السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 31 August 2015

வஹ்ஹாபிகளே! பதில் சொல்லுங்கள் 03

வஹ்ஹாபிகளே! பதில் சொல்லுங்கள் 03

لماذا سمّى الفقهاء بجلسة الإستراحة للجلسة الّتي بعد السّجودين من الركعة الأولى وقبل القيام للّركعة الثاّنية. وهي جلسة يسيرة خفيفة لا يسنّ فيها أيّ قراءة، من الأوراد والاذكار، وأمّا ترك هذه الجلسة فلا يضر الصلاة،

والإستراحة لازمة لمن تعب بالأعمال الشّاقّة، كالأجراء العاملين من الفجر إلى المغرب، وأمّا المصلّي فلا تلزمه الإستراحة. لأنّه لم يتعب فى صلاته ولم يعمل عملا شاقّا فيها فما الحكمة فى تسمية هذه الجلسة بجلسة الإستراحة؟ والمسئول بهذا السؤال وهّابيّ ينكر أسرار الصّلاة وأسرار التّصوّف،

தொழுகின்ற ஒருவன் முதலாம் “றக்அத்துக் குரிய இரண்டு “ஸுஜூத்களையும் முடித்தபின் “
இரண்டாம்” “றக்அத்துக்குரிய நிலைக்கு வருமுன் சற்று நேரம் அமர்ந்து பின்னர்நிலைக்கு வருதல் சிறந்தது.
 இந்த அமர்வுக்கு சட்ட மேதைகள் “ஜல்ஸதுல் இஸ்திறாஹத்ஓய்வு பெறும் அமர்வு என்று பெயர் வைத்துள்ளார்கள்இந்த அமர்வின் போது ஒன்றும்ஓதத் தேவையில்லை.  இந்த அமர்வை விட்டாற் கூட தொழுகைக்கு எந்த பாதிப்பும்இல்லை.


ஒய்வு எடுத்தல் என்பது காலை முதல் மாலை வரை உடலை வருத்தி கூலியாட்கள் போல்கடினமான வேலை செய்பவர்களுக்கு அவசியம்தான்ஆனால் தொழுபவன் உடலை வருத்திஎந்த ஒரு வேலையும் செய்யாதிருக்கும் நிலையின் ஓய்வு அவனுக்கு எதற்கு?இக்கேள்விக்கு தொழுகையினதும், “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானத்தினதும் இரகசியங்களைமறுத்துக் கொண்டிருக்கின்ற வஹ்ஹாபிகளில் 
ஒருவர் பதில் தருவாரா?

குருந்தையடியப்பா வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரி நிகழ்வு 2015


கல்முனை வீரத்திடல் (கொளனி) யில் ஆட்சி செய்யும் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் புறாகுத்தீன் குருந்தையடி அப்பா நாயகம் அன்னவர்களின் நினைவாக கடந்த 30.08.2015ம் திகதியன்று அன்னார் பேரிலான 14 வருட அருள்மிகு கந்தூரி நிகழ்வு குருந்தையடியப்பா தர்கா ஷரீபில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக ஷெய்க் புறாகுத்தீன் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் தர்கா ஷரீபிற்கு போர்வை போற்றும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து அன்னார் பேரிலான திருக்கொடியேற்றமும் நடைபெற்றது.

பின்னர் காத்தான்குடியிலிருந்து அழைக்கப்பட்டிருந்த சங்கைக்குரிய உலமாக்கள், அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரி மாணவர்கள், முஹிப்பீன்களால் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வும் நடைபெற்றது. 

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday 26 August 2015

வஹாபிகள் என்றால் யார் என்று உங்களுக்கு தெரியுமா ?

வஹாபிகள் என்றால் யார் என்று உங்களுக்கு தெரியுமா ?

நீங்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று.
.
நபிகள் நாயகத்தின் குடும்பத்திற்கும் அன்னவர்கள் கொண்டு வந்த இஸ்லாம் மார்க்கத்திற்கும் முற்றிலும் எதிரானவர்கள் இந்த வஹாபிகள்.
ரத்தின சுருக்கமாக சொல்கிறேன்.
.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வபாத்திற்கு பின் கலீபாக்கள் ஆட்சியின் போது அடுத்த கலீபா யார்? என்ற தேர்வில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் குடும்பத்தில் மட்டும்தான் கலீபா தேர்வு செய்யனுமா என்று ஒரு சிலர் பிளவு பட்டனர். இதுதான் இஸ்லாத்தின் முதல் பிளவு.
.
காலத்தால் இவர்களே ஆட்சிக்கு வந்து இவர்களுடைய கொள்கைக்கு மாற்றமான பெரிய மஹான்களை, ஸுபியாக்களை ஷெய்குமார்களை எல்லாம் கொன்று குவித்தார்கள்.
.
இந்த வஹாபிகளின் கொள்கை என்ன?
.
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இஸ்லாம் என்ற நாணயத்திற்கும் இரண்டு பக்கம் உண்டு. ஒன்று (நுபுவத்) நபித்துவம் மற்றது (விலாயத்) வலித்துவம்.
.
நுபுவத் – சன்மார்க்கம், விலாயத் – ஞான மார்க்கம் இந்த இரண்டு பக்கங்களும் சரியா இருந்தால் தான் இஸ்லாம் என்ற நாணயம் செல்லுபடியாகும். இந்த இரண்டையும் ஏற்று ஈமான் கொண்டவர்களே முழுமையான முஸ்லிம்கள்.
.
இந்த வஹாபிகளோ நுபுவத்தை மட்டும் ஏற்றுக்கொள்வார்கள் விலாயத்தை மறுத்து விடுவார்கள். நுபுவத் உடல் என்றால் விலாயத் உயிர் ஆகும்.
.
இந்த கொள்கை உலகில் சவூதிஅரபியாவில் மட்டுமே உள்ளது. பல நூறு ஆண்டுகளாக இந்த வஹாபிக் கொள்கையை மற்ற முஸ்லிம் நாடுகளில் பரப்ப முயற்சித்தும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
.
அன்மையில் இந்த வஹாபி குழந்தையை பிழைப்பு நடத்த தமிழகத்திற்கு தத்தெடுத்து வந்து வளர்த்து வருகிறார்கள். அதுவும் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில்.
.
அன்றும் இஸ்லாத்தை பிளவுப்படுத்தினார்கள். இன்றும் அதே வேளையைத் தான் செய்கிறார்கள். இந்த வஹாபிகளின் வரலாற்றை முழுதும் தெரிந்தால் ஒரு முஸ்லீமும் இவர்கள் பின் செல்லமாட்டார்கள்.
.
முகநூல் நன்பர்களே இஸ்லாத்தை யாரும் வளர்கவேண்டிய அவசியம் இல்லை, நாம் முஸ்லீமாக வாழ்ந்தாலே போதும் இஸ்லாம் தன்னாலெயே வளரும்.
.
ஆனால் இந்த வஹாபிகளிடமிருந்து இஸ்லாத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு நாம் அனைவரும்
தள்ளப்பட்டுள்ளோம் .
.
எனவே முடிந்த வரை இந்த தொகுப்பை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். இந்த வஹாபிகள் மார்க்கத்தில் குருடர்கள் இவர்கள் மற்றவர்களுக்கு எப்படி வழி காட்ட முடியும்?
.
இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாக ஏற்று ஈமான் கொண்டவர்களே முஸ்லீம் என்பதற்கு அருகதை உடையவர்கள்.
அகநூலை முழுதும் திறக்க முகநூல் போதாது மடிக்கிறேன்.
.
ஆக்கம்: Azizmaraika Maraika

வஹாபிகள் சவூதியில் யஹூதிகளினால் உருவாக்கப்பட்ட கூட்டமாகும்

வஹாபிகள் என்பவர்கள் சவூதியில் யஹூதிகளினால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமாகும்

சென்னையில் பயங்கரவாதத்துக்கு எதிரான முஸ்லிம்களின் ஐக்கிய மாநாட்டில் பாதுகாப்பு துறை நிபுணர் டாக்டர் நிரஞ்சன் அவர்கள் பேசும்போது.

இஸ்லாத்தில் பயங்கரவாதம் கிடையாது. ஸுபி, வஹாபி என இரண்டு பிரிவு உள்ளது. இதில் ஸுபி பிரிவினர்கள் சண்டை போட மாட்டார்கள். ஸலபி வஹாபி பிரிவினர்கள் (யஹூதிகளின்) கைக்கூலியாக செயல்படுபவர்கள். 
.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழிக்க துணிந்தவர்கள். பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்ய கூடியவர்கள் இந்த ஸலபி வஹாபி பிரிவினர்கள் என பாதுகாப்பு துறை நிபுணர் டாக்டர் நிரஞ்சன் அவர்கள் கூறினார்கள்.
.
இந்திய ராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் ஹரிகரன் பேசுகையில்:
.
மனிதகுலத்தின் கலாசார பீடமாக இருந்த நாடு சிரியா. இன்று தீவிரவாதத்தின் பாதிப்பை அது உலகிற்கு சொல்லி கொண்டிருக்கிறது. சிரியாவிடம் நாம் படிக்க வேண்டிய பாடங்கள் இருக்கின்றன.
.
அரசியலை ஒருபோதும் வன்முறை களமாக்க கூடாது. இதில் மதத் தலைவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஏனெனில் சமூகத் தலைவர்களும் அவர்கள்தான்.
.
ஐஎஸ்ஐஎஸ் வந்த பிறகு பல்வேறு நாடுகளில் தீவிரவாதம் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் இதுவரை ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் இல்லை. இதற்கு முக்கிய காரணம் இந்திய முஸ்லிம்கள் நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள். என்று அவர் கூறினார்.
.
இம்மாநாட்டில் பாதுகாப்பு துறைகளை சார்ந்த பேராசிரியர்கள், கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பலர் கலந்துக்கொண்டார்கள்.
.
குறிப்பு: ஸுபி முஸ்லிம்கள் என்றால் பாரம்பரிய முஸ்லிம்கள்.(ஸுபிஸம் என்பது இஸ்லாத்தின் ஆன்மீகம்)
.
வஹாபிகள் என்பவர்கள் சவூதியில் யஹூதிகளினால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமாகும்.
.
உண்மை முஸ்லிம்களை பிறமத சகோதரர்கள் அறிந்து வைத்திருகிறார்கள். ஆனால் முஸ்லிம் என்ற பெயரில் வாழும் ஒரு சிலர் இந்த வஹாபிகளை பற்றி அறியாமல் வாழ்கிறார்கள்.
.
நன்றி: உலக முஸ்லிம் செய்திகள்


Friday 21 August 2015

வஹ்ஹாபிகளின் திட்டம் அம்பலம் - வஹ்ஹாபிகளே! பதில் சொல்லுங்கள் 02

அன்பான இஸ்லாமியச் சகோதரர்களே!

திரைக்குப் பின்னால் சைத்தானின் திட்டம் !مكر الوهابية

 உலகில் வாழும் முஸ்லிம்களை பல குழுக்களாக பிரித்து முஸ்லிம்களால் அடித்து நாஷாமாக்கும் யூதர்களின் கருவில் உருவான வஹாபிகள் முஸ்லிம் உம்மத்திற்கு செய்த மிகப் பெறும சூழ்சி மாட்டிக் கொண்டு வருகிறது.

என்னென்ன வழிவகைகளில் சைத்தான் தனது நோக்கத்தை நிறைவேற்ற நினைக்கின்றான் என்பதை அல்லாஹ் அறிந்தவன்..

வஹாபிகள் யூதர்களின் உருவாக்கம் என்பதற்கான ஆதாரம்
வஹாபிகள் யுதர்களின் பொம்மைகள் அமெரிக்கா ஒப்புதல்

1. அல் குர்ஆனில் அல் ஹதீஸில் மற்றும் நான்கு இமாம்களால்      தொகுப்பட்ட நூல்களில் புதிதாக இல்லாத விடயத்தை புகுத்துதல்
3. அதனை கல்வித் திட்டத்தில் பாடசாலைகளில்  பல் கலை கழகங்களில் பாடத்திட்டமாக அரசஅதிகாரிகளின் மூலம் அமுல் படுத்துதல்
4. இமாம்களின் மீது வைத்திருக்கும் அன்பை மரியதையை இல்லாமல் ஆக்குதல்
5. அவர்கள் முழு முஸ்லிம் உம்மத்துக்கும் இமாம்களாக மாறுதல்
6. இதை எதிர்க்கம் மார்க்க அரிஞர்களை கொலை செய்தல்


அன்மையில் வஹாபிகளால் மத்ஹபு இமாம்களின் மீது பொய்யான விடயங்களை இட்டுக்கட்டி பல தகவள்களை அவர்களின் நூல்களில் மிடியாக்களில் வெளியிட்டதை நாங்கள் பார்த்தோம்.ஆனால் அவர்கள் வெளியிட்ட தகவள்கள் எதுவும் அந்த அஸ்ல் கிதாபில் இல்லை. மாறாக அவர்களால் முஹக்கிக் பன்னப்பட்டு இடைசெருகப்பட்டு வெளியிடப்பட்ட நூல்களில்தான் மாத்தரிம் காணலாம். அவர்கள் திட்டமிட்டு இமாம்களின் மீது சொல்லாத ஒன்றை இட்டுக்கட்டியுள்ளார்கள். குற்றம் சுமத்தியுள்ளார்கள்.

பின் வரும் படங்களை உலமாக்களிடம் காட்டி தெரிந்து கொள்ளளாம். வஹ்ஹாபிகள் சொல்வது போன்று அந்த கிதாபில் வேறு எந்த  பக்கத்தில் இருக்கப்போரதும் இல்லை . இருந்தால் சொல்லுங்கள் .

வஹாபிகளே! வஹாபிகளின் அடிவருடிகளே!  பக்கத்தில் எந்த பக்கத்தில் இருந்தாலும் என்னிடம் எடுத்துச் சொல்லலாம்.

வஹாபிகள் வைத்த குற்றச் சாட்டுகள்

01.விபச்சாரத்தை அனுமதிக்கும் மத்ஹபு 

مكر الوهابية


02. கப்ரை முத்தமிடுவது நரகத்தை கொண்டு சேர்க்கின்ற பித்அத்தாகும்

مكر الوهابية

03.

 வஹ்ஹாபிகளின் திட்டம் அம்பலம்

04.

 வஹ்ஹாபிகளின் திட்டம் அம்பலம்

05.

 வஹ்ஹாபிகளின் திட்டம் அம்பலம்

06.

 வஹ்ஹாபிகளின் திட்டம் அம்பலம்

07.

 வஹ்ஹாபிகளின் திட்டம் அம்பலம்

08.

 வஹ்ஹாபிகளின் திட்டம் அம்பலம்

09.
 வஹ்ஹாபிகளின் திட்டம் அம்பலம்

10.

 வஹ்ஹாபிகளின் திட்டம் அம்பலம்

11.


12.

 வஹ்ஹாபிகளின் திட்டம் அம்பலம்

தொடரும்….




Wednesday 19 August 2015

வஹ்ஹாபிகளே! பதில் சொல்லுங்கள் : 01


வஹ்ஹாபிகளே! பதில் சொல்லுங்கள் கேள்வி : 01


வஹ்ஹாபிகளின் மூத்த தலைவன் இப்னு தைமிய்யா ஹர்ரானி (சியாரத்துல் கூபூர் வல் இஸ்தின்ஜாதுல் மக்பூர்) என்ற கிதாபில் 38ஆம் பக்கம் கப்ரை தொட்டு முத்தமிடுதல் உலமாக்களின் ஏகோபித்த கருத்தின் பிரகாரம் தடுக்கப்பட்டது என்றும் மேலும் சிர்க் என்று கூறுகின்றார்.

ஸஹாபாக்களுடைய காலத்தில் இமாம்களின் காலத்தில் இல்லாத ஒன்று என்றும் கூறுகின்றார்.

அதற்கு ஆதாரமாக சம்பந்மில்லாத குர்ஆன் வசனத்தை சொல்கின்றார். இஜ்மாவை மறுக்கும் இவர் இஜ்மாவை ஆதாரம் காட்டுகின்றார்.

 இன்றைய நவீன ஹவாரிஜிகளான வஹாபிகளே! 

  1. இந்த இப்னு தைமிய்யாஹ்வின் கூற்று சரிதானா? 
  2. கப்றை முத்தமிட்டவர் முஷ்ரிக்காவானா?   
  3. அவர் சொல்வது போன்று அந்த வசனத்துக்கு தப்சீர்களில் அப்படியா இருக்கின்றது?  
  4.  குர்ஆன் ஹதீஸீல் வெளிச்சத்தில் தயவு செய்து பதில் சொல்லுங்கள்


Tuesday 18 August 2015

முத்தவல்லிக்கு வந்ததே கோபம் …!



இன்று இறையில்லங்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை எண்ணிப் பார்க்கும்போது வருந்தாமல் இருக்க முடியாது.
அரபிக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது நகைச்சுவையாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். அது சிரிப்புக்குரிய நிகழ்ச்சியாக மட்டுமல்ல, சிந்தனைக்குரியதாகவும் விளங்கியது.
வெளியூர் பயணி ஒருவர் பள்ளிவாசலுக்குத் தொழ வந்தாராம். தொழுது முடித்ததும் தாம் கொண்டு வந்த பையை மறதியாக வைத்துவிட்டுப் போய்விட்டார். சிறிதுநேரம் கழித்து நினைவு வந்தவராக வேகமாகப் பள்ளிக்குத் திரும்பி வந்து பார்த்தார். பையைக் காணவில்லை. பக்கத்தில்தான் முத்தவல்லியின் (பள்ளிவாசல் தலைமை நிர்வாகியின்) வீடு. அவருடைய வீட்டிற்குச் சென்று நிலைமையை விளக்கி பையைப் பார்த்தீர்களா? என்று விசாரித்தார் அந்தப் பயணி.
முத்தவல்லிக்கு வந்ததே கோபம் …! பயணிக்கு பதில் எதுவும் சொல்லாமல் உள்ளே இருந்த மனைவியை அழைத்தார்.
“அடியே ! நான் எத்தனை வருஷமா இந்த பள்ளிக்கு முத்தவல்லியா இருக்கேன்?” “பத்துப் பதினைஞ்சு வருஷமா இருக்கீங்க. அதுக்கென்ன இப்போ…?” “இந்தப் பத்துப் பதினைஞ்சு வருஷத்தில் ஒரு முறையாவது நான் பள்ளிவாசலுக்குப் போய் நீ பார்த்திருக்கிறாயா?”
“அந்தப் பாக்கியம் தான் எனக்குக் கிடைக்கலியே !”
இப்பொழுது முத்தவல்லி பயணியின் பக்கம் திரும்பி ஒரு பார்வை பார்த்தார். அர்த்தத்தைப் புரிந்து கொண்ட பயணி அமைதியாகத் திரும்பி விட்டாராம்.
இந்த நிகழ்ச்சி நகைச்சுவையை மட்டுமல்ல, நடைமுறையையும் எடுத்துக்காட்டுகிறதல்லவா?
காதர்


வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் SLMC போராளிகளே Mr.அலி சாகிர் மெளலானா பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்ய பட்டார் நமது ஊரின் பிரதிநிதித்துவம் அல்லாஹ்வின் உதவியால் காப்பாற்றபட்டது ''அல்ஹம்துலில்லாஹ்''


மாவட்டத்தில் ஏறாவூருக்கென்றே தனி "பறக்கத்" உள்ளது.அதன் வித்து ஆரம்பத்திலேயே ஆன்மீகத்தில் இருந்து அரசியல் முகவரியைத் தேடித்தந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

Friday 14 August 2015

ஏறாவூர் மீராலெப்பை வலீயுல்லாஹ் அவர்களின் வரலாற்றிலிருந்து -01


மீராலெப்பை வலீயுல்லாஹ் அவர்களின் வரலாற்றிலிருந்து-01

ஏறாவூர் மீராலெப்பை வலீயுல்லாஹ் அவர்களின் வரலாற்றிலிருந்து -01


ஏறாவூரில் கண்ணியமிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மீராலெப்பை வலீயுல்லாஹ் அவர்கள் நற்குணத்திலும் நல்லொழுக்கத்திலும் சிறந்து விளங்கினார்கள்.ஏறாவூர் மக்களின் இணையற்ற தலைவராய் வீற்றிருந்து ஆட்சி நடத்திய இவர்களது நீதி நேர்மை மிக்க ஆட்சியினை இனங்கண்ட ஆங்கிலேயர்கள் இவர்களுக்கு முகாந்திரம் எனும் பட்டம் வளங்கி கௌரவித்தார்கள்.

இறைநேசர் பல்லாக் வலீயுல்லாஹ் அவர்களிடமிருந்து வாக்கு பெற்ற பின் இவர்களுக்கு விசக்கடி வைத்தியம் கைவரப்பெற்றது. 1954ல் இவர்கள் வபாத்தான பின்னர் உறவினர் ஒருவரின் கனவில் தோன்றி எனது கப்றில் நடப்பட்டுள்ள மீஸான் கட்டை மூலம் பயன்பெற்றுக் கொள்ளுங்கள் எனத் தெறிவித்தார்கள்.

அன்றிலிருந்து அல்லாஹ்வின் நாட்டப்படி எண்ணற்ற மக்கள் ஆயிரக்கணக்கில் இன மத பாகுபாடின்றி இக்கபுறடியை நாடி வந்து தமது உடல் எள நோய் தீரக்கண்டு புன்னகைத்தவர்களாக தீரும்பிச் செல்கின்றனர். பாம்பு விசம் தீண்டி சுய நினைவின்றி கொண்டுவரப்படுபவர்கள் கூட “கட்டை பிடித்து விசம் இறங்கிய பின்னர் எழுந்து நடந்து செல்வதையே கண்முன்னே காணமுடியும்.

குறிப்பு:  மாற்று மத இயக்கத்தைச் சார்ந்த போலித் தவ்ஹீத்-தப்லீக் வாதிகளும் இந்த சியாரத்துக்கு விசம் கடித்து நடக்க முடியாமல்  வந்து கட்டை பிடித்து விசம் இறங்கி சென்ற வரலாறுகளும் இருக்கின்றன.

எமது நாட்டின் தூரப் பிரதேசங்களிருந்தெல்லாம் நாளும் வந்து செல்லும் மக்களின் துயர் நீக்கும் மீராலெப்பை வலீயுல்லாஹ் அவர்களின் சியாரம் இலங்கை மட்டக்களப்பு நகருக்கு வடக்கே 15மஅ தூரத்தில் ஏறாவூர் நகரில் பிரதான வீதியில் இருந்து 5 நிமிட நடைபயண தூரத்தில் கிராம நீதி மன்ற வீதியில் அமைந்துள்ளது.

இந்த மக்பராவில் வலியுல்லாஹ்வின் புதல்வரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான மர்ஹூம் டாக்டர் அஹமட் பரீட் மீராலெப்பை  cl அவர்களும் மற்றும் அவர்களின் மனைவி மற்றும் சகோதரர்களின் கப்றுகளும் இருக்கின்றன.
இந்த சியாரத்துக்கு பல நாடுகளிருந்தம் பல ஆய்வாளர்களும் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

மீராலெப்பை வலீயுல்லாஹ் அவர்களின் வரலாற்றிலிருந்து-01
வெளி நாட்டு பல்கலை கழக மாணவர்களால் பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ள படுகின்றன

பல்கலை கழக மாணவர்களால் ஆய்வுகள் மேற்கொள்ள படுகின்றன
பல்கலை கழக மாணவர்களால் ஆய்வுகள் மேற்கொள்ள படுகின்றன

பல்கலை கழக மாணவர்களால் ஆய்வுகள் மேற்கொள்ள படுகின்றன
விஷம் இறக்கபடுகிறது



Wednesday 12 August 2015

25வது சுஹதாக்கள் தினம்

இன்று 25வது சுஹதாக்கள் தினம் ஏறாவுரில் வருடங்கள் 25 கடந்தாலும், அந்த இரத்த இரவை மறக்க முடியாது.. LTTE பயங்கரவாத கயவர்களால் இனப்படுகொலை செய்யப்பட்ட தினமாகும்.

தற்போது காட்டுப்பள்ளி நூருஸ்ஸலாமில் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு கத்தமுல் குர்ஆன் ஓதப்படுகின்றது

Eravur Muslims Massacre Killed by LTTE 12 08 1990

25வது சுஹதாக்கள் தினம்

 25வது சுஹதாக்கள் தினம் ஏறாவுரில் வருடங்கள் 25 கடந்தாலும்

 25வது சுஹதாக்கள் தினம் ஏறாவுரில் வருடங்கள் 25 கடந்தாலும்

 25வது சுஹதாக்கள் தினம் ஏறாவுரில் வருடங்கள் 25 கடந்தாலும்

 25வது சுஹதாக்கள் தினம் ஏறாவுரில் வருடங்கள் 25 கடந்தாலும்








ஏறாவூர் மீராலெப்பை வலியுள்ளாஹ் சியாரத்தில் கந்துரி நிகழ்வு


ஏறாவூர் மீராலெப்பை வலியுள்ளாஹ் சியாரத்தில் 10-08-2015 அன்று மீராலெப்பை வலீயுள்ளாஹ் அவர்களின் பேரன் அல்ஹாஜ் நௌபர் அவர்களின் ஏட்பாட்டில் மஆனிமுல் முஸ்தபா அரபுக் கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலவீ அல் ஹாபிழ் நாஹ_ர் மீரான் பாஷில் பாகவீ அவர்களின் தலைமையில் கதமுல் குர்ஆன் மற்றும் அன்னதான நிகழ்வும் மிகச் சிறப்பாக மக்பராஹ் மன்டபத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு ஊர் ஜமாஅதத்hர்கள் மற்றும் உலமாக்கள் மிக மகிழ்ச்சியோடு கலந்து சிறப்பித்தார்கள்.
Eravur Meera Lebbai waliullah


ஏறாவூர் மீராலெப்பை வலியுள்ளாஹ் சியாரத்தில் கந்துரி நிகழ்வு

ஏறாவூர் மீராலெப்பை வலியுள்ளாஹ் சியாரத்தில் கந்துரி நிகழ்வு

ஏறாவூர் மீராலெப்பை வலியுள்ளாஹ் சியாரத்தில் கந்துரி நிகழ்வு

ஏறாவூர் மீராலெப்பை வலியுள்ளாஹ் சியாரத்தில் கந்துரி நிகழ்வு

ஏறாவூர் மீராலெப்பை வலியுள்ளாஹ் சியாரத்தில் கந்துரி நிகழ்வு

ஏறாவூர் மீராலெப்பை வலியுள்ளாஹ் சியாரத்தில் கந்துரி நிகழ்வு
ஏறாவூர் மீராலெப்பை வலியுள்ளாஹ் சியாரத்தில் கந்துரி நிகழ்வு

ஏறாவூர் மீராலெப்பை வலியுள்ளாஹ் சியாரத்தில் கந்துரி நிகழ்வு

ஏறாவூர் மீராலெப்பை வலியுள்ளாஹ் சியாரத்தில் கந்துரி நிகழ்வு