தாய்க்கல்லூரியாம் வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மதரஸாவின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹஜ்ரத் என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிற அப்துல் வஹ்ஹாப் அல்காதிரீ (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களின் நினைவு தினம் (உரூஸ்) இன்றாகும்.
1830 –இல் பிறந்த ஹஜ்ரத் அவர்கள் 1919 ஜனவரி 25 -இல் தன் இன்னுயிர் நீத்தாலும் அவர்களின் பலன் இரத்தமும் சதையுமாக இன்னமும் பரவிக் கிடப்பதற்கு தென்னிந்தியா சான்று.
பாக்கியாத்தின் இரண்டாம் நாஜிர் ஹஜ்ரத் உயர்திரு ஜியாவுத்தீன் பாகவீ ஹஜ்ரத் அவர்கள், அண்ணலெங்கள் அஃலா ஹஜ்ரத் (க.ஸி.அ) அவர்கள் குறித்து இப்படியொரு பாடலை எழுதுகிறார்கள்:
"ஞானநெறிக் கேற்றகுரு;
நண்ணரிய சித்திமுத்தி
தானந் தருமந் தழைத்த குரு; - மானமொடு
தாயெனவும் வந்தெனைத் தந்தகுரு, என் சிந்தை
கோயிலென வாழுங் குரு"
இழப்பென்றால் அஃலா ஹஜ்ரத் அவர்கள் இறப்பென்பது அப்படியொரு இழப்பு.
ஹிஜ்ரி 1274 – கி.பி 1857 முதல் 1869 வரை சுமார் 12 வருடங்கள் அஃலா ஹஜ்ரத் அவர்கள் தங்கள் வீட்டுத் திண்ணையில் வைத்துத் துவங்கினார்கள். பின்னர் ஹஜ்ஜுப் பயணம் செய்து ஒரு வருடம் மற்றும் 8 மாதங்கள் மக்காவில் தங்கியிருந்து விட்டு வந்து பாக்கியாத் பெரிய மஸ்ஜிதின் தாழ்வாரத்தில் 1869-ஆம் ஆண்டு மதரஸாவை இடம்பெயர்த்தார்கள். அது முதல் 6 வருடங்கள் அங்கேயே நடந்து வந்த மதரஸா, பின்னர் 1875-ஆம் ஆண்டு தனியாக கட்டடத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது.
பாக்கியாத் உருவாக்கத்தின் கரு என்பது 1857. இந்த கணக்கின் படி 2057 வந்தால் பாக்கியாத்துக்கு வயது 200. அதற்கு இன்னும் 32 வருடங்கள் உண்டு. அல்லாஹ் அதைக் காணும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!.
இன்ஷா அல்லாஹ் விரைவில் விரிவான பதிவொன்று எழுதும் அவா உண்டு. அவசியம் எழுதுவேன் இன்ஷா அல்லாஹ்...
ஹஜ்ரத் அவர்கள் மேல் நன்றிக்கடனாக ஒரு ஃபாத்திஹா ஓதிக்கொள்வீராக என்று நினைவூட்டி நிறுத்துகிறேன்.
إلى حضرته الفاتحة
அல்ஃபாத்திஹா...
பதிவுநாள்: Oct 15, 2025.
#nowshutalks | #nowshuposts