السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 30 May 2016

அற்புதங்களை அல்லாஹ் ஈக்களில் வைத்திருக்கின்றான்


ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல விலங்கியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்: “ஈக்கள் பொதுவாக அசிங்கமான இடங்களிலும் கழிவுகளிலும் அதிகம் வாசம் செய்வதால் அவை கிருமித் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் ஈ இனமே அழிந்துவிடும் சாத்தியம் இருந்தும்கூட அவை எப்படித் தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றன என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதற்கான காரணத்தை அறிய ஆவள் கொண்டேன். எனவே ஒரு நாள் எத்தனால் திரவத்தில் கொஞ்சம் ஈக்களைப் பிடித்துப் போட்டு அதில் ஊறவைத்தேன். மறுநாள் அந்தத் திரவத்தைப் பார்த்தபோது அதன் மேல்பகுதியில் ஆடைபோன்ற திரவம் படிந்திருந்தது. அதை எடுத்து ஆய்வு செய்தபோது அது முழுக்க முழுக்க நோய் எதிர்ப்புச் சக்தியின் திரட்டு என்பதை அறிந்துகொண்டேன். ஒப்பீட்டளவில் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவைவிட ஈயின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு பன்மடங்கு அதிகமாகவே உள்ளது.” என்கிறார்.
இவ்வளவு அற்புதங்களை அல்லாஹ் ஈக்களில் வைத்திருக்கின்றான் என்றால் ஈயைவிடவும் பன்பமடங்கு பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தில் எத்துனை எத்துனை அற்புதங்களை அல்லாஹ் வைத்திருக்க வேண்டும்
: ஈக்கள் அதிகமாக குப்பை கூழங்களிலும் அழுகிய உணவுப் பொருட்களிலும் நகர்ப்புறங்களில் அழுகிய வாய்க்கால்களிலும் மலசலகூடங்களிலும் அதிகமாகச் சஞ்சரிக்கின்றன. ஓரிடத்தில் ஈயொன்று போய் அமர்ந்தால் அவற்றின் உடலிலும் கால்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான மயிர்களில் ஆயிரக்கணக்கான நுண் கிரிமிகள் தொற்றிக்கொள்கின்றன. ஈக்கள் எமது உணவுகளில் வந்து மொய்க்கும் போது அக்கிருமிகள் எமது உணவுகளிலும் தொற்றிக்கொள்கின்றன. இதனால் மனிதன் பல நோய்களுக்கும் ஆளாகின்றான். ஆனாலும் அல்லாஹ் அதே ஈக்களில் நோயெதிர்ப்புச் சக்தியையும் வைத்துள்ளான். இன்று விஞ்ஞானம் கூறும் இத்தகவலை நபியவர்கள் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறிய அற்புதத்தைப் பாருங்கள்.
.
நபியவர்கள் கூறினார்கள் “உங்கள் குடிபானத்தில் ஈ வீழ்ந்தால், அதை உள்ளே மூழ்கடித்துவிட்டு பின்னர் வெளியில் எறிந்துவிடவும். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் நோயும் மற்றையதில் நிவாரணமும் உள்ளது” (புஹாரீ, அபூதாவூத்)
ஈக்களின் ஒளி ஊடுபுகும் விதத்தில் அமைந்திருக்கும் இறகுகள் மிக விரைவாகப் பறப்பதற்கு ஏற்றவிதத்தில் உறுதியாகப் படைக்கப்பட்டுள்ளன. அத்தோடு கண்களுக்குத் தென்படாத அமைப்பில் மிக மெல்லிய இரத்த நரம்புகள் நூற்றுக் கணக்கில் அவற்றில் ஓடிக்கொண்டிருக்கின்றன. பொலித்தீன் போன்று மிக மெலிதாக அவ் இறக்கைகள் இருந்தாலும் பறக்கும்போது அவை பிய்ந்துவிடாத வண்ணம் அல்லாஹ் பாதுகாத்துவைத்துள்ளான்.

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே அதனைச் செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் அழைத்துப் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. மேலும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துச்சென்றாலும் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பப் பறித்துக்கொள்ளவும் முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமானவர்களே!” (22:73)





Friday 27 May 2016

றமழானே‬ வருக புனித றமழானே வருக

புன்னியம் பூத்து குழுங்கும் றமழானை வரவேற்கும் முகமாக எமது ‪#‎ஏறாவூர்‬ மண்ணில் எதிர்வரும் ஜூன் 3ம். திகதி நடைபெற இருக்கும் றமழானை‬ வரவேற்போம்‬ எனும்‪ ‎தொனிப்பொருளில்‬ நடைபெற இருக்கும் ‪ மாநாட்டில்‬அனைத்து சகோதரர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இடம்.ஏறாவூர் பெண் சந்தை வீதி றகுமானியா மகா வித்தியாலயத்துக்கு அருகாமையில்.
காலம்;;ஜூன் 3ம் திகதி பிற்பகல். 3.00Pm ---10.00pm வரை
ஏற்பாடு;;அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள்.

றமழானே‬ வருக புனித றமழானே வருக

றமழானே‬ வருக புனித றமழானே வருக

Sunday 22 May 2016

‪வெள்ள‬ ‪‎நிவாரண‬ ‪சேகரிப்பு‬

 ‪வெள்ள‬ ‪‎நிவாரண‬ ‪சேகரிப்பு‬

 ‪வெள்ள‬ ‪‎நிவாரண‬ ‪சேகரிப்பு‬

ஏறாவூர் சம்மேளனத்தின் வழி நடத்தலுடன் ஒருங்கினைக்கப்பட்ட சமூகத்தால் முன்னெடுக்கப் படும் ‪#‎வெள்ள‬ ‪#‎நிவாரண‬ ‪#‎சேகரிப்பு‬இன்று 21-05-2016 அஸர் தொழுகையிலிருந்து இஷா வரை சகல பள்ளிவாசல்களிலும் மேற் கொள்ளப் பட்டதில்
பெருந்தொகையான பொருட்களும், பணமும் பெற்றுக்கொண்டோம்.
இன்று மாலை பள்ளிவாசல்கள் மூலம் கிடைத்த நிதி நிலைமை
முகைதீன் ஜும்ஆ பள்ளி - 41830/=
றிபாய் பள்ளி ---------------28000/=
ஷாபி பள்ளி--------------16141/=
ஜின்னா பள்ளி ------------16110/=
ஜாமிஉல் அக்பர் ---------15740/=
அக்பர் பள்ளி ------------15235/=
ஓட்டுப்பள்ளி -----------14785/=
ஆற்றங்கரை பள்ளி --14470/=
ஸாவியா ------------14400/=
காட்டுப்பள்ளி -------11070/=
மையத்துப்பிட்டி ----9950/=
மீராகேணி ---------8350/=
சதாம் குசைன் -----7500/=
வாளியப்பா -------4700/=
ஷாதுலி பள்ளி --3217/=
ஹசன் ஹுசைன் --2560/=
மஜீத் மாவத்தை -----2320/=
________________________________
மொத்தம் 226378/=
—----—---------------------------
நேற்று ஜும்ஆ பள்ளிகள் ஊடாகவும் இன்று பிரதான வீதி கடைகள் மற்றும் அமைப்புக்கள் ஊடாக சேகரிக்கப் பட்ட நிதி
609235/= ஆகும்.
தற்போதைய இருப்பு :
609235 +226378 = 835613/= ரூபாவாகும்.
(‪#‎எட்டு‬ ‪#‎லட்சத்து‬ ‪#‎முப்பத்தையாயிரத்து‬ ‪#‎அறுநூற்றி‬ ‪#‎பதிமூன்று‬‪#‎ரூபா‬.)
இவை பணமாக சேகரிக்கப் பட்டது .
பெருமளவு உலர் உணவு பொருட்களும் பால்மா பக்கற்களும் இதர அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கப் பெற்றுள்ளது .
அதே போல் வெளி நாடு வாழ் ஏறாவூர் சகோதரங்களால் சேகரிக்கப்பட்ட நிதியும் பெரும்பாலும் நாளை வந்தடையும்
இன்ஷா அல்லாஹ் - ஒரு பாரிய பங்களிப்பை ஏறாவூர் சமூகம் செய்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்
நாளை காலை 8 மணி முதல் ஏறாவூர் ஜாமியுல் அக்பர் பள்ளிவாசலிள் வைத்து பொருட்களை தரம் பிரித்து பொதியிடும் பணி இடம் பெற உள்ளது . இயலுமான சகோதர்கள் நாளை இந்த சமூக பணியில் தங்களை இணைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்
அல்லாஹ் அனைவரின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளை பொருந்திக் கொள்வதோடு ஒரு மகத்தான பணிக்காக வேற்றுமைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு எமக்குள் ஏற்படுத்தி உள்ள இந்த ஒற்றுமையை நிலைத்து நிற்க செய்திடுவாயாக ....

Monday 16 May 2016

ஏறாவூர் மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

 இன்று அல்லாஹ்வின் அருளாலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருனையாலும் செய்குமார்களின் துஆ பரக்கத்தாலும் சிறப்பாக நடந்து முடிந்த ஏறாவூர் சூபிமன்சில் மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின்
 مغانيم المصطفی الجامعة العربية மத்றஸாவில் 13பட்டமளிப்பு விழாவும் 14வது தலைப்பாகை சூட்டும் நிகழ்வும் .

 ஏறாவூர்  மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா



 ஏறாவூர்  மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

 ஏறாவூர்  மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

 ஏறாவூர்  மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

 ஏறாவூர்  மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

 ஏறாவூர்  மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா