السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 30 June 2016

ரமழான் மாதம் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏன் லீவு

ரமழான் மாதம் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏன் லீவு கொடுக்காங்க மோதினார்?
டியூசன் கிளாஸ் வைக்கிறதுக்கு சார்?
மாணவர்களும் ஆசிரியர்களும் freeya இருந்து அமல்கள் செய்வதற்கு இல்லையா?
அமல்கிமல்லெல்லாம் தெரியா ஸ்கூல் இல்லை டியூஷன் வச்சு லம்பா உழைக்காங்க போல,

ரமழான் அருளப்பட்டதன் நோக்கம் ஏழைகளின் பசியினை அறிவதற்கும் நல்லமல்களை நாம் பெருக்கிக் கொள்வதற்குமே ஆகும்.
அந்த வகையிலேயே நமது நாடு ஒரு பௌத்தநாடாக இருந்தும் கூட நமது மார்க்க கடமையினை செய்வதற்காக ரமழான் மாதத்தில் விஷேட விடுமுறையினை தந்து நம்மை நண்மையின் பக்கம் விரைந்தோட அனுமதியை வழங்கி நிற்கிறது.
நிலமை இவ்வாறிருக்க நம் முஸ்லிம் ஊர்களில் நடப்பது என்ன?
காலை 6.00 - 1.00 மணிவரையும் அதன்பின் 3.00 - 5:30 மணிவரையும் பாடசாலைகளிலும் , தனியார் கல்வி நிறுவனங்களிலும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறுகின்றன.
(டியூசன் குடுக்கிற sir மாரே உங்களுவளுக்கு நித்திரைகித்திரை டயட்கியட் வாரலியா வாப்பா)
குறைந்தது 2 மணித்தியாலங்களாவது பாடத்தினை சந்திக்க வேண்டியுள்ளது மாணவர்களின் நிலை.
அத்தோடு இவை அனைத்தும் மாணவர்களின் எதிர்கால நல்நோக்கம் கருதி அமைகின்றதா என்று நோக்கினால் பதில் இல்லை என்றே சொல்லவேண்டியுள்ளது.
பாடசாலை தற்போது தனியார் மயப்படுத்தப்பட்ட நிலையினை ஒத்ததாகவே காணப்படுகிறது.
பணம் இல்லாதவனிற்கு படிப்பில்லை என்ற நிலையிலேயே அரச பாடசாலைகளின் இயக்கமும் இருப்பதை பார்க்ககையில் வேதனை மட்டுமே எஞ்சுகிறது.
இம்மேலதிக வகுப்புகளினூடாக மாணவர்கள் சிலர் நோன்பை தவறவிட்ட வரலாறும் இல்லாமலில்லை.
தவிர்க்க முடியாத காரணங்களால் ரமழானில் நோன்பை விட்டு அதை பின்னர் பிடித்தாலும் இம்மாதத்தில் பிடிப்பதற்கு ஈடாகுமா?
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக கூச்சலிடும் நாம் அரசபாடசாலைகள் விடயத்தில் பாராமுகமாகவே இருந்து விடுகின்றோம்.
உண்மையில் மாணவர்களின் கல்வியில் ஆர்வமிக்க ஆசான்கள் எவராவது வந்து தைரியமாக சத்தியமிட்டு சொல்லட்டும் நான் மேலதிக வகுப்பு செய்வது பணத்திற்காக அல்ல என்று.
சிலர் விதிவிலக்காக இருந்தாலும் பலரின் நோக்கமே பணம்தான்.
இங்கு நான் சொல்லவருவது,
அரசாங்கம் விடுமுறை தரும் நோக்கத்தையும் , நோன்பின் மகிமையையும் கருத்திற்கொண்டு ரமழான் மாதத்தில் மாணவர்களை நண்மை செய்யத்தூண்டுவதோடு நீங்களும் நண்மையின் பக்கம் விரையுங்கள்.
அல்லாத பட்சத்தில் ரமழான் மாதத்தை பாழாக்கிய பாவத்திற்கு நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் மறுமையில் பதில் கூறவேண்டிய நிலை ஏற்படும்.
நானும் ஒரு ஆசிரியனாக கடந்த ஓராண்டாக தொழில் புரிபவன் என்ற வகையில் இவ்வாறான காசுக்காக நோன்பு காலம் வரையரையின்றி டியூசன் கொடுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்படி டியூசன் வைக்காட்டி சிலபஸ் முடிக்க முடியாது என்று இவ்வாறான ஆசிரியர்கள் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறானது.
சரி என்றாலும் அதை free யாக செய்யலாமே.
அடுத்து சில ஆசிரியர்கள் ஒரு மணித்தியாலம் கிளாஸ் வைத்தா அதில் முக்கால் மணிநேரம் சும்மா கதையளந்தே நேரத்தை வீணாக்குவது. அவங்கட அருமை பெருமை அடுத்தவன்ட லொட்டு லுசுக்ககுகள் பற்றியே கதைப்பது.
இதில் டபுள் மீனிங் கத வேற.
ஆண் + பெண் பிள்ளைகளை ஒன்றாக ஒரே வகுப்பில் வைத்திருந்து அவர்களுக்குள் சபலத்தை தூண்டுவது.
எனவே நோன்பு காலம் காசு தேவைப்பட்டா கேட்டு வாங்கலாம்.
இப்படி டியூஷன் வைத்து சீரழிக்க வேண்டாம பணிவாய் வேண்டுகிறேன்.

Wednesday 22 June 2016

ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!

ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!

செல்பியும் செல்போனும் பேஸ்புக்கும் வந்ததில இருந்து இந்த வருசம் வரை நம்ம சமுதாயம் உம்ரா வித் செல்பி, ஹஜ் வித் செல்பின்னு ஹரம் ஷரீபில் நின்னு கஃபா பின்னணில செல்பி நன்மைகளை (?) வாரி குவிச்சிட்டு இருந்தது.
இஹ்ராம் கட்டுனதில இருந்து, கால் டாக்சில ஏறுனது முதல் ஏரோப்ளேன்ல ஏறி உட்கார்றதுன்னு ஒரே அப்டேட் அலப்பறைதான் போங்க.
இப்ப முத்திப் போச்சோ இல்ல முன்னேறிப் போச்சோ தெரியல,
இந்த வருசம் செல்பி இப்தார் ஆரம்பிச்சுட்டாங்க.
பள்ளிவாசலோ, பக்கத்துவீடோ, தனது வீடோ எங்க நோம்பு திறந்தாலும் போட்டோ தான்.
அவங்க நோம்பு திறக்க யாராவது ஸ்பான்சர் பண்ணியிருந்தாலோ, அல்லது பள்ளி வாசல்ல பக்கத்துல யாராவது இருந்தாலோ, ஆறு அம்பதுக்கு போட்டோ அப்லோடு ஆகியிருக்கும்.
கூடவே, கூட இருந்த இன்னாருக்கு இன்னத செய் அல்லாஹ்னு துஆவும்.
அருமை சமுதாயமே! ஆண்டவன் பேஸ்புக்ல அக்கவுண்ட் வச்சி, அப்பப்ப ஓபன் பண்ணி பாத்து, அதுல வர்ர துஆக்களை அக்செப்ட் பண்றான்னு நெனச்சீங்களா?
அப்டீல்லாம் இல்லைங்க; நோம்பு துறக்குற நேரத்துல கைல மொபைலை நோண்டாம, கையேந்தி வேண்டுங்க அவன்கிட்ட.
அந்த நேரத்து துஆவை அவன் கபூலாக்குவான்.
அவனுக்காக நோம்பு வச்சு, நாடி நரம்பெல்லாம் தளர்ந்திருக்கையில் கேட்கும் துஆவை அவன் மறுப்பானா?
அதை விட்டுட்டு, அஞ்சு பைசாக்கு உபயேகமில்லாத லைக்குக்கு ஆசப்பட்டு, மறுமை லைபை இழந்திடாதீங்க.
ஆமாங்க. லைக்கு என்ன செய்யும்? மீசானில் நன்மையின் தட்டை கனக்கச் செய்யுமா?
அர்ஷில் நிழல் தருமா?
ஹவ்ளுல் கவ்சரில் ஒருவாய் தண்ணி தருமா?
ஆனால் இப்தார் நேரத்தினதும் இத்யாதி நேரத்தினதும் பிரார்தனைகள் இதையெல்லாம் பெற்றுத்தரும் இன்ஷா அல்லாஹ்.
அல்லாம இப்டியே போனா அடுத்தவாரம் போத்தீஸுக்கு விளம்பரமா அங்க இருக்குற இப்தார் பண்ற போட்டோவா போட்டுத் தள்ளுவாங்க.
ஏன்னா ரமளான் கடைசிப்பத்து ஷாப்பிங் பத்து ஆச்சே!
ஆனா ஒன்னு!
நன்மையான காரியங்களை செய்றதில் மட்டும் ஆதாரம் இல்ல, அவசியம் இல்லனைு அடிச்சுக்குற சமுதாயம்
தப்பான விசயத்துல மட்டும் எந்த கருத்து வேறுபாடும் இல்லாம ஒற்றுமையா நாசமா போகுது.
ஏற்கனவே துஆவின் சிறந்த நேரமான ஸஹரில் சமுதாயத்தை டிவி முன்னாடி அடிமையாக்கியாச்சு.
இந்த வருசம் இப்தார்ல இப்டி ஒரு பிரச்னை.
இப்டி துஆவின் நேரங்களை எல்லாம் தொலைச்சுகிட்டு, இம்மை, மறுமையை நஷ்டமாக்கிட்டு இருந்தா எப்புடி?
நமக்காக அல்லாஹ் இந்த மாதத்தில் ஷைத்தானை விலங்கிடுறான்.
அட, நம்மால இந்த பேஸ்புக்குக்கு ஒரு கடிவாளம் போட்டு கண்ட்ரோலா யூஸ் பண்ண முடியாதா?
பேஸ்புக்க நம்ம நன்மைக்கும் பயன்படுத்த முடியும்; நரகத்துக்கும் பயன்படுத்த முடியும்.
அமிர்தமானாலும் அளவா பயன்படுத்தனுமாம். இதெல்லாம் யூதன் தந்த நஞ்சு. அப்ப இன்னும் கவனமா இருக்க வேணாமா?
நா சொன்னது புடிக்கலைனா திட்டாதீங்க.
புடிச்சிருந்தா நல்ல நேரங்களில் எனக்காகவும் துஆ செய்ங்க.
அன்புடன் ஜாபிர் பாக்கவி.

Friday 3 June 2016

ரமழானை வரவேற்போம்

அஸ்ஸலாமு அலைக்கும்
ரமழானை வரவேற்பேம்
இன்று 03/06/2016  ஏறாவூர் பெண்சந்தை வீதியில் அஹ்லுஸ்ஸ_ன்னத் வல் ஜமாஅத் உலமாக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட றமாலானை வரவேற்போம் என்ற தோரணையில் மார்க்க சொற்பொழிவு மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

இவ்விழாவிற்கு கலாநிதி சங்கைக்குரிய மௌலவீ அல் ஆலிமுல் பாழில் முர்ஸலீன் அஸ்ஹரி அவர்களும் சங்கைக்குரிய மௌலவீ தென்கிழக்கு பல்கலைகழகத்தின் விரிவுரையாலர் ஹில்மி கௌதி அவர்களும் பிரதம பேச்சாலர்களாக அட்டாலைச்சேனை சங்கைக்குரிய மௌலவீ ஏ.எல் பதூர்தீன் சர்கி அவர்களும் ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபுக்கல்லூரியின் சிரேஷ்ட்ட விரிவுரையாளர்  சங்கைக்குரிய மௌலவீ நிப்ராஸ் மன்பயி தகாபீ அவர்களும் ஏறாவூர் முன்னால் உலமா சபைத் தலைவர் முஹ்யத்தீன் ஜூம்ஆ பள்ளிவாயலின் பிரதப கதீப் காழி நீதிபதி சங்கைகுரிய மௌலவீ ஏ.சி அப்துல் மஜீத் மிஸ்பாஹி அவர்களும் புத்தலம் அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யாஹ் அரபுக்கல்லூரியன் அதிபர் சங்கைக்குரிய மௌலவீ இப்றாஹீம் அஸீஸி அவர்களும்  கலந்து கலந்து விஷேட பயான் நிகழ்த்தினார்கள்.

 ரமழானை வரவேற்போம்


 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்

 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்


 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்

 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்

 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்

 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்

 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்

 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்

 ரமழானை வரவேற்போம்


 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்