السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 25 May 2015

அகில இலங்கை உலமா சபையிடம் பகிரங்க வேண்டுகோள்

அகில  இலங்கை உலமா  சபையிடம்   வேண்டுகோள்

இஸ்லாமிய “அகீதா” கொள்கையின் ஆணிவேர் “வஹ்தத்துல்வுஜுத்” என்ற ஞானமே!

”அகில இலங்கை ஸுபிஸ ஜம்இய்யதுல் உலமா” இலங்கைவாழ் முஸ்லிம் சகோதரசகோதரிகளுக்கு வழங்கும் “நஸீஹத்” அறிவுரை.

மெய்ப் பொருளானயாவுக்கும் கருவானநிகரற்றஇணைதுணையற்றஎவரையும் பெறாத,எவராலும் பெறப்படாதஉருவமற்றஎடைநிறம்அழிதல்மாறுபடுதல் முதலானசிருட்டிகளின் – படைப்புக்களின் – தன்மைகளை விட்டும் தூய்மையான “வுஜுத்” உள்ளமைஎன்பது ஒன்றே ஒன்றுதான்அது இரண்டுமல்ல பலதுமல்ல என்ற இறையியல் தத்துவமேவஹ்தத்துல்வுஜுத்” என்று சொல்லப்படுகிறது.

வஹ்தத்” என்றால் ஒன்று என்றும், “வுஜூத்” என்றால் உள்ளமை என்றும் பொருள் வரும்.இவ்விரண்டையும் சேர்த்து ஒரே வசனத்தில் சொல்வதாயின் “உள்ளமை ஒன்று” என்றுசொல்ல வேண்டும்உள்ளமை ஒன்று என்பதுதான் இஸ்லாமிய “அகீதா” ஆகும்அதுபலதென்று நம்புதல் “அகீதாவுக்கு முற்றிலும் முறனானதே. “ஹக்கு” வேறு கல்கு” வேறுஎன்று நம்புகிறவன் “வுஜூத்” என்பது பலதென்று சொல்லாமல் சொல்கிறவனேயாவான்.

இக்கொள்கையை உலக மக்களுக்கு  அறிமுகம் செய்து வைத்தவன் அல்லாஹ்வும்,அவனின் திருத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுமேயாவர்.