السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 21 September 2015

இஸ்லாத்தின் பார்வையில் ஓதிப்பார்த்தல் ஜின் வைத்தியம் செய்தல் கூடுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
சமீபத்தில் வசந்தம் டிவியில்  Mugamoodi 20-09-2015 ஷரயி என்ற மௌலவீ அவர்கள் இஸ்லாத்தில் ஜின் வைத்தியம் இல்லை. என்று சில பொய்யான தகளவள்களைக் கொண்டும் அறிவியல் றீதியாகவும் சில பொய்யர்கள் செய்தை காட்டி குர்ஆனில் ஹதீஸில் சொல்லப்பட்டதை மறுக்கின்றார். மக்களுக்கு விளங்கப்படுத்த முட்பட்டார்….

அவரிடம் சில கேள்விகள் ஹதீஸ்களின் ஜின் சம்பந்தமாக வந்தவைகள் பொய்யா?  சில பொய்யர்கள் செய்தை காட்டி குர்ஆனில் ஹதீஸில் சொல்லப்பட்டதை மறுக்கின்றார்.
தொடர்ந்தும் பார்க்கவும்



  1. அல் குர்ஆன் வசனங்கின் மூலம் ஜின்களை விரட்டும் காட்சி 02 
  2. அல் குர்ஆன் வசனங்கின் மூலம் ஜின்களை விரட்டும் காட்சி 03


யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது யாராவது ஷெய்த்தான், பேய், பிசாசு, ஜின் முதலானவற்றைக் கண்டோ அல்லது இனம் தெரியாத பயங்கர சத்தங்களைக் கேட்டோ பயந்தால் அதற்காக அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திரு நாமங்கள் கொண்டும் ஓதி ஊதிப் பார்த்தல், தண்ணீர் ஓதிக் கொடுத்தல், தாயத் – இஸ்ம் கட்டுதல் போன்றவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையாகும் .
 அல்லாஹுதஆலா அல்குர்ஆனில்
{وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين }
(الإسراء-82)
(அல்குர்ஆனில் நாம் விசுவாசிகளுக்கு அருளையும் நோய் நிவாரணத்தையும் இறக்கிவைத்துள்ளோம்) என்று கூறியுள்ளான். இது திருமறையில் நோய்களுக்கான மருந்துகள் உள்ளன என்பதை உணர்த்துகின்றது.
இந்த வசனத்திற்கு விரிவுரை எழுதும் இமாம் பக்றுத்தீன் றாஸீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் “அல்குர்ஆன் என்பது உடல் மற்றும் ஆன்மாவுடன் தொடர்புடைய நோய்களுக்கு மருந்தாகும். அதனை ஓதுவதன் மூலம் நோய்களை தடுக்க முடியும்” என்று கூறுகின்றார்கள் (தப்ஸீர் றாஸீ-பகுதி-21,பக்கம்24)

 ஓதிப் பார்த்தல் தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள்
 5686 صحيح مسلم
ـ حدّثني أَبُو الطَّاهِرِ. أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ. أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ عَبْدِ الرَّحْمَـنِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الأَشْجَعِيِّ، قَالَ: كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ. فَقُلْنَا : يَا رَسُولَ اللّهِ كَيْفَ تَرَى فِي ذلِكَ؟ فَقَالَ: «اعْرِضُوا علَيَّ رُقَاكُمْ. لاَ بَأْسَ بِالرُّقَى مَا لَمْ يَكُنْ فِيهِ شِرْكٌ
நாங்கள் ஜாஹிலிய்யஹ் காலப்பகுதியில் ஓதிப்பார்துக்கொண்டிருந்தோம். இது பற்றி நபி ﷺ அவர்களிடம் கேட்டோம். அதற்கவர்கள் என்னிம் உங்களின் மந்திரத்தை காட்டுங்கள். ஷிர்க் (இணைவைத்தல்) இல்லாத மந்திரத்தில் பிரச்சினை இல்லை என்று கூறினார்கள்.
ஆதாரம் – முஸ்லிம், ஹதீஸ் இலக்கம் – 5686
அறிவிப்பு – அவ்ப் இப்னு மாலிக் அல் அஷ்ஜஈ (ரழியல்லாஹு அன்ஹு)
 صحيح البخاري3306
ـ حدّثنا عثمانُ بن أبي شَيبةَ حدَّثنا جريرٌ عن منصورٍ عنِ المِنهالِ عن سعيد بنِ جُبَيرٍ عن ابنِ عبّاسٍ رضيَ الله عنهما قال: «كان النبيُّ صلى الله عليه وسلّم يُعوِّذُ الحسنَ والحسينَ ويقول: إن أباكما كان يَعوِّذُ بها إسماعيلَ وإسحاق: أعوذُ بكلماتِ الله التامَّة، من كلِّ شيطانٍ وهامَّة، ومن كل عينٍ لامَّة».
நபி ﷺ அவர்கள் ஹஸன் (ரழியல்லாஹு அன்ஹு), (ஹூஸைன் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியாருக்கு பாதுகாப்புத் தேடுவார்கள். உங்களின் தந்தை (இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்), இஸ்ஹாக் (அலைஹிஸ்ஸலாம்) ஆகியோருக்கு பின்வரும் வசனம் மூலம் பாதுகாப்புத்தேடுவார்கள்
أعوذُ بكلماتِ الله التامَّة، من كلِّ شيطانٍ وهامَّة، ومن كل عين لامَّة
ٍஆதாரம் – ஸஹீஹூல் புஹாரீ, ஹதீஸ் இலக்கம் – (3306)
அறிவிப்பு – இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு)
 5735- صحيح البخاري
ـ حدّثني إبراهيمُ بن موسى أخبرنا هِشامٌ عن مَعْمَر عن الزُّهريِّ عن عروةَ عن عائشةَ رضيَ الله عنها: «أنَّ النبيَّ صلى الله عليه وسلّم كان يَنْفِثُ على نفسه ـ في المرَضِ الذي مات فيه ـ بالمعوذات، فلما ثقلَ كنتُ أنفثُ عليه بهنَّ، وأمسحُ بيده نفسهِ لبَرَكتها».
فسألتُ الزُّهريَّ: كيفَ يَنفثُ؟ قال: كان يَنفثُ على يديه ثمَّ يمسحُ بهما وَجهه..
நபி ﷺ அவர்கள் தங்களின் மரண வருத்தத்தின்போது முஅவ்விதாத் (குல் அஊது பிறப்பில் பலக், குல் அஊது பிறப்பின் நாஸ்) ஆகிய சூராக்களைக் கொண்டு தமக்கு தாமாகவே ஊதினார்கள். அவர்களுக்கு நோய் கடுமையான போது நான் அவைகளைக் கொண்டு ஊதினேன். அவர்களின் உடலை பரக்கத்துக்காக அவர்களின் கையினால் தடவினேன்.
ஆதாரம் – ஸஹீஹூல் புஹாரீ, ஹதீஸ் இலக்கம் – (5735)
அறிவிப்பு – ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
 5654 صحيح مسلم
ـ حدّثنا بِشْرُ بْنُ هِلاَلٍ الصَّوَّافُ. حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ جِبْرِيلَ أَتَى النَّبِيَّ فَقَالَ: يَا مُحَمَّدُ اشْتَكَيْتَ؟ فَقَالَ: «نَعَمْ» قَالَ: بِاسْمِ اللّهِ أَرْقِيكَ . مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ . مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللّهُ يَشْفِيكَ. بِاسْمِ اللّهِ أَرْقِيكَ
ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நபி ﷺ அவர்களிடம் வந்து முஹம்மதே! தங்களுக்கு நோய் ஏற்பட்டுவிட்டதா என்று கேட்டார்கள். அதற்கு நபி ﷺ அவர்கள் ஆம் என்றார்கள். அப்போது ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பின்வருமாறு ஓதினார்கள்
: بِاسْمِ اللّهِ أَرْقِيكَ . مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ . مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللّهُ يَشْفِيكَ. بِاسْمِ اللّهِ أَرْقِيكَ
ஆதாரம் – முஸ்லிம், ஹதீஸ் இலக்கம் – 5654,
அறிவிப்பு – அபூஸஈத் (ரழியல்லாஹு அன்ஹு)
 5742 صحيح البخاري
ـ حدّثنا مُسدَّدٌ حدَّثنا عبدُ الوارثِ عن عبد العزيز قال: «دخلتُ أنا وثابتٌ على أنسِ بن مالك، فقال ثابتٌ: ياأبا حَمزة اشتَكيتُ. فقال أنسٌ: ألا أرقيكَ برُقيةِ رسولِ الله صلى الله عليه وسلّم؟ قال: بلى. قال: اللهمَّ ربَّ الناس، مُذهبَ الباس ، اشْفِ أنتَ الشافي، لا شافيَ إلاّ أنت، شِفاءً لا يُغادِرُ سَقَماً».
நானும் தாபித் இப்னு அஸ்லம் அல்புனானீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் சென்றோம். தாபித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் 'அபூ ஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன்' என்று சொல்ல, அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு), 'இறைத்தூதர் ﷺ அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?' என்று கேட்டார்கள். தாபித் (ரழியல்லாஹு அன்ஹு), 'சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்)' என்று சொல்ல, அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு), 'அல்லாஹும்ம றப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்பி அன்த்தஷ் ஷாபீ, லா ஷாபிய இல்லா அன்த்த, ஷிபா அன்லா யுகாதிரு சகமன்' என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக.)
ஆதாரம் – ஸஹீஹூல் புஹாரீ, ஹதீஸ் இலக்கம் – (5742)
அறிவிப்பு – அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப் (ரழியல்லாஹு அன்ஹு)
 (2242) صحيح البخاري
ـ ـ حدّثنا أبو النُّعمانِ حدَّثَنا أبو عَوانةَ عن أبي بِشْرٍ عن أبي المتوكلِ عن أبي سعيدٍ رضيَ اللهُ عنه قال: «انطَلَقَ نَفرٌ من أصحابِ النبيِّ صلى الله عليه وسلّم في سَفْرةٍ سافَروها، حتّى نزَلوا على حيٍّ من أحياءِ العرب فاستَضافوهم فأبَوا أن يُضيِّفوهم، فلُدِغَ سَيِّدُ ذلكَ الحيِّ، فسَعَوا لهُ بكلِّ شيءٍ، لايَنفعُهُ شيء. فقال بعضهم: لو أتيتُم هؤُلاءِ الرَّهطَ الذينَ نزَلوا لعلَّهُ أن يكونَ عندَ بعضهم شيء. فأتوْهم فقالوا: يا أيُّها الرَّهطُ إِنَّ سيِّدَنا لُدِغَ ، وسَعينا لهُ بكلّ شيءٍ لا يَنفعُه، فهل عندَ أحدٍ منكم مِن شيء؟ فقال بعضُهم: نعم واللهِ، إني لأرقِي، ولكِنْ واللهِ لقدِ استَضَفْناكم فلم تُضيِّفونا، فما أنا بِراق لكم حتّى تَجعلوا لنا جُعلاً. فصالَحوهم على قَطيعٍ منَ الغنم. فانطلقَ يَتفِلُ عليهِ ويقرأُ: {الْحَمْدُ للَّهِ رَبِّ الْعَالَمِينَ} فكأنَّما نُشِطَ من عِقال، فانطَلَقَ يَمشي وما بهِ قَلبَة. قال: فأوفوهم جُعلَهمُ الذي صالَحوهم عليه. فقال بعضُهم: اقسِموا. فقال الذي رَقَى: لا تَفْعلوا حتّى نأتيَ النبيَّ صلى الله عليه وسلّم فنذكُرَ لهُ الذي كان فننظُرَ ما يأمُرنا، فقدِموا على رسولِ الله صلى الله عليه وسلّم فذَكروا له، فقال: وما يُدريكَ أنها رُقْية، ثمَّ قال: قد أَصبتم، اقسِموا واضربوا لي معكم سَهماً، فضَحِكَ النبيُّ صلى الله عليه وسلّم». قال أبو عبدِ اللهِ وقال شعبةُ: حدَّثَنا أبو بِشْرٍ سمعتُ أبا المتوكِّل.. بهذا
நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், 'இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!" என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து 'கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?' என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!" என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.." என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். 'இதைப் பங்கு வையுங்கள்!" என்று ஒருவர் கேட்டபோது, 'நபி ﷺ அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!" என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி ﷺ அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி ﷺ அவர்கள் 'அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டுவிட்டு, 'நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.
ஆதாரம் – ஸஹீஹூல் புஹாரீ, ஹதீஸ் இலக்கம் – (2242)
அறிவிப்பு – அபூ ஸயீத் (ரழியல்லாஹு அன்ஹு)
 5739 صحيح البخاري
ـ حدّثنا محمدُ بن خالد حدثنا محمدُ بن وَهبِ بن عطية الدمشقي حدثنا محمد بن حرب حدثنا محمدُ بن الوليد الزبيدُّي أخبرَنا الزُّهريُّ عن عروةَ بن الزبيرِ عن زينبَ بنت أبي سلمةَ «عن أم سلمة رضي الله عنها أنَّ النبيَّ صلى الله عليه وسلّم رأى في بيتها جاريةً في وَجهها سَفْعةٌ فقال: اسَترْقوا لها فإنَّ بها النَّظرة ».
وقال عُقيل عن الزُّهري أخبرَني عروةُ عن النبي صلى الله عليه وسلّم: تابَعهُ عبد الله بن سالم عن الزبيدي.
நபி ﷺ அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி ﷺ அவர்கள், 'இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறுபட்டிருக்கிறது' என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸுபைதி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களிடமிருந்தும் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக இதே ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் – ஸஹீஹூல் புஹாரீ, ஹதீஸ் இலக்கம் – (5739)
அறிவிப்பு – உம்மு ஸலமா (ரழியல்லாஹு அன்ஹா)
 3893 سنن أبي داوود (3662) سنن الترمذي
ـ حدثنا عَلِيُّ بنُ حُجْرٍ، حدثنا إسْمَاعِيلُ بنُ عَيَّاشٍ عَن مُحمَّدِ بنِ إسْحَاقَ عَن عَمْرِو بنِ شُعَيْبٍ عَن أَبيهِ عَن جَدِّهِ أَنَّ رَسُولَ الله قالَ: «إذَا فَزِعَ أَحَدُكُمْ في النَّوْمِ فَلْيَقُلْ أعُوذُ بِكَلِمَاتِ الله التَّامات مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وشَرِّ عِبَادِهِ، ومِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وأَنْ يَحْضُرُونِ فإِنّهَا لَنْ تَضُرَّهُ قال: وكانَ عَبْدُ الله بنُ عَمْرٍو يُعلمهامَنْ بَلَغَ مِنْ وَلَدِهِ، وَمَنْ لَمْ يَبْلُغْ مِنْهُمْ كَتَبَهَا في صَك ثُمَّ عَلّقَهَا في عُنُقِهِ»
நபி ﷺ அவர்கள் சொன்னார்கள் உங்களில் ஒருவர் தூக்கத்தினபோது திடுக்கமடைந்தால் அவர்
أعُوذُ بِكَلِمَاتِ الله التَّامات مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وشَرِّ عِبَادِهِ، ومِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وأَنْ يَحْضُرُونِ
என்று சொல்லவும் நிச்சயமாக அது எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது பிள்ளைகளில் வயது வந்தவர்களுக்கு இதை கற்றுக்கொடுத்தார்கள். சிறுவர்களுக்கு இதை எழுதி தொங்கவிட்டார்கள்.
ஆதாரம் – திர்மிதி - ஹதீஸ் இலக்கம் – (3662),
ஆதாரம் -அபூதாவூத் - ஹதீஸ் இலக்கம் – (3893)
அறிவிப்பு - அம்று இப்னு சுஐப் (ரழியல்லாஹு அன்ஹு)
 (3421) سنن أبي داوود
ـ حدثنا عُبَيْدُالله بنُ مُعَاذٍ أخبرنا أبِي أخبرنا شُعْبَةُ عن عَبْدِ الله بنِ أبي السَّفَرِ عن الشَّعْبِيِّ عن خَارِجَةَ بنِ الصَّلْتِ عن عَمِّهِ ،: « أنَّهُ مَرَّ بِقَوْمٍ فَأتَوْهُ فَقَالُوا: إنَّكَ جِئْتَ مِنْ عِنْدِ هذَا الرَّجُلِ بِخَيْرٍ. فَارْقِ لَنَا هذَا الرَّجُلَ فَأَتَوْهُ بِرَجُلٍ مَعْتُوهٍ في الْقُيُودِ. فَرَقَاهُ بِأُمِّ الْقُرْآنِ ثِلاِثَةِ أيَّامٍ غُدْوَةً وَعَشِيَّةً وَكُلَّمَا خَتَمَهَا جَمَعَ بُزَاقَهُ ، ثُمَّ تَفَلَ، فَكَأنَّمَا أُنْشِطَ مِنْ عِقَالٍ، فَأعْطُوْهُ شَيْئاً، فَأتَى النَّبيَّ صلى الله عليه وسلّم، فَذَكَرَهُ لَهُ، فَقالَ رَسُولُ الله صلى الله عليه وسلّم: كُلْ فَلَعَمْرِي لَمَنْ أكَلَ بِرُقْيَةِ بَاطِلٍ، لَقَدْ أكَلْتَ بِرُقْيَةِ حَقَ
ஹாரிஜா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் சாச்சா அவர்கள் ஒரு கூட்டத்தின் பக்கம் சென்றபோது அந்த கூட்டத்தவர்கள் அவரிடம் திடுக்கமடைந்த ஒரு மனிதனைக் கொண்டு வந்து ஒதிப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டனர். அந்த மனிதனுக்கு அவர் மூன்று நாட்கள் சூறதுல் பாத்திஹாவைக் கொண்டு காலையும் மாலையும் ஒதிப்பார்த்தார். ஒதி முடிந்ததும் உமிழ் நீரை திரட்டி துப்பினார். அப்போது அந்த மனிதர் கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் எழுந்தார். அந்த கூட்டத்தினர் அவருக்கு அன்பளிப்பு வழங்கினர். அதை நபி ﷺ அவர்களிடம் வந்து கூறிய போது, "என் ஆயுளின் மீது சத்தியமாக நீ அதை சாப்பிடு. எத்தனையோ பேர் அசத்தியமான ஓதல்கொண்டு சாப்பிடுகின்றனர். நீ சத்தியமான ஓதல்கொண்டு சாப்பிடுகிறாய்" என்று கூறினார்கள்.
ஆதாரம் – அபூதாவூத், ஹதீஸ் இலக்கம் – (3421)
அறிவிப்பு - ஹாரிஜா இப்னு ஸல்த் (ரழியல்லாஹு அன்ஹு)
(3885) سنن أبي داوود
ـ حدثنا أحْمَدُ بنُ صَالِحٍ وَابْنُ السَّرْحِ قَالَ أَحْمَدُ حدثنا ابنُ وَهْبٍ وَقَالَ ابنُ السَّرْحِ أخبرنا ابنُ وَهْبٍ قالَ أخبرنا دَاوُدُ بنُ عَبْدِ الرَّحْمنِ عنْ عَمْرِو بنِ يَحْيَى عنْ يُوسُفَ بنِ مُحمَّدٍ وَقالَ ابنُ صَالِحٍ: مُحمَّدُ بنُ يُوسُفَ بنِ ثَابِتِ بنِ قَيْسِ بنِ شَمَّاسٍ عنْ أبِيهِ عن جَدِّهِ عنْ رَسُولِ الله صلى الله عليه وسلّم، أنَّهُ دَخَلَ عَلَى ثَابِتِ بنِ قَيْسِ ـ قال أَحْمَدُ وَهُوَ مَرِيضٌ ـ فَقَالَ: «اكْشِفِ الْبَاسَ رَبَّ النَّاسِ عنْ ثَابِتِ بنِ قَيْسِ بنِ شَمَّاسٍ، ثُمَّ أخَذَ تُرَاباً منْ بَطْحَانَ فَجَعَلَهُ فِي قَدَحٍ ثُمَّ نَفَثَ عَلَيْهِ بِمَاءٍ وَصَبَّهُ عَلَيْهِ». قالَ أَبُو دَاوُدَ: قالَ ابنُ السَّرْحِ يُوسُفُ بنُ مُحمَّدٍ قال أبُو دَاودَ: وَهُوَ الصَّوَابُ
நபி ﷺ அவர்கள் தாபித் இப்னு கைஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நோயுற்று இருந்தபோது அவர்களிடம் சென்று «اكْشِفِ الْبَاسَ رَبَّ النَّاسِ மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குவாயாக! என்று சொன்னார்கள். பின்னர் மண்ணை எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு நீரை அவர் மீது ஊற்றினார்கள்.
ஆதாரம் – அபூதாவூத் ,ஹதீஸ் இலக்கம் – (3885)
மேலே குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களையும் இது போன்ற இங்கு குறிப்பிடப்படாத ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொண்டு நோக்கும் போது
நோய்களுக்காக அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திருநாமங்கள் கொண்டும் ஓதி ஊதிப்பார்தல், தண்ணீர் ஓதுதல், தாயத்து கட்டுதல் என்பன இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்டவையாகும். இவை ஷிர்க் ஆன காரியங்கள் அல்ல என்பதையும் நபி ﷺ அவர்கள் அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திருநாமங்கள் கொண்டும் வைத்தியம் செய்துள்ளார்கள் என்பதையும் ஷிர்க் (இணைவைத்தல்) சம்மந்தமான ஓதல்கள் மூலம் வைத்தியம் செய்வதை நபி ﷺ அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பதையும் தெளிவாக விளங்க முடிகின்றது.
عن ابن مسعود «إن الرقى والتمائم والتولة شرك
ஓதிப்பார்தலும் தாயத்துகட்டுதலும் ஷிர்க் (இணை வைத்தல்) ஆகும் என்ற கருத்தைத் தரும் (அபூதாவூத் – 3883 ஹதீதும் இப்னு மாஜ்ஹ்- 3612) ஹதீதுகளும் இது போன்றவைகளும் ஜாஹிலிய்யா காலப்பகுதியில் காணப்பட்ட ஷிர்க் (இணைவைத்தல்) சம்பந்தமான தாயத்துகளை குறிப்பிடுகின்றன. மாறாக அல்குர்ஆனை கொண்டும் அல்லாஹ்வின் திருநாமங்களை கொண்டும் ஓதிப்பார்தலையும் தாயத்துகட்டுதலையும் ஷிர்க் என இங்கு குறிப்பிடப்படவில்லை.
எனவே மார்க்கத்தை தெளிவாக விளங்கி நடப்போம்

மௌலவீ K R M.ஸஹ்லான் (றப்பானீ) BBA-Hons

இஸ்லாத்தின் பார்வையில் ஓதிப்பார்த்தல்

போலி தவ்ஹீத் வாதியும் இயக்க வெறியும்


போலி தவ்ஹீத் வாதியும் இயக்க வெறியும்

السلام عليكم ورحمة الله وبركاته
போலி தவ்ஹீத் வாதியும் இயக்க வெறியும் உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்து வாங்கிய காலம்போய் இப்போது ஜனாஸா தொழுகை படிவம் வந்துவிட்டது.
குடும்பத்தவர்தான் ஜனாஸா தொழுகை நடத்தவேண்டும் என ஊர் ஊருக்கு மல்லுக்கு நின்று பஞ்சாயத்தாக்குபவர்கள், இப்போது ஜனாஸா தொழுகை நடத்தும் உரிமை குடும்பத்துக்கு இல்லை தமிழ் நாடு தருதலை ஜமாஅத்துக்குத்தான் என உறுதிமொழி பத்திரம் வாங்குவது எந்த நபிமொழியின் அடிப்படையில் என்று யாரும் கேட்டுவிடக்கூடாது.
ஏன் என்றால் இஸ்லாத்தை தூய வடிவில் அல் குர்ஆனையும் அல் ஹதீஸையும் பின்பற்றும் ஏகத்துவவாதியல்லவா...........
என்பதை போலி தவ்ஹீத்வாதிகள் நிரூபிப்பார்களா.....???????
பரிணாம வளர்ச்சி என்பது இதுதானோ........?????
போலி தவ்ஹீத் வாதியும் இயக்க வெறியும்




Sunday 20 September 2015

அல்லாஹ் குர்ஆனில் சத்தியமிட்டு சிலாகித்துக் கூறும் அற்புத நாள் அரஃபா.

அல்லாஹ் அருள்மறைக் குர்ஆனில் சத்தியமிட்டு சிலாகித்துக் கூறும் அற்புத நாள் அரஃபா.


வாக்களிக்கப்பட்ட நாளின் மீதும் சாட்சியின் மீதும் சாட்சி சொல்லவேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!’’ (அல்குர்ஆன் 85: 2,3)

இந்த வசனத்தில் வரும் முதலாவது நாள் மறுமை நாள். இரண்டாவது கூறப்பட்டது வெள்ளிக் கிழமை மூன்றாவது சத்தியம் செய்து கூறப்பட்ட நாள் அரஃபா நாளாகும். (திர்மிதி)*1

அதிசய பிராணி வெளியாகும் நாள்:
அல்லாஹ்வின் அற்புதங்களில் ஒன்றான ‘தாப்பத்துல் அர்ள் மக்காவிலிருந்த வெளியாகி மனிதர்களிடம் உரையாடி நல்லவர் கெட்டவரை அடையாள படுத்துமே அந்த அதிசய பிராணி வெளியாகும் நாள் இந்த அரஃபா தினம்தான். அல்லது அதற்கு முன்னால் பின்னாலுள்ள இரண்டு தினங்களில் வெளியாகும்
அறிவிப்பு இப்னு அப்பாஸ் ரலி.*2


துஆ அதிகம் கபூலாகும் நாள் :
அரஃபா தினத்தில் அசர் தொழுகையில் அருமை நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் மன ஓர்மையோடு ஈடுபட்டிருந்தார்கள். நாய் ஒன்று குறுக்கே வந்து நாயகத்தின் தொழுகைக்கு இடையூறாக நடந்து செல்ல எத்தனித்தது. என்ன வியப்பு? உடனே அது இறந்து வீழ்ந்தது.
தொழுகை முடித்து தோழர்களிடம் தூய நபி வினவினார்கள்: இந்த நாய்க்கு எதிராக நாயனிடம் துஆ செய்தது யார்?’’
நான்தான் நாயகமே’’ என்றார் ஒரு தோழர்.  
 ஒரு மூமின் எது கேட்டாலும் அல்லாஹ் மறுக்காமல் தருகிற அருமையான நேரத்தில் துஆ செய்திருக்கிறீர்’’ என்றார்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்.3

ஷைத்தான் தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு அழுகிற நாள் அரஃபா. ‘எனக்கு ஏற்பட்ட அழிவே.. எனக்கு ஏற்பட்ட நாசமே!’’ என்று அவன் அழுகின்ற அந்த பரிதாப நிலை கண்டு மற்ற ஷைத்தான்கள் எல்லாம் “உனக்கு என்ன ஆயிற்று’’என்பார்கள். அறுபது எழுபது ஆண்டுகளாக நான் அழிவிலே (பாவத்திலே) போட்டு வைத்திருந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் இன்று ஒரு நொடியிலே மன்னித்து விட்டான் அதை நினைத்துத்தான் அழுகிறேன் என்பானாம்.4

அரஃபா தினத்தின் மாலைப் பொழுதில் மாநபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தன சமுதாயத்திற்கு மன்னிப்பு வேண்டியும் அருள் வேண்டியும் அதிக நேரம் துஆ செய்தார்கள். அல்லாஹ் அதற்கு உடனே செவி சாய்த்தான். “நாயகமே நான் ஏற்றுக் கொண்டேன். அதே நேரம் அவர்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு செய்த அநியாயத்தைத் தவிர.( பாதிக்கப்பட்டவன் மன்னித்தாலே தவிர).’’
“யா அல்லாஹ்! நீ நினைத்தால் பாதிக்கப்பட்டவனுக்கு நன்மையை வழங்கிவிட்டு பாவியை மன்னித்துவிடலாமே’’

இந்த கோரிக்கைக்கு அப்போது பதில் கிடைக்கவில்லை. அனாலும் நபிகளார் விடவில்லை. மறுநாள் மீண்டும் அதே கோரிக்கையை முன் வைத்தார்கள். அல்லாஹ் அதையும் ஏற்றுக் கொண்டான். நபியே! உங்கள் உம்மத்திற்கு மன்னிப்பு வழங்கிவிட்டேன்’’ என்றான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் முகம் மலர்ந்தார்கள்.
தோழர்கள் வினவினார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! என்றைக்குமில்லாத புன்சிரிப்பும் பூரிப்பும் பூமானே தங்கள் பூவிதழ்களில் தெரிகிறதே?’’
“இப்லீஸின் இழிநிலை கண்டுதான் இந்த சிரிப்பு! என் சமூகத்திற்கு நான் வைத்த கோரிக்கையை நாயன் அல்லாஹ் ஏற்றுக் கொண்டதை அறிந்த இப்லீஸ் தாங்க முடியாமல் தன் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு கதறி அழுகிற காட்சியைக் கண்டுதான் புன்சிரிக்கிறேன்’’ என்றார்கள்.5

அல்லாஹ் அவனது மார்க்கத்தை சம்பூரணமாக்கிய சரித்திர நாள்:
ஒரு யூதன் கலீபா உமர் ரலி அவர்களிடம் வந்து அமீருல் முஃமினீன் அவர்களே! உங்கள் வேதத்தில் ஒரு வசனம் இருக்கிறது. அதை நீங்கள் ஓதவும் செய்கிறீர்கள். அது மட்டும் எங்கள் யூத சமூகத்திற்கு இறங்கி இருந்தால் அந்த நாளைப் பெருநாளாகக் கொண்டாடி இருப்போம்என்று கூறினார். அது எந்த வசனம் என்று கலீபா கேட்க,அதற்கு அவர்‘’இன்றையதினம் நாம் உங்களுக்கு உங்களது மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து எனது அருளையும் உங்கள் மீது நிரப்பாக்கினோம். உங்களுக்கு இஸ்லாத்தை மார்க்கமாக்கி திருப்தியடைந்தோம். (அல்குர்ஆன் 5:3) என்ற வசனத்தை எடுத்துக் கூறினார்.
அப்போது கலீபா உமர் ரலி அவர்கள் அந்த வசனம் இறங்கிய நாளும் வேளையும் இடமும் கூட எங்களுக்குத் தெரியுமே. வெள்ளிக்கிழமை அரஃபாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் அவ்வசனம் இறங்கியது.’’ அதாவது அது இறங்கிய தினத்தைப் பெருநாளாகக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. அது இறங்கியதே பெருநாள் தினத்தில்தான் என பதிலளித்தார்கள். (புஹாரி:45) 6


நரக விடுதலை அதிகமாக நடைபெறும் நாள்:
அல்லாஹ் நரகவிடுதலை அளிப்பதில் அரஃபா தினத்தைவிட அதிகமாக வேறு தினங்களில் அளிப்பதில்லை. அன்று அல்லாஹ் அடியார்களிடம் நெருங்கி பிரசன்னமாகிறான். அவர்களைக்குறித்து அமரர்களிடம் சிலாகித்து பெருமை பாராட்டுகிறான். இவர்களுக்கு என்ன தேவை? என்று பிரியத்தோடு கேட்கிறான்.7

அல்லாஹ் தன் அடியார்கள் குறித்து பெருமிதம் அடைகிற நாள்:
ஆயிஷா ரலி-அன்ஹா கூறுவார்களாம்: அரஃபா நாள் பெருமிதத்திற்குரிய நாள்’’ என்று. அப்படிஎன்றால் என்ன? என்று மக்கள் விளக்கம் கேட்கிறபோது, அன்னை கூறுவார்களாம்:
அரஃபா அன்று அல்லாஹ் உலக வானிற்கு வந்து அமரர்களை அழைத்து, “இதோ பாருங்கள் என் அடியார்களை! இவர்களுக்கு ஒரு தூதரை அனுப்பினேன். அவரை நம்பினார்கள். வேதத்தை அனுப்பினேன் அதையும் நம்பினார்கள். தற்போது உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் என்னிடம் வந்திருக்கிறார்கள் நரக விடுதலையை என்னிடம் வேண்டுகிறார்கள். இதோ நான் தந்துவிட்டேன். அரஃபா நாளைவிட அதிகமாக நரகவிடுதலையை காண முடியாது” என்று கூறுகிறான்.8

அல்லாஹ்வின் அருள் அதிகமாகப் பொழியும் நாள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''சுவனத்தில் முத்து மாணிக்கம் மரகதம் பவளங்களால் ஆன ஒரு மாளிகை உண்டு''.
ஆயிஷா (ரலி): ''யா ரசூலல்லாஹ் அது யாருக்கு?''
நபி: ''அரஃபா நாளில் நோன்பு வைப்பவருக்கு!''
அரஃபா நாளில் நோன்பு வைத்தவருக்கு அன்று காலையில் அல்லாஹ் நன்மையின் வாசல்களில் 30ஐ திறக்கிறான்தீமையின் வாசல்களில் 30ஐ அடைக்கிறான்.” 9
இந்த நாளில் என்னவெல்லாம் செய்யலாம்?
  • நோன்பு
  • துஆ 
  • பாவமன்னிப்பு 
  • புலன்களை அடக்கி பாவத்தைத் தவிர்ந்து கொள்ளுதல் 

அரபா நாள் நோன்பு பிடிப்பது முன்பின் இரண்டு வருடப் பாவங்களுக்குப் பரிகாரமாகும் என்று அல்லாஹ்விடம் நான் ஆதரவு வைக்கிறேன் . (முஸ்லிம்: அபூதாவூது) 10

அன்று அதிமகமாக துஆவில் ஈடுபடவேண்டும்.
''அரஃபா நாளில் செய்யும் துஆ சிறந்த துஆவாகும்.''11

அலி ரலி அறிவிக்கிறார்கள் நபிகள் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறினார்கள்: நானும் எனக்கு முன்னுள்ள நபிமார்களும் அரஃபாவில் அதிகம் ஓதிய துஆ: 
لاَ إِلَهَ إِلَّا اللَّهُ ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، اللَّهُمَّ اجْعَلْ فِي سَمْعِي نُورًا ، وَفِي بَصَرِي نُورًا ، وَفِي قَلْبِي نُورًا ، اللَّهُمَّ اشْرَحْ لِي صَدْرِي ، وَيَسِّرْ لِي أَمْرِي ، وَأَعُوذُ بِكَ مِنْ وَسْوَاسِ الصُّدُورِ ،12


ஐம்புலன்களைப் பாதுக்காக்கவேண்டும்.
யார் அரஃபா நாளில் தன் செவி, பார்வை, நாவு இவற்றைப் பாதுகாக்கிறாரோ அவரை இந்த அரஃபாவிலிருந்து அடுத்த அரஃபா வரை அல்லாஹ் பாதுகாக்கிறான்.’’13

1-عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم اليوم الموعود يوم القيامة واليوم المشهود يوم عرفة والشاهد يوم الجمعة(ترمذي)
2- عن ابن عباس ، رضي الله عنهما قال : « الدابة التي يخرج الله عز وجل من الأرض هي الثعبان الذي كان في البيت ، تخرج قبل التروية  بيوم ، أو يوم التروية ، أو يوم عرفة ، أو يوم النحر » أخبار مكة للفاكهي 2270
3-عن إسحاق بن عبد الله قال : كان رسول الله صلى الله عليه وسلم في صلاة العصر يوم عرفة يوم جمعة إذا كلب يريد أن يمر بين يديه فسقط ميتا ، فلما قضى الصلاة قال صلى الله عليه وسلم : « أيكم دعا على الكلب ؟ » فقال رجل : أنا دعوت عليه . فقال : « دعوت في ساعة ما سأل الله عز وجل فيها مؤمن شيئا إلا استجاب له » وكان الدعاء : لا إله إلا الله الحليم الكريم ، لا إله إلا الله العلي العظيم ، سبحان الله رب السماوات السبع والأرض رب العرش العظيم ، والحمد لله رب العالمين  أخبار مكة للفاكهي  
4-عن جابر بن عبد الله رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم : « المغفرة تنزل على أهل عرفة مع الحركة الأولى ، فإذا كانت الدفعة الأولى فعند ذلك يضع الشيطان التراب على رأسه يدعو بالويل والثبور » . قال : « فتجتمع إليه شياطينه فيقولون : ما لك ؟ فيقول : قوم قد قتلتهم منذ ستين وسبعين سنة غفر لهم في طرفة عين » أخبار مكة للفاكهي 

5-إن رسول الله صلى الله عليه وسلم دعا لأمته عشية عرفة بالمغفرة والرحمة فأكثر الدعاء . قال : فأجابه الله عز وجل أني قد فعلت ، إلا ظلم بعضهم بعضا ، فأما ذنوبهم فما بيني وبينهم فقد غفرتها لهم . فقال : يا رب إنك قادر أن تثيب هذا المظلوم من مظلمته أو تغفر لهذا الظالم . قال : لم يجبه تلك العشية ، فلما كان غداة  المزدلفة أعاد الدعاء ، فأجابه الله عز وجل أني قد غفرت لهم ، ثم تبسم رسول الله صلى الله عليه وسلم ، فقال له بعض أصحابه : يا رسول الله ، تبسمت في ساعة لم تكن تبسم فيها ؟ فقال صلى الله عليه وسلم : « تبسمت من عدو الله إبليس لما علم أن الله عز وجل قد استجاب لي في أمتي هو يدعو بالويل والثبور (2) ويحثي التراب على رأسه » أخبار مكة للفاكهي 2682
6-عن عُمَر بن الخطَّابِ رضي الله عنه أنَّ رَجُلاً من اليهودِ قال له : يا أميرَ المؤمِنينَ آيةٌ في كتابكم تقرؤونها ، لو علينا مَعْشَرَ يَهُودٍ نَزَلَتْ لاتَّخَذْنَا ذلِكَ اليومَ عِيداً ، قال : أيُّ آيةٍ ؟ قال : ( الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الأِسْلاَمَ دِيناً ( قال عُمَرُ : قَدْ عرفْنَا ذلك اليوم والمكانَ الذي أنْزِلَتْ فيه على النبي ( صلى الله عليه وسلم ) وهو قائِمٌ بِعَرَفَةَ يوم جمعة

7-قالت عائشة: إن رسول الله (صلى الله عليه وآله) قال: ما
من يوم أكثر من أن يعتق فيه عبدا من النار من يوم عرفة، وإنه ليدنو
ثم يباهي بهم الملائكة فيقول: ما أراد هؤلاء ؟
8-عن عائشة رضي الله عنها قالت : يوم عرفة يوم المباهاة . قيل لها : وما يوم المباهاة ؟ قالت رضي الله عنها : ينزل الله تبارك وتعالى يوم عرفة إلى السماء الدنيا يدعو ملائكته ويقول : انظروا إلى عبادي شعثا غبرا ، بعثت إليهم رسولا فآمنوا به ، وبعثت إليهم كتابا فآمنوا به ، يأتونني من كل فج عميق يسألوني أن أعتقهم من النار ، فقد أعتقتهم . فلم ير يوم أكثر أن يعتق فيه من النار من يومعرفة أخبار مكة للفاكهي2685
9-عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة قصورا من در وياقوت وزبرجد وذهب وفضة قلت يا رسول الله لمن هي قال لمن صام يوم عرفة يا عائشة من أصبح صائما يوم عرفة فتح الله عليه ثلاثين بابا من الخير وأغلق عنه ثلاثين بابا من الشر (نزهة المجالس)

10-أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عرفة إني احتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أخرجه الترمذى (3/124 ، رقم 749) وقال : حسن . وابن ماجه (1/551 ، رقم 1730) ، وابن حبان (8/95 ، رقم 3632) ، والبيهقى فى شعب الإيمان (3/387 ، رقم 3844) . وأخرجه أيضًا : مسلم (2/818 ، رقم 1162) ، وأبو داود (2/321 ، رقم 2425) .
11--خير الدعاء دعاء يوم عرفة وخير ما قلت أنا والنبيون من قبلى لا إله إلا الله وحده لا شريك له ، له الملك وله الحمد وهو على كل شىء قدير (الترمذى - حسن غريب - عن عمرو بن شعيب عن أبيه عن جده)
أخرجه الترمذى (5/572 ، رقم 3585)


Thursday 17 September 2015

நாம் வாழும் பயங்கர காலம்! முஸ்லிம்களே விழிப்பாக இருங்கள்!


நாம் வாழும் பயங்கர காலம்!  முஸ்லிம்களே விழிப்பாக இருங்கள்!

ஒரு காலம் இருந்தது இஸ்லாத்திற்கு வெளியே இஸ்லாத்திற்கு எதிரான யஹூதி, நஸாராக்கள் கூட்டம்.
.
அதற்கு பிறகு அவர்களுடன் சேர்ந்து இஸ்லாத்தின் பெயரில் முனாபிக்கீன்கள் (வஹாபிகள்) கூட்டம்.
.
இப்போது அதற்கும் ஒரு படி மேலே சென்று அந்த இரண்டு கூட்டங்களுடன் சேர்ந்து மூன்றாவதாக இஸ்லாத்திற்குள்ளே (அதாவது அஹ்லுஸ் ஸுன்னாஹ்வுக்குள்) ஒரு கூட்டம் தலையெடுத்துள்ளது. அவர்கள்தான் போலி தரீக்காவாதிகள்.
.
இஹ்ஸான் என்ற உள்ளத்தை தூய்மைப்படுத்தும் முறையை கையாளாமல் வெறும் முக்கா வஹாபிகளை போல் மூச்சுக்கு முன்னூறு தடவை ஷரீஅத், ஷரீஅத் என்று பேசி உள்ளத்தை தூய்மைப்படுத்தாமல், இவர்களின் உள்ளங்கள் வஹாபிகளை போல் பொறாமை, பெருமை, கர்வம், ஆணவம், அறியாமை போன்ற கெட்ட குணங்களால் இருளடைந்துள்ளது.
.
இப்போது இலங்கையில் தரீக்கா என்ற பெயரில் லெபனானை சேர்ந்த ஹராரீ தரீக்கா என்ற பெயரில் இப்னு தைமியாவை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் இலங்கைக்குள் ஒரு கூட்டம் நுழைந்துள்ளதாம்.
.
இவர்களின் கொள்கைகள்:
“நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் நூர் முதலில் படைக்கப்படவில்லை”
“நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நூர் அல்ல”
.
மேலும் அவர்களின் “கைப தகூனு அலா ஸவாப்” என்ற அவர்களின் நூலில் ரஸுலுல்லாஹ்வின் உடலை நூர் என்று சொல்பவன் காபிர் என்று எழுதப்பட்டுள்ளதாம்! நவூதுபில்லாஹ்!
.
யா நபி பைத் இல் வரும் அந்த கப்பாருள் கதாயா என்ற வரியை கடுமையாக எதிர்கிரார்கலாம்
.
இதுபோன்ற வஹாபிய குப்பார்களின் கொள்கைகளை ஊர் ஊராக பிரச்சாரம் செய்து திரிகிறார்களாம்.
.
அது மட்டுமல்ல இவ்வையகத்தில் நபிமார்கள் முதல் வலிமார்கள் வரை போதித்து சென்ற இஸ்லாத்தின் தௌஹீதான வஹ்ததுல் வுஜூதை இலங்கை முஸ்லிம்களிடம் இருந்து ஒழிப்பது இவர்களின் நோக்கம்.
.
அதற்காக பணத்தை கொடுத்து மௌலவிமார்களை உருவாக்குகிறார்கலாம். தரீக்காவை சேர்ந்தவர்கள் வஹ்ததுல் வுஜூதை எதிர்ப்பதற்கு இவர்களும் முக்கிய காரணமாம்.
.
இவர்களின் கருத்தரங்குகள் இலங்கையில் கண்டி, கஹடோவிட, காலி போன்ற இடங்களில் உள்ள மதரசாக்களில் நடைபெற்றுள்ளதாம். மதரசாக்களை ஆக்கிரமிப்பு செய்வதுதான் இவர்களின் திட்டமாம்.
.
இந்த விடயங்களை ஈமானிய உணர்வுள்ள இலங்கை சகோதரர்கள் எமக்கு அறிய தந்தார்கள்.
.
இவர்கள் இலங்கையில் ஏராளமான பணங்களை வாரி வழங்கி இவர்களின் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவாக சில குருட்டு மௌலவிமார்களையும், பணத்திற்கு வாலாட்டும் குருட்டு தரீக்காவாதிகளையும் பிடித்துள்ளார்கலாம். இன்னும் உருப்படி இல்லாத ஷெய்க்குமார்களை பின்பற்றும் அப்பாவி இளைஞர்களும் இவர்களுக்கு பின்னால் போய் கொண்டிருக்கிறார்களாம்.
.
இரண்டு வருடங்களுக்கு முன் ஒவ்வொரு மௌலவிமார்களுக்கு லஞ்சமாக ஒவ்வொரு (Mobile Phone) தொலைபேசி வழங்கியுள்ளார்கலாம்.
.
உண்மையான ஈமான் உள்ள, உள்ளத்தில் நூர் உள்ள எந்த ஒரு முஃமினும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் நூர் அல்ல என்று சொல்ல மாட்டான்.
.
'கத்ஜாஹகும் மினல்லாஹி நூருன் வ கிதாபுன் முபீன்' அல்லாஹ்விடமிருந்து ஒளியும், தெளிவான வேதமும் உங்களுக்கு வந்துள்ளன. (அல் குர்ஆன் 5 : 15)
**************************************************************************
'நூர் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தான்‘ என்று
.
(தப்ஸீர் இப்னு அப்பாஸ், தப்ஸீர் ஜலாலைன், தப்ஸீர் காஜின், தப்ஸீர் ஸாவி, தப்ஸீர் மஆலிமுத் தன்ஸீல், தப்ஸீர் ரூஹூல் பயான் ) அனைத்து தப்ஸீர்களிலும் சொல்லப்பட்டுள்ளது. *****************************************************************************
வளரும் உங்கள் குழந்தைகளின் ஈமானை பாதுகாத்து கொள்ளுங்கள். உங்கள் ஊர் மத்ரசாவை பாதுகாத்து கொள்ளுங்கள்.
.
இந்த விஷயங்களை உங்கள் ஊருக்கு எடுத்து சென்று சூரத்தை மட்டும் அலங்கரித்தால் போதும் என்று நடமாடும் போலி வேஷதாரிகளிடம் இருந்து உங்கள் ஈமானையும் உங்கள் குடும்பத்தார்களின் ஈமானையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.
.
யா அல்லாஹ்! இந்த போலி தரீக்காவாதிகளின் தீங்கில் இருந்தும், குருட்டு ஷரீஅத்வாதிகளின் தீங்கில் இருந்து முஃமின்களை பாதுகாப்பாயாக!


  1. 'நூர் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
  2. 'நூர் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
  3. 'நூர் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
  4. 'நூர் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
  5. 'நூர் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
  6. 'நூர் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்

மார்க்கம் அறியாத பீ.காம் களை முப்தியாக்கினால்?


எந்த நிபந்தனையுமின்றி பகிரங்க கேள்விபதில் நிகழ்ச்சி என்று துண்டுப்பிரசுரம் வெளியிட்டு விட்டு கேள்வி கேட்க சென்ற சகோதரின் கேள்விக்கு பதில் கூர முன்வராது அவரின் நிலைப்பாட்டை கூறியதும் இவர்களின் அழைப்பை ஏற்று கேள்வி கேட்க்க சென்ற சகோதரரை இடத்தை விட்டு விரட்டும்படி கூறும் எஸ்.எல்.டி.ஜே செயலாளர் அப்துர் ராசிக்
பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி என்று தலைப்பு போட்டுவிட்டு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெரும் நோக்கில் வந்த சகோதரரை கேள்வி கேட்க்க விடாது அவரிடம் கேள்விகளின் பட்டியலை ஆலிம்ஸா அப்துர் ராசிக் கேட்பது ஏன்? ஆன்லைன் பீஜயில் பிட் அடிக்க மறந்த கேள்விகளை சகோதரர் கேட்டு விடுவார் என்ற அச்சமோ??? நீங்கள் தானே உலகமகா ஆலிம்சாக்கள்?
அப்போ ஏன் முன்கூட்டி கேள்விகளின் பட்டியல்???
தான் தக்லீத் வாதி தனக்கு சுயமாக ஆய்வு செய்து பதில் கூறும் ஆற்றல் இல்லை நீங்கள் கேள்விகளின் பட்டியலை தந்தாள் ஆன்லைன் பீஜெயில் பிட் அடித்து சொல்லிவிடுவேன் என்பதை மறைமுகமாக ஒத்துகொண்டார் அப்துர்ராசிக்
இல்லையெனில் இந்த மாசத்துக்குள் ஒரு நாளையில் ஆவது கேள்வி கேட்ட சகோதரரின் வேண்டுதலை ஏற்று நீங்கள் கூறியது போல் அமர்ந்து பேச ஒருவாய்ப்பை வழங்க கூடாதா?
மார்க்கம் அறியாத பீ.காம் களை முப்தியாக்கினால்
இதுதான் நிலை
மார்க்கம் அறியாத பீ.காம் களை முப்தியாக்கினால்?


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) ரஸ்மினுக்கு பகிரங்க_சவால்

السلام عليكم ورحمة الله وبركاته
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) துணை செயலாளர்.
அழைப்பு மாத இதழ் துணை ஆசிரியர்.
Rasminmisc@gmail.com
அறிஞரின் அரபி புலமை

------------------------------------------------------------------------------------------------------------





இவர்தான் இஸ்லாமிய ஷரீஅத்தில் குழப்பத்தை உண்டுபன்னுவதற்கு என்றே வெளியாகி இருக்கும் புல்லுருவிகள்.
இதை ரஸ்மின் அவர்களோ ரஸ்மின் அவர்களின் அடிச்சுவடுகளான ஏனைய SLTJ போலி தவ்ஹீத்வாதிகள நிரூபிப்பதற்கு முன் வருவார்களா............????
என்னா ஒரு அரபி புலமை.......
‪கவனிக்க‬ كتاب (கிதாப்) என்பதன் பன்மைச் சொல் كتب (குதுப்) ஆகும்.
எனவே இவர் சொல்லும் விடயம் என்ன.........????
அங்கே இடம் பெற்றிருப்பது என்ன.........???

அங்கே உள்ளது قطب الاقطاب (குதுபுல் அக்தாப்) இது சரி....ஏன் قطب (குதுப் )என்பதன் பன்மைச் சொல் اقطاب (அக்தாப் )ஆகும்.......எனவே قطب (குதுப்) என்பது அல்லாஹ்வின் இறைநேசச் செல்வரை பார்த்து சாட்டப்படும் வார்த்தை. (குதுபுகளுக்கெல்லாம் குதுபாகிய-இறைநேசச்செல்வர்களுக்கெல்லாம் பெரும் இறைநேசர்)என்றே வையுங்கள்.

என்று அறிஞர் சொல்கிறார். எனவே கிதாப் என்ற சொல் அடிப்படையில் பார்ப்போமேயானால் كتب (குதுப்) என்பது பன்மையான வார்த்தை. இதற்குள் اكتاب (அக்தாப்)என்று எப்படி வந்தது என்பது தான் புரியவில்லை.

எந்த அகராதியை புரட்டினாலும் كتب (கதப)என்ற மூல சொல்லில் இருந்து வந்த مصدر (மஸ்தர்) ஆகிய كتاب (கிதாப்) என்ற சொல்லுக்கு اكتاب (அக்தாப்) என்ற பன்மைச் சொல் மறுமை நாள் வந்தாலும் கிடைக்காது.
ஸ்ரீலங்கா SLTJ ஏனையோர்களுக்கும்‪#‎பகிரங்க_சவாலாகவே_விடுகிறேன்‬.

சாதாரன இந்த சிறு விடயம் தெரியாதா இந்த துணை செயலாளருக்கு............???
இதற்கு பின்னால் பொம்மை போல் தலையை ஆட்டிக்கொண்டு செல்லும் விசிலடிச்சான் குஞ்சுகளையும் அழைக்கிறேன்.

ரஸ்மின் அவர்களுக்கு ப்ரன்ட் ரிக்வேஸ்ட் கொடுத்தேன் ப்ஃலோவிங் மட்டுமே கிடைத்தது.
அவரின் பப்லிக் லைக் பேஜை லைக் பன்னி உள்ளேன்.

திராணி உள்ள SLTJ விசிலடிச்சான் குஞ்சுகள் ரஸ்மினுக்கு மென்ஷன் பன்னி கொஞ்சம் வரச்சொல்லுங்கள்.............
பார்க்க.....

Tuesday 15 September 2015

ஏறாவூர் மனாழீருல் அன்வார் மகளீர் அரபுக்கல்லூரியில் 2 வது பட்டமளிப்பு விழா

ஏறாவூர் மனாழீருல் அன்வார் மகளீர் அரபுக்கல்லூரியில் 2 வது பட்டமளிப்பு விழா
MALAC

ஏறாவூர் வைத்தியசாலை வீதியில் அமைந்திருக்கும் மனாழீருல் அன்வார் மகளீர் அரபுக்கல்லூரியில் கடந்த 12.09.2015 சனிக்கிழமை கல்லூரி மண்டபத்தில் அல் ஆலிமா எம்.என் ஷாமிலா (நூரிய்யா)அவர்களின் தலைமையில் 10 மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடை பெற்றது.  

ஏறாவூர் மனாழீருல் அன்வார் மகளீர் அரபுக்கல்லூரியில் 2 வது பட்டமளிப்பு விழா

இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக அஸ்ஸெய்யது ஹஸன் ஸக்காப் மௌலானா அஸ்ஸெய்யிதா பாத்திமா ஷரீபா மௌலானா அவர்களும்
கௌரவ அதிதியாக ஜனாபா அஹமட் பரீட் மீராலெப்பைப பர்வின் அவர்களும் விஷேட பேச்சாளராக அல் ஆலிமா பாத்திமா முஸ்பிகா (முஅஸ்கரிய்யா) அதிபர் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி (கஹேட்டவிட்ட) அவர்களும் மற்றும் உள்ளுர் வெளியூர் பல சுன்னத் வல் ஜமாஅத் ஆலிமாக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

Eravur Moulavi Ibraheem Hasimi Qadiri soofi
கலாபீடத்தின் ஸ்தாபகர் மர்ஹ_ம் சங்கைக்குரிய மௌலவீ கலீபத்துல் காதிரிய்யாஹ் அஷ் ஷெய்க் முஹம்மது இப்றாஹீம் ஹாஸிமி காதிரி ஸ_பி அவர்கள் 

Eravur Haneefa aalim Punnakkuda 7cross Road







Thursday 10 September 2015

வஹ்ஹாபிகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்!

வஹ்ஹாபிகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்!

வஹ்ஹாபிகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்!
ஆக்கம் : மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ
இஸ்லாத்தை அதன் தூயவடிவில் எடுத்துக் காட்டுகிறோம் என்று பாமர மக்கள் மத்தியில் தங்களை அலங்கரித்து, இஸ்லாமியன் என்று உடை அணிந்து, இஸ்லாமியர்கள் வாழும் இடங்களில் தங்களது குடியிருப்புக்களையும் அமைத்துக் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படை ஆணிவேர் கொள்கைகளை சிதைக்க யூத, காபிர்களால் மறைமுகமாக நிறுவப்பட்ட கொள்கையே “வஹ்ஹாபிஸம்” என்ற ஓர் கொள்கையாகும். இதைப் பின்பற்றுவோரை “வஹ்ஹாபியர்கள்” என்று நாம் சொல்கின்றோம்.
இக்கொள்கை ஹிஜ்ரி 661ல் பிறந்த இப்னுதைமிய்யா என்பவனால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் ஹிஜ்ரி 1111ல் பிறந்து தன்னை இஸ்லாமியன் எனக் காட்டிக் கொண்ட முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவனால் வளர்க்கப்பட்டு பிரபல்யமாகத் தொடங்கியதனால் அந்த அயோக்கியனின் முழுப்பெயரில் உள்ள “வஹ்ஹாப்” என்ற பெயரை மையமாகக் வைத்துக் கொண்டு இக்கொள்கை “வஹ்ஹாபிஸம்” என்றும் இக் கொள்கையைப் பின்பற்றுவோர் “வஹ்ஹாபியர்கள்” என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இப்பெயர் இவர்களுக்குப் பொருத்தமானதா?
இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாத்தை சீரழிக்கும் நற்பேறு அற்ற இந்த வேஷதாரிகளுக்கு “வஹ்ஹாபியர்கள்” என்று சொல்வது பொருத்தமற்றதாகும்.
ஏனெனில், “வஹ்ஹாப்” என்ற பெயர் அல்லாஹுத்தஆலாவின் தொண்ணூற்று ஒன்பது திருநாமங்களில் ஒன்றாகும். “வஹ்ஹாப்” என்றால் – அதிக அருள்வளம் உடையவன் என்று அர்த்தமாகும்.
எனவே, இக்கண்ணியம் பொதிந்த புண்ணிய நாமத்தை அல்லாஹ்தஆலாவின் அருளிலிருந்து மிக தூரமான, ஏன் இஸ்லாத்தை விட்டே வெளியேறிய முர்தத், காபிர்களுக்கு பயன்படுத்துவது பொருத்தமற்றதாகும்.
எனவே, சுன்னத் வல் ஜமாஅத்தினரான நாம் இப்பெயரை இவர்களுக்கு உபயோகிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தெரியாதவர்களுக்கும் இவ்விளக்கத்தை கூறி அவர்களையும் விழிப்படையச் செய்ய வேண்டும்.
பிறகு எப்பெயர் இவர்களுக்குப் பொருத்தமானது?
இவர்களுக்குப் பொருத்தமான ஏற்றமான பெயரை 1400 வருடங்களுக்கு முன்பதாகவே உயிரிலும் மேலான கண்மனி நாயகம் றசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் சூட்டியிருக்கிறார்கள். அப் பெயர் கொண்டு இவர்களை அழைப்பது நபிவழியாகும்.
அப்பெயர் என்னவெனில்
1037 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الحَسَنِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا، وَفِي يَمَنِنَا» قَالَ: قَالُوا: وَفِي نَجْدِنَا؟ قَالَ: قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا» قَالَ: قَالُوا: وَفِي نَجْدِنَا؟ قَالَ: قَالَ: «هُنَاكَ الزَّلاَزِلُ وَالفِتَنُ، وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ»
அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அவர்கள் அறிவிக்கறார்கள். நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ஒரு முறை “யா அல்லாஹ் எங்கள் ஷாம் தேசத்தில் எங்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்துவாயாக! இன்னும் எங்கள் யமன் தேசத்திலும் சுபீட்சத்தை ஏற்படுத்துவாயாக!” எனப் பிராத்தனை செய்தார்கள். அப்போது அங்கிருந்த மக்களில் சிலர் அல்லாஹ்வுடைய ரசூலே! எங்கள் “நஜ்த்” பகுதியிலும் சுபீட்சத்தை ஏற்பட வேண்டி பிராத்தனை புரியுங்கள் என்று கேட்க அவர்களின் சொல்லை செவியேற்காதது போன்று நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் மீண்டும், “யா அல்லாஹ்! எங்கள் ஷாம் தேசத்தில் எங்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்துவாயாக! இன்னும் எங்கள் யமன் தேசத்திலும் சுபீட்சத்தை ஏற்படுத்துவாயாக!” என்றே பிராத்தித்தார்கள்.
மீண்டும் அங்கிருந்த மக்கள் அல்லாஹ்வுடைய ரசூலே! எங்கள் “நஜ்த்” பகுதியிலும் சுபீட்சம் ஏற்படவேண்டி பிராத்தனை செய்யுங்களேன் என்று கேட்டனர். அப்போது நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் - அந்த “நஜ்த்” என்ற பிரதேசத்தில்தான் நிலநடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும். அங்குதான் ஷைதானுடைய கொம்பு உதயமாகும் என்று கூறினார்கள்.
நூல் - ஸஹீஹுல் புஹாரி
ஹதீஸ் எண் – 1037
இந்த ஹதீதில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நஜ்த் என்ற இடத்தில் “ஷைதானுடைய கொம்பு” உதயமாகும் என்று முன்னறிவிப்பாகக் கூறியது முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாபையேயாகும் என்று அதிகமான அறிஞர் பெருமக்கள் கூறியுள்ளார்கள்.
ஏனெனில், முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் நஜ்த் என்ற இடத்தில் பிறந்து அங்கேயே இஸ்லாத்திற்கு எதிரான தன் நச்சுக்கருத்துக்களை பரப்பியவன் ஆவான்.
மேலும் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மேற்கூறப்பட்ட ஹதீதில் வழிகேடர்களின் தந்தையான முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாபை “ஷைதானின் கொம்பு” என வர்ணித்து கூறியதற்கிணங்க அவனின் அடிவருடிகளையும் “ஷைதானின் கொம்புகள்” என்று அழைக்கப்படுவதே சரியானதும் சிறந்ததுமாகும்.
அறபியில் சொல்ல வேண்டுமாயின் قُرُوْنُ الشًّيْطَانِ “ஷைதானின் கொம்புகள்” என்றும் வெறுமனே சொல்ல வேண்டுமாயின் قَرْنِيُّوْنَ “கர்னிகள்” என்றும் சொல்லிக் கொள்ளலாம்.
ஹதீதில் “கொம்பு” என்ற சொல் இவர்களுக்கு பாவிக்கப்பட்டது எதற்காக?
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இக்கூட்டத்தினரைப் பற்றி குறிப்பாக “கொம்பு” என்ற சொல் கொண்டு குறிப்பிடக் காரணம் என்னவெனில் – கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இக் கூட்டத்தினரை மறைமுகமாக மிருகங்களுக்கு ஒப்பாகக் கருதி கூறியள்ளார்கள். ஏனெனில் மிருகங்களுக்குத்தானே “கொம்புகள்” இருக்கின்றன.
எனவே அன்புக்குரியவர்களே!
உண்மையை அறிந்து கொள்ளுங்கள்! பொய்மையைத் தவிர்ந்து கொள்ளுங்கள்! நன்மையை அள்ளிக் கொள்ளுங்கள்! சத்தியத்தை நிலை நாட்ட எழுந்து வாருங்கள்! அசத்தியத்தை தவிடு பொடியாக்க கை கோருங்கள்! அல்லாஹ் தஆலா உங்கள் மீது ஈருலகிலும் அவனது அருள் மழை எனும் அடைமழையைக் கொட்டச் செய்வானாக!
ஆமின் யாரப்பல் ஆலமீன்