السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 25 April 2016

ஸஹாபாக்கள் ஓதிய மௌலிதை வஹாபிகள் ஓத தயாரா?

ஸஹாபாக்கள் ஓதிய மௌலிதை வஹாபிகள் ஓத தயாரா?

ஸுப்ஹான மவ்லிது ஓதுவது (ஷிர்க் பித்அத்) என்றால், உத்தம ஸஹாபாக்கள் ஓதிய (மவ்லித்) கவி வரிகளை மாத்திரம் ஓதுவதற்க்கு வஹ்ஹாபிகள் தயாரா?
 மௌலித் ஓதுவது ஷிர்க் - பித்அத், மௌலித் கிதாபுகளில் வரம்பு மீரப்பட்ட ஷிர்க்கான கவி வரிகள் உள்ளன என்றெல்லாம் சில தந்திர வார்த்தைகளை உபயோகித்து மவ்லித் ஓதுவது கூடாது (ஷிர்க் பித்அத்) என்று கிருக்கு பிடித்தவர்களாக விமர்சிக்கும் வஹ்ஹாபிகளே! நீங்கள் குர்ஆன் ஹதீஸ்களை சரியாக விளங்காத மடயர்கள்.
அது ஒரு பக்கம் இருக்க ஒரு வாதத்திற்கு உங்கள் கருத்தின் பிரகாரம் ஸுப்ஹான மவ்லிது ஓதுவதை விட்டுவிட்டாலும் ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஸஹாபாக்கள் பாடிய கவி வரிகளை (மௌலித்) மாத்திரம் ஓத தயாரா? மேலே குறிப்பிட்டது போன்று ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களில் உள்ள மௌலித் கவி வரிகளை ஒரு கிதாபாக கோர்வை செய்து உங்கள் பள்ளிவாசல்களில் ஓத தயாரா?
 ஆகவே அல்குர்ஆனில் ' எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் (ஸஹாபாக்கள், இமாம்கள்) செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம் அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (அல்குர்ஆன் : 4:115)
 இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் : 9:100)
இறைவன் இந்த நீண்ட இரு வசனத்திலும் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றினால்தான் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிடைக்கும், சுவர்க்கம் கிடைக்கும், ஆகவே முழுமையாக மார்க்கம் குர்ஆன் ஆகும். அந்த குர்ஆனில் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முழுமை பெற்ற மார்க்கத்தில்தான் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் ஸஹாபாக்கள் பாடிய கவி வரிகளை (மௌலித்) மாத்திரம் ஓதுவதற்க்கு தயங்குவது ஏனோ.. !
 மேலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் 'உத்தம உயிர் தோழர்களை முழுமையாக பின்பற்றி நடப்பது நம் அனைவர்கள் மீது அவசியமாகும். ஏனெனில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'உங்களில் ஒருவர் நேர்வழியில் செல்ல நாடினால், உங்கள் முன் மரணமானவர்களின் பாதையில் செல்லுங்கள். உயிரோடுள்ளோர்கள் குழப்பத்தில் உள்ளாக்கப்படலாம். இறையடி சேர்ந்தவர்கள் எம் கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனிதத் தோழர்களாகும். அவர்கள் இந்தச் சமுதாயத்தின் சிரேஷ்ட மாணவர்களும் ஆழமான அறிவுகளையும் நல்ல மனப்பக்குவம் உள்ளவர்களாகவும் முற்றிலும் இக்லாஸ் உடையவர்களாகவும் காணப்பட்டனர்.
அல்லாஹ் அவர்களை அவனது ஹபீபின் தோழமைக்காகவும், அவனது மார்க்கத்தை நிலை நிறுத்தவும் தேர்ந்தெடுத்தான். அவர்களை உயர்ந்த நன்மக்களாக நம்புங்கள். அவர்கள் சென்ற வழியைப் பின் தொடருங்கள். முடியுமானவரை அவர்களது குணங்களையும் வாழ்க்கை நெறியையும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள் நேர்வழியிலேயே இருந்தார்கள்'.
ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: மிஷ்காத்

Tuesday 12 April 2016

அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் !!!!

அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் !!!!

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் !!!!
குத்புல் ஹிந் ஹழ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் !!!
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! 
முஸல்லியன்! வமுஸல்லிமா!!
வரலாற்றுச் சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில், பாரம்பரியமாக தொண்டு தொட்டு,ஒவ்வொரு வருடமும்,நடைபெற்று வரும் குத்புல் ஹிந் ஹழ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் இவ்வாண்டு,இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17 -04-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை ரஜப் பிறை 10-- 1437 அன்று மிக விமர்சையாக நடைபெற உள்ளது.என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்.வலமை போல் அஸர் தொழுகைக்குப் பின் மௌலிது ஷரீபும், மஃரிப் தொழுகைக்குப்பின் யா நபி பைத்து, யாசீன் மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில்
பாக்கவி ஹழ்ரத் கிப்லா ,மற்றும் துணை இமாம்களான,மௌலானா நூருல் அமீன் ஹழ்ரத்
மௌலானா நிஜாமுதீன் ஹழ்ரத் ஆகியோரின்,
சீரிய தலைமையில் நடைபெறும்.
மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,
அருளையும்,பெற்றுக்கொள்ளுங்கள்.வஸ்ஸலாம்....
வெளியீடு ;;- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.