السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 3 March 2018

சிரியாவின் இறுதிப் போர் - இதுவரை வெளிவராத உண்மைகள்


சிரியாவின் இறுதிப் போர் - இதுவரை வெளிவராத உண்மைகள்

ம‌ன்னிக்க‌வும், சிரியா யுத்த‌ம் ப‌ற்றிய‌ பின்வ‌ரும் தக‌வ‌ல்க‌ளை உங்க‌ளுக்கு எந்த‌ ஊட‌க‌மும் சொல்ல‌ப் போவ‌தில்லை:

- த‌ற்போது யுத்த‌ம் ந‌ட‌க்கும், த‌லைந‌க‌ர் ட‌மாஸ்க‌ஸ் ந‌க‌ருக்கு கிழ‌க்கே உள்ள‌ புற‌ந‌க‌ர்ப் ப‌குதியான‌ கூத்தா (Ghouta) க‌ட‌ந்த‌ ஐந்தாண்டுக‌ளாக‌ இர‌ண்டு கிள‌ர்ச்சிக்குழுக்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்து வ‌ருகின்ற‌து.

- இத‌ற்கு முன்ன‌ர் இடிலிப் பிர‌தேச‌த்தை நோக்கி சிரிய‌ப் ப‌டைக‌ள் முன்னேறிய‌ நேர‌ம், அங்கிருந்த‌ கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள் துருக்கி ம‌த்திய‌ஸ்த்த‌த்தை ஏற்றுக் கொண்டு பின்வாங்கிச் சென்ற‌ன‌.

- ஒரு வார‌த்திற்கு முன்ன‌ர், கூத்தா மீது யுத்த‌ப் பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌ சிரிய‌ அர‌சு இடிலிப் பாணி ச‌ம‌ர‌ச‌த்திற்கு முன்வ‌ந்திருந்த‌து. ஆனால், இம்முறை கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள் வெளியேற‌ ம‌றுத்த‌ன‌. அத்துட‌ன் ம‌க்க‌ளையும் வெளியேற‌ விடாம‌ல் ப‌ண‌ய‌க்கைதிக‌ளாக‌ பிடித்து வைத்துக் கொண்ட‌ன‌ர்.

- கூத்தா பிர‌தேச‌த்தை மீட்ப‌த‌ற்கான‌ சிரிய‌, ஈரானிய‌ கூட்டுப்ப‌டை ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்ட‌து. சிரிய‌ இராணுவ‌ப் பிரிவான‌ "புலிப் ப‌டை" தரைவ‌ழித் தாக்குத‌லை ஆர‌ம்பித்த‌து. ர‌ஷ்ய‌ விமான‌ங்க‌ளும் குண்டு வீசிய‌தாக‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

- அமெரிக்கா ம‌ற்றும் மேற்க‌த்திய‌ நாடுக‌ளின் நெருக்குத‌லால் ஐ.நா. பாதுகாப்பு ச‌பை கூடி தீர்மான‌ம் எடுத்த‌து. அத‌ற்கு ர‌ஷ்யாவும் ஒத்துழைத்த‌து. உட‌ன‌டியாக‌ போர் நிறுத்த‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட‌ வேண்டும் என‌த் தீர்மானிக்க‌ப் ப‌ட்ட‌து.

- சிரிய‌ அர‌சு ம‌ட்டுமே ஒரு த‌லைப்ப‌ட்ச‌மாக‌ போர் நிறுத்த‌ம் அறிவித்த‌து. இத‌ற்கு கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளை பொறுப்பேற்க‌ வைக்க‌ முடியாது. ஏனென்றால் அவை ஐ.நா. வினால் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அமைப்புக‌ளாக‌ ஏற்றுக்கொள்ள‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. சிரிய‌ அர‌சு அந்த‌ சாட்டை ப‌ய‌ன்ப‌டுத்தி மீண்டும் போரைத் தொட‌ங்கிய‌து.

- ஐ.நா., சிரிய‌ அர‌சின் மீது போர்நிறுத்த‌ மீற‌ல் குற்ற‌ம் சும‌த்த‌ முடியாது. ஏனெனில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு எதிரான‌ யுத்த‌த்தில் போர்நிறுத்த‌ம் க‌டைப்பிடிக்க‌ப் பட‌ வேண்டிய அவ‌சிய‌ம் இல்லை.

- கூத்தா பிர‌தேச‌ம் இர‌ண்டாக‌ப் பிரிக்க‌ப் ப‌ட்டு நான்கு பெரிய‌ ம‌ற்றும் சிறிய‌ இய‌க்க‌ங்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் உள்ள‌து. Jaysh al-Islam, al-Nusra Front, Ahrar al-Sham, Faylaq al-Rahman ஆகிய‌ நான்கும் கூட்டுச் சேர்ந்தோ, த‌னித் த‌னியாக‌வோ செய‌ற்ப‌டுகின்ற‌ன‌.

- இவ‌ற்றில் மிக‌ப்பெரிய‌ இய‌க்க‌மான‌ அல் நுஸ்ராவின் முந்திய‌ பெய‌ர் அல் கைதா. மிக‌த் தீவிர‌மான‌ இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாதிக‌ள் என்ப‌து சொல்லாம‌லே புரியும். ஏனைய‌ இய‌க்க‌ங்க‌ளும் அப்ப‌டித் தான்.

- சிரிய‌ப் ப‌டைக‌ளின் எறிக‌ணை வீச்சுக்கும், விமான‌க் குண்டுக‌ளுக்கும் இதுவ‌ரை ஐநூறு பொதும‌க்க‌ள் ப‌லியாகியுள்ள‌ன‌ர். அதில் நூற்றுக்க‌ண‌க்கான‌ பெண்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் அட‌ங்குவார்க‌ள்.

- அங்குள்ள‌ ம‌க்க‌ள் விருப்பத்திற்கு மாறாக‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளால் தடுத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். போர் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்ன‌ர் அர‌ச‌ ஊழிய‌ர்க‌ள் ட‌மாஸ்க‌ஸ் சென்று வ‌ர‌ அனும‌தித்திருந்த‌ன‌ர். ஆனால், "பாதுகாப்புக் கார‌ண‌ங்க‌ளை முன்னிட்டு" பெண்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் வெளியேற‌ அனும‌திக்க‌வில்லை.

- சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் ஐ.எஸ். க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ ராக்கா மீது அமெரிக்க‌ விமான‌ங்க‌ள் குண்டு போட்ட‌ன‌.ஒரு க‌ட்டிட‌ம் கூட‌ மிச்ச‌மில்லாம‌ல் த‌ரைம‌ட்ட‌மாகின‌. அன்று ப‌லியான‌ குழ‌ந்தைக‌ள், பெண்க‌ள், பொது ம‌க்க‌ளின் ச‌ரியான‌ எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அது ப‌ற்றி உல‌கில் யாருக்கும் அக்க‌றை இருக்க‌வில்லை. ஏனெனில் அது அமெரிக்காவின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர்.
சிரியாவின் இறுதிப் போர் - இதுவரை வெளிவராத உண்மைகள்

see more

இலங்கையின் முதல் இறை இல்லம்.


இலங்கையின் முதல் இறை இல்லம். 
இலங்கையின் முதல் இறை இல்லம் பேருவளை தர்கா நகர் சீனா துறை ஜும்ஆப் பள்ளி வாசல் என்றதொரு தகவலினை சோலை மலர் சொல்லியிருப்பதைக் காண முடிகிறது. ஆனாலும் அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் காலத்தில் அவர்களாகவே தமது தோழர்களில் இருவரை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தார்கள் என்ற வரலாற்றுத் தகவலின்படி அருமைத் தோழர்கள் தங்களது வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நிச்சயம் வணக்கஸ்தலங்களை அமைத்திருக்கவேண்டும். ஸஹாபாக்கள் இலங்கைக்கு வந்தடைந்த பின்னர் அப்பகுதி அரசன் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறார். தமது மார்க்கப் பணியினை மேற்கொள்வதற்கு முழுமையான ஆதரவும் வழங்கியிருக்கின்றார். 
காலி தலாப்பிடியா சோலை முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளி வாயில் கி.பி.1604ல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டபோது ஹிஜ்ரி 8-9-139 என்று எழுதப்பட்ட மீசான் கல் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் இப்பள்ளிவாயில் இற்றைக்கு 1299 வருடங்கள் பழமையானது. 

இப்பள்ளிவாயில் 27-06-1986 ஆம் வருடம் மீண்டும் புனரமைப்புப் பணிகள் ஆரம்பமாயின. 03-03-1987ஆம் திகதி இப்புனரமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டி ருக்கும்போது அதிசயச் சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதனை நேரில் கண்டவர் அப்பிரதேசத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய இளைஞர் முன்னணிää ஜனாப் எம்.எச்.எம். வஹாப் (சமாதான நீதிபதி) முன்னிலையில் விசாரித்து பதிவு செய்து கொண்டது. அந்த நிகழ்வு வருமாறு.
பள்ளியின் மிகப் பழைய இடங்களில் ஒன்றான மிம்பரை உடைப்பதற்காக கையில் இருந்த ஆயுதத்தினால் அடித்தேன். அப்போது அதை உடைக்காதே என்றதொரு சப்தம் கேட்டது. அதேநேரம் எனது கையில் இருந்த ஆயுதத்தினை அவர் பறித்தும் எடுத்தார். பிரம்பால் என்னை அடிக்கத் தொடங்கினார். தாடியுடன் காணப்பட்ட அவர் நீண்ட வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தார். பின்னர் அவர் மறைந்துவிட்டார். (சோலை மலர்)

இதுää இலங்கையை வந்தடைந்த அருமைத் தோழர்களான ஸஹாபாக்களுடன் தொடர்புபட்ட இடம் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்தப் பள்ளி வாயில் இலங்கையின் முதல் பள்ளியெனலாம். இதன் அடிப்படையில் இப்பள்ளி வாயில்  1436 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியென்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முதல் இறை இல்லம்.
அதன் உண்மையான புகைப்படம் இல்லை


Thursday 1 March 2018

கர்ழாவி பல்டி !

கர்ழாவி : சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் !!!

தான் பிறந்து படித்து வளர்ந்த எகிப்துக்கு டடா கூறிவிட்டு கட்டாருக்கு வந்து ராஜபோக வாழ்க்கை வாழந்த இக்வானுல் முஸ்லிமீன்களின் இணையற்ற செய்கு கர்ழாவி, இவ்வளவு காலமும் கட்டாரில் இருந்த ஐரோப்பிய கலாச்சாரங்களை எதிர்க்க வில்லை! கட்டாரில் மிகக் கோலாகலமாக நடந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை எதிர்க்கவில்லை. முழு மத்திய கிழக்குக்கும் இருந்த ஒரே அமெரிக்க யூத இராணுவ Base ­எதிக்கவில்லை! இப்போது எல்லா அரபு நாடுகளையும் பின்பற்றி கட்டாரும் அரபுலக அரசியல் தலைவர் எகிப்து ஜனாதிபதி ஸிஸிக்கு பூரண ஆதரவு தெரிவித்த பின்னர், இப்போது தான் கர்ழாவிக்கு தென்படுகிறது, கட்டாரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நடைபெறுவது! இப்போது தான் காராசாரமாக அதை எதிர்க்கிறார்! பாய்ந்து பாய்ந்து பார்த்து எட்டாததால் கடைசியாக, சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்று தந்திர நரி கூறியதை நாம் சிறு வயதில் படித்தது நினைவு வருகிறது .

பாருங்கள் வீடியோ :