"வலிமையான நபர் யாரையும் காயப்படுத்த மாட்டார்.
தீயதற்கு தீமையால் அல்லது கெட்டதற்கு கெட்டதால் பதிலளிக்க மாட்டார்.
வலிமை என்பது உன்னை விடத் தரம் குறைந்தவர்களுடன் ஒப்பிடும்போது உன் நல்லொழுக்கங்களால் நீ உயர்ந்து நிற்பது.
உன் முகத்தின் மகிழ்ச்சியை கெடுக்க முயலுபவர்களிடமிருந்து விலகி இருப்பது.
எந்த ஒரு தரங்கெட்டவனும் அவனுடன் சேர்த்து உன்னையும் வீழ்ச்சியுறச் செய்ய அனுமதிக்காமல் இருப்பது".







