السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 29 May 2015

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் 29-05-2015 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மியன்மாரில் முஸ்லிம்களுக்கெதிராக நடாத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்திலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உருப்பினருமான பஷீர் சேகுதாவூத் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

ஏறாவூர் முகைதீன் ஜும் ஆப்பள்ளிவாயல் முன்றலிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் ஏறாவூர் நகர சபை முன்றலில் முடிவுற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் நகர சபையின் முன்னால் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் பிரசன்னமாயிருந்தனர். இதன் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உருப்பினருமான பஷீர் சேகுதாவூத் கருத்துத் தெரிவிக்கையில்.
நல்லாற்சி எனும் எமது அரசே மியன்மார் அரசை உடனடியாக கண்டனம் செய்யவேண்டும். இந்த பிரச்சினை மியன்னாரில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு மாத்திரம் ஏற்பட்டுள்ள பிரச்சினையல்ல. உலகம் முழுவதிலும் வாழு;கின்ற எல்லா இனங்களிலும் சிறுபாண்மைகளாக வாழுகின்ற மக்களுகெதிரான பிரச்சினையாக அடையாளம் காணவேண்டுமெனவும் அவர் கூறினார்.


மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் 29-05-2015 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் 29-05-2015 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Abdul Majeed Mohamed Farsath's photo.