السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 21 October 2025

ஷைத்தானின் விளையாட்டு

 

ஒரு முரீது காட்டு வழியே போய் கொண்டிருந்தார். அங்கே ஒரு வியாபாரி கடிவாளங்களை விற்றுக் கொண்டிருந்தார். அவரை நெருங்கிய முரீது,

“பெரியவரே! இந்த காட்டுல இதை விற்றால் யாரு வாங்குவார்கள்? ஊருக்குள்ளே போய் கடை போடலாமே”என்றார்.


அந்த வியாபாரி, “என் பெயர் ஷைத்தான். அல்லாஹ்வின் பாதையில் பயணிப்பவரை என் பக்கம் இழுக்கவே இந்த கடிவாளம். ஒவ்வொருவருக்கும் ஒரு கடிவாளம் வச்சிருக்கேன்” என்றான் நமட்டு சிரிப்புடன்.


“அட அவனா நீ. நான் யாரு தெரியுமா? இன்ன பெரிய ஷெய்கின் முரீது. எனக்கு ஏதும் கடிவாளம் இருக்கா உன் கிட்ட” என்றார்.


“எவ்வளவு பெரிய ஷெய்குடைய சீடர் நீங்க. உங்களுக்கெல்லாம் நான் கடிவாளம் போட முடியுமா?” என ஷைத்தான்அடக்கமாக சொல்லவே,


முரீது மனம்மகிழ்ந்து, “அது தானே பார்த்தேன். என்கிட்டெல்லாம் உன் பாச்சா பலிக்காது” என்றார். 


“சரி நீங்க போங்க” என ஷைத்தான் சொல்லவே அவர் நடையை கட்டினார். 

 சிறிது தூரம் தான் சென்றிருப்பார் ஷைத்தான் அவரை கைத்தட்டி அழைத்தான். முரீது அவன் கிட்ட வந்தார். “சரி, சரி நீஙக போங்க” என்றான். அவர் தன் பயணத்தை தொடங்க எத்தனிக்கையில் மீண்டும் அவரை அழைத்தான். அவர் ஷைத்தானை நெருங்கி “ஏன்டா பயலே! ஏன் சும்மா சும்மா கூப்பிடுறே? எனக்கு ஏதும் புது கடிவாளம் கண்டு புடிச்சிட்டியோ ?” என கோபமாக கேட்டார்.


“இல்லை. இல்லை” என அவன் பணிவுடன் உடனே மறுத்தான்.


“அப்ப ஏன்டா என்னை கூப்பிட்டே” என கேட்டார்.


“ஒரு விசயத்தை சொல்லத் தான் கூப்பிட்டேன்” என்றான். 


“சொல்லு. சொல்லு.” என்றார் கம்பீரமாக.


ஷைத்தான் சொன்னான், “ நான் வான்னு சொன்னா வற்றீங்க. போன்னு சொன்ன போறீங்க. உங்களை இழுக்க  கடிவாளமே தேவையில்லையே” என்று சிரித்தான்.


பி.கு :  ஷெய்கின் சகவாசமும், அவர்கள் தரும் பயிற்சியும் கொண்டு அகப்பெருமையை சன்னம் சன்னமாக நீக்கத் வேண்டும். அதை விடுத்து ஷெய்கின் அந்தஸ்த்தை  மட்டும் பெருமையடித்து கொண்டு நம் அகப்பெருமையை வளர்ப்பது எத்தனை ஆபத்து என்பதை இந்த கதை சுட்டி காட்டுகிறது.


-வாட்ஸாப் பதிவிலிருந்து...