السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 22 December 2018

புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இச்சிறுமிக்கு உதவிடுவோம்

புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இச்சிறுமிக்கு உதவிடுவோம்
ஏறாவூர் மிச்நகர் முதலாம் குறுக்கு ஆயுள்வேத வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த மிச்நகர் பாடசாலையில் இரண்டாம் தரம் கல்வி கற்கும் பாத்திமா அனா.கடந்த நாலு வருடமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சத்திர சிகிட்சை செய்து அக்கட்டியை நீக்கப்பட்டது. ஆனால் அதற்கருகில் இன்னும் ஒரு கட்டி உருவாகி மகரகம வைத்தியசாலையில் அனுமதித்து.
தற்சமையம் வீடு வந்துள்ள இச்சிறுமியை மட்டக்களப்புபோதனா வைத்தியசாலைக்கு மாதா மாதம் கிளினிக் போகும்படி கூறியுள்ளனர்.சாதாரண கூலி நாட்டாமைத் தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் தகப்பனால் இச்சிறுமியை மட்டக்களப்பு மற்றும் மகரகம வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு வசதியற்றவராகக் கானப்படுகின்றார்.
எனவே தாரல மனம் படைத்த கொடை வள்ளல்களிடமிருந்து உதவியை எதிர் பார்க்கின்றார்கள் இச்சிறுமியின் பெற்றோர்கள்.இதனுடன் சிறுமியின் தகப்பனின் மக்கள் வங்கி ஏறாவூர்க்கிளையின் நம்பர் உள்ளது தாரால மனம் படைத்த சகோதரர்கள் உதவலாம்..
இது சிறுமியின் தகப்பனின் மக்கள் வங்கி ஏறாவூர்க்கிளையின் நம்பர்.
Thahir aboobucker.
123200140046740.
people's bank.
Eravur.
விபரங்களுக்கு சிறுமியின் தகப்பனின் டெலிபோன் நம்பர் +94758520930.
ஆலோசனைக்கு அன்சார்_ (வட்சப்.ஐஎம்ஓ. +94770732853.)என்னுடன் தொடர்பு கொள்ள மெசஞ்சருக்கு வாங்க.

கல்லடி மரண வீட்டில் கைகலப்பு அடி தடி

கல்லடி மரண வீட்டில் கைகலப்பு அடி தடி


மட்டக்களப்பு கல்லடி மரண வீட்டில் கைகலப்பு அடி தடி தீ வைப்பில் முடிவு
__________________________________
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் மரண வீடு ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை 22/12/2018 திகதி இரவு எற்பட்ட மோதல் காரணமாக, ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியொன்றும் தீ வைக்கப்பட்டுள்ளது.
நேற்றிவு 8.30 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு அருகாமையிலே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மரண வீடு ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குழு ஒன்றுக்கும் அங்கிருந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தாக்கத்தின்போது ஒருவர்மீது பத்துக்கு மேற்பட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து குறித்த நபரின் முச்சக்கர வண்டியையும் இழுத்துச் சென்று வீதியில் போட்டு தீயிட்டு எரித்துள்ளனர்.
இதன்போது தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதே நேரம் அப்பகுதிக்கு சென்ற குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Friday 21 December 2018

மனித குணங்களும் பண்புகளும்

மனித குணங்களும் பண்புகளும்
மனித குணங்களும் பண்புகளும் ஆத்மீக பெட்டகமான மஸ்னவிலிருந்து
உண்மையைப் பேசு அல்லது மெளனமாக இருந்துவிடு. அப்போது இறையருள் பொழிவதை கவனி.அதனை வாரிக்கொள்.

தற்புகழ்ச்சி என்பது இறைவனின் அருளைத் தடுத்து விடுகிறது. இறைவனின் கருணையை அது அடியோடு விலக்கி விடுகிறது.

பேராசையும், துயரமும் நிறைந்த மனதின் வேதனையைக் கொண்டு மனிதனுக்குப் பணிவும், வறுமையுமே அமைதியை ஏற்படுத்துவதாக உள்ளது.
பேராசையின் காரணத்தினால் மனநிறைவின் முகத்தை காயப்படுத்திக் கொள்ளதே
ஆணவத்தின் காரணத்தால் பணிவின் முகத்தைக் கீறிக் கொள்ளாதே.
வாக்குறுதியையும், உறுதிமொழியையும் மீறுவது மூடத்தனமாகும்.
சத்தியத்தைக் காப்பதும்,அதை நிறைவேற்றுவதும் பயப்பக்தியுடையோரின் வேலையாகும்.
அறிவீனனிடமிருந்து பெறும் அன்பை விட ஞானியின் விரோதம் மேலானது.
அறிவீனம் எனும் நோய் இறைவனின் கோபத்திற்குரிய தண்டனையாகும்.
பேராசை என்பது குருட்டுத்தனமானது. அது தன்னுடைய குறைகளைப் பார்ப்பதில்லை.மாறாக அது அடுத்தவர்களின் ஒவ்வொரு மயிர்க்கால்களையும் பார்க்கிறது.
ஆண்மகனின் இச்சைகளும் , பேராசைகளும் முன்னேற்றப் பாதையில் இருக்கும்.
ஆண்மையற்றவர்களின் ஆசைகள் யாவும் இழிவுக்குரியதாகவும், கெட்ட நோக்கம் கொண்டதாயும் இருக்கம்.
ஆண்மகன்கள் அதாவது இறைப்பாதையில் ஈடுபட்டுள்ளவர்களின் பேராசைகள் யாவும் முன்னோக்கியதாகவும் இருக்கும.
ஆண்மையற்றவர்கள் அதாவது உலகியலைச் சார்ந்தவர்களின் ஆசைகள் யாவும் பின்னோக்கியதாகவே இருக்கும்.

தகுதியற்றவன் பொருளையும், பதவியையும் அடைய ஆசைப்படுவதென்பது அவதூறைத் தானாக சென்று அடைய விருப்பப்படுவதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; அறிவாளி என்பவன் இறைவனை அறிந்து கொண்டவனும், இறைவனின் பக்கம் அழைத்து செல்பவனும் ஆவான்.
அறிவீனன் அதாவது முட்டாளாக இருப்பவன் உலகமே நிலையானதென்று எண்ணி அதிலேயே மூழ்கிக் கிடப்பவன்.
சகிப்பும், புரிதலும், பாதுகாப்பும், ஞாபகச்சக்தியும் அறிவுக்குள்ளே தான் உண்டு. ஏனெனில் அறிவு அதனை உயர்த்தி உள்ளது.
சோர்வு, கருமிதனம், தன்னலம் மற்றும் அகங்காரத்தின் காரணத்தினால் நீ கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றாய். உன்னை நீயே தலைவனாக்கிக் கொற்கிறாய்.
வன்மம் பாராட்டாதே, வன்மத்தின் காரணத்தினாலேயே மக்கள் வழிதவறிச் சென்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் புதைக்குழியும் வன்மம் பாராட்டுபவர்களின் பக்கத்திலேயே அமைக்கப்படும். அதாவது நயவஞ்சக உள்ளம் கொண்டவர்களை புதைகுழியும் விலக்கி வைக்கப்படுகின்றது.
உள்ளப்பகைமையின் விளைவு நரகமே ஆகும். உன்னுடை இந்த வன்மமானது நரகத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு பிரிவே தான்.எனவே நரகத்தை விட்டுத் தப்ப வேண்டுமானால் முதலில் இந்த வன்மத்தை விட்டுத் தப்புங்கள்.இதுவே உங்கள் மார்க்கத்திற்கும் எதிரியாகும்.
நயவஞ்சகனின் நாவிலோ இறைவனின் திருப்பெயர்கள் ஓடிக்கொண்டிருக்கும்.ஆனால் ஆன்மாவிலோ இறைமறுப்பின் அசுத்தங்கள் படிந்திருக்கும் .அதில் இறைவிசுவாசத்தின் ஒரு சிறு அறிகுறியும் தென்படாது.
அந்த நயவஞ்சகனின் இறைதியானமானது குப்பையிலே பிறக்கும் பசுமையைப் போன்றது. மலம் கழிக்கும் இடத்திலே பூக்கின்ற அல்லிப்பூ மற்றும் மலர்களைப் போன்றது.
தந்திரத்தாலும், தகாத திறனாலும் அபகரிக்கப்பட்ட பொன்னும் பொருளும் இறுதி தீர்ப்பு நாளன்று அவனத் கழுத்துக்கே சுமையாகி நிற்க்கும்.
புகழும் பெருமையும் பெறுவதற்கு அவமானத்தையும் ஏற்றுக்கொள்ள முன் வருகின்றனர்.பெருமையை அடையும் நம்பிக்கையில் இழிநிலையில் அகமகிழ்நதுள்ளனர்.
மனநிறைவைக் கொண்டதால் யாரும் இதுவரை இறந்ததில்லை. பேராசைக் கொள்வதால் யாரும் இதுவரை அரசப்பதவியை அடைந்ததில்லை.
சந்தேகம் கொள்பவன் எப்போதும் தீயவனாகவே இருப்பான்.
பயனற்ற ஆசைகளினால் துன்பங்களே உருவடைகின்றன. ஷைத்தானுக்கு அடிபணிந்து மனிதன் அதனைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளான்.
நீ மனங்களிலே கோபத்தின் நெருப்பை மூட்டி விட்டாய். அதுவே நரக நெருப்பின் மூலதனமாகி விட்டது.
இங்கே உனது நெருப்பு (கோபம்) மனிதர்களை எரித்து விடுவதாக இருந்தது.
அதே போல அங்கேயும் அந்த நெருப்பு உன்னை எரித்து விடுவதாக அமைந்திடும்.
கோபத்தை அடக்குவது எப்படியெனில் கோபத்தை வெளியிடக்கூடாது.அப்போது தான் அதற்கு பதிலாக இனிமையான விஷயங்கள் வெளிவரும்.
இங்கே உன்னுடைய பேச்சுக்கள் பாம்பாகவும் தேளாகவும் கொட்டுகிறது.
அங்கே அதே பேச்சுக்கள் பாம்பாகவும், தேளாகவும் மாறி உன் குரள்வளையைத் திருகிவிடும்.
உணவை உட்கோள்வதால் எப்போதும் பெறாமையும்,சூழ்ச்சியும்,அறிவீனமும்,அலட்சிய மனப்பான்மையும் ஏற்படுகிறது என்றால் அந்த உணவு ஹராமான உணவென்று கருது.
ஏனெனில் ஹலாலான உணவால் தீயகுணங்கள் பிறப்பதில்லை.
பசி என்பது இறைவனுக்கு மிக நெருங்கியவர்களின் உணவாகும்.
தியாகமும்,ஈகைத்தனமும் உன் கரங்களால் விளைந்தெழும்போது அதே கைகளால் அவன் பேரீச்சப்பழ மரங்களை மறுமையிலே விதைக்கிறான்.
உனது பொறுமையின் தண்ணீர் சொர்க்க ஓடையின் தண்ணீராகும்.சுவனத்திலே பாய்ந்தோடும் பாலானது உனது அன்பும் நட்புமாகும்.
சகோதரரே பொறுமையினைக் கடைபிடியுங்கள் ,பொறுமையே பொக்கிஷம்.ஆதலால் பழைய கவலைகளெல்லாம் தீர்ந்து விடக்கூடும்.
பொறுமை தெளிவு ஏற்படுவதற்கு சாவியாகும்.
பொறுமை கசப்பானது.ஆனால் அதன் கனி மிகவும் இனிமையானது. பொறுமை என்பது எல்லா வித இகசியங்களையும் திறக்கக்கூடிய வழிகாட்டியாகும்.
அல்லாஹுத்தஆலா நேர்மையாளர்களை நன்னெறிகளின் பக்கம் இழுக்கிறான்.
தீயவையான வழிகள் தீயவர்களை தன் பக்கம் இழுக்கிற

அதிர்ச்சி தகவல்

அதிர்ச்சி தகவல்

சிறுவர்களை இலக்கு வைத்த போதை கலந்த இனிப்புகள் பொலிஸாரால் மீட்பு
By கலைச்செல்வி On Dec 21, 2018

வவுனியா – ஓமந்தை பொலிஸாரினால் போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதி கைப்பற்ற பட்டுள்ளதுடன் அதனை கொண்டு சென்ற ஒருவரும் வாகனமொன்றும் கைப்பற்ற பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னான்டோவின் வழிநடத்தலில் கீழ் நேற்று மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் கண்காணிப்பில், பொலிஸ் அத்தியட்சகர் ஜெனத் பொன்சேகாவின் வழிகாட்டலில் ஓமந்தை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த சேனாநாயக்கவின் தலைமையிலான பொலிஸ் சார்ஜன் இலங்க ரட்ண, வன்னிநாயக்க மற்றும் சமிந்த ஆகியோர் குறித்த சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
சோதனையின் போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதை கலக்கப்பட்ட பல்வேறு வகையிலான சுமார் 7 ஆயிரம் இனிப்பு பண்டங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் வரக்காபொலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அதிர்ச்சி தகவல்




Wednesday 19 December 2018

மவ்லீத் நிகழ்வும் மார்க்க உபன்னியாசமும்

மவ்லீத் நிகழ்வும் மார்க்க உபன்னியாசமும்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரகாதுஹ_

ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு குவலயம் போற்றும் குத்புல் அக்தாப் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹ_ அன்ஹ_ அவர்களின் நினைவாக ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்திருக்கும் முஹ்யித்தீன் ஜூம்ஆ பள்ளி வாயலில் 12 நாட்களாக தொடர்ந்து ஓதி வந்த புனித மவ்லீத் மஜ்லிஸ் எதிர்வரும் 20-12-2018 வியாழன் விசேட துஆ பிரார்தனையுடன் நிறைவு பெறும்

இடம் :   ஏறாவூர் பிராதான வீதி முஹ்யித்தீன் ஜூம்ஆ மஸ்ஜித்
நேரம் :  மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து புனித மவ்லீத் மஜ்லிஸ் 
        இஷா தொழுகையினைத் தொடர்ந்து மார்க்க உபன்னியாசம்
        நடத்துபவர் சங்கைக்குரிய மௌலவி எம்.எம் அன்வர் மன்பயீ  
        பாசில் தகாபி சிரேஷ்ட விரிவுரையாளர் அல்ஜாமிஅத்துல்  
        கௌதிய்யாஹ் அரபிக் கல்லூரி கொழும்பு

ஆகவே இந்நிகழ்வுக்கு அனைத்து சகோதரர்களும் தவறாமல் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.


மவ்லீத் நிகழ்வும் மார்க்க உபன்னியாசமும்




Saturday 15 December 2018

world master championship

தாய்லாந்த்_பேங்கொக் இல்_கடந்த #சனி மற்றும் ஞாயிறு இடம்பெற்ற world master championship போட்டிக்கு உலகின் பல்வேறு திசைகளில் இருந்து பல வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதில் எமது ஊரைச் சேர்ந்த ஓட்ட நாயகன் நசீர் அவர்களும் 100 M  200 M போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு கடினமான சந்தர்ப்பங்களுக்கு மத்தியிலும் 200 M போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகினார். அல்ஹம்துலில்லாஹ். அப்போட்டியிலும் தனது முழு உழைப்பையும் செலவழித்து 6ம் இடத்தை பெற்றதோடு. அடுத்தவருடம் சிங்கப்பூரில் நடக்க இருக்கும் World Master Champion Ship கு நேரடியாக தெரிவாகியுள்ளார். (02/05/2019)அல்ஹம்துலில்லாஹ்.

இன்சா அல்லாஹ் அவரை கழகம் சார்பாக வாழ்த்துவதோடு அடுத்த வருடம் நடக்க இருக்கும் போட்டியில் இதை விட ஒரு நல்ல நிலையை பெற இறைவனை பிரார்த்திக்கிறோம்

Sounders Evr


world master championship

ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் அல் குர்ஆன் மத்ரஸா

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் புது முகப்பாடதிட்டத்துடன் ஆரம்பமானது அல் குர்ஆன் மத்ரஸா 🌷🌷14.12.2018 வெள்ளிக்கிழமை நடைபெற்ற அல் குர்ஆன் மத்ரஸா அங்குரார்ப்பண நிகழ்வு 


ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில்  அல் குர்ஆன் மத்ரஸா

ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில்  அல் குர்ஆன் மத்ரஸா

ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில்  அல் குர்ஆன் மத்ரஸா


ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில்  அல் குர்ஆன் மத்ரஸா

ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில்  அல் குர்ஆன் மத்ரஸா

ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில்  அல் குர்ஆன் மத்ரஸா

போதை ஒழிப்பு கர்த்தரங்கு


எங்களது மீரூர் நலன்புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட போதை ஒழிப்பு கர்த்தரங்குக்கு குறுகிய அழைப்பினை ஏற்று 12/12/2018 meerakerny
வருகை தந்து சிறப்புரைகளாற்றிய அனைத்து அதீதிகளுக்கும் ,அழைக்க மறந்தும் பெருமனதுடன் வருகை தந்த சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ...





போதை ஒழிப்பு கர்த்தரங்கு

போதை ஒழிப்பு கர்த்தரங்கு

போதை ஒழிப்பு கர்த்தரங்கு

போதை ஒழிப்பு கர்த்தரங்கு

போதை ஒழிப்பு கர்த்தரங்கு

Ali Bin Ali கம்பெனியின் சில வேலை வாய்ப்பு

கத்தார் தோஹாவில் The Mall அருகில் (15-Dec-2018) இன்று நடைபெற்ற Ali Bin Ali கம்பெனியின் சில வேலை வாய்ப்புக்காக Regency நிலைய ஆட்சேர்ப்பு திறந்த வெளி நேர்முக தேர்வுக்கு முண்டியடித்து நிற்கும் 4000 + ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் ,
இதில் அதிகமானவர்கள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களே #free viza என்ற பெயரில் எந்த வித தொழில் உத்தரவாதமும் இன்றி வேலைவாய்ப்பு தேடி வரும் எமது நாட்டு சகோதர்ர்களே இது உங்கள் பார்வைக்காக !
தொழில் வாய்ப்பு சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சிக்கலின் தன்மைகளை நன்றாக புரிந்து உங்களின் காலத்தையும் பணத்தையும் விரய 
மாக்காமல் செயல்படுங்கள் !



Ali Bin Ali கம்பெனியின் சில வேலை வாய்ப்பு

Ali Bin Ali கம்பெனியின் சில வேலை வாய்ப்பு




Ali Bin Ali கம்பெனியின் சில வேலை வாய்ப்பு

இறுதியாண்டு பெறுபேற்று அறிக்கை வழங்களும் மாணவர்_விடுமுறை_விடுகையும்

இறுதியாண்டு பெறுபேற்று அறிக்கை வழங்களும் மாணவர்_விடுமுறை_விடுகையும்

இறுதியாண்டு பெறுபேற்று அறிக்கை வழங்களும் மாணவர்_விடுமுறை_விடுகையும்

இறுதியாண்டு பெறுபேற்று அறிக்கை வழங்களும் மாணவர்_விடுமுறை_விடுகையும்

இறுதியாண்டு பெறுபேற்று அறிக்கை வழங்களும் மாணவர்_விடுமுறை_விடுகையும்


ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபிக்கல்லூரியின் இவ்வாண்டுக்கான இறுதியாண்டு பரீட்சை பெறுபேற்று அறிக்கை வழங்கும் நிகழ்வும் மாணவர் விடுமுறை விடும் நிகழ்வும் இன்று காலை கல்லூரியின் ஷாஹுல் ஹமீத்&பத்ருன்னிஸா வரவேற்பு மண்பத்தில் கல்லூரியின் அதிபர் ஷங்கைமிகு அல்உஸ்தாத். P MA  ஜலீல் (பாக்கவி) ஹழரத் பெருந்தகை அன்னவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் எமது கலாபீடம் ஜனவரி 1ம் திகதி ஆரம்பிக்கப்படும்.இம்முறை அதிகளவான மாணவர்கள் மாணவர் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு தோற்றி இருந்த போதிலும் தேர்வு அடிப்படையில் குறிப்பிட்ட அளவான மாணவர்களை மாத்திரமே கல்லூரி உள்வாங்கி இருக்கிறது. மிக சிறப்பான உலமாக்களை கொண்டு சிறப்பான மார்க்க கல்வியை வழங்கி வரும் எமது ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபிக்கல்லூரி மென்மேலும் உயர் நிலையை அடைய வல்ல இறைவன் துனை புரிவானாக!!!

Wednesday 12 December 2018

ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?

ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?

ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?"

விளக்கம்:

பகுத்தறிவுள்ள மனிதன் மட்டும்தான் மற்றொருவரிடம் முறையிட முடியும்,பகுத்தறிவில்லாத ஷரீஅத் எப்படி முறையிடும் என்பது அவரது சந்தேகம்.

பகுத்தறிவில்லாத பேரிச்ச மரமட்டை கண்மணி நாயகம்صل الله عليه وسلم அவர்களிடம் முறையிட்டது. பகுத்தறிவில்லாத குடும்ப உறவு அல்லாஹ்விடம் முறையிட்டது.
ஸஹுஹான ஹதீஸ்களில் வந்த செய்தி கள் இவை.

ஜாபிர் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நபி صلى الله عليه وسلم அவர்கள் நின்று குத்பா ஓதிய ஒரு பேரிச்ச மரத்தின் அடித்தூண் இருந்தது புதிய மிம்பர் வைக்கப்பட்ட போது.(கர்ப்பிணி ஒட்டகைகளிலிருந்து வெளிப்படுவது போன்ற) அழுகுரலை நாங்கள் அந்தப்பேரீச்சைத் தூணிலிருந்து கேட்டோம்.அப்போது நபிصل الله عليه وسلم அவர்கள் இறங்கி வந்து தமது கையை அதன் மீது வைத்தார்கள்
(புஹாரி,எண்:918)

அபூ ஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹுத்தஆலா படைப்புகளைப் படைத்து முடித்த போது குடும்பம் உறவு எழுந்தது.'என் உறவை விட்டும் விலகிவிடுவதைப் பற்றி உன்னிடம் காவல் தேடும் நேரம் இது என்றது.
'உன்னை இணைத்தவர்களை நானும் இணைப்பதும்,உன்னைத் துண்டித்தவர்களை நானும் துண்டிப்பதும் உனக்கு திருப்தி தானே!
என்று அல்லாஹ் பதிலுரைத்தான்"
(பஹாரி,எண் 5987).

பகுத்தறிவில்லாத பேரீத்த மரக்கட்டையும்,குடும்ப உறவும் முறையிடும் போது அறிவுகளின் சங்கமமான ஷரீஅத் முறையிடுவதில் என்ன ஆச்சரியம்?
தான் கேட்டும்; அறிந்தும் மட்டும்தான் உண்மை என்ற இறுமாப்பினால் வந்த வினைதான் இவை போன்ற விமர்சனங்கள்


ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?

Thursday 6 December 2018

DR . அஹமட் ஹமாட் அலி ஜிலான்

DR . அஹமட் ஹமாட் அலி ஜிலான்

சஊதி அரேபியாவினுடைய இஸ்லாமிய விவகார உள்நாட்டலுவல்கள் அமைச்சினுடைய சிரேஷ்ட ஆலோசகரும் ராபிததுல் ஆலமி அல் இஸ்லாமினுடைய சிரேஷ்ட ஆலோசகருமாகிய DR . அஹமட் ஹமாட் அலி ஜிலான் அவரும் அமைச்சின் சிரேஷ்ட உத்தியோகத்தரும் இன்று ராபிததுல் ஆலமி இஸ்லாமியினுடைய உயர் பீட உறுப்பினர் ,பாராளுமன்ற உறுப்பினர் DR.MLAM ஹிஸ்புழ்ழாஹ் MA அவர்களை இன்று அவர்களின் இல்லத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார்கள் .
ராபிதாவினுடைய எதிர்கால செயற்பாடுகள், முஸ்லிம் கலாசார அமைச்சையும் ராபிதாவையும் இனைத்து எதிர்காலத்திலே பல் வேறுபட்ட அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது , இஸ்லாமிய விவகார உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கும், இலங்கை முஸ்லிம் கலாசார அமைச்சுக்கும் இடையிலான உடன்பாடுகளை மேற்கொள்வது போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக இன்று நீண்ட நேரம் ஆராயப்பட்டது
அது தொடர்பான உடன்படிக்ககைகளை தயார் செய்வது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது .ராபிதாவினுடயை இலங்கையில் கிளை திறப்பது, பலப்படுத்துவது அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இவர்கள் கலந்துரையாடினார்கள் .
இவர்களுடன் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மொளலான அவர்களும் கலந்து கொண்டார்.


தொலைபேசியைப் பயன்படுத்திய பரீட்சார்த்தி கைது



தொலைபேசியைப் பயன்படுத்திய பரீட்சார்த்தி கைது


பலாங்கொட ஜெய்லானில் தொலைபேசியைப் பயன்படுத்திய பரீட்சார்த்தி கைது
December 7, 2018 
நாடளாவிய ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நேற்று (06) ஆங்கிலப் பாடத்தில் தொலைபேசியைப் பயன்படுத்தி பரீட்சை வினாக்களுக்கு விடை எழுத முற்பட்ட பரீட்சார்த்தியொருவர் பலாங்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொட ஜெய்லான் வித்தியால பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைபேசியையொன்றை இரு பாதங்களுக்கும் இடையில் வைத்துக் கொண்டு அதற்கு வரும் எஸ்.எம்.எஸ். தகவல்களை வைத்து விடை எழுதிக் கொண்டிருக்கையில் குறித்த மாணவன் பிடிபட்டுள்ளான்.
பிரத்தியேக வகுப்பு நடாத்தும் ஆசிரியர் ஒருவரின் உதவியுடனேயே இம்மாணவன் பரீட்சை எழுதியுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன. இவர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலாங்கொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பலாங்கொட தெபெலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (டெ/சி)

நீங்களும்_பட்டதாரியாகலாம்.

நீங்களும்_பட்டதாரியாகலாம்.

க.பொ.த உயர்தரத்தில் 3 பாடங்களிலும் சித்தியடையாதவர்கள் இலங்கை அரச பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பொன்றினை பெற்றுக்கொள்ள மிக அரிய வாய்ப்பு. ”தொழிலுரிமைத்துவமும் சிறுவியாபார முகாமைத்துவமும்” உயர்தர கற்கை நெறியினை பூர்த்தி செய்பவர்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கற்கைகள் இளமானி (Bachelor of Management Studies) கலை இளமானி சமூக விஞ்ஞானம் (Bachelor of Arts in Social Sciences) சட்டமானி (LLB) ஆகியவற்றுடன் வேறும் பல இளமானி கற்கைகள் கற்க தகுதி பெறுகிறீர்கள். ஆகவே க.பொ.த உயர்தரம் சித்தியடைய தவறி விட்டவர்கள் இனிமேல் உயர்கல்விக்கு வழியில்லை என் சிந்திக்காமல் இலங்கையில் உள்ள 15 அரச பல்கலைக்கங்களில் ஒன்றான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் உள்வாரி மாணவராக தெரிவாகி ஒரு சிறந்த பட்டதாரியாக வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள். (இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் ஒவ்வொரு மாணவருக்கும் அவர் செலவிடும் தொகையிலும் பார்க்க இருமடங்கு தொகையினை அரசாங்கம் மாணவருக்காக செலவிடுகிறது. எனவே மிகக்குறைந்த கட்டணத்தில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் 0212290868 மற்றும் 0772898275

صادق

பள்ளிவாசல் கட்டுமாணம்

பள்ளிவாசல் கட்டுமாணம்

விஷேட ஜூம்ஆ பயானும் -பள்ளிவாசல் கட்டுமாணம் மற்றும் மையவாடி உள்ளக வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வும்

ஏறாவூரில் பாரிய இடப்பற்றாக்குறையுடன் அடிப்படை வசதிகள் குன்றிய நிலையில் இயங்கி வரும் பள்ளிவாசல்களில் ஒன்றாக ஏறாவூர் வாளியப்பா தைக்கா ஜும்ஆ பள்ளிவசல் இருக்கின்றது, மழை காலம் வந்து விட்டால் பல்வேறு அளெகரியங்களை தொழுகைக்காக செல்லும் ஜமாஅத்தார்கள் எதிர்கொண்டு வந்தார்கள்..
இந்நிலையில் இந்த பள்ளிவாசலை எப்படியாவது நிர்மாணித்து விட வேண்டும் என்பதற்காக விஷேட நம்பிக்கையாளர் சபை தலைவர் ஜே.எம்.முஸ்தபா , மற்றும் செயலாளர் நியாஸ் ஆகியோர் அடங்கலான நிருவாக சபை உறுப்பினர்களும் ஜமாஅத்தார்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்,
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் நேரத்தின் போது அரசியல்வாதிகளது தேர்தல் ஏமாற்று ஜாலத்திற்கும் இந்த பள்ளிவாசலும் தப்பவில்லை- வெறும் வாக்குறுதியாகவே அது காற்றில் பறந்து போனது,
சளைத்து விடாத நிர்வாகத்தினர் சமூக வலைத்தளங்கள் ஊடாக உதவி கோரி தமது உதவி கோரும் முயற்சியை தொடர்ந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்
முயற்சிக்கான முதற்கட்ட கதவு பல்வேறு தனவந்தர்களின் பங்களிப்புடன் தற்போது திறந்துள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர் அஷ் ஷேய்க் #யூசுப்#ஹனிபா (முப்தி) அவர்களது ஜும்ஆவை தொடர்ந்து மிகவும் அவசியமான கட்டட தேவை உள்ள இடமாக உணரப்பட்டு முயற்சிக்கப்பட்டு வந்த ஏறாவூர் வாளியப்பா தைக்கா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் வரலாற்று நிகழ்வும் நடைபெற உள்ளதுடன் அணனை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் #செய்யித்#அலி #ஸாஹிர் #மௌலானா அவர்களினால் வாளியப்பா தைக்கா பள்ளிவாசல் மையவாடிக்கு உள்ள வீதி அமைப்பதற்காக 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைகளும் இன்று அலி சாஹிர் மௌலானா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.
குறித்த நிகழ்விலும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது


இது உலக அழிவின் அடையாளங்களில் ஒன்று


இது உலக அழிவின் அடையாளங்களில் ஒன்று.

பள்ளிவாயில்" என்றால் அது இரு வகைப்படும்.
ஒன்று: மஸ்ஜிதுத் தக்வா. இது அடியார்களை அல்லாஹ்வுடன் இணைத்து வைப்பதற்கான பாலமாக நிராமாணிக்கப்படும் பள்ளியாகும்.
இரண்டு: மஸ்ஜிதுத் ழிரார். இது அடியார்களை அல்லாஹ்வை விட்டும் பிரிப்பதற்காக நிர்மாணிக்கப்படும் பள்ளியாகும்.
இவ்விரு பள்ளிவாயில்களில் முதலாவது பள்ளிவாயில் அல்லாஹ்வின் தூதர்களினாலும் அவனின் அதிகாரிகளான அவ்லியாக்களினாலும் அமைக்கப்படும் பள்ளியாகும். முஸ்லிம்களை ஒன்றிணைப்பதற்கான பள்ளியாகும்.
நபிமார்கள் மற்றும் வலிமார்கள் அல்லாஹ்வுடன் அடியார்களை இணைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் ஈருலகிலும் பள்ளியோடு தமது இருப்பை அமைத்துக் கொண்டார்கள்.
இரண்டாவது பள்ளிவாயில் முனாபிகீன்களினால் உருவாக்கப்பட்ட பள்ளியாகும். முஸ்லிம்களைப் பிரிப்பதற்கான பள்ளியாகும். இப்பள்ளிக்கும் நபிமார் மற்றும் வலிமார்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்காது. அதனால் நபிமார் மற்றும் வலிமார்கள் ஈருலகிலும் இவ்விடத்தை விட்டும் தூரமானவர்கள்.
இதில் முதலாவது பள்ளி பாதகாக்கப்பட்டு பராமரிக்கப்படும் அதேவேளை இரண்டாவது பள்ளி தகர்க்கப்படவும் வேண்டும். ஆனாலும் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய பள்ளிகள் பாழடைந்தும் உடைக்கப்பட வேண்டிய தளங்கள் உயரமாகவும் கட்டப்படுகிறது.
இது உலக அழிவின் அடையாளம்.

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

இலங்கையின் பிரபல சமூக சேவை அமைப்பாக திகழும் ஸம் ஸம் பௌன்டேசன் உடன் இணைந்து தாருல்ஹூதா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் 2000 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஏறாவூர் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள மாஞ்சோலை மணி மண்டபத்தில் நடைபெற உள்ளது.
ஸம் ஸம் பென்டேசன் நிறுவனத்தினால் வறிய மாணவர்களது கற்றல் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு School With a Smile எனும் செயற்திட்டம் நாடுபூராகவும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது,
அந்த வகையில் ஏறாவூர் பிரதேசத்தை மையப்படுத்தி ஸம்ஸம் பென்டேசன் நிறுவனமும்,தாருல் ஹூதா நலன்புரி அமைப்பும் இணைந்து 2000 சிங்கள , தமிழ் , முஸ்லிம் மாணவர்களுக்கு பெறமதி மிக்க கற்றல் உபகரணங்களை பகிர்ந்தளிக்க உள்ளன.
ஒவ்வொரு மாணவருக்கும் பாடசாலை செல்வதற்கான அப்பியாச புத்தகங்கள், பாடசாலை பை, மற்றும் பாதணியினை கொள்வனவு செய்வதற்காக 1000ரூபாய் பெறுமதியான பண வவுச்சர் அடங்கலாக 3000ரூபாய் பெறுமதியில் குறித்த கற்றல் உபகரணங்கள் பகிரப்பட உள்ளன.
மேற்படி நிகழ்வினை ஏறாவூர் பிரதேசத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நாளைய உத்தியோகபூர்வ நிகழ்விற்கு ஸம் ஸம் பௌன்டேசன் தவிசாளரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதி தலைவருமான அஷ்-ஷெய்க் முப்தி யூசுப் ஹனீபா அவர்கள் கலந்து கொள்வதுடன், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்...
டிசம்பர் மாதத்தை கடந்து செல்லும் போதே வறிய நிலையில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டிற்கான செலவீனங்களை சமாளிக்கும் பொருட்டு மடியில் நெருப்பை சுமந்த மனோ நிலையில் மிகவும் அவஸ்த்தைக்குள்ளாகுவது அனைவரும் அறிந்ததே- இதை உணர்ந்தவர்களாக மிகவும் கனதியான பணியினை இன மத பேதங்களுக்கு அப்பால் முன்னெடுத்து வரும் ஏறாவூர் தாருல் ஹுதா நலன்புரி அமைப்பு மற்றும் ஸம் ஸம் நிறுவன பிரதிநிதிகளை நன்றியுடன் வாழ்த்துவதோடு இவ்வாறான பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான உடல் உள ஆரோக்கியத்தையும் , அபிவிருத்தியையும் இதன் ஏற்பாட்டாளர்களுக்கு இறைவன் வழங்கிட செய்வானாக...
வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்புடன் வினைத்திறன் மிக்க பணி தொடர....



ஏறாவூர் கங்கை முதலி வைத்தியர் பரம்பரை

ஏறாவூர் கங்கை முதலி வைத்தியர் பரம்பரை
கண்டியைக் குண்டசாலை செல்லம் குமாரயா (Playboy king) என்ற பிரபல்யமான புனைப் பெயரைக் கொண்ட சிங்கள அரசர் அவரது 17 ஆவது வயதில் இருந்து ஆட்சி செய்துவந்தார். இவரது இயற்பெயர் வீர பராக்கிரம நரேந்திர சிங்ஹ ஆகும்.1707 ஆம் ஆண்டிலிருந்து 1739 ஆம் ஆண்டுவரையான 32 வருடங்கள் இவரது ஆட்சி நிலவியது.அக்காலத்தில் குண்டசாலையின் இளவரசர் என்று இவர் அறியப்பட்டார்.இலங்கையை ஆக்கிரமித்திருந்த டச்சுப் பேரரசுடன் சமரசம் செய்து கொண்டும், அனைத்து மதத்தவரோடும் சினேகபூர்வமான உறவை வலுப்படுத்திக்கொண்டும் இவர் தனது ஆட்சியை நிலைப்படுத்தி நடாத்தி வந்தார். இவரது தந்தை விமலதர்மசூர்ய 2 இன் மறைவையடுத்தே செல்லம் குமாரயா அரசரானார்.இந்த மன்னனுடைய மனைவி மதுரையைச் சேர்ந்த நாயக்க வம்சத்தைச் சேர்ந்த இளவரசியாகும்.
இவ்வரசனின் மனைவிக்கு சுகவீனம் ஏற்பட்டது. பலரிடம் வைத்தியம் செய்தும் பலன் கிடைக்கவில்லை. ஒரு சிறந்த முஸ்லிம் வைத்தியர் இருக்கிறார், அவரைக் கூட்டி வந்து தேவிக்கு வைத்தியம் பார்ப்போமா? என்று மந்திரி ஒருவர் அரசனிடம் கேட்டார்.
அந்த வைத்தியர் எனது மனைவிக்கு வைத்தியம் பார்க்கலாம் என்று சம்மதித்த அரசர்,அவரது மனைவியைப் பார்க்காமலும், தொடாமலும் மருந்து செய்யவேண்டும் என்ற நிபந்தைனையை விதித்தார். இந்த நிபந்தனை யூனானி மருத்துவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
நவீன மருத்துவ வசதிகள் இல்லாத அக்காலத்தில், நோயாளியின் கையைப் பிடித்து நாடியோட்டத்தை அறியாமல் நோயையோ நோயின் அறிகுறியையோ கண்டு பிடிக்க முடியாது, மருந்தும் கொடுக்க முடியாது என்று தெரிந்திருந்தும் மருத்துவர் அரசரின் நிபந்தனைக்கு உடன்பட்டார்.
வைத்தியர் அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டார்.அரசி ஒரு திரைக்கு அப்பாலும் வைத்தியர் இப்பாலும் இருத்தப்பட்டனர். வைத்தியர் நீண்ட நூலைக் கொடுத்து அதன் ஒரு முனையை அரசியின் கையில் கட்டிவிட்டு மறு முனையைத் தனது கைக்குத் தருமாறு சொன்னார். அரசியின் தோழிகள் அதனைச் செய்தனர்.
நூலில் நுனியை தொடுகை மூலம் பரிசோதித்த வைத்தியர், இது இரண்டு கால் மனிதரின் நாடியோட்டமல்ல நாலுகால் பிராணியின் நாடியோட்டம் போல தெரிகிறதே என்று கூறினார்.இதனைக் கேட்டவுடனே அரசரின் உத்தரவின் பேரில் திரை நீக்கப்பட்டது. வைத்தியரின் திறமையைப் பரிசோதிக்க நூலின் ஒரு முனை ஒரு பூனையின் காலில் கட்டப்பட்டிருந்தது.
யூனானி வைத்தியத்தால் தேவியின் நோய் தீர்ந்தது.அன்றிலிருந்து இந்த முகம்மத் என்ற முஸ்லிம் வைத்தியர் அரண்மனையின் பிரதான வைத்தியராக நியமிக்கப்பட்டார்.
சிறிது காலம் செல்ல இந்த யூனானி வைத்தியருக்கு அரசர் "கங்கே முதலி" என்ற சிறப்புப் பட்டத்தை (title) வழங்கினார்.
காலப்போக்கில் இந்த சிறப்புப் பட்டப் பெயரே இவர்களது குடும்பப் பெயராக நிலைபெற்றுவிட்டது. பின்னொரு காலத்தில், முஸ்லிம்கள் கண்டி அரசரின் அனுசரணையோடு மட்டக்களப்பில் குடியேறி வாழ்ந்துவந்தனர்.இவ்வாறு கண்டிய இராச்சியத்தில் இருந்து ஏறாவூரில் குடியேறியவர்களில் வரலாற்றில் பதியப்பட்ட கங்கே முதலி குடும்பமும் அடங்குகிறது.
முதலித்தம்பி என்ற முன்னாள் கிராமசேவையாளர் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் உயிர்வாழும் மூத்தவராகும்.இவரது தந்தையார் சீனிமுகம்மது ஏறாவூரின் முஸ்லிம் ஆதிகுடியேற்றப் பிரதேசமான ஒட்டுப்பள்ளி வட்டகையில் வாழ்ந்து மறைந்தார். 90 களின் நடுப்பகுதியில் இவர் தனது 90 வயதைக் கடந்து தளர்ந்து இருந்த வேளை ஏறாவூர் வரலாற்றில் அவருக்குத் தெரிந்தவை பற்றிய பதிவை பேட்டியாக எடுத்தேன். இவர் கெங்கை முதலியாரின் பேரராகும்.இவரையும் கெங்கைப் பரிகாரியார் என்றே மக்கள் அழைத்தனர்.
இஸ்மாலெவ்வை முதலியார்,சீனிமுகம்மதுவின் தந்தையாகும். இஸ்மாலெவ்வை முதலியார் கெங்கை முதலியாரின் மகனாகும். ஆறாவது தலைமுறையாக இவர் வைத்தியத்தில் ஈடுபட்டார். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இவர் கிராமத் தலைவராகப்( Village Headman) பணிபுரிந்தார்.
கீழே நிழற்படத்தில் முதலுத்தம்பியும் அவரது தந்தையார் சீனிமுகம்மது கெங்கைப் பரிகாரியாரும் காணப்படுகின்றனர்

புதிய மாணவிகள் அனுமதி



ஏறாவூர் வைத்திய சாலை வீதியில் இயங்கி வருகின்ற மனாழீருல் அன்வார் மகளிர் அறபுக் கல்லூரியில் ஷரீஆ மற்றும் ஹிப்ழ் ஆகிய பிரிவுகளுக்கு புதிய மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இக்கல்லூரியானது 1970 ல்  சங்கைக்குரிய மௌலவி அல் ஆரிப் பில்லாஹ் அல் ஆலிமுல் பாழில் கலீபத்துல் காதிரி அஸ்ஷெய்க் அப்துல் காதிர் ஸ_பி காதிரி கைதரபாதி அவர்களினதும் அவர்களது கலீபா சங்கைக்குரிய மௌலவி இப்றாஹீம் ஹாசிமி ஹனீபா ஆலிம் அவர்களினதும் அயராத முயற்சியால் உறுவாக்கப்பட்டதாகும்.

அவர்களது காலத்தில் இக்கல்லூரியில் உலமாக்கள் வெளியேராவிட்டாலும் இக்கல்லூரியில் அவர்களிடம் ஆரம்பக் கல்வியை கற்றுக் கொண்ட பல மாணவர்கள் இன்று தலை சிறந்த ஆலிம்களாகவும் அறிஞ்ஞர்களாகவும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் திகழ்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2009 ல் மனாழீறுல் அன்வார் அரபுக்கல்லூரியில்  பெண்களுக்கான பிரிவு ஆரம்பிக்கபபட்டு அனுபவம் வாய்ந்த ஆலிமாக்களினால் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றது.

இக்கல்லூரியில் 2018ம் ஆண்டு வரைக்கும் 19 ஆலிமாக்கல் பட்டம் பெற்று வெளியேறி 3 மாணவிகள் பல்கழைக்கலகம் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவிகளின் தகைமைகள்

ஷரீஆப் பிரிவு  : 09ம் தரத்தில் கல்வி கற்பவராகவும் அல்-குர்ஆனை
              சரளமாக ஓதக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.

ஹிப்ழுப் பிரிவு  : 06ம் தரத்தில் கல்வி கற்பவராகவும் அல்-குர்ஆனை
              சரளமாக ஓதக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.

 எமது கல்லூரியில் இலங்கை பரீட்சை திணணக்களம் நடாத்தும் அஹதிய்யாஇ தர்மச்சாரிய்யா அல் ஆலிம் முதவஸ்ஸிதா அல் ஆலிம் ஸானவிய்யா ஆகிய  பரீட்சைகளுக்கு மாணவிகள் தோற்றுவதற்கு  பயிற்றுவிக்கப்படுவதோடு  ஆங்கிலம்  கனணி தையல் ஆகிய மேலதிக தொழிற் பயிற்சிகளும்; அனுபவம் வாய்ந்த ஆலிமாக்களினால் நடாத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இக்கல்லூரியில் 2019 இல் முழு நேர வகுப்புக்குளும் நடைபெறும் என்ற மகிழ்சியான செய்தியையும் தெரிவித்துக் கொள்வதோடு இக்கற்கை நெறிக்கு ழுஃடு அல்லது யுஃடு படித்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மற்றும் 3 மாத முஅல்லிமா ஷரிஆ பயிற்சி வகுப்புக்களும் காலை மாலை ஆகிய நேரங்களில் நடை பெறுகின்றன.

இக்கல்லூரியில்    சேர விரும்பும் மாணவிகள் 228ஷ12ஷ2018 அன்று காலை 09.00 மணிக்கு கல்லூரியில் நடைபெறும் நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்க விரும்பும் மாணவிகள் அதற்கு முன்பதாக கல்லூரியின் அதிபரும் சதாம் ஹ{ஸைன் அல் மஸ்ஜிதுல் பக்கதாத் ஜூம்ஆ பள்ளிவாயலின் பேஸ் இமாமுமாகிய  சங்கைக்குரிய மௌலவி நவாஸ் உஸ்மானி அவர்களையும் கல்லூரியின் செயலாளர சங்கைக்குரிய மௌலவி எச்.எம் யூசுப் முஸ்தபி அவர்களையும் தொடர்பு கொள்ளவும்.

0756212102 - 778492721


ladies arabic college eravur

ladies arabic college eravur

ladies arabic college eravur

ladies arabic college eravur


புதிய மாணவர்கள் அனுமதி 2019


Nimiyyah arabic college eravur



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ_
ஏறாவூர் மிச்சநகர் ஆர்.டி.எஸ் வீதியில் அமைந்திருக்கும் நிழாமிய்யா மஹ்பிய்யா அரபுக்கல்லூரியில் 2019 ஆம் ஆண்டிற்கான மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இக்கல்லூரியில் முழு நேர பொதுக் கல்வியுடன் கூடிய 6 வருட ஷரிஆ கற்கை நெறி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2019 ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் அதற்கான நேர்முகப்பரீற்சை 2018-25-12 ஆம் திகதி நடைபெறும்.
ஜாமியத்துன் நிழாமிய்யாஹ் மஹ்பிய்யாஹ் அரபுக்கல்லூரி பின்வரும் சிறப்பியல்புகளையும் வசதிகளையும் கொண்டுள்ளது.

1. சர்வதேச தரத்திற்கேற்ற பாடத்திட்டம் தகுதி திறமை அனுபவமுள்ள உஸ்தாதுமார்கள் அல் ஆலிம் பரீற்சைக்கு தயார்படுத்துதல்
அஹதிய்யாஹ் பரீற்சைக்கு தயார் படுத்துதல்
கல்விப் பொதுத்தராதர சாதரான மற்றும் உயர்தர பரீற்சைக்கு தயார்படுத்துதல்

Pc & IT Technology  பல  தொழிற்பயிற்ச்சிகளை  வழங்குதழும் அரபு  மொழியுடன் கூடிய தமிழ்ääஆங்கிலம்ääசிங்களம்  மொழிகளை திறன்பட வளர்த்தல் .

2000 பரப்பளவு அடி கொண்ட கட்டிடமும்  சகல வசதிகளும்  கொண்டு அமையப் பெற்றுள்ள ஒரு கல்லூரியாகும்.
வளமான நூலகம் சிறந்த விளையாட்டு மைதாணம்ääசகல வசதிகளும் கொண்ட விடுதி குளியலறை மற்றும் மஸ்ஜித்ääபாதுகாப்பான அமைதியான சுவாத்தியமான கல்விச் சுழல்

உங்களது பதிவுகளை 2018-25-12 ஆம் திகதிக்கு முன்னர் தொடர்பு கொள்ளவும்.
மேலதிக விபரங்களுக்கு
கல்லூரி அதிபர் பண்ணுலாசிரியர் பல் துரை அரிஞ்ஞர்
சங்கைக்குரிய மௌலவி அஹ்மத் பஸீர் ரப்பானி
0718414705



Nimiyyah arabic college eravur

































Wednesday 14 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 212

மீலாதுன் நபி (ﷺ) சிறப்புப்பார்வை
தொடர்கிறது
ஆயிரக்கணக்கானோர் திரண்டு உறுதிமிக்க நெஞ்சோடு மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒரு மாவீரனின் முன்னால் நின்று கொண்டிருந்த பரபரப்பான தருணம் அது.
ஆம்! குபைப் (ரலி) அவர்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டு மக்காவின் முக்கியமான ஒரு தலைவரின் வருகைக்காக காத்திருந்தது அந்தக் கூட்டம்.
எதிர்பார்த்த அந்த தலைவர் அங்கே வருகை புரிந்தார். மக்கள் அமைதியானார்கள். ஆம்! மக்காவின் பெரும் தலைவராக பொறுப்பேற்று இருந்த அபூசுஃப்யான் அங்கே வந்தார்.
வந்தவர், ஃகுபைப் (ரலி) அவர்களின் அருகே சென்று “குபைபே! உம்மை துன்புறுத்த வேண்டும், உம்மைக் கொல்ல வேண்டும் என்பதெல்லாம் எங்களின் நோக்கமல்ல!
குபைபே! உம்மிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இது தான்! அதுவும் ஒற்றை வார்த்தை தான் சொல்லிவிடு குபைபே!
“இந்தக் கழுமரத்தில் முஹம்மத் {ﷺ} அவர்கள் ஏற்றப்படுவதை நான் விரும்புகின்றேன்” என்று ஒற்றை வார்த்தை சொல்லிவிடு!
உமக்கு வாழ்க்கை தருகின்றோம்! உமது மனைவி, மக்களோடு நீர் இன்பமாக வாழலாம்” என்றார்.
“என் மனைவி, மக்களுடன் வாழவோ, உலக இன்பத்தில் திளைக்கவோ நான் ஆசைப் படவில்லை. என் குடும்பத்தையே அடியோடு அழிப்பீர்களே அப்போதும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை.
என் வாயால் ஒரு போதும் நீங்கள் கூறுவது போன்ற எந்தவொரு வார்த்தையையும் சொல்லப்போவதில்லை.
கேட்டுக் கொள்ளுங்கள்! நபி {ﷺ} அவர்களின் திருப்பாதங்களில் சிறு முள் தைக்கப்படுவதைக் கூட என் மன ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது” என்று அஞ்சா நெஞ்சத்தோடு ஃகுபைப் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
இது கேட்ட அபூசுஃப்யான் ஆவேசமடைந்தார். கொலைவெறியோடு திரண்டிருந்த மக்களிடையே ஃகுபைபை காலி செய்யுமாறு சைகை செய்தார்.
தனியொரு மனிதனை, கழுமரத்தில் உடல் முழுவதும் கயிறுகளால் கட்டப் பட்டிருந்த ஒரு மாவீரனை திரண்டிருந்த மக்கள் கூட்டம் சின்னா பின்னப்படுத்தியது.
கையில் கொண்டு வந்திருந்த அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களால் குபைபை கொடூரமாக தாக்கினார்கள் எதிரிகள்.
மரணத்தின் விளிம்பில் பயணித்துக் கொண்டிருந்த ஃகுபைப் (ரலி) அவர்கள் உயிர் பிரிவதற்கு சற்று முன்னதாக தங்களின் முகத்தை கிப்லாவின் பக்கம் திருப்பி “இறைவா! உன் திருத்தூதர் எங்களுக்கு ஒப்படைத்த பொறுப்பை நாங்கள் நிறைவு செய்து விட்டோம்! எங்களின் இந்த நிலையை நீ உன் தூதருக்கு அறிவித்து விடு! என் ஸலாத்தையும் அவர்களுக்கு எத்தி வைத்துவிடு!” என்று இறைஞ்சினார்கள்.
அல்லாஹ் குபைப் அவர்களின் பிரார்த்தனையை உடனே அங்கீகரித்தான். ஆம்! குபைப் (அலி) அவர்களின் தூய ஷஹாதத்தை அல்லாஹ் மாநபி {ﷺ} அவர்களுக்கு அறிவித்தான்.
நபி {ﷺ} அவர்கள் குபைப் (ரலி) அவர்கள் தங்கள் மீது வைத்திருந்த உள்ளார்ந்த அன்பை நினைத்து மெய்சிலிர்த்துப் போனார்கள்.
வார்த்தையில் கூட விட்டுக் கொடுக்காத குபைப் (ரலி) அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நபி {ஸல்} அவர்கள் விரும்பினார்கள்.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக கழுமரத்தில் ஏற்றப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட குபைப் (ரலி) அவர்களின் பூவுடலை பாவிகள் கழுமரத்திலிருந்து கீழே இறக்காமல் அரபுலக மக்களுக்கு காட்சிப் பொருளாக ஆக்கியிருப்பதைக் கேட்டு நபி {ﷺ} அவர்கள் வேதனை அடைந்தார்கள்.
உடனடியாக, தங்களது தோழர்களை ஒன்று கூட்டிய நபி {ﷺ} அவர்கள், தோழர்களை நோக்கி “தோழர்களே! ஃகுபைப் (ரலி) அவர்களை ஏனைய ஷுஹதாக்களோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் என என் மனம் விரும்புகின்றது. மக்காவிற்குச் சென்று குபைப் (ரலி) அவர்களின் பூவுடலை கைப்பற்றி இங்கே யார் கொண்டு வருகின்றார்களோ அவர் சுவனவாசியென்று நான் சாட்சி பகர்கின்றேன்!” என்று கூறினார்கள்.
அங்கே, கூட்டத்தில் அமர்ந்திருந்த ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்கள் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் சென்று குபைப் (ரலி) அவர்களின் உடலைக் கொண்டு வருகின்றேன்! எனக்கு துணையாக, நீங்கள் எனக்கு கொள்கைச் சகோதரராக ஆக்கிய மிக்தாத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களை அழைத்துச் செல்கிறேன்” என்றார்கள்.
உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு மக்காவின் எல்லைக்கு இருவரும் வந்தார்கள். பகலில் மக்கள் நடமாட்டத்தையும், எதிரிகளின் எண்ணிக்கையையும் கண்காணித்து விட்டு, சிறந்த ஓர் திட்டத்தை தயார் செய்து இரவுக்காக காத்திருந்தார்கள்.
நள்ளிரவு நேரத்தில் ஓசைபடாமல் நடந்து கழுவேற்றப்பட்ட தன்ஈம் என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே கழுவேற்றப்பட்ட மரத்தை சுற்றி பாதுகாப்புக்கு நின்ற நாற்பது வீரர்களும் போதையில் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.
விவேகத்தோடு செயல்பட்ட அவ்விரு ஸஹாபாக்களும் துணிச்சலுடன் அம்மரத்திலிருந்து குபைபை இறக்கினார்கள். அப்போது குபைப் (ரலி) அவர்களின் அந்த பூவுடல் சிதையாமல் அப்படியே இருந்தது.
கொல்லப்பட்டு 40 நாட்களாகியும் உடலில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. அவர்களுடைய கை காயத்தின் மீது இருந்தது. பூஉடல் செந்நிறமாகவும், வாடை கஸ்தூரி வாடையாகவும் இருந்தது.
குபைப் (ரலி) அவர்களின் உடலை சுபைர் (ரலி) அவர்கள் குதிரையில் வைத்துக் கொண்டு வந்தார்கள்.
இதே நேரத்தில் பாதுகாப்புக்கு நிண்றிருந்தவர்கள் போதையிலிருந்து தெளிந்து, கண் விழித்துப் பார்த்த போது குபைபை காணாது திகைத்துப் போனார்கள்.
உடனே குறைஷித்தலைவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 70 குதிரை வீரர்கள் விரைவாக சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இறுதியாக, ஸுபைர் (ரலி) அவர்களையும், மிக்தாத் (ரலி) அவர்களையும் அந்த குதிரை வீரர்கள் மடக்கினர்.
மடக்கியதும் குபைப் (ரலி) அவர்களின் உடலை ஸுபைர் (ரலி) அவர்கள் பூமியில் வைத்தார்கள். பூமி குபைப் (ரலி) அவர்களின் உடலை விழுங்கிக் கொண்டது. அதனாலேயே முதன் முதலாக பூமியால் விழுங்கப்பட்டவர் என்று குபைப் (ரலி) அவர்கள் வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படுகிறார்கள்.
( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ, உயூனுல் அஸர் ஃபீ ஃபுனூனில் மஃகாஸி வஷ்ஷமாயிலி வஸ்ஸியர் லி இமாமி இப்னு ஸைய்யிதின் நாஸ் )
தொடரும்..........


வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 212