السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 30 April 2015

இஸ்லாத்தில் உழைப்பாளர்களின் உரிமைகள் பற்றி


உழைப்பாளர்களின் உரிமைகள்
வருடத்திற்கொரு முறை மே 1 அன்று உலகம் முழுவதும் உழைப்பாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அன்றைய தினத்தில் உழைப்பாளிகளின் கோரிக்கைகள்மாத ஊதியம்,அவர்களின் அடிப்படைப்பிரச்சனைகள்அவர்கள் சந்திக்கும் அவலங்கள்,இன்னும் இவை போன்ற உழைப்பாளிகளைப் பற்றிய பல விஷயங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் அல்லது அலசப்படும்.
ஆனால் அன்றைய தினத்திற்கு முன்போ அல்லது பின்போ உழைப்பாளிகளை ஆளும் வர்க்கத்தினர் எவரும் எந்த முதலாளிகளும் கண்டு கொள்வதேயில்லை.
உலகம் முழுவதும் உழைப்பாளர்களுக்காக உழைப்பாளிகள் பட்ட கஷ்டங்களும் அதற்கான சான்றுகளும்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலோ பல வளர்ச்சி அடைந்த நாடுகளில் உழைப்பாளிகள் முதலாளிகளால் மிக மோசமான முறைகளில் நடத்தப்பட்டனர்.எந்தளவிற்கெனில் நாளொன்றுக்கு 12முதல் 18மணி நேரம் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும் என்றொரு நிலை அன்றிருந்தது.
இக்கொடுமைக்கெதிராக பல நாடுகளில் ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்களும் கண்டனக்கனைகளும் தோன்ற ஆரம்பித்தன.

இங்கிலாந்தில்
உழைப்பாளிகள் நாளொன்றுக்கு 10 மணி நேரம் தான் வேலை செய்வார்கள்என்ற 6 அம்சக்கோரிக்கைகளில் இதை பிரதான கோரிக்கையாக வைத்துசாசன இயக்கம்’ என்றொரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
ஃபிரான்ஸில்
1830 களில் நெசவுத்தொழிலாளிகள் 15 மணி நேரம் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதை எதிர்த்து 1834 ஆம் ஆண்டு ‘ ஜனநாயகம்’ அல்லது மரணம் என்றொரு கோஷத்தை முன்வைத்து நெசவுத்தொழிலாளிகள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர் .
அமெரிக்காவில்
1832 ல் பொசுடனில் கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்த தச்சுத்தொழிலாளிகள்10 மணி நேர வேலை என்றொரு கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
1835ல் பிலடெல்பியாவிலும்,பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து உழைப்பாளிகளால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது.
1877 ல் பென்சில்வேனியாவில் சுரங்கத்தொழிலாளிகளும்இரயில்வே தொழிலாளிகளும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
1886 ல் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர் இயக்கங்களை ஒன்றினைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டதோடு 1886 மே 1 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்தது இதுவும் மே தினம் உருவாக முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில்
1856 ல் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து மெல்போர்னில் கட்டிடத்தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.

ரஷ்யாவில்
1895 க்கும் 1899க்கும் இடைப்பட்ட காலங்களில் பல நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் குறைவான நேரம் வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்றன.
சிக்காக்கோவில்
1886 மே 3அன்று ஒரு பிரபலமான நிறுவனத்தின் வாசலில் 3000 க்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் கண்டனக்கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது 4தொழிலாளிகள் காவல் துறையினரால் சுடப்பட்டு பலியாயினர். இதைக் கண்டிக்கும் வகையில் மே4 அன்று ஏமார்க்கெட் சதுக்கத்தில் 2500தொழிலாளிகள் கலந்து கொண்டு மாபெரும் கண்டனக்கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும்போது திடீரென்று கூட்டத்திற்குள் வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டதில் காவல்துறையினரில் ஒருவர் பலியாகவேஉடனே போலிஸார் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு மட்டுமல்லாமல் தொழிலாளர் தலைவர்களை கைதுசெய்து வழக்கும் தொடுத்து 1886 மே21அன்று 8 பேருக்கு தூக்குத்தண்டணையும் பெற்றுக்கொடுத்தனர்.
1887 ஆம் ஆண்டு அந்த 7பேரும் தூக்கிலிடப்பட்டனர் இவர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 இலட்சம் பேர் கலந்துகொண்டனர்.
8 மணி நேர வேலைக்கான போராட்டமும் சிக்காக்கோ தியாகிகளின் தியாகமும் தான் இன்று மே 1 அன்று உழைப்பவர் தினமாக வருடந்தோறும் அனுசரிக்கப்படுகிறது.

பாரீசில்
1889 ஜீலை 14 அன்று பாரீசில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டகூட்டத்தில் 8 மணி நேர வேலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எனவும் சிகாகோ சதியை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு1890 மே 1 அன்றிலிருந்து அனைத்து நாடுகளிலும் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.
அன்றிலிருந்துதான் வருடந்தோரும் மே 1 அன்று உலகம் முழுவதிலும் உழைப்பாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
                                                                           
இப்படி உலகம் முழுவதும் தொழிலாளர்களுக்காக பட்ட கஷ்டங்கள் இன்று வரை தீர்ந்தபாடில்லை. மிக கைசேதத்திற்குறிய விஷயம் என்னவெனில் இது நாள் வரை பல நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் உழைப்பாளிகள் கொத்தடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் மிகவும் பின்தங்கியவர்களாகவுமே நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் அவர்களின் அடிப்படைப்பிரசச்னைகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை. அவர்கள் செல்லொணாத்துன்பங்களை சந்தித்து வருகின்றனர் சிறுவர்கள் உழைப்பாளிகளாக கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். புத்தகங்களை சுமக்கிற வயதில் சுமைகளைத்தூக்குகின்ற அவல நிலை உழைப்பாளிகளுக்காக எப்படிப்பட்ட போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் செய்யப்பட்டாலும் முதலாளிகளாலும் ஆளும் வர்க்கத்தினராலும் உழைப்பாளிகளுக்கு தீர்வுகள் கிடைக்கப் போவதில்லை.

தேவைக்கேற்ற கூலி :
 வேலைக்குத் தகுந்த கூலியை வழங்குகின்ற தனிப்பட்ட முதலாளிகள் தனது தொழிலாளிகளின் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்து கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டாயப்படுத்தா விட்டாலும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற கூலி அவர்களது நியாயமான தேவைகளை நிறைவு செய்யாத பட்சத்தில் முறையான ஆய்வுக்குப் பின் அரசு அவர்களது தேவைகளை சரிசெய்து கொடுக்க பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இடைவேளை ஓய்வு :
 ஓடிக் கொண்டேயிருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஓய்வு அவசியம். ஒருவன் தொடர்ந்து ஒரு வேலையில் ஈடுபடுகிற போது ஒருவிதமான சோர்வுக்கும்,விரக்திக்கும் உள்ளாகிறான்.
 ஓய்வே கொடுக்காமல் தொழிலாளர்களைத் தொடர்ந்து வேலைக்குட்படுத்தி அதனால் அவர்கள் மனநிலை பாதிப்புக்குள்ளாகி முறையாக பணியில் ஈடுபடாததால் மேலநாட்டுக் கம்பெனி ஒன்று நஷ்டத்தில் மூழ்கிப் போனதாக ஒரு செய்தி உண்டு.
 சுதாரண பொழுதுபோக்கு அம்சமான மூன்று மணிநேர சினிமாவுக்கே இன்டர்வெல் தேவைப்படுகிறபோதுஉழைப்பினிடையே ஓய்வென்பது உறுதியான விஷயம்.
 இதைக் கருத்தில் கொண்டு தான் நபி (ஸல்) அவர்கள் இடையிடையே உங்கள் உடல்களுக்கு ஓய்வு கொடுப்பதின் மூலம் உங்களது உள்ளங்களை சந்தோசப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று நவின்றுள்ளார்கள்.
 இஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கம் இதில் அலசப்படாத அம்சங்களே இல்லை எனலாம். இறைவனைப் பற்றி யோசிக்கின்ற மதங்கள் மனிதனைப் பொருட்படுத்துவதில்லை. மனிதனை யோசிக்கின்ற இடங்கள் இறைவனைப் பொருட்படுத்துவதில்லை. மனிதன்இறைவன் இரண்டையும் முறையாக வைத்துப் பார்க்கும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே
 தொழிலாளர் வர்க்கப் போராட்டம் மிக நீண்ட வரலாற்றை உடையது. 8 மணி நேர வேலைகளை போராடி உயிர்த்தியாகம் செய்த அந்த தியாகிகளை கேலி செய்யும் விதமாகவெற்றுக் கோஷ உரிமைகளாக இன்று மே தின போராட்டத்தை மாற்றிப் போட்டு விட்டார்கள்.
 இப்பொழுது மே தினம் வெறுமனே ஊர்வலங்களாகவும்கண்டனக் கூட்டங்களாகவும்,வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு விழாவாகவும் மாறிப் போய்விட்டது. மே தினத்தை ஊர்வலமாகக் கொண்டாடுவதின் மூலம் மட்டும் தொழிலாளர் வர்க்கத்தின் நியாயமான உரிமைகளை அடைந்துவிட முடியும் என்பது சாத்தியமற்ற ஒன்று.
 உழைப்பாளிகளின் உரிமைகளை உலகிற்கு உரிய முறையில் உரைத்தது இஸ்லாம் தான் என்று அவர்கள் தெரிந்து கொள்வார்களே யானால் மெய்மறந்து விடுவார்கள்.

கூலி உத்திரவாதம்:
 இன்றைய உலகில் சில முதலாளிகள்,தொழிலாளர்களிடம் குறிப்பிட்ட கூலி பேசிவிட்டு வேலை முடிந்த பின் குறைத்துக் கூலி தருவதையும்,அதிகப்படியான வேலை வாங்கிவிட்டு குறைவான கூலி கொடுப்பதையும்சிலர் கூலியே கொடுக்காமல் உழைப்பாளிகளை கொத்தடிமைகளாக வைத்து கொத்துப் பரோட்டாவைப்போல குத்திக் குதறுவதையும் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
 ஃபாரினுக்கு உன்னை அனுப்புகிறேன்,பக்காவான வேலை வாங்கித் தருகிறேன்,பத்தாயிரம் சம்பளம் கிடைக்கும் என பந்தாவாய் அழைத்துக் கொண்டு போய் பாஷை தெரியா தேசத்தில் பாஸ்போர்ட்டை யும் பறித்துக் கொண்டு பாலைவனத்திலேயே ஒட்டகத்தோடு ஒரு ஒட்டகமாய் மனித வாழ்வை பாழ்பண்ணச் செய்யும் போலி புரோக்கர்கள் நிறைந்த உலகமிது.
 இதுமாதிரியான அக்கிரமங்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. எந்த ஒரு சின்ன வேலையானாலும் கூலி பேசப்பட்டு விட்டால் அதில் குறைவு செய்திட எவருக்கும் அனுமதி இல்லை.
 கூலி வழங்குவதை முதலாளிமார் தொழிலார்களுக்குச் செய்யும் உபகாரம் என்று சொல்லவில்லை. அதை உழைப்பாளியின் உரிமை என பிரகடனப்படுத்துகிறது இஸ்லாம்.
இது மறுமைக்கு மட்டுமான செய்தியல்ல. இம்மையில் புரியப்படும் உடல் உழைப்புக்கும் சேர்த்துத்தான் என்பதை நாம் விளங்கியாக வேண்டும்.
 கூலி வழங்குவதால் முதலாளி மதிப்பிற்குரியவனுமல்ல. கூலி பெறுவதால் தொழிலாளி கேவலத்திற்குரியவனுமல்ல. எனவே,என்னிடம் கைநீட்டி சம்பளம் வாங்குபவன் தானே என்று ஒரு முதலாளி தன் தொழிலாளியை இளக்காரமாய் எண்ணக் கூடாது. அவ்வாறெண்ணுவது அறியாமைக் காலச் செயல் என்கிறது இஸ்லாம்.

தொழிலாளியே கூலி வாங்க மறந்திட்டாலும் அதைப் பத்திரப்படுத்தி பாதுகாத்து வைத்து உரிய நேரத்தில் ஒப்படைக்க வேண்டும். அது ஒரு அமானிதம். பனூ இஸ்வேலர் காலத்தில் குகையில் மாட்டிக் கொண்ட மூவரில் ஒருவர்,தன்னிடம் வேலை செய்த கூலிக்காரனின் கூலியைப் பத்திரப்படுத்தி,அதற்கொரு ஆடு வாங்கிஅது ஆட்டு மந்தையாகி அவன் எதேச்சையாக திரும்பி வந்து கேட்ட போது,ஒப்படைத்த வரலாறும்அந்த நற்செயலால் ஆபத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டதும் நாம் அறிந்த ஒன்றே.
 சில நேரங்களில் விலை மதிப்புள்ள பொருட்களை அவசர நிமித்தம் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஒரு மனிதன் உள்ளாக வேண்டியது வரும். அது மாதிரியான கட்டங்களில்வந்தது வரை சுருட்டுவோம் என்ற பாணியில் அவற்றை அடிமாட்டு விலைக்கு வாங்கி தன் அலமாரியில் வைத்து அழகு பார்க்கச் சொல்லவில்லை இஸ்லாம். அவனது சூழ்நிலை கருதி உரிய விலையையே வழங்கச் சொல்கிறது.
 இதுபோலஒரு தொழிலாளி நிர்ப்பந்த நிலையில் குறைந்த கூலிக்கு பணி செய்ய வருகிறபோதுரொம்ப நல்லதாப் போச்சு என்று நினைத்து கூலியைக் குறைத்து விடக்கூடாது. அவனது நிர்ப்பந்த நிலை புரிந்து சற்று நிரப்பமாகவே அவனது திறமைக்கேற்ப கூலி வழங்கப்பணிக்கிறது.
அப்படி இல்லை என்றால் நாளை மறுமையில் அவனுக்கு எதிராக நாயகம் (ஸல்) அவர்கள் வாதாடுவார்கள் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.
இஸ்லாத்தில் உழைப்பாளர்களின் உரிமைகள்

ஏமாற்றப்பட்ட உழைப்பாளிக்காக நாளை நான் வாதிடுவேன்.
حَدَّثَنِى بِشْرُ بْنُ مَرْحُومٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ عَنْ سَعِيدِ بْنِ أَبِى سَعِيدٍ عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « قَالَ اللَّهُ ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ ، رَجُلٌ أَعْطَى بِى ثُمَّ غَدَرَ ، وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ ، وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ ، وَلَمْ يُعْطِ أَجْرَهُ »
{صحيح البخاري}

இவர்களெல்லாம் போராடுவதற்கு 1434 ஆண்டுகளுக்கு முன்னாலே உழைப்பாளிகள் எதற்காக பாடுபட்டார்களோ அவை அனைத்தையும் இஸ்லாம் வழங்கிவிட்டது ஆக இஸ்லாத்தால் மட்டுமே அவர்களின் அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்க முடியும். இஸ்லாம் என்ற கொள்கையால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரப்பிரச்னைகளை களைய முடியும்.
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ، قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُه
தொழிலாளியின் வியர்வை உலறும் முன் அவனது கூலியை வழங்கிவிடுமாறு பணிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள். (இப்னுமாஜா) தினக்கூலி என்றால் பகலின் முடிவிலும்வாரக்கூலி என்றால் வாரத்தின் இறுதியில்மாதக்கூலி என்றால் மாதக் கடைசியில் சம்பளம் வழங்கப்பட்டாக வேண்டும். அதில் தாமதம் செய்யக்கூடாது.
 "வாக்களித்துவிட்டு மாறு செய்பவன்,சுதந்திரமனிதனை அடிமைச் சந்தையில் விற்று அதன் கிரயத்தை உண்டவன்வேலைக்கு ஒருவனை அமர்த்தி,குறிப்பிட்ட கூலியையும் பேசி,வேலையையும் வாங்கிவிட்டு பேசிய கூலியை "ஸ்வாஹா" செய்தவன் ஆக இம்மூன்று கிரிமினல்களுக்கெதிராக நின்று நாளை மறுமையில் நான் இறை நீதிமன்றத்தில் வழக்காடுவேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் (புகாரி)
 அநீதி இழைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்திற்கு ஆதரவாகவும்உரிய கூலியை வழங்க மறுத்த முதலாளி வர்க்கத்திற்கு எதிராகவும் நபி (ஸல்) அவர்கள் நிற்பார்கள் என்பதிலிருந்து தொழிலாளர் நலத்தில் இஸ்லாம் கொண்டுள்ள அதிகப்படியான அக்கறையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

சக்திக்கேற்ற வேலை :
 வேலைக்கமர்த்திவிட்டோம்இனி அவன் நமது சொல்படியே நடக்க வேண்டும் என்ற ரீதியில் அதிக வேலை கொடுத்து தொழிலாளியை சக்கையாய் பிழிந்தெடுக்கக் கூடாது.

பணி நேரத்தைத் தாண்டி வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால்,அதற்கான ஓ.டி. சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். காரணம், "தொழிலாளிகளை நீங்கள் சிரமத்திற்குள்ளாக்க வேண்டாம். அதிகப் படியான சிரமம் என்றால் அதில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்" என் பது நபிமொழி.
 பளுவான சுமையை தூக்க முடியாமல் தொழிலாளி சிரமப்படுகிற போது பார்த்துக் கொண்டு சும்மாயிருக்காதீர்கள். நீங்களும் சேர்ந்து அவனுக்கு உதவி செய்யுங்கள் وَلَا تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ (بخاري) என்பதும் நபிமொழியே.
இன்னும் இறை மறையில் சொல்லும் போது
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَها அல்லாஹ் எந்த மனிதரையும் அவனது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. (அல்பகரா:286) (தொழுகை,நோன்புஹஜ்இன்னபிற) வணக்க வழிபாடுகளில் கூட சக்திக்கு மீறிய அளவில் உங்களை நான் சிரமப்படுத்த மாட்டேன் என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறபோதுதொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்கும் கொடுமையை எங்ஙனம் அவன் சகித்துக் கொள்வான்?
 உலகம் முழுவதும் எட்டு மணி நேர வேலை என உறுதி செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதைத் தாண்டி அலுவலகத்தில் ஒரு தொழிலாளியை அமர வைத்து அலைக்கழிக்கக் கூடாது. அவனுக்கென்று குடும்பம் உள்ளது. அன்றாட அலுவல்கள் காத்திருக்கின்றன. அவற்றை அவன் ஆற்றுவதற்கு எந்த வகையிலும் இடையூறு தரக்கூடாது.
இஸ்லாத்தில் உழைப்பாளர்களின் உரிமைகள்

.அவன் தேவையை நிறைவேற்றுவது
وَحَدَّثَنِى أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ بُكَيْرَ بْنَ الأَشَجِّ حَدَّثَهُ عَنِ الْعَجْلاَنِ مَوْلَى فَاطِمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « لِلْمَمْلُوكِ طَعَامُهُ وَكِسْوَتُهُ وَلاَ يُكَلَّفُ مِنَ الْعَمَلِ إِلاَّ مَا يُطِيقُ ».
{صحيح مسلم}
ஷுஐப் (அலை) மூசா நபிக்கு சொன்னது
أعوذ بالله من الشيطان الرجيم {قَالَتْ إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ القَوِيُّ الأَمِينُ * قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللهُ مِنَ الصَّالِحِينَ * قَالَ ذَلِكَ بَيْنِي وَبَيْنَكَ أَيَّمَا الأَجَلَيْنِ قَضَيْتُ فَلا عُدْوَانَ عَلَيَّ وَاللهُ عَلَى مَا نَقُولُ وَكِيلٌ} [القصص: 26 – 28]..

தன் இரு மகள்களுக்கு மூஸா அலை உதவி செய்த காரணத்தினால் நாடுபெயர்ந்து ஓர் நாடோடியாக வந்த மூஸா அலை அவர்களை தன்னிடத்தில் வேலைக்கு சேர்க்கின்றபோது ஷுஐப் அலை அவர்கள் மூஸா அலை அவர்களை பார்த்து கூறிய வார்த்தை. நீங்கள் நாடினால் என்னிடத்தில் பத்தாண்டோ அல்லது எட்டாண்டோ வேலை செய்யலாம். அது உங்களது விருப்பம். உங்களை சிரமத்தில் ஆக்குவதை நான் விரும்பவில்லை என்று ஷுஐப் அலை கூறிய வார்த்தைகளை இன்றைக்கிருக்கின்ற முதலாளிகள் யோசிக்கவேண்டும். தொழிலாளியின் மீது அளவுக்கு அதிகமானசக்திக்கு அப்பாற்பட்ட வேலை மூட்டைகளை சுமத்தி அட்டையாய் உழைப்பாளிகளின் இரத்தத்தை தள்ளுகின்ற முதலாளிகளே இன்று அதிகம்.
தொழிலாளர்களிடத்தில் மென்மையோடு நடந்து கொள்ளுதல்

பத்து ஆண்டுகாலம் பணி செய்த பாலகன் அனஸிடத்தில் ஏன் செய்தாய் எதற்கு செய்தாய் என்று கேள்விக்கனைகளை தொடுக்காத காருண்ய நபி
عن ثابت البناني عن أنس قال ما مسست بيدي ديباجا ولا حريرا ولا شيئا كان ألين من كف رسول الله صلى الله عليه وسلم ولا شممت رائحة قط أطيب من ريح رسول الله صلى الله عليه وسلم ولقد خدمت رسول الله صلى الله عليه وسلم عشر سنين فوالله ما قال لي أف قط ولا قال لشيء فعلته لم فعلت كذا ولا لشيء لم أفعله ألا فعلت كذا . هذا حديث صحيح .
{معجم ابن عساكر}
வாய்க்கு வந்தபடி திட்டிய அபுதர் ரலி அவர்களை கண்டித்த பெருமானார்.
حديث أَبِي ذَرٍّ عَنِ الْمَعْرُورِ، قَالَ: لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ، وَعَلَيْهِ حُلَّةٌ وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ، فَسَأَلْتُهُ عَنْ ذلِكَ، فَقَالَ: إِنِّي سَابَبْتُ رَجُلاً فَعَيَّرْتُهُ بِأُمِّهِ، فَقَالَ لِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم: يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ، إِخْوَانُكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمُ اللهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ
{صحيح البخاري}
அபுதர் ரலி அவர்கள் ஒரு மனிதனை தகாத வார்த்தைகளால் திட்டிவிடுகிறார்கள். பிறகு பெருமானார் ஸல் அவர்கள் அபுதரே அவருடைய அம்மாவை வைத்து அவரை நீ திட்டிவிட்டாயா. உன்னிடத்தில் அய்யாமுல் ஜாஹிலிய்யாவின் பழக்கம் இருக்கிறது என்று பெருமானார் எச்சரித்து விட்டு உங்களுடைய பணியாளர்கள் உங்களது சகோதரர்களாக இருக்கிறார்கள் அல்லாஹ் அவர்களை உங்களது கட்டுப்பாட்டின் கீழே ஆக்கியுள்ளான் எனவே எவருடைய சகோதரர் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றாரோ அவர் சாப்பிடுகின்ற உணவை அவருக்கு கொடுக்கட்டும்அவர் உடுத்துகின்ற ஆடையை அவருக்கு வழங்கட்டும் இன்னும் அவரால் இயலாத காரியத்தை அவர் மீது சுமத்த வேண்டாம் என்று கூறுவார்கள்.

இங்கு பெருமானார் ஸல் அவர்கள் சகோதர்ர்களை பணியாளர்களுக்கு ஒப்பிட்டுவிட்டு பிறகு பணியாளர்களுக்கு ஒரு முதலாளி எந்த உரிமைகளை தவறாமல் வழங்கவேண்டுமோ அதே உரிமையை உன் சகோதரனுக்கும் வழங்கு என்று சூசகமாக உணர்த்திக்காட்டுகிறார்கள்.

மன்னிக்கும் உள்ளம் வேண்டும்.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِىُّ وَأَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ - وَهَذَا حَدِيثُ الْهَمْدَانِىِّ وَهُوَ أَتَمُّ - قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِى أَبُو هَانِئٍ الْخَوْلاَنِىُّ عَنِ الْعَبَّاسِ بْنِ جُلَيْدٍ الْحَجْرِىِّ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَمْ نَعْفُو عَنِ الْخَادِمِ فَصَمَتَ ثُمَّ أَعَادَ عَلَيْهِ الْكَلاَمَ فَصَمَتَ فَلَمَّا كَانَ فِى الثَّالِثَةِ قَالَ « اعْفُوا عَنْهُ فِى كُلِّ يَوْمٍ سَبْعِينَ مَرَّةً »
{سنن ابي داؤد}

பெருமானாரிடத்தில் ஒர நபர் வந்து பணியாளர்களை ஒரு பொழுதுக்கு எவ்வளவு மன்னிக்கவேண்டும் என்று கேட்டார். பெருமானார் மௌனமாக இருந்தார்கள். மீண்டும் கேட்டார். மீண்டும் மௌனமாக இருந்தார்கள். மூன்றாவது முறையாக கேட்டபோது ஒரு பொழுதுக்கு எழுவது முறை மன்னித்துவிடுமாறு கூறினார்கள்.

பெருமானார் கேட்டவுடன் பதில் கூறாமல் மௌனம் சாதித்ததிலிருந்தும் பிறகு எழுபது முறை என்று கூறியதிலிருந்தும் நாம் விளங்கவேண்டிய செய்தி பணியாளர்கள் தவறு செய்தால் திருத்தலாமே தவிற திட்டுவதுகடுகடுப்பது,கோபத்தை கக்குவது போன்ற செயல்பாடுகளில் இறங்குவது இஸ்லாமிய வழிகாட்டுதலுக்கு எதிரானதும் பெருமானாரின் சுன்னத்திற்கு முரனானதும் கூட. பசியின் கோரத்தால்வருமையின் வாட்டத்தால் வேறு வழியில்லாமல் கடைகளுக்கு வருகின்ற சிறுவர்களை கசக்கி புளிவதோடு நிற்காமல் வசைபாடுவதுஅடித்து நொறுக்குவதுசிறுந்தவறுகளும் மலை போன்று பார்க்கப்படுவது உழைப்பாளிகளை தெருநாயை விடக் கேவலமாக நடத்துவதற்குச் சமம் என்பது மட்டுமல்ல மனித நேயமற்றஈவு இறக்கமற்ற செயல்களுல் கட்டுபட்டுதும் ஆகும். பெருமானாரிடத்தில் சிறுவராக வேலை செய்த அனஸ் ரலி அவர்களை பெருமானார் நடத்திய விதம்அனுகிய முறை,பழகிய பழக்கம் இன்றைக்கு உலகத்தில் நம்பர் ஒன் வியாபாரியாக இருக்கக்கூடியவர்களுக்கும் பாடம் கற்பிக்கின்றது. இஸ்லாம் உழைத்து வாழச் சொல்கிறதுஉழைப்பவனை கண்ணியப்படுத்துகிறதுஉழைப்பாளிகளின் உரிமையை காக்குகிறது. இந்த அகிலமும் உழைப்பாளின் உரிமைகளை காக்கவும் சிறக்கவும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

உழைப்புக்கு ஊதியம் எந்த அளவு துரிதமாக கொடுக்க வேண்டுமோ அதே போன்று வியர்வை வெளியேறும் அளவுக்கு நன்றாக முதலாளிக்கு உழைத்தும் கொடுக்க வேண்டும்
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ، قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُه
 என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகிறது.இறைமறையில் (ஜுமுஆ)தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவி சென்று இறையருளை தேடுங்கள் (63:10)
 தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்ற உணவைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது
 நபிமார்களும் உழைத்துள்ளார்கள்
ஆதம்(அலை)விவசாயம்
இப்றாஹிம் நபி விவசாயம்
லூத் நபி விவசாயம்
யஸஃ நபி விவசாயம்
ஸாலிஹ் நபி வியாபாரம்
ஹாரூன் நபி வியாபாரம்
நூஹ் நபி தச்சுத் தொழில்
ஜகரிய்யா நபி தச்சுத் தொழில் இஸ்மாயீல் நபி வேட்டையாடுதல்
யஃகூப் நபி ஆடு மேய்தல்
ஷூஐப் நபி ஆடுமேய்தல்
மூஸா நபி ஆடு மேய்தல்
லுக்மான் நபி ஆடுமேய்தல்
நபி(ஸல்) ஆடுமேத்தல்
 சரித்தரத்தை உற்று நோக்கும் போது நபிமார்களும்வலிமார்களும்,அறிஞகர்க ளும் உழைத்துள்ளார்கள்.
ஹரமான உழைப்பால் ஏற்படுகின்ற நஸ்டம்
 1.நல்ல அமல் செய்ய வாய்ப்பு கிடைக்காது
2.அவ்வாறு செய்தால் அதில் இன்பம் இருக்காது
3.நற்செயல்கள் ஏற்கபடாது
4.தூஆ ஒப்புக்கொள்ளபடாது
5.செல்வத்தில் பரகத் இருக்காது
6.கெட்ட செய்ய தூண்டும்
7.குழந்தைகள் மோசமாகிவிடும்
8.ஹராமான பனம் வந்த வேகத்தில் சென்றுவிடும்
9.ஹராமான உணவால் வந்த சதை நரகத்திற்கே
10.அதை சாப்பிவதால் அல்லாஹ்நபி(ஸல்) வின் சாபம்
11.சுவனம் புகமாட்டான்
என எண்ணற்ற தீமைகள்


சக்தி இருந்தும் சுயமாக சம்பாதிக்காமல் எப்போதும் அடுத்தவர்களின் சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிடுபவன் நரகவாதி

عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِيِّ رضي الله عنه قَالَ وَأَهْلُ الْجَنَّةِ ثَلَاثَةٌ ذُو سُلْطَانٍ مُقْسِطٌ مُتَصَدِّقٌ مُوَفَّقٌ وَرَجُلٌ رَحِيمٌ رَقِيقُ الْقَلْبِ لِكُلِّ ذِي قُرْبَى وَمُسْلِمٍ وَعَفِيفٌ مُتَعَفِّفٌ ذُو عِيَالٍ قَالَ وَأَهْلُ النَّارِ خَمْسَةٌ الضَّعِيفُ الَّذِي لَا زَبْرَ لَهُ الَّذِينَ هُمْ فِيكُمْ تَبَعًا لَا يَبْتَغُونَ أَهْلًا وَلَا مَالًا وَالْخَائِنُ الَّذِي لَا يَخْفَى لَهُ طَمَعٌ وَإِنْ دَقَّ إِلَّا خَانَهُ وَرَجُلٌ لَا يُصْبِحُ وَلَا يُمْسِي إِلَّا وَهُوَ يُخَادِعُكَ عَنْ أَهْلِكَ وَمَالِكَ وَذَكَرَ الْبُخْلَ أَوْ الْكَذِبَ وَالشِّنْظِيرُ الْفَحَّاشُ (مسلم) بَاب الصِّفَاتِ الَّتِي يُعْرَفُ بِهَا فِي الدُّنْيَا أَهْلُ الْجَنَّةِ وَأَهْلُ النَّارِ- كِتَاب الْجَنَّةِ وَصِفَةِ نَعِيمِهَا وَأَهْلِهَا
பொருள்- மூன்று சாரார் சுவனவாசிகள் 1, நற்காரியங்கள் செய்வதற்கு வாயப்பு வழங்கப்பட்டநீதமானதர்ம் சிந்தனை கொண்ட அரசர். 2, சொந்த பந்தங்களுக்கு உதவும் இரக்க குணமுள்ள செல்வந்தர் 3,குடும்பச் சுமைகள்செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்காக ஹராமான வழியை நாடாமல் தன் சிரமத்தை சகித்துக் கொண்டு வாழும் ஏழை
நான்கு சாரார் நரக வாதிகள் – 1,பலவீனமானவர்- (சோம்பேறி) இவருக்கென சுய சம்பாத்தியம் இல்லாமல் எப்போதும் உங்களைப் பின் தொடர்வார். இப்படிப்பட்டவர்கள் (செலவுக்கு அஞ்சி) திருமணம் செய்யவும் மாட்டார்கள். சம்பாதிக்கும் வழியையும் தேட மாட்டார்கள். 2,மோசடிக்காரன்- இவன் அடுத்தவர்களை ஏமாற்றியே தனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வான். அற்பமான பொருளாக இருந்தாலும் இவன் அடுத்தவர்களை ஏமாற்றித் தான் அதை அடைவான் 3, (கூடவே இருந்து குழி பறிக்கும்) துரோகி- இவன் காலையிலும்மாலையிலும் (எந்த நேரமும்) உன்னுடைய பொருள் விஷயத்திலும்உன் வீட்டார் விஷயத்திலும் உனக்கு துரோகம் செய்வான்.4,கஞ்சன் அல்லது பொய்யன் 5,அசிங்கமான வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கமற்றவன்
                                                                وَأَنْ لَيْسَ لِلإنْسَانِ إِلا مَا سَعَى                       
எனவே மனிதன் அவன் முயற்சித்தது தான் அவனுக்கு கிடைக்கும். ஆகையால் உழைக்கும் வர்க்கமாக, உழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி அவர்தம் உரிமைகளை நிறைவேற்றும்  சமூகமாக அல்லா நம் அனைவரையும் ஆக்குவானாக ஆமீன் ஆமீன் யா ரப்பால் ஆலமீன். 

குறிப்பு வழங்கியவர்கள் " நஸீர் மிஸ்பாஹீ , ஷேக் ஆதம் தாவூதி,  மௌலானா நூருல் அமீன், அப்பாஸ் ரியாஜி, ஜபருல்லாஹ் முனீரி, TMTமௌலானா மேலும் சில இணைய தளங்களிலிருந்து மேலதிக தகவலோடு பீர் FAIZY

Tuesday 28 April 2015

அபூதாலிப் நரகவாதியா?

அபூதாலிப் நரகவாதியா?

கேள்வி: அபூதாலிப் அவர்கள் நரகவாதி என்று இப்னு தைமிய்யா போன்றோர் கூறுகின்றனரே! இதற்கு பதில் என்ன?
பதில்: மௌலவி அல்ஹாபிழ் எப்.எம்.இப்றாஹீம் ரப்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ‘வஸீலா என்றால் என்ன?’ என்ற நூலிலிருந்து…
அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மார்க்க அறிஞர்கள் பல்வேறு வகையான கருத்துக்களை கூறுகின்றனர். எனினும் அபூதாலிப் அவர்கள் நிச்சயமாக முனாபிக்கில்லை. காரணம் மக்கத்துக் குறைஷிகள் பெருமானாருக்கு சொல்லொண்ணாத் துயரங்களைத் தந்தபோதெல்லாம் அபூதாலிபவர்கள் நபியவர்களை அரணாக நின்று பாதுகாத்தவர்கள். அவர்களுக்காக பெருமானார் பிரார்த்தனையும் புரிந்தததாக இப்னு தைமிய்யாவே ஒப்புக் கொள்கிறார்.
இன்னும் தப்ஸீர் ரூஹுல் பயானில் அபூதாலிபவர்கள் மரணித்தப் பின்னர் அவர்களை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரிலிருந்து உயிர் பெற்றெழச் செய்து அவர்களுக்குக் கலிமாச் சொல்லிக் கொடுத்தார்கள் என்றும், ஷைகு அப்துல் ஹக் முகத்திஸ் திஹ்லவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் மதாரிஜுன் நுபுவ்வத் என்னும் நூலில், அபூதாலிபவர்களின் மரணம் ஈமானோடு தான் நிகழ்ந்ததென்று உறுதிப்படுத்துகின்றனர். மேலும் தைமிய்யா ஒரு ஹதீஸை சுட்டிக் காண்பிக்கின்றார். அதாவது:
அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், அபூதாலிப் தங்களுக்குப் பல ஒத்தாசைகள் செய்திருக்கிறார். பல சந்தர்ப்பங்களில் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்துத் தங்களை காப்பாற்றியுள்ளார். எனவே தாங்கள் அவருக்கு ஏதாவது உபகாரம் புரிந்தீர்களா? என்று வினவியதற்கு திருநபியவர்கள், ஆம். இப்பொழுது அவர் நரகத்தின் ஓரத்தில் இருக்கிறார். நான் அல்லாஹ்விடம் மன்றாடி(ஷபாஃஅத் செய்து) இதனைச் செய்யவில்லையாயின் அவர் நரகத்தின் அடித்தட்டில் இருந்திருப்பார் என்ற ஹதீஸை அபூதாலிபின் குப்ருக்குச் சான்றாக வைக்கிறார் தைமிய்யா.
ஆனால் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ள வார்த்தையில் ‘அபூதாலிபவர்கள் நரகத்தின் மேல் ஓரத்தில் இருக்கிறார்’ என்பதாக நபியவர்களைக் கொண்டு கூறப்பட்டுள்ள வாக்கியம் மிக மிக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஏனெனில் நபியவர்கள் ‘நரகத்தின் மேல்’ என்பதற்கு நரகம் ஏழு தட்டுக்களை கொண்டதாக இருப்பதால், ‘மேல்’ என்னும் பதத்திற்கு நரகத்தின் முதல்தட்டு என்றும், ‘ஓரத்தில் இருக்கிறார்’ என்னும் பதத்திற்கு நரகத்தின் அருகாமை என்பதாகவும் பொருள் கொள்ள வேண்டும். அதாவது, அபூதாலிபவர்கள் நரகத்துடைய முதல் தட்டின் அருகில் இருந்து கொண்டிருக்கிறார் என்பது மேற்கண்ட ஹதீஸின் கருத்தாகும். ஆதலால் அபூதாலிபிடம் ஈமான் இருக்கிறது. எனினும் அது பூரணத்துவம் பெற்றதாயில்லையாகையால், நரகத்தின் முதல் தட்டுடைய அருகாமையில் இருக்கின்றார் என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும். அதை விடுத்து, அபூதாலிபவர்கள் காபிராகவோ, முனாபிக்காகவோ இருந்தாரெனத் தைமிய்யாக் கூறுவது சுத்த அபத்தமான ஒன்றாகும்.
அடுத்து தைமிய்யாவின் இரண்டாவது ஹதீஸைக் கவனிப்போம்:
அபூஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர். ஒருமுறை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தந்தை அபூதாலிபைப் பற்றி கூறப்பட்டது. அப்பொழுது நபியவர்கள் மறுமையில் எனது சிபாரிசு அபூதாலிபுக்கு நல்ல பலனை அளிக்குமென்று நம்புகிறேன். நெருப்பின் மேல் பகுதியில் அவரை நியமிக்கப்படும். அவரின் இரு கரண்டைக் கால்களை நெருப்பு மூடி நிற்கும். இதனால் அவரது மூளை உருகி வடிந்து கொண்டிருக்கும். நரகவாதிகளில் அபூதாலிப் ஒருவர் மட்டும்தான் நெருப்பிலான இரு மிதியடிகள் அணிந்திருப்பார். அதிலிருந்து வெப்பம் மூளை வரையிலும் மேலே சென்று மூளையை உருகச் செய்து கொண்டிருக்கும்’ என்ற இந்த ஹதீஸை அபூதாலிபவர்களின் குப்ருக்கு இரண்டாவது சான்றாக கொண்டு வருகிறார் தைமிய்யா. இனி இதன் விளக்கமாகிறது:
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேற்கூறப்பட்ட இரு ஹதீஸுகளுடைய எந்த வாhத்தையிலும் அபூதாலிபவர்கள் நரகவாதியென்றோ, நகரத்திலிருக்கிறார் என்றோ கூறப்படவில்லை.
மாறாக நரகத்தின் அருகாமையிலும், நெரப்பிலான இரு மிதியடிகளையும் அணிந்துள்ளார் என்று மட்டும் கூறப்பட்டுள்ளதை வாசகர்கள் கவனத்தில் கொள்வது அவசியம். பின்னும் மறுமையில் அபூதாலிபின் நிலை மேற்கண்ட வண்ணமிருக்கும். ஆயினும் எனது சிபாரிசு அபூதாலிபை அந்நிலையிலிருந்தும் விடுவித்துவிடுமென நபியவர்கள் கூறுகின்றனர்.
எனெனில் முந்திய ஹதீஸில் அபூதாலிபவர்கள் நகரத்தின் மேல் தட்டின் அருகாமையிலிருக்கிறார் என்னும் வாக்கியம் இரண்டாவது ஹதீஸிலும் சுட்டிக் காண்பிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அபூதாலிபவர்களின் நிலை நபியவர்கள் ஷபாஅத்து செய்யுமுன் வரை மேற்கண்ட வண்ணமாயிருக்கும். ஆயினும் எனது சிபாரிசு நல்ல பலகை அபூதாலிபுக்கு கொடுத்து, மேற்கண்ட அத்துன்பமும் அவரை விட்டுப் பரிபூரணமாக நீங்கி விடுமென்று நபியவர்கள் இஷாரா செய்கின்றார்கள்.
காரணம், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முந்திய ஹதீஸில் அபூதாலிபவர்களுக்காக வேண்டி நான் இறைவனிடம் ஷபாஅத்துச் செய்துள்ளேன் என்றும், இரண்டாது ஹதழுஸில் மறுமையில் மீண்டும் நான் அவருக்காக ஷபாஅத் செய்வேன் என்றும் அதன் காரணமாக அவருக்கு அது நல்ல பலனைக் கொடுக்கும் என்றும் கூறியுள்ளதால நல்ல பலனாகிறது நரக கஷ்டத்தை விட்டு முழுமையாக நீங்குவதாகையால் திருநபியவர்கள் இவ்விதம் சொன்னார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் நபியவர்கள் மீது கொஞ்சமும் பிரியமோ, பற்றுதலோ இல்லாத அபூலஹப் நபியவர்கள் பிறந்தச் செய்தியினைக் கேட்ட சந்தோஷத்திற்காக அச்செய்தி கொண்டு வந்த அடிமைப் பெண்ணைத் தன் கலிமா விரலைச் சுட்டிக் காண்பித்து, அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்த ஒரே காரணத்திற்காக, அவன் எந்தத் திங்களன்று விடுதலை செய்தானோ, அந்த ஒவ்வொரு திங்களன்றும் அவனது நரக வேதனை எளிதாக்கப்படுவதுடன், அவன் சுட்டிக் காட்டிய பெருவிரலிலிருந்து பால் போன்ற (பால் என்றும் கூறப்படுகின்றது) ஒரு திரவம் வெளிப்பட்டு அது அவனுக்கு உணவாக அளிக்கப்படுகின்றது.
பின்னும் அபூலஹப் தன் சந்ததியில் ஒரு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது என்பதற்காகச் சந்தோஷமுற்று அவ்வடிமையை விடுதலை செய்தானேயன்றி பிறந்துள்ளது அல்லாஹ்வின் ரஸூல்தான் என்பதற்காக அடைந்த சந்தோஷமல்ல. இல்லையில்லை. பிறந்துள்ளது அல்லாஹ்வுடைய ரஸூல்தான் என்பதைத் தெரிந்துதான் அடிமையை விடுதலை செய்தானெனக் கூறப்பட்டால், பிற்காலத்தில் நபியவர்கள் தங்களின் நுபுவ்வத்தை நபித்துவத்தைப் பிரகடனப்படுத்தியபோது அவன் அதனை ஏன் எதிர்க்க வேண்டும்? மறுக்க வேண்டும்? என்னும் சங்கடமான கேள்விகளுக்கெல்லாம் பதில் தர வேண்டிய இக்கட்டான நிலை உருவாகும்.
எவ்வாறாயினும் அபூலஹபுக்கு ஒவ்வொரு திங்களன்றும் நரகில் அவனது வேதனை லேசாக்கப்படுவதும், அவனுக்கு உணவும் வழங்கப்படுவகிறதென்றால், பெருமானாரின் சிறிய தந்தை அபூதாலிபவர்கள் சுமார் எட்டு வயதிலிருந்து தாம் இறக்கும் காலம் வரை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது தனதன்பு அனைத்தையும் பொழிந்து, சீராட்டிப் பாராட்டி, இரவு பகல் பாராது நபியவர்களுக்காகவே, அவர்களின் நலனுக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அபூதாலிபவர்கள் நிலை மறுமையில் என்னவாகுமென்பது வெள்ளிடைமலை. இவற்றையெல்லாம் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்காமல் அபூதாலிப் காபிர் என்றோ, முனாபிக் என்றோ, முஷ்ரிக் என்றோ கூறுகின்ற தைமிய்யாவின் போக்கு பெரும் ஆச்சரியத்தை தோற்றுவிக்கின்றது.
மேலும் தைமிய்யா குறிப்பிடுவது Nhல பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காபிர்களுக்காக இறைவனிடம், இறiவா! இவர்களை நேர்வழியின்பால் திருப்புவாயாக! இவர்களுக்கு ணவும் அளித்தருள்வாயாக எனக் கேட்டுள்ள பிரார்த்தனையைக் கவனிக்குங்கால் உலகில் பெருமானார் காபிர்களுக்கெல்லாம் பிரார்த்தித்திருக்கும்போது, இன்னும் மறுமையிலும், காபிர்களுக்கு ஷபாஅத்தும் செய்வார்களெனக் கூறப்பட்டுள்ளபோது பெருமானார் மீது நீங்கா அன்பு கொண்டிருந்த அபூதாலிபவர்களுக்கு மறுமையிலும், இவ்வுலகிலும ஏன் ஷபாஃஅத் செய்ய மாட்டார்கள்? மேலும் பெருமானரவர்கள் அபூதாலிப் அவர்களுக்காக நான் ஷபாஅத்துச் செய்வேன் என்பதாகக் கூறியுள்ளதும் கவனிக்கத் தக்கது.
இன்னும் ஒரு நபித்தோழரின் மறுமை நிலைப்பற்றி அவரிடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போத, நீர் யாரை அதிகமாக நேசிக்கின்றீரோ அவருடன்தான் மறுமையில் இருப்பீர் எனக் கூற, அத்தோழர் நபியே! நான் தங்களைத்தான் அதிகமதிகம் நேசிக்கின்றேன் எனக் கூறி மறுமையில் தாம் நபியவர்களுடனிருப்பதை உறுதிப்படுத்தினார். அந்தநபித்தோழரின் பெயர் ஸவ்பான் ரலியல்லாஹு அன்ஹு என்பதாகும். இவ்வாறே ஈமானை பற்றி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பெருமானார் கூறும்போது,
ஒருவர் அவர் தமது பெற்றோர் பிள்ளை அனைத்து மனிதர்களைக் காண என்னை அதிகமாக நேசிக்காதவரை அவர் முஃமினாக மாட்டார். (புகாரி) என்றும் கூறியுள்ள இவ்விரு ஹதீஸையும் கவனித்தால், எவர் எல்லாவற்றையும் விட பெருமானாரை அதிகமதிகம் நேசிக்கின்றாரோ, அவரே முஃமினென்றும், யாரை அதிகமாக நேசித்தாரோ அவருடன்தான் மறுமையிலிருப்பார் எனக் கூறியுள்ளதால்,
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தம்முயிரை விட ஏன்! உலகிலுள்ள அனைத்துப் பொருட்களைக் காணவும் அதிகம் நேசித்தவர்கள் அபூதாலிபவர்கள். இன்னும் சிற்சில சந்தர்ப்பங்களில் தம்முயிரைக் கூட பணயம் வைத்து எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து நபியவர்களைக் காப்பாற்றியுள்ளனர் என்பது அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் கொண்டு தைமிய்யாவே அபூதாலிபவர்களின் நிலையையும், அவர்தம் நபியின் மீது கொண்டிருந்த நேசத்தையும் உறுதிப்படுத்துவதால் அபூதாலிப் முஃமினா? அல்லது காபிரா? மறுமையில் அவர் யாருடனிருப்பார்கள்? அவர்களின் மறுமைப் பற்றிய முடிவு என்னவாகுமென்பதை தைமிய்யாவின் சீடர்களே நிர்ணயிக்கட்டும்.

Friday 24 April 2015

இந்தியாவின் அருள் ரோஜா அஜ்மீர் ஹாஜா


எம்.ஐ.எம்.அன்ஸார் 

இந்தியாவில் வாழுகின்ற சகல மதத்தினரும் பிரஜைகளும் ஒன்றாகப் போற்றிப் புகழுகின்ற, ஸியாறத் செய்கின்ற ஓர் அடக்கஸ்தலம் ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது. இங்கு சமாதி கொண்டு தினமும் பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் இறைநேசர் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களாகும். 

இவர்கள் ஹிஜ்ரி 537 இல் புனித றஜப் மாதம் பிறை 14 இல் கியாதுத்தீன் என்ற தந்தைக்கும், பீபீ மாஹ்நூர் என்ற தாய்க்கும் அருமை மைந்தராக சஞ்சர் என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்கள் இவ்வையகத்தில் தோன்றி 895 வருடங்களாகின்றன. 
தனது 9வது வயதில் புனித திருக்குர்ஆனை ஓதி மனனமிட்ட ஹாஜா நாயகம், அவர்களின் 15 வது வயதில் அன்னாரது அருமைத் தந்தை ஹழ்றத் கியாதுத்தீன் றழி அவர்கள் இறையடி சேர்ந்து விட்டார்கள். 

தந்தைக்குத் தோட்டம் ஒன்றும், தண்ணீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றும் இருந்தது. தந்தையின் மறைவுக்குப் பினனர் அவ்விரெண்டும் ஹாஜா நாயகத்திற்குக் கிடைத்தன. 

ஒரு நாள் ஹாஜா நாயகம் அவர்கள் தனது தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சமயம், கந்தையான கிழிந்த ஆடைகளுடன் அடர்ந்த தலைமுடி, தாடியுடன் ஒரு வயதான மனிதர் வந்தார். 

அவரைக் கண்ட இளம் வயதாக இருந்த ஹாஜா நாயகம் அவர்கள், அவரை அணைத்து, திராட்சைப் பழங்களைக் கொடுத்து கௌரவித்தார்கள். 

அவர்கள்தான் ஹழ்றத் செய்யித் இப்றாஹீம் கந்தூசி ஆகும். திராட்சைப் பழங்களை சாப்பிட்டு முடித்த கந்தூசி அவர்கள், தனது சட்டைப் பைக்குள் இருந்த எள்ளினால் செய்யப்பட்ட ரொட்டித் துண்டொன்றை எடுத்து, உமிழ் நீரில் நனைத்து, ஹாஜா நாயகம் அவர்களிடம் சாப்பிடுமாறு கொடுத்தார்கள். 

அந்த ரொட்டித் துண்டை சாப்பிட்ட ஹாஜா நாயகத்தின் உள்ளத்தில் உயர் மெய்ஞ்ஞானம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பமாயிற்று. இறைஞான ஒளியினால் அவர்களது உள்ளம் நிரம்பலாயிற்று. உலக ஆசைகள் யாவும் அவர்களின் உள்ளத்தில் இருந்து ஓடிப்போயிற்று. 

இதனால் ஹாஜா நாயகம் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்று, கிடைத்த பணத்தை ஏழைகளுக்கு தானம் செய்து விட்டு, ரசியாவிலுள்ள புஹாறா நகர் நோக்கி வந்தார்கள். 

அங்கு சில மார்க்க விடயங்களைக் கற்றுக் கொண்டு, அங்கிருந்து ஈராக் நாட்டிற்குப் பயணமானார்கள். 

ஈராக் வந்தடைந்த ஹாஜா நாயகம் அவர்கள், மகான் உத்மான் ஹாரூனீ (றழி) அவர்களிடம் பைஅத் பெற்றுக் கொண்டார்கள். 

அதன் பின்னர் திரு மதீனா நகர் சென்று, அங்கு சிறிது காலம் நிஷ்டையில் அமர்ந்தார்கள். கண் விழித்த ஹாஜா நாயகம் அவர்கள் மதீனா நகரை விட்டு இந்தியா நோக்கிப் பயணமானார்கள். 

பல தடைகளைத் தாண்டி பல்லாண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவை வந்தடைந்து ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் நகரில் பாதம் பதித்தார்கள். 

இந்த வேளையில் ராஜஸ்தான் மாநிலம் மன்னன் பத்ஹூறாவின் ஆட்சியில் இருந்தது. இதனால் அம்மன்னனால் ஹாஜா நாயகத்திற்கு பெரும் தொல்லைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டன. 

பல இடர்பாடுகளுக்கு மத்தியில் ஹாஜா நாயகமும், அவர்களது சீடர்களும் அனாஸ்கார் எனும் நீரோடைக்கு அருகில் தங்கினார்கள். ஒரு சமயம் ஹாஜா நாயகம் அவர்கள் வுழூ செய்வதற்காக அனாஸ்கார் நீரோடையில் நீர் எடுக்கச் சென்ற போது, அவர்களுக்கு நீர் ஏடுக்கத் தடை விதிக்கப்பட்டது. 

இதனால் ஹாஜா நாயகம் அவர்கள் தன்னிடமிருந்த சிறிய கூஜாவை குளத்தில் வைத்தார்கள். குளத்து நீர் முழுவதும், கூஜாவினுல் ஏறிவிட்டது. இதனால் குளம் வற்றி நிலங்களெல்லாம் வறண்டு போயின. ஆடு, மாடுகள் செத்த மடிந்து போயின. வயல்கள் எல்லாம் நாசமாயின. இதனைக் கண்ட மன்னன் பத்ஹூறா தடுமாற்றம் அடைந்தான். 

உடனே தனது மந்திரவாதியான “அஜேபால்” என்பவரை அழைத்து, ஹாஜா நாயகத்துடன் மந்திரத்தால் மோதிப் பார்த்தான். ஆனால் “விலாயத்” என்னும் வலித்தனத்தின் முன் “மந்திரம்” தோல்வி அடைந்து விட்டது. 

இதனால் மந்திரவாதி அஜேபாலும் ராஜஸ்தான் மாநில மக்களும் புனித இஸ்லாத்தில் இணைந்து கொண்டனர் இவ்வாறு சுமார் 90 இலட்சம் காபிர்கள் புனித இஸ்லாத்தில் படிப்படியாக இணைந்து கொண்டதாக வரலாறு கூறுகின்றது. 

தனது 90வது வயதின் பின்னர் இரண்டு திருமணங்களை செய்து, 3 ஆண் பிள்ளைகளையும் இரண்டு பெண் மக்களையும் பெற்று, தந்தையாகி ஹிஜ்ரி 633 இல் தமது 96 வது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்து இறையடி சேர்ந்தார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.) 

அவர்கள் மரணித்த போது அவர்களது நெற்றியில் “ஹாதா ஹபீபுல்லாஹ் மாத பீ ஹூப்பில்லாஹ்” இவர் இறை அன்பர். இறையன்பிலேயே மரணித்தார் என ஒளியால் எழுதப்பட்டிருந்தது. 

அஜ்மீர் நகரில் அமைந்துள்ள ஹாஜா நாயகத்தின் அடக்கஸ்தலத்திற்கு சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1902 ஆம் ஆண்டு விஜயம் செய்த பிரிட்டிஸ் ஆட்சியில் இந்தியாவினுடைய வைஸ்ராயராக இருந்த கஷ்ஷன் பிரபு அங்குள்ள குறிப்பேட்டில் பின்வருமாறு எழுதியுள்ளார். 

அதாவது “சாதி, மத வேறுபாடின்றி எல்லோரையும் ஆன்மீக ஆட்சி நடாத்தக் கூடிய ஓர் அடக்கவிடம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


http://coastaldigest.com/index.php/news/74690-with-love-from-obama-a-chadar-for-ajmer-sharif

இந்தியாவின் அருள் ரோஜா அஜ்மீர் ஹாஜா