السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 19 May 2015

உலக முஸ்லிம்களின் கவனத்திற்கு!


வஹாபிகளின் சூழ்ச்சியும் முஸ்லிம்களின் வீழ்ச்சியும்

இந்த அப்துல் பாஸித் புகாரி என்பவர் ஒரு வழிகெட்ட வஹாபியாவான். இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர். புதிதாக உருவாகி புகழ் பெற்று வருகிறார். இவர் பெரும்பாலும் JAQH  என்னும் வஹாபி அமைப்பை சேர்ந்தவர். இவரது கொள்கைகள், பயான்கள் அனைத்தும் இஸ்லாமிய கொள்கையான அஹ்லுஸ் சுன்னாஹ்விற்கு எதிரானவை.

இவர் பாமர முஸ்லிம் மக்களை கவர்வதற்கு கையாளும் தந்திரங்களாவன:
தொழுகை, அமல், மரணம், சுவர்க்கம், நரகம் போன்றவைகளை பற்றி உருக்கமாக பேசி மக்களை கவருதல், ஜியாரத் பற்றி தரக்குறைவாக பேசுவார், வஸீலா கேட்பது ஷிர்க் என்று கூறுவான், கூட்டு துஆ இஸ்லாத்தில் இல்லை என்பார் இது போல அவரது அத்தனை கொள்கைகளும் இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானவை.

அப்பாவி பாமர மக்கள் இந்த கொடியவனின் உள்ரங்கம் தெரியாமல் இவனது நளினமான பேச்சிலே மயங்கி இவன் பின்னால் சென்று கொண்டு இருக்கின்றார்கள்.

பொதுவாக இன்று மக்களில் பெரும்பாலானோர் அகீதா (கொள்கை) அறிவு இல்லாமல் உள்ளனர். இவரை போன்ற நளினமாக பேசுவோரின் பேச்சில் மயங்கி வழிகேட்டின் பக்கம் செல்கின்றனர். எனவே, அந்த பாமர மக்களுக்கு இவனை போன்ற வஹாபிகளின் முகத்திரையை கிழித்து உண்மை முகத்தை காட்ட வேண்டும்.

(PJ) பீ.ஜே என்று சொல்லக்கூடிய பெரிய ஷெய்த்தானுக்கு இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு செல்ல முடியாது ஏனெனில் அந்த நாடுகள் அவனை தடை செய்துள்ளது. ஆதலால் இன்று வஹாபிகள் தங்களின் வஹாபிஸ கொள்கையை இந்த நாடுகளுக்குள் கொண்டு செல்ல பயன்படுத்தும் ஆயுதம் தான் இந்த சின்ன பீஜே அல்லது சின்ன ஷெய்த்தான் என்று சொல்லக்கூடிய இந்த அப்துல் பாசித் புகாரி.

கடைசியாக, சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் ஒழுங்காக வாழ்ந்து வரும் மலேசிய மக்களையும் அவனது நச்சு பேச்சை கொண்டு வழி கெடுக்க அங்கும் காலடி வைத்துவிட்டார்.

மிக கவலைக்குரிய விடயம். மலேசியா காலா காலமாக நேரான இஸ்லாமிய கொள்கையான சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழும் நாடாகும். அந்த நாட்டிலுள்ள அப்பாவி மக்களின் கொள்கைகளையும் இந்த வஹாபிகள் மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

இதற்கு அந்தந்த நாடுகளில் மறைமுகமாக இயங்கும் வஹாபிஸ இயக்கங்களும், இந்த வஹாபிகளின் கொள்கைகளை அறியாத அப்பாவி சில இயக்கங்களும் இப்படிப்பட்டவர்களை வரவழைத்து தங்களின் பணத்தை வீண் விரயம் செய்கிறார்கள். வீண் விரயம் மட்டுமல்ல அது ஹராமும் கூட. இந்த விடயங்களில் அந்தந்த நாடுகளிலுள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், அரசாங்கமும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

எனவே, அன்பு சகோதரர்களே, தயவு செய்து உங்களால் முடிந்த அளவு இவரை பற்றி உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ, ஈமெயில் மூலமாகவோ தெரியப்படுத்துங்கள்.
நேர்வழியும் பிரயோசனமும் பெற ஏராளமான இஸ்லாமிய உலமாக்களின் பயான்கள் உள்ளன. அவற்றை கேட்டு நேர்வழி பெற செய்யுங்கள்.

www.worldtamilbayan.com இது உலக இஸ்லாமிய உலமாக்களின் பயான்கள் அடங்கிய உலகின் மிகப்பெரிய தமிழ் பயான் இணையத்தளம். இதில் 2000 க்கும் மேற்பட்ட பயான்கள் உள்ளன. இவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

உலக இஸ்லாமிய உலமாக்கள், அறிஞர்கள் பற்றி அறிந்துக்கொள்ள இந்த தளம் இருக்கிறது. www.islamicscholars.tk

எனவே இவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களின் ஈமானை பாதுக்காக்க முயற்சிப்போமாக. ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமின் சகோதரன் ஆவான், ஆதலால் தன் சகோதரனின் ஈமானை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.

நாம் அனைவரும் கடைசி வரை நேரான இஸ்லாமிய கொள்கையாகிய அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழ்ந்து எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம், ஸஹாபாக்கள், அவ்லியாக்கள் சென்ற சிராத்துல் முஸ்தகீம் வழியில் செல்வோமாக! ஆமீன்.

அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்கு தெளிவாக்குவதற்கும் உங்களுக்கு முன்னிருந்த (நல்ல) வர்களின் நேரான வழிகளில் உங்களை வழி நடத்துவதற்கும், உங்களுடைய தவ்பாவை ஏற்றுக்கொள்வதற்கும் விரும்புகிறான். அல் குர்ஆன் 4:26

வஹாபிகளின் சூழ்ச்சியும் முஸ்லிம்களின் வீழ்ச்சியும்
உலக முஸ்லிம்களின் கவனத்திற்கு!