السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 21 May 2015

பிரான்சில் வேகமாக வளர்ந்து வரும் புனித இஸ்லாம்

உலக முஸ்லிம் செய்திகள்'s photo.

ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் காணப்படுகிறது. 

.
இந்த வருட ஜனவரி மாதத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பெரிய பள்ளிவாசலில் மட்டும் வைத்து இஸ்லாத்தை தழுவியோரின் எண்ணிக்கை 40. 
.
சென்ற 2014 ஆம் வருடம், இதே ஜனவரி மாதத்தில் இதே பள்ளிவாசலில் மட்டும் வைத்து இஸ்லாத்தை தழுவியோர் 22. அதாவது, போன வருடத்தை விட இந்த வருடம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 
.
அதேநேரம், பிரான்சில் பள்ளிவாசல்களில் தொழுகைக்காக சமூகம் அளிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறதாக அறிவிக்கப்படுகிறது. 
.
குறிப்பாக பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்போர்க், ஆபர்வில்லிர்ஸ், லையோன் ஆகிய பிரதேசங்களில் இது காணப்படுவதுடன், இந்த பகுதிகளில் புதிதாக இஸ்லாத்தை தழுவியோரின் வீதம் 20% இல் இருந்து 30% ஆக அதிகரித்து உள்ளது.
.
அதேநேரம், சார்லி ஹெப்டோ பத்திரிகை தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் பிரான்சில் புனித அல்குர்ஆன் மொழிப்பெயர்ப்பு விற்பனையும் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
.
இதேநேரம், அண்மைய காலங்களில் பிரான்சில் உள்ள வானொலிகளுக்கு பேட்டி வழங்கிய பள்ளிவாசல் இமாம்கள் கூறுகையில், இப்படி இஸ்லாத்தை தலுவியோரில் பலர் டாக்டர்கள், பேராசிரியர்கள், போலீஸ் அதிகாரிகள், பாடசாலை பணிப்பாளர்கள் ஆவர் என்று கூறியுள்ளனர்.