السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 8 June 2013

எறும்புகள் பேசும் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

குர் ஆனில் அல்லாஹ் ஒரு பெண் எறும்பு மற்ற எறும்புகளிடம் பேசுவது போல் ஒரு வசனம் வரும். காலம் காலமாக இஸ்லாமின் எதிரிகள் இதை வைத்து இஸ்லாத்தையும் குர் ஆன்னையும் விமர்சித்து வந்தனர். இப்பொழுது எறும்பு பேசும் என்று வின்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்
அல்லாஹு அக்பர்.

குர் ஆன்னின் வசனம்:

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று.

அப்போது அதன் (அவள்) சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார்.
[குர் ஆன் 27:18-19]


Wednesday 16 January 2013

நபி புகழ்



உலகெங்கும் தேடிப்பார் ..ஒருவருமில்லை !-எங்கள் ,உம்மி நபியின் சிபாத்தை போல யாருமே இல்லை !
ஏடெல்லாம் தேடிப்பார் எதிலுமே இல்லை !-எங்கள் ,ஏந்தல் நபியைத் தவிர இறைவன் யாருக்கும் தரவில்லை !
யாருக்கும் தரவில்லை ! (உலகெங்கும் )
கத்னா செய்து பிறந்தவர்கள் யாருமுண்டுமோ ...?புறக்கன்னாலே முதுகு புறம் பார்க்க முடியுமோ ...?எங்கள் உத்தமரின் உடலிலே கஸ்தூரி வாசமாம் ..!
தங்க மேனி உற்று நோக்கின் மனதின் நோவு நீங்குமாம் !
நோவு நீங்குமாம் (உலகெங்கும்)
குருவைதேடி சென்று கல்வி கற்றதில்லையே ..!--எங்கள் ,பெருமானின் நிழலும் தரையில் வீழ்வதில்லையே ,நபிகள் வழிநடந்தால் ,பாதசுவடு பதிவதில்லையே !-அவர்கள் ,கழித்த மல ஜலத்தை கண்ட மனிதரில்லையே !
மனிதரில்லையே (உலகெங்கும் )
கட்டவிழ்ந்து வெடி சிரிப்பும் சிரித்ததுமில்லை !
கெட்ட கொட்டாவி ,குரட்டையதும் விட்டதில்லையே !
வட்டமிடும் ஈ எறும்பும் தொட்டதுமில்லை !
கெட்ட பகைவரிடம் இவரை பூமி காட்டியதில்லை !
காட்டியதில்லை (உலகெங்கும் )
இறையைத்திரை இன்றி யாரும் கண்டதுண்டுமோ ?வேறு மறை எதுவும் மாறாமல் தொடர்ந்ததுண்டுமோ ?ஓரிடத்தில் இருந்து கண்கள் உலகை பார்க்குமாம் !--நாம் ,எங்கிருந்து அழைத் த போதும் செவியில் கேட்க்குமாம் !
செவியில் கேட்க்குமாம் ! (உலகெங்கும் )
விரல்கள் அசைவில் மதியை யாரும் பிளந்ததுண்டுமா ?விரைந்து சுழலும் கதிரவனை நிறுத்த முடியுமா ?மறைத்து வைத்த கல்லும் எவர்க்கும் சாட்சி சொல்லுமா ?மரக்கட்டை மிம்பரும் பிரிவால் அழுததுண்டுமா ?அழுததுண்டுமா ?( உலகெங்கும் )
கல்லால் அடித்தோரை கடிந்ததுண்டுமா ?கடும் சொல்லம்பு தொடுத்தோரை சபித்ததுண்டுமா ?பல்லுடைத்த பகைவர்களை பழித்ததுண்டுமா ?--நபி,பொறுமை அழகை வேறு எங்கும் பார்க்க முடியுமா ?பார்க்கமுடியுமா ?(உலகெங்கும் )
கார்மேகம் குடைபிடித்த மனிதர் உண்டுமா ?உயர் மேனி தொட்ட ஆடை நெருப்பில் வெந்ததுண்டுமா ?உயர்ந்த மலையும் யார்க்கும் சலாம் சொன்னதுண்டுமா ?உலர்ந்த மரமும் யாரைக் கண்டும் தளிர்த்ததுண்டுமா ?தளிர்த்ததுண்டுமா ??(உலகெங்கும் ),
ஈருலகின் ராஜர் எங்கள் நபியின் எளிமையை ..,-இந்த ,பாருலகில் யாரிடமும் பார்க்க முடியுமா ?இறையை நேரில் கண்ட நபியின் விழிகளைப் போலே ,-இந்த ,உலகில் வேறு விழிகளை நாம் பார்க்கமுடியுமா ?பார்க்கமுடியுமா (உலகெங்கும் )
தம் கைவிரலால் தாகம் தீர்த்த மாநபி தம்மை ,எம்மை போல மனிதர் என்று கூற இயலுமா ?உம்மி நபியின் இல்மை இந்த உலகம் அறியுமா ?
"
உம்மத்தே " என்று எந்த நபியும் அழுததுண்டுமா ?அழுததுண்டுமா ? (உலகெங்கும் )
துவக்கம் முதல் இறுதிவரை நுபுவத்தின் வெளிச்சம் !
ஞான சரீரம் முழுவதும் யாரும் அறியாத ரகசியம் !
நபியின் பொன்னுடலை காணும் அந்த புனித நாளிலே !
இந்த மன்னுடலை பிரியும் உயிரும் நபியின் தாளிலே !
கண்ணுறங்கிநும் கல்புறங்கா நபிகள் அல்லவா ?கபூர் ,ஹஷ்ர் வாழ்வின் துணை அதுவும் நீங்கள் அல்லவா ?காற்று இரட்சிக்கும் ஷபியில் முதிநிபீன் அல்லவா ?ஹாஜா முஹியித்தீன் கவியின் கருவும் நீங்கள் அல்லவா ?
நன்றிகள் ! மௌலா ,ஹாஜா முஹியித்தீன் !

மாநபியின் மகிமை கூறும் குர்ஆன் வல் ஹதீஸ்



நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களால் அமைக்கப்பட்ட தனி மேடையில் (மிம்பரில்) நின்று ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து கவிதை பாட, அதனைக் கேட்டுமகிழ்ந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் "அல்லாஹ்வின் தூதரை புகழும் காலமெல்லாம், ரூஹுல் குத்ஸியை (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்) அவர்களை கொண்டு ஹஸ்ஸானை நிச்சயமாக அல்லாஹ் வலிமைப்படுத்துவானாக! என்று கூறி ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வாழ்த்தினார்கள்.

ஸஹிஹுல் புகாரி

************************************************************************************************************************************

ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:

1)
இறைமறுப்பாளர்களே!) முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை  குறைவுபடுத்தி நீங்கள் கவிபாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடமுண்டு.

2)
நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.

3)
அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான்: சத்தியத்தைக் கூறுகிற ஒர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன் அதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
ஸஹிஹுல் முஸ்லிம் - 4545

************************************************************************************************************************************

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:

1)
எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள். வைகறைப்பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் இறைவேதத்தை ஒதுகிறார்கள்.

2)
குருட்டுத் தன்மையில் இருந்த எங்களுக்கு நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன.

3)
இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் ஆழ்ந்து கிடக்கும் போது நபியவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹுல் புகாரி - 1087

************************************************************************************************************************************

கஃப் இப்னு ஜுஹைர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:

1)
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்களென எனக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.

2)
மன்னிப்புத் தேடியவனாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நான் வந்தேன். அம்மன்னிப்பு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் ஒப்புகொள்ளப்பட்டது.

3)
திண்ணமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும்,இறைவனின் வாட்களில் உருவியவாளாகவும் உள்ளார்கள்.

ஆஸிம் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
ஹாகிம் - 6558

************************************************************************************************************************************

மஸ்ஜிதுன் நபவியில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களும் ஸஹாபா பெருமக்களும் குழுமியிருந்த திருச்சபையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை ஸுஆத் என்ற அழகிய மங்கைக்கு ஒப்பிட்டு கஹ்ப் பின் சுஹைர் ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபி கவிஞர் பாடிய போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மகிழ்ச்சியால் தனது மேனியில் இருந்த போர்வையை எடுத்து அந்த ஸஹாபியின் மேல் போர்த்தி அத்துடன் 100 ஓட்டகைகளையும் அன்பளிப்பாக வழங்கி கௌரவித்தார்கள்.

ஹாகிம் - 3-578, ரத்துள் முஹ்தார் - 1-47, அகீததுஸ் சுன்னா 318

************************************************************************************************************************************

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
திடமாக எனக்கு பல பெயர்கள் உள்ளன, நான் "முஹம்மத்" (புகழபடுபவன்) , நான் "அஹ்மத்" (அல்லாஹ்வினால் அதிகம் புகழபட்டவன்), நான் "மாஹி" (குப்'ரை அழிப்பவன்). நான் "ஹாஷிர்" (எனக்கு பின்னால் என் வழி தொடரும் சமுதாயம் கொண்ட இருப்பவன்), நான் "ஆகிப்" (எனக்கு பின்னால் எந்த நபியும் இல்லாது இருப்பவன்).

ஜுபைர் பின் முத்'இம் ரழியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் புகாரிஸஹிஹுல் முஸ்லிம் - 2849, திர்மிதி, அஹ்மத்

************************************************************************************************************************************

கஃபு இப்னு சுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் இறைதூதர்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே  புகழ்ந்து  படித்தார்கள்.

இப்னு ஜதஆன் ரலியல்லாஹு அன்ஹு
ஹாகிம் 6555

************************************************************************************************************************************

பள்ளிவாசலில் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்  கவிபாடிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கடைக்கண் பார்வையால் பார்த்தார்கள். அப்போது ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்: உங்களை விட சிறந்தவரான இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இருந்த போதே இப்பள்ளிவாசலில் கவி பாடியுள்ளேன்.

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹுல் புகாரீ - 2973, ஸஹிஹுல் முஸ்லிம் - 4539

************************************************************************************************************************************

நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களிடம் திங்கட்கிழமை நாள் நோன்பு நோற்பதன் காரணம் பற்றி வினவப்பட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன். மேலும் அன்றுதான் என் மீது வஹீ இறக்கப்பட்டது.

ஸஹிஹுல்  முஸ்லிம் 1162 - 198, முஸ்னத் அஹ்மத் 5- 299, மிஷ்காத் 2045

************************************************************************************************************************************

ஸுவைபா அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்தபோது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம் (மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும் நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது என்று கூறினார்.

உர்வா (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹீஹுல் புகாரி - 5101

************************************************************************************************************************************

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பிறந்த அன்று அவர்களின் தாயார் ஆமினா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிலிருந்து புறப்பட்ட பேரொளியால் சிரியா நகர் கோட்டைகள் எல்லாம் பிரகாசித்தன.

மிஷ்காத் - 5759

************************************************************************************************************************************

நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் ரபீ உல் அவ்வல் மாதம் 12 ம் பிறையில் பிறந்தார்கள்.

முஹம்மது இப்னு இஸ்ஹாக் (ரலியல்லாஹு அன்ஹு)
ஹாக்கிம் - 2-603, ஸீரத் இப்ன் ஹிஷாம் - 1-211