Home »
» ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அபுபக்கர் அல்பக்தாதி
ஈராக்கிய அல்கைதாவான ISIS இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல்பக்தாதி, சில வருடங்களுக்கு முன்னர்தான், அமெரிக்காவினால் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டிருந்தார். கடும்போக்கு இஸ்லாமியவாதிகளை, 'விடுதலைப் போராளிகள்' என்று அங்கீகரித்திருந்த அமெரிக்கா, ஜோர்டானில் இராணுவப் பயிற்சி வழங்கியது. ஈராக்கில் பல பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS எனும் கடும்போக்கு இஸ்லாமியவாத இயக்கம், சவூதியினால் உருவாக்கப்பட்ட வஹ்ஹாபிச மற்றும் சலபி சிந்தனையிலிருந்து தோன்றிய ஒரு தீவிரவாத இயக்கமாகும். ஈராக்கிய அல்கைதா என்று அழைக்கப் படும் ISIS இயக்கத்தின் தலைவர் யார்? அபு பக்கர் அல்பக்தாதி என்பது அவரது இயக்கப் பெயர். நிஜப் பெயர் : இப்ராஹீம் அவ்வத் அலி பத்ரி அல் சமாரி. இசிஸ் போராளிகள் மத்தியில் அவர் 'அல் பாக்தாதி' என்றே அழைக்கப் படுகிறார்.
seem More