السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 18 October 2025

முஸ்லிம் பாடசாலைகளில் நாகரிகமாக மாறிவரும் பிற மத கலாச்சாரங்கள்.


 முஸ்லிம் பாடசாலைகளில் நாகரிகமாக மாறிவரும் பிற மத கலாச்சாரங்கள்.


மத நல்லிணக்கம் ஒருமைப்பாடு எனப்படுவது யாதெனில் நாம் நம் மார்க்க விழுமியங்களை பேணி பிற மத அனுஷ்டானங்களையும் மதித்து அவர்களுடன் கரையாமலும்,கலக்காமலும் வாழ்வதற்கு சொல்லப்படும்.

எனினும் நம்மில் பலர் இந்த நுட்பத்தை புரிந்து கொள்ளாமல் பிற மத சடங்குகளுடன் கலந்து சங்கமித்து விடுகின்றனர். 


நபியவர்கள் கூறினார்கள் இஸ்லாம் ஆரம்ப காலத்தில் அனாதரவாக உருவானது. இறுதி காலத்திலும் இதே அனாதரவு நிலை மீண்டும் இஸ்லாத்துக்கு ஏற்படும்.

 மார்க்கத்தை நிலை நிறுத்துதல் பிற்போக்காக பார்க்கப்படும். அக்காலத்தில் யார் மார்க்க விழுமியங்களை முறையாக கடைப்பிடிக்கின்றாரோ அவருக்கு இறை சோபனம் கிட்டட்டுமாக. நூல் முஸ்லிம்.


நபியவர்களின் இந்த முன்னறிவிப்புக்கேற்ப இன்று முஸ்லிம் சமூகத்துக்குள் ஏராளமான மாற்று மத சடங்குகளும் சம்பிரதாயங்களும் நாகரீகம் என்ற போர்வையில் அரங்கேற்றப்படுவது வேதனை அளிக்கின்றது. மார்க்கத்தை காப்பது ஆலிம்களின் பொறுப்பு மட்டுமல்ல மாறாக அனைவருக்கும் அது பற்றிய விசாரணை உண்டு . ஆசிரியர்கள் அதிபர் அதிகாரிகள் கல்விமான்கள் ஊர் தலைவர் பொதுமக்கள் என பொறுப்பு கூறல் அனைவருக்கும் உண்டு.


1980 காலப்பகுதியில் நமது ஊரின் ஒரு பாடசாலைக்கு பேண்ட் வாத்திய கருவிகள் வழங்கப்பட்டு அதனை உபயோகப்படுத்துமாறு வந்த சுற்று நிறுவனத்திற்கு ஏற்ப செயற்பட்ட வேளை ஜம்இய்யத்தில் உல மா அறிஞர்கள் பாடசாலை நிர்வாகத்தோடு கலந்துரையாடி மார்க்கத்துக்கு முரணாகாத வகையில் சுற்று நிருபத்தை செயல்படுத்த வேண்டும் என்று இரு தரப்பு விளக்கம் எட்டப்பட்டது.

 இவ்வாறே மார்க்கத்துக்கு முரணான செயற்பாடுகள் தோன்றும் போது அவ்வப்போது உலமாக்களும் ஊர் தலைவர்களும் ஒன்றிணைந்து இவ்வாறான பிரச்சனைகளுக்கு இணக்கம் கண்டு வந்தமை என் ஊரின் வரலாறு.


எனினும் தற்காலத்தில் மீண்டும் இவ்வாறான செயற்பாடுகள் ஆங்காங்கே தோன்ற ஆரம்பித்துள்ளன.


1-பாடசாலைகளில் பேண்ட் வாத்தியங்களை இசைக்கருவிகளை உயர்ந்த சத்தத்தில் இயக்குதல். அவற்றை இசைப்பதற்காக வெளியிலிருந்து யிலிருந்து பயிற்றப்பட்ட குழுக்களையே அழைப்பித்தல்


2- பாடசாலை கலை நிகழ்ச்சிகளின் போது சினிமா பாடல்களையும் விரசமான இசைகளையும் ஒலிபெருக்கியில் ஒலிக்க விடுதல்.


3-மாணவர் நிகழ்ச்சிகளில் சினிமா காட்சிகளை கதை வசனங்களை நடித்துக் காட்டி ரசித்தல்.


4- முதலாம் வகுப்பில் இணையும் புதிய மாணவர்களை ஏடு தொடக்குதல் எனும் பெயரில் தானியம் குவிக்கப்பட்ட தட்டில் அகர எழுத்துக்களை விரல் பிடித்து எழுதி வைத்தல்.


5- புதிய மாணவர்களை பழைய மாணவர்கள் பூ மாலை அணிவித்து வரவேற்றல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

இவை யாவும் மாற்றுமத கலாச்சார பாரம்பரியங்களில் இருந்து இவற்றின் பார தூரம் தெரியாத சிலர்களால் முஸ்லிம் சமூகத்துக்குள் உள்வாங்கப்பட்டவைகள் ஆகும் இவை ஒவ்வொன்றுக்கும் அந்தந்த மதங்களின் சாஸ்திர சம்பிரதாயங்களில் தனித்தனி அர்த்தங்களும் வியாக்கியானங்களும் உள்ளன அவற்றை ஆராயும் போது அவை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள கொடிய இணைவைப்பின் கதவுகளை தட்டும் நிலையில் இருப்பதையும் நாம் அவதானிக்க முடியும்.


 சிலர்களால்

இவ்வாறான பிற சமயத்தவர்களது சமய நம்பிக்கையோடு சார்ந்த செயற்பாடுகளையும் நாகரீகம் என்ற பெயரில் பாடசாலைகளில் சில அறிஞர்கள் மூத்த உலமாக்களே முன்னின்று அரங்கேற்றி வருவது கவலைக்குரியதாகும்.


உதாரணமாக இந்து சமயத்தில் சரஸ்வதி விழா, கலைமகள் விழா, வித்யாதிபதி விழா எனும் பெயர்களில் பத்து தினங்கள் பூசை செய்யப்பட்டு பதினோராம் தினத்தில் ஏடு துவக்குதல் எனும் பெயரில் ஆரம்ப மாணவர்களுக்கு நெல் குவியலில் அகர எழுத்துக்களை கை பிடித்து பழக்கும் பாரம்பரியம் இந்து மத நம்பிக்கை சார்ந்தது.


முஸ்லிம்கள் எந்த ஒரு நல்ல செயலை தொடங்கும் போதும் இறைவனை பிரார்த்தித்து பிஸ்மி உரைத்து ஆரம்பிப்பது நபி வழிகாட்டல் ஆகும்.


 அவரவர் தத்தமது சமய நம்பிக்கைகளின் படி இச்சடங்குகளை செய்வதற்கு அரசு சுற்று நிறுவனத்தில் தாராளமாக அனுமதி அளிக்கப்பட்டிருந்தும் சில பாடசாலைகளில் மேற்படி நெற்குவியலில் எழுத்து பழக்கும் பாரம்பரியமும் புதிய மாணவர்களை மாலையிட்டு வரவேற்கும் சம்பிரதாயமும் சமுதாயத்தில் ஊடுருவி செல்வது மனவேதனையை அளிக்கின்றது.


கேட்டால் சுற்று நிருபத்தில் உள்ளது என்று சில டீச்சர் மார் அலட்சியமாக பதில் சொல்கின்றனர் சுற்று நிறுவத்தில் அவ்வாறு எங்குமே கிடையாது இவர்களால் அதை நிரூபிக்க முடியுமா

?

 சில இடங்களில் இம்மாற்று மத இச்சடங்குகளை உலமாக்கள் அழைக்கப்பட்டு அவர்களே முன் நின்று தொடங்கி வைப்பது மென்மேலும் வேதனை அளிக்கிறது,

 இன்னும் சில அறிஞர்கள் இவற்றில் எந்த தவறும் இல்லை, இது ஒரு மத நல்லிணக்கத்தின் வெளிப்பாடு என்று இவற்றை நியாயப்படுத்துவது மேலும் வேதனையும் ஆச்சரியத்தையும் அளிக்கின்றது.

 இவர்களுக்கு உண்மையிலேயே மார்க்கம் புரியவில்லையா அல்லது ஏதோ ஒன்றுக்காக மார்க்கத்தை அலட்சியம் செய்கின்றார்களா அல்லாஹ்வே அறிந்தவன் சகோதர பிற மதத்தவர்கள் தமது சமய சம்பிரதாயங்களில் எதையும் விட்டுக் கொடுக்க தயார் இல்லாத, உறுதியுடன் கடைபிடிக்கும் நிலையில் சம்ப்ராதாயம் எதையும் விட தயார் இல்லாத நிலையில் நாம் மட்டும் ஏன் தான் இவ்வாறு மார்க்கத்தை துச்சமாக கருதுகின்றோமோ தெரியவில்லை. முதல் நல்லிணக்கம் என்பது ஒவ்வொருவரும் பிற மதத்தவர்களின் நம்பிக்கைகளை மதித்து அவற்றை அவர்கள் நிறைவேற்றுவதற்கான சுதந்திரத்தையும் சந்தர்ப்பத்தையும் வழங்குவது அன்றி எல்லோரும் எல்லா மத செயல்பாடுகளையும் செய்து மத ஒருமைப் பாட்டை உண்டாக்குதல் என்பது இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ளப்படாததும் நடைமுறை சாத்தியமற்ற ஓர் போலியான செயல்பாடும் ஆகும்.

 லக்கும் தீனுக்கும் வலிய தீன் உங்களுக்கு உங்களுக்கு உங்கள் மார்க்கம் எங்களுக்கு எங்கள் மார்க்கம் போதுமானது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு ,.

நம் நாட்டில் செங்கல் அவர் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் என பல மதத்தினர் வாழ்ந்தும் அவரவர் தத்தமது சமய கலாச்சாரம் பாரம்பரியங்களில் கடைப்பிடிப்பதில் கன்னம் கருத்துமாக இருந்து வருகின்றனர் ஒருவர் இன்னொரு மக சடங்கு ஒன்றை தனது வீட்டிலோ அலுவலகத்திலோ செய்வதில்லை அரச பொது இடங்களான வைத்தியசாலைகள் பாடசாலைகள் பஸ் நிலையங்கள் போன்றவற்றில் கூட அன்புள்ள பெரும்பான்மை என்ன அதன்படியே என்ன மதமோ அனுஷ்டானங்கள் இடம்பெறுகின்றன சிலை வணக்கத்தில் ஒற்றுமைப்பட்ட இவர்களோ இப்படி தம் சமய சடங்குகளில் கலக்காமல் தனித்துவம் காக்க நாம் நமது கலாச்சாரத்தை இப்படி சீரழிந்து நியாயம்தானா? 

எம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் எதை விட்டுச்சென்ற போகின்றோம் . ??


 அல்லாஹ் என் அனைவருக்கும் மார்க்கத்தை நிலை நிறுத்தி அதன்படி செயல்பட அருள் பாலிப்பவனாக ஆமீன்


Fb