السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 25 July 2015

உலமாக்கள் ஒன்று கூடல்


சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கான ஒன்று கூடல் அன்மையில் 20-01-2015 அன்று ஏறாவூர் ஸாலீஹீன் பள்ளிவாயலிள் நடை பெற்றது.

இக்கூட்டம் ஏறாவூர் காழி நீதிபதி முன்னால் உலமா சபைத் தலைவர் சங்கைக்குரிய மௌலவீ ஏ.எம் அப்துல் மஜீத் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.

இக்கூட்டத்துக்கு ஏறாவூர் பைஸானுல் மதீனா அறபுக் கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலவீ அப்துர் றஹீம் நூரீ (ஜெ.பி) அவர்களும் புத்தளம் அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அறபுக்கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலவீ இப்றாஹீம் றப்பானி அவர்ளும் மற்றும் ஏறாவூர் உலமா சபையின் செயலாளறும் நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக்கல்லூரியன் அதிபருமாகிய சங்கைக்குரிய மௌலவீ யு.அப்துல் ஹலீம் மன்பயீ அவர்களும் மற்றும் பல அறபுக்கல்லூரி உஸதாதுமார்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கான ஒன்று கூடல்

சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கான ஒன்று கூடல்

சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கான ஒன்று கூடல்

சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கான ஒன்று கூடல்

சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கான ஒன்று கூடல்


Friday 17 July 2015

புது ஆடையும் பெருநாளும்

அஸஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... நண்பர்களே....!

Mohamad Nasir's photo.Mohamad Nasir's photo.
என் இனிய தோழமைகளே... உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்...
எதிர்வரும் நாளையோ நாளை மறு தினமோ பெருநாளுக்காக எதிர்பார்த்து கொண்டிருக்கும் நாம் பல tex tile களிள் பலவித ஆடைகளையும் உயர்தர ஆடை முதல் உள்ளுரிலும் வெளியூர்களிளும் கொள்வனவு செய்து பெருநாளை
எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
அதுமட்டுமல்ல இந்த பரகத் நிறைந்த பெருநாளுக்காக 2...3... என்று கொள்வனவு செய்துள்ளோம்...ஆனால் ஆடைவாங்க பணமில்லாமல் நமது சகோதரர்கள் பெருநாள் சோகத்துடன் கழிந்து தான் போகின்றது...
இதை தடுக்க ஒவ்வோரு வசதி படைத்த முஸ்லீமாலும் முடியும்..... நீங்கள் துர பிரதேசத்துக்குத்தான் போக வேண்டும் என்று அவசியமில்லை உங்களது அன்டை வீட்டை பாருங்கள்... நம்மில் எத்தனைபேர் அன்டை வீட்டுக்காரர்களுக்கு ஆடை வாங்கி கொடுத்து இருக்கின்றோம்......! சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.! நமது பிள்ளையும் அன்டை வீட்டு பிள்ளையும் உரையாடிய உரையாடல் ஒன்று நான் நேரடியாக கண்டது......
அன்டை வீட்டு பிள்ளை :,- உடுப்பு எடுத்தாச்சா ...? உனக்கு உங்க வாப்பா எத்துன உடுப்பு எடுத்து தந்த ...?
அதற்கு நமது பிள்ளை 3 டவுசர் 2 சேட்டு 1டீசட்டு என்று பதிலளித்தது அதே கேள்வியை அன்டை வீட்டு பிள்ளையிடம் கேட்டதற்கு அப்பிள்ளையின் முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது..... அப்பிள்ளையின் மனம் எவ்வளவுக்கு பாதிப்படையும் ..! நாம் ஒருநாளைக்கு கறி வாங்குவதற்கே ஆக குறைந்தது 1000/= ரூபாய் தேவைப்படுகின்றது..... அப்படி இருக்க அன்டை வீட்டு பிள்ளைகளுக்ககு ஆடை வாங்க 1000/=, 500/= தான் தேவைப்பட போகின்றது
இவ்வுலகில் அல்லாஹ்வுக்காக செலவுசெய்யம் ஒரு ரூபாய் கூட மறுமையில் பண்மடங்காகின்றது எனவே நல்ல உள்ளம் படைத்த எமது சகோதரர்கள் நமது அன்டைவீட்டையும் கோஞ்சமாச்சும் கவனிங்கப்பா......

Thursday 16 July 2015

PJயின் டாப் டென் பொய்கள்

PJயின் டாப் டென் பொய்கள்

தலை சிறந்த ஹதீஸ் நிராகரிப்பாளரும் TNTJ-SLTJ தலைவருமான பீஜே அவர்கள் அல் குர்ஆன் சுன்னாவின் பெயரிலும் நபித்தோழர்கள் பெயரிலும் இமாம்களின் பெயரிலும் கூறிய டாப் டென் பொய்கள்
1) சூனியத்தை அல் குர்ஆன் ஹதீஸ் வழியில் நம்பியோர் முஷ்ரிக்.?
2) அல்லாஹ் கீல்வானுக்கு இறங்க வில்லை..? அவனின் அருளே இறங்குகின்றது ?
3) ஹாரூத் மாரூத் ஷைத்தான்களே..?
4) நபிகளார் நபித்துவத்துக்கு முன் மிஹ்ராஜ் சென்றார்கள்
(நூல் புகாரி)..?
5 ) சூனியத்தை நம்பியவன் சுவனம் நுழைய மாட்டன் அஹ்மதில் ஹதீஸ் உண்டு..?
6) சஹாபாக்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை இட்டுக்கொண்டனர் நாம் கூட பரவாயில்லைங்க .. அவர்கள் நம்மை விட விரோதமாக நடந்தனர்.?
7) நபித்தோழர்கள் பதவி மோகத்தில் அண்ணன் எப்ப சாவான்.? திண்ணை எப்ப காலி..? என்று நபிகளாரின் மரணத்தை எதிர்பார்த்திருந்தனர்..?
8) உஸ்மான் ரலி குடும்பத்தினரை தேடி தேடி பதவியில் அமர்த்தினார் சரியான முறையில் அவர் நிர்வாகம் செய்ய வில்லை..?
9) நேர்வழி நடந்த இமாம்கள் சூனியத்தை மறுத்துள்ளனர்
உதாரணம்:
அபூ பக்ர் ராஸி, முஹம்மத் இப்னு மசர்ரஹ், கஸ்ஸாலி, ஸஹ்ராணி ,காலி அப்துல் ஜப்பார், அல் ஜெஸ்ஸாஸ் போன்றோர் நேர்வழி நடந்த நல்லரிஞ்சர்கள்..?
10) இமாம் அல் பகவி சூனியத்தை மறுத்ததாக ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்கள் அல் புர்கானில் குறிப்பிட்டுள்ளார்..?
சுறுக்கம்:
அல்லாஹ் ரசூளின் வார்த்தைகள் பீஜேயின் அறிவுடன் ஒத்து போனால் மட்டுமே அது வஹி... இல்லை என்றால் அது பீஜே சஹாக்களிடம் பொய்யான கப்சாக்கள்
இன்னும் உள்ளவைகளை நீங்கள் பட்டியப்படுத்தலாம்

Monday 13 July 2015

கல்முனையில் இப்தார் நிகழ்வு

கல்முனையில்  இப்தார் நிகழ்வு 
 கல்முனை நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபுக்கு அருகாமையில் இயங்கி வரும் குருந்தையடியப்பா வலியுல்லாஹ் அன்னவர்களின் ஆன்மீக அமைப்பினால் இன்ஷா அல்லாஹ் நாளை 14-07-2015 அதன்    காரியாலயத்தில் இப்தார் நிகழ்வொன்றை நடாத்த தீர்மானித்துள்ளார்கள்.

இந்நிகழ்வுக்கு சிறப்பு பேச்சாளார  காத்தான்குடி பத்ரிய்யாஹ் பள்ளிவாயலின் தலைவரும் றப்பானிய்யஹ்  அரபுக்கல்லூரியின் அதிபருமாகிய சங்கைக்குரிய மௌலவீ  மாதிஹூர் ரஸூல் எச்.எம்.எம் இப்றாஹீம்  நத்வீ அவர்களினால் நிகழ்த்தப்படும்.

அதனைத் தொடர்ந்து 

  1. மீணவர்களுக்காக விஷேட துஆப்பிரார்த்னை 
  2. இலவச சிடி வினியோகம்
  3. இப்தார்
  4. ஸலவாத்
ஆகவே  சுன்னத் வல் ஜமாஅத் ஆன்மீகச் சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கவும்.வஸ்ஸலாம்



மகத்தான இரவு புணித லைலதுல் கத்ர்


மகத்தான இரவு புணித லைலதுல் கத்ர்

லைலதுல் கத்ர் இன்ன இரவுதான் என்பதில்  ஏராளமான கருத்து வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன. அது ஆண்டில் ஓர் இரவென்றும், பராஅத் இரவென்றும், றமழானில் ஓர் இரவென்றும், றமழான் 27ம் இரவு என்றும் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான  சொல் றமழான் இருபதுக்கு மேல் ஒற்றைப்படையாக வரும்  நாட்களில் உள்ள இரவுகளில்  ஒரு இரவென்றும், கூறப்பட்டிருப்பதால் றமழான் மாதத்தின்  கடைசிப்பத்து நாட்களும்  இஃதிகாப் இருப்பது மிக சிறப்பானதாகும்.

கீழ் வரும் ஹதீஸ்கள் லைலதுல் கத்ர் சம்பந்தமாக ஸஹீஹான அறிவிப்புகள் ஊடாக இடம் பெற்ற ஹதீஸ்களாகும்....

2015 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رِجَالًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أُرُوا لَيْلَةَ القَدْرِ فِي المَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ»

நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டதுஅப்போது,நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவேஅதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!" என்று கூறினார்கள்.

நூல் : புகாரி ஷரீப் , 
அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி) அவர்கள்.


2016 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: سَأَلْتُ أَبَا سَعِيدٍ، وَكَانَ لِي صَدِيقًا فَقَالَ: اعْتَكَفْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العَشْرَ الأَوْسَطَ مِنْ رَمَضَانَ، فَخَرَجَ صَبِيحَةَ عِشْرِينَ فَخَطَبَنَا، وَقَالَ: «إِنِّي أُرِيتُ لَيْلَةَ القَدْرِ، ثُمَّ أُنْسِيتُهَا - أَوْ نُسِّيتُهَا - فَالْتَمِسُوهَا فِي العَشْرِ الأَوَاخِرِ فِي الوَتْرِ، وَإِنِّي رَأَيْتُ أَنِّي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ، فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلْيَرْجِعْ»، فَرَجَعْنَا وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً، فَجَاءَتْ سَحَابَةٌ فَمَطَرَتْ حَتَّى سَالَ سَقْفُ المَسْجِدِ، وَكَانَ مِنْ جَرِيدِ النَّخْلِ، وَأُقِيمَتِ الصَّلاَةُ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِي المَاءِ وَالطِّينِ، حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்)'எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டதுபின்னர்அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவேநீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவேயார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!" என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால்பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன்.

நூல் : புகாரி ஷரீப் ,  
அறிவிப்பாளர் : அபூ ஸயீத்(ரலி) அவர்கள்.

2017 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي الوِتْرِ، مِنَ العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ»

"ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி ஷரீப் ,
அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள்.

2020 - حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجَاوِرُ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ وَيَقُولُ: «تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ»

நூல் : புகாரி ஷரீப் ,  அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; 'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" எனக் கூறுவார்கள்.

நூல் : புகாரி ஷரீப் ,
அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள்.

2021 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «التَمِسُوهَا فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ لَيْلَةَ القَدْرِ، فِي تَاسِعَةٍ تَبْقَى، فِي سَابِعَةٍ تَبْقَى، فِي خَامِسَةٍ تَبْقَى»تَابَعَهُ عَبْدُ الوَهَّابِ، عَنْ أَيُّوبَ

"ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! 'லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில்,இருபத்து மூன்றாவது இரவில்இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!" நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி ஷரீப் ,
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

2022 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي مِجْلَزٍ، وَعِكْرِمَةَ، قَالَ: ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ فِي العَشْرِ الأَوَاخِرِ، هِيَ فِي تِسْعٍ يَمْضِينَ، أَوْ فِي سَبْعٍ يَبْقَيْنَ» يَعْنِي لَيْلَةَ القَدْرِ، وَعَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ التَمِسُوا فِي أَرْبَعٍ وَعِشْرِينَ

"லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாள்களில் உள்ளதுஅது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!" என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி ஷரீப் ,  அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
"இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடுங்கள்!" என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்.

லைலதுல் கத்ரு இரவின் சிறப்பு அது அல்லாத மற்ற ஆயிரம் மாதங்களைவிட  மேலானதாகும். அதாவது அந்த ஓர் இரவு முப்பதினாயிரம் நாட்களைவிட  மேலானதாகும். இரவு என்பது ஒரு நாளில் பாதியாக இருப்பதால் முப்பதினாயிரம் நாட்களை இரண்டாக  ஆக்கி கணக்கிட்டால் அறுபதினாயிரம்  இரவுகளைவிட மேலானது  என்பது  தெரியவருகின்றது.

இமாம் கஸ்ஸாலி றஹ் அவர்களும், மற்றும் இமாம்கள் சிலரும் கூறியுள்ளதாவது றமழானின் முதற் பிறை ஞாயிறு அல்லது புதன் கிழமையாயிருந்தால் லைலதுல் கத்ர் இருபத்து ஒன்பதாம் இரவு என்பதாகவும், முதற்பிறை திங்கட்கிழமையாயிருந்தால் லைலதுல் கத்ர் இருபத்து ஒன்றாம் இரவு என்பதாகவும்,செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையாயிருந்தால் லைலதுல் கத்ர் இரபத்து ஏழாம் இரவென்றும், வியாழக்கிழமையாயிருந்தால்  இருபத்தைந்தாம் இரவென்றும், சனிக்கிழமையாய் இருந்தால்  இருபத்தி மூன்றாம் இரவென்றும் கூறியுள்ளார்கள்.

இந்தக்கணக்குப்படி  நான் பருவமடைந்த நாள் முதல் எனக்கு  லைலதுல் கத்ர் தவறியதே கிடையாது என்று ஷைகு அபுல் ஹஸன் ஜுர்ஜானி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

ومنها ما قال ابن عباس ايضا ليلة القدر تسعة أحرف وهو مذكور فى هذه السورة ثلاث مرات فتكون السابعة والعشرين

லைலதுல் கத்ரைப்பற்றி கூறப்பட்டுள்ள “இன்னா அன்ஜல்னா” சூறாவில் லைலதுல் கத்ரு என்ற வார்த்தை மூன்று தடவைகள் கூறப்பட்டுள்ளன. ஒருவார்த்தையில் ஒன்பது எழுத்துக்கள் வீதம்  மூன்று தடவைக்கு இருபத்து ஏழு எழுத்துக்கள் ஆகின்றன. ஆகவே இருபத்தேழாம் இரவுதான் லைலதுல் கத்ர் என்று சிலர் கூறியுள்ளனர். மேற்படி கருத்தானது தப்ஸீர் கலை மேதை இப்னு அப்பாஸ் றழி அவர்களின் கருத்தாகுமென இஸ்மாயீல் ஹக்கீ றஹ் அவர்கள் தங்களின் விளக்கவுரையில் கூறிக்காட்டுகின்றார்கள்.

இவ்வாறு சில காரியங்களில் இமாம்கள் சில எழுத்துக்களின் எண்ணிக்கைக்குத் தோதாக விடயங்களைக் கூறியிருப்பது அறிவுக்குப் பொருத்தமாகவும் அமைந்துள்ளது.

லைலதுல் கத்ருடைய இரவுக்கு சில அடையாளங்கள் ஹதீஸில் கூறப்பட்டுள்ளன. அவை அன்றைய இரவில் நட்ஷத்திரம் எரிந்து விழாது, நாய் குரைக்காது, சூடும் குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான  தன்மையாக இருக்கும், அன்று சூரியன் உதிக்கும்  போது சுடர் அதிகமின்றி பிறையைப் போல் இருக்கும் மேலும் ஷைதான் வெளியில் வரமாட்டான் என்றும் கூறப்பட்டுள்ளன.

லைலதுல் கத்ரு இரவில் தறாவீஹுக்குப் பின் இரவு முழுவதும் அல்லது முடிந்தளவு திக்ரு, கிறாஅத்,தஸ்பீஹ், ஆகியவற்றில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

றமழான் மாதம் முதல் பத்தில்  “அல்லாஹும்மர் ஹம்னீ “ என்று அல்லாஹ்வின் றஹ்மத்தையும்,

“அல்லாஹும்மக் பிர்லீ” என்று நடுப்பத்தில் அவனது பாவமன்னிப்பையும்,
“அல்லாஹும்மஃதிக்னீ மினன்னார்” என்று நரக விடுதலையையும் கேட்பது சுன்னத்தாகும்.   

மேலும் லைலதுல் கத்ருடைய இரவிலும் மற்ற நாட்களிலும் பின்வரும் துஆவை அதிகமாக ஓதுவதும் சுன்னத்தாகும்.

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

யா அல்லாஹ் நிச்சயமாக நீ மன்னிப்பவன்! நீ மன்னிப்பை விரும்புகின்றாய்; ஆகையால் என்னை மன்னித்தருள்வாயாக

***ஸகாதுல் பித்ர்***


பித்ர் என்றால் நோன்பை விடல்,திறத்தல் என்று பொருள்.நோன்பை விட்டு விட்டு பெருநாள் அன்று இதைக் கொடுப்பது வாஜிபாகுவதால் இதற்கு இப்பெயர் சொல்லப்படும். இது ரமழானைப் போல் ஹிஜ்ரி 2 ல் கடமையாக்கப்பட்டது.
தொழுகையில் ஏற்படும் குறைகளை ஸஜ்தா ஸஹ்வு (மறதிற்காக செய்யும் ஸுஜூத்) எவ்வாறு சீராக்குகின்றதோ,அதேபோல் ரமழான் நோன்பில் ஏற்படும் குறைகளை ஸகாதுல் பித்ர் சீராக்குகின்றது என்று இமாம் வகீ: (رحمة الله عليه) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அதை ஹதீஸும் உறுதிப்படுத்துகின்றது.
ஸகாதுல் பித்ர் சுதந்திரவாதயின் மீது பெருநாள் சூரியன் மறைந்ததிலிருந்து (அதாவது ரமழான் முடிவு பெற்று ஷவ்வால் மாதம் துவக்கம்) வாஜிபாகும். அதாவது ரமழானின் கடைசிப் பகுதியையும், ஷவ்வாலின் துவக்கப் பகுதியையும் எத்துவது கொண்டு வாஜிபாகும். எனவே அன்று சூரியன் மறைந்த பின் பிறந்த குழந்தைக்காக, திருமணம் முடித்த மனைவிக்காக, அதே போன்று ம:ரிபுக்குப் பின் செல்வந்தனாகியவன், இஸ்லாத்திற்கு வந்தவன் மீதும் ஸகாதுல் பித்ர் கடமையாகாது. சுருக்கமாக சொல்வதென்றால் ரமழானையும், ஷவ்வாலையும் எத்துவது கொண்டு தான் வாஜிபாகும். எனவே அன்று (ரமழான் முடிந்து ஷவ்வால் துவக்கம்) சூரியன் மறைந்த பின் இறந்தவன், தலாக் சொல்லப்பட்டவள், ஏழையாகிவிட்டவன் மீதுண்டான கடமை நீங்காது. எனவே அவர்களுக்குண்டான ஸகாதை பொறுப்புதாரிகள் கொடுக்க வேண்டும். ஏழையானவன் வசதி வந்த பிறகு கொடுக்க வேண்டும்.
ஸகாதுல் பித்ர் கொடுபபதற்குன்டான நேரம் அது கடமையான நேரம் முதல் பெருநாளன்று சூரியன் மறையும் வரையிலாகும். எனவே பெருநாள் தினம் சூரியன் மறையும் முன் முஸ்லீம்களில் எவர் மீது அவன் படிவுடை (செலவு) கொடுப்பது வாஜிபாகுமோ, அத்துணை பேரைத் தொட்டும் ஸகாதுல் பித்ர் கொடுப்பது இவன் மீது வாஜிபாகும்.
வசதியான சிறுவனுக்காக தந்தை மீது கடமையாகாது. மாறாக அச்சிறுவனின் பொருளிலிருந்து தான் கொடுக்க வேண்டும். என்றாலும் அவனுக்காக தந்தை கொடுத்தாலும் கூடிவிடும். கொடுக்கும் போது பிள்ளையின் பணத்திலிருந்து திரும்ப பெற்றுக் கொள்வேன் என்று நிய்யத்து வைத்தால் பெற்றுக் கொள்ளலாம்.
விபச்சாரத்தில் பிறந்த குழந்தைக்காக தாயின் மீதே கடமையாகும். சம்பாதிப்பதற்கு சக்தியுள்ள பெரிய மகனுக்காக தந்தை கொடுப்பது வாஜிபில்லை.
எனவே இந்த ஸகாதுல் பித்ர் யார் மீது கடமையோ அவரின், அதேபோன்று அவர் யார் மீது செலவு கொடுப்பது வாஜிபோ ; அவர்களின் அன்றைய (பெருநாள் இரவு ,பகல்) உணவு,ஆடை,வீட்டுச் செலவு(வீடு வாடகை என்றால் அதன் செலவு) ,பணியாளர் செலவு,போக மீதமிருந்தால் தான் ஸகாதுல் பித்ர் வாஜிபாகும். உறுதியான சொல்லின் பிரகாரம் கடன் இருந்தாலும் ஸகாதுல் பித்ர் வாஜிபாகாது. (என்றாலும் கடன் இருந்தாலும் ஸகாதுல் பித்ர் வாஜிபென்று ஒரு கூற்றுள்ளது.)
***ஸகாதுல் பித்ரின் அளவு :
ஸகாதுல் பித்ரின் அளவு ஒரு "ஸாஃ" ஆகும். அதாவது நான்கு முத்துகளாகும். ஒரு முத்தின் அளவு மிகவும் பெரிதுமில்லாத மிகவும் சிறிதுமில்லாத நடுத்தரமான இரண்டு கைகளைக் கொண்டு (உணவை) அல்லும் அளவாகும். எனவே இவ்வாறான நான்கு அள்ளுதல் ஸகாதுல் பித்ரின் அளவாகும்.
எனவே வழங்கப்படும் ஊரில் மிகுதியாக உண்ணப்படும் உணவாக ஸகாதுல் பித்ர் இருக்க வேண்டும். அவ்வாரில்லாதவைகளை கொடுக்க முடியாது. அதேபோல் கொடுப்பவரின் பெருன்பான்மை உணவாகவோ அல்லது கொடுப்பவரின் ஊரின் பெருன்பான்மை உணவாகவோ, இருந்தாலும் கூடாது. ஏனெனில் அதை பெறுவதற்கு தகுதியானவர்கள் அவ்வூரின் பெருன்பான்மை உணவையே எதிர் பார்க்கின்றனர். இதனடிப்படையில் யாருக்காக கொடுக்கப் படுகின்றதோ, அவனின் ஊரில் உள்ள ஏழைகளுக்கே ஸகாதுல் பித்ர் கொடுப்பது வாஜிபாகும்.
ஓடிப் போனவன் அவன் எங்குள்ளான் என்று தெரியாத நிலையில் அவனுக்கு உடனே ஸகாதுல் பித்ர் கொடுக்க வேண்டும் என்றும் , அவன் திரும்ப வந்த பின் தான் வாஜிப் என்றும் ,எதுவுமே வாஜிபில்லை என்றும் பல கருத்துக்கள் உண்டு.
ஸகாதுல் பித்ரை உணவாகத் தான் கொடுக்க வேண்டும். அதன் கிரயத்தை (பணத்தை) கொடுக்கக் கூடாது. அதேபோன்று குறை உள்ளதை, புழு அறித்ததை, ஈரமானதை அதை பெறுபவர்கள் ஈரமான உணவை பயன்படுத்தக் கூடியவர்களாக இருந்தாலும் கொடுக்கக் கூடாது. ஆனால் ஈரமான அவ்வுணவு பின்பு காய்ந்து உண்பதற்கும், தங்கரீகம் பண்ணி வைப்பதற்கும் தகுதியானதாக ஆகிவிட்டால் பரவாயில்லை. இவ்வாறு குறையுள்ளது, அல்லது ஈரமானதைத் தவிற வேறு ஒன்றும் இல்லை என்றால் இவைகளை கொடுக்கலாம். அதில் பரவாயில்லை. அது அப்போது ஆகுமானதே.
பணம் இப்போது (தொலைவில்) கை வசம் இல்லாதிருப்பது அல்லது ஸகாதுல் பித்ரைப் பெறுவதற்கு தகுதியானார்கள் இல்லாதிருப்பது போன்ற ஏதும் தங்கடமில்லாமல் ஸகாதுல் பித்ரை பெருனாளுடைய பகலை விட்டும் பிற்படுத்துவது ஹராமாகும். ம:ரிப் வரையிளும் நிறைவேற்ற வில்லையென்றால் விரைவாக கலா செய்ய வேண்டும்.
ஸகாதுல் பித்ரை ரமழானுடைய துவக்கத்திலிருந்தே கொடுப்பது ஆகுமானது. அதை பெருநாள் தொழுகையை விட்டும் பிற்படுத்தாமலிருப்பது ஸுன்னத்தாகும். அவ்வாறு பிற்படுத்துவது மகரூஹாகும். எனினும் சொந்தத்தில் உள்ள ஏழை, அண்டை வீட்டுக்கார ஏழை போன்றோரை எதிர்பார்த்து பிற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் சூரியன் மறையாமலிருக்கும் வரை அவ்வாறு பிற்படுத்துவது ஸுன்னத்தாகும். சூரியன் மறைய முன் வழங்கிட வேண்டும்.
(மூலம் - பத்ஹுள் முஈன் )
by : Muhammed Aadil

Sunday 12 July 2015

தொழுகைக்காக சென்ற மௌலவீயின் மீது வஹாபிகள் தாக்குதல்



ஏறாவூர், மீராகேணி வீதியில் அமைந்துள்ள தௌஹீத் ஜமாஅத்தினரால் நிருவகித்து வரும் ஆயிஷா மஸ்ஜிதுல் தொழுகை  நடாத்திவிட்டு கூட்டுத் துஆ  ஒதியமைக்காக சங்கைக்குரிய மௌலவீயுடன் தர்க்கித்து சில வஹாபிகள் அவரின்  மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால்   அவரின் கை சேதமாகியது  . தற்காப்புக்காக   மௌலவீயும்  அவரது நன்பர்களும் பதில் தாக்குதல் நடாத்தியுள்ளார்கள்  இது விடயமாக 2  தரப்பினரும்  பொலிஸில் முறைப்பாடுகள் செய்துள்ளார்கள் . 


கருத்தை கருத்தால் மோதாத கோழைத்தனம்!

மாற்றுக் கருத்துக்களை மதிக்காதவன் மனிதனாகவே இருக்க முடியாது. கூட்டுத் துஆ உண்டா?  இல்லியா  என்ற கருத்து முரண்பாடு வரலாற்று நெடுகிலும் அறிஞர்களிடம் உள்ளதுதான். இன்றும் கூட  பல ஊரில் பல உலமாக்கள் காசிக்காக கூட்டுத்  துஆவை மறுப்பவர்கள் இருக்கிறார்கள் காசிக்காக கூட்டுத்  துஆவை ஓதுபவர்களும் இருக்கிறார்கள். அன்மையில் இலங்கை வந்த இந்தியாவைச் சேர்ந்த வஹாபி அப்துல் பாசித் புகாரி பல ஊர்களில் தொழுகை நடாத்திவிட்டு கூட்டுத்  துஆ ஒதி இந்தியாவுக்குச் சென்று நான் தவ்பா செய்கிறேன் என்று பேட்டி கொடுத்த வரலாறும் எல்லோருக்கும்  தொரிந்ததே!. .(கூட்டுத் துஆ ஓதிய அப்துல் பாஸித்

 மாற்றுக் கருத்துக்களை சகிப்புத்தன்மையுடன் நோக்கும் பண்பு மார்க்க அறிஞர்களிடம் இஸ்லாமியர்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கருத்து முரண்பாடுகளை வன்முறையால் எதிர் கொள்வது இஸ்லாமியர்களின்  கொள்கை அல்ல. அது காட்டிலுள்ள வேடர்களின் கொள்கையாகும்.யுதர்களின் கலாச்சரமாகும். மௌலவீயை  மிலேச்சத்தனமாகத் தாக்கியதிலிருந்தே கருத்தைக் கருத்தால் தான் மோத வேண்டுமென்ற அடிப்படை நாகரீகம் தெரியாத கோழையே இந்த வஹாபிகள் என நாம் முடிவு செய்யலாம்.




பள்ளிவாயலை தாக்கியவர்கள் யாராக இருந்தாலும்  தண்டிக்கப் பட வேண்டியவர்களே!

 அல்லாஹூவே மிக நன்கரிந்தவன்.

Wednesday 8 July 2015

வஹ்ஹாபிகளின் மோசடி அம்பலம்.

இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பத்வா என்ன ?



வஹ்ஹாபிகளின் மோசடி அம்பலம்...

வஹ்ஹாபிகளின் மோசடி அம்பலம்.

வஹ்ஹாபிகளின் மோசடி அம்பலம்.

ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரனி (ரஹ்) அவர்களைக் குறித்து அவர்களுது கிதாபாகிய ‘’தப்காதுல் குப்ராவில்’’ சேக் ஸாலிஹ் அப்துல் காதிர் சுப்கீ (ரஹ்) அவர்கள் பெண் பார்த்த விஷயத்தில் ஆபாசமான வாசகங்கள் உள்ளன என்றும், எந்த ஆலிமும் தங்களுது ஜும்ஆ மேடையில் அர்த்தம் வைத்து பேசினால் தனது ஜமாஅத்தையே களைத்து விடுகிறேன் என்று வீர வசனம் பேசிய வீடியோ ஒன்று முகநூல்,டெலிகிராம், வாட்ஸ்ஆப்களில் உலா வருகிறது. 

இதை நாம் ஒன்று பெறிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் நபி (ஸல்) அவர்களையும், உம்மஹாத்துல் முஃமினீன்களான நபியின் மனைவியர்களையும், ஸஹாபாக்களையும், இறை நேசர்களையும், மற்றும் நான்கு மத்ஹபுகளை உருவாக்கிய கண்ணியத்திற்குரிய இமாம்களையும் வசைபாடி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரானி (ரஹ்) அவர்கள் எழுதிய கிதாபின் முழுப்பெயர்

(الطبقات الكبرى المسمى لوافح الانوار القدسية فى مناقب الاخيار الصوفية, الناشر: مكتبة الدينية, القاهرة )

‘’அத்தபாகாதுல் குப்ரா என சொல்லப்படுகின்ற இந்த கிதாபின் முழுப்பெயர்: ‘’லவாஃபிஹுல் அன்வாருல் குத்ஸிய்யா ஃபீ மனாகிபில் அக்யாரிஸ் ஸுஃபிய்யா’’ என்பதாகும். இதை எகிப்தைச் சார்ந்த ‘மக்தபா தீனிய்யா’ என்பவர்கள் வெளியீடு செய்திருக்கிறார்கள்.
ஸ்பெயினில் ஸுஃபியிஸத்திற்கு எதிராக பல போரட்டங்களும் குழப்பங்களும் மேற்கொண்டனர். அந்த காலகட்டத்தில் அல்லாமா இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் எழுதிய மிகப் பிரமளமான கிதாபாகிய ‘இஹ்யாவுல் உலூமுத்தீன்’ அல்லாமா முஹையித்தீன் இப்னு அரபி (ரஹ்) அவர்களது பிரபலமான கிதாபாகிய ஃபுதூஹாதுல் மக்கிய்யா’ போன்ற கிதாபுகளை தீயிட்டு கொளுத்தவும் செய்திருக்கின்றனர். இன்று இஹ்யாவும், ஃபுதூஹாதுல் மக்கிய்யாவும் வாழ்கிறது. அதை கொளுத்தியவர் காணமல் போய்விட்டார்கள். அதே காலகட்டத்தில் தஸவ்வுஃப் கிதாபுகளில் விளையாடவும் செய்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த விளையாட்டை ‘அத்தபகாதுல் குப்ராவிலும் காட்டியிருக்கிறார்கள்.
ஆதாரமாக போடப்பட்டுள்ள அந்த கிதாப்
(الطبقات الكبرى للشعرانى)‘’
அத்தபாகாதுல் குப்ரா லிஷ்ஷஃரானி’’ என்று மொட்டையான பெயரோடும், அந்த கிதாபை பப்ளிஷ் (வெளியிட்டவர்) யார்? என்ற தகவலோ, எந்த ஆண்டு? என்ற தகவலோ இல்லை. அதோடு மட்டுமல்ல, அந்த கிதாபின் பக்கங்கள் (Page Aliments Justify) ஒழுங்கு படுத்தப்படவில்லை. அது மோசடித்தனமாக இடைசெறுகல் செய்யப்பட்டுள்ளது என்பதை காட்டிக்கொடுக்கிறது. இது மக்தபுஷ் ஷாமிலாவிலும், கூகுலில் இலவச PDF கிதாபாகவும் கிடைக்கிறது. அசல் கிதாபில் அப்படி ஒரு வாசகம் இல்லை என்பதே தெளிவான முடிவாகும். இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் குழப்பத்திலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்!!


  1. See More
  2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விட்ட சவாலுக்கு மௌலவி முஹம்மது அலி பிலாலி


இலங்கை A.C.J.U உலமாவின் பத்வா என்ன ?

சுன்னத் ஜமாஅத் இளைஞர் இயக்கம்'s photo.
அல்லாஹ் அருளிய அல்குரானில் பிழை உண்டு ,அல்லாவுக்கு உருவம் உண்டு ,நடைமுறைக்கு ஒத்து வரவில்லை என்றால் சஹீகாண ஹதீஸாக இருந்தாலும் தூக்கி வீசு ,சஹாபாக்களை இழிவாக பேசு ,என்ற நச்சுக்கருத்துக்களை சமுதாயத்தில் புகுத்திய TNTJ அமைப்பின் பிரபல வழிகேடன் அண்ணன் PJ சாமியாருக்கு தமிழ்நாடு ஜமாதுல் உலமா சபை முர்தத் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கி இருக்கும் இந்த சந்தர்பத்தில் இலங்கையில் SLTJ என்ற அமைப்பினரும் வழிகெட்ட முர்தத் PJ சாமியாரை சிறிதளவேனும் மாற்றம் இல்லாமல் பின்பற்றி இந்த வழிகெட்ட கொள்கையை மக்களுக்கு மத்தியில் பரப்பி வருகின்றனர் இந்த முர்தத்தை பின்பற்றும் SLTJ அமைப்பை பற்றி இது வரை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வாய் திறக்கவே இல்லை ஏன்? இலங்கை உலமா சபை ...........உலமா சபையா ? அல்லது உலக்கை சபையா ? பொறுத்திருந்து பார்போம் இலங்கை ஜம்மியாவின் லச்சனத்தை

இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பத்வா என்ன ?
Add caption

Monday 6 July 2015

அஷ்ஷெய்ஹ் அப்துல் காதிர் (நூரி- soofi ) நாயகத்தின் 33 வது வருட நினைவு தினம்


Add caption

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹ

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 11-07-2015 சனிக்கிழமை மாலை அல் ஆரிபு பில்லாஹ் அஷ்ஷெய்ஹ் அப்துல் காதிர் (நூரி-ஸ-பி ) நாயகம் கத்தஸல்லாஹ_ சிர்ரஹ_ல் அஸீஸ் அவர்களின் 33 வது வருட நினைவு தினத்தை  முன்னிட்டு அஸ்ர் தொழுகையினைத் தொடர்ந்து

கல்முனை மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ்வில் கத்முல் குர்ஆன் ஒதப்பட்டு அவர்களின் சில்சிலாவும் வாசிக்கப்பட்டு அன்னார் மீதும் உலக முஸ்லிம்களுக்காகவும் கல்முனை சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியத்தின் வளர்ச்சிக்காக கஷ்டப்பட்டு மர்ஹ_ம்களாக வாழும் நம் சகோதரர்களுக்காகவும் மர்;ஹ_ம் சங்கைக்குரிய யாசீன் மௌலவீக்காகவும்ääஎங்கள் ஞானபிதா அவர்களின் ஆயுள் நீளமாக  வேண்டும் என்பதற்காகவும் விஷேட துஆ பிரார்தனை சங்கைக்குரிய மௌலவீ மாதிஹ_ர் ரஸ_ல் எச்எம்.எம் இப்றாஹீம் நத்வீ அவர்களினால் நிகழ்த்தப்பட்டு பள்ளிவாயலில் இப்தாறும் நடைபெறும்.

தொடர்ந்து தப்றுக் வினியோகம் செய்யப்பட்டு ஸலவாத்துடன் நிறைவு பெறும் ஆகவே சுன்னத் வல் ஜமாஅத் சகோதரர்கள் அனைவரும் தவறாமல் சமூகமளிக்குமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறார்கள் மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் நிர்வாகிகள்

கல்முனை சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம்
மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் கல்முனை
இலங்கை

அஷ்ஷெய்ஹ் அப்துல் காதிர் (நூரி- soofi ) நாயகத்தின் 33 வது வருட நினைவு தினம்




ஏறாவூர் அல் மத்ரஸதுல் காதிரிய்யஹ் அரபுக் கல்லூரியில் புணித பத்ர் மனாகிப் மஜ்லிஸ்

ஏறாவூர் அல் மத்ரஸதுல் காதிரிய்யஹ் அரபுக் கல்லூரியில் புணித பத்ர் மனாகிப் மஜ்லிஸ்


இன்று 06-07-2015 ஏறாவூர் பெண்சந்தை வீதியில் அமைந்துள்ள அல் மத்ரஸதுல் காதிரிய்யஹ் அரபுக் கல்லூரியில் புணித பத்ர் ஸஹாபாக்கள் நிணைவாக ஏறாவூர் ஒட்டுப்பள்ளிவாயலின் பேஸ் இமாம் சங்கைக்குரிய மௌலவீ எம்.தஸ்லீம் ஜலாலீ அவர்களின் தலைமையில் பத்ர் மௌலீத் ஒதப்பட்டு நாட்டு மக்களுக்காகவும் உலக முஸ்லிம்களுக்காகவும் துஆ பிரார்த்தனை நடை பெற்றது.

இந்நிகழ்வுக்கு

  1. சங்கைக்குரிய மௌலவீ புத்தளம் அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யஹ் அரபுக்கல்லூரியன் அதிபர் இப்பறாஹீம் றப்பானி 
  2.  சங்கைக்குரிய மௌலவீ அர்ஷாத் முஸ்தபீ
  3. சங்கைக்குரிய மௌலவீ அன்சார் நஜாஹீ
  4. சங்கைகுரிய மௌலவீ இர்பான் வாஹிதி
  5. சங்கைக்குரிய மௌலவீ அனீஸ் மன்பயீ பைஸானுல் மதீனா அரபுக்கல்லூரியன் சிரேஸ்ட்ட விரிவுரையாளர்
  6. சங்கைக்குரிய மௌலவீ அன்வர் மன்பயி தகாபீ நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக்கல்லூரியன் சிரேஸ்ட்ட விரிவுரையாளர
  7. சங்கைக்குரிய மௌலவீ அப்துல் கபீர் மன்பயீ பேஸ் இமாம் அல் ஹஸன் வல் ஹ_ஸைன் பள்ளிவாயல் ஏறாவூர் 
  8. சங்கைக்குரிய மௌலவீ மக்பூல் உஸ்மானி 
  9. சங்கைக்குரிய மௌலவீ பிர்தௌவ்ஸ் முஸ்தபி
  10. ஏறாவூர் நகர முதல்வர் ஜனாப் தஸ்லீம் 

மற்றும் கலாசலை நிர்வாகிகள் ஊர் ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

ஏறாவூர் அல் மத்ரஸதுல் காதிரிய்யஹ் அரபுக் கல்லூரியில் புணித பத்ர் மனாகிப் மஜ்லிஸ்







தமிழ் நாடு ஜமாஅதுல் உலமாவுக்கான பாராட்டுக் கடிதம் அ. இ ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா சபை

இந்தியா - தமிழ் நாடு ஜமாஅதுல் உலமா சபை வழங்கிய பத்வாவை ஆதரித்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் எழுதப்பட்ட பாராட்டுக் கடிதம் அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா சபையின் சார்பாக 05.07.2015 அன்று தமிழ் நாடு ஜமாஅதுல் உலம சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அக்கடிதத்தை உலமாஉகளின் பார்வைக்காக இங்கு தருகிறோம்.

الحمد لله الذي نوّر قلوب أنبيائه وأوليائه وعلمائه الربّانيّين بمصابيح العلوم الظاهرة والباطنة، وهدى بهم من ضلّ وزلّ عن العقائد السنّيّة الفاخرة، وطهّربهم قلوب المتنجّسين بالعقيدة الغيريّة، وأعلى بهم مراتب من اتصف بالعقيدة العينية، والصلاة والسلام على أوّل قابل للتجلّي من الحقيقة الكليّة، وعلى آله وأصحابه الذي حازوا الخيرات كلّها ببركات سيّد البريّة، وبعد

فإلى سعادات العلماء السنيّين الكرام! والأساتيذ الربّانيّين  العظام! المنتمين إلى جماعة العلماء بتامل ناد،

السلام عليكم ورحمة الله وبركاته 

أقدّم إلى سعاداتكم أجمل التّهاني وأفضل التحيّات، وأرفع يدي إلى الله الذي لاإله غيره ولا شيئ سواه، ليطيل أعماركم فى نشـر دينه، ولِيَحْفَظَكُم من شرور أعدائكم الذين لا نصيب لهم من العقيدة السنّة الأشعريّة، ولا حظّ لهم من العقيدة الصوفيّة الصافية،

ولمّا عرفت فتواكم بردّة رين العابدين بالراء المهملة، غرقت فى بحر الفرح والسـرور، وأخبرتُ الخبر لجميع الأصدقاء الذين يعملون فى البلاد الخارجيّة من الدّول العربية وغيرها،

إنّ فتواكم هذه قدّت عنقه وأعناق المبتدعين الوهّابيّين الذين يتعلّقون بأذياله ويعيشون بإحسانه، وقلعت أسنانهم بعرقها، وألقتِ الرُّعب فى قلوبهم ودمّرت مخاخَهم،

وأمّا الوهّابيّون بهذه الدّولة فهم منتشـرون فى كلّ ناحية من نواحيها، وفي كلّ قرية من قراها، فقد عمّت الوهّابيّة العباد والبلاد، ودخلت كلّ بيت من بيوت المسلمين، كما تدخل الدِّيدانُ فى أيّام المطر والوحل والبرد الشديد، فكان الأب سنّيا والإبن وهّابيّا فى بيت واحد،

وأمّا العلماء بهذه الدّولة فطائفتان فى العقيدة، طائفة سنّيّون، وطائفة وهّابيّون، والسنّيون أكثر عددا من الوهّابيّين فى نفس الأمر، والوهّابيّون أقلّ منهم، ولكنّهم - الوهّابيّين - أقوياء منهم، والعلماء السنّيّون يخافون من الوهّابيّين خوفا شديدا لقلّة البضاعة فى سفينتهم، فلا يطلعون فى المحافل والمجالس ولا ينكرون شيأ ممّا يقول الوهابيّون، ولايردّون على عقائدهم الفاسدة، واحد منهم يصبح سنّيا ويمسـي وهّابيّا، بسَبَبِ ماينال من الأغنياء الوهّابيّين من الأموال والمساعدات، وأمّا الوهّابيّون فهم أشدّ عداوة على العلماء السنّيّين، لا سِيَّمَا على هذا الفقير الحقير، الذي شغله وكسبه إنكارهم وإقامةُ علمِ التصوف - التوحيد الحقيقي-، 

وشكرا لكم على سعيكم

أحقر العباد وأخوكم فى الله
عبد الرؤوف عبد الجواد


والسلام الأسنى والتحية الحسنى عليكم جميعا
وعلى الشيخ أبى الدلائل عبد الله جمالي
وعلى دائم الوضوء خاجا محي الدين الباقوي