகோள்.

ஜமியதுல் உலமா சபையின் வேண்டுகோள்.