السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 21 October 2025

சொரியல் காணி (Undivided Land)”

 


“சொரியல் காணி (Undivided Land)” – பலருக்கும் தெரியாத சொத்து சட்ட ரகசியம்...?


இதைப் படித்தவுடன் நீங்கள் கூட இதை “Share” செய்யாமல் இருக்க முடியாது.


சொரியல் காணி என்றால் என்ன?


சொரியல் காணி என்பது ஒரு காணி பல அளவுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் பெயரில் உரிமை, உறுதி அல்லது உரித்து இருந்தாலும்

அந்த காணி இன்னும் சட்டப்படி எல்லையிடப்பட்ட தனித்துண்டுகளாக பிரிக்கப்பட்டிருக்காத காணி/ஆதனம் ஆகும்.


அதாவது, அனைவரும் சேர்ந்து உரிமை கொண்டிருப்பது ஆனால் யாரும் தங்களது பங்கினைத் தனியாகப் பிரித்து எல்லையிட்டு வைத்திருக்க முடியாதது!


எளிமையாக சொன்னால்:

“காணி உரிமையாளர் எல்லோருக்கும் அவரவர் பங்கிற்கு உரிமை இருக்கிறது, ஆனால் யாருக்கும் தனி பகுதிகளாக இல்லை!”


இது தான் “சொரியல் காணி” (Undivided Land).


இது இரண்டு வழிகளில் வந்தடையும் ;


1. ஒரு ஆதன உரிமையாளர் இறுதி விரும்பாவணம் or மரண சாசனம் (Last Will), காணி உரிமை மாற்றம் (Deed of Transfer), நன்கொடை (Deed of Git) எதுவும் நிறைவேற்றாமல் தன்னுடைய ஆதனத்தை விட்டு இறந்தால் அவருடைய உரித்தாளர், தத்துவக்காரர்களுக்கு வந்தடையும் ஆதனம்.


உதாரணம் :- மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், பெற்றோர், சகோதரர்கள், இன்னும் பல


2. ஒரு ஆதன உரிமையாளர் சட்டரீதியான பின்னுரித்தாளர் (Legal Nominee) எவரையும் எழுத்தி ஆவணமாக குறிப்பிடாமல் பெயர் குறிப்பிட்டப்பட்டு நியமனம் செய்யாமல் or எதுவும் ஆவணம் நிறைவேற்றாமல் (Appointment of Nominee) தன்னுடைய ஆதனத்தை விட்டு இறந்தால் அவருடைய உரித்தாளர், தத்துவக்காரர்களுக்கு வந்தடையும் ஆதனம்.


3. ஆதன உரிமையாளர் தான் உயிருடன் இருக்கும் போது குறித்த ஆதனம் பிரிவிடப்பட்டு துண்டுகளாக மாற்றப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் நிறைவேற்றி கொடுக்கும் சொரியல் பங்கிற்கான நன்கொடை உறுதி (Deed of Gift for Undivided Share)


உதாரணம் :- மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், பெற்றோர், சகோதரர்கள், இன்னும் பல


சட்ட அடிப்படை (Legal Foundation):


சொரியல் காணி தொடர்பான சட்ட அடிப்படை 

1. Partition Law (பிரிவிடல் சட்டம்) No. 21 of 1977,

2. Civil Law on Co-ownership (கூட்டு சொந்தக்காரர்) 

ஆகியவற்றில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த சட்டங்களின்படி,


ஒவ்வொருவரும் காணியின் முழுமையான அளவிலும் தங்களுக்குரிய அளவு பங்கிற்கான உரிமையை ஒவ்வொருவரும் உரிமை or உரித்து உடையவர்கள் பெற்றிருப்பர்.


ஆனால் யாரும் தங்கள் பங்கினை தனியாக விற்பனை செய்யவோ, வேலியிடவோ, எல்லை குறிப்பிடவோ, பிரித்து எடுக்கவோ முடியாது.


அவ்வாறு பிரித்து எடுக்க வேண்டுமெனில், நீதிமன்றத்தின் Partition Case வழியாக அல்லது பிரிவிடல் உறுதி (Partition Deed) மூலமாக மட்டுமே செய்ய முடியும்.


நீதியின் பார்வை (Judicial Interpretation):


01. Sinnathamby v. Sinnathamby (Sri Lanka) வழக்கில் நீதிமன்றம் கூறியது:


“As long as the property remains undivided, each co-owner has equal rights to the entire property, not to a specific portion.”


02. Fernando v. Silva (1992) வழக்கிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது:


“An undivided property cannot be sold, leased, or encumbered without the consent of all co-owners.”


இதன் பொருள் —

ஒருவர் தன் பங்கை விற்க நினைத்தாலும், மற்ற உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் விற்பனைசெய்தால் அது செல்லாது! சட்டம் இதை “Invalid Transfer” எனக் கருதும்.


உண்மையான உதாரணம்:


ஒரு தந்தை இறக்கும் போது விட்டுச் சென்ற 6 ஏக்கர் பரப்பளவு காணி மூன்று மகன்களுக்கு வந்தது எனக் கொள்ளுங்கள்.

அவர்கள் காணியை பிரிக்காமல் அப்படியே வைத்துள்ளனர்.

இப்போது ஒருவன் தன் பங்கினை விற்க விரும்புகிறான்.


ஆனால் மற்ற இருவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால்,

அவன் அந்தப் பங்கினை விற்க முடியாது! அவன் விற்கும் முயற்சி சட்ட ரீதியாக செல்லாது.


இது தான் “சொரியல் காணி சட்டத்தின்” பலம்!


சட்ட ரீதியான முக்கிய அம்சங்கள்:

✅ சொரியல் காணி என்பது Common Ownership Property ஆகும்.

✅ பிரிக்கப்படும்வரை காணி ஒரே சொத்தாகவே கருதப்படும்.

✅ யாரும் தனி உரிமையோ தனி பகுதியோ கோர முடியாது.

✅ விற்பனை, அடமானம், வாடகை – அனைத்திற்கும் மற்ற உரிமையாளர்களின் அனுமதி அவசியம்.

✅ பிரிக்க வேண்டும் எனில், Partition Action (நீதிமன்ற வழக்கு) மட்டுமே தீர்வு.

✅ Right of Pre-emption (முன் கொள்வனவு உரிமை) மூலம் பிற உரிமையாளர்களுக்கே முன்னுரிமை உண்டு.


சட்டப் பின்னணி & உண்மை உணர்வு:

இவ்வாறான காணிகள் பிரிக்கப்படாமல் நீண்ட காலம் இருப்பதால்,

மக்கள் இடையே சண்டைகள், வழக்குகள், குடும்ப பிளவுகள் அதிகம் ஏற்படுகின்றன. 


ஒரே குடும்பத்தில் சொத்து இருந்தும்,

“யாருக்குத் தான் எந்த பகுதி?” என்று உறுதி செய்ய முடியாமல்,

பல ஆண்டுகள் வழக்குகள் தொடர்கின்றன. 


அதனால் தான்,

சொரியல் காணியை விரைவாக சட்டப்படி பிரித்து பதிவு செய்வது மிகவும் முக்கியம்.


சுருக்கமாக நினைவில் கொள்ளுங்கள்:

1. “சொரியல் காணி” = “பிரிக்கப்படாத காணி”

2. “உரிமை – எல்லோருக்கும், பகுதி – யாருக்கும் இல்லை!”

3. “பிரிக்கப்படும்வரை சட்டம் அதனை ஒரே காணியாகவே கருதும்.”


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சொரியல் காணி சட்டம் நியாயமா?

இப்படி காணிகள் குடும்ப உறவுகளை பாதிக்கிறதா?

உங்கள் எண்ணத்தை கீழே பதிவு செய்யுங்கள்.


இந்த சட்ட தகவலை பகிருங்கள்!

ஒரு “Share” உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பெரிய சட்ட விழிப்புணர்வாக மாறும்.


சொத்து வாங்குவதற்கு முன் இதை அறிந்து கொள்ளாதவர் பெரிய இழப்பை சந்திக்கக்கூடும்! சொரியல் காணி என்பதே பெரும்பாலான வழக்குகளின் அடிப்படை காரணம் என்பதை மறக்காதீர்கள்!


நான் சட்டத்தரணி 

குமாரசிங்கம் கம்ஷன் 


#சொரியல்காணி #UndividedLand #SriLankaLaw #PropertyLaw #LegalAwareness #சட்டவிளக்கம் #LegalRights #TamilLawPost #ViralLegalPost #CoOwnership #SriLankaLegalSystem #TamilLawFacts #சொத்து_சட்டம் #LawEducation


Disclaimer:

இந்த பதிவு கல்வி மற்றும் பொதுமக்கள் சட்ட விழிப்புணர்வுக்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல. தனிப்பட்ட வழக்குகளுக்காக உங்கள் சட்ட ஆலோசகரை அணுகுங்கள். இதனை சட்டரீதியான ஒரு ஆவணமாக அல்லது ஆதாரமாக பயன்படுத்த முடியாது.)