السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 29 May 2015

மலேசியக் காடுகளில் வங்கதேச அகதிகளின் பிணக்குவியல்!

தாய்லாந்து எல்லையை ஒட்டிய மலேசிய காடுகளில் மியன்மர் மற்றும் வங்க தேசத்தை சேர்ந்த அகதிகளின் பிணக்குவியல் கண்டுபிடிக்கபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியன்மர் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த ஏழை முஸ்லிம்கள் புதிய வாழ்க்கை தேடி அண்டை நாடான தாய்லாந்து மற்றும் மலேசியாவில் கடல் வழியாக சட்டவிரோதமாக குடியேறி வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் செலவு செய்து கடத்தல்காரர்களின் கள்ளத்தோணி வழியாக ஆபத்தான முறையில் கடலில் பயணம் செய்து முதலில் தாய்லாந்துக்கும் பின்னர் அங்கிருந்து மலேசியாவிலும் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.

கள்ளத்தோணியில் ஏற்றும் போது குறைந்த கட்டணத்தை பேசிவிட்டு பின்னர் தாய்லாந்து சென்றதும் அவர்களை தனிச்சிறையில் அடைத்து வைத்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது கடத்தல்காரர்களின் டெக்னிக் ஆகும். கூடுதல் கட்டணம் கிடைக்காத அகதிகளை அடித்துக் கொன்று காடுகளில் புதைத்து விடுவர். அண்மையில் தாய்லாந்து காடுகளில் இதுபோன்ற சட்டவிரோத முகாம்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
முகாம்களின் அருகில் ஏராளமான சவக்குழிகள் இருந்தன. அவற்றை தோண்டிபார்த்த போது அதில் மியன்மர் மற்றம் தாய்லாந்தை சேர்ந்த அகதிகள் எலும்புக்கூடுகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மலேசிய அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. தாய்லாந்து எல்லையை ஒட்டி மலேசியாவில் அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு கடந்த சில வாரங்களாக போலீசார் தீவிர சோதனை நடத்தினர். காட்டின் உள்புறம் பல தற்காலிக முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதன் அருகில் பிணங்களை புதைத்திருப்பதற்கான அறிகுறிகளும் காணப்பட்டது. மொத்தம் 28 முகாம்களும், 139 சவக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டு தடய அறிவியல் சோதனை விஞ்ஞானிகள் வரவழைக்கப்பட்டனர். நேற்று சடலங்களை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது. இன்னும் தீவிரமாக தேடினால் மேலும் பல சவக்குழிகளை கண்டுபிடிக்க முடியும் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிலரை கைது செய்திருப்பதாக மலேசிய உள்துறை அமைச்சர் அகமது ஹமிதி நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.