السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 23 January 2024

பாபர் மஸ்ஜித் முழு வரலாறு


 1524-ல் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் அபோதையை டில்லி நாட்டு மன்னரான #இப்ராஹிம்லோடி ஆவார். அவர் அப்பணியை ஏனோ தொடரவில்லை. பின்னர், கிபி 1526-ல் முதலாம் #பானிபட் போரில், இப்ராஹிம் லோடியைக்கொன்றுவிட்டு டில்லி சாம்ராஜ்ஜியத்தை கைப்பற்றிய #காபூல் நாட்டு மன்னர் #பாபர்...காபூல், டில்லி, பாடலிபுத்திரம் (பாட்னா) வரை விரிந்து பரந்த முகலாய சாம்ராஜ்ஜியத்தின் முதல் மன்னராகிரார். 


(சங்கிகளின் 'அகண்ட் பாரத்'தில் காபூலும் பாரதத்தின் ஒரு பகுதிதான். ஆகவே, இப்ராஹிம் லோடியை போல... பாபரும் பாரதத்தின் தவப்புத்தல்வன்தான்) 


பின்னர், 1528-ல் அயோத்தி வந்த #மீர்பாஹி எனும் முஹலாய படைத்தளபதி... அந்த அடித்தளத்தின் மீது மசூதியை மேற்கொண்டு கட்டி டூம்கள் கொண்ட கூரைகள் அமைத்து பூர்த்தியாக்கிய பாபரின் தளபதி மீர்பாஹி... மஸ்ஜிதுக்கு பாபர் பெயரை வைத்தார். எனவே 'ராமர் கோவிலை பாபர் இடித்தார்' என்று சங்கிகள் கூறியது உலகமகா பெரும்பொய் என்பது, இதன் மூலமும் தெள்ளத்தெளிவாகிறது.


அப்படின்னா...

■★◆●

'இப்ராஹீம் லோடிதான் ராமர் கோயிலை இடித்தார்' என்றல்லவா பிரச்சினையை இந்த காவிக்கும்பல் கிளப்பி இருக்க வேண்டும்..?


"ஆஹா..! பாபர் பெயரில் மசூதி. எனவே அவர்தான் இடித்திருப்பார்." என்று புளுகு மூட்டையை அவசரப்பட்டு அவிழ்த்துவிட்டது பட்டவர்த்தனமாக இங்கே தெரிகிறது.


"அப்போது வரலாறு தெரியாம தப்பா உளறிட்டோம்... இப்போது சொல்றோம்... இப்ராஹீம் லோடிதார் இடித்தார்" என்று மீண்டும் இன்னொரு புளுகு மூட்டையை அவிழ்த்தார்களானால்..? ஹி...ஹி... இதற்கும் பதில் உள்ளது..!


ராமர் கோவில் இடிபட பாபரோ-லோடியோ அவசியமில்லை. ராமர் கோவில் என்ற ஒன்றுதானே மிக முக்கியம்..?


அப்படின்னா...  

■★◆●

1500களில் அயோத்தியில் இராமர் கோவில் என ஒன்று இருந்ததா..?


இராமர் கோவிலைக்கட்டிய விக்கிரமாதித்தன் யார் என்பதைப் பற்றி பலவறாக சங்கிகள் முரண்பட்டுக்கூறுகிறார்கள். கோவிலைக்கட்டியது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பது ஐயம் இன்றி அடுத்து நிரூபணம் ஆகிறது.


குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதிகளை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படுகின்றனர். கோயிலை கட்டிய விக்கிரமாதித்தன் யார் என்கிற குறிப்புகள் சங்கிகளிடம் இல்லை.


கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. #இந்திய_தொல்பொருள்_இலாகா-வின் தலைவர் #பி_பி_லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வறிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட்டிலும் வெளியிடப்பட்டது.


இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த கி.பி. 300 - 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்ததில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.


‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது எவரும் ஏற்றுக்கொள்ள இயலாத பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர்/லோடி எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து சகோதரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்..!


பொதுவாக...

ராமருக்கு கோவில்  என்ற ஒன்றை எப்போது கட்டுவார்கள்..? 

ராமர் என்ற ஒருவரை கடவுளாக அறிந்த பிறகுதானே..?


அப்படின்னா...

■★◆●

மக்கள் மத்தியில் இராமர் கடவுளாகக்கருதப்பட்டது எப்போது..?


இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இன்று இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300 முதல் 1100 வரையிலான குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராக கருதப்படவில்லை. இதனை... கி.பி. ஆறாம் நூற்றாண்டில் #அமரசிம்ஹ என்பவர் ‘#அமரகோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக்களஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாக கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக்காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.


#லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.


குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை..?


அதுபோல்...  #எஸ்எஸ்ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.


ஐ.ஏ.எஸ் அதிகாரியான #ராமச்சந்திரகத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.


அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.


கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் எவராலும் நம்ப முடியுமா..?


இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ்கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கிருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பார்ப்பனப்பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் சமஸ்கிருதம் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக்கருதப்படவில்லை.


மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் #துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் #இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் #இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.


அப்படின்னா...

■★◆●

துளசிதாசர் காலம் என்ன..?


எந்தக்காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாக சங்கிகள் பொய் கூறுகிறார்களோ...

எந்தக்காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, 

அதே காலத்தில் தான் துளசிதாசரும் வாழ்கிறார். 

அதுவும் எங்கே..? 

அயோத்தியில்தான் வாழ்கிறார்..! 

கிபி.1500-களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார்.

 அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.


இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை என்பதும், இந்து மக்கள் அவரைப்பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பதும் இதன் மூலம் தெளிவாக உறுதியாகிறது.


இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்


அப்படின்னா...

■★◆●

பதினாறாம் நூற்றாண்டில் ராமர் கோவில் இருந்ததா..?


இந்தியாவில் முதல் துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். #ராதாகிருஷ்ணன். இவரது மகன் #சர்வபள்ளிகோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.


இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் "கி.பி. 1750-க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவிலும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே" எனத்திடமாக அறிவிக்கிறார்.


200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528-ல் இல்லாத இராமர்கோவிலை பாபரோ அல்லது வேறு எவருமோ எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.


இன்னும் சொல்வதாக இருந்தால்...


அயோத்தியில், அதுவும் பாபர் மஸ்ஜித் கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.


அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட அயோத்தி இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை. இப்போது இத்தனையில் இது ஒன்றுதான் என்பது ஏன்..?


1930 களில் சங்பரிவாரம் இந்த புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் அயோத்தியில் நிலைமை.


எனவே, மக்களின் வெறியைக்கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று சதித்திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள் சங்கிகள்.


இந்து சமுதாய மக்களே..! 

இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம்..! 

பொய்களை பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களை புறக்கணிப்போம்..!


அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்..? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு. 

குர்ஆன் -2:114  


நம்பிக்கை கொண்டோரே..! 

பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்..! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்..! 

குர்ஆன் -2:153


■★◆●


இதுவரை நீங்கள் வாசித்தவை....

2011ல் வெளியிட்ட வலைப்பூ பதிவின் பாதிதான்.

இன்னும் பல வரலாற்று தகவல்களுடன் முழுவதும் வாசிக்க விரும்பினால்...

https://pinnoottavaathi.blogspot.com/2011/12/blog-post_05.html


பகிர்வு

Sunday 21 January 2024

மெளலவி அப்துல் ஹமீத் பாகவி

Videos click here
 
தமிழ் உலகில் முதன் முதலில் திருமறைக் குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்த அறிஞர் #ஷெய்க்_அப்துல்_ஹமீது_பாகவி பற்றிய‌ 

சிறு குறிப்பு..! 


திருமறைக் குர் ஆன் அருளப்பட்டு 13 நூற்றாண்டுகளாக தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு குர்ஆனின் தமிழாக்கம் கிடைக்கப் பெற‌வில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றதா...? 

ஆம் அன்றைய கால கட்டத்தில் திருக்குர்ஆனை பிரிதொரு பாஷைக்கு மொழியாக்கம் செய்வதே பாவம் எனும் கொள்கையில் தமிழக உலமாக்கள் இருந்தார்கள்.


அந்த அறியாமையை உடைத்து அல்லாஹ்வின் வேதத்தை தமிழ் பேசும் பொதுமக்களிடம் தூய தமிழில் கொண்டு வந்தவர் தான் ஷெய்க் அப்துல் ஹமீது பாகவி அவர்கள்.26.11.1876 ஆம் ஆண்டு பிறந்த அறிஞர் அவர்கள் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள வேலூர் 

#பாக்கியாத்துஸ்_ஸாலிஹாத்_அரபிக்_கல்லூரியில் சேர்ந்து முதல் அணியில் மெளலவி பட்டம் பெற்றவராவார். 

அப்போது அவருக்கு வயது 17 ஆகும். 


மத்ரஸாவில் ஆரம்பக் கல்வியைத் தொடரும் சிறுவயதில் இருந்தே அல்லாஹ்வின் வேதத்தை மொழி பெயர்க்க வேண்டுமெனும் அவா அவரிடம் காணப்பட்டது.1906ம் ஆண்டு மெளலவி பட்டம் பெற்றவுடன் சுயமாகத் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள்.அந்தத் தொழிலின் மூலம் கிடைத்த வருமானத்தில் 

#இஸ்லாமிய_நூல்_பிரசுரச்_சங்கம் எனும் பெயரில் ஒரு அச்சகத்தை நிறுவினார்கள். அந்த அச்சகத்தின் மூலம் பல இஸ்லாமிய நூற்களை வெளியிட்டார்கள். 


1926ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் திகதி ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆனை தமிழாக்கம் செய்யும் உயர்ந்த பணியைத் துவக்கினார்கள். மூன்றாண்டு காலம் இடைவிடாத உழைப்பின் பின்னர் திருக்குர்ஆன் முதல் பாகத்தின் மொழி பெயர்ப்பு அரபி மூலத்துடனும் விரிவுரையுடனும் 19.02.1929ம் ஆண்டு வெளி வந்தது. 


தான் மொழி பெயர்த்த குர்ஆனை எடுத்துக் கொண்டு மவ்லவி அப்துல் ஹமீது அவர்கள் எல்லா அரபி மத்ரஸாக்களும் பிரயாணம் செய்தார்கள்.தனது மொழி பெயர்ப்பில் பிழை இருந்தால் சொல்லுங்கள் என ஒவ்வொரு மத்ரஸாவையும் நிர்ப்பந்தித்தார்கள். 


திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு வரலாற்றில், இப்படி ஒரு பரந்த முயற்சி நடந்ததாக நான் அறியவில்லை.  

"தமிழுக்கு வேதத்தை மொழி மாற்றம் செய்யக் கூடாது" எனும் மெளட்டீகத்தில் வாழ்ந்த அன்றைய உலமாக்கள்,மவ்லவி அவர்களின் தியாகத்தையும்,தூர நோக்கையும் கண்டு வியந்து போனார்கள் என்றே சொல்லலாம். 


ஆனாலும் ஆலிம்களின் சதியும் பொறாமையும் அவரைத் தொடரவே செய்தன‌.அதன் பயனாக அவர்களின் மொழியாக்கத்தின் முதல் பாகம் வெளியிடப்பட்ட பிறகு,சமுதாயம் கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கும் வகையில் "இஸ்லாமிய நூல் பிரசுரச் சங்கம்" எனும் அவர்களின் அச்சகம் செயலிழந்து போனது. அறிஞர் அவர்களுக்கு அன்றைய அறிவிலிகள் "வஹ்ஹாபி" எனும் பட்டப் பெயரைச் சூட்டி அவர்களைத் தூற்ற ஆரம்பித்தார்கள்.(இஸ்லாமிய கருத்துப் புரட்சி செய்யும் நன்மக்கள் இவ்வாறு தூற்றப்படுவது வழக்கமானது) 


தாம் மேற்கொண்ட அறப்பணியை நிறைவுக்குக் கொண்டு வருவதில் அவர்கள் எண்னற்ற சோதனைகளைச் சந்தித்தார்கள். 1938ம் ஆண்டு வரை தமிழக உலமாக்கள் தக்க காரணமின்றி அவர்களின் தர்ஜுமா பணியை எதிர்த்து வந்தார்கள்.  


இந்தக் கால கட்டத்தில் தமிழகத்திற்கு விஜயம் செய்த மார்க்க அறிஞர் அப்துல் காதிர் ஹழரத் என்பவர்,பாகவி அவர்களை ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று நிஜாம் மன்னரின் மாமனாராகிய

#நவாப்_நஸீர்_யார்_ஜங்_பஹாத்தூருக்கு அறிமுகப்படுத்தினார்.நவாப் ஸாஹிபின் பரிந்துரையால் மொழி பெயர்ப்பு மீண்டும் வெளிவரத்துவங்கியது. 


தனது மொழி பெயர்ப்புப் பணிக்கு பணம் தேவைப்பட்ட பொழுது அப்துல் ஹமீது மவ்லவி அவர்கள் இலங்கைக்கு வந்து தன்னந்தனியாக வசூல் செய்ய ஆரம்பித்தார்கள்.அந்நாட்களில் கொழும்பு மாநகரில் வணிகப் பிரமுகராகவும் வழக்கறிஞருமாகத் திகழ்ந்த 

#என்_எம்_எம்_ஹனீபா அவர்கள் இதற்கான முழுத் தொகையையும் கொடுத்திட முன் வந்தார்கள்.(அல்லாஹ் அன்னாரின் கப்ரை விசாலமாக்குவானாக) 


அதன் பயனாக பாகவீ அவர்களின் தமிழாக்கம் முப்பது ஜுஸ்உகளும் "தர்ஜமதுல் குர்ஆன் பி அல்தஃபில் பயான்" எனும் பெயரில் முழுமையாக வெளி வர ஆரம்பித்தது. 

தர்ஜமாவுக்கு எதிராக ஆரம்பத்தில் போர் கொடி தூக்கியவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.பின்னர் மொத்த சமுதாயமும் மொழி பெயர்ப்பை ஒப்புக் கொள்ள ஆரம்பித்தது. 


கடுமையாக எதிர்த்த உலமாக்கள் அவர்களின் மொழி பெயர்ப்பை விலை கொடுத்து வாங்கி வாசிக்க ஆரம்பித்தார்கள். தனது 17ம் வயதில் அல்லாஹ்வின் வேதத்தை தமிழாக்கம் செய்ய வேண்டுமென ஆசைப்பட்ட அப்துல் ஹமீது பாகவி அவர்களின் ஆசை அன்னார் 70 வயதை அடைந்து விட்ட பொழுதே முழுமையாக நிறைவேறியது. 


சுப்ஹானல்லாஹ்...! 

அன்னாரின் இடை விடாத முயற்சியும், தஃவாக் களத்தில் சோதனைகளைக் கண்டு அசராத தைரியமும் எம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது. 


பாகவி அவர்கள் அல்லாஹ்வின் வேதத்திற்காக அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டு அவரே மொழி பெயர்த்த தர்ஜமாவுக்கு அவரே வசூல் செய்து அவரே பிரிண்ட் பண்ணி அவரே விற்ற அந்த முயற்சியும் புரட்சியுமானது மொழியாக்கத்துறையில் ஒரு சாதனையாகவே பார்க்கப்பட வேண்டியதாகும். 


இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயமும் இருக்கின்றது. அதாவது இன்று "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" எனும் வார்த்தைக்கு "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்" என அதிகமானோர் அர்த்தம் செய்வதை நாமனைவரும் நன்கறிவோம். உலமாக்கள் உட்பட யாரும் இதில் விதி விலக்கில்லை.ஆனால் இந்த அழகிய மொழி பெயர்ப்பை முதன் முதலில் செய்தவர் மவ்லவி அப்துல் ஹமீது பாகவீ அவர்கள் தான் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும். 


தனது வாழ்நாளை அல்லாஹ்வின் வேதத்தை மொழியாக்கம் செய்வதிலும், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஐம்பது லட்சம் மக்களுக்கு அந்த மொழி பெயர்ப்பைக் கொண்டு போய்ச் சேர்ப்பிப்பதிலும் தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த அந்தப் பேரறிஞரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.


Information:-

Islam is the way of life(Face Book Page)

Friday 19 January 2024

பிறந்த குழந்தையின் காதில் அதான் சொல்வது பித்அத்தா?

 

#பிறந்த_குழந்தையின்_ஒரு_காதில் #பாங்கும்_மற்றொரு_காதில்_இகாமத்தும் #கொடுப்பது_பித்அத்தா....? 


நூற்றாண்டுகளாக உலக முஸ்லிம்கள் புண்ணிய காரியமாக செய்து வரும் அமல்தான்  பிறந்தவுடன் குழந்தையின் காதுகளில் பாங்கும், இகாமத்தும் கொடுப்பது


இது நான்கு மத்ஹபுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, 

அங்கீகரிக்கப்பட்ட ஒரு 

உன்னதமான செயலாகும்.


வஹாபிகளுக்கு இது ஒரு பித்அத்தான காரியமாக இருக்கிறது... 


பித்அத் ஒழிப்பு மாநாடு நடத்த இருப்பவர்கள் முஸ்லிம்கள் சாதாரணமாக செய்து வரும் நல்ல அமல்கள் ஒவ்வொன்றையும் பித்அத்தின் பட்டியலில் சேர்த்து வருகின்றனர்.. 


பிறந்த குழந்தையின் காதுகளில் பாங்கு, இகாமத் கொடுப்பதில் மார்க்கம் அங்கீகாரம் வழங்குகிறதா என்பது குறித்து பார்ப்போம்.


இமாம் திர்மிதி அபூ ராஃபியிலிருந்து  அறிவிக்கப்படும் ஹதீஸில் இவ்வாறு பார்க்க முடியும்..


"பாத்திமா பீவி (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் ஹசன் மற்றும் ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரைப் பிரசவித்த போது நபியவர்கள் இரு குழந்தைகளின் காதில் பாங்கு கொடுப்பதை நான் கண்டேன்."


பிறகு இமாம் திர்மிதி அவர்கள் இந்த ஹதீஸ் ஹஸனும் மற்றும் ஸஹீஹ் என்றும் கூறுகிறார்கள்.


 1514 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللهِ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَةِ.

 هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ


இந்த ஹதீஸை இமாம் அஹ்மத் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) முஸ்னதிலும் (27186), இமாம் அபூதாவூத் ஸுனனிலும் (5105), இமாம் தப்ரானி முஃஜமுல் குப்ராவிலும் (926), இமாம் ஹாக்கீம் முஸ்தத்ரக்கிலும் (4827) 

மற்றும் இமாம் பைஹக்கி (8252) 

ஷுஃபுல் ஈமானிலும் (8252)  அறிவித்துள்ளனர். .  

இன்னும் பல முஹத்திஸுகள் அவர்களின் நூல்களில் இந்த ஹதீஸை மேற்கோள் காட்டியுள்ளார்கள்... 


இத்தகைய ஹதீஸ்களின் வெளிச்சத்தில் தான் பிறந்த குழந்தையின் காதுகளில் பாங்கும், இகாமத்தும் கொடுப்பது சுன்னத் என்று கடந்த கால  நூற்றுக்கணக்கான  இமாம்கள் தங்களது கிரந்தங்களில் பதிவு செய்துள்ளனர். 


இவர்கள் ஒன்றும் பார்க்காத ளயீஃபும், பித்அத்தும் வஹாபிகளுக்கு எங்கிருந்து கிடைத்தது.. 


இமாம் திர்மிதியை தவிர இன்னும் கூடுதலாக, இந்த ஹதீஸை முஹத்திஸுகளான  இமாம் ஹாக்கீம் முஸ்தத்ரக்கிலும், 

இமாம் அப்துல் ஹக் அஹ்காமிலும், 

இமாம் பகவி அவர்கள் மஸாபிஹுஸ்ஸுன்னாவிலும் (3/146), இமாம் இப்னு மாலிக் ஷர்ஹுல் மஸாபிஹுலும்  (4/ 533) 

இமாம் முள்ஹிரி அல் மஃபாத்தீஹிலும்

(4/595)  இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி துஹ்ஃபத்துல் முஹ்தாஜிலும் (9/376)  பதிவு செய்துள்ளனர்.. 


இமாம் திர்மிதி மேற்கூறிய  ஹதீஸ் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று அறிவித்துள்ளதை மற்று பல இமாம்கள்  தங்கள் புத்தகங்களில் ஒப்புதல் அளித்துள்ளனர்.


 சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

*************************************************


1. الأذكار للإمام النووي (286)

2. البدر المنير للإمام ابن الملقن (9/ 348)

3. مشكاة المصابيح للإمام الخطيب الشربيني  (2/ 1209) 

4. ميزان الاعتدال للحافظ الذهبي (2/ 354)

5. ذخائر العقبى في مناقب ذوي القربى للإمام محب الدين الطبري (120)

6. مرقاة المفاتيح شرح مشكاة المصابيح للإمام ملا علي القاري (7/ 2691)

7. أسنى المطالب في شرح روض الطالب للإمام زكريا الأنصاري (1/ 549)

8. الغرر البهية في ش رح البهجة الوردية للإمام زكريا الأنصاري (5/ 173)

9. فتح الوهاب بشرح منهج الطلاب للإمام زكريا الأنصاري (2/ 234)

10. حدائق الأنوار ومطالع الأسرار في سيرة النبي المختار للإمام بحرق الحضرمي (508)

11. تاريخ الخميس في أحوال أنفس النفيس للإمام حسين الدِّيار بَكْري (1/ 418)

12. كفاية النبيه في شرح التنبيه للإمام الرفعة (8/ 132)

13. كنز الراغبين للإمام المحلي (4/ 257)

14. حاشية الجمل على شرح للإمام الجمل (5/ 267)

15. حاشية البجيرمي على شرح المنهج للإمام البجيرمي (4/ 303)

16. الوابل الصيب من الكلم الطيب لإبن قيم الجوزية (ص: 131)

17. مواهب الجليل في شرح مختصر خليل للإمام الحطاب الرُّعيني المالكي (1/ 434)

18. شرح منتهى الإرادات للإمام منصور البهوتي الحنبلي(1/ 130)

19. كشاف القناع عن متن الإقناع للإمام منصور البهوتي الحنبلي  (1/ 234)


இந்த பழங்கால அறிஞர்கள் அனைவரும் திர்மிதி ஹஸன் என்றும் ஸஹீஹ் என்றும் சொல்லியதை அங்கீகரித்தும்,சரி வைத்தும் உள்ளனர்

இவர்கள் அத்தனை பேரையும் வெளிக் காலால் உதைத்துதான் பித்அத் ஒழிப்பு பிரசுரத்தில் இந்த செயலை பித்அத்தின் பட்டியலில் சேர்த்துள்ளனர்.... 


 

திர்மிதியின் ஹதீஸ் பலவீனமானதா......?


திர்மிதியின் மேற்கூறப்பட்ட ஹதீஸின் அறிவிப்பாளரில் ஆஸிமுப்னு வாயில் என்ற ராவியை சிலர் ஜர்ஹ் செய்வதால் இந்த ஹதீஸின் ஏற்றுக்கொள்ளும் தன்மை பாதிக்கப்படாது. 


இமாம் இப்னுல் முலக்கின் கூறுகிறார்கள்:


ஆஸிமுப்னு வாயில் என்ற ஒரு அறிவிப்பாளர் இருந்த போதிலும் இந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று முஹத்திஸ்கள் கூறியது அநேகமாக இந்த ஹதீஸ் அவர்களுக்கு வேறு அறிவிப்புகள் மூலம் நிறுவப்பட்டிருக்கலாம்.

(அல்-பத்ருல்-முனீர் 9/348)


ஸலஃபி அறிஞரான அல்லாமா முபாரக் ஃபுரி மேலும் தெளிவுபடுத்துகிறார்கள்


ஆஸிமுப்னு வாயில் என்ற  ஒரு அறிவிப்பாளரின் ஜர்ஹ் இமாம் இப்னுஸ்-ஸுன்னி ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மூலம் அறிவித்த ரிவாயத் கொண்டு பரிகரிக்கப்பட்டுவிட்டது 

(துஹ்ஃபத்துல் அஹ்வதி 5/90).

இனி இந்த ஹதீஸ் பலவீனமானது என்று நிலைநாட்டினால் கூட ஃபழாயிலுல் அஃமாலில் ளயீஃபான ஹதீஸைக் கொண்டு அமல் செய்வதில் பிரச்சினை இல்லை என்பது அறிஞர் உலகில் சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவப்பட்டுள்ள விஷயமாகும்.. 


இமாம் இப்னுல் ஸுன்னி ரிவாயத்: இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கு குழந்தை பிறந்தால், அவர் வலது காதில் பாங்கையும் இடது காதில் இகாமத்தையும் கொடுக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்தால், குழந்தையைத் தொட்டு ஜின்களின் தீவினைகள்

உயர்த்தப்படும்.


இமாம் இப்னுஸ்ஸுன்னி அமலுல்யவ்மி வல்லைலிலும் (578) இமாம் பைஹக்கி ஷுஃபுல் ஈமானிலும் (8254) 

மற்றும் பல முஹத்திஸுகள் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவித்துள்ளனர். 


இமாம் உமரு இப்னு அப்துல் அஜீஸ் (ரலி) அவர்கள் குழந்தையின் காதில் பாங்கு கொடுத்து இருக்கிறார்கள்.. 


ஐந்தாவது கலீஃபாவாகப் புகழ் பெற்ற மாபெரும் அறிஞரும், ஆட்சியாளரும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லடியாருமான உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரலி) அவர்கள் குழந்தை பிறந்ததும் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் கொடுப்பவர்களாக இருந்தார்கள்.. 


டஜன் கணக்கான இமாம்கள் தங்கள் நூல்களில் இந்த மகத்தான காரியத்தை மேற்கோள் காட்டியுள்ளனர்.


இமாம் இப்னு முலக்கின் (ரஹ்மத்துல்லாஹி) அவர்கள் கூறுவதை பாருங்கள்: இந்த நிகழ்வை நமது தோழர்கள் தங்கள் புத்தகங்களில் முத்தவாத்திரான வடிவில் விவரித்துள்ளனர்.


And in Al-Badder Al-Munir to Imam Ibn Al-Mullaqn (9/350): وَذكر فِيهِ عَن عَن عَن عَبد الْعَزِيز - رَحْمَة الله عَلَيْهِ - أَنه كَانَ إِذا ولد لَهُ ابْن اذنهِ فِي أُذُنهِ الْيُمْنَى وَأقَام فِي الْيُسْرَى.  واصحابنا يتواترون عَلَى نقل هَذَا عَنهُ,


நான்கு மத்ஹபுகளின் நூல்களிலும் குழந்தையின் காதில் பாங்கு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


 *ஷாஃபி மத்ஹப்*


இமாம் நவவி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) கூறுகிறார்கள்: குழந்தை பிறந்தால் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பாங்கு கொடுப்பது சுன்னத்தாகும். 

அபூ ராஃபியி, மற்றும் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ்கள் தான் இதற்கு ஆதாரம், 

அது மட்டுமின்றி உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இப்படி பாங்கு  கொடுத்ததையும் நமது அஸ்ஹாபுகள் பதிவு செய்துள்ளனர்.


  وفي المجموع شرح المهذب (8/ 442): السُّنَّةُ أَنْ يُؤَذَّنَ فِي أُذُنِ الْمَوْلُودِ عِنْدَ وِلَادَتِهِ ذَكَرًا كَانَ أَوْ أُنْثَى وَيَكُونُ الْأَذَانُ بِلَفْظِ أَذَانِ الصَّلَاةِ لِحَدِيثِ أَبِي رَافِعٍ الَّذِي ذَكَرَهُ الْمُصَنِّفُ قَالَ جَمَاعَةٌ مِنْ أَصْحَابِنَا يُسْتَحَبُّ أَنْ يُؤَذِّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَيُقِيمَ الصَّلَاةَ فِي أُذُنِهِ الْيُسْرَى  وَقَدْ رَوَيْنَا فِي كِتَابِ ابْنِ السُّنِّيِّ عَنْ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ (قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ وُلِدَ لَهُ مَوْلُودٌ فَأَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى لَمْ تَضُرَّهُ أُمُّ الصِّبْيَانِ) وَأُمُّ الصِّبْيَانِ التَّابِعَةُ مِنْ الْجِنِّ وَنَقَلَ أَصْحَابُنَا مِثْلَ هَذَا الْحَدِيثِ عَنْ فِعْلِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ رَحِمَهُ اللَّهُ


இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி கூறுகிறார்கள்: குழந்தையின் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் கொடுப்பது சுன்னத்தான காரியமாகும். 

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹஸன் (ரஹ்) அவர்களின் காதில் பாங்கு கொடுத்தார்கள் என்ற  ஹஸனான ஹதீஸ் தான் இதற்கு ஆதாரம்.. 

துஹ்ஃபத்துல் முஹ்தாஜ் (9/ 376)


 وفي تحفة المحتاج في شرح المنهاج للإمام ابن حجر الهيتمي (9/ 376)  (وَ) يُسَنُّ أَنْ (يُؤَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى) ثُمَّ يُقَامُ فِي الْيُسْرَى (حِينَ يُولَدُ) لِلْخَبَرِ الْحَسَنِ «أَنَّهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَذَّنَ فِي أُذُنِ الْحُسَيْنِ حِينَ وُلِدَ »


 *ஹனபி மத்ஹப்*


 وفي الدر المختار وحاشية ابن عابدين (1/ 385): مَطْلَبٌ فِي الْمَوَاضِعِ الَّتِي يُنْدَبُ لَهَا الْأَذَانُ فِي غَيْرِ الصَّلَاةِ...وَفِي حَاشِيَةِ الْبَحْرِ الرَّمْلِيِّ: رَأَيْت فِي كُتُبِ الشَّافِعِيَّةِ أَنَّهُ قَدْ يُسَنُّ الْأَذَانُ لِغَيْرِ الصَّلَاةِ، كَمَا فِي أَذَانِ الْمَوْلُودِ، وَالْمَهْمُومِ، وَالْمَصْرُوعِ، .....أَقُولُ: وَلَا بُعْدَ فِيهِ عِنْدَنَا.  اهـ.  أَيْ لِأَنَّ مَا صَحَّ فِيهِ الْخَبَرُ بِلَا مُعَارِضٍ فَهُوَ مَذْهَبٌ لِلْمُجْتَهِدِ وَإِنْ لَمْ يُنَصَّ عَلَيْهِ، لِمَا قَدَّمْنَاهُ فِي الْخُطْبَةِ عَنْ الْحَافِظِ ابْنِ عَبْدِ الْبَرِّ وَالْعَارِفِ الشَّعْرَانِيِّ عَنْ كُلٍّ مِنْ الْأَئِمَّةِ الْأَرْبَعَةِ أَنَّهُ قَالَ: إذَا صَحَّ الْحَدِيثُ فَهُوَ مَذْهَبِي، عَلَى أَنَّهُ فِي فَضَائِلِ الْأَعْمَالِ يَجُوزُ الْعَمَلُ بِالْحَدِيثِ الضَّعِيفِ


 *மாலிகி மத்ஹப்*


 وفي مواهب الجليل في شرح مختصر خليل للإمام الحطاب الرُّعيني المالكي (1/ 434):  قَالَ جَمَاعَةٌ مِنْ أَصْحَابِنَا: يُسْتَحَبُّ أَنْ يُؤَذِّنَ فِي أُذُنِ الصَّبِيِّ الْيُمْنَى، وَيُقِيمَ الصَّلَاةَ فِي أُذُنِهِ الْأُخْرَى، وَقَدْ رَوَيْنَا فِي سُنَنِ أَبِي دَاوُد وَالتِّرْمِذِيِّ عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: رَأَيْت رَسُولَ اللَّه - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - «أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ» قَالَ التِّرْمِذِيُّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَرَوَيْنَا فِي كِتَابَ ابْنِ السُّنِّيِّ عَنْ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .

 (قُلْتُ) وَقَدْ جَرَى عَمَلُ النَّاسِ بِذَلِكَ فَلَا بَأْسَ بِالْعَمَلِ بِهِ وَاَللَّهُ َعْلَمَ


 *ஹம்பலி மத்ஹப்*


وفي كشاف القناع عن متن الإقناع للإمام منصور البهوتي الحنبلي (3/ 28): (وَ) سُنَّ أَنْ (يُؤَذَّنَ فِي أُذُنِ الْمَوْلُودِ الْيُمْنَى) ذَكَرًا كَانَ أَوْ أُنْثَى (حِينَ يُولَدُ، وَ) أَنْ (يُقِيمَ فِي الْيُسْرَى) لِحَدِيثِ أَبِي رَافِعٍ قَالَ «رَأَيْت رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ» رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَاهُ وَعَنْ الْحَسَنِ بْنِ عَلِيٍّ مَرْفُوعًا «مَنْ وُلِدَ لَهُ مَوْلُودٌ فَأَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى رُفِعَتْ عَنْهُ أُمُّ الصِّبْيَانِ» وَعَنْ ابْنِ عَبَّاسٍ «أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ يَوْمَ وُلِدَ وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى» رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي الشُّعَبِ وَقَالَ وَفِي إسْنَادِهِمَا ضَعْفٌ.


இப்னுல்-கய்யிம் அவர்கள் கூறுகிறார்கள்: 

பாங்கு கொடுப்பது  சுன்னத்தான காரியமாகும்.. 


வஹாபிகள் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இப்னுல் கய்யூம் அவர்கள் தனது துஹ்ஃபத்துல் மவ்தூத் என்ற நூலில் குழந்தை பிறந்தவுடன் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் கொடுப்பது சுன்னத் என்று ஒரு அத்தியாயம் கொடுக்கிறார்.  

இமாம் திர்மிதியின் ஹதீஸ் உட்பட 3 ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார். 

பின்னர் பாங்கு கொடுப்பதின்  நன்மைகளும் விவரிக்கிறார்.. 


சி.பி உமர் சுல்லமிக்கு இது பித்அத் இல்லை.. 


கேரள வஹாபிகளின் தலைவர் பதவி அலங்கரிகத்த சி.பி.உமர் சுல்லமி அவர்கள் நித்ய ஜீவிதத்தில் பிரார்த்தனைகள் என்ற புத்தகத்தில் "குழந்தை பிறந்தால்" என்ற அத்தியாயத்தில் எழுதுவதைப் பார்க்கவும்:

"நபி (ஸல்) அவர்களின் மகள் பாத்திமா பீவி (ரழியல்லாஹு அன்ஹா) ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பெற்றெடுத்தபோது, ​​நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக அழைப்பு விடுப்பது போல் குழந்தையின் காதில் பாங்கு கொடுத்தார்கள்  (அபூதாவூத், திர்மிதி)


அஹ்லுல் சுன்னாவின் ஆரம்பகால அறிஞர்கள் மற்றும் ஆரம்பகால வஹாபிகளின் தலைவர்களால் புனிதமான செயலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பாங்கு கொடுக்கும் செயலை பித்அத்தாக ஆக்குவதற்கு வஹாபிகள் எந்த ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று தெரியவில்லை.... 


பி.பி.  உவைஸ் அதனி கேரளா

தமிழில்: M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி

மௌலவி Sabith Sharayi Jamaldeen அவர்களுக்கு தொடர் 03

 


 தொடர் 03 


கீழுள்ள லிங்க்ல  Click here

தொடர் 02 ல உள்ளதை நன்றாக படித்து விட்டு அதற்குரிய தெளிவையும் மக்களுக்கு கொடுப்பதோடு அடுத்த கட்டத்துக்கு வாருங்கள் மௌலவி அவர்களே!!


குறிப்பாக விஷேடமாக கிதாபையும் மேற்கோல் காட்டி அல் ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்களை வலுவாக காட்டி உங்கள் பதிவை நிறைவு செய்திருக்கிரீர்கள்....இப்போ விஷயத்துக்கு வாங்க....

#முதலாவதாக அக் கிதாபை இமாம் அவர்கள் தொகுத்த நோக்கம் என்ன..??


என்பதை அதே கிதாபில் சில சகோதர்கள் பல விடுத்தம் கேட்டுக்கொண்டதற்கு அமைய ரஜப் மாதத்தின் சிறப்பு,அம்மாதத்தில் நோன்பு நோற்றல்,விஷேட தொழுகை இவைகள் பற்றி வந்திருக்கும் செய்திகளில் எது சரியானது எது பலஹீனமானது என்பது பற்றி நீங்கள் ஒன்று திரட்ட வேண்டும் என்ற வேண்டுதலுக்காக இக்கிதாபை தொகுத்தேன் என்று அதே கிதாபிலே சொல்கிறார்கள்...


எனவே அக் கிதாபின் வரிசையை ஒவ்வொன்றாக சொல்வதல்ல நோக்கம்.

ஆனால் ஒவ்வொரு கிதாப் தொகுப்பதற்கு முன் ஏன் தொகுத்தார்கள்.?

அக் கிதாபின் விஷயங்கள் குறித்து அந்த ஆசிரியரின் நடை முறை என்ன...?

என்பது பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டும்...


அது தெரிந்தால் தான் கிதாபின் நோக்கமும் இமாமின் நடைமுறையும் அறியலாம்..


#குறிப்பு 01 இக்கிதாபின் வரிசை பற்றி 6 கும் மேற்பட்ட நுணுக்கங்கள் சொல்லலாம்..ஆனால் இப்போதைக்கு அது நமக்கு தேவையில்லை.அதனால் 

முக்கிய இரண்டு விடயங்களை சொல்கிறேன்.

1- இதில் ரஜப் அதன் தனித்துவம்,நோன்பு,தொழுகை பற்றிய ஹதீஸ்களை எல்லாம் இரண்டு வகையாக #ழயீப் பலஹீனம் என்றும் #மவ்ழூஃ இட்டுக்கட்டப்பட்டவை என்று வெவ்வேறு படுத்தி எழுதி அதை பிரித்துக்காட்டியமை...


2-ழயீபான பலஹீனமான ஹதீஸ்கள் விஷயத்தில் இமாம் அவர்களின் நடைமுறைப்படுத்தல் என்ன..?என்பது பற்றி அக்கிதாபிலேயே அவர்கள் சுட்டிக்காட்டியது


#கவனிக்கவேண்டிய முதல் விஷயம் 


 لم يرد في فضل شهر رجب ولا في صيامه ولا في صيام شيء منه معين ولا في قيام ليلة مخصوصة فيه  حديث صحيح يصلح للحجة 


ரஜப் மாதத்தின் சிறப்பிலோ அதில் நோன்பு நோற்பது பற்றியோ  அதில் குறிப்பிட்ட ஒரு நாளில் நோன்பு நோற்பது பற்றியோ  அதில் ஒரு இரவில் நின்று வணங்குவது பற்றியோ ஆதாரத்துக்குரிய ஸஹீஹான ஹதீஸ்கள் இல்லை.

என்று சொல்கிறார்கள்.நிழற் படம் கீழே பார்வை இடலாம்..


அதே கிதாபில் இவ்விடயத்தை சொல்லும் நீங்கள் அதே கிதாபில் அதே பக்கத்தில் நீங்கள் எவ்விடயத்தை சொன்னீர்களோ அதே விடயத்தோடு சேர்த்தே இமாம் அவர்கள் ழயீபான பலஹீனமான ஹதீஸ்களின் நிலை குறித்து எழுதி இருக்கிறார்கள்...


இக்கிதாபின் #சாராம்மே அது தானே!!

ஏன்னா ரஜப் பற்றி வந்திருக்கும் ஹதீஸ்களில் இருவகையாக பிரித்து சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறார்கள்.அதில் #மவ்ழூஃஆன இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் பற்றி நாம் யோசிக்கத் தேவையில்லை..இட்டுக்கட்டப்பட்ட செய்தியை கிதாபில் எழுதுவது பற்றி உஸுலுல் ஹதீஸில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதே நிபந்தனைகளை கடைப்பிடித்து எழுதி இருக்கிறார்கள்..


ஆனால் ழயீபான பலஹீனமான ஹதீஸ்கள் விடயத்தில் அங்கு அவர்களின் வழிமுறை பற்றி சொல்லி இருக்கிறார்களே!! ஏன் அதை நீங்கள் மக்களிடம் சொல்லவில்லை....??


எனவே அப்பகுதியை உங்களுக்கு இங்கே நீல நிறத்தில் அடையாளமிடப்பட்டு காட்டப்பட்டுள்ளது.அதை மொழிபெயர்த்து மக்களுக்கு சொல்லுங்கள்....?தெளிவு கொடுப்பதென்றால் ஒன்றை மறைத்து ஒன்றை மட்டும் சொல்வதில்லையே தஃவா...

இல்முடைய விடயத்தில் #கியானத் இருக்கக்கூடாதே!!நீங்கள் இப்படி செய்வது #மன்ஹஜுல்_பஹ்தில்

 ( منهج البحث ) 

#கியானதுல்_இல்மிய்யா  

( خيانة العلمية)

 இல்லையா....??


இப்போ குறித்த ஹதீஸுக்கு வாருங்கள்..அல் ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ஹதீஸின் பின் 

#லைஸ_பில்_கவிய்யி ( ليس بالقوي ) என்று எழுதி இருக்கிறார்கள்.என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று..


ஹதீஸ் கலையில் முக்கியமாக பேசப்படும் இதுவும் ஒரு கலைச் சொல்...அதாவது #லைஸ_பில்_கவிய்யி_எறு ( ليس بالقوي ) அலிப் லாமை உபயோகித்தும் #லைஸ_பி_கவிய்யின் என்று ( ليس بقوي ) அலிப் லாம் இல்லாமலும் உபயோகிக்கும் ஒரு கலைச் சொல்....


என்றால் இது இரண்டும் ஒன்றா.?அல்லது வெவ்வேறா.?என்ற பேச்சு சில இமாம்களிடம் உண்டு...


இருந்தாலும் பதிவை நீட்டாமல் அல் ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் மேற்குறித்த ஹதீஸில் #அலிப்_லாம் உடன் #லைஸ_பில்_கவிய்யி_என்று சொல்லி இருக்கிறார்கள் என்றால் இமாம் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்களிடம் இதற்கு என்று தனி சட்டம் உண்டு....


எனவே நீங்கள் அந்த சட்டத்தை மக்களுக்கு சொல்லிக்காட்டுங்கள்..மேற்குறித்த ஹதீஸ் தெளிவடையும்.....


#இறுதியாக_பகிரங்க_சவாலாகவே_சொல்கிறேன்..


இவ்வளவு ஸஹீஹ் ழயீப் பேசும் நீங்கள் உங்களுக்கு ஓர் சவால் விடுகிறேன்..


உங்களிடம் இரண்டு விடயத்தை விட்டுச் செல்கிறேன்.அதை நீங்கள் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் வழி தவறமாட்டீர்கள் ஒன்று அல்லாஹ்வின் வேதம் அல் குர்ஆன் இரண்டு அஸ் சுன்னா என்று ஒரு ஹதீஸை கைப்பைக்குள் போகும் இடமெல்லாம் கொண்டு செல்வீர்களே!


இந்த ஹதீஸ் வரக்கூடிய அத்துனை வழியையும் தேடி யார்ட கைய காலைப் பிடிச்சாவது இந்த ஹதீஸை #ஸஹீஹ் என்று நிரூபித்துக்காட்டுங்கள் பார்க்கலாம்...


பின் தொடரலாம்....முற்றும்...

மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி ஏறாவூர் 

+94 77 444 77 57

கடவுளுக்கு வழிபாட்டுத்தலம் கட்டுவதில்... கீழ்க்கண்ட இஸ்லாமிய வரலாற்று உத்தரவுகள்



 

இதைப் பகிருங்கள் முதலில்..உலக மக்கள் அனைவருக்கும் சிறப்பான முன்னுதாரணங்களாக வழிகாட்டும் அறிவுரைகளாக உள்ளன. 

எங்கள் ஊர் பள்ளிவாசலில்... இன்றைய ஜூம்மா குத்பா பயானில் கூறப்பட்டவை :-


1.

ஹிஜ்ரி 17 –ஆம் ஆண்டு, 

இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்து நான்காண்டுகள் உருண்டோடி விட்டது. மெல்ல, மெல்ல இஸ்லாம் அருகே இருக்கும் நாடுகளுக்கு பரவிக்கொண்டிருந்த இனிமையான தருணம் அது.


தலைநகர் மதீனாவில் இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கட்டிய மஸ்ஜித் அந் நபவீ... உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்களின் கூட்ட நெரிசலால் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த... ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்கள் பள்ளிவாசலை விஸ்தரிக்க முடிவெடுத்தார்கள்.


அதற்காக, பள்ளியைச் சுற்றி இருக்கிற நபித்தோழர்களின் வீட்டை இடித்து, அந்த இடத்தையும் சேர்த்து கட்டினால் தான் பள்ளியை விரிவாக்கம் செய்ய முடியும் என்ற நிலையையும் உணர்ந்தார்கள்.


பள்ளியைச் சுற்றிலும் ”உஸாமா (ரலி), ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), மற்றும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), அப்துர்ர்ஹ்மான் இப்னு அபூபக்ர் (ரலி), முஹம்மத் இப்னு அபூபக்ர் (ரலி), முஃமின்களின் அன்னையர் நபி {ஸல்} அவர்களின் மனைவியர் ஆகியோரின் வீடுகள் எல்லாம் இருந்தன.


உமர் (ரலி) அவர்கள், முஃமின்களின் அன்னையர் வீட்டை மட்டும் விட்டு விட்டு மற்றெல்லாவரின் வீடுகளையும், இடங்களையும் வாங்கிட முடிவெடுத்தார்கள்.


வீட்டின் உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து “ நீங்கள் உங்கள் வீட்டை விலைக்கு கொடுத்தீர்கள் என்றால் அதற்குப் பகரமாக மதீனாவின் இன்னொரு இடத்தில் ஒரு வீட்டையோ, அல்லது அதற்கான கிரயத்தையோ முழுமையாகப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது நீங்கள் விரும்பினால் அரசுக்கு அன்பளிப்பாகவும் தரலாம். அரசும் உங்களை நன்றியுணர்வுடன் நடத்தும். அல்லது நீங்கள் விரும்பினால் அல்லாஹ்விற்காக தருமமாகவும் தந்திடுங்கள். அதற்கான கூலி வழங்குவதற்கு அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்” என்று கூறினார்கள்.


இதைக் கேட்ட மாத்திரத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்களும், அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் இரு மகன்களும் தங்களின் வீடுகளையும், நிலங்களையும் அல்லாஹ்விற்காக தர்மம் செய்து விட்டார்கள்.


மற்ற நபித்தோழர்களில் சிலர் கிரயத்தையும், இன்னும் சிலர் மதீனாவின் பிற பகுதியில் நிலத்தையும் பெற்றுக் கொண்டு அவர்கள் வசித்த வீட்டையும், நிலத்தையும் அரசிடம் மனமுவந்து ஒப்படைத்தனர்.


இந்த நிகழ்வு நடைபெறுகிற போது, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மட்டும் மதீனா நகரில் இல்லை. வெளியூர் சென்று இருந்தார்கள்.


வெளியூரில் இருந்து வந்த உடன்... இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து... மற்ற வீட்டின் உரிமையாளர்களிடம் பேசியது போன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமும்.. கலீஃபா உமர் (ரலி) அவர்கள் பேசினார்கள்.


ஆனால், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோ தம் வீட்டை மஸ்ஜித் விரிவாக்கத்துக்கு தர மறுத்து விட்டார்கள். மற்றவர்கள் எல்லாம் தம் இடங்களை தந்து விட்டது பற்றியும், இந்த ஒரு இடம் மட்டும் நடுவே இருந்தால்... மஸ்ஜிதை விரிவாக்கம் செய்வது இயலாமல் போய்விடும் என்றும்... எவ்வளவோ விளக்கி சொல்லியும்... இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தர மறுத்து விட்டார்கள்.


இறுதியாக... ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்கள்... ”நீர் இடம் தரவில்லையானால் அரசு உம்முடைய நிலத்தை தம் அதிகாரத்தைக் கொண்டு கைப்பற்றிக் கொள்ளும்!” என்று உறுதியாக கூறினார்கள்.


இருவருக்கும் பேச்சு முற்றவே, நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக... கலீஃபா உமர் (ரலி) அவர்களின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள்... இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.


அப்போது... நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர்... உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள்..!


இங்கே●●●●●●●


உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள் யார்... எப்பேர்ப்பட்டவர் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். மேலேயுள்ள வாதி பிரதிவாதி ஆகிய இருவர் பற்றியும் பலரும் அறிந்திருப்போம். நீதிபதி பற்றி அறிய வேண்டும். மதீனாவின் இஸ்லாம் மீளெழுச்சியுற்ற ஆரம்பத் தருணங்களிலேயே அவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுவிட்டார். நபியவர்களின் புனிதக்கரம்  பற்றிப் பிரமாணம் அளித்தவர் என்று இஸ்லாமுடனான உறவு அவருக்கு நபி(ஸல்) அவர்களிடமிருந்தே துவங்கியது. 


பின்னர்... அகபா உடன்படிக்கையில் பங்கேற்றவர்களுள் அவரும் ஒருவர் ஆக இருந்தார். இஸ்லாமிய வரலாற்றில் முதல் யுத்தமான பத்ரு யுத்தத்தில் பங்கு பெற்ற 313 நபித்தோழர்களில் ஒருவர். உபை இப்னு கஅப். அதைத் தொடர்ந்து நிகழ்ந்த யுத்தங்களிலெல்லாம் நபியவர்களின் படையணியில் உபை ஒரு முக்கிய வீரர்.


இறங்க... இறங்க... அப் டு டேட் ஆக.... குர்ஆன் முழுவதும் மனனம் செய்தவர். செவியுறுவோர் மகிழ்வுறும் குரல் வளத்தில் இனிமையாக ஓதக்கூடியவர் என்று உருவானார் உபை. அழகுற ஓதுவது என்பதுடன் நின்று போகாமல் குர்ஆனைப் பற்றிய அவரது ஞானம்தான் அவருக்கு இறைவன் அளித்த தனிச் சிறப்பு.


‘குர்ஆன் கற்றுக்கொள்ள வேண்டுமா? இந்த நால்வரிடம் செல்லுங்கள்’ என்று நபியவர்கள் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்கள். 


அவர்கள் பரிந்துரைத்த அந்த நால்வருள் ஒருவர்...

உபை இப்னு கஅப். மற்ற மூவர், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத். அபூஹுதைஃபாவினால் விடுவிக்கப்பட்ட அடிமை ஸாலிம், முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹும்.


அத்தகு பரிந்துரைக்கு உரிய தகுதிகள் அவருக்கு அமைந்திருந்தன என்பதற்குச் சிலநிகழ்வுகளும் சாட்சி. ஒருநாள் நபியவர்கள் உபையிடம் “ஓ அபூமுன்திர்!அல்லாஹ்வின் அருள்மறையில் எந்த வசனம் உயர்வானது?” என்று கேட்டார்கள்.


“அல்லாஹ்வும்அவனுடைய தூதரும் அதைச் சிறப்பாக அறிந்தவர்கள்” என்று பதில் வந்தது.மீண்டும் அதே கேள்வியைக்கேட்டார்கள் நபியவர்கள்.


சூராஅல் பகராவின் 255ஆம் வசனமான ஆயத்துல் குர்ஸீயை நபியவர்களிடம் ஓதிக்காட்டி தெரிவித்தார் உபை. அதைக்கேட்டு நபியவர்களின் முகம் மகிழ்வால் மிளிர்ந்தது. உபையின் மார்பைத் தமது வலக் கரத்தால் தட்டித் தந்தார்கள். ‘சரியான பதிலைச் சொன்னாய் உபை’ என்ற அங்கீகாரம் அது.


”உபை! நான் உமக்காக குர்ஆனை விரித்து வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளேன்” என்றார்கள் நபியவர்கள்.


‘குப்’பெனஅவரைக் குதூகலம் தாக்கியது. தம்முடைய ஆர்வத்தைக் கட்டுப்படுத்தவில்லை. கேட்டுவிட்டார்.


“அல்லாஹ்வின் தூதரே. தங்களிடம் என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டதா?”


“ஆம்” என்று பதிலளித்தார்கள் நபியவர்கள். “உம்முடைய பெயர், வம்சாவளி ஆகியவற்றுடன் விண்ணிலிருந்து குறிப்பிடப்பட்டீர் உபை.”


நபியவர்களின் தோழர்களுள் மிக முக்கியமான ஒருவராகப் பரிணமித்தார் உபை இப்னு கஅப்.அவருடைய எழுத்தறிவு நபியவர்களுக்குச் சேவகம் புரிந்தது.


குர்ஆன் வசனங்கள்அருளப்படும்போது அதை எழுதப் பணிக்கப்பட்ட தோழர்கள் சிலர் இருந்தனர். அந்தச்சிலருள் உபையும் ஒருவர். அது மட்டுமின்றி நபியவர்களின் கடிதப்பரிமாற்றங்களில் உதவுவதும் உபையின் பணியாக இருந்தது.


●●●●●இனி,

நீதிபதி உபை இப்னு கஅப் ( ரலி) அவர்கள்....


இருவரின் வாதப் பிரதிவாதங்களையும் கேட்டு விட்டு, உமர் (ரலி) அவர்களை நோக்கி “உமர் (ரலி) அவர்களே! நபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் “அல்லாஹ் நபி தாவூத் (அலை) அவர்களிடம் பைத்துல் முகத்தஸ்ஸை கட்ட ஆணை பிறப்பித்தான்.


முதற்கட்டமாக அதற்கான இடத்தை தெரிவு செய்யும் பணியை மேற்கொண்டார்கள் தாவூத் (அலை) அவர்கள்.


அங்கே, இஸ்ரவேலர்களில் ஒருவருக்குச் சொந்தமான ஓர் இடம் இருப்பதைக் கண்டு அதை இறையில்லம் கட்ட இடம் தேவைப்படுவதால் தம்மிடம் விலைக்கு தந்து விடுமாறு விலைபேசினார்கள்.


ஆனால், அவரோ தரமுடியாது என்று மறுத்து விட்டார். அதற்கு தாவூத் (அலை) அவர்கள் “மனதிற்குள் இப்படிச் சொல்லிக்கொண்டார்களாம் “ நீ தராவிட்டால் என்ன? நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று.


ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தை அறியும் வல்லமை மிக்க இறைவனாகிய அல்லாஹ்... உடனடியாக... தாவூத் (அலை) அவர்களிடம் வஹீ மூலம் “என்னை வணங்குவதற்காகக் கட்டப்படுகிற ஆலயம் என்பது ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, மோசடி ஆகிய குற்றங்களிலிருந்து நீங்கி பரிசுத்த பூமியாய் இருக்க வேண்டும்” என்று கட்டளை அறிவித்தான்.


பின்னர், அந்த இஸ்ரவேலரிடம் நல்லவிதமாக பேசி பல பேரங்கள் நடத்தி... இடத்துக்கு அவர் கேட்ட விலை மற்றும் இடமாற்றத்துக்கான  இழப்பீடைக் கொடுத்து அந்த இடத்தை அதிக விலைக்கு வாங்கி பைத்துல் முகத்தஸின் கட்டுமானப்பணியை துவக்கினார்கள் நபி தாவூத் (அலை) அவர்கள்” ஆகவே, உமர் அவர்களே! சற்று நிதானித்து முடிவெடுங்கள்” என்றார்கள்.


தாவூத் நபி (அலை) ,அவர்களுக்கு வந்த அல்லாஹ்வின் தெளிவான உத்தரவை... இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் மூலமாக... கேட்டறிந்த நீதிபதி கூறக்கேட்டதும், உமர் (ரலி) அவர்கள்... "இப்னு அப்பாஸ் அவர்களே! உம்முடைய வீடும் வேண்டாம், உம்முடைய நிலமும் வேண்டாம். இரண்டையும் அதிகாரத்தைக் கொண்டு நான் ஒரு போதும் அபகரிக்க மாட்டேன். நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்கள்.


அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் “உமர் (ரலி) அவர்களே! ஒரு சாமானிய குடிமகனுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கிற உரிமையை அவர் எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் நான் இவ்வாறு செய்தேன். மேலும், உங்களை விட மஸ்ஜிதுன் நபவீயின் விரிவாக்கத்தில் அதிக நாட்டமுடையவன் நான். எனவே, எந்தப் பிரதி பலனையும் நாடாமல் இதோ என் வீட்டையும், நிலத்தையும் உங்களிடம் தருகின்றேன்” என்றார்கள். ( நூல்: வஃபாவுல் வஃபா )


2.


இதே போன்ற தொரு சம்பவம், 

இதே உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில்... “ஒரு கிறிஸ்தவப் பெண்மனி உமர் (ரலி) அவர்களிடம் எகிப்தின் ஆட்சியாளர் அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள், எகிப்தில் ஓர் இறையில்லம் கட்ட தம்முடைய வீட்டையும், இடத்தையும் ஆக்கிரமித்ததாக வழக்கு தொடுத்து எகிப்து கவர்னர் மீது குற்றம் சுமத்திய போது, பள்ளியின் அந்தப் பகுதியை மட்டும் இடித்து விட்டு, முன்பு இருந்தது போன்று அப்பெண்மனியின் வீட்டைக் கட்டிக்கொடுக்குமாறு... ஆட்சியாளர் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் எகிப்தின் ஆளுநர் அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டார்கள்.


 ( நூல்: குலஃபாவுர் ரஸூல் {ஸல்) லி இமாமி காலித் முஹம்மத் காலித் (ரஹ்).. )

உங்களிடம் ஆயுதமேந்தி போர்செய்ய வருபவர்களிடம் மட்டுமே நீங்கள் போர்செய்ய வேண்டும்.


பெண்களை-குழந்தைகளை-சிறுவர்களை-வயோதிகர்களை தாக்கக்கூடாது.


மதகுருமார்களை-வியாபாரிகளை-விவசாயிகளை தாக்கக்கூடாது.


#பிறமத_ஆலயங்களை, #மடாலயங்களை #சேதப்படுத்தக்கூடாது.


தேவையின்றி மரங்களை வெட்டவோ,கட்டிடங்களை இடிக்கவோ கூடாது. பொருட்களை எரிக்கவோ கூடாது.


ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற உயிரினங்களை கொல்லக் கூடாது.


அங்கே யாரையும் மோசடி செய்யக் கூடாது, ஏமாற்றக் கூடாது. வரம்பு மீறக் கூடாது.

//


மேலே கண்ட அறிவுரைகள் யாவும்...  போர்க்களத்திலும், வென்ற பின்னர் எதிரி நாட்டுக்குள்ளும் எப்படி நடந்துகொள்ள வேண்டும்... என தான் அனுப்பிய முதல் படைப்பிரிவின் தளபதியான உஸாமா இப்னு ஜைத் (ரலி) அவர்களிடம் முதல் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் கண்டிப்புடன் இட்ட கட்டளையாகும்.


எனவே, தொடர்ந்து முஸ்லிம் மன்னர்கள் மீது கோயிலை இடித்து அந்த இடத்தில் பள்ளிவாசலை கட்டி வைத்தார்கள் என்று குற்றம் சுமத்துவது வரலாற்றுத் திரிபும், அவதூறும் ஆகும். இஸ்லாமை அறிந்த எவரும் இந்த கட்டுக்கதைகளை நம்ப மாட்டார்கள்.


நன்றி :

https://vellimedaiplus.blogspot.co

Mhamed Ashik

 

Tuesday 16 January 2024

மௌலவி Sabith Sharayi அவர்களுக்கு தொடர் 02

முதலாவது தொடர் 01 ல் சொன்னது போல லிங்க் 



Click here

3 இமாம்களின் கருத்துக்களை நீங்கள் விட இருந்தது..

காரணம் ஹதீஸ் கலையில் ஹதீஸ்களின் தரங்களின் விஷயத்தில் அவர்களின் நடைமுறை என்ன.?என்பது தெரியாமல் தானா பதிவு செய்தீர்கள்..?


1- அல் ஹாபிழ் இமாம் நவவி ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய #அல்_அத்கார் ஐ மேற்கோல் காட்டி இமாம் அவர்கள் அதுவும் #ஷாபி_மத்ஹபில்_பிரதான_இமாம்களில்_ஒருவரான என்று சொல்லி இந்த ஹதீஸை #ழயீப் பலஹீனம் என்று சொல்லி இருக்கிறார்கள் என்று எழுதி இருக்கிரீர்கள்..


அந்த ஹதீஸை அல் அத்கார் நூலில் வருவது போல் கீழே நிழற்படத்தில் காணலாம். இலக்கம் 01


#باسناد_فيه_ضعف 

அறிவிப்பாளர் வரிசையில் பலஹீனம் உண்டு என்பதை சுட்டிக்காட்டியே பதிவு செய்கிறார்கள்..எனவே நீங்கள் சொன்னது போல அல் ஹாபிழ் இமாம் நவவி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸை ழயீபாக பலஹீனமாகவே சொல்கிறார்கள்..

#ஆனால் அதே அல் ஹாபிழ் இமாம் நவவி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் அதே தங்களுடைய அல் அத்கார் என்ற நூலில் ழயீபான பலஹீனமான ஹதீஸ்கள் விஷயத்தில் என்ன சொன்னார்கள் என்பதை ஏன் நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை...??

அதை ஏன் விட்டீர்கள்..?இதுவா தஃவாவின் தர்மம்...?

கீழே நிழற்படம் இலக்கம் 02.ஐ பார்வையிடவும்..


நீங்கள் அல்லாஹ்வை பயந்து தக்வாவுடன் தெளிவும் உண்மையும் சத்தியமும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற நல் எண்ணத்தில் தான் தஃவா செய்கிரீர்கள் என்றால் இலக்கம் 2 ல் அடையாளம் இடப்பட்டிருக்கும் பகுதியை மக்களுக்கு மொழிபெயர்ப்பு செய்து வெளியிடுங்கள் பார்க்கலாம்..உள்ளதை உள்ளால் உள்ள படி எத்திவைப்பது தானே தஃவா..ஸஹீஹான ஹதீஸ் வேண்டும் என்று #உஸுலுல்_ஹதீஸ் அடிப்படையில் தானே ஸஹீஹ் என்பதற்குரிய நிபந்தனைகளை சொல்கிரீர்கள்..அதே ஹதீஸ் கலை சார்ந்த அறிஞர்களுடைய இந்த கருத்தையும் சொல்லுங்கள்....


2- அல் ஹாபிழ் இமாம் பைஹகி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் மேற்குறித்த ஹதீஸை ழயீப் பலஹீனம் என்று சொல்லி உள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினீர்கள்..

அல் ஹாபிழ் இமாம் பைஹகீ ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய #ஷுஃபுல்_ஈமான் கிரந்தத்திலும் அவர்களுடைய #பழாயிலுல்_அவ்காத் என்ற கிரந்தத்திலும் வரக்கூடியதை கீழே நிழற்படத்தில் தருகிறேன்..பார்வை இடவும் இலக்கம் 03- 04


நீங்கள் சொன்னது போல் உங்களின் எண்ணப்படி போல் அல் ஹாபிழ் இமாம் பைஹகி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸை #ழயீப்_பலஹீனம் என்று சொல்லி ஒதுக்கித்தள்ளவில்லை..

அதற்கு மாற்றமாக 

#تفرد_به 

என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறார்கள்..

ஹதீஸ் கலை அறிஞர்களிடம் நிறையவே அவர்களுடைய நடைமுறையில் சில ஹதீஸ்களின் பின் வெவ்வேறு வார்த்தைகளில்  சொல்வதுண்டு..


هذا الحديث من أفراد فلان 

تفرد به فلان 

هذا حديث غريب 

لا نعرفه الا من هذا الوجه 

ليس يرويه احد الا فلان 

لم يروه عن فلان الا فلان 

لم يقع الا من رواية فلان 

تفرد به فلان عن فلان 

لا أعلم حدث به غيره 

تفرد به فلان من أصحاب فلان ولم يشاركه فيه غيره 

هذا الحديث من غرائب فلان 

இப்படி வெவ்வேறு வார்த்தைகளில் ஹதீஸ் கலை அறிஞர்கள் உபயோகிப்பதுண்டு..


( புலான் فلان  #இன்னார் என்ற வார்த்தைக்கு எந்த ஹதீஸின் கீழ் இப்படியான வார்த்தைகள் உபயோகத்தில் இருக்கிறதோ அங்கு அந்த அறிவிப்பாளரின் பெயர் இடம் பெற்றிருக்கும்) 


அதை மேற்கூறிய ஹதீஸில் அல் ஹாபிழ் இமாம் பைஹகி ரஹ்மஹுல்லாஹ் சொல்லி இருப்பதையே பார்க்கலாம் 

تفرد به زائدة بن ابي الرقاد عن زياد النميري 

என்று தெளிவாகவே சொல்லி இருக்கிறார்கள்..


இப்படியான பரிபாசைகள் நிறைய இமாம் திர்மிதி ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார் போன்ற வேறு நூற்களிலும் காணலாம்.

இருந்தாலும் ஹதீஸ் கலை அறிஞர் பெருமக்கள் இப்படியான வார்த்தைகளைப் பற்றி அதன் எதார்த்தம் என்ன..?அதை உபயோகித்த இமாம் அவர்களின் அவ்விஷயத்தில் அதன் நடை முறை என்ன என்பது பற்றி அதற்கென்று தனியாகவே கிதாபுகளை தொகுத்துள்ளார்கள்..

அல் ஹாபிழ் இமாம் தாரகுத்னி ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய #ஙராயிப்_மாலிக் ( غرائب مالك ) 

அதே போல் இமாம் பஸ்ஸார் ரஹ்மஹுல்லாஹ் #அவர்களுடைய_ஙராயிப்_மாலிக் ( غرائب مالك ) 

அதே போல் #அல்_ஙராயிப்_வல்_அப்ராத் ( الغرائب والأفراد) அதே போல் #ஙராயிப்_ஷுஃபா ( غرائب شعبة ) இப்படி இன்னும் பல நிறைய தனித்துவமான கிதாபுகள் உண்டு..


இவைகளை எல்லாம் படித்துவிட்டு கிதாப் இல்லை என்றால் சொல்லுங்கள் தருகிறேன்..விளங்கவில்லையா சொல்லுங்கள் ஒவ்வொன்றாக விளங்கப்படுத்துகிறேன்...அத்தோடு நீங்கள் எந்த இமாமை குறிப்பாக கிதாபோடு மேற்கோல் காட்டினீர்களோ அதே அல் ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய #அன்_நுகத் நூலில் மேற்கூறிய #தபர்ரத_பிஹி பற்றி 4 வகையாக பிரித்து தெளிவாக உதாரணங்களோடு காட்டுவார்கள்..அதையும் படித்து விட்டு அத்தோடு அல் ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ஒரு சட்டத்தை சொல்வார்கள்..

وقد يطلقون تفرد الشخص بالحديث ومرادهم بذلك #تفرده_بالسياق_لا_بأصل_الحديث 

என்று #ஙராபதுஸ்_ஸியாக் ( غرابة السياق ) விஷயத்தில் சொல்வார்கள்..

அப்படி என்றால் என்ன?? என்பதையும் இம்மக்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்துங்கள்....


மட்டுமல்ல இந்த #தபர்ரத_பிஹி_விஷயத்தில் அல் ஹாபிழ் இமாம் பைஹகி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் எதை நாடி அப்படி சொன்னார்கள்...????


அல் ஹாபிழ் இமாம் பைஹகி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொன்னது #பர்து_முத்லக்  ( فرد مطلق ) ல அடங்குமா..?

அல்லது #பர்து_நஸபி ( فرد نسبي ) ல அடங்குமா....?

அதற்குரிய சட்டம் என்ன..??


ஏன்னா பிரார்த்தனை துஆவுடைய ஒரு ஹதீஸை எப்படி தூக்கி வீசுவது...?

இது ஒன்றும் ஹலால் ஹராம் சட்டம் வகுப்பதோ அல்லது அகீதா சார்ந்த விடயத்தை நிருவுவதோ அல்லவே!!


நீங்கள் சொன்னது போல் தெளிவாக ழயீப் பலஹீனம் என்று சொல்லாமல் இப்படி இமாம் அவர்கள் உபயோகித்த நோக்கம் என்ன...?

இந்த ஹதீஸ் விஷயத்தில் அல் ஹாபிழ் இமாம் பைஹகி ரஹ்ம்ஹுல்லாஹ் அவர்களின் நாட்டம் என்ன..?

என்பதை நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்....????


அதே சந்தர்ப்பத்தில் அல் ஹாபிழ் இமாம் பைஹகி ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய #பழாயிலுல்_அவ்காத்_நூலில் அடையாளம் இடப்பட்டிருப்பதற்கு கீழ் கருப்பு நிற நீட்டல் குறியிட்டு கீழே தெளிவாக எழுதி இருக்குத்தானே என்று சொல்லி விடாதீர்கள்..ஏன்னா அது இமாம் பைஹகி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொன்னது அல்ல....அக் கிதாபின் #முஹக்கிக் அவர்களுக்குரிய அடிக்குறிப்புகளே அவைகள்...


அதே சமயம் ஷுஃபுல் ஈமானில் இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொன்ன #முன்கருல்_ஹதீஸ் என்பதை இமாம் பைஹகி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொல்லித்தானே இருக்கிறார்கள் என்று அதையும் தூக்கிக் கொண்டு வரவேண்டாம்...

ஏன்னா அவைகள் பற்றியும் விமர்சனம் குறித்த அறிவிப்பாளர்கள் பற்றியும் பின்னால் பார்க்கப்படும்...இன்னும் முடியல்ல....

உங்களுக்கு பாடம் நடத்தி அதில் பயிற்சியாக உங்கள் கருத்துக்கமைய கேள்வி வைத்துள்ளேன்..மக்களுக்கு தெளிவு படுத்துங்கள்...


அடுத்த தொடரில் மீதி வரும்...


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி

ஏறாவூர் 

+94 77 444 77 57












மௌலவி Sabith Sharayi Jamaldeen அவர்களுக்கு

 





தொடர் 01 

#முதலாவது விஷயம் 

நாம் ஒரு கருத்தை மறுக்கிறோம் என்றால் அக்கருத்தின் விஷயத்தில் உறுதியான தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டுமே தவிர இன்னொரு கருத்துக்கு இடம்பாடு இருக்கக் கூடாது..அப்படி இருந்தால் தான் நம் கொள்கையில் கருத்தில் நிலையாக இருக்கலாம்..


அதாவது  نص ظني الدلالة #நஸ்ஸு_ழன்னித்_தலாலா 

அதாவது ஒரு கருத்தை தரும் ஆனால் அக்கருத்துக்கு வலிந்துரை செய்ய இடம்பாடு உண்டு மட்டுமல்ல எந்த கருத்து சொல்லப்பட்டதோ அக்கருத்தை விட்டும் வேறு ஒரு கருத்தின் பக்கம் திருப்பப்பட்டு அக்கருத்தையே நாடப்படும்..இதற்குத்தான் #நஸ்ஸு_ழன்னித்_தலாலா_என்று 

نص ظني الدلالة 

சொல்லப்படும்..


இதே போல் தான் நீங்கள் பதிவு செய்திருக்கும் குறிப்பிட்ட ஹதீஸ் விஷயம்..அதாவது #ழயீபான பலஹீனமான ஹதீஸ் மறுக்கப்பட வேண்டியது,அதை ஒரு பொழுதுமே ஏற்றுக்கொள்ள முடியாது என்ற சட்டம் #உஸுலுல்_ஹதீஸ்ல இருக்குமாக இருந்தால் தாராளமாக நீங்கள் மேற்குறித்த ஹதீஸை இப்படி பதிவு செய்து தள்ளி இருக்கலாம்...


ஆனால் இங்க விஷயமே வேற அதாவது நீங்க ஏதோ அவசரத்தில் எழுதி பதிவேற்றி விட்டீர்கள் என நினைக்கிறேன்..என்ன என்றால் அதாவது 

فن المناظرة 

என்று #விவாதக்_கலை என்ற ஒரு கலை உண்டு..குறிப்பாக 

مناظرة رشيدية 

என்ற ஒரு கிதாப் உண்டு.இலங்கையில் உள்ள அரபிக் கலாசாலையில் எந்த கல்லூரியிலும் இது பாடத்திட்டத்தில் இல்லை..பெரும்பான்மையான உலமாக்கள் ஓதி இருக்கவும் மாட்டார்கள்..

நீங்கள் விரும்பினால் இதை உங்களுக்கு நான் படிச்சித் தருகிறேன்..ஏன்னா இதை பிசகர அறிய படித்துள்ளேன் அல்ஹம்துலில்லாஹ்...இது  #மன்திக் எனும் தர்க்கவியல் கலையில் தான் அடங்கும்.அங்கு 

#முனாழரா ( مناظرة ) #முஜாதலா ( مجادلة) #முகாபரா (مكابرة ) பற்றிப் பேசுவார்கள்..அதுல தான் #முனாழரா_ரஷீதிய்யா_அடங்கும்...


இதில் நீங்கள்  #முஜாதலா_எனும்  ( مجادلة ) நிலையைக் கொண்டவர்..இருந்த போதிலும் ஏனையவர்கள் விளங்கிக்கொள்ளட்டுமே என்ற நல் எண்ணத்தில் தொடர்கிறேன்...


இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் நீங்கள் பதிவு செய்ததில் கீழே நிழற்படத்தை தருகிறேன் குறிப்பாக 3 இமாம்களின் கருத்தை கொண்டு வந்திருக்கிரீர்கள்...


தர்க்கவியல் கலை நுனுக்கத்தில்  உள்ள சூத்திரம் அப்படி பிடி கொடுத்து மாட்டிக்கொள்ளக்கூடாது.மெதுவா நம்மட கருத்தைச் சொல்லி விட்டு நகர்ந்து விட வேண்டும்..அப்ப தான் நாம நம்மட கருத்துல பயணிக்கலாம்...


நீங்க அறியாத்தனமாக பதிவு செய்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்..


1- அல் ஹாபிழ் இமாம் நவவி ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய அல் அத்கார் ஐ பதிவு செய்தது..


2- அல் ஹாபிழ் இமாம் பைஹகீ ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய ஷுஃபுல் ஈமானை பதிவு செய்தது.


3- விஷேடமாக ஹதீஸ் கலையில் அமீருல் முஃமினீன் பட்டம் பெற்ற அல் ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய குறிப்பிட்ட ஹதீஸ் இடம் பெற்றுள்ளது என்று விஷேடமாக அவர்களின் 

تبيين العجب بما ورد في شهر رجب 


#தப்யீனுல்_அஜப்_பிமா_வரத_பீஃ_ஷஹ்ரி_ரஜப் என்ற கிதாபையும் சேர்த்து வலுப்படுத்தியது..குறிப்பாக இந்த 3 இமாம்களின் கருத்து இது என்று பதிவு செய்யாமல் உங்களுக்கு விட இருந்திச்சி...ஏன்னா அங்க தான் ஆப்பு..


பதிவை நீட்டாமல் கட்டம் கட்டமாக தொடரும்..குறிப்பிட்டு ஓர் இரண்டு தொடரில் விஷயத்தை முடிச்சிடுவன் இன்ஷா அல்லாஹ்...ஏன்னா ஹதீஸ் கலை #உஸுலுல்_ஹதீஸ்_அல்லவா கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விளக்கனும்...


அடுத்த தொடரில் ஹதீஸ் கலைக்குள் போய்ரலாம்...


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி 

ஏறாவூர் 

+94 77 444 77 57

Friday 12 January 2024

உம்மு ஹராம் ரழியல்லாஹு அன்ஹா



பரவலாக பேசப்படக்கூடிய ஹதீஸ் உம்மு ஹராம் ரழியல்லாஹு அன்ஹா பற்றியது..
இவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அன்னியப் பெண்.இவர்களுடன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனிமையில் இருந்தது,பேன் பார்த்தது போன்றவைகளை சொல்லி இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்...? இவர்கள் அன்னியப் பெண் அல்லவா என்று பல விமர்சனங்கள்..எனவே அது ஸஹீஹான ஹதீஸாக இருந்தாலும் புகாரி ஷரீபில் இடம் பெற்றிருந்தாலும் அது வெறும் கட்டுக்கதை என்பதே விமர்சனம்...

இல்லை இல்லை உம்மு ஹராம் ரழியல்லாஹு அன்ஹா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மஹ்ரமிய்யத்தான உறவு முறை என்று மறுப்பாளர்களின் பதில்....

இப்படி உம்மு ஹராம் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அன்னியப் பெண்ணே என்று வாதிடக்கூடியவர்களின் நிறைய பேர்களின் பல கட்டுரைகளை பார்த்தேன்..#ஒரே_விஷயத்தை எல்லாரும் மாறி மாறி முன்னுக்கு பின்னாக இன்னும் கொஞ்சம் கூடுதல் சேர்க்கைகளை வைத்து எழுதியிருக்கிறார்கள்.

பார்த்தால் #மதனியாம்..#அஸ்ஹரியாம்..#ரியாதியாம்....#ஸலபியாம்...இப்படி பல பண்டிதர்கள்...
இவர்கள் எல்லாம் கடல் கடந்து போய் என்ன படித்தார்கள் என்பதே என்னுடைய கேள்வி...இவர்கள் ஆய்வு செய்வதில்லையா..?கிதாப் பார்ப்பதில்லையா...?குறைந்தது உங்களின் ஆதரவாளர்களின் உங்களின் பல்கலைக்கழகத்தில் ஹதீஸ் கலையில் படித்துக்கொடுக்கும் பன்நூல் ஆசிரியர்களின் கிதாபுகளையாவது பார்ப்பதில்லையா...??
எதை நீங்கள் படித்து விட்டு பெரும் பெரும் பட்டங்களோடு வந்திருக்கிரீர்கள்..?

#இதோ_உங்களுக்கோர்_நன்கொடை...

#அஷ்_ஷைக்_அலி_இப்னு_அப்துல்லாஹ்_அஸ்_ஸைய்யாஹ் என்ற சஊதி அரேபியாவின் மார்க்க அறிஞர்..
#முப்தி_இப்னு_பாஸ் அவர்களின் மாணவர்...மட்டுமல்ல #அப்துர்_ரஹ்மான்_இப்னு_நாஸிர்_அல்_பர்ராக் அவர்களினதும் மாணவர்..

சஊதி அரேபியா ரியாத் #மலிக்_சுஊத் பல்கலைக்கழகத்தில் ஹதீஸ் துரையில் விஷேடமாக பாடம் நடத்திய ஆசான்..
அவர்கள் ஓர் கிதாப் எழுதி இருக்கிறார்கள்..#அருமையான கிதாப்...வெறும் 87 பக்கம் தான்..நல்ல.ஆய்வு...
தன்னுடைய ஷைக்மார்களான 

அப்துர் ரஹ்மான் இப்னு நாஸிர் அல் பர்ராக் 
அப்துல்லாஹ் இப்னு அப்துர் ரஹ்மான் ஆல் ஸஃத் 
 ஸஃது இப்னு அப்துல்லாஹ் ஆல் ஹுமைத் 
ஆகிய மூவரிடமும் தான் எழுதிய கிதாபை சரி பார்க்க கொடுத்து அவர்கள் சரி கண்ட பிறகே அக்கிதாபை அச்சிட்டு வெளியாக்கினார்கள்...

#இஷ்கால்_வஜவாபுஹு_பீஃ_ஹதீஸி_உம்மி_ஹராம்_பின்த்_மில்ஹான் 

إشكال وجوابه في حديث أم حرام بنت ملحان 

என்ற அருமையான கிதாப்....இந்த கிதாபை பாருங்கள் எப்படி எழுதி இருக்கிறார் என்று....
படியுங்கள் தெளிவை பெருங்கள்..எடுத்த உடன் நமக்கு தெரிந்த அளவை வைத்து ஹதீஸை மறுக்க முற்படாதீர்கள்..அது இறுதியில் மோசமான நிலையை உண்டு பன்னும்...

மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி ஏறாவூர் 
+94 77 444 77 57

Thursday 4 January 2024

வஹியுடன் வஹி முரண்படுமா..? தொடர் 03

 



இப்போ ஹதீஸுக்கு வாருங்கள்..வீடியோவை  கீழே பார்வை இடவும்..


இந்த ஹதீஸ் ஸஹீஹுல் புகாரி #கிதாப்_அஹாதீஸுல்_அன்பியா #பாபு_வபாதி_மூஸா (அலைஹிஸ் ஸலாம்) என்ற பாடத்தில் ஹதீஸ் இலக்கம்  3407  அதே போல்  #பாபு_மன்_அஹப்பத்_தபன_பிஃல்_அர்ழில்_முகத்ஸ்ஸதி_அவ்_நஹ்விஹா என்ற பாடத்தில் ஹதீஸ் இலக்கம் 1339, ஸஹீஹ் முஸ்லிம், முஸ்னத் அஹ்மத், ஸுனன் நஸாயி,ஸஹீஹ் இப்னு ஹிப்பான், அல் முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் எல்லாம் இந்த ஹதீஸ் பதிவாகி உள்ளது.


ஸஹீஹ் உடைய நிபந்தனைகள் எல்லாம் சரியாக இருக்கும் நிலையில் மறுப்பதற்கும்  இடமில்லாத நிலையில் ஹதீஸ் கலை வல்லுனர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இருக்கும் ஹதீஸே இது..அதனால் தானே இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்..


#ஸஹீஹுல்_புகாரி 


என்ற ஹதீஸ் கிரந்தம் தொகுத்து முடிப்பதற்கு ஏறத்தாள 16 வருடங்கள் சென்றது.எந்த அளவு பேணுதலாக இக்கிரந்தத்தை தொகுத்தார்கள் என்றால் இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் சொல்கிறார்கள் 

ما وضعت في كتابي ( الصحيح ) حديثا الا اغتسلت قبل ذلك صليت ركعتين 

என்னுடைய இந்த கிதாபில் ஒரு ஹதீஸை எழுதுவதென்றால் குளித்து இரண்டு ரக்கஅத் தொழுது விட்டுத்தான் எழுதுவேன் என்று சொல்கிறார்கள்...


என்றால் 7275 ஹதீஸ்களையும் எழுத முன் குளித்து வுழு செய்து இரண்டு ரக்கஅத் தொழுத பின் தான் எழுதுவார்கள் என்றால் எவ்வளவு பேணுதலாக இக்கிரந்தத்தை தொகுத்து இருக்க வேண்டும்..


அதனால் தான் எல்லா இமாம்களாலும் ஏகோபித்த முடிவாக இப்புவியில் அல்லாஹ்வின் வேதமாகிய அல் குர்ஆனுக்கு அடுத்த படியாக மிகச் சரியான ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகுப்பு என்றால் அது ஸஹீஹுல் புகாரி என்று சொல்கிறார்கள்..

எனவே சிலரின் தவறான வாதங்கள்  ஸஹீஹுல் புகாரியில் பலஹீனமான ( ழயீபான ) 20 ம் மேற்பட்ட ஹதீஸ் இருக்கு என்று சொல்கிறார்கள்..மட்டுமல்ல ஏற்றுக்கொள்ள முடியாத இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்களும் உண்டு என்று சொல்கிறார்கள்..(உதாரணமாக சூனியம் பற்றிய ஹதீஸ் அஜ்வா பேரீத்தம் பழம் பற்றிய ஹதீஸ்) இன்னும் பல..


காரணம் இந்த ஹதீஸ்கள் பகுத்தறிவுக்கு முரணாகவும் ஷரீஅத்திற்கு முரணாகவும் இருக்கிறது என்ற சப்பைக்கட்டு வேற....


இவர்களுக்கு சவாலாகவே சொல்கிறேன் ஸஹீஹுல் புகாரியில் ஒரு ஹதீஸ் ழயீப் (பலஹீனம்) அல்லது மவ்ழூஃ ( இட்டுக்கட்டப்பட்டது) என்பதை நிரூபித்துக்காட்டுங்கள் பார்க்கலாம்..ஒரு நிபந்தனை யாரோ சொல்வதை எல்லாம் எடுத்துக்கொண்டு தனக்கு தெரிந்ததை மட்டும் வைத்து பேசக்கூடாது..அறபியிலும், எல்லாக் கலைகளிலும் குறிப்பாக ஹதீஸ் கலையிலும் நல்ல திறமை உள்ளவர் வரலாம்.வாயல் எப்போதும் திறந்தே இருக்கும்..


சரி விடயத்திற்கு வருவோம்.மேற்கூறிய ஹதீஸ் புத்திக்கும் ஷரீஅத்திற்கும் முரணாக இருக்கிறதே!!

ஒரு நபி எப்படி மவ்த்தை வெறுப்பார்..?

மலக்கின் வேலை அல்லாஹ் என்ன சொன்னானோ அதை அப்படியே செய்ய வேண்டும் எந்த மாறுதலும் செய்ய முடியாது அப்படி இருக்க மலகுல் மவ்த் ஹழ்ரத் இஸ்ராயீல் அலைஹிஸ் ஸலாம் எப்படி உயிரைக் கைப்பற்றாமல் அடி வாங்கிவிட்டு திரும்பிப் போவார்..?இது ஷரீஅத்திற்கு மாற்றமே!!

வந்தவர் மலகுல் மவ்த் என்பதை மூஸா அலைஹிஸ் ஸலாம் எப்படி அறியாமல் இருந்தார்..?


இதுவே இந்த ஹதீஸின் விமர்சனங்கள்..அதனால் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது..


ஹதீஸ் என்பதும் வஹீ தான் என்பதை ஏற்கனவே தெளிவு படுத்தினோம்..லிங்க் கீழே 👇


https://m.facebook.com/story.php?story_fbid=953846502981880&id=100050696177320&mibextid=Nif5oz


அதே சமயம் வஹீயை மறுக்க முடியாது.அப்படி மறுத்தால் அவர் காபிர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர் ஆவார்..

குறிப்பாக ஸஹீஹுல் புகாரியின் ஹதீஸை மறுத்தால் அதற்கு என்று தனி தீர்ப்பு உண்டு..எனவே ஹதீஸும் வஹியாக இருக்க வஹியும் வஹியும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளுமா என்றால் வஹியுடன் வஹி முரண்படவும் மாட்டாது...

உறுதியான (கதஇய்யத்தான) ஆதாரமான தெளிவான ஒரு ஹதீஸ் #புத்திக்கு முரண்படவும் மாட்டாது..

என்பதை இப்னு தைமியா தெளிவாகவே தன்னுடைய #தர்உ_தஆருழில்_அக்லி_வன்நக்லி 

درء تعارض العقل والنقل 

என்ற கிதாபில் சொல்லிக்காட்டுகிறார்..

11 பாகங்களைக் கொண்ட அருமையான கிதாப்.எதிர் கொள்கையானாலும் சரி இக் கிதாபுகளையும் படித்துப் பாருங்கள் நிறைய விடயங்கள் அறிந்து கொள்ளலாம்..


இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரோடு முற்றும்....


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி ஏறாவூர் 

+94 77 444 77 57


Niswar fb

Wednesday 3 January 2024

வஹியுடன் வஹி முரண்படுமா..?? தொடர் 02

 




தொடர் 01 ல் நாம் இரண்டு விதமான வஹியைப் பார்க்கப் போகிறோம் என்று சொன்னேன்..அதன் லிங்க் கீழே 

Click here

1- அல் குர்ஆன் இது #வஹியுன்_மத்லுவ்வுன் 

( وحي متلو ) 

2- அல் ஹதீஸ் ( அஸ் சுன்னா)  இது #வஹியுன்_ஙைரு_மத்லுவ்வுன் 

( وحي غير متلو ) 

இதன் சுருக்கம் அல் குர்ஆனும் அல் ஹதீஸும் #வஹி #இறை_செய்தி #இறை_தூது என்பதே!! இரண்டுமே வஹி என்றால் ஒன்றுக்கொண்று மோதிக்கொள்ளுமா..?வஹியுடன் வஹி முரண்படுமா..? என்பதே தலைப்பின் கேள்வி...


#வஹியுன்_மத்லுவ்வுன்_என்பது அல் குர்ஆன் இறை வேதம் இது அல்லாஹ்வின் தூது இறை செய்தி வஹி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..


இந்த வசனத்தைப் பாருங்கள் 

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰى‏

அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.

(சூரத்து அந் நஜ்ம் - 3)


اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰىۙ‏

அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.

(சூரத்து அந் நஜ்ம் - 4)


இந்த இரண்டு வசனமும் வஹி என்பது இரண்டு வகை என்பதை தெளிவாக காட்டுகிறது..

1- அல்லாஹ்வால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அல் குர்ஆன்..இடத்துக்கு ஏற்றவாறு சூழ் நிலைகளைக் கவனித்து நேரடியாகவும்,ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வழியாகவும்,மணி ஓசை போன்ற அமைப்பிலும் இவ்வாறு பல ரூபங்களில் வஹி இறங்கியது.ஓதிக்காண்பிக்கப்பட்டது.மட்டுமல்ல இதை ஓதினால் நண்மையும் உண்டு.அதனால் தான் அல் குர்ஆனை #வஹியுன்_மத்லுவ்வுன்_என்று சொல்லப்படும்..


2- மேற்கூறியது போன்று அஸ் சுன்னா இதுவும் வஹிதான் என்பதை மேற்கூறிய வசனம் ( சூரத்து அந் நஜ்ம் - 3,4 ) எடுத்துச் சொல்கிறது..நன்றாக சிந்திக்கவும் புலப்படும்..


இப்போது இந்த வசனத்தைப் பாருங்கள் 


بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِ‌ وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.

(சூரத்து அந் நஹ்ல் - 44)


அல்லாஹ்வின் மூலம் கொடுக்கப்பட்ட வஹியான அல் குர்ஆனை #மக்களுக்கு_தெளிவுபடுத்துவதற்காக அருளப்பட்டது அனுப்பப்பட்டார்கள்...


எனவே தான் நேரடியாக கொடுக்கப்பட்டது #வஹியுன்_மத்லுவ்வுன்_என்றும் கொடுக்கப்பட்ட அவ்வஹியை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு படுத்தவேண்டும்..அல்லாஹ் என்ன சொல்கிறான் அவர்கள் மனோ இச்சைப்படி எதையும் பேசமாட்டார்கள்.பேசினால் அது வஹிதான் என்று அல்லாஹ் சொல்கிறான்.அதனால் தான் அல் ஹதீஸ் ( அஸ் சுன்னா) .என்பது #வஹ்யுன்_ஙைரு_மத்லுவ்வுன்_என்று அல்லது #வஹியுன்_மர்விய்யுன் என்று சொல்லப்படுகிறது..


எனவே அல் குர்ஆனுக்கும் கட்டுப்பட வேண்டும் அஸ் சுன்னாவுக்கும் கட்டுப்பட வேண்டும்...இரண்டுமே வஹி தான்..

இரண்டுமே வஹி என்பதை அல்லாஹ் சொல்லும் #திக்ர் ( ذكر ) என்ற வார்த்தையில் புரிந்து கொள்ளலாம்..மேற் கூறிய வசனத்திலும் அவ் வார்த்தை உண்டு அதே போல் இவ்வசனத்தைப் பாருங்கள் 


اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

(சூரத்து அல் ஹிஜ்ர் - 9)


#சுருக்கமாகவும்_தெளிவாகவும்_சொல்வதென்றால் 


أخبر تعالى أن كلام نبيه صلى الله عليه وسلم كله وحي 


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சு எல்லாமே #வஹி என்று அல்லாஹ் சொல்கிறான்..


والوحي بلا خلاف ذكر 


வஹி என்பது எந்த மாற்றுக்கருத்துமே இல்லாமல் அது #திக்ர்_என்று அல்லாஹ் சொல்கிறான்..


والذكر محفوظ بنص القرآن 


#திக்ரை_அல்லாஹ் பாதுகாப்பதாக நேரடியாகவே #நஸ்ஸாகவே அல்லாஹ் கூறுகிறான்.. 


அல்லாமா இமாம் இப்னு ஹஸ்ம் அல் அந்துலிஸி  ( ஹிஜ்ரி 384. - 456 ) ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய #அல்_இஹ்காம்_பீஃ_உஸூலில்_அஹ்காம் 

( الإحكام في أصول الأحكام ) 

என்ற நூலில் பாகம் 01 பக்கம் 98 ல்  சொல்லிக்காட்டுகிறார்கள்..

மேற் கூறிய ஏனைய விளக்கங்களும் அதே கிதாப் அதே  பாகம் 01 பக்கம் 96 ல் 11 வது பாடத்தில் இடம் பெருகிறது...


அருமையான 8 பாகங்களைக் கொண்ட கிதாப்..கிதாபை படியுங்கள் இன்னும் நிறைய விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்...


எனவே அல் குர்ஆனும் அல் ஹதீஸும் ( அஸ் சுன்னா)  இறை செய்தி இறை தூது வஹி தான் என்பதை அல் குர்ஆனின் மூலமே தெளிவாகிறது..அதனால் வஹியோடு வஹி ஒரு பொழுதும் மோதாது..வஹியுடன் வஹி முரண்படாது..


என்றால் புகாரி முஸ்லிம் இரு பெரும் கிரந்தங்களில் வரக்கூடிய ஹதீஸ் அதாவது உயிரைக் கைப்பற்ற இஸ்ராயீல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் போன சமயம் அறைந்தார்களாம்...கண் வெளியே வந்ததாம்...


வாருங்கள் அடுத்த தொடரில் ....


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி ஏறாவூர் 


வஹியுடன்_வஹி_முரண்படுமா.??

தொடர் 01 

முரண்பாடுகளை தவிர்ப்பதென்றால் முதலில் மார்க்க கல்வியை சரி வர ஆய்வுக்குட்படுத்தி கற்க வேண்டும்..நாம் அறிந்தது தான் மார்க்கம் நமக்கு தெரிந்தது தான் மார்க்கம் என்ற நிலை வருமானால் அங்கே குழப்பத்திற்கு பஞ்சமில்லை..


#முதலாவது வஹியைப் பற்றி அறிய வேண்டும்..

வஹி என்பது #இறைதூது #இறைசெய்தி இது வார்த்தையின் கருத்து..வெறுமனே வார்த்தையின் கருத்தை மட்டும் சொன்னால் தெளிவாக புரிந்து கொள்ளலாமா..?என்றால் முடியவே முடியாது..

இங்கு இரண்டு விதமான வஹியை பார்க்கப் போகிறோம்.


1- அல் குர்ஆன் இது #வஹ்யுன்_மத்லுவ்வுன் (وحي متلو ) 


2- அல் ஹதீஸ் (அஸ் சுன்னா) இது #வஹ்யுன்_ஙைரு_மத்லுவ்வுன் ( وحي غير متلو ) 


இவை இரண்டையும் பார்க்க முன் வஹி இறைசெய்தியை இரண்டு விதமான கருத்துக்களில் நோக்கலாம்...


1- வஹியிற்கு குறிப்பான கருத்து..அதாவது இது நபிமார்களுக்கும் ரஸுல்மார்களுக்கும் மட்டுமே அந்த இறை செய்தி வரும். இது எல்லோரும் அறிந்தது...


2- வஹியிற்கு பொதுப்படையான கருத்து..அதாவது நபிமார்கள் அல்லாத மனிதர்களுக்கும் வரும் இதற்கு #இல்ஹாமிய்யத் இறை ஞான உதிப்பு என்று சொல்லப்படும்..அல்லது #அர்ருஃயஸ்_ஸாலிஹா நல்ல கனவின் மூலம் வரும் இவைகள் எல்லாம் வஹியின் பொதுப்படையான கருத்தில் அடங்கும்..


இவைகளை சற்று விரிவாக்கினால் 


1-#வஹ்யுன்_நுபுவ்வத்_வர்ரிஸாலத் 

 ( وحي النبوة والرسالة  ) 

ஆதாரம் ..

اِنَّاۤ #اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْ بَعْدِهٖ‌  #وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌  وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ‏


(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.

(சூரத்துன் நிஸா - 163)


2- #வஹ்யுல்_இல்ஹாம் 

( وحي الإلهام ) 

இறை ஞான உதிப்பு...ஆதாரம் 


#وَاَوْحٰى رَبُّكَ اِلَى النَّحْلِ اَنِ اتَّخِذِىْ مِنَ الْجِبَالِ بُيُوْتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُوْنَۙ‏

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),

(சூரத்து அந் நஹ்ல் - 68)


#وَاَوْحَيْنَاۤ_اِلٰٓى اُمِّ مُوْسٰٓى اَنْ اَرْضِعِيْهِ‌ فَاِذَا خِفْتِ عَلَيْهِ فَاَ لْقِيْهِ فِى الْيَمِّ وَلَا تَخَافِىْ وَلَا تَحْزَنِىْ اِنَّا رَآدُّوْهُ اِلَيْكِ وَجٰعِلُوْهُ مِنَ الْمُرْسَلِيْنَ‏

நாம் மூஸாவின் தாயாருக்கு: “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம்.

(சூரத்து அல் கஸஸ் - 7)


3- #வஹ்யுல்_இஷாரா

(وحي الإشارة ) 

சைக்கினை மூலம் வஹி வரும் ..ஆதாரம்..


فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ #فَاَوْحٰٓى اِلَيْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِيًّا‏

ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர், “காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹு செய்யுங்கள்” என்று உணர்த்தினார்.

(சூரத்து மர்யம் - 11)


4- #வஹ்யுத்_தக்தீர் 

( وحي التقدير ) 

ஆதாரம்..


فَقَضٰٮهُنَّ سَبْعَ سَمٰوَاتٍ فِىْ يَوْمَيْنِ #وَاَوْحٰى_فِىْ كُلِّ سَمَآءٍ اَمْرَهَا‌  وَزَ يَّـنَّـا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ ‌  وَحِفْظًا ‌ ذٰ لِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ‏

ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

(சூரத்து புஸ்ஸிலத் - 12)


இப்படி அல்லாஹ் #வஹிதான் அறிவித்தான்...இன்னும் நிறைய உண்டு வஹியைப் பற்றி எழுதுவதென்றால் மாதக்கணக்கில் எழுதலாம் அவ்வளவு விரிவான விஷயம்.. ..பதிவு நீண்டு செல்கிறது என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்..

எனவே இவைகளை எல்லாம் தெரிந்தால் தான் நம் #தலைப்பின் தெளிவை இலகுவாக அறிந்து கொள்ளலாம்...

இன்னும் தலைப்பிற்குள் நுழையவில்லை..


எனவே அடுத்த தொடரில் மேற்கூறிய 

#வஹ்யுன்_மத்லுவ்வுன்_வஹ்யுன்_ஙைரு_மத்லுவ்வுன் விபரத்தைப் பார்க்கலாம்....அங்கு தலைப்பிற்கு உட்படும் ஹதீஸ் வந்துவிடும்...


தொடரும்...


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி ஏறாவூர் 


அரஞ்ஞர் அராபி பாஷா


 எகிப்திலிருந்து நாடு கடத்தப்பட்டு 1883 ஜனவரி 10 ஆம் திகதி அஹ்மட் ஒராபி பாஷாவும் அவருடன் இருந்தவர்களும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தனர். அவர்களை அறிஞர் சித்தி லெப்பை, வாப்புச்சி மரிக்கார் உள்ளிட்ட பலரும் துறைமுகத்திற்குச் சென்று வரவேற்றனர்.


எகிப்தின் தலைநகருக்கு 80 கிலோ மீற்றர்தூரத்தில் அமைந்திருக்கும் சகசிக் கிராமத்தில் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் 1841 மார்ச் 31 ஆம் திகதி பிறந்த அஹமட் ஒராபி பாஷா ஆரம்பக் கல்வியை கிராமப் பாடசாலையில் நிறைவு செய்ததோடு, 1849 இல் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இணைந்து இடைநிலை மற்றும் உயர்கல்வியை நிறைவு செய்தார். அதேநேரம் 20 வயது இளைஞனாக இருக்கும் போது இராணுவத்தில் இணைந்த இவர், தம் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தியதன் பயனாக குறுகிய காலத்தில் லெப்டினன்டாகப் பதவி உயர்வு பெற்றார்.


என்றாலும் இவர் தலைமையில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 1882 இல் கிளர்ச்சி முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக இவரும் இவருடன் இணைந்து செயற்பட்டவர்களும் கைது செய்யப்பட்டு கடும் பாதுகாப்புடன் 1882.12.28 இல் எஸ்.எஸ்.மரியட்ஸ் என்ற கப்பலில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இவர்கள் இலங்கையை வந்தடைந்த சமயம் இந்நாடும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்டே இருந்தது. ஆனால் இவரது நலன்களில் அன்றைய பிரித்தானிய பாராளுமன்றம் அதிக அக்கறை எடுத்துக் கொண்டது. அதனால் இந்நாட்டுக்கான பிரித்தானிய ஆளுநர் அவரை நன்கு உபசரித்தார்.


இலங்கையை வந்தடைந்த ஒராபி பாஷாவும் அவருடன் இருந்தவர்களும் தற்போது லேக் ஹவுஸ் நிறுவனம் அமைந்திருக்கும் இடத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர். அறிஞர் சித்தி லெப்பை, ஓராபி பாஷாவுடன் நட்புறவைப் பேணலானார். இதன் பயனாக இந்நாட்டு முஸ்லிம்களுக்கு ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொடுக்கும் சித்தி லெப்பையின் முயற்சிகளுக்கு ஒராபி பாஷா பக்கபலமானார். இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்கு பங்களிப்பதில் ஒராபி பாஷாவும் ஆர்வம் காட்டினார்.


இந்த நிலையில் நவீன கல்வியை முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுப்பதன் அவசியத்தை உணர்ந்த சித்திலெப்பை, ஒராபி பாஷா போன்றோர் இணைந்து, 'முஸ்லிம் கல்விச் சங்கம்' என்ற பெயரில் அமைப்பொன்றை உருவாக்கி கல்வி தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.


இதன் பயனாக அறபு மொழி, இஸ்லாமிய மார்க்கக் கல்வியுடன் மேல்நாட்டுக் கல்வியையும் கற்பிக்கும் நோக்கில் கொழும்பு சோனகத் தெருவில் சித்தி லெப்பையினால், 'அல்மத்ரஸதுல் கைரிய்யதுல் இஸ்லாமிய்யா' எனும் பெயரில் முதலாவது பாடசாலை 1884 இல் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை பின்னர் ஹமீதிய்யா ஆங்கிலப் பாடசாலை என மாற்றம் பெற்றது.


இந்தப் பாடசாலையை ஆரம்பிப்பதற்காக ஒராபி பாஷா ரூ. 100.00 ஐ அன்று அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இதே பாடசாலைதான் தற்போது ஹமீத் அல் ஹுஸைனி பாடசாலையாக விளங்குகிறது. இதன் பின்னர்தான் அல்மத்ரஸத்துல் ஸாஹிரா என்னும் தற்போதைய கொழும்பு ஸாஹிராக் கல்லூரி 1892.08.22 இல் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையின் அங்குரார்ப்பணக் கூடத்திற்கும் ஒராபி பாஷா தலைமை தாங்கியுள்ளார்.


இவர் இலங்கையில் தங்கியிருந்த காலம் முழுவதும் ஸாஹிராக் கல்லூரிக்கு அடிக்கடி விஜயம் செய்து அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமூட்டினார்.

 

அதேநேரம் கண்டிக்கு விஜயம் செய்த ஒராபி பாஷா அங்கும் சித்தி லெப்பையுடன் இணைந்து முஸ்லிம்களின் கல்விக்கு ஊக்கமளித்தார். இந்நிலையில் கண்டியில் முதல் முஸ்லிம் பெண்கள் பாடசாலை நிறுவப்பட்டு அதற்கு அறிஞர் சித்திலெப்பையின் சகோதரி முத்து நாச்சியார் ஆசிரியையாக கடமையாற்றினார். அத்தோடு மேலும் சில இடங்களிலும் பெண்களுக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

 

இவ்வாறு இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டு ஒத்துழைப்புகளை நல்கியவர் ஒராபி பாஷா. நாடு கடத்தப்பட்ட நிலையில், 1883 முதல் 1901 வரையான 18 வருடங்கள் இங்கு தங்கியிருந்த காலத்தில் இவர் இலங்கைக்கும் இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்கும் அளித்துள்ள பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் 1983 இல் தபால் முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.

 

அதேநேரம் ஒராபி பாஷா இலங்கையின் மேம்பாட்டுக்கு அளித்துள்ள  பங்களிப்புகள் குறித்து   ஆராய்ந்து முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் நூலொன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். அந்நூலில் அவர் முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்கு அளித்துள்ள பங்களிப்புகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

 

எகிப்தின் ஆட்சியாளராக இரண்டாவது கதீவ் அப்பாஸ் பதவியேற்றதும் ஒராபி பாஷாவுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டதோடு, தாயகம் திரும்பவும் அனுமதியளித்தார்.

அதற்கேற்ப ஒராபி பாஷா தமது 61 வயதில் அதாவது 1901 ஒக்டோபர் 01 ஆம் திகதி எகிப்து திரும்பினார். அதனைத் தொடர்ந்து 1911 செப்டம்பர் 21 ஆம் திகதி இறப்பெய்தும் வரையும் அவர்  எகிப்திலேயே  வாழ்ந்தார். 

 

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்தும் கூட, இந்நாட்டு மக்களின் கல்வி மறுமலர்ச்சிக்குப் பங்களிப்பு செய்து வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படும் மனிதர் என்ற அந்தஸ்தை ஒராபி பாஷா பெற்றுக் கொண்டுள்ளார்.


௮ல்லாஹும்ம  இஃபிரலஹு வரஹம்ஹு


MUHAMMED Nadheem Fb

கழுகுகள் கற்றுத் தரும் பாடம்

  

குழந்தை வளர்ப்பு தொடர்பில் கழுகுகள் நமக்குக்கற்றுத் தரும் புதிய பாடம்...

திருமணமாக இருக்கும் ஆண் பெண்ணுக்கும், 

கணவன் மனைவிக்கும், 

தாய் தந்தைக்குமான செய்தி இது...


ஒரு பெண் கழுகு தன் குஞ்சுகளுக்கு தந்தையாக ஆண் கழுகை எப்படி தேர்ந்தெடுக்கின்றது என்பது தெரியுமா?

 

பெண் கழுகு குச்சியொன்றை எடுத்து உயரமாகப் பறந்து வட்டமிட்டுக் கொண்டே இருக்கும். அதைச் சுற்றி சில ஆண் கழுகுகள் ஒன்று சேரும். 

அப்போது பெண் கழுகு குச்சியை கீழே வீசும். 

ஆண் கழுகுகளோ குச்சி தரையில் விழுவதற்கு முன்பே அதைப் பிடிக்க முயலும். அதில் ஒரு கழுகு குச்சியை எடுத்து வந்து பெண் கழுகிடம் ஒப்படைக்கும். 

ஆனால் பெண் கழுகு குச்சியை மீண்டும் மீண்டும் கீழே எறியும். எந்த ஆண் கழுகு சோர்வடையாது குச்சியை தொடர்ந்தும் எடுத்து வருகின்றதோ அந்த ஆண் கழுகைத்தான் தனது ஜோடியாக தேர்ந்தெடுக்கும்.

அது ஏன் அப்படி செய்கின்றது? நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.


பின்னர் இரண்டு கழுகுகளும் தங்கள் கூட்டினை உயரமான இடத்தில் அமைக்கும். பொதுவாக வலுவான, கரடுமுரடான கிளைகளிலிருந்து கூடு கட்டப்படும்.

ஆனால் பெண் கழுகு முட்டையிடுவதற்கு முன்பு இரண்டு கழுகுகளும் தங்கள் உடலில் மென்மையான இறகுகளைப் பிடுங்கி கூட்டை சூழ வைத்து விடும். காரணம் குஞ்சுகள் பொரிக்கும் போது கூடு மென்மையாகவும் சூடாகவும் இருக்கும்.  


குஞ்சு பொரித்த பிறகு இரண்டு கழுகுகளும் தங்கள் குஞ்சுகளை மழை,வெயிலில் இருந்து தங்கள் உடல் மற்றும் இறக்கைகளால் பாதுகாக்கும். குஞ்சுகள் வளரும் வரை உணவு கொண்டு வந்து கொடுக்கும்.


குஞ்சுகளின் இறகுகள் முழுமையாக வளர்ந்தவுடன் தந்தை கழுகு கூட்டின் விளிம்பில் அமர்ந்து, கூட்டை மூடியிருந்த அனைத்து இறகுகளையும் அகற்றிவிடும். அந்த வலுவான கரடுமுரடான கிளைகள் மட்டும் எஞ்சியிருக்கும்.


தாய் கழுகோ உணவு கொண்டுவர சென்று விடும். ஆனால் இந்த முறை எப்போதும் செய்தது போல் கூடுகளுக்கு உணவைக் கொண்டு வராது கூடு இருக்கும் இடத்தில் இருந்து சற்று தூரத்தில் நின்று தனியாக மிகவும் மெதுவாக சாப்பிடத் தொடங்கும். இது குஞ்சுகளின் பசியைத் தூண்டும். உடனே இளம் கழுகுகள் கூட்டில் இருந்து வெளியேறி பறந்து வர முயற்சிக்கும். ஆனால் குஞ்சுகளுக்கு பறக்க தெரியாததனால் கீழே விழுந்து விடும். இப்போதுதான் தந்தை கழுகின் வேலை வருகின்றது. கீழே விழும் குஞ்சுகளை தனது முதுகில் சுமந்து வந்து மீண்டும் கூட்டுக்குள் வைக்கும். மீண்டும் மீண்டும் குஞ்சுகள் தாயிடம் செல்ல முயற்சித்து கீழே விழும். தந்தை கழுகும் மீண்டும் மீண்டும் குஞ்சுகளை காப்பாற்றும்.


இவ்வாறுதான் சிறிய கழுகுகள் பறக்கக் கற்றுக் கொள்கின்றன.


இங்கிருந்து ஏன் பெண் கழுகு தன் குஞ்சுகளுக்காக தியாகம் செய்யும் ஆண் கழுகினை தந்தையாக தேர்வு செய்கின்றது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.

இதில் எமக்கு மிகப்பெரும் படிப்பினை உள்ளது.


பிள்ளைகள் வளர்ந்து வரும்போது அவர்களது வாழ்க்கையில் தைரியம், தன்னம்பிக்கை என்பவற்றை வழங்குவதுடன் சறுக்கி விழும்போதும், வழிதவறும் போதும் அவர்களை வழிப்படுத்தி ஆளாக்குவது தந்தையின் மீதுள்ள பாரிய பொறுப்பாகும்.


Dr Hayakirivan