السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 29 November 2019

வாழ்வு ஒரு நொடியில் மாறிப் போகும்.

வாழ்வு ஒரு நொடியில் மாறிப் போகும்.

25 வயது இளைஞர், மோட்டார் சைக்கிளில் சென்று வழுக்கி விழுந்துள்ளார்.
வெளிக்காயங்கள் எதுவுமில்லை. முள்ளந்தண்டு எலும்பு கழுத்துக்கு கீழே நொறுங்கிப் போயிருந்தது. கை வேலை செய்கிறது, அதற்கு கீழே எதுவுமில்லை.
“டொக்டர் என்ட கால தூக்க ஏலாம இருக்கு”
“உங்கட முள்ளந்தண்டு வடம் உடைஞ்சு பெய்த்து, இனி கால் இரண்டும் வேலை செய்யாது”
“ஒபரேஷன் செஞ்சா சரி வராதா?”
“இல்ல”
“அப்ப என்ட வாழ்க்க”
“..:.......”
“அப்ப என்னதான் செய்ய ஏலும்?”
“உடைஞ்ச எலும்ப fix பண்ணி தர ஏலும். அதற்கு பிறகு கைய ஊண்டி இருக்க ஏலும்”
“நடக்க ஏலாதா?”
“வீல் செயார் பாவிக்க ஏலும்”
“அப்ப என்ட தொழில்?”
“என்ன வேல செய்றீங்க”
“ஒரு கடையில வேலைக்கு நிக்கன்”
நான் பொறுப்பாக இருந்த கடந்த 24 மணித்தியாலயங்களில் இவரும் இவரைப் போன்ற இன்னும் மூணு பேரும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு அட்மிட்டாகியுள்ளனர். மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்து விழுந்தவர்கள். ஒருவர் மரத்திலிருந்து விழுந்திருக்கிறார். இந்த நான்கு பேரும் இனி சுயமாக நடக்க முடியாது.
வாழ்வு ஒரு நொடியில் மாறிப் போகும்.
எங்களை மன்னித்து விடு இறைவா!
Dr Ahamed Nihaj
MBBS, MD-Orthopaedics

ஏறாவூர் நகரசபை ஆசிரியர்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்

ஏறாவூர்  நகரசபை ஆசிரியர்களுக்கு  விடுக்கப்படும்  அறிவித்தல்

கல்வி அமைச்சின் பாடசாலை நாட்காட்டிக்கமைவாக எதிர்வரும் 29.11.2019 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மூடப்பட்டு 2020 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 2020.01.02 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.இதனடிப்படையில் மாணவர்களின் நலன்கருதி எதிர்வரும் 2019.11.30 ஆம் திகதி முதல் 2019.12.31ஆம் திகதி வரை எமது நகரசபைக்குட்பட்ட சகல தனியார் கல்வி நிலையங்கள், வீடுகளில் நடத்தப்படும் மேலதிக நேர வகுப்புக்கள் மற்றும் மேலதிக ஆங்கிலப் பாட வகுப்புக்கள் அனைத்தினையும் மூடி மாணவர்களுக்கு விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது...
மேலும் 2020 ஆம் ஆண்டு வீடுகளில் தனியார் மேலதிக நேர வகுப்புக்கள் நடாத்தும் ஆசிரியர்கள் ஏறாவூர் நகரசபையில் முன்பதிவு செய்து அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
இவ்விடயத்தில் தத்தமது வீடுகளில் மேலதிக நேர வகுப்புக்கள் நடாத்தும் ஆசிரியர்கள் நகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் இவ்வறிவுறுத்தலை மீறி செயற்படுவதனால் ஏற்படும் சட்ட ரீதியான சிக்கல்களை தவிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் ...
இவ்வண்ணம்
நிருவாகம்
ஏறாவூர் நகரசபை

Monday 25 November 2019

கஹட்டோவிட்டாவில் மீலாதுன்நபி பெருவிழா

#கஹட்டோவிட்டாவில் #சிறப்புடன்  #நடைபெற்று #முடிந்த #மீலாதுன்நபி #பெருவிழா .

கஹட்டோவிட்ட பாதிபீயனஸ் அமைப்பினரால் நடாத்தப்பட்ட மீலாதுன்நபி பெருவிழா கடந்த 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிமுதல் பாதிபிய்யா தக்கியா வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மீலாதுன்நபி விழாவை முன்னிட்டு கஹட்டோவிட்டா ஓகடபொல பகுதியில் உள்ள சுமார் 23 குர்ஆன் மத்ரஸா மாணவ மாணவிகளுக்கிடையே பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பர்சில்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு முதலாம் இடம் பெற்ற மாணவர்களின் நிகழ்ச்சிகளும் மேடையில் அரங்கேற்றப்பட்டன.

நிகழ்வுக்கு பாதிபிய்யா தக்கியாவின் கலீபா மௌலவி எம்.என்.எம் இஜ்லான் காஸிமி அவர்கள் தலைமை தாங்கியதோடு இரண்டாவது கட்ட நிகழ்ச்சிகள் அஸர் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமானது நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட பலஸ்தீன நாட்டுக்கான முன்னால் தூதுவர் அல் ஹாஜ் பௌஸான் அன்வர் அவர்கள் கலந்து சிறப்புரையாற்றினார்கள்.இந்நிகழ்வை தொடரந்து சங்கைமிக்க உலமாக்களின் உபண்ணியாசங்கள் பலதும் இடம்பெற்றன .
இவற்றுள் மாத்தறை மின்ஹதுல் பாஸிய்யா அரபுக்கல்லூரியின் அதிபர் அல் ஆலிம் மௌலவி பஸ்மின் மௌலானா அவர்கள் மாநபியின் நேசத்துடனே மாநபியை பின்பற்ற வேண்டும் என்ற தொனிப்பொருளில் அழகிய சன்மார்க்க உரையை நிகழ்த்தினார்.

இவரது நிகழ்ச்சியை தொடரந்து அத்தனகல்ல இளைஞர் மன்றத்தில் தலைவர் கௌரவ உபுல் ஹர்ச அவர்கள் கலந்து இளைஞர்களை தத்ததமது சமயத்துக்கும் சமூகத்துக்கும் ஊருக்கும் நாட்டுக்கும் பயன்பெற்று தனக்கூடிய சிறந்த இளைஞர்களை உருவாக்குவதே தமது அமைப்பின் நோக்கம் எனவும் கஹட்டோவிட்டாவில் இரண்டு இளைஞர் கழகங்கள் சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும் எதிர் காலத்தில் இளைஞர் பாராளுமன்றத்துக்கு இவ்வூரில் இருந்து ஒருவராவது போடப்பட வேண்டும் அதற்காக தகுதியான திறமை மிக்க வாலிபர்களையும் உள்வாங்கி எதிர் காலத்தில் சிறப்பாக செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வின் அடுத்த அம்சமாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் சகோதரர் இன்திகாப் ஸுல்பர் அவர்களின் சிறப்பு உரை இடம்பெற்றது அவரது உரை மிக ஆழமான அகலமான பல விளக்கங்களை கொண்டிருந்ததுடன் வரலாற்றில் முஸ்லிம்கள் எந்தளவு பங்களிப்புக்களை செய்திருக்கிறார்கள் என்றும் பாடப்புத்தகத்தில் வஹ்ஹாபிச நச்சுக்கருத்துக்களை பரப்பி வருவது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மஃரிப் தொழுகையுடன் ஆரம்பமான நிகழ்வில் இஷா வரைக்கும் மீலாது போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இஷாத்தொழுகையோடு ஆரம்பமான நிகழ்வில் சிறப்பு அததிகளாக பின்வருவோர் கலந்து சிறப்பித்தார்கள் .இளைஞர் வலுவூட்டல் சமூக சேவைகள் இராஜாங்க முன்னால் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ அலி ஸாஹிர் மௌலானா அவர்களும், கண்ணியம் மிக்க ஸாதாத்துமார்களான பலுல்தீன் மௌலானா மற்றும் நகீப் மௌலானா,ஹனீப் மௌலானா ,ஸுஹைர் மௌலானா போன்ற ஸாதாத்து மார்களும் மற்றும் பல உலமாக்களும் சிறப்பு அதிதிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.

இஷாத்தொழுகையோடு ஆரம்பமான நிகழ்வில் எமது ஊரின் மூத்த உலமாவும் வஹ்ஹாபிச வழிகேட்டை அவ்வப்போது தோலுரித்து மக்களை எச்சரிக்கை செய்து அவ்வியக்கங்களில் மக்கள் சேரந்து வழிகெட்டு விடக்கூடாது என்ற நோக்கில் ஆணித்தரமான ஆதாரங்களை முன்வைத்து உபண்ணியாசம் பண்ணி வரும் ஆலிம் அப்துல் பாரி ஆலிம் B.A.Kuwait அவர்கள், வஹ்ஹாபிசத்தின் விபரீதமும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய மார்க்கத்தின் பகுதிகளை உலமாக்கள் எடுத்து சொல்ல வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.அத்தோடு வஹ்ஹாபிச கொள்கை கோட்பாடுகள் இஸ்லாமிய அகீதாவுக்கு முரணாக இருப்பதையும் நபிகளாரின் பொன்மொழிகள் வாயிலாக இவ்வியக்கங்களில் சேர்வதன் பயங்கரங்கள் அதில் இருப்பதால் ஏற்படும் இழப்புகள் மற்றும் நாயகத்தின் முன்னெச்சரிக்கைக்குள் எவ்வாறு இந்த இயக்கங்கள் உள்வாங்கப்படுகின்றன என்பது தொடர்பிலும் வஹ்ஹாபி கொள்கையில் இருந்து மீண்டு வந்து அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமா அத் சத்திய வழியில் வந்து இணையுமாறும் மாற்று கொள்கை சகோதரர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நிகழ்வின் சிறப்பு அததியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் அலி ஸாஹிர் மௌலானா உரையாற்றினார் அவரது உரையில் இந்த ஊரில் அவரோடு நட்புறவோடு தொடர்பில் இருக்கும் சகோதரரர்களை ஞாபகம் செய்ததுடன் மீலாது நபி விழாவின் முக்கியத்துவத்தையும் அதை உற்சாகத்துடன் செய்யும் இளம் வாலிபர்களையும் அதற்காக பாடுபடும் உலமாக்கள் ஏனையோர்களுக்கும் நன்றி கூறியதோடு அவரை இந்த மீலாது விழா நிகழ்வுக்கு அழைத்தமைக்கும் நன்றி பாராட்டினார்.

நிகழ்வின் அடுத்த அம்சமாக பாதிபீயன்ஸ் அமைப்பினரால் நடாத்தப்பட்ட மற்றும் ஒரு போட்டியாகிய ஸலவாத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் பிரதம அததிகளால் வழங்கி வைக்கப்பட்டன.இறுதியாக நிகழ்வின் இறுதி மார்க்க சொற்பொழிவு இடம்பெற்றது இந்த உரையை கொழும்பு அஜ்வாத் அல் பாஸிய்யா அரபுக்கல்லூரியின் அதிபர் மௌலவி  அஹ்மத் மஹ்லரி அவர்களால் சிறப்பு சொற்பொழிவு ஆற்றப்பட்டது.இவரது உரையில் பெருமானாரின் தலைமுடி குறித்த சிறப்பு விளக்கங்கள் அதன் முக்கியத்துவங்கள் எங்கெல்லாம் பெருமானாரின் திருமுடிகள் வைக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான தகவல்களையும் வழங்கியதோடு நாயகத்தின் சிறப்பியல்புகள் கண்ணியம் குறித்தும் தெளிவாக எடுத்துக்கூறினார்.

இறுதியில் பாதிபீயன்ஸ் அமைப்பின் செயலாளர் சகோதரர் இக்ரம் அவர்களால் நிகழ்வின் தொகுப்புகள் ஒரு முறை மீண்டப்பட்டு நிகழ்வுக்கு வருகை தந்த பிரதம அதிதிகளுக்கும் உலமாக்களுக்கும் நிகழ்வை சிறப்புடன் செய்து முடிக்க உதவிய சகலருக்கும் நன்றி கூறும் நன்றியுரை இடம்பெற்றது.

இதையடுத்து மீலாதுன்நபிபெருவிழா ஸலவாத்துடன் இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்வில் மத்ரஸா மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் குர்ஆன் மத்ரஸாக்களின் முஅல்லிம்கள் கஹட்டோவிட்டாவில் இருக்கும் பாரம்பரிய மஸ்ஜித்களின் நிர்வாகிகள் தரீக்காக்களை சேர்ந்த சகோதரர்கள் ஊர்ப்பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு மீலாது விழாவை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.







தொகுப்பு

எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்

Thursday 7 November 2019

எங்களின் பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய அறிஞர் Yembal Thajammul Mohammad ஸாஹிப் அவர்களே!
#கொண்டையை_மறைக்க_மறந்த நூ அப்துல் ஹாதி பாகவிக்கு #குடை_பிடிக்க_வேண்டாம்!

சுந்தரத் தமிழில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் புகழ் பாடினால் என்னவென்று யோக்கியர்கள் போல் கேள்வி கேட்டு, ஸுப்ஹான மவ்லித் ஷரீஃபை தமிழ் உலகத்தில் இருந்து அகற்றி விடலாம் என்று கனவு கண்டு காணாமல் போன கசடு மனம் கொண்டவர்களின் கூட்டத்தில் இடம் கிடைக்க இந்த இளம் மௌலவி காத்திருக்கின்றார் போலும்.

இதைச் சொல்வதற்கு காரணம் உள்ளது.

நீங்கள் மிகவும் சிலாகித்து உரை கொடுத்துப் பகிர்ந்துள்ள அவர் பதிவில் #யாரோ_எழுதிய_அரபி_பைத்துகள் என்று எழுத்துக் கொழுப்பெடுத்துப் பிதற்றியுள்ளார்.

எனவே அவரின் கொழுப்பை உருக்கிக் கரைக்க வேண்டியதும், உரை கொடுத்த தாங்களுக்கு உண்மையைச் சொல்வதும் எனது கடமை ஆகின்றது.

ஸூப்ஹான மௌலித் ஷரீஃபை இயற்றியவர்கள் இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் என்பதாகவும், இமாம் முஹம்மது மதனி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் என்பதாகவும் இரு ரிவாயத்கள் உள்ளன.

இரு ரிவாயத்கள் இருந்தாலே இரு ரிவாயத்கள் உள்ள ஹதீஸை இந்த இந்த மாமேதை மறுத்துவிடுவாரா?
இப்படிப்பட்ட மேதைகளை வைத்துக் கொண்டா புனிதமிகு ஹதீஸ் ஷரீஃப்களின் மொழியாக்கங்கள் நடைபெறுகின்றன?

இஸ்லாமிய ஞானிகளும், தவசீலர்களும், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத மேலைநாட்டு அறிஞர்களும் ஏற்றுப் புகழ்ந்திடும் இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இவருக்கு யாரோ ஆகிவிட்டார்களா?

#சிரியா_நாட்டு_மேதை_இப்னு_நாஸிருத்தீன்
#ஈராக்_நாட்டு_மேதை_ஹாஃபிழுல்_இராகிய்யி
#எகிப்து_நாட்டு_மேதை_ஸகாவி
#எமன்_நாட்டு_மேதை_வஜீஹூத்தீன்_அப்துர்_ரஹ்மான்_இப்னு_அலிய்யுல்_முஹம்மதுஷ்_ஷைபானி
#இமாம்_இமாதுத்தீன்_இஸ்மாயில்_இப்னு_உமர்_இப்னு_கதீர்
#இமாம்_முல்லாஅலீ_காரீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹிமா)

#இவர்களையும்_யாரோ_எழுதிய_பைத்துகள்_லிஸ்டில்_இணைத்துவிடலாமா?
‌மாமன்னர் ஔரங்கசீப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கே ஞான ஆசிரியராக இருந்து, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் புகழ்ந்து வித்ரிய்யா ஷரீஃபை அளித்த ஸதக்கத்துல்லாஹ் அப்பா கத்தஸல்லாஹூ ஸிர்ரஹூல் அஸீஸ் அவர்கள் இவருக்கு யாரோ ஆகி விட்டார்களா?

இலங்கையில் மாத்திரம் 400 மஸ்ஜித்களை நிர்மாணித்து பல்வேறு அரபி இலக்கியங்களையும், தமிழ் இலக்கியங்களையும், அரபி-தமிழ் எனும் மொழியையே ஆக்கியளித்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இவருக்கு யாரோ ஆகிவிட்டார்கள்?

இரண்டு மூன்று மொழியாக்க குழுக்களில் இடம்பெற்று, நான்கைந்து முகநூல் பதிவுகளை இட்டவுடன், மூத்த அறிஞர் பெருமக்களையும் ஞானிகளையும் #யாரோ என்று கொழுப்பெடுத்துக் கூறும் இவரின் தற்குறித் தனத்திற்கு தங்களைப் போன்ற அறிஞர்களின் உரை மிகவும் வருந்தத்தக்கது.

தமிழ் மௌலித், தமிழ் மௌலித் என்று அங்கலாய்த்து இருக்கின்றார்.

ஐயா! எல்லாக் காப்பியங்களும் மௌலித் ஆகிவிடுமா?

மௌலித் என்ற சொல்லிற்கு பிறப்பு ,பிறப்பின் சிறப்புகள், பிறப்பிடத்தின் சிறப்புகள், பிறப்பின் நேரத்தின் சிறப்புகள் என்று எல்லாமே பிறப்பைச் சுற்றித் தானே வருகின்றது.

#ஜாஹிலாகிய_எனக்குத்_தெரிந்தது_கூட_ஆலிமாகிய_அவருக்குத்_தெரியாதா?

பொதுவான காப்பியங்கள் எல்லாம், பிறப்பின் சிறப்பு மட்டுமே கூறும் காவியங்கள் ஆகி விடுமா?

ஸூப்ஹான மௌலித் ஷரீஃபின் பைத்துகளும், ஹிக்காயத்துகளும் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறப்பின் சிறப்பை எடுத்துக் கூறுபவை!
அது மாத்திரமல்ல அவர்களின் குலத்தின் சிறப்பை எடுத்துக் கூறுபவை!
அவர்களை ஈன்றெடுத்த புனித தாய் தந்தையர் முதல் குடும்பத்தார் அனைவரின் சிறப்புக்களைக் கூறுபவை!
அவர்கள் பிறந்த இரவின் சிறப்புக்களைக் கூறுபவை!
அவர்கள் பிறந்த அன்று உலகில் நடந்த அதிசயங்களைக் கூறுபவை!

சில பேருக்கு வயிற்றில் புளியைக் கரைப்பதும், நெஞ்செரிப்பு எடுப்பதும் பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பிறப்பின் சிறப்பையும், அவர்களின் புனித குடும்பத்தினர் சிறப்பையும், அப்புனித இரவின் சிறப்புக்களையும் கூறுவதில் தானே!

ஏன் இந்த ஷைத்தானிய எரிச்சல் என்பது தான் அன்றிலிருந்து இன்றுவரை கேள்வி?

ஆயிரம் தமிழ்க் காவியங்கள் ஏற்படுத்தும் ஓர் உணர்வை, ஓர் #யாநபி_ஸலாம்_அலைக்க_பைத் தருகின்றதே! உலகம் முழுக்க ஒலிக்கின்றதே! ‌
பொருள் உணராதவர்களும் கண்ணீர் விட்டல்லவா ஓதுகின்றனர்.
இந்த மௌலவிக்கு ஏனிந்த வயிற்றெரிச்சல்?
இவரைத் தாங்கிப் பிடிக்க வேண்டிய அவசியம் அறிஞர் பெருமகனாராகிய தாங்களுக்கு வந்த அவசியம் என்ன?

#யாரோ_எழுதிய_பைத்துகள்_என்று_சொல்வது_வாய்க்_கொழுப்பா_எழுத்துக்_கொழுப்பா?
#அரபி_பைத்துகள்_எழுதிய_மூத்த_அறிஞர்_பெருமக்கள்_முகவரி_இல்லாதவர்களா?

#வார்த்தைகளில்_மெல்லினம்_வேண்டாமா?

#அறிஞர்_பெருமகனாரே!

ஓடி ஓடி வந்து, தமிழ்ப் பாக்களுக்கு ஆதரவு தருகின்றோம் என்ற போர்வையில், தேடித் தேடிப் பின்னூட்டமிடும் பிஜேவை மானசீக குருவாக ஏற்று உள்ள நண்பர்களையும் நாம் அறிவோம்.

நீங்கள் உரை கொடுத்துள்ள இந்த இளம் மௌலவியை கற்காலத்திலிருந்து தற்காலத்திற்கு வரச்சொல்லுங்கள்!

#மௌலித்_ஷரீஃபை_வைத்து_மலிவான_விளம்பரம்_தேடுவோரின்_கதி_கண்_முன்னே!

ஸூப்ஹான மௌலித் மஜ்லிஸ்கள் தோறும் தமிழ்க் கவிஞர்களின் பாடல்கள் தமிழ்ப் பாடகர்களின் தேனிசைக் குரல்களில் கம,கமவென்று மண,மணக்கின்றன!

கண்ணை மூடிக் கொண்டு தன் மனம் போன போக்கில் தடித்த வார்த்தைகளைக் கொண்டு இவர் எழுதுவது தொடருமானால்

#ராயல்டி_வாங்காமலே
#ரத்தத்தையும்_வியர்வையும்_சிந்தி_தீனை_ஹயாத்தாக்கிய #அறிஞர்களின்_ஞானிகளின்_கால்_தூசுக்கு_இவர்_சமம்_ஆவாரா என்று நாமும் கேட்பதற்கு நேரம் அதிகம் ஆகி விடாது! கபர்தார்!!
Mueenudeen Ibrahim
Fazulul Alaudeen

Tuesday 5 November 2019

தமிழ் மெளலீத்

#கொண்டையை_மறைக்க_மறந்த
நூ அப்துல் ஹாதி பாகவி!
ஈருலக இரட்சகர் அகிலங்களின் அருட்கொடை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் புகழ்ந்து, புரியும் மொழியில் படித்தால், மக்களுக்கு அவர்களின் கருணையும் காருண்யமும் காதலும் எளிதாகச் சென்றடையுமே‌ என்ற கருத்துப்படத் துவங்குகிறது அவரது பதிவு.

இத்தகைய பதிவுகளும் பதிவுகளின் சொந்தக்காரர்களும் நமக்கு புதிதல்ல.

அரபி மொழியில் பாடுவதை விட அன்னைத் தமிழில் பாடினால் மக்கள் உணர்ந்து பாடுவார்கள் என்று ஆரம்பிப்பவர்களது அங்கலாய்ப்புகள் எல்லாம், எதில் போய் முடியுமோ அதில் தான் இவரது பதிவும் முடிந்துள்ளது.

#இறைத்தூதர்_ஸல்_அவர்களின்_புகழ்ப்பாவை_அரபியில்_மட்டும்_படிப்பதால்_தான் #குர்ஆன்_இடம்பெற_வேண்டிய_இடங்களிலெல்லாம்_சுப்ஹான_மவ்லிது_நங்கூரமிட்டு_அமர்ந்து_கொண்டுள்ளது

தெரிந்தோ தெரியாமலோ பதிவிடப்பட்டுள்ள, பதிவாளரின் மேற்கண்ட விஷமத்தனமான வரிகள் பதிவாளரின் மனோநிலையை  வெளிக் கொண்டு வந்து விட்டது.

இவரின் வாசகங்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்குப் புதிதானவை அல்ல.

ஸூப்ஹான மௌலித் ஷரீஃபை சுந்தரத் தமிழ் கூறும் உலகத்திலிருந்து இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று புறப்பட்டு வந்த பிஜே முதல், மக்கா மஸ்ஜிதில் இருந்து அட்டகாசங்கள் புரிந்து வந்த ஷம்ஸூத்தீன் காசிமி வரை பார்த்தாகி விட்டது.

புனித குர்ஆன் ஷரீஃப் ஓதப்படும் இடங்களில் ஸூப்ஹான மௌலித் ஷரீஃப் நங்கூரமிட்டு விட்டது என்று பெரும் வேதனைப்படுகின்றார்.

1) புனிதக் குர்ஆன் ஓதப்படும் இடங்களை தமிழில் ஓதப்படும் புகழ்ப்பாக்கள் நங்கூரமிட்டுக் கொள்ளலாமா?
ஆக உங்களது நோக்கம் தமிழ் மொழியில் குர்ஆன் தமிழ் மொழியில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புகழ் பாக்கள் பாடப்படுவதா அல்லது ஸூப்ஹான மௌலித் ஷரீஃபை இல்லாமல் ஆக்குவதா?

2) குர்ஆனை உணர்ந்து ஓதினாலும் உணராது ஓதினாலும் நன்மை. அதுபோல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை மொழி உணர்ந்து புகழ்ந்தாலும் மொழி உணராது புகழ்ந்தாலும் நன்மையே. இதை ஆலிம் அவர்கள் மறுக்கின்றாரா?

3) அரபி மொழியில் முஸ்லிம்கள் ஏன் பெயர் வைக்க வேண்டும். தமிழ் மொழியில் பெயர் வைத்தால் என்ன என்று கேட்கும் சங்கிகளுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
இந்த சமுதாயத்தை நோக்கி சங்கிகள் வீசும் இந்த வாதம் தமிழ் மொழியின் மீதுள்ள பற்றினாலா அல்லது நம் பாரம்பரியத்தை அழிக்க நினைக்கும் நஞ்சுண்ட நெஞ்சத்தினாலா?

4) எல்லோருக்கும் விளங்கும் மொழியில் தான் தங்களது பெயர் உள்ளதா?

5) எல்லோருக்கும் விளங்கும் மொழியில் தான் தாங்கள் சார்ந்துள்ள மார்க்க அறிஞர்களின் சபையின் பெயர் உள்ளதா?

6) எல்லோருக்கும் விளங்கும் பெயரில் தான் மார்க்க ஞானங்களைக் கற்றுக் கொடுக்கும் மதிப்புமிகு கலாசாலைகள் பெயர் உள்ளதா?

7) அல்லது உங்களைப் பற்றி சுயவிவரம் கூறும் அடிக்குறிப்பாவது முகநூலில் தமிழில் உள்ளதா?

8) தமிழ் மொழியில் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் புகழ வேண்டும் என்கின்ற உங்களது அக்கறை ரபீஉல் அவ்வல் மாதத்தில் மாத்திரம் வருவது ஏன்?

9) பெரும்பாலும் நாம் அறிந்த மஜ்லிஸ்களில் ஸூப்ஹான மௌலித் ஷரீஃப் ஓதப்படும் மஜ்லிஸ்களில் தமிழ்ப் பாக்களும் இணைந்து ஓதப்படுகின்றது என்ற உண்மை அறியாதவரா நீங்கள்? அல்லது மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதவரா நீங்கள்?

10) நீங்களும், உங்களுக்கு உரை கொடுக்கும் பேரறிஞர்களும், ஷாம் ஷிஹாபுத்தீன் அப்பா யாத்தளித்த ரஸூல் மாலையையும், ஸதகத்துல்லா அப்பா ரஹ்மத்துல்லாஹி அலைஹி உரையளித்த உமறுப்புலவர் நாயகத்தின் சீறாப்புராணத்தையும், மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அளித்த தலை ஃபாத்திஹாவையும், தவசீலர்கள் பலர் தமிழில் யாத்தளித்த இன்னும் எண்ணற்ற தமிழ் பைத்துகளையும் பதிவிடுவீர்கள் என்றும், அவற்றை பாடும் மஜ்லிஸ்களை ஏற்படுத்தி எங்களையும் அழைப்பீர்கள் என்றும் நம்பலாமா?

11) குறைந்தபட்சம் என்‌.எஸ்.என். பாகவி அளித்த புரவலர்  போர்த்திய பொன்னாடை - புர்தா ஷரீஃப் மஜ்லிஸையும், ஆலிம் கவிஞர் தேங்காய் ஷர்ஃபுத்தீன் மிஸ்பாஹி அளித்த சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லிதின் மஜ்லிஸையும், ரஹ்மத் அறக்கட்டளையில் மரியாதைக்குரிய மௌலானா கான் பாகவி ஸாஹிப் அவர்களின் தலைமையில் ஏற்படுத்தி எங்களையும் அழைப்பீர்களா?

12) புர்தா ஷரீஃபை எழுதிய பூஸ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களையும், சுபஹான மௌலித் ஷரீஃபை எழுதிய இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களையும், உங்களது மற்றொரு பதிவில் #யாரோ_எழுதிய_அரபி_பைத்கள் என்று குறிப்பிடுகின்றீர்கள். நீங்கள் குறிப்பிடுகின்ற வலம்புரிஜான் அவர்களும், மேத்தா அவர்களும் யார்? யாரைத் திருப்திப்படுத்த யாரைக் குறை காண்கின்றீர்கள்?

நிச்சயமாக #இமாம்_பூஸ்ரி_ரஹ்மத்துல்லாஹி_அலைஹி_அவர்களின்_வாரிசுகள்_நாங்கள் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்குப் பெருமை உண்டு.
#வலம்புரி_ஜானின்_வாரிசாக_நீங்களும்_உங்களைப்_போற்றுவோரும் இருப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.

தமிழ்ப் பழமொழி ஞாபகத்திற்கு வருகின்றது.
#புதிய_மொந்தையில்_பழைய_போதை

ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்வோம்.

#மக்கா_முஹம்மது_மேல்_மணமுள்ள_ஸலவாத்தை
#ஹக்காக_நாங்கள்_எல்லாம்_கருதியே_சொன்னதினால்
#எக்காலம்_எங்களுக்கு_இடையூறு_வராமல்
#தற்காத்து_அருள்புரிவாய்_தனியேனே_ரஹ்மானே

கீழக்கரை நகரில் மக்தப் மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதத் துவங்குவதற்கு முன் இந்த மௌலித் ஷரீஃபை எங்களுக்குக் கற்றுத் தந்து, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அன்பையும் காதலையும் போதித்துத் தான் சங்கைக்குரிய ஆலிம்கள் எங்களுக்கு குர்ஆன் ஷரீஃபை ஓதக் கற்றுத் தந்தார்கள்.

ஸூப்ஹான மௌலித் ஷரீஃப் பெரும்பாலான நாடுகளில் ஓதப்படுகின்றது. பல நூறு வருடங்கள் இது பாரம்பரியமாகத் தொடர்கின்றது.

புனித ஸூப்ஹான மௌலித் ஷரீஃப் முஸ்லிம் சமுதாயத்தின் புனித மிகு பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்.

இதை உடைத்து தமிழ்ப்  படைப்பாளர்களின் பல்வேறு தமிழ் ஆக்கங்களை ஸூப்ஹான மௌலித் ஷரீஃபின் இடத்தில் நீங்கள் புகுத்த முயல்வதன் மூலம், உங்களது எண்ணத்தை வெட்ட வெளிச்சமாக்கியதற்கு நன்றிகள்!

#மிகவும்_சிரமப்பட்டு_வாதங்களை_அமைத்த_நீங்கள் #கொண்டையை_மறைக்க_மறந்து_விட்டீர்களே!

அரபி பைத்துகள் உடன் இணைந்து தமிழ் பைத்துக்களையும் வைத்துக் கொள்ளலாமே என்று நீங்கள் அறிவுறுத்தி இருந்தால், குறைந்தபட்சம் நீங்கள் ஓர் நடுநிலைவாதி என்றாவது புரிந்து கொள்ள முயன்று இருப்போம்.

நான் அந்த வகையைச் சேர்ந்தவனும் அல்ல என்று தெளிவாக்கியதற்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.

புர்தா ஷரீப் புருடா என்றவன் புழுவிலும் கேவலமாகிப் போனான்.

ஸூப்ஹான மௌலித் ஷரீஃபின் சுகந்தத்தில் அசுத்தம் கற்பிக்க முயன்றவன், கேவலத்திற்கே கேவலமாகிப் போனான்.

உங்களது எண்ணங்களைக் குறை சொல்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. அதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

ஆனால் விஷமத்தனமான வரிகளுக்கு விடை காண வேண்டியதும் பதில் கொடுப்பதும் எங்களது கடமையாகின்றது.

#பூமான்_நபி_ஸல்லல்லாஹு_அலைஹிவஸல்லம்_அவர்கள்_மீது_ஓதப்படும்_புண்ணிய_வரிகளுக்கு
#புனிதம்_ஏற்படுகின்றது_என்று_ஏன்_உங்களுக்கு_புழுக்கம்_வருகின்றது?

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது நெற்றியில் ஒளிர்ந்த நூரே முஹம்மதுவைப் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) பார்த்து யாருக்கோ வந்த புழுக்கம் நினைவில் வந்து செல்வதைத் தடுக்க முடிய வில்லை.

வல்ல அல்லாஹ் புனிதமானவன்!
வேந்தர் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் புனிதமானவர்கள்!
வேதம் புனிதமானது!
வேந்தர் நபிகளைப் புகழும் எந்த மொழியும் புனிதமானதே! புனிதமானதே!! புனிதமானதே!!!

(படைப்பாளனின் புனிதம் சுயமானது. படைக்கப்பட்டவைகளின் புனிதம் அனைத்தும் படைத்தவன் அருள்வது)
Yembal Thajammul Mohammad
Mueenudeen Ibrahim
Shazulia A
Mackie Faisal

புனித ஸலவாத் மஜ்லிஸ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரகாதுஹு

 எமது உயிரிலும் மேலான, அகிலத்துக்கு அருட்கொடையாக வந்துதித்த பூமான் எங்கள்  பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் மீலாதுன் நபி விழாவினை சிறப்பிக்கும் முகமாக  எதிர்வரும் 09.11.2019ம் திகதி சனிக் கிழமை அதிகாலை 3.00 மணிக்கு ஏறாவூர் வாளியப்பா ஜும்ஆ பள்ளிவாசலில் சந்தன மணங்கமளும் சுந்தர நபி நாயகத்தின் சங்கைமிக்க புனித ஸலவாத் மஜ்லிஸ் நடை பெற  பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இதில் அனைத்து  சகோதரர்களும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

இவ்வண்ணம்  மீலாத்  ஏற்பாட்டுக்குழு

ஊண்டி செய்யிது ஆலிம்

ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi ஆலிம்
***************************************
ஊண்டி செய்யிது முகம்மது ஆலிம் அவர்கள் ஹிஜ்ரி 1359 ஸபர் பிறை 22 திங்கள் (1-4-1940)அன்று காயல்பட்டினத்தில் குத்துக்கல் தெருவில் ஊண்டி மொகுதூம் முஹம்மது – பீவி பாத்திமா தம்பதிகளுக்கு ஒரே மகனாகப் பிறந்தார்கள்.

தமது இரண்டாம் வயதிலேயே தந்தையை இழந்தார்கள். அன்னாரின் தந்தையார் ஆந்திரா மாநிலம் சுருடாவில் ஹிஜ்ரி 1361 ஷஃபான் பிறை 25 சனிக்கிழமை (15-8-1942) 2.30 மணி சுமாருக்கு வபாத்தாகி அங்கேயே அடங்கப் பெற்றார்கள்.

சிறுவயதிலேயே மார்க்க கல்வியில் ஆர்வம் உள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள். தங்களது ஆரம்பக் கல்வியை காயல்பட்டினத்தில் கற்ற அவர்கள் மார்க்க கல்வியை வேலூர் பாக்கியாத் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் பயின்று ஹிஜ்ரி 1380 ஷஃபான் பிறை 12 (1961 ஜனவரி 30)திங்கள் கிழமை அன்று ‘பாகவி’ ஸனதைப் பெற்றார்கள். அவர்களின் மார்க்க கல்விக்கு ஷெய்குனா அவர்கள் உதவியிருக்கிறார்கள்.

ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களின் இரண்டாவது மகளான எஸ்.ஏ. முஹம்மது இப்றாஹீம் நாச்சி அவர்களை, தாம் ஒதிக் கொண்டிருக்கும் போதே 1957 ஆம் ஆண்டு மணந்து கொண்டு இல்வாழ்வில் ஈடுபட்டார்கள். இவர்களின் மூலமாக அன்னாருக்கு ஒரு ஆண் மகவும், ஏழு பெண் மகவும் பிறந்தது. அவர்களின் விபரங்கள்:

1.    மொகுதூம் முஹம்மது.- ம.பெ. தோல்சாப்பு முஹம்மது பாத்திமா மகள் முஹம்மது இப்றாஹீம் நாச்சி
2.    பீவி பாத்திமா -க.பெ. தோல்சாப்பு செய்யிது உமர்
3.    சித்தி ஆரிபா -க.பெ. ஹாஜி எஸ்.டி.முஹம்மது ஃபாரூக்
4.    மொகுதூம் பாத்திமா இர்ரிஃபா – க.பெ. தோல்சாப்பு. எம்.எல். முஹ்யித்தீன் அப்துல் காதர்
5.    சாகுல் ஹமீது அகமது மீராநாச்சி – க.பெ. எம்.ஏ. சுல்தான் அப்துல்காதர்
6.    செய்யிது பல்கீஸ் – க.பெ நோனா முஹம்மது லெப்பை
7.    முஹம்மது சுலைஹா – .பெ பிரபு.எஸ்.எம். செய்யிது முஹ்யித்தீன் ஆலிம் ஜலாலி
8.    சூபி ஹஸீனா – க.பெ. ஊண்டி செய்யிது முஹம்மது சாலிஹ்.

காயல்பட்டினம், மஹ்லறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியில் பேராசிரியராக சுமார் 25 வருடங்கள் பணியாற்றி எண்ணற்ற மஹ்லரிகள் உருவாகக் காரணமாக இருந்தார்கள். இவர்களின் பணி மிகச் சிறப்பாக இருந்தது. இவர்கள் மௌலவி அபூபக்கர் கிப்லா ஹழ்ரத், கேரளா கே.கே.அபுபக்கர் ஹழ்ரத் போன்ற எண்ணற்ற ஆலிம்களுடன் இவர்கள் பணியாற்றினார்கள்.

காயல்பட்டினம், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் சுமார் 25 வருடத்திற்கும் மேலாக இமாமாக பணியாற்றியுள்ளார்கள்.

தமது மாமாவும், ஷெய்குமான ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களிடமிருந்து ‘கிலாபத்தை’ 1978 ஆம் வருடம் காயல்பட்டினம் ஸூபி மன்ஸிலில் வைத்து பெற்றார்கள்.

காயல்பட்டினத்தில் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘ஜும்ஆ பயான் விவாதத்தில்’ ஷெய்குனாவுக்கு உதவியாக அன்னாரின் கலீபாக்களான மௌலவி அஸ்ஸெய்யிது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் கத்தஸல்லலாஹு ஸிர்ரஹுல் அஜீஸ், மௌலவி எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி ஸைபுத்தீன் ரஹ்மானி பாகவி  அவர்களுடன் இவர்களும் இருந்தார்கள். இதன் விபரம் நமது இணையதளத்தில் காணலாம்.

இதனால் பித்னாவாதிகள் இவர்களுக்கு எண்ணற்ற தொந்திரவுகள் கொடுத்தனர். எதற்கும் அசைந்து கொடுக்காமல் ஷெய்குனா சென்ற வழியிலேயே சென்றார்கள்.

ஊரின் நடப்புகளை தௌ;ளத் தெளிவாக பேசி, வழிகேடர்களை மக்களுக்கு அடையாளம் காட்டினார்கள். தப்லீக் ஜமாஅத்தினர்கள் பல்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டு ஊரில் உலா வந்தபோது, அதை வெளிப்படையாகப் பேசி தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். தப்லீக் ஜமாஅத்தினர்களுக்கும், வஹ்ஹாபிகளுக்கும் காயல்நகரில் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார்கள்.

காயல்பட்டினத்தில் 1990 ஆம் ஆண்டு தப்லீக் ஜமாஅத்தினர் (மௌலவி அப்துல்லாஹ், மௌலவி ஹாமித் பக்ரி மன்பஈ போன்றோர்) அல்லாஹ் பொய் சொல்ல சக்தியுடையவன் என்றும் அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் விவாதத்திற்கு அழைத்த போது, சக கலீபாவான மௌலவி எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி அவர்களுடன் சேர்ந்து விவதத்தில் ஈடுபட்டு தப்லீக் ஜமாஅத்தினர்களை விரண்டோடச் செய்தார்கள். இதன் ஒலிநாடா நமது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் தப்லீகை ஆதரிக்கும் ஜாவியா ஆலிம்களும், அதை எதிர்க்கும் மஹ்லறா ஆலிம்களும் தப்லீக் பற்றிய விவாதத்தை காயல்பட்டினம் அம்பலமரைக்காயர் தெரு, வாவு காதர் ஹாஜி அவர்கள் வீட்டில் வைத்து கடந்த  11-12-08-1998 ல் நடத்தியபோது, அதில் கலந்து கொண்டு, தப்லீக் ஜமாஅத்தினர்களை ‘ரஷீத் அஹ்மது கங்கோஹி வஹ்ஹாபியை ஆதரித்தது உண்மைதான்’ என்று ஒப்புக் கொள்ளச் செய்து அவர்களை விரண்டோட செய்ததில் இவர்களும் பங்குபற்றினர்.

தமது ஒரே மகனான டபிள்யு. எஸ்.எம். மொகுதூம் முகம்மது அவர்களை ஹிஜ்ரி 1416 ஸபர் பிறை 25 (24-07-1995) அன்று இழந்தார்கள். அன்னார் குத்பா பெரிய பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தங்களது 64 ஆம் வயதில் புனித ஹஜ்ஜு, ஜியாரத் யாத்திரையை 2004 ஆம் வருடம் முடித்தார்கள்.

அன்னாரின் 5ஆவது மகள்; டபிள்யு. எஸ்.எம். செய்யிது பல்கீஸ் ஹிஜ்ரி 1426 ரபீயுல் ஆகிர் பிறை 14 (25-05-2005) அன்று வபாத்தாகி விட்டார்கள்.

ஹழ்ரத் அவர்களின் துணைவியார் ஹிஜ்ரி 1428 ரபீயுல் ஆகிர் பிறை 21 (08-05-2007) அன்று மறைந்தது அவர்களை ஆழத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.

மிக எளிமையாக வாழ்ந்த அவர்களை யாரும் எவ்வித அப்பாயின்ட்மெண்ட் வாங்காமலும், எவ்வித தடையுமில்லாமலும் எளிதாகப் பார்க்க முடிந்தது. அவர்களிடம் எவ்வித மார்க்கப் பிரச்சனைகளுக்கு கேட்டுப் போனால் புரியும்படி, தெளிவாக விளக்கம் தருவார்கள்.

மிகவும் முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களான இவர்கள், மத்ரஸா – மார்க்க கல்வியுடன் உலகக் கல்வியையும் சேர்த்துக் கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், அதற்காக தம்மால் இயன்றளவு முயற்சியும் மேற்கொண்டார்கள். சுன்னத் வல் ஜமாஅத்தின் இளைஞர்கள் நன்றாக படித்து வேலைக்கோ அல்லது வியாபாரம் செய்தோ நல்லமுறையில் பொருள் தேட வேண்டும். அப்போதுதான் நமது கொள்கையை ஸ்திரப்படுத்த முடியும் எனக் கூறுவார்கள்.

அஸ்ஸெய்யிது அப்துஷ்ஷகூர் ஜீலானி, அஷ்ஷெய்கு முஜாஹிதே மில்லத் ஹபீபுர் ரஹ்மான் ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹுமா, அஸ்ஸெய்யிது மழ்ஹர் ரப்பானி ஹழ்ரத் காதிரி மத்தலில்லாஹில் ஆலி, அஸ்ஸெய்யிது நஜீம் சர்க்கார் மத்தலில்லாஹில் ஆலி, அஸ்ஸெய்யிது ஷம்ஸுல் ஹக் காதிரி மத்தலில்லாஹில் ஆலி போன்ற எண்ணற்ற ஷெய்குமார்களை சந்தித்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் அங்கத்தினராக பணியாற்றியிருக்கிறார்கள்.

தமது பணியினை தொடர்ந்து ஆற்றிட தமது மகளை மணமுடித்த மருமகனார் பிரபு எஸ்.ஜே. செய்யிது முஹ்யித்தீன் ஆலிம் ஜலாலி அவர்களை ஹிஜ்ரி 1432 முஹர்ரம் மாதம் பிறை 5 (12-12-2010) ல் தமது கலீபாவாக அன்று நியமனம் செய்திருக்கிறார்கள்.

சுமார் 20 நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த அன்னார், ஹிஜ்ரி 1435, ரபீயுல் அவ்வல் பிறை 8, 10-01-2014வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நாகர்கோயில் ஜெயசேகரன் மருத்துவமனையில் வைத்து வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா அன்னார் இமாமாக பணிபுரிந்த காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.