நீதிமன்றில் சில வழக்குகள் முடிய ஏன் பல ஆண்டுகள் தாமதமாகின்றன?
– உண்மையான சட்ட காரணங்கள்...!
சில வழக்குகள் 5–10 ஆண்டுகள், சில சமயம் 20 வருடங்கள் கூட தொடர்ந்து நடைபெறுகின்றன...!
இதற்கு காரணம் சட்ட ஏற்பாடுகளில் உள்ள தாமதம் மட்டும் அல்ல, மாறாக வழக்கின் கட்சிக்காரர்கள் உருவாக்கும் நடைமுறை ரீதியான தவறுகள் procedural loopholes + delay tactics இழுத்தடிக்கும் பொறிமுறையே ஆகும் என நான் கருதுகின்றேன்..!
சட்டத்தின் ஒரு அடிப்படை சொல்கிறது எந்தவொரு தரப்பினரும் தனது பக்க நியாயத்தை சாட்சிகள் மற்றும் ஆதாரத்துடன் நீதிமன்றில் தகுந்த முறையில் முன்வைப்பதற்கு நீதிமன்றம் போதுமானதும் நியாயமானதுமான (Reasonable) கால அவகாசம் வழங்குதல் வேண்டும் என்று.
இந்த நியாயமானதும் போதுமானதுமான கால அவகாசம் என்ற கோட்பாடு தான் வழக்குகளில் கால தாமதத்தை ஏற்படுத்துவதாக நீங்கள் கருதுவதற்கு இடமளிக்கின்றது.
சட்ட ரீதியான அடிப்படை
1. Sri Lanka Constitution – Article 12(1)
"Everyone is equal before the law and entitled to equal protection of the law."
அதாவது ஒவ்வொருவரும் நீதியை பெற உரிமை கொண்டவர். ஆனால் delay culture காரணமாக, இந்த உரிமை சிலர் முன் தடைபடுகிறது.
2. Civil Procedure Code (CPC)
Sections 80–88, 94, 141, 185 தரப்புகள் சமர்ப்பிக்கும், ஆவணங்கள், நடைமுறைகள், adjournments கட்டுப்பாடுகள்.
1. வழக்கு விளக்த்திற்கான திகதி நியமித்தலில் தாமதம்
2. ஒரு நாளில் நியாயமான எண்ணிக்கையில் வழக்குகள் விளக்கத்திற்கு நியமித்தல்.
3. வழக்காளி அல்லது எதிராளி சமூகமளிக்காமை.
4. வழக்கு ஒருமுக விளக்கத்திற்கு நியமிக்கும் நடைமுறை.
Section 146 – Frivolous adjournments தடுக்கும் நீதிபதியின் அதிகாரம்.
தேவையற்ற வழக்கு ஒத்திவைப்புக்களை தடுப்பதற்கான முறையாக வழக்கு விளக்கம் தொடங்க முதல் ஏற்புக்கள் மற்றும் வழக்கெழு வினாக்கள் தாக்கல் செய்யுமாறு படித்து பரிசீலிக்கும் அதிகாரம்.
2. Judicature Act No. 2 of 1978 & Amendment 2017
Case Management System & Pre-trial Conferences வழக்கு முன்விளக்கம் மூலம் court efficiency நீதிமன்ற வினைத்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
3. Evidence Ordinance
சாட்சி/ஆவணங்களை சமர்ப்பிக்க தவறுதல் → case stall.
1. சாட்சிகள் மற்றும் ஆதாராங்கள் சேகரிக்க நீண்ட காலம் செலவழித்தால்.
2. வழக்கு தாக்கல் செய்யப்பட்தன் பின்னர் சாட்சிகள் ஆதாரங்கள் தேடுதல்.
3. மேலும் பல
4. Mediation Board Act No.72 of 1988
சில civil disputes – மத்தியஸ்த சபைகள் (mediation) மூலம் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு பெறலாம்.
4. Writ of Mandamus (Article 140)
தாமதத்திற்கு எதிராக Delay against public justice, or administrative lethargy, challenge சவால் செய்யலாம்.
Civil & Criminal Case Delay – உண்மையான காரணங்கள்
1️⃣ Date Postponements (CPC Sections 80, 94) – Parties preparation வழக்கு தரப்பினர் தயாரில்லாத காரணத்தை முன்வைத்து மாதக்கணக்கில் நீண்ட திகதி கோருதல்.
2️⃣ Summons / Notice Delivery Delay (CPC Section 61, 62) – எதிராளா சரியாக நியாயமான காலத்தில் அழைப்புக்கட்டளை/அறிவித்தல் notice பெறாமல், சேர்ப்பிக்கப்படாமல் மாதக்கணக்கில் நீண்ட திகதியிடப்படல்..
3️⃣ Preliminary Objections (CPC Section 185) – Procedure objections வைத்து case stall.
நியாயமற்ற முதற்தோற்ற ஆட்சேபனைகளை முன்தைத்து வழக்கை பெருப்பித்தல்.
4️⃣ Evidence / Expert Report Delay – Survey, Police, Medical, Forensic reports late submit. மேற்படி அறிக்கைகள் கிடைக்க தாமதம் ஏற்படல்.
5️⃣ Appeals (Judicature Act Sections 30–35) – Lower Court → High Court → Supreme Court, sometimes 10+ years. மேன்முறையீட்டு நடவடிக்கைகளில் நீண்ட காலம் செலவளித்தல்.
6️⃣ ஒவ்வொரு நீதிமன்றிலும் அதிகப்படியான வழக்குகள் தாக்கல் செய்யப்படல் Case Load Overload – Single judge 2000–3000 pending cases handle.
7️⃣ நிர்வாக ரீதியான தாமதங்கள் Administrative Delays – Police, Registrar, Government office procedural lag.
8️⃣ ஒரு சில சட்டத்தரணிகளின் தாமதிப்பு நடவடிக்கைகள் Lawyer Delay Tactics – Frivolous adjournments, procedural loopholes misuse.
9️⃣ குறிப்பிட்ட ஒரு சில அரசியல் தலையீடுகள் Political / Power Influence – Sensitive criminal/civil cases occasionally affected.
🔟 இலட்சம் மற்றும் ஊழல் Corruption / Mismanagement தவறான முகாமைத்துவம் – Rare, but impactful.
சட்ட ரீதியான தீர்வுகள்
1. CPC Section 146 – Frivolous adjournments தடுக்க நீதிபதிக்கு அதிகாரம்.
2. Case Management System (Judicature Amendment Act 2017) – Court enforcement of deadlines & schedules.
3. Mediation Board Act No.72 of 1988 – Early dispute resolution.
4. Writ of Mandamus (Article 140) – Administrative delay challenge.
5. Section 8 & 9 of Civil Procedure Code – Expedited procedures for urgent cases.
6. Section 27 of Criminal Procedure Code – Prevent unnecessary delay in criminal trials.
7. Supreme Court Directives & Guidelines – High-profile cases monitored for efficiency.
#நீதி தாமதமானால் அது நீதியல்ல – JUSTICE DELAYED IS JUSTICE DENIED
#Civil Case உடையே ஆகும் delay → Land dispute, Contract, Matrimonial cases
#Criminal Case delay → Murder, Theft, Fraud cases → Victims suffer!
#சட்டம் மந்தமில்லை – வழக்கு தரப்பினர் உருவாக்கும் delay culture தாமதப்படுத்தும் கலாச்சாரம் தான் தாமதம்!
👉 Share பண்ணுங்க – மக்கள் இந்த உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்!
👉 Comment பண்ணுங்க – நீங்கள் நினைப்பது என்ன? Court system change வேண்டுமா?
👉 Tag Law Students / Legal Friends – Awareness !
இந்த விடயம் தொடர்பில் விரிவான பதிவு ஒன்றினை எதிர்காலத்தில் பதிவேற்றம் செய்கிறேன்.
நான் சட்டத்தரணி
குமாரசிங்கம் கம்ஷன்
#JusticeForAll #SriLankaLaw #LegalAwareness #CivilAndCriminal #CourtDelay #LawEducation #JusticeDelayed #KnowYourRights #LegalFacts #CourtEfficiency #LawReform
(இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல மேலும் இதிலுள்ள சட்ட ஏற்பாடுகள் மற்றும் பிரிவுகளில் முரண்பாடுகள், பிழைகள், தவறுகள், இருப்பின் மூல சட்டங்களே மேலோங்கி நிற்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.)