السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 10 April 2018

தாபியீன்களில் சிறந்த உவைஸுல் கர்னி

ஸையிதுனா உவைஸ் அல்-கர்னி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்டது, “தொழுகையின்போது பணிவடக்கமாக எது கருதப்படுகிறது?”
ஸையிதுனா உவைஸ் அல்-கர்னி ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள், “ஓர் அம்பு உங்களை ஊடுறுவி சென்றால்கூட உங்களுக்கு அது தெரியக்கூடாது. அந்த அளவுக்கு நீங்கள் தொழுகையில் மெய்மறந்து இருக்க வேண்டும்.”
இவர்கள் தாபியீன்களில் மிகச் சிறந்தவர்கள்.
ஸஹாபா பெருமக்கள் நபிகள் பெருமானார் முஹம்மத் ﷺ அன்னவர்களிடம் கேட்டார்கள், “உவைசுல் கர்னி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உங்களை கண்டிருக்கிறார்களா நாயகமே?”
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள், “இல்லை, அவர்களின் ஜடத்துவ கண்களால் என்னை அவர்கள் காணவில்லை. (கண்டிருந்தால் ஸஹாபா என்ற அந்தஸ்தைப் பெற்றிருப்பார்கள்) ஆயினும் அவர்கள் என்னை தன் ஆத்மீகக் கண்களால் கண்டுள்ளார்கள்.”
ஸஹாபா பெருமக்கள் மாநபிகளார் ﷺ அன்னவர்களிடம் கேட்டார்கள், “எங்களுக்கு அவர்களை காணக்கிடைக்குமா நாயகமே?”
நபிகள் கோமான் முஹம்மத் ﷺ அன்னவர்கள் ஸையிதுனா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்துக் கூறினார்கள், “நீங்கள் அவர்களைக் காணமாட்டீர்கள். உமரும் அலியும் (ரலியல்லாஹு அன்ஹும்) அவர்களைக் காணுவார்கள்.”
- [ ] பின் அவர்கள் இருவரையும் பார்த்துக் கூறினார்கள், “(அவர்களின் அடையாளம்) அவர்களின் உடலெங்கும் ரோமம் நிறைந்திருக்கும். அவர்களின் இடது கை உள்ளங்கையில் ஒரு திர்ஹத்தின் அளவு வெள்ளை அடையாளம் இருக்கும். அது வெண்குஷ்டத்தின் அடையாளம் அல்ல. அவர்களைக் கண்டவுடன் என்னுடைய சலாத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். என்னுடைய உம்மத்தவர்களான என் சமூகத்துக்கு அவர்களை துஆ செய்யச் சொல்லுங்கள். அவர்கள் அவ்லியாக்களில் ‘அத்கியா’ வானவர்கள். (பாதுகாப்பு பரணைப் போன்றவர்கள்) அவர்கள் மிக்கப் பரிசுத்தமானவர்கள்.”
‎صلى الله عليه وعلى آله وصحبه وسلم
‎رضوان الله عليهم أجمعين
அல்லாஹ் عزوخل நாளை மறுமையிலே ஸையுதுனா உவைஸ் அல்-கர்னி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தோழமையை எமக்குத் தந்து அருள்பாலிப்பானாக.
நன்றி: AWLIYA ALLAH (NOORULHUDA)
தமிழில்:அப்துர் ரஹீம் முஹம்மத் ஜஃfபர்
When asked; 'What is considered as modesty during prayer?'
Sayyiduna Uways al-Qarani رضي الله عنه said; 'For you to be so attuned that even if an arrow pierces you, you remain unaware of it.'
Best of the Tabi'een
The Sahaba al-Kiraam asked the Prophet Muhammad ﷺ ; "Have Sayyiduna Uways al-Qarani Radhi Allahu’Anhu seen you?"
The Prophet Muhammadﷺ said; "Not with his physical eyes (If he did he would become a Sahabi), but he has seen me with his spiritual eyes."
Sahaba al-Kiraam asked the Prophet Muhammadﷺ; "Can we see him?"
The Prophet Muhammadﷺ said to Sayyiduna Abu Bakr as-Siddiq Radhi Allahu’Anhu; "You will not see him, but Sayyiduna Umar ibn al-Khattab and Sayyiduna Ali ibn Abi Talib Radhi Allahu’Anhu will see him. His entire body is covered with hair. On the palm of his hand and left side is a white spot, the size of a Dirham, which is not the mark of leprosy. When you meet him, convey my Salaam to him and tell him to make Du'a for my Ummah (Nation). Among the Awliya' those who are the Atqiyaa (a very loft category of Awliya'), he is the holiest."'
‎صلى الله عليه وعلى آله وصحبه وسلم
‎رضوان الله عليهم أجمعين
May Allah ‎عزوجل give us the company of Sayyiduna Uways al-Qarani on the Day of Judgement, Ameen!

வாயடைத்துப்போக ஒரு பதில்

கலாநிதி டாலியா முஜாஹித் ஹிஜாப் அணிந்து ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஆலோசகராக இருந்தவர்.
‘அவர்கள் அணிந்திருக்கும் ஹிஜாப் ஆடை அவரது அறிவுகூர்மையோடு ஒத்துப்போகவில்லையே’ என்று அமெரிக்க ஜனாதிபதி அவர்களிடம் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டது.
‘ஹிஜாப் என்பது அறியாமை காலத்து யுகத்தின் ஆடை’ என்ற கருத்திலேயே இந்த கேள்வி அவர்களால் முன் வைக்கப்பட்டது.
டாலியா முஜாஹித் அவர்கள் இவ்வினாவுக்கு மிக அறிவுக்கூர்மையோடு பதிலளித்துள்ளார்கள்:
“முதலாம் நூற்றாண்டிலிருந்து மனிதக்குலம் நிர்வாண கோலத்திலேயே இருந்திருக்கிறது. கால ஓட்டத்தில் அவன் பலவகை ஆடைகளின் பயன்பாட்டை கண்டுபிடித்து, அவற்றை அணியவும் கற்றுக்கொண்டான். இவ்வாறு மனித குலம் ஆடை அணியத் தொடங்கி முன்னேறியதின் பலனாக, நாகரிகத்தின் உச்சக்கட்ட ஆடையான ஹிஜாபைதான் இப்போது நான் அணிந்து உள்ளேன். ஆகவே இது ஒரு பிற்போக்கு ஆடையல்ல.
எனவே, ‘நிர்வாணகோல ஆடைகள்தாம்’ முதலாம் நூற்றாண்டை ஞாபகப்படுத்தும் பிற்போக்கு ஆடைகள்.
அம்மணமாக ஆடை அணிவதுதான் நாகரிகத்தின் உச்சம் என்று நீங்கள் கருதுவதாக இருந்தால் மிருகங்கள் உங்களைவிட நாகரிகத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றன.”
-ஸுப்ஹானல்லாஹ்.... سبحان الله
தமிழில்: அப்துர் ரஹீம் முஹம்மத் ஜஃfபர்

ஒட்டமன் ஆட்சி வீழ்ந்து இன்றோடு 94 வருடங்கள்



ஒட்டமன் ஆட்சி வீழ்ந்து இன்றோடு 94 வருடங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்றோடு இஸ்லாத்தின் வீரம் மிக்க ஒட்டமன் சக்ராதிய இராஜ்ஜியம் வீழ்ந்து 94 வருடங்கள் ஆகின்றன. காட்டிக்கொடுப்புகளாலும் துரோகங்களாலும் மேற்கத்திய நாடுகளின் வஞ்சனைகளாலும் எமது ஆட்சி கைமாறி யஹூதி கைகூலிகளுக்கு ஆகியது. 

ஒட்டமன் கடைசி கலீபா- இஸ்லாத்தின் 101வது கலீபா இரண்டாம் அப்துல் மஸீத் அவர்கள், தன் மாளிகையில் புனித திருக்குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டார்கள். துருக்கியலிருந்து 1924 மார்ச் 3ந்திகதி பிரான்ஸ் நாட்டுக்கு மனைவி மக்களோடு நாடு கடத்தப்பட்டார்கள். அவர்கள் மாளிகையின் திறைச்சேரி, மக்களின் சேவைக்காக முத்து, மாணிக்க, மரகதம், தங்கத்தால் நிரம்பி இருந்தது. அத்தனையும் அபகரிக்கப்பட்டு வெறும் 2000 பவுண்கள் மாத்திரம் இவர்களின் வழி செலவுக்கு கொடுக்கப்பட்டது.

மறுநாள் பத்திரிகைகள் ஒட்டமன் இராச்சியம் - உஸ்மானிய பேரரசு அழித்தொழிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டன. ஆங்காங்கே சில குழப்பங்கள் ஏற்பட்டு அடக்கப்பட்டன. ஒட்டமன் ஆட்சி வீழ்ந்தது.

இரண்டாம் அப்துல் மஸீத் மேற்குலக நாடுகளில் அமைதியாக வாழ்ந்து 1944ம் ஆண்டு பிராஸில் மரணித்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன். ஒரு கலீபாவின் உடல் ஒரு கிறிஸ்தவ நாட்டில் அடக்கப்படக் கூடாது என்பதற்காக, மதீனா ஜென்னத்துல் பக்கிக்கு எடுத்துவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவர்களின் கடைசி ஜும்ஆ தினத்தின்போது எடுத்த படத்தையே கீழே காண்கிறீர்கள்.



Sunday 8 April 2018

நானும் உங்களை நினைவு கூறுவேன்

நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்;  நானும் உங்களை நினைவு கூறுவேன்

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:
உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?
அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்…
எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.
கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.
“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது.
ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை.
வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”
“வேறு ஒண்ணா…?
எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.
“உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”
“என்னது பிசினஸ் பார்ட்னரா...?"
ஆமாம்…
எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது.
அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம்.
உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன்.
நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”
“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.
“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…?
உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.
“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”
அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.
“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.
“ஆமாம்ப்பா உனக்கு 90%
எனக்கு ஜஸ்ட் 10% போதும்.
எனக்கு பணம் தேவையில்லை.
அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”
“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.
இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.
ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.
புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.
ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்….
“என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.
அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்.
“உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.
அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?
ஒரு செகண்ட் யோசியுங்களேன்….
இது தான் நமது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது.
இறைவன் தான் பிசினஸ் பார்ட்னர்.
நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).
இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை.
ஒவ்வொரு நொடியை.
நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.
ஐம்புலன்களை நமக்கு கொடுத்து,
அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா?
ஐம்புலன்கள் போதாது என்று
கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான்.
இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்…
அது முடிவே இல்லாமல்தான் போய்கொண்டிருக்கும்.
இவ்வளவு தந்த அவனுக்கு
ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.
அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன்.
நமது நன்றியுணர்ச்சிக்காக
அதை எதிர்பார்க்கிறான்.
அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.
நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?
இறைவனை வணங்குவதோ,
வேதங்களை படிப்பதோ,
ஆலயத்துக்கு செல்வதோ,
தொண்டு முதலானவற்றில்
நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ அல்லது
சக மனிதர்களுக்கு உதவுவதோ
இவை யாவும் செய்வது நமக்காகத்தான், நம்முடைய நன்மைக்காகத்தான் என்றாலும்,
இறைவன் நமக்கு அளித்த
உயிரையும், உடலையும்,
உறுப்புகளையும்
அவன் கூறிய வழியில்,
அவன் விரும்பிய வழியில்
நடத்திக் கொண்டு இருக்கிறோம்,
என்ற திருப்தியோடு,
இவ்வளவையும் கொடுத்த நம்
இறைவனுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான்.
மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.

நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்;
நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.
குர்ஆன் வசனம் : அல் பகரா - 152