السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 15 October 2025

காணி வழக்கு போடும் உரிமை



 "காணி வழக்கு போடும் உரிமை காணி உறுதி உங்களிடம் இருந்தால் மட்டும் தான் என்று நினைக்கிறீர்களா? 


இதைப் படித்துப் பாருங்கள் – உண்மை வேறு!"


இலங்கையில் காணி (Land) தொடர்பான வழக்குகளை யார் தாக்கல் செய்யலாம்?


சட்டப்பிரிவுகளுடன் தெளிவாக!


இலங்கையில் காணி உரிமை தொடர்பான தகராறுகள் அதிகமாய் ஏற்படுகின்றன. ஆனால் பலர் அறியாத மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?


யார் ஒரு காணி தொடர்பான வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உரிமையுடையவர்?


காணி தொடர்பான வழக்குகளை தாக்கல் செய்யக்கூடியவர்கள்:


01. உரிமை ஆவணம் (Deed) வைத்துள்ள சொத்து உரிமையாளர் Evidence Ordinance + Civil Procedure Code


02. பரம்பரை வாரிசு மற்றும் உரித்தாளர்கள் (Heirs) Prescription Ordinance & Succession laws


03. Possession உடமையில் உள்ளவர் (தன்னுடமையில் வைத்திருப்பவர்) Prescription Ordinance No.22 of 1871


04. Co-owner (கூட்டு உரிமையாளர்) Partition Law


05. State Land Permit வைத்துள்ளவர் State Lands Ordinance


06. Long-term Lease அல்லது Grant வைத்தவர் Land Development Ordinance


07. Power of Attorney மூலம் நியமிக்கப்பட்டவர் Power of Attorney Ordinance


08. Trust/Company/Institution (நிறுவனம்) Companies Act


09. Tenant/Lessee (வாடகை/குத்தகைக்கு இருப்பவர்) – வரம்பிற்குள் உட்பட்டது Rent Act


முக்கிய சட்ட அடிப்படைகள்


1. Civil Procedure Code (Section 39 & 40)

“Interest in the subject matter” உள்ளவர் வழக்குத் தாக்கல் செய்யலாம்.


2. Prescription Ordinance No.22 of 1871

10 வருடங்களுக்கும் மேல் peaceful possession இருந்தால் உரிமை கோர முடியும்.


3. Partition Law No.21 of 1977

கூட்டு காணி உரிமை பிரிக்க Partition Case தாக்கல் செய்யலாம்.


4. Registration of Documents Ordinance

பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களுக்கு முன்னுரிமை.


5. Evidence Ordinance

Ownership நிரூபிக்க வேண்டிய சட்ட அடிப்படை ஆவணங்கள்.


#யாரால் வழக்கு தாக்கல் செய்ய முடியாது?


1. வெறும் “பேச்சு உரிமை” வைத்தவர்

2. ஆவணமோ உடமையிலோ இல்லாதவர்

3. சட்டத்தின்படி “interest” இல்லாத மூன்றாம் நபர்

4. False claimant / Illegal possessor (சட்டவிரோதமாக பிடித்தவர்)


மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை


✅ உரிமை (Deed) உறுதி இருந்தால்தான் வழக்கு போட முடியும் என்பது தவறு!

✅ Possession (உடமையில்) இருந்தாலும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்!

✅ மரணமடைந்தவரின் உரித்தாளர்கள் (heirs) கூட உரிமை கோர முடியும்!

✅ Power of Attorney மூலம் மற்றொருவரின் சார்பாகவும் வழக்கு தாக்கல் செய்யலாம்!


முக்கிய அறிவுரை


காணி வழக்குகள் மிகவும் நுட்பமானவை.


Title, Possession, Prescription, Boundary, Encroachment, Partition, State land issues போன்றவற்றில் சட்டம் வேறுபடும்.


வழக்கு தாக்கல் செய்யும் முன்னர் ஒரு சிறந்த ஆலோசனை அவசியம்.


காணி பிரச்சினை இருந்தால் இந்த பதிவை save பண்ணிக்கொள்ளுங்கள்


Share பண்ணுங்க – யாராவது ஒருவருக்கு சட்டம் காப்பாற்றும்! 


நான் சட்டத்தரணி 

குமாரசிங்கம் கம்ஷன் 


(குறிப்பு : இந்த பதிவில் உள்ள விடயங்கள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காகவும், சட்ட அறிவுக்காக மட்டும் பயன்படுத்தப்படல் வேண்டும் மாறாக வேறு எந்த நோக்கத்திலும் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல)


Copy past 

Thanks