தனியார் கல்வி நிலையங்களின் கட்டணத்தை பிரதேச சபை தீர்மானம் மூலம் கட்டுப்படுத்தலாமா? – உண்மையை அறிந்து கொள்ளுங்கள்!
இன்று பல இடங்களில் “இனிமேல் Tuition Class Fees-க்கு கட்டுப்பாடு – இதற்காக பிரதேச சபைகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன” என்ற செய்திகள் பரவுகின்றன.
மக்கள் அதை உண்மையாக நம்ப ஆரம்பித்துவிட்டனர். ஆனால்
கேள்வி – இது சட்டப்படி சாத்தியமா?
இல்லை! பிரதேச சபைக்கு தனியார் கல்வி கட்டணங்களை நிர்ணயிக்கும் எந்த சட்ட அதிகாரமும் கிடையாது.
இது ULTRA VIRES எனப்படும் அதிகார வரம்பை மீறும் செயலாக கருதப்படும்.
பிரதான குறிப்பு :
ஆனால் குறிப்பிட்ட ஏதேனும் தனியார் கல்வி நிறுவனங்கள் நியாயமற்ற, அளவுக்கதிகமான பாரியளவு கட்டணங்களை அறவீடு செய்தால் குறித்த கல்வி நிறுவனங்களிடம் சேவை பெறவோ அல்லது கல்வியை பெறவோ தாங்கள் எச்சந்தர்ப்பத்திலும் செல்லாமல் இருப்பதற்கும் அவர்களிடம் சேவை பெறாமல் தவிர்த்து கொள்வதற்கும் உரிமை மற்றும் சட்ட ஏற்பாடு ஒவ்வொரு தனிநபருக்கும் இருக்கின்றது.
சட்டம் பிரிவு விளக்கம்
Pradeshiya Sabha Act No.15 of 1987 Sections 126 & 129 Business License வழங்கலாம் – ஆனால் Fee Regulation செய்ய முடியாது
13th Amendment to the Constitution Provincial Council List கல்வி – மாகாண சபையின் கீழ்; பிரதேச சபைக்கு அதிகாரமில்லை
Constitution – Article 12(1) அடிப்படை உரிமை சம உரிமை மீறல் ஏற்பட்டால் வழக்கு தொடர முடியும்
Administrative Law Ultra Vires Doctrine அதிகார வரம்புக்கு வெளியே எடுத்த தீர்மானம் செல்லாது
முக்கிய சட்ட கருத்து:
கல்வி துறை என்பது தேசிய மற்றும் மாகாண அளவிலான public policy matter.
Local Government ஆன Pradeshiya Sabha-களுக்கு அது தொடர்பான Policy Decision எடுக்க முடியாது.
வழக்கு ஆதாரங்கள் (Case Law Principles):
Case Principle
Wijesiri v. Siriwardena (1982) Public authority power must stay within limits
Karunadasa v. Unique Gem Stones (1997) Ultra Vires + Natural Justice
Dissanayake v. Municipal Council (1999) உள்ளூராட்சி அதிகார வரம்பு மீறினால் தீர்மானம் செல்லாது
#பிரதேச சபைகள் செய்யக்கூடியவை
1. Business License கேட்கலாம்
2. Building Safety + Fire Safety விதிகள் கேட்கலாம்
3. Parking/Traffic/Noise Control விதிக்கலாம்
4. Public Nuisance கட்டுப்படுத்தலாம்
#ஆனால் செய்யக்கூடாதவை
01. Tuition fees நிர்ணயித்தல்
02. Class hours அல்லது syllabus கட்டுப்படுத்தல்
03. Teacher qualification கட்டுப்படுத்தல்
04. Maximum fee அல்லது minimum fee நிர்ணயித்தல்
“தனியார் கல்வி நிலையங்களின் கட்டணம் ரூ.1500-ஐ கடக்கக்கூடாது” போன்ற தீர்மானங்கள் சட்ட விரோதம்.
அத்தகைய தீர்மானங்கள் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்படும்.
உங்களின் உரிமை:
பிரதேச சபை இப்படி தலையிட்டால் நீங்கள்:
1. Court of Appeal-ல் Writ Application தாக்கலாம்
2. Supreme Court-ல் Fundamental Rights Petition தாக்கலாம்
3. Prohibition Order கோரலாம்
சட்டம் தெரியாத மக்கள் தான் மிரண்டு விடுவார்கள் சட்டம் தெரிந்தவர்கள் தான் நியாயத்தை காக்க முடியும்!
இந்த தகவலை Lot of Parents, Teachers & Students தெரிந்து கொள்ள Share செய்யுங்கள்...!
👇 உங்கள் கருத்தை கீழே எழுதுங்கள்!
நான் சட்டத்தரணி
குமாரசிங்கம் கம்ஷன்
(இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல)