ஹிஷாம் ஃபத்தாஹி
03.04.1447 AH
26.09.2025 CE
--------------------------
கண்ணியமான உலமாக்களே,
நீண்ட காலமாக நாம் பொறுமையாகவும் நிதானமாகவும் விட்டுக் கொடுத்தும் செயல்பட்டு வந்துள்ளோம் இதன் காரணமாக எங்கள் மீது நம்மவர் சிலர் கடும் அதிருப்தியில் இருந்த போதிலும் நாம் ஆதரவு தந்து வந்தோம். அதில் எவ்வித சுயநலனும் இருக்கவில்லை. அதற்கு ஒரு அடிப்படை காரணமும் இருந்தது.
தரீக்காவாக இருந்தாலும் சரி வேறு எந்த தஃவா அமைப்பாக இருந்தாலும் சரி அஷ்அரிய்யா அகீதாவையும் நான்கு மதுஹபுகளில் ஒன்றையும் உறுதியாக கடைப்பிடிப்பவராக இருந்தால், சூபி தரீக்காக்களை மதிப்பவராக இருந்தால் அவரை நாம் ஏற்றுக் கொள்வோம் இவற்றுக்கு முரண்படக்கூடியவர்களை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
"இத்திபாஉ ஸுன்னா" என்ற சொல்லிக்கொண்டு அகீதாவை சுக்கு நூறாக உடைப்பது பற்றி சென்ற வாரம் நாம் பார்த்தோம் அதன் தொடர்ச்சியாக இப்பதிவு இடம் பெறுகிறது.
கடந்த 13. 09. 2025 பொத்துவில் நகரத்தில் தலைவர் அவர்கள் பேசியது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. தூய்மையான அகீதாவை உறுதியாக கடைப்பிடிக்கக் கூடியவர்களுக்கு மத்தியில் அது கடும் அதிருப்தியையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது அது எமது ஷரீஆ வை உடைத்து தகர்க்கும் செயலாகும்.
தப்லீக் சூபி ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, சலாமா ஆகிய அனைத்து அமைப்புகளும் அஹ்லுஸ் ஸுன்னா என்பதாகவும், ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்ட "மன்ஹஜுல் முஸ்லிம்" அனைத்து அமைப்புகளையும் அரவணைக்கின்றது" என்ற தொணியில் அவர் பேசியிருந்தார்.
*هل هذا اتباع السنة ام مخالفة السنة ؟*
இதற்கு முன்னரும் பலமுறை இக்கருத்தை அவர் பேசியுள்ளார். இவருக்கு முன்பாக மௌலவி எம்.ஜே.எம். ரியாழ் அவர்கள் ACJU வின் பொதுச்செயலாளராக இருந்தபோது 1988 ஆம் ஆண்டு பத்திரிகையில் "தப்லீக், தவ்ஹீத்… ஜமாத்தே இஸ்லாமி ஆகிய அமைப்புகள் நேரான பாதையில் செல்கிறன "என்ற செய்தியை பகிரங்கமாக அறிவித்திருந்தார். அதில் தரீக்காவை அவர் சேர்த்துக் கொள்ளவில்லை. இக்கருத்தை பார்த்த தற்போதைய தலைவர் அன்று கொதித்தெழுந்ததாக எமக்கு அறியக் கிடைத்தது.ஆனால் இன்று அதே தவறான கருத்தை வேற்றுமையில் ஒற்றுமை என்ற தவறான புரிதலில் பேசுகின்றார். அகீதாவில் சத்தியத்துக்கும் அசத்தியத்திற்கும் இடையில் சமரசம் செய்ய முடியாது அவ்வாறான ஒற்றுமையை ஷரீஅத் ஒருபோதும் அனுமதிக்காது. தலைவர் அவர்களை நம்பி அவருக்கு பின்னால் ஒரு பெரிய கூட்டம் நிற்கிறது. இக்கருத்தால் அவர்கள் பிழையாக வழிநடத்தப்பட அதிக வாய்ப்புண்டு..
"இத்திபாஉ ஸுன்னா"வைப் பற்றி பேசக் கூடியவர்கள் ஏன் தலைவரை விமர்சிக்காமலும், தட்டிக் கேட்காமலும் மௌனமாக இருக்கின்றார்கள்? ஏன் உண்மையைப் பேச தயங்குகிறார்கள்?. இதுதான் உண்மையான " "இத்திபாஉ ஸுன்னா" வா ?
இப்னு தைமிய்யா, முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ஆகியோரின் வழிகெட்ட சிந்தனைகளைப் பின்பற்றக்கூடிய தவ்ஹீத் அமைப்பையும், அபுல் அஃலா மவ்தூதி, யூசுப் அல் கர்ழாவி ஆகியோரின் வழிகெட்ட சிந்தனைகளைப் பின்பற்றக்கூடிய ஜமாஅதே இஸ்லாமி அமைப்பையும் "அஹ்லுஸ் ஸுன்னா" என்ற வட்டத்துக்குள் உள்வாங்க முடியுமா?
வஹாபிகள் பலர் "அஷ்அரிய்யா கோட்பாட்டைப் பின்பற்றக் கூடியவர்களை வழிகேடர்கள்" என்றும் இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று "காபிர்கள்" என்றும் மிக தைரியமாக பேசுவதையும் நாம் பார்க்கின்றோம். முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் தனது " கஷ்புஷ் ஷுபஹாத்"
என்ற நூலில்
ايها المشركون
என்று பக்கத்துக்கு பக்கம் அவர் விளிப்பது அவருடைய காலத்தில் மக்கா, மதீனா போன்ற இடங்களில் வாழ்ந்த முஸ்லிம்களைத் தான் என்பது உலகறிந்த உண்மை. யாரும் இதனை மறுக்க முடியாது. ஏனென்றால் அவர் இப்னு தைமிய்யா அவர்களுடைய வழிகெட்ட சிந்தனைகளால் கவரப்பட்டவர். இந்த இருவரும் கூறக்கூடிய மிகப் பயங்கரமான கருத்து: "அஷ்ரியா கோட்பாட்டை பின்பற்றக்கூடியவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் மக்காவிலே வாழ்ந்த காபிர்கள் போன்று توحيد الربوبيه என்ற அம்சத்தை மட்டும் ஏற்றுக் கொண்டனர் توحيد الالوهيه என்ற மிக முக்கியமான அம்சத்தை புறக்கணித்துவிட்டனர்.
இந்த ஒரு விஷமத்தனமான கருத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் மக்கா, மதீனா உட்பட அரபு தீபகற்பத்தில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தார், அவர்களுடைய பெண்களை அடிமைகளாக சிறை பிடித்தார், அவர்களுடைய சொத்துக்களை உடமைகளை கபளீகரம் செய்தார், கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட யுத்தங்களை அவர் செய்தார் .
இந்த கருப்பு வரலாற்றை வஹ்ஹாபி அறிஞரான உஸ்மான் இப்னு பிஷ்ர் என்பவர் தன்னுடைய
عنوان المجد في تاريخ نجد . என்ற நூலில் பதிவு செய்ததோடு இந்த யுத்தங்கள் யாவும்
(المشركون)
இணை வைக்கக் கூடியவர்களுடன் நடைபெற்றதாக பெருமையாக கூறுகின்றார்.
قال ابن تيميه في مجموع الفتاوى ناقلا عن الكرجي :
" من قال انا شافعي الشرع أشعري الاعتقاد قلنا له هذا من الأضداد لا بل من الارتداد .
இப்னு தைமிய்யா அவர்கள் அபுல்ஹசன் அல் கர்ஜி என்ற அறிஞரின் கருத்தை பின்வருமாறு பதிவு செய்துள்ளார் :
யார் ஒருவர் நான் மதஹப்பில் ஷாஃபிஈ என்றும் அகீதாவில் அஷ்அரீ என்றும் கூறுகின்றாரோ அவருடைய கருத்து முரண்பாடாகும், இல்லை இல்லை அது மதமாற்றமாகும்."
வஹாபிய அறிஞரான அஹ்மத் முஹம்மத் பாஷமீல் என்பவர் தன்னுடைய كيف نفهم التوحيد
என்ற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்: நபிமார்கள் வலிமார்கள் மூலமாக வசீலா தேடக்கூடியவர்களை விட அபூ ஜஹ்ல், அபூ லஹப் போன்றவர்கள் ஏகத்துவ நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள்."
அடுத்தது அபுல் அஃலா மவ்தூதி என்பவர் பல்வேறு வழிகெட்ட சிந்தனைகளை முன்வைத்தவர்.
عصمة الأنبياء
® சாதாரண மனிதர்களைப் போன்று நபிமார்களும் பாவங்கள் செய்ய முடியும். அவர்கள் பாவங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் அல்ல. என்ற மோசமான கருத்தை முன் வைத்துள்ளார்.
® தஜ்ஜாலுடைய வருகை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முன் அறிவிப்பு அவர்களுடைய பிழையான யூகம் என்று கூறியுள்ளார்.
® நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இத்தாலியை ஆட்சி செய்த முசோலினி என்ற சர்வாதிகாரியை போன்றவர் என்ற அபத்தமான கருத்தையும் கூறியுள்ளார்.
® இவர் ஆயத்துல்லாஹ் அலீ அல் கொமெய்னி அவர்களை மும்முறமாக ஆதரித்தவர்.
® தனது மனோ இச்சையின் பிரகாரம் புனித குர்ஆனை மொழிபெயர்ப்பு செய்தவர்.
அடுத்ததாக தலைவர் அவர்கள் நாட்டிலே கிராமம் கிராமமாக வழிகெட்ட வஹ்ஹாபிய சிந்தனையை கொண்டு சென்று அங்கே பிளவுகளையும் பிரச்சனைகளையும் உருவாக்கி ரத்த கலரிகள் உண்டாக கூடிய அளவுக்கு நிலைமையை தோற்றுவித்த வஹ்ஹாபிகளை சமாதான புருஷர்களாக, சமூக ஒற்றுமைக்கு பாடுபடுபவர்களாக சித்தரித்து அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
*هل هذا اتباع السنة أم مخالفة السنة ؟*
*قال النبي صلى الله عليه وسلم: من وقر صاحب بدعة فقد أعان على هدم الدين*
யாரொருவர் பித்அத்வாதியை கண்ணியப்படுத்துகிறாரோ அவர் இஸ்லாத்தை உடைத்து தகர்ப்பதற்கு உதவி செய்துவிட்டார்.
"இத்திபாஉ ஸுன்னா" பற்றி பேசக் கூடியவர்களே இதைப் பற்றி எதனையும் பேசாமல் நீங்கள் மௌனமாக இருப்பீர்களானால் நிச்சயமாக மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அல்லாஹ் நம் அனைவரையும் நேரான பாதையில் நிலை நிறுத்தி வைப்பானாக.