السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 16 December 2014

எனது பெயர் ஜனாஸா!


நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.
என்னுடைய நெருங்கிய நண்பர்களும் என்னைச் சூழ்ந்து நின்றுகொண்டு என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று எனது மூச்சு பெரிதாக இழுத்தது. பெரும் மூச்சாக இழுத்து இழுத்து விட்டேன். எனது நிலைமை மோசமாவதைக் கண்ட சிலர் யாசீன் சூராவை ஓத ஆரம்பித்தனர்.
மூச்சு இப்பொழுது கொஞ்சம் இலேசானது. எனது கண்களைத் திறக்கிறேன். ஏதோ ஒன்றை எனது கண்கள் காண்கின்றன. ஆம்! வந்துவிட்டார். மரணத்தின் வானவரான மலக்குல் மவ்த் வந்துவிட்டார்.
நிரந்தரப் பயணத்தை நான் ஆரம்பிக்கப் போகிறேன். எனது வாய் திறந்தது. என் சகோதரன் சில துளிகள் தண்ணீரை எனது வாயில் ஊற்றுகிறான். அது அநேகமாக “ஜம் ஜம்” தண்ணீராக இருக்கும். மரணத் தறுவாயில் எனது வாயில் ஊற்ற வேண்டும் என்பதற்காக நான் அதனைப் பாதுகாத்து வைத்திருந்தேன்.
அனைவரும் “லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்று மொழிய ஆரம்பித்தனர். எனது பார்வை பறி போய் விட்டது. எனது நாடி நரம்புகளெல்லாம் அடங்கிப் போய் விட்டன. எனது உணர்வுகளும் மங்கி மரத்துப் போய் விட்டன.
ஆனால் என்னால் இப்பொழுதும் கேட்க மட்டும் முடிகிறது. என் அன்புக்குரியவர்கள் அழும் சப்தம் கேட்கிறது. நான் இன்னும் இறக்கவில்லை. ஆனால் உயிரற்ற ஜடமாக ஆகி விட்டேன்.
எனக்குள்ள நேரம் வந்தது. ஒரு நிமிடம் முந்தவும் இல்லை. பிந்தவும் இல்லை. காத்திருந்த மலக்குல் மவ்த் அவரது கடமையைச் செய்ய ஆரம்பித்தார். விசுக் என்று என் உயிரைப் பிடுங்கினார். என் உடல் சட்டென்று குலுங்கி அடங்கியது.
அவ்வளவுதான். எல்லாம் முடிந்து விட்டது. நான் இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டேன். என்னை வழியனுப்பி வைப்பதற்குள்ள ஏற்பாடுகள் ஆரம்பமாயின.
நான் மாடாய் உழைத்து சேர்த்த சொத்துகள், வங்கித் தொகைகள், அனுபவித்த விலை உயர்ந்த கார்கள், வாழ்நாள் முழுவதும் நான் சேகரித்த எனது தொடர்புகள் அனைத்தும் இனி எனக்கு எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை.
இனி எனது அடையாளம் என் கப்று மட்டும்தான். ஓ.... எனது பெயரும் மாற்றப்பட்டு விட்டது. என் பெற்றோர் பல நாட்கள் ஆலோசனை செய்து தேர்ந்தெடுத்த எனது பெயர், அவர்கள் வாயால் கூவிக் கூவி அழைத்து மகிழ்ந்த அந்தப் பெயர் மாற்றப்பட்டு விட்டது. இப்பொழுது எனது பெயர் ஜனாஸா!
அதாவது, இறந்த உடல்!
எனக்கு நெருங்கியவர்கள் எனது கப்றை வெட்டுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்கள். ஜனாஸாவை நீண்ட நேரம் வீட்டுக்குள் வைக்கக்கூடாதாம். அவர்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.
வீடு... என்னை இப்பொழுது நீண்ட நேரம் வைத்துக்கொள்ள அனுமதியில்லாத இந்த வீட்டை நான்தான் கட்டினேன். பல கனவுகளுடன் பார்த்துப் பார்த்து இலட்சக் கணக்கில் செலவு செய்து கட்டினேன்.
என்னைக் குளிப்பாட்ட ஏற்பாடு நடக்கிறது. நான் வீட்டுக்கு வெளியே குளிப்பாட்டுவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறேன். நான் பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில், நான் அழகுற கட்டிய குளியலறையில் எனக்கு குளிக்க அனுமதியில்லை.
குளியலறையை சொகுசாகப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்கி அங்கே பொருத்தினேன். அவையெல்லாம் இனி எனக்கு சொந்தமில்லை. இந்த நிலையில் எனக்குப் பயன்படாத இந்தப் பொருட்களை நான் ஏன் வாங்கினேன்?
குளிப்பாட்டி முடிந்தது. என்னை வெள்ளைத் துணியில் சுற்றினார்கள். விலையுயர்ந்த என் ஆடைகளெல்லாம் எங்கே போய் விட்டன?
என்னை சந்தூக்கில் வைத்தார்கள். எனது விலையுயர்ந்த ஏசி கார் ஒரு பக்கம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அது இப்பொழுது எனக்கில்லை. எனக்குக் கிடைத்திருப்பதெல்லாம் இந்த மரப் பெட்டிதான்!
இதற்குத்தானா நான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தேன்? இப்பொழுது எந்தப் பயனும் தராத இந்தப் பணத்தைச் சம்பாதிப்பதற்குத்தான் நான் எத்தனை பொய்கள் சொன்னேன்! எல்லாம் வீணாகப் போய் விட்டது. நான் என் வாழ்க்கையைத் தொலைத்து விட்டேன். எனது இறுதிப் பயணத்தை சுத்தமாக மறந்து வாழ்ந்தேன்.
ஆனால் அது உறுதியானது, மிக நெருங்கியது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் அதனை மறந்து உலக மாயையில் மூழ்கிப் போனேன். பாவங்களில் பழகிப் போனேன்.
ஆனால் இன்றோ... எனது விளையாட்டு முடிந்து விட்டது.
இது எனக்கு மட்டுமல்ல. உங்கள் எல்லோருக்கும்தான். நீங்கள் எல்லோரும் இதே நிலையை ஒரு நாள் அடையத்தான் போகிறீர்கள்.ஒரு நாள் உங்களுக்கு இந்த உலகம் ஒரு சிறிய கனவு போல் கலைந்து விடும். எனக்கு நேர்ந்தது போல் உங்களுக்கும் நடக்கும். உங்கள் உயிர்களும் ஒரு நாள் பிடுங்கப்படும்.
ஆதலால் தயாராக இருந்துகொள்ளுங்கள். நன்மைகளைக் கட்டி வைத்துக்கொள்ளுங்கள். அது ஒன்றுதான் உங்களுக்கு உதவும். உங்கள் இறுதிப் பயணத்தை இன்பமயமாக மாற்றும். மறுமை வாழ்வை மகிழ்ச்சிகரமாக மாற்றும்.
மரணத்தை.
எனது பெயர் ஜனாஸா!




Monday 24 November 2014

இஸ்லாத்தில் கல்வியின் மகிமை


மனிதனின் சிந்தனை சக்திக்கு உறுதுணையாய் அமைவது கல்வியறிவே. இக்கல்வியறிவு இஸ்லாத்தில் முக்கிய கடமைகளில் ஒன்றினைப் போல் மிக வலியுறுத்தப் படுகின்றது. அல்லாஹ் முதன்முதலில் மனிதனைப் படைத்துவிட்டு அவனுக்கு கல்வியறிவைப் புகட்டியதை அருள்மறை கூறுவதைக் காணுங்கள்.

(ஆதமைப் படைத்து) ஆதமுக்கு (பொருட்களின்) பெயர்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து பின்னர் அவற்றை வானவர்களிடம் எடுத்துக்காட்டி அவர்களிடம் நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்குத் தெரிவியுங்கள் என (அல்லாஹ்) கூறினான். (2:31). அல்லாஹ் ஆதமுக்கு பொருட்களின் பெயரைக் கற்றுக் கொடுத்துவிட்டு மலக்குகள் மூலம் இஸ்லாமிய ஒழுக்கமாண்புகளில் ஒன்றாகிய ஸலாத்தைக் கற்றுக் கொடுத்ததைக் கீழ் காணும் நபிமொழி உணர்த்துகிறது.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹூத்தஆலா ஆதம் (அலை) அவர்களைப் படைத்தபொழுது அவர்களுக்கு கூறினான்: ஆதமே நீர் சென்று அங்கு அமர்ந்திருக்கும் மலக்குகளின் கூட்டத்தார்க்கு ஸலாம் கூறுவீராக. அதற்குப்பதிலாக அம்மலக்குகள் உமக்கு வழங்கும் பதிலைச் செவிமடுப்பீராக. நிச்சயமாக அதுவே உமக்கும் உம் சந்ததியினர்க்குமுரிய பதிலா(ஸலாத்தின்)கும். அதன்படி ஆதம் (அலை) அம்மலக்குகளிடம் சென்று உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக எனக்கூற அதற்கு அம்மலக்குகள் அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மத்துல்லாஹி உங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அவனின் கருணையும் உண்டாவதாக என்று கூறினார்கள். வரஹ்மத்துல்லாஹி என்ற சொல்லைத் தம் பதிலில் மலக்குகள் அதிகப்படுத்தினார்கள். (புஹாரி: அபூஹூரைரா (ரலி).


குர்ஆனின் முதல் வஹிச் செய்தி : 
"நபி (ஸல்) அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா(ரலி) அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றார்கள்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்."அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னை விட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்து விட்டுவிட்டு, 'படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை 'அலக்'கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்' என்றார்." மேலும், ஆயிஷா (ரலி) கூறினார். பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரலி) விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள் 'அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்' என்றார்கள். (96:1-3) வசனங்களின் பினனணி. (புஹாரி: ஆயிஷா( ரலி) ஹதீஸ் எண்:3.)

வல்ல அல்லாஹ் படைப்பின் துவக்கத்தைக் கல்வியில் ஆரம்பித்தது போல் மனித வாழ்வின் ஒட்டுமொத்த அழிவு நாளாகிய கியாமநாளின் அடையாளமாகவும் கல்வியை ஆக்கியிருப்பதை கீழ்காணும் நபிமொழி உணர்த்துகிறது. கல்வி அகற்றப்பட்டு விடுவதும், அறியாமை மலிந்துவிடுவதும், விபசாரம் அதிகரித்து விடுவதும், மது அருந்துதல் அதிகரித்து விடுவதும், ஐம்பது பெண்களுக்கு - அவர்களை நிர்வகிக்க ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி :5231 அனஸ் (ரலி). இவ்வாறு கல்வியின் இன்றியமையாமை பற்றி இஸ்லாம் கூறுவதுபோல் எந்த மதமும் கூறவில்லை என அறியலாம். இஸ்லாமிய வரலாற்றில் முதல்போராகிய பத்ர் போர் இறை நிராகரிப்பாளர்களுக்கும் இறை விசுவாசிகளுக்கும் இடையில் நிகழ்ந்தது. இப்போரில் அல்லாஹ் இறை விசுவாசிகளுக்கு வெற்றியை நல்கினான். முஸ்லீம்களால் சிறை பிடிக்கப்பட்ட குறைஷிய முஷ்ரிக்குகள் கல்வியறிவு இல்லாத முஸ்லீம்களில் ஒரு பகுதியினர்க்கு கல்வி கற்பித்துவிட்டு தம்மை சிறையிலிருந்து விடுவித்துக்கொண்டு விடுதலை பெற்ற செய்தியை நபிமொழிகளில் நம்மால் காணமுடிகிறது.பகுத்தறிவுப் பாசறை இஸ்லாம்:- 
அல்லாஹ் ஆட்சி அதிகாரங்கள் வழங்கி கண்ணியப் படுத்திய ஒருவன் நன்றிகொன்றவனாக இறை விசுவாசி ஒருவரிடம் செய்த தர்க்கத்தையும் அவ்விசுவாசி வழங்கிய பகுத்தறிவுப் பூர்வமான பாங்கான பதிலை அருள்மறை அழகுடன் விவரிப்பதைப் பாருங்கள்.

அல்லாஹ் தனக்கு ஆட்சியைக் கொடுத்ததற்காக (நன்றி கொன்ற)அவன் அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீமிடம் அவரின் இரட்சகனைப் பற்றித் தர்க்கித்ததை (நபியே) நீர் பார்க்கவில்லையா?. அதுசமயம்; இப்ராஹீம் கூறினார்; "எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)" என்று. அதற்கவன், "நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்" என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; "திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில்உதிக்கும்படிச் செய்!" என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர்வழி காண்பிப்பதில்லை. (2:258).

விவாதம் புரிவதில் விசுவாசி காட்டவேண்டிய நிதானம் நளினம் பகுத்தறிவு மிளிரும் வினா இவை இங்கே நாம் படிப்பினை பெறும் விஷயங்கள். மார்க்கம் என்ற பெயரால் இன்று நிகழ்த்தப்படும் விவாதங்களில் வரைமுறை மீறி வாய்க்கு வந்ததை கூறிவிட்டு வார்த்தை தவறி கவனக்குறைவாக வந்து விட்டது எனச் சமாளிப்பது இவை இன்றைய நடைமுறைகள்.

அறிவியல் ரீதியாக: 
இன்றைய விஞ்ஞான உலகில் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் உலாவந்து கொண்டிருக்கும் வேளையில் பின்பற்றும் மார்க்கம் அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக முரணாக அமைந்து விடுமானால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எல்லா காலத்துக்கும் பொருந்தும் மார்க்கம் எனச் செய்யும் பிரகடனங்கள் பிசுபிசுத்துவிடும். இஸ்லாம்கூறும் எந்த ஒரு தீர்வும் அறிவியல் முடிவுகளுடன் பொருந்திப்போவது நம்மை பிரமிக்க வைக்கிறது. அறிவியல் தீர்வுகள் இஸ்லாமியச் சித்தாந்தத்துடன் முரண்பட்டால் அறிவியல் தீர்வுதான் மாற்றம் பெறுகிறது மறுபரிசீலனைக்குள்ளாகிறது என்பதை நாம் உணரவேண்டும்.அறிவியல் ரீதியாக அருள்மறை அன்றே கூறிய விஷயங்கள் இன்று உண்மைப் படுத்தப்பட்டதை ஓரிரு சான்றுகளில் காண்போம்.

சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லா கோள்களும் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (36:40)

கோளங்கள் விண்மீன்கள் நட்சத்திரங்கள் வான வெளியில் தத்தம் பாதைகளில் மிதந்து சுழன்று கொண்டிருப்பதை இன்றைய அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்து கூறுகின்றனர்.

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா. (55:19-20).

சங்கமிக்கும் இருகடல்களின் நீர் ஒன்றோடொன்று சேர்ந்து விட்டதுபோல் நம் கண்ணுக்குப் புலப்பட்டாலும் அவற்றின் சுவை நிறம் தன்மை அடர்த்தி ஆகியவற்றின் வேறுபாட்டால் அவ்விரு கடல்களின் இடையில் வெளிப்பார்வைக்குத் தெரியாத ஒரு மெல்லிய திரை உள்ளதை இன்றைய அறிவியல் தீர்வு உறுதிப் படுத்துகிறது. நபி மொழி ஒளியில் அறிவியல் விந்தைகளை அலசுவோமேயானால் உங்களில் எவருடைய பானத்திலாவது ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி :3320 அபூஹூரைரா (ரலி).)

இவ்வாறு அறிவியல் ரீதியிலான தீர்வுகள் இஸ்லாத்தின் கோட்பாடுகளில் ஒவ்வொன்றையும் இன்று உறுதிப் படுத்திக் கொண்டிருக்கின்றன.சிந்திப்பதில் தடையில்லை தீர்வு செய்வதில் வரையறை:-

இஸ்லாமியச் சித்தாந்தங்கள் சிந்திப்பதற்கு எப்பொழுதும் தடை விதித்ததேயில்லை. மாறாக சிந்தித்துப் பெரும் தீர்வில் வரையறை உள்ளது. அவைகளில் சிலவற்றை இங்கு ஆய்வு செய்வோம். அருள்மறை வசனம் கூறும் கூற்று இதோ: (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) "நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!" என்று நாம் கூறினோம். (21:69).

ஏகத்துவக் கருத்தை எடுத்துக்கூறிய இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் இணைவைப்பாளர்களால் நெருப்புக் கிடங்கில் வீசப்பட்டதும் அல்லாஹ் நபி இப்ராஹீம் (அலை) அவர்களப் பாதுகாக்க எரியும் நெருப்பின் சுடக்கூடிய தன்மையை மாற்றி அதனை இதமளித்து இடரிழைக்காத தன்மையை வழங்குவதாக அல்லாஹ் மாற்றும் நிலையை மேற் கூறிய வசனம் கூறுகிறது. இதனைச் சிந்தித்துப் பார்த்தால் நம் பகுத்தறிவு சுடும் நெருப்பு இதமளிக்குமா? என்ற வினாவுடன் ஏற்றுக் கொள்ள மறுக்கும். ஆனால் இத்தன்மையை மாற்றியதாக யார் கூறுகிறார்? என்று பார்த்தால் நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ் அந்நேரத்தில் சுடும் நெருப்புக்கு இட்ட உத்தரவு என்பதை விளங்கிக் கொண்டால் ஏற்றுக் கொள்வதில் எந்தசிரமும் இல்லை. மற்றொரு அருள்மறை வசனத்தின் கூற்று இதோ: உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்" என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலைபோன்று ஆகிவிட்டது. (26:63)

கைத்தடியால் கடலில் அடித்ததால் கடல் பிளந்து மலைபோல் குவிந்து நபி மூஸா (அலை) அவர்கள் தம்கூட்டத்தாருடன் அதனைக் கடந்து செல்ல வழிவிட்டது என்ற இவ்வசனத்தின் படியுள்ள செய்தியை நம் பகுத்தறிவு இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கும். ஆனால் கைத்தடியினால் கடலில் அடியுங்கள் என உத்திரவிட்டது அக்கடலைப் பிளந்து வழிவிட வைத்தது வல்லஅல்லாஹ்தான் என்பதைப் புரிந்து கொண்டால் பிரச்சினைக்கு இடம் இல்லாமல் ஆகிவிடுகின்றது. இதுபோன்று அருள்மறை ஒளியில் இன்னும் சில நிகழ்வுகளைக் காணலாம். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அறுத்துப் பலியிட தம் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அழைத்துச்சென்றது. நபி ஈஸா (அலை) அவர்கள் தந்தையின்றிப் பிறந்தது. இப்படி நிறைய நிகழ்வுகள் நம் பகுத்தறிவுக்கு அப்பற்பட்டதாக இருந்தாலும் இக்கூற்றை படைத்த அல்லாஹ் கூறுகிறான். ஆகவே அல்லாஹ் எப்படி நமக்கு கூறுகிறானோ அதை சிந்தித்த பின் அப்படியே ஏற்றுக் கொள்வது ஈமானிய உறுதியை மேலும் வலிமைப்படுத்தும்.

ஹதீஸ்களின் அடிப்படையில் சில நிகழ்வுகளை இனி அலசுவோம். உங்கள் மனதில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலோ அதைப்பற்றி அல்லாஹ் உங்களை விசாரிப்பான் (2:284) என்ற அருள்மறை வசனம் இறங்கிய போது நபித்தோழர்கள் இதனை மிகச் சிரமமாக எண்ணினர். எனவே நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் திருத்தூதரே எங்கள் மீது தொழுகை ஜிஹாது நோன்பு தர்மம் ஆகிய பணிகள் இயன்ற அளவு செய்ய பணிக்கப்பட்டதும் அதனை நாங்கள் செய்து வருகிறோம். இப்பொழுது தாங்கள் மீது இவ்வசனம் இறங்கியுள்ளது. இதனைச் செய்ய நாங்கள் சக்தி பெறவில்லை எனக்கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு முன்பு வேதங்கொடுக்கப்பட்ட இருசாரார் (யூத கிறிஸ்தவர்கள்) கூறியது போன்று நாங்கள் செவிமடுத்தோம் மாறுசெய்தோம் எனக்கூற நாடுகிறீர்களா?. அவ்வாறல்லாமல் நாங்கள் செவிமடுத்தோம் கட்டுப்பட்டோம் எனக்கூறுங்கள். எங்கள் இரட்சகனே உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம். உன்னிடமே எங்களின் மீட்சியுள்ளது என பிரார்த்தியுங்கள் எனக்கூற நபித்தோழர்கள் அவ்வாறே ஏற்றுக்கொண்டு பிரார்த்தித்ததும் அல்லாஹ் அருள்மறையின் இவ்வசனத்தை இறக்கினான்.

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286).

(முஸ்லீம்: அபூஹூரைரா (ரலி). இறைத்தூதர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன்படிச் செயல்பட இந்த ஹதீஸ் கூறுகிறது. மற்றொரு ஹதீஸ் ஹஜருல் அஸ்வத் கல் பற்றி கூறுவதைப் பாருங்கள். உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவதைக் கண்டேன். அவர்கள் அந்த (ஹஜருல் அஸ்வத்) கல்லை நோக்கி நீ ஒரு கல். உன்னால் எந்த பயனையும் தரமுடியாது. நீ எத்தகைய தொல்லையும் அளிக்க இயலாதது. உன்னை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் நான் உன்னை (ஒருபோதும்) முத்தமிட்டிருக்க மாட்டேன் எனக் கூறினார்கள். (புஹாரி முஸ்லீம் : ஹாஃபிஜ் பின் ரபீஆ (ரலி). இதுபோன்றே ஒளு எடுக்கத் தண்ணீர் இல்லாத போது செய்யும் தயம்மம் காற்று பிரிந்து விட்டால் அம்மறைவிடத்தை சுத்தம் செய்யாமல் முறிந்த ஒளுவை மீண்டும் செய்வது போன்ற சில அமல்கள் நமது பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் உத்தம திருநபி (ஸல்)அவர்கள் அவ்வாறு செய்து காட்டினார்கள் என்பதால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அமல் செய்வதே இறைப்பொருத்தத்தைப் பெற்றுத்தரும்.

பகுத்தறிவைப் பெறாத படைப்பினங்கள் பெற்றுள்ள சிறந்த அறிவு பகுத்தறிவு என்பது ஒரு காரியத்தைச் செய்யும்போது அது நமக்கு பயனளிக்குமா? தீங்கிழைக்குமா? என பிரித்துப் பார்த்து இம்மை மறுமை நலன்களை நாடிச் செய்தால் பகுத்தறிவில் நிறைய பலன்களுண்டு. ஆனால் பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன் அதனைத் தவறாக துஷ்பிரயோகம் செய்கிறான். மது மனிதனின் மதியை மயக்கி அவனை பிறர்கண்டு நகைக்கும்படி செய்துவிடும் என்ற முடிவை நன்கு தெரிந்திருந்தும் மது அருந்துகிறான். பிறர் பொருளைத் திருடுபவன் அமானித மோசடி செய்பவன் அதனை இழந்து தவிப்பவன் படும் அல்லல்களை நன்றாக அறிந்தே அத்திருட்டை மோசடியைச் செய்கிறான். இதுபோல பிற சமூக விரோதச் செயல்களான விபச்சாரம் வரதட்சணை என அடுக்கிக்கொண்டே போகலாம். இவையனைத்தும் பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன்தான் செய்கிறான். மறுமைப் பலனை அவன் மறந்தே விடுகிறான். ஆனால் வல்ல அல்லாஹ் பகுத்தறிவு கொடுக்காமல் மிகச் சிறந்த நுண்ணறிவு ஒன்றை மனித ஜின்கள் தவிர பிற படைப்பினங்களுக்கு வழங்கியிருப்பதை நடைமுறையும் நபிமொழியும் நமக்குணர்த்துவதைக் காண்போம். அண்மையில் இந்தோனேஷியா இலங்கை தமிழகத்தைத் தாக்கிய சுனாமி என்ற பேரழிவு அதன் பாதிப்புகள் பற்றி செய்தி ஊடகங்கள் விலாவாரியாகக் கூறின. அச்செய்திகளில் ஒன்று: சென்னை மெரீனா கடற்கரை ஓரம் அதிகாலையில் உடற்பயிற்சிக்காக ஓடிக் கொண்டிருந்த கால்நடை மருத்துவர் ஒருவர் அங்கே மிரண்டு ஓடிக்கொண்டிருந்த ஒரு மாட்டைப் பின் தொடர அம்மாடு ஓடி நின்ற இடத்திலிருந்து சற்று அருகாமை வரையில் சுனாமி அலைகளின் பேரழிவு தாக்கியிருப்பதைக் கண்ட அக்கால்நடை மருத்துவர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில் மாடு-வின் உதவியால் தாம் உயிர் பிழைத்ததாகக் கூறினார். சுனாமி அலைகள் நம்மைத் தாக்க வருகின்றது அதன் எல்லை இங்கு வரையுள்ளது என்ற நுண்ணறிவை வல்ல அல்லாஹ் ஒரு மாட்டுக்கு வழங்கியிருப்பதையும் மனிதன் பகுத்தறிவு பெற்றவன் பரிதாபமாகப் பாதிக்கப் பட்டதையும் செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம்.

அண்மையில் அண்டை நாடான பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பம் ஏற்படுத்திய மிகப்பெருஞ் சேதாரங்களை விவரித்துக் கூறிய செய்தி ஊடகங்கள் ஒரு ருசிகரமான வியத்தகு உண்மையொன்றை கூறத் தவறவில்லை. அச்செய்தி இதுதான்:

பாகிஸ்தானின் தலைநகராகிய இஸ்லாமாபாத்தில் நிலநடுக்கம் நடந்த அவ்விடத்தையொட்டிய மரங்களின் மீதிருந்த பறவைகள் நிலநடுக்கம் நடப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பு அங்கிருந்து கூட்டம் கூட்டமாக இடப்பெயர்ச்சி செய்ததை அரப் நியூஸ் ஆங்கில நாளேடு குறிப்பிட்டிருந்தது. பகுத்தறிவு பெற்ற மனிதன் பெறாத இந்த நுண்ணறிவை படைத்த ரப்புல் ஆலமீன் பறவைகளுக்கு வழங்கியிருப்பதைக் கண்டு கொள்ளவில்லையா?. இச்செய்திகளை உறுதிப் படுத்தும் ஒருநபிமொழியைப் பாருங்கள்:

"ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1314 அபூஸயீத் அல்குத்ரி (ரலி). மற்றொரு ஹதீஸின் பிரகாரம் : "ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1338 அனஸ் (ரலி). மற்றொரு அறிவிப்பில் மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது) 'மண்ணறை வாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர்' என்று கூறினர். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப் படவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! இரண்டு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி இப்படிச் சொன்னார்கள்) என்று அவர்களிடம் தெரிவித்தேன்.அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இருவரும் உண்மையே சொன்னார்கள். (மண்ணறையிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள். அந்த வேதனை(யால் அவதியுறும் அவர்களின் அலறல்)தனை எல்லா மிருகங்களும் செவியேற்கின்றன" என்றார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.(புஹாரி :6366 ஆயிஷா (ரலி).

அல்லாஹ்வின் நல்லடியார்களே வல்ல அல்லாஹ் அருள் மறையில் கூறிய படியும் உத்தம திரு நபி (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரங்களின் படியும் அதற்குறிய வரையரைக்குள் சிந்தித்து நல்லறங்கள் புரிந்து நமது இம்மை மறுமை வாழ்வைச் செம்மைப் படுத்த வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமீன்

Saturday 15 November 2014

அரபு கற்றுக் கொள்வோம் பகுதி 02



அரபு கற்றுக் கொள்வோம் பகுதி 01



Sunday 9 November 2014

விஞ்ஞானத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு

நோய் குணப்படும் மருத்துவக்கலை ஒரிரவில் உருவாக்கப்படவில்லை.அது ஆயிரம் ஆயிரம் பங்களிப்பாளர்களின் முயற்ச்சியின் விளைவாக உருவான உச்ச அடைவு மட்டமாகும். இம் முயற்சிகள் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே  ஆரம்பமாகிவிட்டன.இது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலை முறைக்கும் ஒரு நாகரிகத்திலிருந்த இன்னுமென்றுக்கும் கையளிக்கப்பட்டது.

இஸ்லாத்திற்கு முன்பிருந்தே வைத்திய முறை நடை முறையிலிருந்தது. மருத்துவத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் ஹிப்போக்கிரட்ஸ் போன்றவர்களால் மகத்தான பங்களிப்பாளர்கள் உருவாக்கப்பட்டார்கள். அவரின் பெயர் பரவலாகப் பிரபல்யமான சத்தியப்பிரமாணம் என்ற ஆவணத்துடன் தொடர்புபட்டிருந்து.அவரின் “அல்கமியோன் “என்ற நூல் கிரோக்க இலக்கியத்தின் ஆரம்பகர்த்தாவாக இருக்கக்கூடும்.

மூளைக்கும் புலன் அங்கங்களுக்கு மிடையேயுள்ள தொடர்புகளை விருத்தியாக்குதல் என்பதே அவரின் காத்திரமான பங்களிப்பாகும்.மனதின் அங்கமே மூளை,அது உணர்ச்சிகளை அறிவதற்கு மட்டுமல்லாமல்,
சிந்தனை,ஞாபகசக்தி என்பவற்றிக்குப் பொறுப்பானதாகும் உள்ளது. 

வரலாற்றில் அதிஉயர் விஞ்ஞானி,தத்துவஞானியாகக் கருதப்பட்ட அரிஸ் டொட்டில்,அல்கமியோன், உடன்பாடக் காணப்படவில்லை.அவர் உணர்ச்சிகளின் மையப்பகுதி மூளை அல்ல. இதயமே என நம்பினர்.

கி.பி 711 இல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்கு 80 வருடங்களின் பின்னர் முஸ்லிம்கள் ஜரோப்பாவை ஊடறுத்து ஸ்பெயின் அன்டலூசியாவை ஆட்சி புரிந்தனர். 

அங்கு அவர்கள்  700 வருடங்ககுக்கு மேலாகத் தங்கியிருந்தனர்.இஸ்லாமியப் பேரரசு மேற்கில் அத்திலாந்திக் சமூகத்திருந்து கிழக்கில் சீனாவின் எல்லை வரை வியாபித்திருந்தது. இஸ்லாத்தின் போதனைகள்,கற்றலின் முக்கியத்துவம், அழிவுகளைத்தடுத்தல்,தனியாள் சுகாதாரம்,சுத்தம் என்பவற்றை உக்கப்படுத்துதல் ஒழுக்கத்தைக் கண்ணியப்படுத்துதல் ஏனைய மதங்களுடனான தாராள மனப்பான்மை போன்ற விடயங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.

இஸ்லாமிய விஞ்ஞானமானது ஆரம்பித்ததிலிருந்தே பௌதிக சூழலை மட்டும் அடிப்படையாகக் கருதவில்லை.மாறாக தான் வாழும் சமூகத்தில் ஓர் ஆத்மீக வாதியாக மனிதனை கருதுகிறது.

முதலாம் நிலை
7ஆம் 9ஆம் நூற்றாண்டுகளுக்கிடையேயுள்ள முதல் நிலை
இது அந்நிய நூற்றாண்டுகளுக்கிடையேயுள்ள அரபியில் மொழி பெயர்க்கும் காலம்.முஸ்லிம் விஞ்ஞானிகள் பொதுவாகச் சிறப்பான நூல்களை பாதுகாத்து வைப்பதில் ஆர்வமுடையவர்களாகக்காணப்படுகின்றனர்.

இரண்டாம் நிலை
9 ஆம் 13 ஆம் நிலை நூற்றாண்டுகளுக்கிடையேயான இரண்டாம் நிலைமை. .இது முதலாவது நிலையில் பெற்றுக்கொண்டவற்றை கட்டியெழுப்பும் நிலை மருத்துவத்தில் புதிய அத்தியாயங்களை தோற்றுவித்த முன்னணித் தலைவர்களாகிய முஸ்லிம் மருத்துவர்களின் நேர்மையானதும் சிறப்பானதுமான பங்களிப்பைக்காட்டும் நிலை.இது ஐரோப்பாவிற்கும் உலகின் ஏனைய நாடுகளு்கும் அறிவை வழங்கிய காலம்

மூன்றாம் நிலை
13 ஆம் நூற்றாண்டிற்குப் பிந்திய நிலை - மருத்துவமும் ஏனைய விஞ்ஞானத்தின் கிளைகளும் பின் தங்கியதும் மந்தமானதுமான நிலை.இதுதான் மேற்குலகின் கை ஒங்கிய நிலை.

தொடரும்............

(By:அபு இஸ்ஸா )

விஞ்ஞானத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு


Monday 3 November 2014

விஷேட மார்க்க சொற்பொழிவு

இமாம் ஸெய்யிதுஷ் ஷூஹதா ஸெய்யிதுனா ஹூஸைன் ரழியல்லாஹூ அன்ஹூ அன்னவர்களின் மனாகிப் மஜ்லிசும் விஷேட மார்க்க சொற்பொழிவும்

இடம்  - புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அரபுக் கல்லூரி
காலம் – 04-11-2014 செய்வாய்க் கிழமை
நேரம் – காலை 10 மணி
தலைப்பு – பெருமானாரும் பேரர் ஹூஸைனின் பெறுமையும்
வளவாளர் – சங்கைக்குரிய மௌலவி அல் ஹாஜ் இப்றாஹீம் அஹ்மத் அஸீஸி ரப்பானி

அதிபர் அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அரபுக் கல்லூரி புத்தளம்

விஷேட மார்க்க சொற்பொழிவு


இமாமுனா ஹஸன் ஹுஸைன் றழியல்லாஹூ அன்ஹூமா மனாகிப் மஜ்லிஸ்

இன்று03-11-2014 இஷாஃ தொழுகையின்பின் கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாய அரபுக் கலாசாலையில் புனித முஹர்றம் ஆஷூரா தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஜாமிஆவில் இருக்கும் மனாருல் ஹூதா பள்ளிவாயலில் புனித ஹஸன் ஹூஸைன் மெளலீத் ஓதப்பட்டு விஷேட துஆ பிரார்தனையும் சிறப்பாகநடை பெற்றது.இந் நிகழ்வில்மாணவர்களும் உஸ்தாதுமார்களும் நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.



ஹஸன் ஹுஸைன் றழியல்லாஹூ அன்ஹூமா மனாகிப் மஜ்லிஸ்

ஹஸன் ஹுஸைன் றழியல்லாஹூ அன்ஹூமா மனாகிப் மஜ்லிஸ்

ஹஸன் ஹுஸைன் றழியல்லாஹூ அன்ஹூமா மனாகிப் மஜ்லிஸ்